இலங்கையில் பியர் பாவனை 12 வீதத்தால் அதிகரிப்பு!!

இலங்கையில் பியர் பாவனை 12 வீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கம் பியருக்கான வரியைக் குறைத்ததன் பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மதுவரித்திணைக்களம் கடந்த மாதங்களில் வௌியிட்ட தரவுகளின் மூலம் இந்த விடயம் தொடர்பில் அறியக்கிடைத்துள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் மொத்த மதுபாவனையில் 18 வீதம் பியர் நுகர்வு காணப்படுவதாகவும் அந்த தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் நுகர்வு வீதத்தில் அதிகரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பியர் நுகர்வு அதிகரித்தமை தொடர்பான அறிக்கையை ஜனாதிபதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

எரிவாயு விலை அதிகரிக்கப்படுமா?

எரிவாயு விலை தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என்று வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக எரிவாயு சிலிண்டர்களுக்கான விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு கேஸ் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

எனினும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தலைமையிலான வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கான அமைச்சரவை உபகுழுவின் அனுமதி இன்றி எரிவாயு விலையை அதிகரிக்க முடியாது என்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தற்போதைக்கு எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது. ஆனால் சில மாதங்களுக்குள்ளாக விலை அதிகரிப்பு சாத்தியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று உலக சந்தையில் ஏற்படும் விலை அதிகரிப்புக்கு ஏற்ப எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான சூத்திரம் ஒன்றை அமைச்சரவை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

தலைமறைவான சிறுமியும் இளைஞனும் பொலிஸாரால் மீட்பு : சிறுமிக்கு வைத்திய பரிசோதனை!!

பொகவந்தலாவ – வானகாடு தோட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தாக கூறப்படும் சந்தேக நபர் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவான் டி.சரவனராஜா உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை நேற்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜபடுத்தபட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டது.

கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி காதல் உறவுமுறையில் தலைமறைவான 18 வயது இளைஞனும் 16 வயது யுவதியும் நேற்று உடபுஸ்ஸலாவ பகுதியில் உள்ள இளைஞனின் உறவினர்கள் வீட்டில் வைத்து கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் .

சிறுமியின் பெற்றோர்களால் பதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கமைய குறித்த சிறுமியை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொகவந்தலாவ பொலிஸார் 16 வயது சிறுமியை உடபுஸ்ஸலாவ பகுதியில் உள்ள சந்தேகநபரின் உறவினர் வீட்டில் இருந்து மீட்டுள்ளதாகவும், சந்தேகநபர் கைது செய்யபட்டதாகவும் இவர்கள் இருவரும் 43 நாட்கள் தலைமறைவாகியிருந்தாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த 16 வயது சிறுமி சட்டவைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர் .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

கார் ஒன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!!

ஹட்டன், கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன பகுதியில் கார் ஒன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறி்த்த சம்பவம் நேற்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கினிகத்தேன ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் அதிகாரியொருவர் த இ.போ.ச பஸ் வண்டியில் கடிதமொன்றை வழங்க காரில் பின் தொடர்ந்து சென்றபோதே பாதையை விட்டு விலகி விபத்து நேர்ந்துள்ளது.

மேலும், சம்பத்தில் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என கினிகத்தேனை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ராஜனிகாந்த்தின் மனைவிக்கு சிக்கல்!!

பன்னிரண்டு வாரங்களுக்குள் இலங்கை மதிப்பில் சுமார் பதினான்கு கோடி ரூபாவை நிறுவனம் ஒன்றுக்குச் செலுத்துமாறு ‘சுப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு இந்திய மீயுயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘கோச்சடையான்’ படத் தயாரிப்புக்காக ‘அட் பியூரோ’ என்ற நிறுவனத்திடம் ‘மீடியா வன் க்ளோபல்’ என்ற நிறுவனம் இந்திய மதிப்பில் பத்துக் கோடி ரூபாயை கடனாக வாங்கியிருந்தது. மீடியா வன் நிறுவனத்தின் இயக்குனர்களுள் லதா ரஜினிகாந்தும் ஒருவர்.

இந்தப் பணத்துக்குப் பதிலாக கோச்சடையான் திரைப்படத்தின் உள் நாட்டு வினியோக உரிமையை அந்த நிறுவனத்துக்கு வழங்குவதாக ஒப்பந்தம் இடப்பட்டிருந்தது.

எனினும் பட வேலைகள் பூர்த்தியானதும் அதன் உள் நாட்டு வினியோக உரிமை ‘ஈரோஸ் இன்டர்நெஷனல்’ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக ரஜினியின் மகளும் கோச்சடையான் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அட் பியூரோ நிறுவனம் தொடுத்த வழக்கிலேயே உச்ச நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.

மாணவர்களுக்கு Tab வழங்கும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தும்!!

பாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் டப் (Tab) வழங்கும் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

டப் (Tab) வழங்கும் இத்திட்டத்தால் 175,000 பாடசாலை மாணவர்களும், 28,000 ஆசிரியர்களும் பயனடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 5 பில்லியன் ரூபா செலவில் இந்த திட்டத்தினை முன்னெடுக்க தேவை இல்லை எனவும் டப் (Tab) வழங்குதவன் மூலம் நிதி வீண் விரயமாவதாகவும் ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஆணின் தலை : காணாமல் போனவர் காட்டுப்பகுதியில் எலும்புக்கூடாக!!

 
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவ காட்டுப்பகுதியில் வயோதிப ஆண் ஒருவரின் சடலம் உருகுலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

உருக்குலைந்த சடலம் நேற்று மாலை 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 80 வயதான ஆர்.எம்.ரம்பன்டா என்பவரின் சடலம் என உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 7ம் மாதம் வெளியில் செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பாததையடுத்து, உறவினர்களால் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்பிறகு நேற்று குறித்த காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்ற ஒருவர் கயிறில் தொங்கியவாறு எலும்புக்கூடை கண்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து விரைந்து சென்ற அக்கரப்பத்தனை பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டுள்ளார என்பது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸாரும், நுவரெலியா கை ரேகை அடையாளப்பிரினரும் இணைந்து புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வடக்கில் 2864 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றம்!!

கிளிநொச்சியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஷாப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தால் 15 மாத காலப்பகுதியில் இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஷாப் (SHARP) நிறுவன முகாமையாளார் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஷாப் (SHARP) நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்கும் ஜப்பான் நாட்டின் இலங்கைப் பிரதிநிதி செல்வி நிறோசா வெல்கம, உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஷாப் (SHARP) நிறுவனத்தின் பளை அலுவலகம் மற்றும் கண்ணி வெடி அகற்றும் பகுதிகளை பார்வையிட்டார்.
இதன் போது நிறுவனத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முடிவடைந்த வேலைத் திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து வெளியிடும் போது, இந்த நிறுவனமானது கடந்த 15 மாத காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் மூன்று இலட்சத்து ஒன்பதாயிரத்து இருநூற்று அறுபது சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து, இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது. தொடர்ந்தும் முகாமாலை, கிளாலி பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம் என்றும் குறிப்பட்டார்.
ஜப்பான் அரசாங்கம் மற்றும் ஜப்பான் நாட்டு மக்களிடமிருந்து பெறப்பட்ட 9.8 பில்லியன் ரூபா நிதியுதவியுடாக குறித்த பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மூக்குத்தி குத்திக்கொள்வதின் உண்மை ரகசியம் தெரியுமா?

அந்தகாலம் முதல் இதுவரை மூக்குத்தி குத்திக்கொள்வது என்பது வழக்கமான ஒன்றாக கருதப்படுகின்றது.

ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம் இருப்பதனால் இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது.

மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.

தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது.

மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

உலகின் மிக இருட்டான கட்டிடம் தென் கொரியாவில் திறப்பு!!

தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதியாக, உலகின் மிக இருட்டான கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், தற்போது தென் கொரியா நாட்டில் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 99 சதவித அளவில் சூரிய ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்ட, இருட்டான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை, ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சார்பில், லண்டன் கட்டிடக்கலை நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.

தூய்மை மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை குறிக்கும் வகையில், இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்களின் தலை முடியை விட சுமார் 3,500 மடங்கு மெல்லியதாக உள்ள, சிறிய நானோகுழாய்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை, 14 மற்றும் 50 மைக்ரான் நீளத்தைக் கொண்டதாகும்.

சூரிய ஒளி, இந்த நானோகுழாய்களில் பிடிக்கப்பட்டு, கட்டிடத்தில் இருந்து வெப்பமாக வெளியிடப்படுகிறது. VantaBlack VBx2 என்றழைக்கப்படும் தனித்துவமான பொருளைக் கொண்டு, இந்த கட்டிடம் மூடப்பட்டிருக்கிறது.

இந்த கட்டிடம் குறித்து இதன் வடிவமைப்பாளர் அனீஸ் கபூர் கூறுகையில், ‘இந்த கட்டிடத்தில் உள்ள ’VantaBlack VBx2’ எனும் பொருள், பிரபஞ்சத்தின் மிக கருப்பான பொருள் ஆகும். இதன் அருகில் சென்றால் நாமே மறைந்து விடுவோம்.

இந்த கட்டிடம், குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தற்காலிக பெவிலியனாக உள்ளது. மேலும், இந்த கட்டிடத்தில் சிறிது சிறிதாக ஆயிரக்கணக்கில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனை, பார்த்தால் பூமியிலிருந்து வானில் நட்சத்திரங்களைப் பார்ப்பது போன்று தெரியும். மேலும், விண்வெளியில் மிதப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும்’ என தெரிவித்துள்ளார்.

கற்பூரம் காட்டும்போது கண்சிமிட்டும் பெருமாள் : ஆச்சரியம் தரும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

 
சென்னையில் அமைந்துள்ள பெருமாள் கோயில் ஒன்றில், பெருமாள் சிலை கற்பூரம் காட்டும் போது, கண்சிமிட்டுவதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, நெற்குன்றத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கரி வரத ராஜ ஸ்வாமி கோயில். இந்த கோயிலில் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அப்போது, பெரும்படை இந்த கோயிலுக்கு திரண்டு வரும்.

இந்நிலையில், ஒரு சனிக்கிழமை தினத்தன்று பெருமாளுக்கு கற்பூர ஆராத்தி காண்பிக்கப்பட்டது. அச்சமயம், பெருமாள் கண்ணை மூடி திறந்ததாக பக்தர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரை அங்கிருந்தவர்கள் நம்பவில்லை. எனினும், அந்நபர் அடுத்த சனிக்கிழமையன்று தனது குடும்பத்தினரை அந்த கோயிலுக்கு அழைத்து வந்துள்ளார். அதன் பின்னர் அவரது குடும்பத்தினருக்கும், மற்ற சிலருக்கும் அதே நேரத்தில் பெருமாள் கண்சிமிட்டும் காட்சிகள் தென்பட்டிருக்கின்றது.

எனினும் இவ்வாறான சிலைகள் மனிதர்களாலேயே செய்யப்படுவதால், கண்கள் யதார்த்தமாக அமைந்திருக்கும். இது கண்கள் சிமிட்டிது போன்ற உணர்வை தந்திருக்கும் என்பது அறிவியல் கூற்று.

ஆனால் பக்தர்களில் சிலர், எல்லோருக்கும் இந்த கண்கள் தென்படுவதில்லை என்றும், கற்பூர ஆராத்தி காட்டும்போது சிலருக்கு மட்டுமே தெரிகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

குடும்ப சண்டையை தடுக்க முயன்ற சிறுமி படுகொலை : துடிதுடித்து இறந்த பரிதாபம்!!

 

தமிழகத்தில் பெற்றோரின் சண்டையை தடுக்க முயன்ற சிறுமி கோடாரியால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையின் திருமங்கலத்தை சேர்ந்தவர் முருகன், கட்டட வேலை செய்யும் இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இவர்களில் மூத்த பெண் இருளாயி(வயது 10).

இந்நிலையில் முருகன்- லட்சுமிக்கு அடிக்கடி சண்டை வருவதும், கோபித்துக் கொண்டு லட்சுமி அம்மா வீட்டுக்கு செல்வதும் வழக்கம். இதேபோல் சம்பவதினத்தன்று இருவருக்கும் சண்டை வந்தது, கோடாரியால் லட்சுமியை முருகன் தாக்க முயன்ற போது இருளாயி அதை தடுக்க முயன்றுள்ளார்.

இதில் எதிர்பாராதவிதமாக இருளாளியின் தலையை கோடாரி பதம் பார்த்தது, சம்பவ இடத்திலேயே மகள் துடிதுடித்து இறக்க முருகன் தப்பியோடிவிட்டார்.

தலையில் காயத்துடன் வெளியே ஓடிவந்த லட்சுமி அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார், விரைந்து வந்த மக்கள் உடனடியாக லட்சுமியை மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர், தப்பியோடிய முருகனையும் தேடி வருகின்றனர்.

கமலுக்கு தான் முன்னுரிமை, ரஜினிக்கு அல்ல : சீமான் பரபரப்புப் பேட்டி!!

நடிகர் கமல்ஹாசன் நாளை தன் அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில் அவரை சீமான் சந்தித்து பேசியுள்ளார்.

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்ந்த ராமேஷ்வரம் இல்லத்தில் இருந்து நாளை தன் அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

அதற்காக மூத்த அரசியல் தலைவர்கள் மு.கருணாநிதி, நல்லக்கண்ணு, விஜயகாந்த் உள்ளிட்டோர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றிருந்தார் கமல்ஹாசன்.

இந்நிலையில் இன்று காலை கமலின் ஆழ்வார்பேட்டை இல்லதிற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரை சந்தித்து தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பு குறித்து சீமான் கூறுகையில், மாற்றத்திற்காக மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் கமல் அரசியலுக்கு வருகிறார். அரசியலில் நானும் கமலும் இணைந்து செயல்படுவதை காலம்தான் முடிவு செய்யும், படிக்கும் காலத்தில் இருந்தே அவரை ரசித்துள்ளேன்.

நானும் அவரும் ஒரே பூமி, ஒரே மண்ணைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் ரஜினி பணியாற்ற ஒன்றும் புதியதாக இல்லை என பரபரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளார்.

வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் ராணுவ அதிகாரியின் மகள்!!

இந்திய முன்னாள் ராணுவ அதிகாரியின் மகள் வீதியில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் லக்னோவில் உள்ள இந்திராநகர் பகுதியில் மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது மேஜர் பிபின் சந்திராவின் குடும்பம். திடீரென ஒருநாள், 2004ம் ஆண்டு நிகழ்ந்த விபத்து ஒன்றில் மேஜர் மற்றும் அவரது மனைவி பலியாகிவிட, அனாதையாக கதறி அழுதுள்ளனர் பிபினின் குழந்தைகள்.

மேஜர் இறந்த ஒரு சில தினத்தில் வீட்டிற்கு வழங்கப்பட்டு வந்த மின்சார இணைப்பு, தண்ணீர் இணைப்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டதால் செய்வதறியாது தவித்து நின்ற மேஜரின் முதல் மகள் இந்த துயரம் தாங்க முடியாமலே தன் உயிரைவிட்டுள்ளார்.

மூத்த மகளும் இறந்துவிட்ட நிலையில் செய்வதறியாது நின்ற நிலையில் 22 வயதேயான இரண்டாவது மகள் அஞ்சனா மற்றும் அவரது இளைய சகோதரர் மிகுந்த மனஉளைச்சலில் தவித்துள்ளனர்.

பின்னர் உணவிற்காக கடந்த 12 வருடங்களாக சாலையில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த இருவரையும் கவனித்த மேஜரின் நண்பர் ஒருவர், அவர்கள் குறித்த தகவலை பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.<

அதன் அடிப்படையில், இருவரையும் மீட்ட பொலிசார் நிவாரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்களை சோதனை செய்த மருத்துவர் சுரேஷ் கூறுகையில், Schizophrenia என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இருவருக்கும் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் பேச்சு கூட சரியாக வராத அவர்கள், தற்போது நல்ல முறையில் பேசி வருகிறார்கள், அஞ்சனா இன்னும் அவர் வாழ்ந்த வீட்டை மறக்கவில்லை, அதுகுறித்து அடிக்கடி விசாரித்தபடியே இருக்கிறார் என கூறியுள்ளார்.

இந்திய ராணுவத்தில் முன்னாள் மேஜராக பணிபுரிந்தவரின் பிள்ளைகளுக்கே இந்த நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த மனவேதனையை தருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது அக்கா, தம்பி இருவரின் உடல்நிலையும் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

என்னை மன்னியுங்கள் : நடிகை விந்தியாவின் உருக்கமான கடிதம்!!

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை நடிகை விந்தியா எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், முதலில் என்னை மன்னியுங்கள் முதல்வரே என்று கேட்கத் துடிக்கும் நேர்மையான தொண்டர்களில் நானும் ஒருத்தி, எடப்பாடியாருக்கு இத்தனை பெரிய இடமா என்று ஏளனப்பார்வை பார்த்தவர்களில் நானும் ஒருத்தி.

அம்மாவைத் தவிர வேறொன்றும் அறியாத விசுவாசிகளில் நானும் ஒருத்தி, இரட்டை இலையே இதயத்துடிப்பாக எண்ணிய அ.தி.மு.க பக்தைகளில் நானும் ஒருத்தி. கழகம் இரண்டுபட்டதால் கலங்கி நின்ற கணக்கற்ற தொண்டர்களில் நானும் ஒருத்தி, கூவத்தூர் கூத்துகளால் மனம் நொந்த மக்களில் நானும் ஒருத்தி.

இப்படி எத்தனையோ எதிர்மறை கருத்துகளால் மனம் வெறுத்தவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தாலும், இன்று என் மனம் எனை அறியாமல் உங்களைப் பாராட்டி எழுதச் சொல்கிறது.

அம்மாவின் பிள்ளைகள் இனி அநாதை பிள்ளைகள் என எதிரிகள் ஏளனம் செய்யும்போது தாயை இழுந்து தவிக்கும் எங்களுக்கு தமையனாய் வந்தாய், அம்மாவின் ஆட்சி காத்து தைரியம் தந்தாய். நீங்கள் ஏறி வந்த படிக்கட்டுக்களோ தாண்டிவந்த, தகர்த்துவந்த தடைகற்களோ வழிகளோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நாளைக்கு கலைத்துவிடுவோம் என்று வேளைக்கு அறிக்கைவிடும் கழக எதிரிகளிடமிருந்து இயக்கத்தையும் இரட்டை இலையையும் கட்டிக்காத்த பெருமை உங்களுக்குண்டு.

தலையில் நீங்கள் கிரீடம் சுமந்து தலைவனாய் உருப்பெற்று ஒரு வருடம் உருண்டோடிவிட்டது. சற்று உற்றுப்பார்பவர்களுக்குத்தான் தெரியும் இது சுகவாசமா; இல்லை வனவாசமா என்று.

உங்கள் உயரம் கண்டு உள்ளெரிச்சல் படுபவர்களுக்குத் தெரியாது நீங்கள் ஏறி நிற்பது ஈட்டியின்மீது என்று. செயற்கை போராட்டங்கள், இயற்கை இடர்ப்பாடுகள், விஷத் துரோகக் கூட்டங்கள் விலைபோன நண்பர்கள் என மாறி மாறி அடித்தாலும் அசராமல் அம்மாவின் அரசாற்றினீர்கள்.

தலைவர்கள் இடையே தலைவனாய் இருப்பது சாதாரண செயல் அல்ல. வலிகளைத் தவிர்க்க முடியாவிட்டாலும் வேதனைகளை வெளிக்காட்டாமல் நீங்கள் நடத்திய இந்த ஒரு வருட ஆட்சி உங்கள் திறமைக்கு சாட்சி.

வாழ்த்துகின்றேன் முதல்வரே! அம்மாவின் ஆட்சி தொடரட்டும்; ஏழை மக்களின் முகம் மலரட்டும். இரட்டை இலை இருக்கும் பக்கம் இயக்கம் இருக்கும். இயக்கம் இருக்கும் பக்கம் அ.தி.மு.க தொண்டர்களின் இதயம் இருக்கும். உங்கள் வெற்றிப் பயணம் தொடர விரும்பும் அன்பு தொண்டர்களில் நானும் ஒருத்தி’ என்று தெரிவித்துள்ளார்.

5 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை : குற்றவாளியை அடித்தே கொன்ற பொதுமக்கள்!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பேரை பொதுமக்கள் வெளியில் இழுத்து வந்து அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருணாசல பிரதேசம் லோகித் மாவட்டத்தில் கடந்த 12ம் திகதி 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் 5 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பொலிசார் பிடியில் வைத்து விசாரிக்கும் படி தெரிவித்தார், அதன் படி சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த தகவல் ஊர் மக்களுக்கு தெரியவந்ததால், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சிறையை உடைத்து, இருவரையும் வெளியே இழுத்து வந்து, அவர்களை கண்மூடித்தனமாக அடித்தனர்.

இதில் அந்த இருவரும் வலி தாங்க முடியாமல் கெஞ்சியுள்ளனர், ஆனால் விடாத மக்கள் அவர்களை அடித்தே கொன்று அங்கிருக்கும் சந்தைப் பகுதியில் உடலை வீசிவிட்டு சென்றுள்ளனர்.

கொல்லப்பட்ட இருவரில் ஒருவரின் பெயர் சஞ்சய் சாபூர், மற்றொருவரின் பெயர் ஜக்தீஸ் லோகர் எனவும் இவர்கள் இருவரும் அஸ்ஸாம்மைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.