பூமியை நோக்கி அதிவேகத்தில் பாய்ந்து வரும் விண்கல்!!

விண்வெளியில் இருந்து அதிவேகத்தில் பாய்ந்து வரும் விண்கல் நாளை பூமியை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளியில் கோடிக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. ஆனால் சில நேரங்களில் இந்த கற்கள் பூமியின் புவிஈர்ப்பு பாதைக்குள் நுழைந்து விடுகின்றன.

அந்த கற்கள் நேரடியாக பூமியில் வந்து விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்படும். ஆனாலும் பூமிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இயற்கை சில பாதுகாப்புகளை அளித்துள்ளது. புவி ஈர்ப்பு விசைக்குள் அந்த கற்கள் நுழையும்போது காற்றில் ஏற்படும் உராய்வு காரணமாக கற்களில் தீப்பிடித்துக்கொள்ளும். இதனால் பூமிக்கு வருவதற்கு முன்பாகவே எரிந்து சாம்பலாகிவிடும்.

இதன் காரணமாகத்தான் பூமிக்கு விண்கற்களால் ஆபத்து ஏற்படுவதில்லை. ஆனாலும் கூட சில கற்கள் முழுமையாக எரியாமல் பூமியில் விழுந்ததும் உண்டு. அவற்றால் சிறு சிறு பாதிப்புகள் மட்டுமே இதுவரை ஏற்பட்டுள்ளன.

இந் நிலையில் பூமியை நோக்கி 40 மீட்டர் நீளம் கொண்ட இராட்சத கல் ஒன்று தற்போது அதிவேகமாக வந்து கொண்டிருக்கிறது. 2018சி.பி. என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கல் நாளை பூமியில் இருந்து 64,000 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து செல்கிறது.

ஆனாலும் பூமியின் புவிஈர்ப்பு விசைக்கு அப்பால் அது கடந்து செல்வதால் அது பூமியை நோக்கி வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆபத்தும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இதேபோன்று ஒரு கல் பூமி அருகே கடந்து சென்றது. ஒரே வாரத்தில் இப்போது 2ஆவது கல் வருவது குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிக்க முடியும்!!

இலங்கையில் வாக்காளர் அட்டைகள் கிடைக்காத 2017ம் ஆண்டில் பதிவு செய்த வாக்காளர்களுக்கான இலவச சேவை உடனடியாக வழங்கி வருகிறார்கள் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினர்.

உள்ளூராட்சிக்கான தேர்தல் 2018 வாக்காளர் அட்டை கிடைக்கவில்லை என்றால் 0773316441 என்ற இலக்கத்திற்கு உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீங்கள் இலங்கையின் எப்பாகத்தில் இருந்தாலும் உங்களுக்கு வாக்காளர் அட்டை வரவில்லையா உடனடியாக உங்கள் வாக்காளர் தொடர் இலக்கம் மற்றும் வாக்களிக்க வேண்டிய நிலையம் போன்ற தகவல்களை உடனேயே இலவசமாக வழங்கி உங்கள் வாக்குகளை கால தாமதம் இன்றி வழங்கிட உதவக் காத்திருக்கிறார்கள் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கைப் பெண் ஒருவர் கைது!!

24 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு தங்க கட்டிகளை சென்னைக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த இலங்கைப் பெண் ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி – பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான இந்த பெண், இன்று காலை 8.30 அளவில் சென்னை நோக்கி புறப்பட்டுச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த பெண் எடுத்துச் சென்ற பயணப் பொதியில் 100 கிராம் எடை கொண்ட 4 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண்ணை கைது செய்த சுங்க அதிகாரிகள், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

சாதனை படைத்த இலங்கையின் தமிழ் விஞ்ஞானிக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு!!

 
தாய்லாந்தில் நடைபெற்ற அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சியில் இலங்கைத் தமிழ் மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் மேலும் இரு பதக்கங்களைப் பெற்று நேற்று நாடு திரும்பியுள்ளார்.

நாடு திரும்பிய சோமசுந்தரம் வினோஜ்குமாருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

2018 இற்கான அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சி, தாய்லாந்து மாநாட்டு மண்டபத்தில் 2018.01.01 தொடக்கம் 2018.02.06 வரை நடைபெற்ற சர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்டுபிடிப்பு போட்டியில் 97 நாடுகளைச் சேர்ந்த 1800 பல்கலைக்கழக கண்டுபிடிப்பாளர்கள் போட்டியிட்டனர்.

அப்போட்டியில் இலங்கை சம்மாந்துறையைச் சேர்ந்த இளம் தமிழ் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் போட்டியிட்டு சர்வதேச வெண்கல விருதையும் உலக கண்டுபிடிப்பாளர் மற்றும் முயற்சியாளர் ஸ்தாபனத்தினால் சர்வதேச ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கான சிறப்பு விருதையும் பெற்றுக் கொண்டார்.

97 நாடுகளை சேர்ந்த 1800 விஞ்ஞானிகள் போட்டியிட்டனர். இப்போட்டியில் 4 மலேசிய தமிழர்களுடன் சேர்த்து 1 ஈழத் தமிழனாக போட்டி இட்டு வெற்றி அடைந்துள்ளார்.

இவ் விருது ‘கணித உதவியாளன்’ எனும் கணித பாடத்தை இலகுவாக கற்க உதவும் கண்டுபிடிப்புக்கே வழங்கப்பட்டது.

தனது ஆரம்பக்கல்வியை சம்மாந்துறை ஶ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திலும் உயர்தரத்தினை சம்மாந்துறை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றார்.

தற்போது யாழ். பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருக்கும் இவர் இதுவரை 81 கண்டுபிடிப்புக்களைச் செய்துள்ளதோடு 31 தேசிய விருதுகளையும் 3 சர்வதேச விருதுகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த வினோஜ்குமார், “எனது இரண்டு கண்களான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்துக்கும், சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்துக்கும் மேலும் எனது யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் எங்கள் அறப்பணி அன்பே சிவத்திற்கும், மற்றும் இன மத பேதமின்றி நாடு கடந்து வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது பணிவன்பான நன்றிகள்.

என்னுடைய கண்டுபிடிப்பு என்னைப் பொறுத்தவரை தரம் என்பதற்கு அல்ல. உங்கள் அனைவரது ஆசிர்வாதம் மற்றும் ஊக்கப்படுத்தலே மிக முக்கியமாக இருந்தது. எல்லா இடத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அந்த ஒருசில நல்லவர்களிள் நட்புக்கு கிடைத்த பரிசுதான் இந்த விருது. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் இவ் விருது கிடைத்தது.

புதியவற்றினை ஏற்படுத்தாத தேசம் எழுச்சி பெறாது. எனவே எமது நாட்டில் என்னை விட பல திறமை வாய்ந்த எத்தனையோ பல கண்டுபிடிப்பாளர்கள் இருக்கின்றார்கள். இன மத பேதமின்றி அனைவரும் திறமைக்கு மதிப்பு வழங்கினால் மாத்திரமே எமது நாட்டில் புரிந்துணர்வுடன் கூடிய சமாதானமும் அபிவிருத்தியும் அடையும். இதனை அரசியலினாலோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையினாலோ ஏற்படுத்த முடியாது.” என்றார்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

இளைஞனால் இரு வருடங்களாக சிறுமிக்கு நடந்த கொடுமை!!

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 17 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளஞரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்றைய தினம் இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

தெவனகல – மாவனெல்லை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இரண்டு வருடகாலமாக குறித்த சிறுமியை காதலிப்பதாக கூறி பல இடங்களுக்கு, அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுமியின் பெற்றோர்களினால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் நேற்றைய தினம் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

சுவிஸ்லாந்தில் இலங்கை அகதி அடித்துக் கொலை!!

சுவிஸ்லாந்தில் இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ்லாந்தின் Ecublens VD பகுதியில் கடந்த புதன் கிழமை 19 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், 19 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி புதன் கிழமை மாலை இறந்து கிடந்தார். அது குறித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த கொலையை செய்தது இலங்கையைச் சேர்ந்தவர் தான் எனவும் அவருக்கு வயது 47 எனவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் எப்படி நடந்தது, என்ன காரணம் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

த்ரிஷாவுடன் மோதலா : கீர்த்தி சுரேஷ் விளக்கம்!!

ஹரி இயக்கும் சாமி 2 படத்தில் விக்ரமுடன் நடிக்க த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமானார்கள். படப்பிடிப்பு ஆரம்பமான நிலையில், திடீரென படத்திலிருந்து த்ரிஷா விலகினார்.
இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் த்ரிஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் படத்தின் தயாரிப்பாளர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்பாடு செய்தார்.

இதற்கிடையே படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு முக்கியத்துவம் இருப்பதாலேயே த்ரிஷா விலகிவிட்டதாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், த்ரிஷாவை விட தனக்கு காட்சிகள் அதிகம் வேண்டும் என கீர்த்தி சுரேஷ் கேட்டதாகவும் அதன்படி கதையில் மாற்றம் செய்ததாலேயே த்ரிஷா விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் காரணத்தால் த்ரிஷா – கீர்த்தி இடையே மோதல் உருவாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எவ்வாறாயினும், இது பொய்யான தகவல் எனவும் படத்தில் த்ரிஷாவின் கதாப்பாத்திரம் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது எனவும் கீர்த்தி தெரிவித்துள்ளார். த்ரிஷாவுடன் தனக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

வாக்களிப்பு நிலையத்தில் நீங்கள் பின்பற்றவேண்டியது என்ன : விபரம் இதோ!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நாளை 10 ஆம் திகதி சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், உள்ளுராட்சி மன்றதேர்தல் வாக்களிப்பு நிலையத்தினுள் வாக்காளர்கள் பின்பற்றவேண்டிய ஒழுங்குமுறைகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு நிழற்படமொன்றை வெளியிட்டுள்ளது.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

குழந்தைகளிடம் பாலியல் தொல்லை : மன்னிப்பு கேட்கிறது அவுஸ்திரேலியா!!

பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான பல்லாயிரம் குழந்தைகளிடம் தேசிய மன்னிப்பு கோரவுள்ளதாக அவுஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய நிறுவனங்களில் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக எழுந்த குற்றச்சாட்டு மீது நடந்த நான்காண்டு கால விசாரணையில் பல்லாயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தேசிய மன்னிப்பு குறித்த அவரது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேவாலயங்கள், பாடசாலைகள், விளையாட்டு மன்றங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பல பத்தாண்டுகளாக இந்த தொந்தரவுகள் நிகழ்ந்துள்ளன. தேசிய மன்னிப்பு இந்தாண்டு இறுதியில் கோரப்படும் என்று டர்ன்புல் கூறியுள்ளார்.

இந்த தொந்தரவுகளில் தப்பிப் பிழைத்தவர்களின் விருப்பார்வங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், குழந்தைகளுக்கு உரிய கண்ணியத்தை வழங்கும் வகையிலும் இந்த நிகழ்வை ஒரு தேசமாக நாம் அனுசரிக்கவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், குழந்தைகளுக்கு உரிய கண்ணியத்தை அவர்களைப் பாதுகாக்கவேண்டியவர்களே மறுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

“இந்த சம்பவங்களை ஏதோ சில அழுகிய ஆப்பிள்கள் என்று புறக்கணித்துவிட முடியாது. சமூகத்தின் பெரிய நிறுவனங்கள் மோசமாகத் தோல்வியடைந்துள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய மன்னிப்புச் செய்தியில் என்ன இடம் பெறவேண்டும் என்பது குறித்து இந்த தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் டர்ன்புல் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான குறைதீர்வுத் திட்டத்தில் இணையும்படி அவர் மாநில அரசுகளையும், நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். அரசு ஏற்கெனவே 3 கோடி அவுஸ்திரேலிய டொலர்களை இந்த திட்டத்துக்கு ஒதுக்கியுள்ளது. பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 1.5 லட்சம் அவுஸ்திரேலிய டொலர்கள் வழங்கப்படுவதோடு, இந்த நிதியில் இருந்து ஆலோசனைகளும் பிற சேவைகளும் வழங்கப்படும்.

இந்த நான்காண்டு விசாரணையின்போது 8 ஆயிரம் பேரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை அறிய முடியாது என்று விசாரணை முடிவில் கூறப்பட்டது.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் கண்ணீர்விட்டு கதறியழுத காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்!!

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா மத்திய தபால் நிலையத்திற்கு அருகே இன்றுடன் (09.02.2018) 351 நாட்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சாகும்வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் போது அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டு உறவுகளின் கோரிக்கையினை நிராகரிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடமாகுவதையடுத்து இன்று (09.02.2018) காலை தொடக்கம் நாளை வரை இரு நாட்கள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் காணாமற்போன உறவுகள் எவரும் தங்களிடம் இல்லை அவர்கள் விரும்பினால் இழப்பீடு பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இன்று 351 நாட்கள் ஆகியும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளை வெளிப்படுத்தக்கோரியும் இன்று (09.02.2018) பிற்பகல் 12.30 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்குச் சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தேங்காய் உடைத்து கண்ணீர் விட்டு அழுது அவர்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தினார்கள்.

எமது கண்ணீரை வெளிநாடுகள் வந்து பார்க்கவேண்டும், வயதுபோன தாய்மார்கள் பல நாட்களாக உணவு தவிர்ப்பு மேடையிலிருந்து கதறியழுவது உங்களுடைய காதுகளில் கேட்கவில்லையா? ஜரோப்பிய ஒன்றியம் உடனடியாக வந்து எங்களுடைய பிரச்சினைகளில் தலையிடவேண்டும், முருகனும் வேல் எடுத்து போராட்டம் மேற்கொண்டவனே நீதான் முடிவு எடுக்கவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கதறியழுனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

வாக்களிப்பு நிலையத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு தடை!!

2018ம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை மறுதினம் 10ம் திகதி காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக 13, 374 வாக்களிப்பு நிலையங்கள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதுதவிர நாளை மறுதினம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்களில் கையடக்க தொலைபேசிப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த பகுதியில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தல், காணொளி எடுத்தல், புகைப்படம் எடுத்தல், புகைத்தல், மதுபானம் அருந்துதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தல் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்து சபை 1337 பஸ்களை வழங்கியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பஸ்கள் மூலம் தேர்தல் அதிகாரிகள் வாக்கு பெட்டிகளை எடுத்துச்செல்வதுடன், பாதுகாப்பு பிரிவு பணிகளுக்காகவும் இந்த பஸ்கள் பயன்படுத்தப்படும்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

ஒரே இடத்தில் சந்தித்த ரணில்- மைத்திரி- மகிந்த!!

இந்த நாட்களில் அரசியல் மேடைகளில் அதிகம் பேசப்படும் மூன்று கதாபாத்திரங்கள் ஒரே இடத்தில் நேற்றைய தினம் சந்தித்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரே ஒரே இடத்தில் சந்தித்து கொண்டுள்ளனர்.

மறைந்த பெல்லன்வில விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு அஞ்சலி இடத்திலேயே இவர்கள் சந்தித்து கொண்டுள்ளனர்.

சிறிஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மைதானத்தில் அவரது இறுதி சடங்குகள் நேற்று மாலை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

வவுனியாவின் நகரசபை மற்றும் பிரதேச சபைகள் தொடர்பான பயனுள்ள தகவல்கள்-2018(வீடியோ)

வவுனியா மாவட்டத்தில் உள்ள நகரசபை  மற்றும் பிரதேச சபைகளுக்கான  தேர்தல் நாளைய  தினம் (10.02.2018)இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது .  மேற்படி தேர்தல்

  1. வவுனியா  நகரசபை
  2. வவுனியா தெற்கு  தமிழ் பிரதேச சபை
  3. வவுனியா தெற்கு சிங்கள  பிரதேச  சபை
  4. வவுனியா வடக்கு பிரதேச சபை
  5. வவுனியா  வெங்கல  செட்டிகுளம்  பிரதேச சபை  என்பவற்றுக்கான உறுப்பினர்களை  தெரிவு  செய்வதற்காக  இடம்பெறுகின்றமை  குறிப்பிட தக்கது.

மேலும்  முறை இடம்பெறுகின்ற  தேர்தல்   வட்டார  அடிப்படையில்  உறுப்பினர்களை  தெரிவு செய்வதற்காக தொகுதி  முறைமை  மற்றும் விகிதாசார பிரதிநித்துவ  முறைமை  என்பவற்றை   ஒன்றுபடுத்தி    நடைபெறுகின்றமை  விசேட  அம்சமாகும் .

மேற்படி தேர்தல் தொடர்பாக  வவுனியா  மாவட்டம்  சார்பான  சில பயனுள்ள  தகவல்களுக்கு….

காணொளியை பாருங்கள் …..

 





வவுனியாவில் தேர்தல் முறைகேடு தொடர்பில் 93 முறைப்பாடுகள்!!

வவுனியா மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 93 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை உதவி மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரியுமான என்.கமலதாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் தேர்தல் தொடர்பில் பாரிய குற்றச்செயல்கள், முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை.

எனினும் சிறியளவிலான தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் இதுவரை 93 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதில் அதிகமாக சுவரொட்டிகள் காட்சியப்படுத்தியமை தொடர்பிலேயே கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேவேளை முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

வவுனியாவில் இலஞ்சம் வாங்கிய வன இலாகா அதிகாரி கைது!!

வவுனியா, நெடுங்கேணி பிரிவுக்குட்பட்ட வன இலாகா அதிகாரி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மரம் வெட்டுவதற்கான அனுமதி வழங்குவதற்கு இலஞ்சம் பெற்ற நிலையிலேயே வவுனியா, நெடுங்கேணி பிரிவுக்குட்பட்ட வெடிவைத்தகல் பகுதியில் வைத்து வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய வன இலாகா அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

வவுனியாவின் 148 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு!!

 
வவுனியா மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான 148 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப் பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 103 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1043 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஒரு இலச்சத்து 14 ஆயிரத்து 599 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ள நிலையில் அவர்கள் வாக்களிப்பதளற்குரிய 148 நிலையங்களுக்கும் மாவட்ட செயலகத்தில் இருந்து இன்று காலை 8 மணி முதல் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த தேர்தலில் 2000 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 1500 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..