மரண அறிவித்தல்: திருமதி. எதிர்மன்னசிங்கம் சிவபாக்கியம்

திருமதி எதிர்மன்னசிங்கம் சிவபாக்கியம்
தோற்றம் : 24 பெப்ரவரி 1942 — மறைவு : 25 பெப்ரவரி 2018

 

யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் கிழக்கு, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட எதிர்மன்னசிங்கம் சிவபாக்கியம் அவர்கள் 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற எதிர்மன்னசிங்கம்(முன்னாள் பல்நோக்கு கூட்டுறவுச் சங்க கொள்வனவு உத்தியோகத்தர்- வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,

சிறீசக்திவேல்(சுகாதாரத் திணைக்கள முகாமைத்துவ உதவியாளர்- வவுனியா), ஜெயவேல், சங்கரவேல், காலஞ்சென்ற ஆனந்தவேல், சிவமதி, சிவரூபவேல், முருகவேல், பத்மாவதி, பரமவேல்(வலயக்கல்வி அலுவலக முகாமைத்துவ உதவியாளர்- வவுனியா), கெளரி, மலர்விழி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மநாதன்(மின்சாரசபை ஓய்வுபெற்ற பொறியியலாளர்- யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சபாநாதன்(வலயக்கல்வி அலுவலக நிர்வாக உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம்), சிவநாதன்(பண்டாரிக்குளம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவமலர், ராசராணி, ரவிகாந்தன், ஜசிந்தா, டினேசா, யோகராசா, வாசுகி(ஆசிரியை- வ/கந்தபுரம் வாணி வித்தியாலயம்), சுதர்சன், சிவதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மதுசன், டட்சியா, அமுதா, சோழசிவன், தர்மினி, யத்மராணி, டயாளினி, எரிக்சிவன், தனுசன், தர்மிகா, தர்சன், அக்சிகா, அக்சனா, ஆருஜா, அட்விஜா, அபிஜா, மாதவன், மகிசா, பவித்ரா, அபிசஜா, அஸ்விகன், அகிலாஷ், தநீஸ்ஜா, பவிசஜா, சஜிசன், அர்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.123,
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறீ — இலங்கை
செல்லிடப்பேசி: +94773559883
பரமு — இலங்கை
செல்லிடப்பேசி: +94777989357
யோகராசா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33661853510

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நாயகி ஸ்ரீதேவி பற்றிய ஓர் பார்வை!!

தமிழ் நாடு விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி இந்திய திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

1969 ஆம் ஆண்டு வெளிவந்த துணைவன் திரைப்படத்தின் மூலம் நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படத் துறைக்கு அறிமுகமாகி தனித்திறமையாலும், கவர்ந்திழுக்கும் நடிப்பாலும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தார்.

இவர் கதாநாயகியாக அறிமுகமானது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த “மூன்று முடிச்சு” திரைப்படத்தில். 1977ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த “16 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

அதன் பின் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடனும் சில படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்.

1975 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஜுலி’ என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். 1978ல் வெளிவந்த “சோல்வா சாவன்” (16 வயதினிலே) என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் “மூன்றாம் பிறை” திரைப்படம் ஹிந்தியில் “சத்மா” என்ற பெயரில் வெளிவந்து வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீதேவிக்கு புகழையும் தேடித்தந்தது.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்த ஸ்ரீதேவி 1996ஆம் ஆண்டு நடிகர் அனில்கபூரின் சகோதரரும் திரைப்படத் தயாரிப்பாளருமான போனிகபூரை மணமுடித்தார்.

திருமணத்திற்குப் பின் 14 ஆண்டுகளுக்குப் பின் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்கலானார்.

இதுவரை தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஏறக்குறைய 275 படங்களில் நடித்திருக்கிறார். அதில் தமிழ் படங்களில் ஸ்ரீதேவி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் கீழே சிலவற்றை காணலாம்.

 
1.துணைவன் – குழந்தை நட்சத்திரம்
2.நம்நாடு – குழந்தை நட்சத்திரம்
3.பாபு – குழந்தை நட்சத்திரம்
4.கனிமுத்து பாப்பா – குழந்தை நட்சத்திரம்
5.வசந்த மாளிகை – குழந்தை நட்சத்திரம்
6.பாரதவிலாஸ் – குழந்தை நட்சத்திரம்
7.திருமாங்கல்யம் – குழந்தை நட்சத்திரம்
8.மூன்று முடிச்சு – கதாநாயகி
9.16 வயதினிலே – கதாநாயகி
10.காயத்ரி – கதாநாயகி
11.கவிக்குயில் – கதாநாயகி
12.சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு – கதாநாயகி
13.வணக்கத்துக்குரிய காதலியே – கதாநாயகி
14.டாக்சி டிரைவர் – கதாநாயகி
15.இது எப்படி இருக்கு – கதாநாயகி
16.மச்சான பாத்தீங்களா – கதாநாயகி
17.மனிதரில் இத்தனை நிறங்களா – கதாநாயகி
18.முடிசூடா மன்னன் – கதாநாயகி
19.வைலட் பிரேம்நாத் – துணை நடிகை
20.சிகப்பு ரோஜாக்கள் – கதாநாயகி
21.ப்ரியா – கதாநாயகி
22.தர்மயுத்தம் – கதாநாயகி
23.கல்யாணராமன் – கதாநாயகி
24.பகலில் ஓர் இரவு – கதாநாயகி
25.கவரிமான் – துணை நடிகை
26.நீலமலர்கள் – கதாநாயகி
27.பட்டாக்கத்தி பைரவன் – கதாநாயகி
28.லக்ஷ்மி – கதாநாயகி
29.தாயில்லாமல் நானில்லை – கதாநாயகி
30.குரு – கதாநாயகி
31.ஜானி – கதாநாயகி
32.வறுமையின் நிறம் சிகப்பு – கதாநாயகி
33.விஸ்வரூபம் – கதாநாயகி
34.பாலநாகம்மா – கதாநாயகி
35.சங்கர்லால் – கதாநாயகி
36.மீண்டும் கோகிலா – கதாநாயகி
37.ராணுவவீரன் – கதாநாயகி
38.மூன்றாம் பிறை – கதாநாயகி
39.தனிக்காட்டு ராஜா – கதாநாயகி
40.போக்கிரிராஜா – கதாநாயகி
41.வாழ்வே மாயம் – கதாநாயகி
42.அடுத்த வாரிசு – கதாநாயகி
43.சந்திப்பு – கதாநாயகி
44.நான் அடிமை இல்லை – கதாநாயகி
45.இங்கிலீஷ் விங்கிலீஷ் – கதாநாயகி
46.புலி – துணை நடிகை
கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு மாம் என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவி நடித்தார். அவரது 54ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

அவர் அறிமுகமான துணையான வெளியான அதே தினத்தில் 50 ஆண்டுகள் கழித்து மாம் வெளியானது. நடிகை ஸ்ரீதேவி, சிறந்த நடிப்புக்காக 4 முறை பிலிம்பேர் விருதுகளையும், பின்னர் 2013இல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.

வவுனியாவில் தூக்கில் தொங்கிய இளைஞனின் காதலியும் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை!!

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள AFRIEL அமைப்பின் விடுதியிலிருந்து இன்று (25.02.2018) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்தனர்.

இந்நிலையில் குறித்த இளைஞனின் காதலியும் இன்று (25.02.2018) காலை 10.30 மணியளவில் புதுக்குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக் கிணற்றினுள் வீழந்து தற்கொலை செய்துள்ளார்.

குறித்த பெண்ணின் காதலன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ததன் காரணமாக இப் பெண்ணும் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் புதுக்குடியிருப்பு 9ம் வட்டாரத்தினைச் சேர்ந்த 29 வயதுப் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்பான செய்தி..

வவுனியாவில் விடுதியிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு!!

வவுனியாவில் விடுதியிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு!!

 
வவுனியா ஹொரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள AFRIEL அமைப்பின் விடுதியிலிருந்து இன்று (25.02.2018) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

குறித்த விடுதியில் நேற்றையதினம் ( 24.02.2018) மாலை வேளை விடுதியில் தங்கியிருந்த இருவர் மதுபானம் அருந்தியுள்ளனர். இரவு 7 மணியளவில் ஒருவர் வெளியே சென்றுள்ளார். இதன் போது குறித்த விடுதியில் ரகுநாதன் சுகிர்தரன் (31 வயதுடைய தூக்கில் தொங்கிய நபர்) இருந்துள்ளார். இரவு 12 மணியளவில் குறித்த நபர் விடுதிக்கு திரும்பியுள்ளார்.

இன்று காலை 9.30 மணியாகியும் குறித்த நபர் அறையினை விட்டு வெளியே வராத காரணத்தினால் விடுதியில் தங்கியிருந்த மற்றைய நபர் அறையின் கதவினையுடைத்துள்ளார். அதன் போது ரகுநாதன் சுகிர்தரன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

உடனடியாக 119 அவசர பொலிஸ் இலக்கத்திற்கு தகவல் வழங்கியதையத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் விவகாரத்தினால் குறித்த நபர் தூக்கில் தொங்கியிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடற்கரையில் கரையொதுங்கிய உருக்குலைந்த சடலம்!!

அம்பலாந்தோட்டை கடற்கரையில் இனம் தெரியாத நிலையில் உருக்குலைந்த சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

கடற்கரையில் நேற்றையதினம் கரையொதுங்கியுள்ள குறித்த சடலம் சில தினங்களுக்கு முன்னர் இப்பிரதேசத்தில் கடலில் குளிக்கும் ​போது காணாமல் போன 17 வயது இளைஞனின் சடலமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், சடலத்தின் ஒரு சில உடற்பாகங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால் அடையாளம் காண்பதில் பெரும் சிக்கலை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், மரபணு பரிசோதனை மூலம் சடலத்தை இனம் காண்பதற்கு வசதியாக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றை மாற்றிச் சொல்வதும் இனவழிப்புக்கு ஒப்பானது : சி.வி.விக்னேஸ்வரன்!!

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பௌத்த மதத்தை பின்பற்றியிருந்தார்கள் என்னும் கருத்தை மாற்றி, இங்கே சிங்கள மக்கள் இருந்தார் என்று வரலாற்றை மாற்றிச் சொல்வது இனவழிப்புக்கு ஒப்பானது என வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“பூகோள வாதம் புதிய தேசிய வாதம்” என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

ஆணாக பிறந்து அழகான யுவதியாக மாறிய இளைஞன்!!

“யாரா” என அழைக்கப்படும் இந்த திருநங்கை இலங்கையின் ஆடை அலங்கார துறையில் மிகவும் பிரபலமானவர்.

ஆணாக பிறந்து அழகிய யுவதியாக மாறியமை இந்த பிரபலத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

ஆணாக பிறந்த “யாரா” இரண்டு வருடங்களுக்கு திருநங்கையாக மாறியுள்ளார். அண்மையில் யாரா மணமகளாக மாறியுள்ளார்.

புகைப்பட தொகுப்பு ஒன்றுக்காக அவர் மணமகளாக அலங்கரிக்கப்பட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

மஹிந்தவுக்கு கிடைத்த மிகப் பெரிய ஏமாற்றம்!!

சமகால அரசாங்கம் முடிவுக்கு வரும் வரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாரிய வெற்றியை பெற்றது. இதனடிப்படையில் மஹிந்த ராஜபக்ச மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களுக்கு எதிர்க்கட்சி பதவி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவிடம் தனிப்பட்ட முறையில் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமகால அரசியல் நிலைமைக்கமைய எதிர்க்கட்சி ஆசனங்களை பெறுவதற்கு, கூட்டு எதிர்க்கட்சியினர் தொடர்புபட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி தனி குழுவாக ஆசனம் பெற வேண்டும்.

அப்படியில்லை என்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியில் இருந்து விலக வேண்டும். இல்லை என்றால் மஹிந்த ராஜபக்சவினால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக் கொள்ள முடியாதென தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னரும் கூட்டு எதிர்க்கட்சி இந்த கோரிக்கையை விடுத்த போதிலும், அப்போது காணப்பட்ட சட்டரீதியான பிரச்சினை காரணமாக அந்த கோரிக்கையும் தோல்வியில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்!!

பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி தனது 54 வது வயதில் மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 1967ம் ஆண்டு கந்தன் கருணை படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன இவர் அதன் பின் நடிகர்களான ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடித்து தனக்கென்று திரையுலகில் தனி முத்திரை பதித்தார்.

இந்நிலையில் ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார்.

இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர்.

ரஜினி, கமல் போன்ற தமிழின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீதேவி. அவர் நடித்த 16 வயதினிலே முக்கியமானப் படம்.

திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

அவருடைய மரணம் திரையுலகினருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பதற்கு முன் ஸ்ரீதேவி எடுத்த கடைசி புகைப்படங்கள் கீழே..

மரங்களுக்கு நடுவே தன்னந்தனியாக விமானம் : குவியும் சுற்றுலாப் பயணிகள்!!

 
இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் மரங்களுக்கு நடுவே கைவிடப்பட்ட போயிங் விமானத்தை பார்க்க சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருகின்றனர், ஆனால் அவர்கள் யாருக்குமே அந்த விமானம் எப்படி வந்தது என தெரியவில்லை.

மரங்கள், கப்பல் கன்டெய்னர்கள் மற்றும் வீடு ஆகியவற்றால் சூழப்பட்டிருக்கும் இந்த விமானம், ரெயா நஸா துவா செலடான் எனும் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த விமானத்தில் எந்த ஒரு அடையாளமும் குறிப்பிடப்படாமல் மர்மமாக காட்சியளிக்கிறது.

அதன் உரிமையாளர் ஒரு விமான உணவகத்தை உருவாக்க முயன்றதாகவும், ஆனால் அதிக செலவு காரணமாக அந்த திட்டத்தை கைவிட்டு பாதியிலேயே நிறுத்திவிட்டார் எனவும் உள்ளூர் மக்கள் தெரிவிகின்றனர்.

பாதுகாப்புக்காக ஒரு பூட்டிய நுழைவாயிலுக்குப் பின்னால் விமானம் இருந்த போதிலும், சுற்றுலா பயணிகளின் பிடித்தமான இடமாக இப்போது மாறிவிட்டது.

இவர்களது வயதைக் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள்!!

 
தைவானைச் சேர்ந்த மூன்று சகோதரிகள், தங்களது வயதை விட பாதியளவு இளமையாக இருப்பதால், இளமையான குடும்பம் என புகழாரம் சூட்டப்படுகின்றனர்.

தைவான் நாட்டைச் சேர்ந்தவர் Lure Hsu, 41 வயதாகும் இவர் Interior Designer ஆக பணிபுரிந்து வருகிறார், இவருக்கு, 40 மற்றும் 36 வயதில் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

விடயம் என்னவென்றால், இவர்கள் மூவருமே இருபது வயது தோற்றத்தில் இருப்பது தான். மேலும், இவர்களின் 63 தாயாரும் 30 வயது பெண்மணி போலவே உள்ளார். இதனால், இந்த குடும்பத்தை ‘The Family of Frozen Age’ என்று தைவான் ஊடகங்கள் அழைக்கின்றன.

தங்களின் தாய் சிறுவயதில் மிக இளமையாக இருந்ததாலும், அதன் காரணமாகவே தாங்களும் இளமையான தோற்றத்தில் தெரிவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து Lure Hsu கூறுகையில், ‘நாங்கள் எங்களது தாயை பார்த்து வளர்ந்து வந்ததால், இளமையான தோற்றத்தை நாங்கள் உணர்ந்ததில்லை. எங்கள் 74 வயது தந்தையும் இளமையான தோற்றத்தில் இருப்பார்.

ஆனால், அவர் எங்களை புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. ஆகையால், எங்களது புகைப்படங்களை மட்டுமே சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறோம். எங்களது இளமைக்கு பிரத்யேகமாக, நாங்கள் எதுவும் செய்வதில்லை.

விரைவாக இரவு தூங்கிவிட்டு, அதிகாலையில் எழுந்து விடுவோம். பின்னர், ஒரு பெரிய தம்ளரில் வெதுவெதுப்பான நீரை பருகுவோம், ஒருபோதும் காலை உணவை தவிர்த்ததில்லை.

மேலும், குளிர்பானங்களை குடிக்க மாட்டோம். நேரத்துக்கு உணவை உட்கொண்டாலே உடல் எடை சீராக இருக்கும், இளமையும் அதிகரிக்கும்’ என தெரிவித்துள்ளார்.

இவர்களை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேரும், பேஸ்புக்கில் 3 லட்சத்து 41 ஆயிரம் பேரும் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

38 நாட்களாக மலம் கழிக்க மறுக்கும் பிரித்தானியர் : அதிர்ச்சிக் காரணம்!!

பிரித்தானியாவில் போதை மருந்து கடத்தல் தொடர்பில் கைதான நபர் ஒருவர் கடந்த 37 நாட்களாக மலம் கழிக்க மறுத்து வருவதாக எசெக்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் எசெக்ஸ் பகுதியில் போதை மருந்து கடத்தல் தொடர்பாக 24 வயது Lamarr Chambers என்ற இளைஞரை பொலிசார் கைது செய்தனர். கடந்த ஜனவரி 17 ஆம் திகதி கைதாவதற்கு முன்னர் குறித்த இளைஞர் போதை மருந்து பொட்டலங்களை விழுங்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆதாரம் திரட்டும் நோக்கில் அவர் மலம் கழிக்கும் வரை பொலிசார் காத்திருக்கின்றனர். இதுவரை Lamarr தொடர்பில் தகவல் வெளியிட்டு வந்த பொலிசார், அவர் தொடர்பில் உறுதியான தகவல் திரட்டப்பட்ட பின்னரே அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இதேவகையில் கைதான நபர் ஒருவர் 23 நாட்கள் மலம் கழிக்காமல் அடம்பிடித்த சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தூக்கில் தொங்கிய இளம் தாய் : மகள் குறித்து உருக்கமான கடிதம்!!

தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர், இறப்பதற்கு முன்னர் எழுதிய உருக்கமான கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் இருசப்பன். இவர் மனைவி ஜனனி (32). கணவன், மனைவி இருவருமே மருத்துவர்கள் ஆவார்கள். தம்பதிக்கு தனுஷியா (6) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் ஜனனி தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஜனனியின் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் அங்கிருந்த கடிதத்தை கைப்பற்றினார்கள்.

அதில், எனக்கு வாழபிடிக்கவில்லை, எல்லாமே சூனியமாக தெரிகிறது. இதனால் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்துவிட்டேன். நல்ல கணவர், நல்ல குழந்தை, நல்ல பெற்றோர், நல்ல வேலை என அனைத்தும் கிடைத்திருந்தும் எனக்கு மனதில் வெறுமை ஒன்றே மிச்சமாக உள்ளது.
எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என்னுடைய உடலை முடிந்தவரை எனது மகளுக்கு காட்டவேண்டாம். அம்மா ஊருக்கு சென்றுவிட்டார் என்று கூறிவிடுங்கள் என்று ஜனனி எழுதியுள்ளார்.

மனைவிக்கு கோவில் கட்டி வழிபடும் விவசாயி!!

இந்தியாவில் விவசாயி ஒருவர் மனைவிக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வரும் சம்பவம் பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் CHAMARAJANAGAR-ஐச் சேர்ந்தவர் ராஜுசுவாமி. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்தார். ராஜம்மாள் அப்போது தனக்காக கோவில் கட்டுவீர்களா என்று கேட்டுள்ளார்.

இதை மனதில் வைத்துக் கொண்ட ராஜுசுவாமி, தன்னிடம் இருந்த 3 ஏக்கர் நிலப்பரப்பில் மனைவிக்காக கோவில் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளார். கோவில் கட்டிக் கொண்டிருந்த நிலையில் ராஜம்மாள் திடீரென்று இறந்துவிட்டார். இருப்பினும் தனது மனைவிக்காக கோவில் பணிகளை தொடர்ந்து செய்து வந்துள்ளார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த போதும் அவர் பின்வாங்கவில்லை.

கடந்த 2006-ஆம் ஆண்டு கோவில் பணி முடிந்துள்ளது. இந்த கோவிலில் சிவன், நவக்கிரகம், சனீஸ்வரன் உள்ளிட்ட சிலைகளுடன் தனது மனைவி ராஜம்மாவின் சிலையையும் வைத்து கடந்த 12 வருடங்களாக ராஜு வழிபட்டு வருகிறார்.

தற்போது பக்கத்து கிராமங்களில் இருந்தும் இந்தக் கோவிலுக்கு மக்கள் வரும் நிலையில் இந்தக் கோவில் ராஜம்மா கோவில் என்றே அழைக்கப்படுகிறது.

பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையுடன் கணவர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவி!!

இந்தியாவில் பிறந்து 5 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் ராணுவ சீருடையில் கணவனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவியின் செயல் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இந்திய விமானப்படையின் விங் கமாண்டராகப் பணியாற்றி வந்தவர் டி.வட்ஸ். ராணுவ மேஜரான இவர் மனைவி குமுத் மோர்கா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்த சமயத்தில் கடந்த 15-ஆம் திகதி பணி நிமித்தமாக டி.வட்ஸ் அசாம் சென்றார். அப்போது டி.வட்ஸ் பயணித்த விமானப்படை ஹெலிகொப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சில நாட்களில் பெண் குழந்தையை பெற்றெடுத்த குமுத், பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையுடன் ராணுவ சீருடையில் கணவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.

இத்தருணத்தில் புரண்டு அழும் பெண்களுக்கு மத்தியில், கனத்த இதயத்தோடு கணவர் இறுதி ஊர்வலத்தில் குழந்தையுடன் பங்கேற்ற குமுத்தின் செயல் காண்போரின் கண்களை குளமாக்கியது.

திருமண பரிசுப்பொருள் வெடித்தது! பரிதாபமாய் பலியான மணமகன்!!

ஒடிசாவில் திருமணத்தின் போது வழங்கப்பட்ட பரிசு பொருளில் இருந்த குண்டு வெடித்ததில், மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பொலிங்கர் மாவட்டத்தில் பட்நாகர் நகரை சேர்ந்தவர் சவுமியா சேகர் சாஹூ. இவருக்கும், ரீமா சாஹூ என்பவருக்கும் கடந்த 18ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 21ஆம் திகதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தம்பதியருக்கு நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் பரிசு பொருட்களை வழங்கியுள்ளனர்.

அந்த தம்பதியர் தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை, உறவினர்களுடன் சேர்ந்து பிரித்து பார்த்துக் கொண்டிருந்தனர். அச்சமயம், ஒரு பரிசு பொருளை பிரித்து பார்த்தபோது, எதிர்பாராத விதமாக அந்த பரிசு பொருளானது திடீரென வெடித்துள்ளது.

இதில், மணமகனின் பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான மணமகன் சேகர் சாஹூ, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமடைந்த மணமகள் ரீமா சாஹூ மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.