நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து 17 வயது சிறுமி மீட்பு : வாக்குமூலத்தில் வெளியான உண்மை!!

மருத்துவரும், 17 வயது சிறுமியும் நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் காந்தி (61). இவர் மனைவி ஈஸ்வரி. தம்பதிக்கு மனோஜ் (32) என்ற மகன் உள்ளார். மனோஜ் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். மனோஜின் அக்கா வனிதா. இவர், தனது கணவர் குமார் மற்றும் 17 வயது மகளுடன் மதுரையில் வசித்து வருகிறார்.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் திடீரென மனோஜும், 17 வயது சிறுமியும் மாயமாகி விட்டனர். சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில் இருவரும் திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து காந்தியும், ஈஸ்வரியும் ஆசிரமத்துக்கு சென்று தங்களது மகன் மற்றும் பேத்தியை அனுப்புமாறு போராட்டம் நடத்தினார்கள்.

ஆனால், மனோஜும், சிறுமியும் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ளதாக நிர்வாகிகள் கூறினார்கள். இதையடுத்து கதறியபடி பொலிசிடம் சென்ற சிறுமியின் குடும்பத்தார் கடத்தப்பட்ட சிறுமியை மீட்க கோர பொலிசார் ஆசிரமத்துக்கு சென்று இருவரையும் மீட்டார்கள்.

மனோஜ் மற்றும் சிறுமி இருவருமே காவி உடையில் இருந்த நிலையில் தங்களை யாரும் கடத்தவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளார்கள் இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள்.

ஐரோப்பிய ஒன்றிய பண தூய்மையாக்கல் கறுப்பு பட்டியலில் இலங்கை இணைவு!!

ஐரோப்பிய ஒன்றிய பண தூய்மையாக்கல் கறுப்பு பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர், இலங்கை, துனிசியா, ட்ரெனிடெட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகள் கறுப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்ற இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் தயாரிக்கும் போது, பணம் தூய்மையாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கியமை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது, குறித்த பட்டியலுக்கு ஆதரவாக 357 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் அதற்கு எதிராக 283 வாக்குகள் கிடைத்துள்ளது.

மேலும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நடிகர்கள் எப்படிப் பேசினாலும் பிரச்சினை வராது : ஜோதிகா!!

நாச்சியார் பட வசனம் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்த நிலையில், அது பற்றி ஜோதிகா கருத்து வௌியிட்டுள்ளார்.
அந்த வார்த்தையை ஒரு நடிகை பேசியதால் தான் பெரும் சர்ச்சையானது எனவும் நடிகர்கள் யாராவது பேசியிருந்தால் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள் என்றும் ஜோதிகா கூறியுள்ளார்.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் ‘நாச்சியார்’. இதில் ஜோதிகா பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் ஜோதிகாவின் ஆவேசமான வசனக்காட்சி இடம்பெற்றது.

இந்த காட்சியில் ஜோதிகா பேசிய ஒரு வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘பெண்களை அவமதிக்கும் வார்த்தையை பேசிவிட்டார்’ என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

ஜோதிகா பேசிய அந்த ஒரே வார்த்தை ‘நாச்சியார்’ படத்திற்கு விளம்பரமாகவும் அமைந்தது. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், ”ஒரு நடிகை அந்த வார்த்தையைப் பேசியதால் தான் பெரும் சர்ச்சையானது. அதையே நடிகர் யாராவது பேசி இருந்தால் யாரும் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள். டீசரைப் பார்த்துவிட்டு எனது பாத்திரம் குறித்து ஒரு முடிவுக்கு வராதீர்கள். படத்தைப் பார்த்துவிட்டு பேசுங்கள். படத்தில் எனது கதாப்பாத்திரம், கதையின் சூழல் காரணமாக அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. படம் பார்த்தால் அதில் நான் பேசிய வார்த்தை சரியானது தான் என்பது ரசிகர்களுக்குப் புரியும்” என தெரிவித்துள்ளார்.

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைத் தவிர வாக்குப் பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகிக்கும் மற்றும் அவற்றை பொறுப்பேற்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும் இரண்டு கல்வியற் கல்லூரிகளும் இன்றும், நாளையும் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்படவுள்ள பாடசாலைகள் மற்றும் கல்வியற் கல்லூரிகள் இம்மாதம் 12 ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக நாளைய தினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகளின் பின்னர் பாடசாலைகளை தேர்தல் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்களிடம் கையளிக்குமாறு கல்வி செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தனியார் கற்கை நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் வாக்களிப்பதற்கு ஏற்ற வகையில் விரிவுரைகள் மற்றும் பரீட்சைகளை திட்டமிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களின் தலைவர்களிடமும் ஆணைக்குழுவால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் வாக்குறிமையை உரிய வகையில் பயன்படுத்தன் நிமித்தம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூன்றரை கிலோ தங்கத்துடன் இருவர் கைது!!

 
சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு தங்கம் கடந்திய இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மாதகல் கடற்பரப்பு ஊடாக இந்தியாவுக்கு, தங்கம் கடத்திய நிலையில், குறித்த இருவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து, 3 கிலோ 700 கிராம் நிறையுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகை சோதனையிட்டபோது, குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தையும், கைது செய்யப்பட்ட இருவரையும் வடமாகாண சுங்க திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு லசித் மலிங்க!!

இவ்வருடம் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான பந்துவீச்சு ஆலோசகராக இலங்கை அணியின் வீரர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்தவாரம் இடம்பெற்ற ஏலத்தில் மலிங்கவின் பெயர் இடம்பெற்றிருந்தபோதும் எந்தவொரு அணியாலும் மலிங்க தெரிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தனாவின் காதல் திருமணத்தால் மகிழ்ச்சியில் சீதா!!

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருதையும் வென்ற கீர்த்தனாவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள கீர்த்தனா இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும் பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய்க்கும் திருமணம் நடைபெறவுள்ளது. மார்ச் 8ம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் பார்த்திபன் திரையுலக நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுத்துவருகிறார்.

இவர்களது திருமணம் காதல் திருமணமாம், இதுகுறித்து சீதா கூறுகையில், அக்ஷய்யை எங்களுக்கு அவரின் ஏழு வயதில் இருந்தே தெரியும். இருவரும் நல்ல நண்பர்களாக பழகினார்கள், ஒன்றாகத்தான் கல்லூரியிலும் படித்தார்கள், நாங்களே தேடினாலும் இப்படி ஒரு தங்கமான மாப்பிள்ளையை பார்த்திருக்க முடியாது.

என் மகள் புத்திசாலி பொண்ணு, அக்ஷயை காதலிப்பதாக சொன்ன போது மகிழ்ச்சி அடைந்தோம், ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். கீர்த்தனாவின் காதலை நான் ஆதரிக்கிறேன், மதிக்கிறேன், எட்டு வருட காதல் கல்யாணத்தில் முடிகிறது, அவரது அம்மாவும் நல்ல மனம் படைத்தவர், அப்பாவுடன் சேர்ந்து எடிட்டிங் வேலைகளை செய்து வருகிறார். உலகப் புகழ் பெற்ற எல்.வி.பிரசாத் அவர்களின் குடும்பத்தில் சம்மந்தம் வைத்துக் கொள்வதை பெருமையாக கருதுகிறோம் என தெரிவித்துள்ளார்.

மனைவியின் கையில் உயிரிழந்த கணவரின் இறுதி நிமிடங்கள்!!

 
பிரித்தானியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கணவன், மனைவி கையில் சாய்ந்தபடி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hertfordshire கவுண்டியை சேர்ந்தவர் வெயின் பார்டன் (36), இவரின் மனைவி லிசா (37), தம்பதிக்கு பிரயோனி மே (5) என்ற மகள் உள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு வெயினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது உணவுக்குழாய் மற்று கல்லீரலில் வெயினுக்கு புற்றுநோய் உண்டாகியிருப்பது தெரியவந்தது. இந்நோயை குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில் தொடர் சிகிச்சையில் வெயின் இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 27ம் திகதி நோய் பாதிப்பு வெயினுக்கு அதிகமாக, தனது மனைவி லிசாவின் கையில் சாய்ந்தப்படி உயிரிழந்துள்ளார்.

வெயினின் இறுதிச்சடங்கு பிப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தன்று நடைபெறவுள்ளது. இது குறித்து லிசா கூறுகையில், சில மாதங்களாகவே வெயினால் சரியாக பேச முடியவில்லை, என் கையில் சாய்ந்தபடி இறப்பதற்கு முன்னால் என்னை பார்த்து ஐ லவ் யூ என வெயின் கூறினார்.

இது என் வாழ்க்கையின் மிக கடினமான நிமிடமாக இருந்தது, வெயின் இறக்கும் போது அருகில் அவர் தாய் மற்றும் சகோதரரும் உடனிருந்தனர். அவரை பிரிந்து நானும், பிரயோனியும் எப்படி வாழ போகிறோம் என தெரியவில்லை. வருங்காலம் குறித்து யோசிக்கவில்லை என சோகத்துடன் கூறியுள்ளார்.

உதவியின்றி தவித்த பழம்பெரும் நடிகைக்கு உதவிசெய்த விஷால்!!

மருத்துவ உதவியின்றி தவித்துவந்த பழம்பெரும் குணச்சித்திர நடிகை பிந்துகோஷுக்கு நடிகர் விஷால் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் குணச்சித்திர நடிகையான பிந்துகோஷ் சமீப காலமாக உடல்நலம் சரியில்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். அது குறித்து அறிய வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான நடிகர் விஷால், நடிகை பிந்துவிற்கு தன்னால் இயன்ற உதவியை வழங்குவதாக அறிவித்தார்.

அதனடிப்படையில் விஷால் சார்பில் அவரின் நற்பணி இயக்க செயலாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் நடிகை பிந்துகோஷை சந்தித்து 5000 ரூபாய் பணத்தை வழங்கியுள்ளார்.

மேலும் மாதந்தோறும் 2500 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார், விஷால். அது தவிர நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத பிந்துகோஷை உறுப்பினராக்கியுள்ள விஷால், சங்கம் மூலம் சில உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.

காதல் விவகாரத்தால் மகனை கொன்றுவிட்டனர் : சிசிடிவி ஆதாரங்களையும் அழித்துவிட்டதாக தாய் கண்ணீர்!!

தமிழகத்தில் மது அருந்தியதால் இறந்ததாக இளைஞர் கூறப்பட்ட நிலையில், காதல் விவகாரத்தால் என் மகனை அடித்து கொன்றுவிட்டனர் என்று தாய் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல்குமார்(24). சென்னை ஆர்.கே நகரில் ஊர்காவல் படையில் பணிபுரிந்த இவர் கடந்த 7ம் திகதி மர்மான முறையில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, மது அருந்தியதால் இறந்ததாகக் கூறி வழக்கை முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நிர்மல்குமாரின் தாய் காதல் விவகாரத்தால் என் மகனை சிலர் அடித்து கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், என் மகன் காதலித்த பெண்ணை இன்னொரு இளைஞரும் காதலித்ததாகவும், அதில் இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்தாகவும், சம்பவம் நடந்த அன்று அந்த நபர் நிர்மல்குமாரை அடித்து உதைத்த காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிகளை பொலிசாருடன் சேர்ந்து அவர்கள் அழித்துவிட்டதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார்.

கணவருக்காக மூன்று பேரை கொன்ற தாதா எழிலரசி : நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு!!

கொலை முயற்சி வழக்கில் புதுச்சேரிப் பெண் தாதா எழிலரசியை விடுதலை செய்து காரைக்கால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த சாராய வியாபாரி ராமுவும், அவரின் இரண்டாவது மனைவி எழிலரசியும் கடந்த 2013ம் ஆண்டு காரில் சென்றுகொண்டிருந்த போது கூலிப்படையினர் ராமுவை வெட்டிக் கொன்றனர்.

கணவரை கொன்றவர்களை பழிவாங்க எழிலரசி துடித்தார். இந்நிலையில், ஐயப்பன், ராமுவின் முதல் மனைவி வினோதா, புதுவை முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமார் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

மூன்று கொலை வழக்கிலும் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட எழிலரசி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளியில் வந்தார்.

கடந்த வாரம் புதுச்சேரியில் உள்ள ஹொட்டலில் மேலும் சிலரைக் கொலைச் செய்ய திட்டம் தீட்டிய போது எழிலரசியை பொலிசார் மீண்டும் கைது செய்தனர்.

இந்நிலையில் எழிலரசி மீது 2011ம் ஆண்டு ராமுவின் முதல் மனைவி வினோதாவைக் கொலைச் செய்ய முயற்சி செய்ததாக ஒரு வழக்கு விசாரணையில் இருந்தது. அந்த வழக்கில் எழிலரசியை விடுதலைச் செய்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் வினோதாவைக் கொலைச் செய்த வழக்கில் எழிலரசி முக்கியக் குற்றவாளியாக உள்ளார்.

2 வயதுக் குழந்தையை விஷ ஊசி செலுத்தி கொலைசெய்த தாய்!!

தமிழகத்தில் குழந்தையை கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் டரியில் எழுதி வைத்திருந்த வார்த்தைகள் கண்ணீர் வர வைத்துள்ளது.
சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கீதா(25). இவருக்கு ஸ்ரீதர்(35) என்ற கணவரும் ரோகித் என்ற 2 வயது மகனும் இருந்தனர். கீதா திருவல்லிக்கேனியில் உள்ள கோல் செண்டரில் வேலை செய்து வந்த நிலையில், அவரது கணவர் ஸ்ரீதர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குடும்பப் பிரச்சனை காரணமாக, திருவண்ணாமலையில் உள்ள தனது தாயாரின் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கணவர் இறந்த துக்கத்தில் இருந்த கீதா சேத்துப்பட்டில் உள்ள தனது தாய், தந்தையுடன் வசித்து வந்தார். மிகவும் மன உளைச்சுடனே காணப்பட்ட அவர், தொடர்ந்து வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் திடீரென்று கடந்த 4ம் திகதி காலை கீதா  தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதற்கு முன்பு தனது 2 வயது மகன் ரோகித்தை விஷ ஊசிமூலம் கொன்றுவிட்டு இடது கை மணிக்கட்டில் கத்தியால் கீறிக்கொண்டு தானும் துக்கிட்டுக்கொண்டார்.
இதைக் கண்ட உறவினர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் ரோகித் போகும் வழியிலே இறந்துவிட்டான். தொடர்ந்து இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த கீதாவிற்கு நினைவு திரும்பாமல் இருந்த நிலையில் தற்போது சிகிச்சை பலின்றி இறந்துவிட்டார்.
இதையடுத்து தற்கொலை செய்வதற்கு முன் கீதா தன்னுடைய டரியில், தனது மகனை யாரும் கவனிக்கவில்லை எனவும் அதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை எனவும் தான் சாக போவதாகவும் தன்னுடைய சாவிற்கு யாரும் காரணம் இல்லை என கண்ணீருடன் எழுதி வைத்துள்ளார்.
கணவரை இழந்ததால் தனிமையில் விடப்பட்ட கீதா குழந்தை மேல் உள்ள பாசத்தில் தற்கொலை முடிவை தேடியது அவர்கள் உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று திருமண நிச்சயம் நடக்கவிருந்த தங்கையை வெட்டி கொன்ற அண்ணன்!!

தமிழ்நாட்டில் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த தங்கையை நேற்றிரவு அண்ணன் வெட்டி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன் (57), இவரது மகள் ஹேமலதா (27). இவருக்கும் ஒரு இளைஞருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து இன்று நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் நேற்றிரவு ஹேமலதா வீட்டுக்கு அரிவாளுடன் வந்த சிவசுப்பிரமணியனின் அண்ணன் மகன் சக்திகுமார் (35) உனது மகளுக்கு நிச்சயம் எப்படி நடக்கிறது என பார்க்கிறேன் என கூறியபடி சிவசுப்பிரமணியனின் கையில் அரிவாளால் வெட்டினார்.

இதை ஹேமலதா தடுக்க முயன்ற நிலையில் தங்கை முறையான அவரையும் சக்திகுமார் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் வசித்து வரும் சிவசுப்பிரமணியனின் இன்னொரு சகோதரர் வைரவேல் (50) அங்கு வந்தார். அவரையும் சக்திகுமார் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அரிவாள் வெட்டுப்பட்ட மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹேமலதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்த நிலையில் மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்திய நிலையில், சிவசுப்பிரமணியனுக்கும், திருஞானசம்பந்தத்தின் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிவசுப்பிரமணியன் வீட்டில் எந்த நிகழ்ச்சியையும் நடத்த முடியாது என சக்திகுமார் சவால் விட்டு மிரட்டி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தலைமறைவாக உள்ள சக்திகுமாரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

பூமியை சுற்றி வரும் உலகின் முதல் கார் : ரொக்கெட்டில் ஏலியனுக்கு அனுப்பப்பட்ட தகவல்!!

 
“ஸ்பேஸ் எக்ஸ்” என்ற நிறுவனத்தின் தலைவரான எலோன் மஸ்க், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

அதாவது, “உலகின் பெரிய ரொக்கெட்டை ஏவப்போகிறேன், நான் ரொக்கெட் மட்டும் அனுப்பவில்லை, அதில் என்னுடைய டெஸ்லா காரையும் அனுப்பப் போகிறேன்” என்று கூறினார். அதேபோல் செய்தும் காட்டியுள்ளார். இதையடுத்து பூமிக்கு வெளியே இப்போது முதல் கார் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

உலகின் பெரிய ரொக்கெட்டான ”ஃபல்கான் ஹெவி” ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மூலம் ஏவப்பட்டு இருக்கிறது. இதில்தான் அந்த “செர்ரி ரெட் டெஸ்லா” கார் இருக்கிறது.

காரை விண்ணுக்கு அனுப்பிய எலோன் மஸ்க் “இந்த கார் வானத்தில் மிதந்து மிதந்து அப்படியே எங்காவது செல்லும். அதை எதிர்காலத்தில் வரும் ஏலியன்கள் பார்க்க வாய்ப்பு இருக்கிறது” என்று டுவிட்டரில் கருத்துக்களை பதிவேற்றியுள்ளார். இதற்கு காரணம் அவர் அனுப்பிய காரில் ஏலியனுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

காரின் அனைத்து சர்க்யூட் போர்டுகளிலும் ”இது பூமியில் மனிதனால் தயாரிக்கப்பட்டது” என்று எழுதி இருக்கிறது. இதில் விண்வெளி உடை அணிந்த பொம்மை மனித உருவம் ஒன்றும் கார் ஓட்டும் இடத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு ஸ்டார் மேன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கார் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செல்லும் எனப்படுகிறது.

மேலும் இந்த காருக்குள் அனைத்துப் பக்கமும் பெரிய கமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கமரா மூலம் பூமிக்கு புகைப்படம் அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். அத்துடன் வீடியோவும் அனுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபா!!

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று முதல் முறையாக 156 ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய பண பரிமாற்ற விகித மதிப்புகளுக்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய 156.13 ரூபாய் வரை டொலர் பெறுமதி அதிகரித்து காணப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி அமெரரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 155.94 ரூபாயாக காணப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள முதலீட்டாளர்களுக்கான டொலர் தேவை அதிகரித்தமையே இந்த வீழ்ச்சிக்கான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சாய் பல்லவி மீது தெலுங்கு நடிகர் குற்றச்சாட்டு!!

விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கரு படத்தில் நடிகை சாய் பல்லவியுடன் இணைந்து நடித்த நாக சவுரியா, நாயகி மீது சரமாரியாக புகார் தெரிவித்துள்ளார். திரையுலகில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் ‘கரு’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் சாய் பல்லவி நடித்த ‘பிடா’ படமும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சாய் பல்லவி மீது கரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள இளம் தெலுங்கு நடிகர் நாக சவுரியா பரபரப்பு முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “சாய் பல்லவியை பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை. படப்பிடிப்பில் அவரது நடவடிக்கைகள் சரியாக இல்லை. முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். சிறுசிறு விடயங்களுக்கு கோபப்பட்டார். தெலுங்கில் சாய் பல்லவி நடித்த பிடா படம் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு சாய் பல்லவி காரணம் இல்லை” என்றார்.

இந்த புகார் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நானியுடன் சாய் பல்லவி நடித்த மிடில் கிளாஸ் அப்பாயி படப்பிடிப்பிலும் இதுபோல் பிரச்சினை ஏற்பட்டது.
படப்பிடிப்பில் நானியும் சாய் பல்லவியும் தகராறில் ஈடுபட்டு இருவருமே படப்பிடிப்பில் இருந்து வெளியேறினார்கள். தற்போது நாகசவுரியாவும் சாய் பல்லவி மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார்.