பிறக்கும் போதே வளர்ந்த பற்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை!!

 
இங்கிலாந்தில் Cruise Horsburgh என்று பெயரிடப்பட்டுள்ள குழந்தை பிறக்கும் போதே பற்களுடன் பிறந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Cruise எனும் இந்த குழந்தை Newcastleல் உள்ள Royal Victoria மருத்துவமனையில் January 27ம் திகதி பிறந்தது. குழந்தையின் தாய் Shannon MacAllister கூறும் போது, இது உண்மையில் விசித்திரமான நிகழ்வு நான் மட்டும் அல்ல எனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரும் என் குழந்தையின் பல்லை பார்த்து வியந்து போனார்.

தினமும் என் குழந்தையின் பல்லை பார்க்க நிறைய பேர் வருகிறார்கள், அவர்கள் அனைவரும் பார்த்த பின்னர் ஆச்சரியமான மனநிலைக்கு போவதை என்னால் காணமுடிகிறது என தெரிவித்துள்ளார்.

பொதுவாக அனைத்து குழந்தைகளுக்கும் 6 மாதம் கழிந்த பின்னரே பற்கள் வளர தொடங்கும், சில குழந்தைகளுக்கு 4 மாதத்திற்கு பின்னரும் பற்கள் வளரும். ஆனால் 2000- 3000 குழந்தைக்கு ஒரு குழந்தை தான் Cruise போல் பற்களோடு பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஏழைக் காதலனுடன் திருமணத்தை ஒத்தி வைத்த இளவரசி : வெளியான காரணம்!!

ஜப்பான் இளவரசி மேக்கோ தனது காதலருடனான திருமணத்தை அதிக அவசரப்படுவதாக கருதி ஒத்திவைத்துள்ளார். ஜப்பான் இளவரசி மேக்கோவின் திருமணமானது இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் என அறிவிப்பு வெளியான நிலையில் திடீரென்று 2020ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

திருமணம் குறித்து ஆழமான புரிதலை இருவரும் பெற்றுக் கொள்வதற்கும், போதுமான முன்னேற்பாடுகளை செய்துகொள்வதற்கும் இந்த கால தாமதம் உதவும் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் இளவரசி மேக்கோ தமது வாழ்க்கைத்துணையாக தெரிவு செய்த Kei Komuro என்பவரின் குடும்ப பின்னணியே குறித்த திருமண ஒத்திவைப்புக்கு முக்கிய காரணமாக இருக்க முடியும் என பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் பேரரசர் Akihito-ன் பேரப்பிள்ளைதான் இளவரசி மேக்கோ, இவர் தமது பல்கலைக்கழக தோழரை திருமணம் செய்து கொள்வதால் இளவரசி பட்டத்தை துறக்க நேரிடும். கடந்த ஆண்டு இருவரது நிச்சயதார்த்த அறிவிப்பானது ஜப்பான் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

திருமணம் ஒத்திவைத்தது தொடர்பில் இளவரசி மேக்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமணத்திற்காக மிகவும் அவசரப்படுகிறோம் என்ற எண்ணம் எழுந்ததாலையே இந்த முடிவு. போதுமான ஏற்பாடுகளை செய்து முடிக்க கால அவகாசம் இல்லை. திருமண வாழ்க்கையில் அவசரப்பட்டு நுழைவது பொருத்தமாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இளவரசியின் திருமணம் தொடர்பில் ஜப்பான் நாளேடுகளில் வெளியாக செய்திகள் எதுவும் உண்மை இல்லை எனவும், இளவரசியின் திருமணம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் உரிய நாள் பார்க்கப்பட்டு நடத்தப்படும் என அரண்மனை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மரணத்தின் தருவாயில் இளம்பெண் : நெஞ்சை உருக்கும் இறுதி நாட்களின் புகைப்படங்கள்!!

 
பிரித்தானியாவில் புற்றுநோய் பாதித்த இளம் பெண் ஒருவர் தன் இறுதி நாட்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.

பிரித்தானியாவின் மேற்கு மிட்லேண்ட்ஸ் பகுதியில் வசித்து வரும் எமி ரெட்ஹெட்(வயது 28) என்னும் இளம் பெண், சில மாதங்களுக்கு முன்னர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையின் போது, அவருக்கு குடல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

மிகவும் முதிர்ந்த நிலையில் அந்த நோய் அறியப்பட்டதால், எமியின் கல்லீரல் உள்ளிட்ட பகுதிகளும் புற்றுநோயால் பாதிப்படைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மனம் தளராத எமி, தனக்கு வந்த நிலை மற்ற யாருக்கும் வந்துவிடக்கூடது என்ற நோக்கத்துடன் சமூக வலைதளம் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து எமியின் சகோதரி எமிலி(வயது 22) கூறுகையில், என் அக்கா அவரின் உடல் தோற்றத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தொடர்ச்சியாக ஜிம் செல்வதை வழக்கமாக வைத்திருந்த அவருக்கு இப்படி ஒரு கொடிய நோய் வரும் என நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை.

இந்த நோயின் கொடூரத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் தற்போது அவளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளோம் என கூறியுள்ளார். மேலும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எமி, தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாயின் இறுதிச் சடங்கிற்கு பணமில்லாததால் பிச்சையெடுத்த மகன்கள்!!

 
தமிழ்நாட்டில் உயிரிழந்த தாயின் உடலை அடக்கம் செய்ய பணமில்லாமல் சிறுவர்கள் தவித்த நிலையில் மருத்துவமனை நோயாளிகள் அவர்களுக்கு உதவி செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த காளியப்பன்- விஜயா தம்பதிக்கு மோகன்ராஜ், வேல்முருகன், காளீஸ்வரி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் காளியப்பன் உயிரிழந்த நிலையில், மார்பக புற்றுநோயால் அவதியுற்ற விஜயா அரசு மருத்துவமனையில் சில காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.

உறவினர்கள் யாரும் விஜயாவை பார்க்க வராத நிலையில், அவரது 15 மற்றும் 13 வயதான மகன்கள் இருவரும் தாயை கவனித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று விஜயா உயிரிழந்த நிலையில் அவரது இறுதிச்சடங்கிற்கு பணம் இல்லாமல் சிறுவர்கள் இருவரும் கண்ணீருடன் தவியாய் தவித்தனர்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள், அவர்களது உறவினர்கள் தங்களால் இயன்ற பண உதவியை சிறுவர்களிடம் வழங்கினார்கள்.

அதன்பின்னர் தாயின் உடலை சிறுவர்கள் இருவரும் இறுதிச்சடங்கிற்காக எடுத்துச் சென்ற நிகழ்வு காண்போரின் கண்களை குளமாக்கியது.

வகுப்பறையிலேயே தனது நண்பனை வெட்டிக் கொன்ற பள்ளி மாணவன்!!

தான் காதலித்த பெண்ணை காதலிக்கத் தொடங்கிய நண்பனை பள்ளி மாணவன் வகுப்பறையிலேயே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகில் உள்ள கிராமம் பைரேல், இங்குள்ள ஆண்கள் பள்ளியில் 16 வயதான இரண்டு மாணவர்கள் படித்து வந்தார்கள். நண்பர்களான இருவரில் ஒரு மாணவன், வேறு பள்ளியில் உள்ள மாணவி ஒருவரைக் காதலித்துள்ளார். அம்மாணவிக்காக கடிதம் எழுதி தனது நண்பனிடம் கொடுத்து ஒப்படைக்க கூறியுள்ளார். ஆனால், கடிதம் கொண்டு சென்ற மாணவரும், அந்த மாணவியின் மீது காதல் வயப்பட்டுள்ளார். பின்னர், அவரும் கடிதம் ஒன்றை எழுதி அம்மாணவியிடம் கொடுத்துள்ளார்.

இந்த விடயத்தை அறிந்த முதலில் காதலித்த மாணவன், தனது நண்பனின் மீது கோபம் கொண்டு பழிவாங்க திட்டமிட்டார்.
சம்பவதினத்தன்று தேர்வு எழுதிவிட்டு மாணவர்கள் சென்று கொண்டிருந்த வேளை, தனது நண்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் மாணவன் பலியாக, மற்றவர்கள் அலறித்துடித்து ஓடியுள்ளனர். அச்சமயம், ‘யாராவது என்னைக் காட்டிக் கொடுத்தால் நாக்கை அறுத்து விடுவேன்’ என்று மிரட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.

தகவலறிந்து சென்ற தலைமை ஆசிரியர் உடனடியாக பொலிசுக்கு புகார் அளித்தார், இந்நிலையில் தப்பிச்சென்ற மாணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். சிறுவன் மைனர் என்பதால் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.

வவுனியாவில் உள்ளூராட்சித் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி : 2 ஆயிரம் அரச ஊழியர்கள் கடமையில்!!

வவுனியா மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் 2 ஆயிரம் அரச அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதும், விசேட அதிரடிப்படையினர், பொலிசார் உள்ளடங்களாக 1500 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபை தேர்தலுக்குரிய வாக்களிப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளன. வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேசபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை என்பவற்றக்கு 103 அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது.

தேர்தல் திணைக்களம், மாவட்ட செயலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய திணைக்களங்களும் இணைந்து தேர்தல் கடமைக்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம். நாளைய தினம் (09.02) வவுனியா மாவட்டத்தில் உள்ள 148 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்படும். வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கக் கூடிய முறையில் இந்த 148 வாக்களிப்பு நிலையங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அந்த அந்த வாக்களிப்பு நிலையங்களில்தான் வாக்குகள் எண்ணுகின்ற நடவடிக்கைகள் இடம்பெறும். இருந்தாலும் நடைமுறை சார்ந்த பிரச்சனைகள் சிலவற்றை காரணமாகக் கொண்டு வவுனியா மாவட்டத்தில் 56 வாக்கு எண்ணும் நிலையங்களை ஏற்பாடு செய்துள்ளோம். அந்த நிலையங்களில் வாக்கு எண்ணப்பட்டு வட்டார முடிவுகள் மாவட்ட செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டு பின்னர் முடிவுகள் உத்தியோகபூர்வமாக மாவட்ட செயலகம் ஊடாக வெளியிடப்படும்.

இந்த தேர்தல் நடவடிக்கைக்காக வவுனியா மாவட்டத்தில் 2000 அரச அலுவலர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கொழும்பில் இருந்து உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலர்கள் 155 பேரை அழைத்து இருக்கின்றோம். வவுனியா மாவட்டம் முழுவதும் 39 வலயங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வலயங்களுக்கும் ஒவ்வொரு உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்துள்ளோம்.

வாக்களிப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்வதற்கும், அதனை கண்காணிப்பதற்கும் என 7 மகா வலயங்களையும் உருவாக்கியிருக்கின்றோம். 10 ஆம் திகதி வாக்களிப்பு முடிந்தவுடனேயே வாக்குகள் எண்ணுகின்ற நடவடிக்கையும் இடம்பெறும்.

பொலிசார், விசேட அதிரடிப்படையினர் என 1500 பேர் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதாவது ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்த முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பரிஸில் அழிவை ஏற்படுத்தும் கடுமையான பனிப்பொழிவு!!

 
பரிஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தீவிர குளிர் மற்றும் பனிப்பொழிவுகள் ஒரே இரவில் மூழ்கடித்துள்ளது. இதன்காரணமாக போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டதுடன் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டுள்ளது.

அதிக பனிப்பொழிவு காரணமாக நேற்று பரிஸ் பிராந்தியமான Ile-de-France இல் 700 கிலோமீற்றர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நூற்றுக்கணக்கான வாகன சாரதிகள் பல மணிநேரம் காத்திருக்கவேண்டி இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பரிஸில் பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் புறநகர் பாடசாலை பேருந்து சேவைகளும் இன்று புதன்கிழமை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ரயில் போக்குவரத்துக்கள் இன்றைய தினம் பாதிக்கப்படகூடும் என்றும் குறிப்பாக Ile-de-France கடுமையாக பாதிக்கப்படும் என்றும் மக்கள் தமது பயணங்களை தள்ளிவைக்குமாறும் எஸ்.என்.சி.எவ் ரயில்வே நிறுவனம் பரித்துரைத்துள்ளது.

அதுமட்டுமின்றி ரயில் சேவைகள் வேகக் கட்டுப்பாட்டுடன் இடம்பெறுவதால் பயணங்களில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பனிபொழிவு காரணமாக விமான சேவைகளும் சில ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். சிறையில் தந்தை : இந்தியாவில் மகன் பரிதாபமாக பலி : கண்ணீரில் உறவுகள்!!

யாழ். சிறையிலுள்ள இந்திய மீனவரான ஜெயசீலனை, அவரது மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிணையில் விடுவிக்குமாறு இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக கடந்த மாதம் 15ஆம் திகதி இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ். சிறையில் அடைத்துள்ளனர்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மீனவர் பூன்டிராஜ், ஜெயசீலன் முனியசாமி, கர்மேகம், பூபாண்டி, ராதகிருஷ்ணன், பாலா, முத்துக்குமார், ராயப்பன் ராமர் உள்ளிட்ட இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் இதில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் மீனவர் ஜெயசீலனின் ஒரே மகன் ஸ்டீபன் இன்று காலை காலைக் கடன் கழிக்க கடற்கரைப் பகுதிக்கு சென்றபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், “தனது கணவர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் தானும் தனது மகனும் தவித்து வருகிறோம். ஏற்கனவே எனது மகன் ஸ்டீபன் வலிப்பு நோயால் பாதிப்படைந்து சிகிச்சைபெற்று வரும் நிலையில் எனது கணவரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற செய்தி அறிந்த நாள்முதல் மனநிலையும் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இருந்த ஒரே மகனையும் இழந்து விட்டேன்” என குறித்த மகனை இழந்த தாயார் மீனா கவலையுடன் தெரிவித்துள்ளார். மகனின் இறுதிச் சடங்கிற்கு மீனவர் ஜெயசீலனை விடுவிக்க வேண்டும் என குடும்பத்தார் கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஜெயசீலனை பிணையில் விட அனுமதி கோரி மனு செய்துள்ளனர்.

மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.ரீயால் மீனவரை பிணையில் விடுவிக்க சட்டமா அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பரிந்துரைக்கடிதம் கிடைக்கப்பட்டவுடன் மகனின் இறப்புச் சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பிணையில் எடுத்து சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து தமிழகம் சென்ற 9 மாத கர்ப்பிணிப் பெண்ணின் நிலை!!

இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு சென்ற குடும்பத்தினரிடம் தமிழக பாதுகாப்பு தரப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கடல் பகுதியில் பலத்த பாதுகாப்பையும் மீறி மன்னார் பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கண்ணாடியிலைப் படகில் சென்றுள்ளனர். இவர்களில் 9 மாத கர்ப்பிணித்தாய் உட்பட நான்கு பேரிடம் உளவுத்துறை, கியூபிரிவு சுங்கத்துறை மற்றும் பொலிஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் மன்னார் பகுதியைச் சேர்ந்த நிரோசன் (28) பெயின்டர் வேலை செய்து வருவதாகவும் வருவாய் இன்றி கஷ்டத்தில் இருப்பதால் தனது மனைவி மேரிஸ்டெல்லா (23) ஒன்பது மாத கர்ப்பிணியுடன் தனது ஐந்து வயது பெண் குழந்தை ஜஸ்மின் மற்றும் சகோதரர் ரீகன் உள்ளிட்ட நான்கு பேருடன் தனுஸ்கோடிக்கு சென்றுள்ளனர்.

இலங்கை மன்னார் பகுதியில் கண்ணாடியிலைப் படகு ஒன்றில் 60 ஆயிரம் ரூபாய் கொடுத்து தனுஷ்கோடிக்கு இன்று அதிகாலை வந்ததாக தெரிவித்துள்ளனர். கடந்த 1990 ல் இலங்கையில் நடைபெற்று வந்த யுத்த காலத்தில் அகதிகளாக வந்து மண்டபம் முகாமில் தங்கியிருந்ததாகவும் கடந்த 2011ல்மண்டபம் அகதி முகாமிலுள்ள அரசு மருத்துவமனையில் தனது மனைவிக்கு வயிற்றில் ஒப்ரேசன் செய்து மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்.

பின் கடந்த 2012ல் பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்கு திரும்பிச் சென்றனர், மீண்டும் தற்போது பிரசவத்திற்க்காக இங்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவர்களிடம் விசாரணை நடத்திய பொலிஸார் கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில்  கணவர்கள் இல்லா நேரத்தில் 8 மனைவியர் திடீர் கைது!!

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே வெலிகம, ரிலாகமவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டுப் பெண்களை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்களில் ஐந்து பேர் ஏற்கனவே வெவ்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மீனவர்களின் மனைவியரான இவர்கள் எட்டுப் பேரும், கணவர்கள் தொழிலுக்குச் சென்றபின் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் இவர்கள் எட்டுப் பேரும் 17 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் நான்கு கால்களுடன் விசித்திரக் கோழி!!

நான்கு கால்களைக் கொண்ட கோழி ஒன்று நாத்­தாண்­டியா பிர­தே­சத்­தி­லுள்ள கோழிப் பண்ணை ஒன்றில் வளர்ந்து வருகிறது.

இது சாதா­ரண கோழியைப் போன்று, இரண்டு கால்­களில் நடந்து செல்­வ­துடன், மேல­திக கால்­களைப் பின்­பு­ற­மாக வைத்தி­ருக்கும் என்று ­கோழிப் பண்ணையின் உரி­மை­யாளர் தெரி­வித்தார்.

வவுனியாவில் வெளிநாட்டிலிருந்து வந்த நான்கு தினங்களில் தூக்கில் தொங்கி உயிரிழந்த இளைஞன்!!

 
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வெளிநாடு ஒன்றிலிருந்து வந்து நான்கு தினங்களில் இன்று(08.02.2018) பிற்பகல் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னரே சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய 30வயது இளைஞன் ஒருவர் உக்கிளாங்குளம் பகுதியிலுள்ள பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளதாகவும் அப் பெண்ணிற்கு அரச வேலை கிடைத்துள்ளதுடன் குறித்த இளைஞனை கைவிட்டுள்ளதாகவும் இதனாலே மனம் உடைந்த இளைஞன் வீட்டில் தாயார் அறையில் படுத்திருந்தபோது வீட்டில் தூக்கில் தொங்கியுள்ள நிலையில் தாயார் வெளியே வந்தபோது இச்சம்பவத்தினை கண்டு அயலிலுள்ளவர்களின் உதவியுடன் வவனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் குறித்த இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

வவுனியாவில் இப்படியும் மோசடி : பாதிக்கப்பட்டவர் பொலிசில் புகார்!!

வவுனியாவில் பிரபலமான புடவைக்கடையை நடத்திவரும் வர்த்தகர் ஒருவரிடம் சென்ற பிரபல காப்புறுதி நிறுவனத்தின் முகவர் ஒருவர் வர்த்தகரின் குடும்பத்தினருக்கு ஆயுட் காப்புறுதி பெற்றுத்தருவதாகவும், பல அனுகூலங்களுடன் ஒரு தொகை வைப்பிலிடப்பட்டால் பில்லியன் கணக்கில் பெறமுடியும் என்று தெரிவித்து மூளைச்சலவை செய்துள்ளார்.

இதையடுத்து குறித்த வர்த்தகரும் மனைவியின் பெயரில் ஆறு இலட்சம் ரூபாவிற்கு நிரந்தர வைப்பு காப்புறுதி ஒன்றினைப் பெற்றுக்கொண்டதுடன் இரண்டு இலட்சம் ரூபாவாக அப்பணத்தை மூன்றாகப்பிரித்து செலுத்தியுள்ளார்.

இதையடுத்து சில தினங்களின் பின்னர் வர்த்தகருக்கு காப்புறுதிப்புத்தகம் ஆங்கில மொழியில் வழங்கப்பட்டுள்ளது. காப்புறுதி முகவரின் நம்பிக்கையின் நிமித்தமும் வவுனியாவில் வசித்து வருவதையும் புரிந்துகொண்ட வர்த்தகர் புத்தகத்தினை சந்தேகத்துடன் பார்வையிடாது வைத்துள்ளார்.

எனினும் சில காலமாகியதால் அப்பணத்தினை ஒரு தேவையின் நிமித்தம் திரும்பப்பெற்றுக்கொள்வதற்கு குறித்த காப்புறுதி நிறுவனத்திற்குச் சென்றுள்ளார். அப்போது தான் குறித்த வர்த்தகருக்குத் தெரியவந்தது தன்னால் வழங்கப்பட்ட ஆறு இலட்சம் ரூபாவும் காப்புறுதி நிறுவனத்தில் வைப்புச் செய்யப்படவில்லை தனக்கு வழங்கப்பட்ட காப்புறுதிப்புத்தகத்தில் அப்பணம் வைப்புச் செய்யப்படவில்லை என்று.

அங்கிருந்து முகவருடன் தொடர்புகொண்டபோது அவர் அந்நிறுவனத்தில் பணியிலிருந்து விலகியதும் தெரியவந்துள்ளதுடன் குறித்த முகவரும் வழங்கிய பணத்திற்கு பொறுப்பேற்றகவில்லை நிறுவனமும் கைவிரித்துள்ளது.

இதையடுத்து குறித்த வர்த்தகர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இன்றுவரையில் அவர்களிடமிருந்து பதிலேதும் கிடைக்காத நிலையில் வவுனியா வர்த்தகர் சங்கத்திலும் இதன் நிலைமைகளைத் தெரிவித்து சங்கத்தினூடாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தார்.

இன்று வரையில் சங்கமும் பொலிசாரும் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துடன் இவ்வாறு ஒரு நிறுவனத்தின் பெயரைப்பயன்படுத்தி மோசடி இடம்பெற்றுள்ளது இதற்கு குறித்த நிறுவனம் அங்கு பணியாற்றிய முகவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதுடன் தக்க பதிலினை பெற்றுத்தருமாறு வர்த்தகர் கோரியுள்ளார்.


வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

வவுனியாவில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!!

பல கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை வவுனியா பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

செட்டிக்குளம், மன்னார்,யாழ்ப்பாணம் பகுதிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட புங்குடுதீவை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை நேற்றுமுன்தினம் (06.02.2018) அன்று வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு தொகை தங்கமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இந்நபர் யாழ்ப்பாணத்தில் கொள்ளை சம்பவம் ஒன்றிற்காக யாழ் நீதிமன்றில் ஆஜர்படுத்த கொண்டு சென்ற போது தப்பித்து சென்றிருந்ததுடன் யாழ் நீதி மன்றத்தால் குறித்த நபருக்கு எதிராக 07 பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.

இவ்வாறு தப்பித்து சென்ற நபர் மன்னார், செட்டிக்குளம், கொழும்பு, திருகோணமலை, கிளிநொச்சி பிரதேசங்களில் வாழ்ந்து வந்துள்ள நிலையில் 04 மாதமாக பொலிஸாரின் தீவிர தேடுதலின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக் கொள்ளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றது.

வவுனியா கோவில்குளம் தாய்சேய் பராமரிப்பு நிலையம் மிக நீண்ட காலமாக திருத்தப்பட வேண்டிய நிலையில் சேவைகளைப் பெறுவதில் சிக்கல்!

வவுனியா   நகரசபைக்குட்பட்ட கோவில்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள  தாய்சேய்  பராமரிப்பு நிலையம்  திருத்த வேலைகள் மேற்கொள்ள வேண்டியதன்  காரணமாக மிக  நீண்ட காலமாக இயங்கமுடியாத நிலையில் காணப்படுகிறது.

இவ் தாய்சேய்  பராமரிப்பு நிலையத்தின் மூலம்கோவில்குளம்,கோவில்புதுக்குளம், சின்னப் புதுக்குளம், வெளிக்குளம்,தெற்கிலுப்பைகுளம்  ஆகிய  கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணி தாய்மார்களும் குழந்தைகளும் பயனடைந்து  வந்தநிலையில்  தற்போது தாய்சேய் நிலையம்  இயங்க  முடியாத  நிலையில் உள்ளமையினால் பெரும் பாதிப்புக்குள்ளகியுள்ளனர்.

இப்பிரதேசங்களில்  உள்ள  கர்ப்பிணி  தாய்மாரும் குழந்தைகளும்  மருத்துவ  சுகாதார  சேவைகளைப்  பெறும் பொருட்டு  வவுனியா  மாவட்ட  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கே  செல்ல வேண்டியுள்ளது. மேலும் வவுனியா  மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மதியநேரத்திற்கு பின்பே இவர்களுக்குரிய சேவைகளை பெற்றுக்கொள்ளகூடியதாக உள்ளது.

எனவே சம்பந்தபட்ட தரப்புகள் விரைவில் கோவில்குளம் தாய்சேய் பாராமரிப்பு  நிலையத்தை மீள இயங்க வைப்பதற்கான   திருத்த நடவடிக்கைகளை  மேற்கொள்ள  வேண்டும் அல்லது அருகில்  உள்ள  பொது கட்டிடமொன்றில்   தற்காலிகமாக  இயங்க வைப்பதற்கான   நடவடிக்கைகளை  மேற்கொள்ள ஆவன செய்யவேண்டுமென மேற்படி பிரதேசங்களை சேர்ந்த பயனாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்..

 

 

நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட பெண் : 20 ஆண்டுகளாக தாய், சகோதரனால் சித்ரவதை!!

இந்தியாவின் கோவா மாநிலத்தில் தாயார் மற்றும் சகோதரனால் 20 ஆண்டுகள் தனி அறையில் சிறை வைக்கப்பட்ட 45 வயது பெண்ணை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த பெண்ணின் உறவினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலையே பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போதிய உணவின்றி, மிகவும் சோர்வுடன், நோய்க்கூறுடன் காணப்பட்ட குறித்த 45 வயது பெண்மணி தற்போது வடக்கு கோவா மாவட்டத்தில் அமைந்துள்ள மபூசா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், தனது பி.ஏ. பட்டப்படிப்பை தொடர முற்பட்டபோது தாய் மற்றும் சகோதரனால் தனி அறையில் குறித்த பெண் அடைத்து வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக போர்வை, படுக்கை இன்றி சிமெண்ட் தரையில் குறித்த பெண் படுத்து உறங்கியுள்ளார். பெண்ணின் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் முறையான புகார் அளிக்கப்படும் என சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொலிசார் குறித்த அறைக்குள் நுழையும் போது அந்தப் பெண் உடலில் ஆடையில்லாமல் இருந்துள்ளார். மட்டுமின்றி அறையை விட்டு வெளியே வரவும் பிடிவாதம் பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் உறவினர் ஒருவர் மாறுபட்ட கருத்தை ஊடகங்களுக்கு பதிவு செய்துள்ளார். அதில், மும்பையைச் சேர்ந்த ஒருவரை குறித்த பெண் திருமணம் செய்து கொண்டார் என்றும், ஆனால் அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பது தெரிந்த பிறகு தன் இவர் வீட்டுக்கே திரும்பியுள்ளார். மும்பையிலிருந்து திரும்பிய பிறகே அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று நடந்து கொண்டார் என்றும், இதனையடுத்தே குறித்த பெண்ணை தனி அறையில் அடைத்தனர் என்றும் தெரிவித்துள்ளனர்.