கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை அகதி : நீதிமன்றம் அதிரடி!!

கனடாவில் மனைவியை கொலை செய்ததால் நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதியை மீண்டும் நாட்டிற்கு வரவழைத்து விசாரித்து தண்டனை தரமுடியாது என்று கனடா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இலங்கைகையைச் சேர்ந்தவர் சிவலோகநாதன் தனபாலசிங்கம். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு கனடாவிற்கு அகதியாக சென்றுள்ளார். அதன் பின் கனடாவின்  நிரந்தரகுடியுரிமையை பெற்ற இவர் கடந்த 2012ஆம் ஆண்டு மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனால் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வந்தது.

56 மாதங்கள் சிறையில் இருந்த அவரை கனடா நீதிமன்றம் விடுவித்தது. ஏனெனில் கடந்த 2016ஆம் ஆண்டு கனடாவின் உச்ச நீதிமன்றம் ஒரு விதிமுறையை விதித்திருந்தது. அதில் குற்றவியல் வழக்குகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சிவலோகநாதன் தனபாலசிங்கம் தொடர்பான வழக்கு அந்த கால வரம்புகளை தாண்டிவிட்டதால் நீதிமன்றம் அவரை விடுவித்தது.

கனடாவில் இந்த விதிமுறைப்படி முதல் முறை விடுவிக்கப்பட்ட நபர் சிவலோகநாதன் தனபாலசிங்கம் தான். அதன் பின் வெளியே வந்த அவரை உடனடியாக குடிவரவு அதிகாரிகள் (Immigration Authorities) கைது செய்து, இது போன்ற கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் நாட்டில் இருந்தால் மிகவும் ஆபத்து என்று கூறி, இலங்கைக்கு நாடு கடத்திவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று Crown மேல் முறையீடு செய்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இது குறித்த விசாரணை நிதிமன்றத்திற்கு வந்தது. அப்போது நீதிபதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அவரை மீண்டும் அழைத்து விசாரித்து தண்டனை தர முடியாது என்று தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

ரங்கன ஹேரத் உலக சாதனை!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 04 விக்கட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை புரிந்துள்ளார்.

இப்போட்டியில் அவர் வீழ்த்திய நான்கு விக்கட்டுக்களுடன் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 415 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் இடது கை சுழற் பந்து வீச்சாளார்களில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய வீரராக ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார்.

முன்னதாக 414 விக்கட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் அந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் வசீம் அக்ரமின் சாதனையை ரங்கன ஹேரத் முறியடித்துள்ளார்.

வவுனியாவில் தமிழரசுக்கட்சி பெண் வேட்பாளருக்கு அச்சுறுத்தல்!!

வவுனியா கற்குளியைச் சேர்ந்த தமிழரசுக்கட்சியின் பெண் வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இன்று (10.02.2018) இடம்பெற்றுள்ளது.
இச்சம்வம் குறித்து கருத்து தெரிவித்த குறித்த பெண் வேட்பாளர்..

தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு வாக்களிக்கச் சென்ற வேளை தனது வீட்டிற்கு அருகாமையில் வைத்து ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஒருவர் “வீட்டிலே போய் இரடி இல்லாட்டி உன்ர பிள்ளைகளுக்கு அம்மா இருக்காது” என அச்சுறுத்தல் விடுத்ததுடன் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே மாற்றுக் கட்சியினரால் எனக்கு அச்சுறுத்தல் சம்பவம் நடந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ள சென்ற நிலையில் எனது முறைப்பாட்டை பொலிசார் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை என தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

வங்கப்புலிகளை அவர்களின் சொந்தமண்ணில் வேட்டையாடிய இலங்கையின் சிங்கங்கள்!!

 
பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2 ஆவது போட்டியில் 215 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி 1-0 என தொடரைக் கைப்பற்றியது.

ரங்கண ஹேரத் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் சுழலில் மிரட்ட பங்களாதேஷின் 2 ஆவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்திருந்தது.

பங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடிவருகின்றது.

இரு அணிகளுக்குமிடையில் சிட்டகொங்கில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் டாக்காவில் ஆரம்பமானது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் சுரங்க லக்மால் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.

110 ஓட்டங்களால் முன்னிலை வகித்த இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. தனது 2 ஆவது இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்துவிக்கெட்டுளையும் இழந்து 226 ஓட்டங்களைப்பெற்றது.

இதையடுத்து 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு பங்களாதேஷ் அணிக்கு இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்டது.

இன்று போட்டியின் 3 ஆவது நாளில் 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களைப்பெற்று 215 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய அகில தனஞ்சய 5 விக்கெட்டுகளையும் ரங்கண ஹேரத் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடரின் ஆட்டநாயகனாகவும் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் ரொஷான் சில்வா தெரிவுசெய்யப்பட்டார்.

இதில் அடுத்தடுத்த ஆட்டங்களில் அருமையாக ஆடிய ரொஷேன் சில்வா தொடர்ச்சியாக தனது நான்கு அரைச் சதங்களைக் பூர்த்தி செய்தார்.

இந்நிலையில் சுழல் மன்னன் ரங்கண ஹேரத் டெஸ்ட் வரலாற்றிலேயே அதிதிறமையான இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற உலக சாதனை படைத்தள்ளார். அவர் இது வரை 415 விக்கெட்டுகளை வீழ்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞனின் விபரம் வெளியானது!!

 
சுவிஸ்லாந்தில் இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் ஒன்று பதிவாகியிருந்து.

சுவிஸ்சலாந்தின் Ecublens VD பகுதியில் கடந்த புதன்கிழமை 20 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த நபர் தொடர்பிலான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த வகையில், மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் வசிக்கும் றெபின்சன் றொட்ரிகோ துஸான் றொன்சின்ரன் (20) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இவர் சுவிட்சர்லாந்தின் ECUBLENS VD பகுதியில் கடந்த 3 வருடங்களாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையிலேயே, அவர் கடந்த புதன்கிழமை (07.02) மாலை இனம் தெரியாத நபர்களினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

வவுனியாவில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 பேர் கைது!!

 
வவுனியாவில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை முதல் உள்ளூராட்சி சபைக்கான வாக்களிப்பு நடைபெற்று வரும் நிலையில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு தூண்டியமை, வீதிகளில் தமது கட்சி சின்னங்களை வரைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் அமைச்சர் றிசாட் பதியுதீனின் ஆதரவாளர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அமைச்சர் றிசாட் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கிடையில் அசம்பாவிதம் ஏதும் இடம்பெற்றாதா என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

கோவில் குளம் வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் தேர்தல் விதிமுறையை மீறி செயற்பட்ட தமிழ்க் கட்சி ஒன்றின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் பொலிசார் ஆகியோரினால் எச்சரித்து வெளியேற்றப்பட்டனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

வவுனியாவின் 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு!!

 
வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது.

வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 103 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1043 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஒரு இலச்சத்து 14 ஆயிரத்து 599 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெறுகின்றது.

குறித்த தேர்தலில் 2000 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 1500 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

பொய் வழக்கு தொடுத்தவர்களை மாட்டி விட்ட சமூக ஊடகம்!!

 
ஹோட்டலில் உண்ட உணவினால் நோய்வாய்ப்பட்டதாகக் கூறி ஹோட்டல் நிர்வாகத்தின்மீது வழக்குத் தொடுத்தவர்கள் பேஸ்புக்கில் பதிவிட்ட புகைப்படங்களால் சிக்கிக் கொண்டார்கள்.

38 வயது Leon Roberts மற்றும் Jade 27 வயது Muzoka ஆகிய இருவரும் துருக்கியில் உள்ள Belek நகரின் ரிசர்ட் ஒன்றில் விடுமுறையை செலவிடுவதற்காக சென்றனர். பின்னர் ஹோட்டலில் சாப்பிட்டதால் உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக்கூறி ஹோட்டல் நிர்வாகத்தின்மீது வழக்குத் தொடர்ந்தனர்.

ஹோட்டல் நிர்வாகம் மற்றும் விடுமுறை ஏற்பாட்டாளர் சார்பாக விசாரணைக்காக Tim Hunter என்னும் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் தனது விசாரணையின்போது பேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்த புகைப்படங்களைக் கண்டார்.

79 புகைப்படங்களை பதிவேற்றியிருந்த அந்த தம்பதி தங்கள் விடுமுறையைக் குறித்தும், உணவைக்குறித்தும் புகழ்ந்து தள்ளியிருந்தனர். அந்தத் தம்பதி விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழித்திருப்பதாகவும், உடல் நலம் கெட்டுப்போனதாக பொய் சொல்லியிருப்பதாகவும் Hunter தெரிவித்தார்.

இதற்கிடையில் வழக்குத் தொடர்ந்த தம்பதியர்கள் வழக்கைத் தொடர்ந்து நடத்தாமல் அமைதியாகிவிட்டனர். அவர்கள் பொய் சொல்லி ஏமாற்றியிருப்பது ஊர்ஜிதமாயிற்று.

வழக்கை விசாரித்த நீதிபதி “இது போல் ஏமாற்றும் மற்றவர்களை எச்சரிப்பதற்காகவே இவர்களை சிறையில் தள்ளலாம்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தத் தம்பதி மட்டும் பிடிபடாமல் இருந்திருந்தால் தங்களுக்கு 50,000 பவுண்டுகள் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியர்களில் ஐந்தில் ஒருவர் இவ்வாறு இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுப்பது வழக்கமாகி விட்டது. ஏமாற்றுக்காரர்களின் இத்தகைய தொல்லைகள் தொடர்பாக சரியான நேரத்தில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு இந்த ஆண்டு விடுமுறைக் காலத்தில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என ஹோட்டல் நிர்வாகிகளும் விடுமுறை ஏற்பாட்டாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

குழந்தை பிறந்து 4 மணிநேரம் : கையில் பிஞ்சுக் குழந்தையுடன் பரீட்சை எழுதிய பெண்!!

பீகாரில் குழந்தை பிறந்த நான்கு மணிநேரத்தில் கையில் குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் தேர்வு எழுதிய சம்பவம் நடந்துள்ளது.

பீகாரை சேர்ந்த பெண் பபிதா குமாரி, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இவருக்கு திருமணம் ஆன நிலையில் கர்ப்பமாகியுள்ளார். நிறைமாத கர்ப்பிணியான பபிதா, படிப்பையும் கைவிடவில்லை, படிப்பு மேல் கொண்ட ஆர்வத்தால் தினமும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தேர்வு ஆரம்பமான நிலையில், தேர்வு தினத்தன்று காலை பபிதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த நான்கு மணிநேரத்தில் தேர்வறைக்கு வந்த பபிதா, கைக்குழந்தையுடன் தேர்வு எழுதியுள்ளார்.

அவரது பாட்டி குழந்தையை பார்த்துக் கொள்ள, பபிதா தேர்வு எழுதினார், அவரது கணவர் தேர்வறைக்கு வெளியே காத்துக் கொண்டிருந்துள்ளார்.

குழந்தை பிறந்து முழுமையாக குணமாகாத நிலையில், பபிதாவின் ஆர்வத்தை கண்டு பலரும் ஆச்சரியத்தில் மூழ்கிப்போயினர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் ஆன கிராம மக்கள்: எப்படி தெரியுமா?

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும், ராணுவத்தினரால் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர்.

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் போம்ஜா, இந்திய- சீன எல்லையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவ அமைவிடம் உருவாக்க, சுமார் 200 ஏக்கர் நிலம் இந்திய ராணுவத்தினரால் வாங்கப்பட்டது. சீனாவின் எல்லை மீறலை முறியடிக்க இந்த நிலத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த நிலத்திற்கு என்ன விலையோ, அந்த தொகையை நில உரிமையாளர்களிடம் அரசு கொடுத்துள்ளது. இதற்காகப் பெரிய விழா நடத்தி, அருணாச்சலப்பிரதேச முதல்வர் பேமா கான்து அனைவருக்கும் நிலத்திற்கான பணத்தை கொடுத்தார்.

அக்கிராமத்தில் உள்ள 31 குடும்பங்களுக்கு சுமார் 40.8 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் ஒரு குடும்பம் அதிகமாக 6.73 கோடி பெற்றுள்ளது, மற்றொரு குடும்பம் 2.45 கோடி பெற்றுள்ளது. இதர 29 குடும்பங்கள் 1.09 கோடியை பெற்றது. இதன் மூலம், இந்தியாவிலேயே பணக்கார கிராமம் என்ற பெருமையை ‘போம்ஜா’ கிராமம் பெற்றுள்ளது, அந்த கிராமத்தில் மட்டுமே அதிக கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்.

மேலும், முறையான தகவல்கள் கிடைத்தப் பின்னர், அந்தக் கிராமம் ஆசியாவிலேயே பணக்கார கிராமமா என்றும் அறிவிக்கப்படும்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

புறாவுக்காக 2 வயதுச் சிறுவனை அடித்தே கொன்ற சிறுவன்!!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் கூண்டிலிருந்து புறாவை வெளியே விட்டதால், 2 வயது குழந்தையைக் பக்கத்து வீட்டு சிறுவனே கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சோழதேவன்லாளியைச் சேர்ந்தவர்கள் பசவராஜ் வெங்கம்மா தம்பதியினரின் 2 வயது மகன் வெங்கடேஷ். இவர்களுடைய பக்கத்து வீட்டில் டீ வியாபாரம் செய்துவருபவருடைய மகன் ரமேஷ். கடந்த வாரம் ரமேஷ், 300 ரூபாய் கொடுத்து மூன்று புறாக்களை வாங்கி வந்து தனது கூட்டில் அடைத்து வளர்த்து வந்துள்ளான். இந்த நிலையில் வெங்கடேஷ், புறாவை பார்க்க அடிக்கடி வந்தாதகவும், புறாவை தொடக்கூடாது என்று ரமேஷ் கண்டித்தாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே புதனன்று ரமேஷ் இல்லாத போது வெங்கடேஷ் மற்றும் அவனுடைய மூத்த சகோதரரும், கூண்டை திறந்து புறாவை பறக்க விட்டுள்ளனர். வீடு திரும்பிய ரமேஷ், கூண்டில் புறா இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து வெங்கடேசிடம் விசாரிக்க, தவறை ஒப்புக் கொண்டுள்ளான்.

பின்னர் இருவரும் புறாவை தேடி சென்றுள்ளனர். ஒரு இடத்தில் புறாவை கண்டுபிடிக்க, அதை கையில் பிடித்த ரமேஷ் மகிழ்ச்சியடைந்தான். இதைக் கண்டு பொறாமை கொண்ட வெங்கடேஷ் மீண்டும், ரமேஷ் கையை தட்டி விட்டு, புறாவை பறக்க விட்டுள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், வெங்கடேஷின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே வெகு நேரம் ஆகியும் வெங்கடேஷ் வீடு திரும்பாததால், அவனது பெற்றோர்கள் அவனை தேடிச் சென்றுள்ளனர். அங்கு சுய நினைவை இழந்த நிலையில் தரையில் கிடந்த சிறுவனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

வெங்கடேசை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால், அதிர்ச்சியடைந்த வெங்கடேஷின் பெற்றோர்கள், ரமேஷின் தந்தை மீது பொலிசாரிடம் புகார் அளித்தனர்.

விசாரணையில், ரமேஷின் பெற்றோர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பதும், கொலைக்கு காரணம் ரமேஷ் தான் என்பதையும் கண்டுபிடித்தனர்.

புறாவுக்காக 2 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

மீன் குழம்பு வைக்கவில்லை: கணவன்- மனைவி இருவரும் தீக்குளித்து தற்கொலை!!

தமிழகத்தில் மீன் குழம்பு வைக்கவில்லை என்ற தகராறில் மனைவி தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கே.கே.நகர் உஸ்மான் அலி நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ், சொந்தமாக 2 லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா, பிள்ளைகள் ராகுல் மற்றும் உதயா, இவர்களுடன் சுரேஷின் தாயும் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ் மீன் வாங்கி கொடுத்துவிட்டு, மதியம் சமைத்து வைக்கும்படி கூறியுள்ளார். பிள்ளைகள் பள்ளிக்கு சென்றுவிட அவரது தாயும், மனைவியும் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று மதியம் குடிபோதையில் வீடு திரும்பிய சுரேஷ், மீன்குழம்பை ருசிக்க வேண்டும் என்ற ஆசையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதற்கிடையே வாஷிங் மெஷின் பழுதாகிவிட துணிகளை கையால் துவைத்ததால் மீன் குழம்பு வைக்க தாமதமாகியுள்ளது. வீட்டுக்கு வந்ததும் கோபத்தில் சுரேஷ் சண்டையிட, சத்யாவின் கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சத்யா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் பற்றவைத்துள்ளார். உடனே சுரேஷ் தானும் தீக்குளிக்க போவதாக வம்பு பண்ணியுள்ளார், கடும் ஆத்திரத்தில் இருந்த சத்யா, வீட்டின் கழிவறைக்கு சென்று உடலில் தீ வைத்துக் கொண்டார். தீ முழுவதும் பற்றிய நிலையில் சத்யா வெளியே ஓடி வர, சுரேஷ் காப்பாற்றுவதற்காக சத்யாவை தூக்கியுள்ளார்.

இதில் சுரேஷின் உடலிலும் தீப்பிடித்தது, இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு சுரேஷ் தாய் கதற அக்கம்பக்கத்தினர் உதவியுள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

ஒரு வயதுக் குழந்தையை கழுத்தறுத்து கொன்ற கொடூரத் தாய் : தந்தை கதறல்!!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர், அழுதுகொண்டிருந்த தனது குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள கிராமம் குக்‌ஷி, இங்கு வசிக்கும் அனிதா என்னும் பெண்ணிற்கு, ஒரு வயதில் பெண் குழந்தை இருந்துள்ளது. குழந்தை அடிக்கடி பால் கேட்டு அழுது கொண்டிருந்துள்ளது. இந்நிலையில், நேற்றும் அதே போல பால் கேட்டு அழுதது. குழந்தையின் தொடர் அழுகையால் கோபமடைந்த அனிதா, குழந்தையை சமாதானப்படுத்தியுள்ளார்.

எனினும் குழந்தை தன் அழுகையை நிறுத்தாததால், கோபத்தின் உச்சிக்கு சென்ற அனிதா கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். அதன் பின்னர், சத்தமில்லாமல் வீட்டைப் பூட்டிவிட்டு, தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். குழந்தையை விட்டுவிட்டு அனிதா தனியாக வெளியே சென்றதை பார்த்த அக்கம் பக்கத்தினர், வீட்டை எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், உள்ளூர்காரர்களின் உதவியுடன் அனிதாவை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா: தற்கொலை செய்து கொண்ட மாணவனின் கடிதம்!!

தமிழகத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட பத்தாம் வகுப்பு மாணவன் தன் பெற்றோருக்கு எழுதிய அந்த இறுதி வரிகள் அனைவரின் நெஞ்சையும் உருக்கும்படியாக அமைந்துள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் வசித்து வரும் ராமதாஸ்- திலகவதி தம்பதியரின் 15 வயது மகன் ரஞ்சித் குமார். திருச்சி சத்திரம் அருகே உள்ள இ.ஆர் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த ரஞ்சித், நேற்று மாலை திடீரென தன் வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரஞ்சித்தின் பெற்றோர் சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் விசாரணை நடத்தினர்.

அம்மா, நான்தான் உங்க ரஞ்சித் என தொடங்கும் அந்த கடித்ததில், எங்க பள்ளிக்கூடத்தில் என்னை பசங்க எல்லாரும் ஒரு பொண்ணாத்தான் பார்க்கிறாங்க. அதனால்தான் நான் இந்த ஒரு முடிவை எடுத்துட்டேன். அதனால் என்னை மன்னிச்சிடுங்க. என்னோட ஆசை நீங்க இந்த வீட்டை விட்டு போக வேண்டாம். எனது மரணத்துக்கு பிரகாஷ், ஹரிசங்கர், தனுஷ் ஆகியோர்தான் காரணம். எனக்கு நடந்ததுபோன்று வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. என்னை மன்னிச்சுருங்க, இப்படிக்கு உங்கள் அன்பு மகன் ரஞ்சித்” என எழுதப்பட்டுள்ளது.

மாணவனின் அந்த இறுதி வார்த்தைகள் அனைவரின் நெஞ்சையும் உருக்கியுள்ள நிலையில் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

உயிருக்குப் போராடிய தன்யஸ்ரீ இப்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா?

சென்னையில் குடிபோதையால் மாடியில் இருந்து விழுந்த நபரால் படுகாயமடைந்த சிறுமி தன்யஸ்ரீ தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார்.

சென்னை தண்டையார்பேட்டையில் தன்யஸ்ரீ என்னும் 4 வயது சிறுமி ஒருவர், தனது தாத்தாவுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அருகில் இருந்த வீட்டின் 2வது மாடியில் குடிபோதையில் நபர் ஒருவர், சிறுமியின் மீது விழுந்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த தன்யஸ்ரீ, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தன்யஸ்ரீக்கு மூளையில் வீக்கமும், தண்டுவடம் மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல், சிறுமியின் பெற்றோர் தவித்த நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் குவிந்தன.

இந்நிலையில் சிறுமி தன்யஸ்ரீயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறுமி தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் அவளின் தந்தை ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ‘சிகிச்சைக்கு உதவிய அரசு, ஊடகங்கள் மற்றும் நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றி, இதைத் தவிர என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. தன்யஸ்ரீ விரைவில் குணமடைய உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் தேவை’ என தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

வவுனியாவில் கபே அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு விசேட கூட்டம்!!

 
கபே அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு விசேட கூட்டம் இன்று (09.02.2018) காலை 10 மணிக்கு வவுனியா வை.எம்.சி.ஏ மண்டபத்தில் வவுனியா மாவட்ட இணைப்பாளர் இராஜ்மோகன் மனோராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் கபே அமைப்பின் ஆலோசகர் மோகனராஜா இராஜ்மோகன் , கபே அமைப்பின் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தல்கள் சம்பந்தமாகவும் எவ்வாறு முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

தேர்தல் தொடர்பாக முறைப்பாடுகளை 0773962899 என்ற இலக்கத்திற்கு பொதுமக்கள் அழைப்பினை மேற்கொண்டு தெரிவிக்க முடியுமென வவுனியா மாவட்ட இணைப்பாளர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..