இத்தாலியின் ஓலோலாய் கிராமத்தில் 190 ரூபாவிற்கு வீடு விற்பனை!!

இத்தாலி நாட்டின் சார்டினியா தீவில் உள்ள பார்பாகியா மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ளது ஓலோலாய் கிராமம். இங்கு வீடொன்றை வெறும் 1 யூரோவிற்கு (இலங்கை ரூபா 190) விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அழகிய ஓலோலாய் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வசிக்கும் மக்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

இதனால், 1300 பேர் மட்டுமே தற்போது அங்கு வசித்து வருகின்றனர். அதோடு, அக்கிராமத்தில் குழந்தை பிறப்பு வீதமும் கணிசமாகக் குறைந்துவிட்டது.

அங்கு இருப்பவர்களும் நடுத்தர வயதைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், பலர் தொடர்ந்து ஓலோலாய் கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஓலோலாய் மேயர், மக்கட்தொகை குறைவதைத் தடுக்க அதிரடியாக 2015 இல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பொதுமக்கள் வெளியேறியதால் பாழடைந்து பூட்டியே கிடக்கும் 200 வீடுகளை தலா 1 யூரோவிற்கு விற்பனை செய்வதாக அறிவித்தார்.

இந்த வீடுகளை வாங்கும் நபர்கள் 3 ஆண்டுகளுக்குள் வீட்டை சரிசெய்து குடியேற வேண்டும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்துகொள்ளலாம்.
2017 ஆம் ஆண்டு இறுதிவரை உலகம் முழுவதும் இருந்து 120 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

”ஓலோலாய் கிராமத்தின் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதே எனது முதல் வேலை. கடந்த காலத்தைப் போல் இங்கு மக்கள் பெருக்கத்தை அதிகரிக்க வேண்டும். எங்கள் நகரம் சாவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதற்காக இங்கு வசிக்கும் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மீண்டும் வலிமைமிக்க கிராமத்தைக் கட்டமைப்போம்’ என ஓலோலாய் மேயர் எபிசோ அர்போ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமல்!!

 

 

பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அசித பெர்னான்டோ, ஜீவன் மென்டிஸ் மற்றும் அமில அபொன்ஸே ஆகிய வீரர்களும் இப்போட்டித் தொடரில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிகெட் சபை அறிவித்துள்ளது.

முதலாவது இருபதுக்கு இருபது போட்டி பெப்ரவரி 15 ஆம் திகதியும், 2 ஆவது போட்டி பெப்ரவரி 18 ஆம் திகதியும் நடைபெற உள்ளது.

இப்போட்டித் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி சார்பாக 15 வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வணியை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அனுமதித்துள்ளதாகவும் இலங்கை கிரிகெட் சபை தெரிவித்துள்ளது.

தாய், மகள் கொலை : மருமகனைத் தேடும் பொலிஸ்!!

பொத்தல, கிபி-எல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து, இரு பெண்களின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலையான நிலையில் மீட்கப்பட்ட இந்தச் சடலங்கள் தாய் (45) மற்றும் அவரது மகளுடையது (25) எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் வசித்து வந்த வீட்டில் நேற்றிரவு (6) சுமார் பத்தரை மணியளவில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மேலும் குடும்பப் பிரச்சினையொன்றின் பேரில், மகளின் கணவரே இந்தக் கொலைகளை அரங்கேற்றியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

தலைமறைவாகியிருக்கும் மருமகனைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

5 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 14 வயதுச் சிறுமி!!

05 வருடங்களும் 07 மாதங்களுடைய சிறுவனுக்கு 14 வயதுடைய சிறுமி ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆரச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரச்சிகட்டுவ – வேரன்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சிறுவன் பல தடவைகள் இவ்வாறு பாலியல் துன்புறுத்தளுக்கு ஆளாகியுள்ளதாக சிறவனின் தாய் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியரை மீண்டும் பணியில் இணைக்க ஜனாதிபதி உத்தரவு!!

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை வௌிவிவகார அமைச்சுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.

கடந்த சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனையடுத்து தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் ராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை, உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யுமாறு இலங்கை வௌிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும் அந்த பணி நிறுத்தத்தை இரத்து செய்து அவரை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.

வவுனியாவில் கைக்குண்டுகள் மீட்பு!!

 
வவுனியாவில் இன்று காலை 10.30 மணியளவில் 15ற்கும் மேற்பட்ட கைக்குண்டுகளை பூவரசங்குளம் பொலிசார் மீட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

வவுனியா பம்பைமடு பகுதியில் முன்னர் இராணுவத்தினரின் சோதனை நிலையமாக பயன்படுத்தப்பட்ட தனியார் காணி ஒன்றிலிருந்தே குறித்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

காணியின் உரிமையாளரால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இன்று காலை அங்கு சென்ற பூவரசங்குளம் பொலிசார் அதனை மீட்டெத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு விழாவில் மாபெரும் கிரிக்கெட் தொடர்!!

யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் 23ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு பெருமையுடன் நடாத்தும் அணிக்கு 6 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 10,11ம் திகதிகளில் முதற்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று 13.02.2018 அன்று அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

போட்டிகள் அனைத்தும் யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன. போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் அணிகள் கீழுள்ள இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும்.

தொடர்புகளுக்கு
0770456905
0779190151

வங்கதேச தொடரில் இருந்து விலகிய மத்யூஸ்!!

காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் இருந்து இலங்கை வீரர் அஞ்சலோ மத்யூஸ் விலகியுள்ளார்.

இலங்கை, வங்கதேசம் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரின் போது, இலங்கை வீரர் அஞ்சலோ மத்யூஸ் காயமடைந்தார். இதனால் சிட்டகொங்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை.

இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிராக வரும் 8ஆம் திகதி, நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் மத்யூஸ் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், வங்கதேச தொடர் முடிந்தவுடன், மார்ச் 8ஆம் திகதி தொடங்க உள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் தொடரில், இலங்கை, இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.

மத்யூஸின் காயம் குறித்து இலங்கையின் தலைமை தேர்வாளர் தெரிவிக்கையில், ‘வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு ஆட்டங்களுக்காக மத்யூஸ் விவகாரத்தில், நாங்கள் சிரத்தை எடுக்க விரும்பவில்லை. எங்களுடைய திட்டம் மத்யூஸ், இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இலங்கை அணியின் தலைவராக திசர பெரேரா செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைப் பூங்காவில் மானை விழுங்கிய மலைப்பாம்பு : நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!

இலங்கை தேசிய பூங்காவில் பசியால் தவித்த மலைப்பாம்பு ஒன்று முழு மானை விழுங்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இலங்கை ஹம்பாந்தோட்டை நகரில் உள்ள தேசிய பூங்காவில் தான் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொதுவாக பசியால் தவிக்கும் மலைப்பாம்புகள், அளவுக்கு அதிகமாக உட்கொண்டு பின்னர் அதை வாந்தியாக எடுத்துவிடும் இயல்பை கொண்டது.

ஆனால் கடந்த ஜனவரி 29ம் திகதியன்று 14 அடி நீள மலைப்பாம்பு ஒன்று முழு மானை விழுங்கியுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மலைப்பாம்பு, மானை விழுங்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது.

கணவருடன் விவாகரத்து : மது விருந்துடன் அமர்க்களமாக கொண்டாடிய மனைவி!!

 
கனடாவை சேர்ந்த பெண் தனக்கு விவாகரத்து ஆனதை தனது நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

Saskatchewan மாகாணத்தை சேர்ந்தவர் நிகோல் நியிஸ்னர் (36), இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது கணவரை விவாகரத்து செய்துள்ளார்.

இதையடுத்து புதிதாக தனது வாழ்க்கையை தொடங்கும் நோக்கில் நிகோல் தனது விவாகரத்து நிகழ்வை பெரியளவில் கொண்டாடியுள்ளார். அதன்படி தனது தோழிகளுக்கு போன் செய்து அவர்கள் திருமணத்தன்று அணிந்த ஆடைகளை அணிந்து வர நிகோல் கோரினார்.

இதையடுத்து அவரின் தோழிகள் அனைவரும் வெள்ளை நிற ஆடை அணிந்து நிகோல் வீட்டுக்கு வந்த நிலையில் நிகோலும் அதே ஆடையை அணிந்திருந்தார். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி நடனமாடியும், மது அருந்தியும் உற்சாகமாக இருந்தார்கள்.

இதோடு புகைப்படம் எடுத்து கொண்டும் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களை பற்றியும் பேசி கொண்டார்கள். இது குறித்து நிகோல் கூறுகையில், விவாகரத்து என்பது வலி நிறைந்த விடயம் தான். ஆனால் இப்போது என் வாழ்வில் புது அத்தியாயம் தொடங்குகிறது, இதை கொண்டாட வேண்டும் என தோன்றியதால் கொண்டாடினேன்.

இணையத்தில் இது போல பலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோவை பார்த்தேன், அதை பார்த்தே இந்த ஐடியா எனக்கு தோன்றியது. விவாகரத்து எனக்கு சோர்வை கொடுத்தாலும், நண்பர்களுடன் நடத்திய பார்ட்டி உற்சாகத்தை கொடுத்துள்ளது. இனி என் வாழ்க்கையை சிறப்பாக மீண்டும் தொடங்குவேன், என் குழந்தைகள் மீது அதிக அக்கறை செலுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

அழகிப் போட்டியில் பெண்ணாக நடித்த ஆண் : இறுதிப் போட்டிக்கு தெரிவான சுவாரஸ்யம்!!

 
கஜகஸ்தான் அழகிப் போட்டியில் பெண்ணாக நடித்த ஆண் இறுதிப் போட்டிக்கு தெரிவான சுவாரஸ்ய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கஜகஸ்தானில் 4000 போட்டியாளர்கள் பங்குபெற்ற மிஸ்.Virtual அழகிப் போட்டியில் அலினா அலிவா என்ற பெயரில் ஆண் நபர் ஒருவர் பங்குபெற்றது தெரியவந்துள்ளது.

4000 போட்டியாளர்களை தோற்கடித்து இறுதிச் சுற்று வரை முன்னேறிய அந்த நபரின் பெயர் Ilay Dyagilev(வயது 22) என்பதாகும்.

இவர் தன் நண்பர்களுடன் விடுத்த சவாலின் காரணமாக பெண் வேடமிட்டு போட்டியில் கலந்து கொண்டதாகவும் இறுதிச் சுற்றுவரை முன்னேறுவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் இறுதிச் சுற்றுக்கான தெரிவின்போது தானாக முன்வந்து நடுவர்களிடம் நடந்தவற்றை கூறிய அந்த நபர் அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார்.

இது குறித்து தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த நடுவர்கள், உடனடியாக குறித்த நபரை நீக்கிவிட்டு அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அக்கெரிம் டெமிர்கனோவா(வயது 18) என்னும் பெண்ணுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளனர்.

முதல் மனைவிக்காக இரண்டாவது மனைவியை கொலை செய்த கணவன் : சிக்கியது எப்படி தெரியுமா?

புதுடெல்லியில் முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ இடையூறாக இருந்த இரண்டாவது மனைவியை கொலை செய்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

சுரேஷ் சிங் (26) என்ற இளைஞர் கடந்த 2015ல் லதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டில் சாவித்ரி மெரா (30) என்ற பெண்ணுடன் சுரேஷுக்கு பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இது பின்னர் காதலாக மாறிய நிலையில் சாவித்ரியை, சுரேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இரண்டு மனைவிகளையும் வெவ்வேறு ஊர்களில் தங்க வைத்த சுரேஷ் அவர்களுடன் குடும்பம் நடாத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு இரண்டாவது மனைவி சாவித்ரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து சென்ற சுரேஷ், லதாவுடனே நிரந்தரமாக வாழத் தொடங்கினார். ஆனால், சுரேஷை அடிக்கடி தொடர்பு கொண்ட சாவித்ரி, லதாவை பிரிந்து தன்னுடன் வாழ வருமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதையடுத்து சாவித்ரியை கொலை செய்ய முடிவெடுத்த சுரேஷ் கடந்த மாதம் 11ம் திகதி டெல்லி வீட்டில் வைத்து அவரை கொடூரமாக கொன்று சடலத்தை படுக்கை மெத்தை பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் மூலம் இதை கண்டுப்பிடித்த பொலிசார் சுரேஷ் வீட்டில் இருந்த சாவித்ரியின் சடலத்தை 29ம் திகதி கைப்பற்றினார்கள்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த சுரேஷை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.

பாம்புகள் மற்றும் நாய்க் குட்டிகளை சமைத்துச் சாப்பிட்ட பாபா : உடலுக்கு வலிமை தருமாம்!!

மத்தியபிரதேசத்தில் நபர் ஒருவர் நாய்க்குட்டிகள் மற்றும் பாம்புகளை சமைத்து சாப்பிட்டதால் பொதுமக்களினால் தாக்கப்பட்டு பொலிசில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் ஜெக்தீஷ்புராவைச் சேர்ந்தவர் Nuarangi Lal, ’பாபா’ என்று அழைக்கப்படும் இவர், நாடோடி வாழ்க்கை நடத்தி வருபவர்.

இந்நிலையில் Nuarangi Lal, நான்கு நாய்க்குட்டிகளை சமைத்து சாப்பிட்டதாகக் கூறி, பொதுமக்கள் இவரை அடித்து உதைத்துள்ளனர். மேலும், அவர் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்பையும் எரித்துவிட்டு பொலிசிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் நாய்க்குட்டிகள் மட்டுமின்றி, பாம்புகளையும் தான் சமைத்து சாப்பிட்டதாகவும், அவை தனது உடலுக்கு வலிமையைத் தருவதாகவும் Nuarangi Lal தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உளவியலாளர் ஒருவர் கூறுகையில், தனியாக வாழும் நபர்கள், தாங்கள் ஒரு கற்பனை உலகத்தில் வாழ்வதாக நினைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு, நிஜ உலகுக்கும் கற்பனை உலகுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும்’ என தெரிவித்துள்ளார்.

பெண்களைக் கொன்று சடலத்துடன்…. : கொலையாளி திடுக்கிடும் வாக்குமூலம்!!

 
இந்தியாவில் 6 பேரை கொலை செய்த இளைஞர், பெண்களின் சடலங்களுடன் உறவு கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஜிதேந்தர துருவா (30), இவர் 2015லிருந்து 2016 வரையிலான காலக்கட்டத்தில் ஆறு பேரை கொலை செய்துள்ளார்.

தலைமறைவாக இருந்த துருவாவை பொலிசார் தற்போது கைது செய்துள்ள நிலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2015 ஏப்ரல் 27ஆம் திகதி பிங்கல ராஜ் என்ற இளம் அதிகாரி அவர் வீட்டில் இறந்து கிடந்தார். இவ்வழக்கு சம்மந்தமாக அவரின் காதலர் ராகேஷை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்தார்கள். அவர் சில மாதங்களுக்கு முன்னர் பிணையில் வெளியில் வந்துள்ளார்.

ஆனால் பிங்கலராஜை நான் தான் கொலை செய்தேன் என துருவா தற்போது கூறியுள்ளார். கொலை செய்த பின்னர் பிங்கலவின் சடலத்துடன் உறவு வைத்து கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த விடயம் வெளியில் தெரிந்த நிலையில் தனது மகன் ராகேஷ் மீது அரசியல் காரணங்களுக்காக வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது எனவும் அவரை வழக்கிலிருந்து விடுவிக்க கோரியும் ராகேஷ் தாய் பொலிசாரிடம் மனு அளித்துள்ளார்.

துருவா கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் ருக்மணி (50) மற்றும் அவரின் மகள் பார்வதி (20) ஆகியோரையும் கொன்று பார்வதி சடலத்துடன் உறவு வைத்து கொண்டுள்ளார். அதே ஆண்டு யூன் மாதம் மகேந்திர சிங் (38) அவர் மனைவி உஷாம் மகன் மகேஷ் (11) ஆகியோரையும் துருவா கொலை செய்துள்ளார்.

இச் சம்பவத்தில் மகேந்திராவின் இன்னொரு மகன் திரிலோக் (13) மற்றும் உயிர்பிழைத்த நிலையில் அவரின் ஒரு கண் பார்வை பறிபோகியுள்ளது. இவை அனைத்தையும் துருவா பொலிசிடம் வாக்குமூலமாக அளித்துள்ள நிலையில் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு காதல் தம்பதி!!

 
தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் வந்திருந்த அமெரிக்க தம்பதியினர், தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

அமெரிக்காவை சேர்ந்த 25 பேர் கொண்ட குழுவினர் தங்கள் குடும்பத்தினருடன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணமாக வந்துள்ளனர். இந்தியாவின் அனைத்து முக்கிய மாநிலங்களையும் சுற்றிப் பார்த்த அவர்கள் தமிழகத்திற்கும் சென்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலின் சிற்பங்களை ரசித்து வந்துள்ளனர்.

அப்போது அந்த குழுவில் இடம் பெற்றிருந்த சோ- சிண்டி தம்பதியினர், தமிழர் பண்பாட்டின் மீதான அதீத ஈடுபாட்டினால் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளனர்.

இது குறித்து அவர்களின் குடும்பத்தாரிடம் சோ தெரிவித்த நிலையில் தஞ்சை தளவாய் பாளையத்தில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கு தம்பதியர் இருவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி- பட்டுப்புடவை அணிந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளனர்.

அதன்பின் மஞ்சள் தாலி கட்டி இருவரும் மாலை மாற்றிக்கொண்டு இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

வெளிநாட்டு தம்பதிகள் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட அந்த நிகழ்வை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த மக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

தந்தையின் ஈமச்சடங்கின் போது உயிரிழந்த மகன்!!

தந்தையின் ஈமச்சடங்கின் போது சோகத்தில் மகனும் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதுரை மேலூர் அட்டப்பட்டியை சேர்ந்த விவசாயி நம்பியார், இவர் தனக்கு சொந்தமான அரை ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளனர். தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதை கண்டு சோகத்தில் வயலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நம்பியாரின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்த மகன் நல்லசாமிக்கு கடன் தொல்லையும் அதிகரித்தது இந்நிலையில் தந்தையின் ஈமச்சடங்குகளை செய்வதற்காக திருப்புவனம் வைகை ஆற்றங்கரைக்கு சென்றுள்ளார். அங்கே மாரடைப்பால் நல்லசாமியும் இறந்துள்ளார். அடுத்தடுத்த உயிரிழப்புகளால் நம்பியாரின் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

நல்லசாமிக்கு ஒரு மகனும், மகளும் உள்ள நிலையில் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்நிலை நீடிக்காமல் இருக்க கருகிய பயிர்களுக்கு உடனடியாக நிவாரணத்தொகை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.