| கட்சி |
பெற்ற வாக்குகள் |
ஆசனங்கள்
வட்டார அடிப்படையில் மொத்தம் |
|
| இலங்கை தமிழரசு கட்சி(ITAK) | 11296 | 11 | 11 |
| ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி(SLFP) | 7166 | 02 | 05 |
| ஐக்கிய தேசிய கட்சி(UNP) | 5836 | 02 | 04 |
| தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி(TULF) | 5335 | 01 | 04 |
| சுயேட்சைக் குழு | 2914 | – | 02 |
| ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி(EPDP) | 2625 | – | 02 |
| அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்(AITC) | 2116 | – | 01 |
| ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) | 1182 | – | 01 |
| மக்கள் விடுதலை முன்னணி(JVP) | 245 | – | – |
| இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்(SLMC) | 189 | – | – |
| மொத்த ஆசனங்கள் | 16 | 30 | |
| பதிவு செய்யப்பட்ட வாக்குகள் | 55005 | ||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 39969 | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 1005 | ||
| செல்லுபடியான வாக்குகள் | 38964 | = | |
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை இறுதி முடிவுகள்!!
வவுனியா நகரசபை : உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்!!
| கட்சி |
பெற்ற வாக்குகள் |
ஆசனங்கள்
வட்டார அடிப்படையில் மொத்தம் |
|
| இலங்கை தமிழரசு கட்சி(ITAK) | 5259 | 07 | 08 |
| ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி(SLFP) | 2103 | 02 | 03 |
| தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி(TULF) | 1887 | – | 03 |
| ஐக்கிய தேசிய கட்சி(UNP) | 1869 | 02 | 04 |
| அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்(AITC) | 844 | – | 01 |
| ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி(EPDP) | 627 | – | 01 |
| ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) | 445 | 01 | 01 |
| மொத்த ஆசனங்கள் | 12 | 21 | |
| பதிவு செய்யப்பட்ட வாக்குகள் | 20300 | ||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 13670 | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 208 | ||
| செல்லுபடியான வாக்குகள் | 13462 | = | |
யாழில் தமிழ் காங்கிரஸ் வேட்பாளருக்கு அடித்த அதிஷ்டம்!!
இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் குலுக்கல் முறையின் மூலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வலிகாமம் தெற்கு பிரதேசசபைத் தேர்தலில், குப்பிளான் வட்டாரத்தில் சீட்டுக் குலுக்கலின் மூலம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன, தலா 314 வாக்குகளைப் பெற்றிருந்தன. இதனால், தேர்தல் விதிமுறைகளின் படி, வாக்கு எண்ணும் அதிகாரிகள், சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவை அறிவித்தனர்.
சீட்டுக் குலுக்கலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை : இறுதி முடிவுகள்!!
| கட்சி |
பெற்ற வாக்குகள் |
ஆசனங்கள்
வட்டார அடிப்படையில் மொத்தம் |
|
| ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) | 3916 | 08 | 08 |
| ஐக்கிய தேசிய கட்சி(UNP) | 2178 | – | 04 |
| ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி(SLFP) | 1223 | – | 02 |
| மக்கள் விடுதலை முன்னணி(JVP) | 923 | – | 01 |
| சுயேட்சைக் குழு 1 | 461 | 01 | 01 |
| சுயேட்சைக் குழு 2 | 368 | – | 01 |
| சுயேட்சைக் குழு 3 | 109 | – | – |
| மொத்த ஆசனங்கள் | 09 | 17 | |
| பதிவு செய்யப்பட்ட வாக்குகள் | 10448 | ||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 9297 | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 119 | ||
| செல்லுபடியான வாக்குகள் | 9178 | ||

வவுனியா வடக்கு பிரதேச சபை : இறுதி முடிவுகள்!!
| கட்சி |
பெற்ற வாக்குகள் |
ஆசனங்கள்
வட்டார அடிப்படையில் மொத்தம் |
|
| இலங்கை தமிழரசு கட்சி(ITAK) | 2794 | 08 | 08 |
| ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) | 1870 | 05 | 05 |
| ஐக்கிய தேசிய கட்சி(UNP) | 1370 | – | 03 |
| அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்(AITC) | 1254 | 01 | 03 |
| தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி(TULF) | 1124 | – | 03 |
| ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி(SLFP) | 973 | – | 02 |
| மக்கள் விடுதலை முன்னணி(JVP) | 303 | – | 01 |
| ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி(UNFF) | 246 | – | 01 |
| இலங்கை சோஷலிசக் கட்சி(CPSL) | 51 | – | – |
| மொத்த ஆசனங்கள் | 14 | 26 | |
| பதிவு செய்யப்பட்ட வாக்குகள் | 12166 | ||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 10151 | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 166 | ||
| செல்லுபடியான வாக்குகள் | 9985 | ||
வவுனியா வெண்கல செட்டிக்குளம் பிரதேசசபை : உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்!!
| கட்சி |
பெற்ற வாக்குகள் |
ஆசனங்கள்
வட்டார அடிப்படையில் மொத்தம் |
|
| இலங்கை தமிழரசு கட்சி(ITAK) | 2671 | 05 | 05 |
| ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி(SLFP) | 2823 | 03 | 04 |
| ஐக்கிய தேசிய கட்சி(UNP) | 2802 | 02 | 04 |
| தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி(TULF) | 2091 | 01 | 03 |
| ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(SLMC) | 1002 | – | 01 |
| அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்(AITC) | 602 | – | 01 |
| ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) | 453 | – | 01 |
| மொத்த ஆசனங்கள் | 11 | 19 | |
| பதிவு செய்யப்பட்ட வாக்குகள் | 16680 | ||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 12897 | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 211 | ||
| செல்லுபடியான வாக்குகள் | 12686 | ||
உத்தியோகபூர்வ தேர்தல் முடிவை வெளியிடுவதில் தாமதம் : பொறுமையுடன் இருக்குமாறு வேண்டுகோள்!!
இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய சற்றுமுன்வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு
உள்ளுராட்சிமன்ற தேர்தல் வாக்களிப்பு – 2018 உத்தியோகபூர்வ தேர்தல் முடிவை வெளியிடுவதில் தாமதம்
அந்தந்த மத்திய நிலையங்கள் மற்றும் வட்டார வாக்குகளை எண்ணும் பணி நிறைவடைந்து பெறுபேறுகளை தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் தொலைநகல் மற்றும் தொலை பேசியினூடாக கிடைக்கப்பெற்றிருந்போதிலும் கையால் எடுத்துச்செல்லப்படும் பெறுபேறுகளை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டிய நிலை தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒரு வட்டாரத்தின் பெறுபேறை அறிவிக்கும் போது தபால் மூல வாக்களிப்பு பெறுபேறை ஒன்றிணைத்து அறிவித்துள்ள போதிலும் சில இடங்களில் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தொலைநகல் மூலம் அவை அனுப்பப்பட்ட பெறுபேறுகளின் அறிக்கை இரண்டில் ஒன்று மாத்திரம் என்பதினால் மொத்த பெறுபேறுகளை தயாரிக்கும் பொழுது மீண்டும் மீண்டும் பரிசோதிக்க வேண்டிய நிலை தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருப்பதினால் அந்தந்த உள்ளுராட்சி மன்றங்களின் பெறுபேறுகளை அறிவிப்பதற்கு மேலும் குறிப்பிடத்தக்க நேரம் செல்லும் என்பதை தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்தும் வட்டார பெறுபேறுகளை தெரிவத்தாட்சி அதிகாரியினால் தரவுக்கட்டமைப்பிற்குள் சேர்க்கும் வரையில் அந்த உள்ளுராட்சி மன்றத்தின் மொத்த பெறுபேறையும் ஊடகத்திற்கு அறிவிப்பதற்குரிய சூழ்நிலை இல்லை என்பதை தயவுடன் கவனத்தில் கொள்ளவும்.
பெறுபேறுகள் வெளியிடும் வரையில் பொறுமையாக இருக்குமாறு மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் .
மகிந்த தேசப்பிரிய
தலைவர்
தேர்தல்கள் ஆணைக்குழு
வவுனியாவில் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளிவர தாமதமாவதற்கான காரணம் வெளியானது!!
வவுனியா மாவட்ட செயலகத்தில் வாக்குகள் மீள எண்ணப்படுவதனால், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு காலம் தாழ்த்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சில பிரதேச சபைகள் மற்றும் நகரசபைகளின் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டுமென சில கட்சிகள் கோரியதனால், முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலக தேர்தல் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிவுகளை இன்றைய தினம் இரவு 9 மணியளவில் வெளியிட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய முன்னதாக அறிவித்திருந்தார்.
எனினும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றது. இந்த கால தாமதம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை.
இதேவேளை, அதிகாரபூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதலாவது உத்தியோகபூர்வமான முடிவுகள் வெளியானது : தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி!!
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, முல்லைத்தீவு மாவட்டம் – மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசு கட்சி 1836
ஐக்கியதேசியக்கட்சி 1505
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 523
ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி 192
தமிழர் விடுதலை கூட்டணி முன்னணி 122
ஸ்ரீலங்காக பொதுஜன பெரமுன 46
மக்கள் விடுதலை முன்னணி 34
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 29
செல்லுபடியான வாக்குகள் 4287
நிராகரிக்கப்பட்டவை 49
அளிக்கப்பட்ட வாக்குகள் 4336
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 5184
வவுனியா வடக்கு பிரதேச சபை : 8 வட்டாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி!!
வவுனியா வடக்கு பிரதேச சபை 8 வட்டாரங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேவேளை, நான்கு சிங்கள வட்டாரத்திலும் மகிந்த ராஜபக்சவின் கட்சியான பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளதுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தினை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற்றவர்களின் முழு விபரம் இதோ..
வவுனியா வடக்கு பிரதேசசபை மாமடு (ஒலுமடு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெயசுதாகர் வெற்றி.
வவுனியா வடக்கு பிரதேச சபை சம்பத்நுவர வட்டாரம் பொதுஜனபெரமுன (தாமரை மொட்டு மகிந்த கட்சி) வெற்றி.
வவுனியா வடக்கு பிரதேசசபை எத்தாவெட்டுணுவெல வட்டாரம் பொதுஜனபெரமுன (தாமரை மொட்டு மகிந்த கட்சி) வெற்றி.
வவுனியா வடக்கு பிரதேசசபை கல்யாணபுர பொதுஜனபெரமுன (தாமரை மொட்டு மகிந்த கட்சி) வெற்றி.
வவுனியா வடக்கு பிரதேசசபை கஜபாபுர பொதுஜனபெரமுன (தாமரை மொட்டு மகிந்த கட்சி) வெற்றி.
வவுனியா வடக்கு பிரதேசசபை மாமடு (ஒலுமடு) தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜெயசுதாகர் வெற்றி.
வவுனியா வடக்கு பிரதேசசபை பட்டிக்குடியிருப்பு வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செந்தூரன் வெற்றி.
வவுனியா வடக்கு பிரதேசசபை பரந்தன் வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேவராசா வெற்றி.
வவுனியா வடக்கு பிரதேசசபை நெடுங்கேணி வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சத்தியேந்திரன் வெற்றி.
வவுனியா வடக்கு பிரதேசசபை குளவிசுட்டான் வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சி. அருட்செல்வம் வெற்றி.
வவுனியா வடக்கு பிரதேசசபை சின்னடம்பன் வட்டாரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள்) சஞ்சுதன் வெற்றி.
வவுனியா வடக்கு பிரதேசசபை புளியங்குளம் வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யோகராசா வெற்றி.
வவுனியா வடக்கு பிரதேசசபை கனகராயன்குளம் தெற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ந.விநாயகமூர்த்தி வெற்றி.
வவுனியா வடக்கு பிரதேசசபை கனகராயன்குளம் வடக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ச.தணிகாசலம் வெற்றி.
வவுனியா நகரசபை இறுதி முடிவுகளில் கூட்டமைப்பு முன்னிலை!!
இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வவுனியா நகரசபையில் வட்டார ரீதியான முடிவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 07 ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது.
20 அங்கத்தவர்களைக் கொண்ட வவுனியா நகரசபையில் 10 வட்டாரங்களில் இருந்து 12 பேர் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி வட்டார ரீதியில் தாண்டிக்குளம், வவுனியா நகரம், கோவில்புதுக்குளம், பண்டாரிக்குளம், வைரவபுளியங்குளம், குடியிருப்பு, இறம்பைக்குளம் ஆகிய பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை மூன்றுமுறிப்பு மற்றும் பட்டானிச்சூர் ஆகிய இரட்டை அங்கத்துவ வட்டாரங்கள் இரண்டிலும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று 04 ஆசனங்களையும், வெளிக்குளம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் 08 பேர் விகிதாசார ரீதியிலும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத் தகவல்கள் தேர்தல்கள் திணைக்களத்தினால் உறுதி செய்யப்படாதவையாகும். தேர்தல் திணைக்களத்தால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வமான முடிவுகள் சற்று நேரத்தில் வெளியிடப்படும்.
தொடர்ந்து வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.
சமூக ஊடகங்களில் தவறான தேர்தல் முடிவுகள் : தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய கோரிக்கை!!
நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் இரவு 9 மணியளவில் இருந்து வெளியிடப்படும் சாத்தியங்கள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சமூக வலைப்பதிவுகள், மற்றும் சமூக ஊடகங்களில் தவறான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றதாகவும், அவ்வாறன தவறான முடிவுகளை வெளியிட்டு மக்களை குழப்பும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை வெளியிடவேண்டும் எனவும் ஆணைக்குழு தெரிவித்தது.
வவுனியாவில் 72 வீத வாக்குப்பதிவு : இன்னும் சில மணிநேரங்களில் முடிவுகள்!!
நடைபெற்றுவரும் உள்ளூராட்சி சபைகளுக்கான இறுதி முடிவுகள் இரவு எட்டு அல்லது ஒன்பது மணியளவில் அறிவிக்கப்படும் என வவுனியா அரசாங்க உதவி அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார். தேர்தலின் கள நிலவரங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அனைத்து வாக்குசாவடியிலும் சுமூகமான முறையில் வாக்கு பதிவுகள் இடம்பெற்றன. இதுவரையான நிலவரப்படி 70-72 சதவீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுவரை எதுவித பாரிய முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கவில்லை.
56 வாக்கு நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறுதிமுடிகளை இரவு எட்டு அல்லது ஒன்பது மணியளவில் அறிவிக்க எதிர்பார்த்துள்ளோம்.
10 மணித்தொடக்கம் வட்டார ரீதியிலான முடிவுகளின் அடிப்படையில் விகிதாசார ஆசனங்களின் எண்ணிக்கை முடிவுசெய்யப்பட்டது இறுதி ஆசனப் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
முழுமையான தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.
வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..
முதலாவது தடவையாக வாக்களிக்கச் சென்ற 19 வயது இளைஞர் உயிரிழந்த சோகம்!!
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கிதுல்கல, பிபிலிஓய பிரதேசத்தில் பஸ்ஸின் மிதிபலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் கீழே விழுந்ததால் அதே பஸ்ஸில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முதலாவது தடவையாக தனது வாக்குப் பதிவை மேற்கொள்ளும் நோக்கில் சென்ற 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாமிமலை பிரதேசத்தைச் சேர்ந்த லக்ஷித தேனுக பெரேரா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதுடன், சடலம் தற்போது அவிஸ்ஸாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..
வவுனியாவில் ஒன்பது மணியளவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் : அரசாங்க அதிபர்!!
நடைபெற்றுவரும் உள்ளூராட்சி சபைகளுக்கான இறுதி முடிவுகள் இரவு எட்டு அல்லது ஒன்பது மணியளவில் அறிவிக்கப்படும் என வவுனியா அரசாங்க அதிபர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலின் கள நிலவரங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அனைத்து வாக்குசாவடியிலும் சுமூகமான முறையில் வாக்கு பதிவுகள் இடம்பெற்றன. இதுவரையான நிலவரப்படி 50 சதவீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுவரை எதுவித பாரிய முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கவில்லை.
தேர்தல் வாக்கு பதிவுகள் நான்கு மணிக்கு நிறைவடையும் போது 60 அல்லது 75 சதவீதமான வாக்குகள் பதியப்படும் என எதிர்பார்க்கின்றோம். 56 வாக்கு நிலையங்களில் இருந்து இறுதிமுடிகளை இரவு எட்டு அல்லது ஒன்பது மணியளவில் அறிவிக்க எதிர்பார்த்துள்ளோம்” என கூறினார்.
வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..
வாக்களிப்பில் மக்களை வியப்பில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரி!!
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது வாக்கினை வழங்கியுள்ளனர்.
ஜனாதிபதி சிறிசேன தனது கட்சி சார்பாக வாக்குகளை பதிவு செய்துள்ளார். பொலன்னறுவை ஸ்ரீ வித்தியாலோக்க விகாரையில் ஜனாதிபதி தனது வாக்கினை வழங்கினார்.
இன்று காலை 10 மணிக்கு வாக்களார்களுடன் வரிசையில் நின்று தனது வாக்குகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி தனது மகன் தஹாம் சிறிசேனவடன் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதி மைத்திரி சாதாரண குடிமகன் போன்று வரிசையில் நின்று வாக்களித்தமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை வழங்கியுள்ளார். கொழும்பு பல்லைக்கழகத்தில் உள்ள கல்லூரி மண்டபத்தில் பிரதமர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
வாக்களித்த பின்னர் பிரதமர் இம்முறை தேர்தல் தொடர்பில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியினால் புதிய தேர்தல் முறை ஆரம்பித்த பின்னர் இம்முறை தேர்தல் அமைதியாக இடம்பெறுவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..

























