தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கத்தின் காதல் : வியப்பில் பார்வையாளர்கள்!!

சில வாரங்களுக்கு முன்னர் தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் மூன்று சிங்கம் குட்டிகள் பிறந்துள்ளன. தாய் மற்றும் குட்டிகள் நலமாக உள்ளதாக மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த குட்டிகளின் தாய் குட்டிகளை பெற்றெடுக்கும் வரையில் தந்தை சிங்கம் அருகிலேயே இருந்து பாதுகாத்ததனை அவதானிக்க முடிந்துள்ளது.

மூன்று சிங்கம் குட்டிகளில் , ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குட்டிகள் உள்ளடங்குகின்றது. கடந்த மாதம் 22ஆம் திகதி Thor மற்றும் Naledy என்ற சிங்கங்களுக்கு இந்த குட்டிகள் பிறந்துள்ளன.

2013 ஆம் ஆண்டு Naledy என்ற சிங்கம் ஜேர்மனியில் உள்ள Tierpark Hagenbeck பூங்காவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. Thor என்ற சிங்கம் கொரியாவில் உள்ள Seoul பூங்காவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குட்டிகள் பிறக்கும் போது தந்தை சிங்கம் ஒன்று அருகில் இருந்த முதல் சந்தர்ப்பம் இதுவென தெஹிவளை மிருகக்காட்சி சாலை அதிகாரி தினுஷிகா தெரிவித்துள்ளார்.

பொதுவாக சிங்கம் குட்டிகள் பிறக்கும் போது, ஆண் சிங்கம், குட்டிகள் மீது ஆக்ரோஷமான குணத்தையே வெளிப்படுத்தும். இதன் காரணமாகவே குட்டிகளிடம் இருந்து தந்தைகள் பிரித்து தனியாக வைக்கப்படுவார்கள்.

எனினும் இந்த சிங்கம் அவ்வாறு செயற்படவில்லை எனவும் குட்டிகளை தாய் சிங்கம் பெறும் வரை தந்தை சிங்கம் பாதுகாத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக இந்த முறை குட்டிகள், தந்தையிடம் இருந்து பிரிக்கவில்லை என குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசமே இறுதி நம்பிக்கை : உறவுகளுடன் சேரும் வரை போராட்டம் தொடரும்!!

 
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை ஆரம்பித்து ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இன்று (20.02) 366வது நாள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பினைச் சேர்ந்த பிரதிநிதிகளும், சிவில் சமூ கஅமைப்புகள், அரசியல் கட்சிகள் மதகுருமார்கள், தென்னிலங்கை அமைப்புக்கள் என பலர் கலந்துகொண்டு இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காலை ஒன்பது முப்பது மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நண்பகல் ஒரு மணிவரை இடம்பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்பினைச் சேர்ந்த கலாரஞ்சனி..

எங்களது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ள நிலையில் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை, நாட்டின் ஜனாதிபதியும் எங்கள் விடயத்தில் கைவிரித்து விட்டார், நாங்கள் கேட்பது எங்களது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இருக்கின்றார்களா? இருக்கின்றார்கள் என்றால் எங்கு இருக்கின்றார்கள்? எப்போது விடுவிக்கப்படுவார்கள்? அல்லது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் உயிரோடு இல்லை என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதுவே. இதனை பொறுப்புடன் கூற வேண்டிய அரசு பொறுப்பற்று நடந்துகொள்கின்றமை வருத்தமளிக்கிறது.

இலங்கை விடயம் தொடர்பில் ஜநாவுக்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் ஒரு வருடம் நிறைவுப்பெற்றுள்ள நிலையில் இதுவரைக்கும நம்பிக்கை தரும் வகையில் எதுவும் இடம்பெறவில்லை.

ஐநாவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இலங்கை அரசை காப்பாற்றும் ஒரு நடவடிக்கையே. எங்களை பொறுத்தவரை இந்த இரண்டு வருடகால அவகாசம் என்பது ஒரு பயன்றற நடவடிக்கையே. எனத் தெரிவித்த அவர்

தமிழ் அரசியல் தரப்புக்கள் தங்களின் கட்சி பேதங்களை கடந்து எங்களின் பிச்சினைகளுக்காக ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறே சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் எங்களுக்காக கடந்த காலம் போன்று குரல் எழுப்ப வேண்டும்.

இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களின் இனப் படுகொலைக்கு சர்வதேசமும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. இருந்து தற்போதைய நிலையில் எங்களுக்கு இருக்கின்ற ஒரேயோரு நம்பிக்கை சர்வதேசமே எனவும் குறிட்டார்.

வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அவரச வேண்டுகோள்!!

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் எதிர்வரும் 24ம் திகதி சனிக்கிழமையுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.

அன்றைய தினம் வடக்கு கிழக்கு இணைந்த அனைத்து சங்கங்களும் மஞ்சல் சிவப்பு கோடிகளை பறக்க விட்டு ஆதரவினை வழங்குமாறு இன்று (20.02.2018) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 362ஆவது நாட்களை அடைந்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை 24ஆம் திகதி எமது போராட்டம் ஒருவருடத்தினை எட்டவுள்ளது.

எமது போராட்டம் ஆரம்பத்தில் கடந்த 2017 தை மாதம் 23அம் திகதி சாகும் வரையிலான போராட்டத்தினை மேற்கொண்டு அதனூடாக பல விளைவுகளை சந்தித்து அதன் பின்னர் இந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 2017. 02.24 அன்றைய தினத்தில் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதி ஒரு வருடத்தினை எட்டவுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு மக்களுடைய பெரும் ஆதரவு தேவை, கடந்த 2017ஆம் ஆண்டு போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது எமது கோரிக்கைக்கு அமைவாக அன்றைய தினத்தில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கடையடைப்புப் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தார்கள்.

அதே போல எமது போராட்டம் எதிர்வரும் சனிக்கிழமை ஒரு வருடமாகின்றது , அன்றைய தினம் வடக்கு கிழக்கிலுள்ள சங்கங்களான, பேருந்துச்சங்கம், வர்த்தகர் சங்கம், இ.போ.ச பேருந்து , ஆசிரியர்கள் சங்கங்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், சிறு வியாபாரிகள் சங்கம், பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், சகலரும் சிவப்பு மஞ்சள் கொடிகளை கட்டி எமது போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதுடன் உங்களது பணிகளை வழமையாக மேற்கொள்ளவும்.

தற்போது சர்வதேசத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய ஒத்துழைப்பு எங்களுக்கு முழுமையான ஆதரவாக சர்வதேசத்திற்கு எடுத்துக்கட்டவேண்டும். எங்களுடைய போராட்டத்தில் அரச தரப்பில் நம்பிக்கை இழந்த நிலையிலேயே சர்வதேசத்தினை தலையிடுமாறு வலியுறுத்தி வருகின்றோம்.

அவர்கள் வந்து இறங்குவதாலே எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம். அதனை நோக்கியதாகவே நாங்கள் நடாத்திக்கொண்டு இருக்கின்றோம்.

உறுதியான ஒரு தீர்வுகிடைக்கும் வரையில் எமது போராட்டத்தினை நிறுத்த மாட்டோம். எனவே சனிக்கிழமை எமது போராட்டத்திற்கு தமிழ் மக்களாகிய நீங்கள் சிவப்பு மஞ்சல் கொடிகளை பறக்கவிட்டு எங்களுடைய போராட்டத்திற்கு பூரண ஆதரவினை வழங்குமாறு கோரி நிற்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் பழச்செய்கைக்கான புதிய கட்டடம் திறப்பு!!

 
வவுனியா வடக்கு பழச்செய்கையாளர் சங்கத்தின் புதிய கட்டடத்தொகுதி நேற்று (19.02.2018) மதியம் 12.30 மணியளவில் திறக்கப்பட்டது.

கட்டடத்தை நோர்வே நாட்டின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானியர் மோனிக்கா சிபென்ஸ்கறு திறந்துவைத்தார்.

நோர்வே நாட்டின் 38 லட்சம் ரூபா நிதியுதவியுடன் ஐ.எல்.லோ. நிறுவனத்தினால் அலுவலக தொகுதியும் பழம் பதனிடும் தொகுதியும் மறுசீரமைப்புச் செய்யப்பட்டது.

வன்னியில் வீதியில் நெல் காயப்போடும் மக்கள் : நெல்தளம் அமைத்துத்தருமாறும் கோரிக்கை!!

 
தற்போது பெரும்போக நெற்செய்கை அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் நெற்தளம் இன்றி பிரதான வீதிகளில் அதனைக்காயவைப்பதனால் பல்வேறு வீதி விபத்துக்கள் எற்படுகின்றன.

விவசாயிகள் தமக்கு நெற்தளம் இன்மையாலேயே தாங்கள் பிரதான வீதிகளில் காயவைத்து வருவதாகவும் தமக்கு நெற்தளம் அமைத்துத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெற்களை புளியங்குளம், நெடுங்கேணி, ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு போன்ற பிரதான வீதிகளில் நெற்களை காயவைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவுக்கு  விஜயம் மேற்கொண்ட மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர்!(படங்கள்,வீடியோ)

 
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர், பேரருட் கலாநிதி பிடலின் லயனல் இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை அவர்கள்,  கடந்த 18.02.2018  சனிக்கிழமை  வவுனியாவுக்கு  விஜயம்  மேற்கொண்டிருந்தார்.

அவரை வரவேற்கும்முகமாக, வவுனியா குறுமன்காடு தூய கிறிஸ்து அரசர் ஆலயத்தின் முன்பாக இருந்து,இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தை நோக்கி பங்கின் இளைஞர்களால், ஆயர் அழைத்து வரப்பட்டு  சூசைப்பிள்ளையார்குளம் முன் நுளைவாயினில் இருந்து, இறம்பைக்குளம் மகளீர் தேசிய பாடசாலை மாணவிகளாள் Band வாத்தியத்துடனும், சைவப்பிரகாசா மகளீர் பாடசாலை மாணவிகளது இன்னிய வாத்தியம் இசைக்கப்பட்டு,

மறைக்கல்வி மாணவ மாணவிகள், மறை ஆசிரியர்கள், பங்கு மேட்புப்பணிச்சபை உறுப்பினர்கள், பங்குமக்கள்,சமயத்தலைவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அனைவரும் மங்களகரமாக இன்முகத்துடன் ஒன்றுகூடி, மகிழ்வுடன், ஆயர் அவர்களை, வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தினுள் வரவேற்கக்கப்பட்டு, ஆயரினால்  ஆலய  முன்றலில்  கொடியேற்றப்பட்டு  சிறப்பு திருப்பலி  கொடுக்கு நிகழ்வும்  இடம்பெற்றது.


 

கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் பரிதாபமாகப் பலி!!

திருகோணமலை நிலாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவுப் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் சாம்பல்தீவு 06ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கணகசிங்கம் கேதீஸ்வரன் (41 வயது) என அறிவிக்கப்படுகிறது.

சாம்பல்தீவு பாடசாலைக்கருகில் இருக்கின்ற வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டு வாடகைப் பணத்தை வாங்குவதற்காகச் சென்ற போது வீட்டில் வாடகைக்கு இருந்தவருடன் தர்க்கம் ஏற்பட்டதையடுத்து வீட்டு உரிமையாளர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதனையடுத்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் வீட்டில் வாடகைக்கு இருந்தவரைக் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நிலாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறந்த விவசாயிகளை கௌரவித்த வடக்கு முதல்வர்!!

 
முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறந்த விவசாயிகள் பண்ணையாளர்களை வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் கௌரவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் நேற்று பிற்பகல் வடமாகாண அமைச்சர் கந்தையா சிவனேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

வடமாகாண விவசாயம், கமநல சேவைகளும் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசன மீன்பிடி நீர்வழங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான விவசாயிகளும், பண்னையாளர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் ப.கமலேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதிஸ்வரன், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

பாடசாலை அதிபர் ஒருவரின் செயற்பாடு குறித்து முறைப்பாடு!!

சிலாபத்தில் பாடசாலையின் அதிபர் ஒருவர் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், மாணவர்களை அநாவசியமாக அடிப்பதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைபாட்டை மாணவர்கள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ளதுடன், சிலாபம் நகரில் உள்ள நஸ்ரியா மத்திய கல்லூரியின் அதிபர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பாடசாலையின் அதிபர் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், மாணவர்களை அநாவசியமாக அடிப்பதாகவும் அதிபரின் இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெறுவதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை முறையாக மேற்கொள்ளப்பட முடியாமல் இருப்பதாகவும் முறைப்பாடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சிலாபம், நஸ்ரியா மத்திய கல்லூரிக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.

இதன்போது அந்த குழுவினர் பாடசாலையின் ஆசிரியர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்துள்ளதுடன், முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்துமாறு அந்தக் குழுவை பணித்துள்ளனர்.

தயாழில் தங்கையை தாயாக்கிய குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த கடுமையான தண்டனை!!

உறவுமுறையில் தங்கையான சிறுமியை தகாத பாலியல் உறவால் தாயாராக்கிய அண்ணனுக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (19.02) தீர்ப்பளித்தது.

“சிறிய தாயாரின் மகளான அந்தச் சிறுமி தங்கை முறை உடையவர். உறவுமுறைத் தங்கையுடன் தவறான பாலியல் உறவு வைத்தமைக்கு எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. எதிரி அதே குற்றத்தை மீளவும் புரிந்துள்ளதால் அதற்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. இரண்டு தண்டனைக் காலத்தையும் எதிரி ஏக காலத்தில் அனுபவிக்க முடியும்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபா இழப்பீட்டை எதிரி வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறின் 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும். தண்டமாக 10 ஆயிரம் ரூபா செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 2 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று தண்டனைத் தீர்ப்பளித்தார் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்.

பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி 14 வயதுடைய சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார். என்று எதிரியின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் கருணை விண்ணப்பம் முன்வைத்தார்.

“எதிரி தனது குற்றங்களை ஏற்றுள்ளார். எனினும் உறவுமுறையான தங்கையை அவர் வன்புணர்வுக்குட்படுத்தியதன் ஊடாக அந்தச் சிறுமிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளார். எதிரி இந்தக் குற்றத்தைச் செய்யும் போது சட்டமுறைத் திருமணத்தின் ஊடாக 3 பிள்ளைகளின் தந்தையாகவும் இருந்துள்ளார். எதிரியின் குற்றத்துக்கு 7 ஆண்டுகள் தொடக்கம் 20 ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனையை வழங்க முடியும்.

எனவே எதிரிக்கு அதிகபட்ச தண்டையை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்கவேண்டும்” என்று அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றில் விண்ணப்பம் செய்தார்.இரண்டு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.

-அத தெரண-

உலகளாவிய ரீதியில் சாதனை படைத்த கனடா வாழ் இலங்கைத் தமிழன்!!

 
உலக மாஸ்டர் பேக்கர் (World Master Baker) சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் கனடா வாழ் இலங்கை தமிழர் ஒருவர் வென்றுள்ளார்.

ACE வெதுப்பகத்தின் சிரேஷ்ட இயக்குனர் மார்கஸ் மரியதாஸ் என்பவர் 6 சர்வதேச போட்டியாளர்களுடன் போட்டியிட்டு இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியை தான் ஒரு போதும் கற்பனை செய்து பார்த்ததில்லை என மார்கஸ் மரியதாஸ் தெரிவித்துள்ளார். வெதுப்பக ஒலிம்பிக் போட்டியாக தான் இதனை கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போட்டியில் பங்குபற்றுவதாக மார்கஸ் மரியதாஸ் பிரான்ஸ் தலைநகரான பரிஸிற்கு கடந்த வாரம் சென்றிருந்தார்.

அதற்கமைய உலகின் மிக பிரபலமான சர்வதேச போட்டியாளர்கள் 6 பேருடன் இணைந்து ஊட்டச்சத்து பாண் தாயாரிக்கும் போட்டி பிரிவில் அவர் பங்கு பற்றியுள்ளார். வட அமெரிக்கர்கள் மட்டுமே இந்த பிரிவில் பங்குபற்றியுள்ளனர்.

வெதுப்பகர்களின் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தை அடைவது போல, இது என்னுடைய சாதனைகளின் உச்சத்தில் இருக்கிறது, தற்போது 46 வயதான நான் எனது 25 வயதில் இருந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போட்டி ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒரு முறையும் இடம்பெறுகின்றது. உலகின் மிகசிறந்த 18 சர்வதேச போட்டியாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

பாரம்பரிய ஐரோப்பிய முறைகளில் தனது நிபுணத்துவத்தை கொண்டு அவர் இந்த போட்டியை சிறப்பாக நிறைவு செய்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக 1995 ஆம் ஆண்டு மரியதாஸ் கனடா சென்றார். அங்கு டொரொன்டோவில் வாழ்ந்து வருகிறார்.

கணக்கியல் படிக்கும் போது, அவர் ACE வெதுப்பகத்தில் பகுதி நேர வேலையில் இணைந்தார். மரியதாஸிற்கு வெதுப்பக தொழில் அனுபவம் இல்லாத போதிலும், எண்களை கையாளக்கூடிய திறன் அவரிடம் காணப்பட்டது. வெதுப்பகத்தில் அவரின் திடமான செயற்பாடுகள் காரணமாக சிரேஷ்ட இயக்குநராக தரமுயர்ந்தார்.

அதன் பின்னர் வெற்றிகரமாக பணியை முன்னெடுத்தவர் 400க்கும் அதிகமான பாண்களை தயாரித்தார். தற்போது உலகின் தலை சிறந்த பேக்கர் போட்டியின் இறுதி போட்டியில் அவர் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நாளை முதல் சிகரட் விற்பனை செய்ய முற்றாக தடை : மீறினால் சட்ட நடவடிக்கை!!

வவுனியா – சிங்கள பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனை முற்றாக நிறுத்தப்படவுள்ளது.

குறித்த பிரதேச செயலக பிரிவில் உள்ள விகாராதிபதிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் காவல்துறை பொறுப்பதிகாரிகள் மற்றும் அனைத்து விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி இதனை ஒத்திகை பார்க்கும் விதமாக பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் அந்த பகுதியில் பீடி, சிகரட் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த அனைத்து பொருட்களையும் விற்பனை செய்வதிலிருந்து விலகியிருக்க விற்பனை நிலைய உரிமையாளர்கள் இணங்கியுள்ளனர்.

மேலும் அதனை மீறும் நபர்களுக்கு எதிரகா சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ஹிரு நியூஸ்-

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டுச் செல்ல மாட்டார்கள்!!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர்களும் ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக்கட்சியின் பொருளாளரான அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர்கள் எந்த வகையிலும் அரசாங்கத்தை விட்டு செல்லப் போவதில்லை எனவும் வலுவான அணியாக அரசாங்கத்தில் செயற்பட போவதாகவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்குள் முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருப்பதாகவும் அந்த நோக்கத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவை பகிரங்கமாக எச்சரித்த சம்பந்தன் : அமைதியாக இருந்த சபை!!


 
ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோருகின்றோம். தனி ஈழ கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நிலை குறித்து நாடாளுமன்றில் இன்று இடம்பெறும் விசேட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இவற்றையும் மீறி ஈழம் பிறக்குமாயின் அது மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்திலேயே பிறக்கும். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரது பொதுஜன முன்னணியும் மிகவும் கீழ்த்தரமாகவே தேர்தல் பிரச்சாரம் செய்திருந்தார்கள்.

அரசாங்கத்திற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளிக்கும் வாக்குகள் ஈழம் உருவாக வழிவகுக்கும் என அப்பாவிச் சிங்கள மக்களை வழிநடத்தி இருந்தார்கள். இது மிகவும் தவறானது. இப்படியாக சாதாரண சிங்கள மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என நாடாளுமன்றில் சம்பந்தன் எச்சரித்தார்.

இதேவேளை நாடாளுமன்றில் இன்று இடம்பெறும் விசேட விவாதத்தில் ஆளும் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாடும் பொது பலத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

விமல் மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு இடையிலும் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

எனினும் சம்பந்தனின் உரையின் போது கூட்டு எதிர்க்கட்சியோ வேறு கட்சியினரோ எவ்வித குழப்பங்களையும் ஏற்படுத்தாமல் அமைதியாக இருந்தார்கள்.

மஹிந்தவை பகிரங்கமாக விமர்சித்த போதும் கூட்டு எதிர்க்கட்சியினர் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை. அத்துடன் சம்பந்தன் தனது உரையை முடித்துக்கொண்டு அமரும் போது அவருடைய உரைக்காக கைத்தட்டல்கள் எழுந்ததையும் அவதானிக்க முடிந்தது.

-தமிழ்வின்-

வவுனியாவில் 42 பவுண் நகைகளைக் கொள்ளையடித்த நபர் பொலிசாரால் கைது!!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து கடந்த 6ஆம் திகதி ஒருவரைக் கைது செய்த பொலிசார் அவரிடமிருந்து இரண்டு கிராம் ஹொரேயினைக் கைப்பற்றியிருந்தனர். இதையடுத்து அவரை மேலதிக விசாரணைகள் மேற்கொண்டபோது பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 6ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு வானில் கொழும்பு சென்ற யாழ் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய நபர் ஒருவரிடம் சோதனை மேற்கொண்ட போது அவரது உடமையிலிருந்து இரண்டு கிராம் ஹொரோயினை மீட்டுள்ளதாகவும் இதையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்வதற்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொண்டுவந்த நிலையில் குறித்த சந்தேக நபர் திருட்டுச்சம்பவத்துடனும் பெண்கள் தனிமையிலிருக்கும் வீடுகளில் திருடி வந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் 7 நாட்கள் தடுத்து வைக்கும் அனுமதியை நீதிமன்றத்திடம் பெற்று மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது யாழ்ப்பாணம், செட்டிகுளம், மன்னார் போன்ற பகுதிகளிலும் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இவருக்கு எதிராக ஏழு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடியதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதுடன் நபரினால் திருடப்பட்டு வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்பட்ட 42 பவுண் நகைகளை மீட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்றும் வழிகள்!!

நீர் தேக்கம் அல்லது நீர் கட்டு என்பது ஒடிமா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் நமது உடலில் உள்ள செல்களுக்கு வெளிப்புறத்தில் உள்ள சுவருக்கு இடையை நீர் தேங்கி கொள்ளும். இந்த பிரச்சினை பொதுவாக அழற்சி அல்லது கிருமிகள் தொற்றால் ஏற்படுகிறது.

இதற்கு சில வீட்டு வைத்தியங்களை கொண்டே இதை எளிதில் எவ்வாறு போக்குவது என்று பார்ப்போம்.

வெள்ளைப் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் கொதித்த தண்ணீரில் பெருஞ்சீரகம் போட்டு 15-20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு வடிகட்டி வெதுவெதுப்பான நீரை பருகவும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முறை என்ற வீதத்தில் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்..

அரை எலுமிச்சையை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தயாரிக்கவும். நன்றாக கலந்து கொள்ளவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

ஜஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டிக் கொண்டு வீங்கிய இடத்தில் 10 நிமிடங்கள் வைத்து அப்புறம் 10 நிமிடங்கள் கழித்து மறுபடியும் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதை 1மணி நேரம் செய்ய வேண்டும். கொஞ்சம் கனமான துணியாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் நாளடைவில் நல்ல மாற்றத்தை காணலாம்.

வெங்காயத்தை நசுக்கி ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஒடிமா சரியாகி விடும்.

மிதமான தீயில் ஓரு பாத்திரத்தில் தண்ணீரை சூடுபடுத்த வேண்டும். பிறகு கொத்தமல்லி விதைகளை சேர்த்து தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று முறை என்று வெதுவெதுப்பாக குடிக்கவும் இவ்வாறு செய்வதனால் ஒடிமா குணமடையும்.

ஒரு நாளைக்கு மூன்று வாழைப்பழம் சாப்பிட்டால் உடலிலுள்ள அதிகப்படியான நீர் வெளியேறிவிடும்.

ஒரு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சையை இரவில் ஊற வைத்து அடுத்த நாள் அதை சாப்பிடவும். தேங்கிய நீர் முற்றிலுமாக வற்றிவிடும்.

பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு டீ ஸ்பூன் தேன் சேர்க்கவும், பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் டான்டெலியன் இலைகளை சேர்க்கவும். மூடியை மூடி அப்படியே 5 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் ஒடிமா குறைய வாய்ப்பு உள்ளது.

கொதிக்கின்ற தண்ணீரில் பார்ஸிலி இலைகளை போட்டு ஒரு கப் தண்ணீரில் 5 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி அந்த நீரை குடிக்கவும். ஒரு நாளைக்கு மூன்று முறை என்றால் நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு நீளமான டம்ளரில் தினமும் ஒரு முறை கிரான்பெர்ரி ஜூஸ் குடித்தால் நீர் தேக்கத்தை சரி செய்கிறது. ஒரு டேபிள் ஸ்பூன் அப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஒடிமா சரியாகி விடும்.

ஒரு பக்கெட் நிறைய வெதுவெதுப்பான தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பு கலந்து அதில் நீர் தேங்கியுள்ள பகுதியை மூழ்க வைக்க வேண்டும். கிட்டத்தட்ட 10-15 நிமிடங்கள் வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தால் போதும்.