நள்ளிரவில் மின்கம்பத்தில் ஏறி தொங்கிய நபர் : பதறிய மக்கள்!!

 
ஈரோட்டில் எலக்ட்ரீசியன் ஒருவர் நள்ளிரவில் மின்கம்பியில் தொங்கியபடி அங்குமிங்குமாக சுற்றியதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஐரிங் (50), இவரது மனைவி சித்ரா, பொள்ளாச்சியை சேர்ந்தவர். தம்பதிக்கு சைனி (9) மற்றும் சைலோனி (12) என இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் கணவருடன் ஏற்பட்ட சண்டையால் அவரை பிரிந்த சித்ரா கோவையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஐரிங்கின் இரு மகள்களும் தாயை பார்க்க வேண்டும் என கூறியதால் பெங்களூருவிலிருந்து தனது 2 மகள்களையும் அழைத்து கொண்டு பொள்ளாச்சிக்கு பேருந்தில் ஐரிங் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஈரோட்டில் இரவு 11 மணிக்கு திடீரென கீழே இறங்கிய ஐரிங் அங்குள்ள மின் கம்பத்தில் வேகமாக ஏறினார்.
இதை பார்த்த பொது மக்கள் ஏதோ விபரீதம் ஏற்பட போகிறது என்று கருதி உடனடியாக மின் ஊழியர்களுக்கும், பொலிசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து துரிதமாக செயல்பட்ட மின்ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்த ஐரிங்கை கீழே இறங்க வலியுறுத்தியும் அவர் கேட்கவில்லை.

பின்னர் இரண்டு மணி நேரத்துக்கு பின்னர் ஐரிங்கை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

விசாரணையில் ஐரிங் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்த நிலையில், இதுகுறித்து அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள் ஐரிங் மற்றும் அவர் மகள்களை அழைத்து சென்றார்கள்.

இளம்பெண்னின் தலையை துண்டித்து கொலை செய்த இளைஞன் : அதிர்ச்சிக் காரணம்!!

 
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் காதலிக்க மறுத்த காரணத்தால் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை வாளால் தலையை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் கோட்மா கிராமத்தில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள பாடசாலை ஒன்றில் படித்து வந்துள்ளார் கொலை செய்யப்பட்ட பூஜா பனிகா. இவருக்கு சில ஆண்டுகளாக தொடர்ந்து காதல் கோரிக்கை விடுத்து வந்துள்ளார் இளைஞர் ஒருவர்.

ஆனால் தமது குடும்ப சூழல் கருதி அந்த காதல் கோரிக்கையை பூஜா ஏற்க மறுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த இளைஞர், தமது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததும் இன்றி, தம்மை புறக்கணிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர் பாடசாலைக்கு செல்லும் வழியில் காத்திருந்து குறித்த இளம்பெண்னை வாளால் வெட்டி தலையை துண்டித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஆசிரியர் ஒருவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனிடையே சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடலை மீட்டனர். மட்டுமின்றி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நீண்ட வாளையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கணவர் இறந்த சில மாதத்தில் அவர் தம்பியை திருமணம் செய்து கொண்ட மனைவி!!

 
பிரித்தானியாவில் உயிரிழந்த கணவரின் இறுதிசடங்கில் பார்த்த அவரது ஒன்றுவிட்ட சகோதரரை மனைவி பல ஆண்டுகளுக்கு முன்னர் மணந்த நிலையில் அந்த நினைவுகளை தற்போது பகிர்ந்துள்ளார்.

பிரட்போர்டு நகரை சேர்ந்தவர் ஜூடி ஹன்சன் (60). இவருக்கு கடந்த 1984-ல் டிம் என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் 1986 நவம்பர் மாதம் கார் விபத்தில் டிம் மரணமடைந்தார்.

அப்போது டிம்மின் இறுதிசடங்குக்கு உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்தனர். அப்போது தான் முதல் முறையாக டிம்-மின் ஒன்றுவிட்ட சகோதரர் டேவ்-ஐ ஜூடி பார்த்துள்ளார்.

இதையடுத்து இருவரும் நட்பாகி பின்னர் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. டிம் உயிரிழந்து சரியாக ஆறு மாதம் கழித்து டேவ்-ஐ ஜூடி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. இது குறித்து தற்போது 60 வயதாகும் ஜூடி கூறுகையில், டின் இறந்தவுடன் வாழ்க்கையே இருட்டாக எனக்கு மாறிவிட்டது. அப்போது டேவ் தான் எனக்கு ஆறுதலாக இருந்தார், டிம்மும், டேவும் உறவினர்கள் என்பதால் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தார்கள், கருப்பு முடி, நல்ல வெள்ளை பற்கள் மற்றும் அழகான கண்கள் என ஒற்றுமை இருந்தது.

இதுவும் அவர் மீது காதல் வர எனக்கு காரணமாக இருந்தது. என் குழந்தைகளையும் டேவ் அன்பாக பார்த்து கொண்டார் என கூறியுள்ளார்.

ஆனாலும் டேவும், ஜூடியும் 20 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின்னர் கடந்த 2007-ல் பிரிந்துவிட்டார்கள். இருந்தபோதும் தற்போது வரை இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் முச்சந்தியில் இறுதிக்கிரியை!!

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முச்சந்தியில் வைத்து சம்பந்தர் மற்றும் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தின் ஒரு வருட நிறைவு நாள் இன்று (24.02.2018) கவனயீர்ப்பு போராட்டத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் ஆலயத்தின் முன்பாக ஒன்றுகூடி பதாதைகளில் பொறிக்கப்பட்டிருந்த தமது பிள்ளைகளின் புகைப்படங்களை பார்த்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

இதனையடுத்து கோவிலுக்கு முன்பாக இருந்து கடை வீதி வழியாக ஊர்வலமாக வந்த உறவுகள் தாம் போராட்டத்தில் ஈடுபடும் இடத்திற்கு வருகை தந்து ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் உருவப்பொம்மைகளை தாங்கியவாறு முச்சந்தி நோக்கி சென்ற அவர்கள் அங்கு வைத்து இறுதிக்கிரியைகளை இரு உருவப்பொம்மைகளுக்கும் முன்பாக செய்தனர்.

இந் நிலையில் போராட்ட தளத்திற்கு அருகாமையிலும் நகர்ப்புறத்தில் உள்ள வர்த்தக நிலையங்களிலும் முச்சக்கர வண்டி சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது.

இப்போராட்டத்தில் கிறிஸ்தவ மதகுருமார் பேராட்டத்திற்கு ஆதரவான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா இளைஞர்களினால் வெளியிடப்பட்ட “உன்னோடு ஒரு நொடி” பாடல்!!

வவுனியா இளைஞர்களினால் “உன்னோடு ஒரு நொடி” என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ரப் தமிழனின் தயாரிப்பில் V Back Thilak இன் இயக்கத்தில் sunshine de harzi இசையிலும் பிரவினின் குரலிலும் திவ்யநிலா K shan , V Back Thilak, Haizer haron நடிப்பிலும் உருவாகியுள்ளது.

இப் பாடல் சிறப்பாக வெற்றிபெற எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

வவுனியா வசந்தி திரையரங்குக்கு வருகைதந்த கோமாளி கிங்ஸ் திரைப்படக் குழுவினர்!!

 
நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்திய தமிழ் சினிமாவிற்கு இணையாக வளர்ந்து வந்த இலங்கை தமிழ் சினிமா நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளால் முடக்கப்பட்டிருந்தது.

எனினும் சாம்பலிலிருந்து எழும் ஃபீனிக்ஸ் போல மீண்டும் இலங்கை தமிழ் சினிமா உயிர்த்தெழும் வண்ணம் வெளியாகவிருக்கிறது ‘கோமாளி கிங்ஸ்’ எனும் முழு நீள நகைச்சுவை திரில்லர் திரைப்படம்.

இத் திரைப்பட குழுவினர் இன்று (24.02.2018) காலை 10.30 மணியளவில் வவுனியா வசந்தி திரையரங்குக்கு வருகை தந்திருந்தனர். இவர்களை வவுனியா மாவட்ட கலைஞர்களும் , தமிழ் விருட்சம் அமைப்பினரும் சேர்ந்து மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.

திரைப்படத்தினை பார்வையிட்டவர்களுடன் இணைந்து கோமாளி கிங்ஸ் இயக்குனரும் நடிகருமான கிங் ரட்ணம் , நடிகைகளான நவயுகா , சத்தியப்பிரியா திரைப்படத்தினை பார்வையிட்டதுடன் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்தனர்.

வவுனியா பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்!!

 
பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஊழியரான அமரர் தெய்வேந்திரன் பகீசன் அவர்களின் இரண்டாவது வருட நினைவாக பிரதேச அபிவிருத்தி வங்கி வடமாகாண ஊழியர் நலன்புரி சங்கம் நடாத்தும் மாபெரும் இரத்த தான முகாம் வவுனியா பிரதேச அபிவிருத்தி வங்கியில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரை இடம்பெற்றது.

அமரர் தெய்வேந்திரன் பகீசன் அவர்களின் படத்திற்கு விளக்கேற்றி மலர் சூடி அஞ்சலி செலுத்தியதுடன் ஐம்பதற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.

பூமியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படும் : எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்!!

நாம் வாழும் பூமியின் சுழலும் வேகம் குறைந்தால் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என அமெரிக்காவை சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த கால நில நடுக்கங்களையும் இனி அவை ஏற்பட இருக்கும் சாத்தியக்கூறுகளையும் வைத்து நிலநடுக்கம் தொடர்பாக கொலராடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரோஜர் பில்ஹாம், மோன்டானா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரெபேக்கா பெண்டிக் ஆகியோர் ஓர் ஆய்வினை மேற்கொண்டனர்.

இதில் பூமி சுற்றிவரும் வேகத்துக்கும், தினசரி நாள் அளவுக்கும் நிலநடுக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

பூமியின் சுழற்சி வேகம் எப்போதெல்லாம் குறைகிறதோ அப்போது நில அதிர்வுகள், நில நடுக்கங்கள் அதிகரிக்கின்றன.
பூமியின் சுழற்சி வேகத்துக்கும் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கும் உள்ள தொடர்பை ஆணித்தரமாகத் தீர்மானிக்க முடியாவிட்டாலும் அது ஓரளவு உண்மை.

பூமியின் சுழற்சி வேகம் வழக்கத்தைவிட மைக்ரோ மில்லி செகண்டுகளே குறைகின்றன. இருப்பினும் அதன் தாக்கத்தால் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் இதுபோன்ற நில நடுக்கங்கள் அதிகம் உண்டாகின்றன.

கடந்த 6 ஆண்டுகளில் ஏற்பட்ட நில நடுக்கங்களை ஆய்வு செய்ததில் 2018 மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் ஐந்தாறு ஆண்டுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வு முடிவு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

வெற்றிகரமாக நீக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மூளைக் கட்டி!!

 
சான்டல் போல் எனும் நபர் நீண்ட காலமாக மூளைக் கட்டியினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது கட்டியானது வழமைக்கு மாறாக மிகவும் இராட்சத உருவத்தில் காணப்பட்டுள்ளது.

இருந்தும் வெற்றிகரமாக சத்திரசிகிச்சையின் ஊடாக இந்திய மருத்துவர்கள் இவரது மூளைக் கட்டியினை நீக்கியுள்ளனர். மருத்துவர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் இவரின் மூளைக் கட்டியானது 1.8 கிலோ கிராம்கள் வரை காணப்பட்டதாகவும் 20x30x30 cm அளவுடையதாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதுவே உலகின் மிகப்பெரிய மூளைக் கட்டியாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

31 வயதான போலின் குறித்த கட்டியானது காதலர் தினத்தன்று சுமார் ஆறு மணிநேர சத்திரசிகிச்சையின் பின்னர் நீக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்த போலின் மனைவி உத்திர பிரதேசத்தில் உள்ள பல வைத்தியர்களை நாடிய போதிலும் இவ் வகையான கட்டியை சத்திரசிகிச்சை மூலம் நீக்க முடியாது என கூறியதாத குறிப்பிட்டுள்ளார்.

வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி : முயற்சி செய்து பாருங்கள்!!

வயிற்றுக் கொழுப்பை குறைக்க அவதிப்படும் பெண்கள் திரிகோணாசனம் உடற்பயிற்சியை மேற்கொண்டாலே போதுமானது.

திரிகோணாசனம் செய்வதனால் வயிற்றுப் பகுதி நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படும், ரத்த ஓட்டம் சீராகும்.
முதுகுத் தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி ஆகிய பகுதிகளின் வளையும் தன்மை அதிகரிக்கிறது, வயிற்றுக் கொழுப்பு கரைக்கப்பட்டு, இடுப்புப் பகுதி மெலியும், சிறுநீரகம் வலுவடையும்.

செய்முறை

உள்ளங்கைகள் இரு பக்கவாட்டிலும், தொடையை ஒட்டி இருக்கும்படி நேராக நிற்கவும்.

கால்களை அகட்டிக்கொள்ளவும், காலை அசைக்காமல் இடுப்பை மட்டும் இடது புறம் திருப்பவும்.

இடுப்பை வளைத்து, வலது உள்ளங்கையை இடது காலுக்குப் பக்கத்தில் தரையில் ஊன்றவும்.

இடது உள்ளங்கையின் மேலே உயர்த்திய நிலையில், மூச்சை வெளியே விடவும்.

மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடியே மேலெழும்பி இதையே வலதுபுறம் செய்யவும்.

பின் கைகளைக் கீழே தொங்கவிடவும், வலது காலைத் தூக்கி இடது காலின் அருகில் ஊன்றவும்.

இதே போல் மறுபுறம் செய்யவேண்டும்.

குறிப்பு – தீவிரமான இதய நோய் உள்ளவர்கள், இடுப்புக் கீல் வாயுவினால் அவதிப்படுபவர்கள், இதய நோயாளிகள் இந்த ஆசனத்தைச் தவிர்ப்பது நல்லது.

பிரித்தானிய BMW கார் பரிசு : இலங்கையில் இப்படியும் ஓர் மோசடி!!

பிரித்தானியாவில் தயாரிக்கப்படும் ஆடம்பர கார் ஒன்று பரிசாக வழங்கப்படுவதாக ஏமாற்றி இலங்கையில் பாரிய மோசடி நடவடிக்கை இடம்பெறுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லண்டனிலுள்ள BMW மோட்டார் வாகன நிறுவனத்தில் நடைபெற்ற போட்டியில் 60 இலட்சம் ரூபா பெறுமதியான சொகுசு மோட்டார் வாகனம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்படும்

இது தொடர்பாக இலங்கையிலுள்ள பலருக்கு குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பண மோசடி செய்யப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கும்பல் மற்றும் நபர் ஒருவர் கையடக்க தொலைபேசிகளுக்கு குறுந்தகவல் அனுப்பி பணம் சம்பாதித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த குறுந்தகவல் அனுராதபுரம் மற்றும் சுற்றியுள்ள நபர்களின் தொலைபேசிகளுக்கு கிடைத்துள்ளது. இந்த பெறுமதியான பரிசை பெற்றுகொள்வதற்காக ஈஷி கேஷ் மூலம் பணம் செலுத்துமாறு கோரி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்கள் முழுவதும் பிழையான ஆங்கிலத்தை பயன்படுத்தி குறுந்தகவல் அனுப்பி, மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“உங்கள் தொலைபேசி இலக்கம் 2018ஆம் ஆண்டு 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் வாகனம் ஒன்றை வென்றுள்ளது. அதற்கான பரிசை பெற்றுக்கொள்வதற்காக உங்கள் பெயர், தொலைபேசி இலக்கம், விலாசம், தொழில் ஆகிய விடயங்களை குறித்த மின்னஞசல் முகவரிக்கு அனுப்புமாறு குறுந்தகவல் அனுபப்பட்டுள்ளது.

அந்த குறுந்தகவலின் பின்னர் மின்னஞசல் அனுப்பும் வாடிக்கையாளர்களிடம் மோட்டார் வாகனத்திற்கான ஆவணங்களுக்காக 15000 – 20000 ரூபாய் பணத்தை ஈஷி கேஷ் அனுப்புமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பலர் ஏமாற்றமடைந்து பணத்தை இழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் இது தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சாரணிய சேவை வளர்ச்சியை பாராட்டி பணிநயப்பு விழா!!

 
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் முன்னாள் அதிபரும் வவுனியா தெற்கு வலயக்கல்வி பிரதிக்கல்வி பணிப்பாளருமாகிய சு.அமிர்தலிங்கத்தின் சாரணிய சேவை வளர்ச்சியை பாராட்டி பணிநயப்பு விழா நேற்று (23.02.2018) நடைபெற்றது.

இந்த விழா சாரணிய மன்றத்தின் ஏற்பாட்டில் கல்லூரி அதிபர் த.மதிவண்ணன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

வவுனியாவில் வியாபாரம் மேற்கொள்வதற்கு உதவிகள் வழங்கிவைப்பு!!

 
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் தனது மனைவியுடன் தனிமையில் வசித்துவரும் கிருஷ்ணன் குருநாதன் என்பவர் தனக்கு வாழ்வாதரத்தினை மேற்கொள்வதற்கு வியாபாரம் செய்வதற்கு உதவிகள் வழங்கிவைக்குமாறு தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமாரிடம் விடுத்த கோரிக்கையினை அடுத்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் உறவுகளின் உதவியுடன் நேற்று(23.02) காலை வவுனியா பிரதேச செயலகத்திலுள்ள ஆலயத்தின் முன்றலில் வைத்து மரக்கறி வியாபாரம் மேற்கொள்வதற்கு துவிச்சக்கரவண்டி, தராசு, மரக்கறியுடன் கூடை என்பன குறித்த வயோதிபருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதிகளிலுள்ள வீடுகளுக்குச் சென்று மரக்கறி வியாபார நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு குறித்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர் கா. உதயராஜா மரக்கறிகள் வாங்கி வியாபார நடவடிக்கையினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும் : நாம் அமைதியாக வேலை செய்வோம் : ரஜனிகாந்த்!!

மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக வேலை செய்வோம் என ரஜினிகாந்த் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

அரசியல் கட்சியை தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், மாவட்ட ரீதியாக ரஜினி மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவ்வகையில், நேற்று நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

முந்தைய கூட்டங்களில் சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி மூலமாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் முதல் முறையாக நேற்று நேரில் கலந்துரையாடல் நடத்தினார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த ஆலோசனையின்போது ரஜினி பேசியதாவது,

அரசியலில் எந்த விடயத்தையும் கவனமாக கையாள்வது அவசியம். அரசியலில் அடிப்படை கட்டமைப்பு தான் முக்கியம். 32 மாடி அஸ்திவாரம் போல 32 மாவட்டங்களில் கட்டமைப்பு முக்கியம். அனைத்து ரசிகர்களையும் சந்திக்க சில நாட்கள் ஆகும். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும். நாம் வேலையை அமைதியாக செய்வோம்.

என் ரசிகர்களுக்கு மற்றவர்கள் அரசியல் கற்றுத் தரவேண்டாம். நீங்கள் மற்றவர்களுக்கு அரசியலை கற்றுக்கொடுப்பவர்கள். விரைவில் உங்களை உங்கள் மாவட்டத்தில் சந்திக்கிறேன். பெருகி வரும் ரசிகர்களின் ஆதரவை பார்க்கும்போது அரசியலில் நம்மால் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்ற நம்பிக்கை அதிகமாகி வருகிறது என்று அவர் பேசினார்.

2 ஆண்டுகளில் 20 முட்டைகள் இட்ட சிறுவன்!!

கோழி முட்டை இடுவது வழக்கமானது. ஆனால், கோழியை போல் முட்டையிடும் சிறுவன் ஒருவர் உள்ளார்.

இந்தோனேசியாவில் சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் கோவா பகுதியை சேர்ந்தவர் 14 வயதுடைய அக்மல் . இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதாவது 2016 ஆம் ஆண்டு முதல் முட்டை இடுவதாக இவரது பெற்றோர் இவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியர்கள், இது நிச்சயம் சாத்தியம் அல்ல. மனிதனின் உடலில் முட்டை இருபதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறுகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வு குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் சிறுவனுக்கு என்ன சிகிச்சை அளிப்பது என தெரியாமல் உள்ளனர்.

இது குறித்து சிறுவனது தந்தை தெரிவித்தபோது, அக்மல் 2 ஆண்டுகளாக முட்டை இடுகிறான். இதுவரை 20 முட்டைகள் இட்டுள்ளான். அந்த முட்டையை உடைத்து பார்த்த போது உள்ளே மஞ்சள் நிறத்தில் இருந்தது. பல முறை நாங்கள் வைத்தியசாலையில் இதற்காக சிகிச்சைக்கு வந்தோம். ஆனால், எந்த பலனும் இல்லை, என தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் 2 : கமலின் இடத்தை நிரப்பப்போவது யார் தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.

தற்போது கமல் அரசியல் கட்சி துவங்கிவிட்டதால் அவர் பிக்பாஸ் 2வை தொகுத்து வழங்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது.

அதனால் அந்த தனியார் தொலைக்காட்சி தற்போது நடிகர் சூர்யா அல்லது அரவிந்த்சாமி ஆகியோரில் ஒருவரை தொகுப்பாளராக தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாம்.

இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், அரவிந்த்சாமிக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது.