என்னை மாமிசத்துண்டு போல விற்கத் திட்டம் : அமலாபால் அதிர்ச்சி!!

நடிகை அமலா பால் தன்னை மாமிசத் துண்டு போல மலேசியாவில் வியாபாரம் செய்ய திட்டமிட்டிருந்தனர் என டுவிட்டரில் அதிர்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் மலேசியாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிக்காக நடன ஒத்திகையில் நடிகை அமலா பால் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை தொடர்பு கொண்ட அழகேசன் என்ற தொழிலதிபர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தாராம்.

மேலும் மலேசியாவில் உள்ள தொழிலதிபர் வீட்டில் நடக்கும் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து தொந்தரவு செய்ததால் அமலா பால் பொலிசில் புகார் கொடுத்தார். இதனால் பொலிஸார் அழகேசனை கைது செய்தனர்.

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது தைரியமாக பொலிஸில் புகார் கொடுத்த அமலா பாலை டுவிட்டரில் பாராட்டி இருந்தார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமலா பால் டுவிட்டரில், என் பின்னால் நின்றதற்கும் ஆதரவு தெரிவித்ததற்கும் நன்றி. பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர்வது ஒவ்வொரு பெண்ணுக்குமான கடமை. அந்த நபர் என்னை மாமிசத் துண்டு போன்று வியாபாரம் செய்ய பார்த்தார். அவரின் இந்த செயல் எனக்கு எரிச்சலை தந்தது என்று பதிவிட்டுள்ளார்.

பிரபல ஹொலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட பல நடிகைகள் ட்விட்டரில் “மீ டூ” (Me Too) என்ற ‘ஹேஷ்டேக்’ மூலம் அம்பலபடுத்தினர். பிரபலமான இதே ஹேஷ்டேக்கை அமலாபாலும் தற்போது பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மனைவியை கொன்ற கணவன் : சடலத்தை எரித்த நண்பர் : அதிர்ச்சிக் காரணம்!!

இந்தியாவில் மனைவியை கொலை செய்து நண்பருடன் சேர்ந்து சடலத்தை எரித்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவமானது கடந்த மாதம் 6ம் திகதி நடந்த நிலையில் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த சந்திரகாந்த் (40) என்பவர் மதுபான பார் மற்றும் உணவகம் நடத்தி வருகிறார். இவரின் மனைவி அக்‌ஷதா (30) மென்பொருள் துறையில் பணிபுரிந்து வந்தார். தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் ஜனவரி மாதம் 22ம் திகதி சந்திரகாந்தை சந்திக்க வந்த அக்‌ஷிதாவின் தாய் ரேகா தனது மகள் சில வாரங்களாக தனக்கு போன் செய்யவில்லை எனவும், அவர் எங்குள்ளார் எனவும் கேட்டுள்ளார்.

அதற்கு தன்னிடம் 50,000 பணம் வாங்கி கொண்டு அக்‌ஷிதா டெல்லி சென்றதாவும், பின்னர் தான் போன் செய்தால் அவர் எடுப்பதில்லை எனவும் கூறினார்.

பின்னர் அக்சிதாவை தேடியும் அவர் கிடைக்காததால் சந்திரகாந்த் மீது சந்தேகமடைந்த ரேகா இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து பொலிசார் சந்திரகாந்திடம் நடத்திய விசாரணையில் அவர் தான் அக்‌ஷிதாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

அக்‌ஷிதா தன்னை ஏமாற்றுவதாக வெகுநாட்களாகவே சந்திரகாந்துக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதையடுத்து கடந்த 6ம் திகதி கணவன், மனைவிக்குள் இது சம்மந்தமாக சண்டை ஏற்பட்ட நிலையில் கழுத்தை நெரித்து அக்சிதாவை சந்திகரகாந்த் கொலை செய்துள்ளார்.

பின்னர் தனது நண்பர் ராஜேந்திர சிங்கை அங்கு வரவழைத்த சந்திரகாந்த் மனைவி சடலத்தை அப்புறப்படுத்த கூறியுள்ளார். இதையடுத்து காரில் அக்சிதாவின் சடலத்தை வைத்த ராஜேந்திர சிங் தமிழ்நாடு எல்லையான ஓசூருக்கு வந்துள்ளார்.

பின்னர் அங்குள்ள காட்டில் வைத்து அக்‌ஷிதாவின் சடலத்தை ராஜேந்திர சிங் எரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் விபரீதம் : வாடிவாசலில் முட்டி உயிரிழந்த கொம்பன்!!

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது வாடிவாசலில் முட்டி காளை பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் தென்னூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளையான கொம்பனும் கலந்து கொண்டது.

யாருக்கும் அடங்காத காளையான கொம்பன், களத்தில் இறங்கியவுடன் அதை பிடிக்க வீரர்கள் தயார் நிலையில் இருந்தபோது எதிர்பாராத விதமாக வாடிவாசல் கல்தூணில் முட்டி கீழே விழுந்தது. மயக்கமடைந்த காளையை பரிசோதித்த மருத்துவர்கள் காளை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

கலந்துகொண்ட எந்த போட்டியிலும் யாருக்கும் அடங்காத காளையாக வலம் வந்துகொண்டிருந்த கொம்பனின் மரணம் ஜல்லிகட்டு ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இறந்த காளையை அமைச்சரின் தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ளது.

மரணத்திலும் இணைபிரியாத தம்பதி : மனைவி இறந்த சோகத்தில் கணவர் மரணம்!!

சேலத்தில் தனது மனைவியின் இறப்பினால் ஏற்பட்ட துக்கம் தாங்க முடியாமல் கணவரும் உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி(75), ஓய்வு பெற்ற பாடசாலை ஆசிரியரான இவருக்கு அம்சா(70) எனும் மனைவி இருந்துள்ளார்.

இவர்களின் ஒரே மகளுக்கு திருமணமான நிலையில், இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளனர். மேலும் அதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் அம்சா உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். இதனால் சுப்ரமணி மிகவும் சோகமாக காணப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை 4 மணியளவில் சுப்ரமணியும் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர், இந்த தம்பதிக்கு உறவினர்கள், ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்பு, இருவரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

மகனை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் மறைத்து வைத்த தாய் : சிக்கியது எப்படி?

 
இந்தியாவில் மகனை சொத்துக்காக கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து வைத்த மாற்றாந்தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சாந்திலால், இவர் மனைவி ஜினல். சாந்திலால் மற்றும் ஜினல் ஆகிய இருவருக்குமே ஏற்கனவே முதல் திருமணமாகி விவாகரத்து கிடைத்த நிலையில் ஒருவரையொருவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர்.

முதல் திருமணத்தின் மூலம் சாந்திலாலுக்கு மகனும், ஜினலுக்கு மகளும் உள்ளனர். சாந்திலாலின் சொத்துக்கள் அனைத்தும் அவர் மகன் பெயரில் இருந்துள்ளது. இது ஜினலுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் பின்னாளில் தனது மகளுக்கு எந்த சொத்தும் கிடைக்காது என நினைத்து அவர் பயந்துள்ளார்.

இதையடுத்து மாற்றாந்தாயான ஜினல் தனது மகனை கொல்ல முடிவெடுத்து அவன் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை ஒரு சூட்கேசில் அடைத்து வைத்து வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.

இதையடுத்து நாடகமாடி தப்பிக்க எச்சரிக்கை அலாரத்தை அழுத்திவிட்டு இரண்டு மணி நேரமாக மகனை காணவில்லை என கூறியுள்ளார். பின்னர் அருகிலிருந்தவர்களும், சாந்திலாலும் சிறுவனை தேடியும் அவன் கிடைக்காததால் இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்த பொலிசார் வீடு முழுவதும் தேடிய நிலையில் சிறுவன் சடலம் வைக்கப்பட்ட சூட்கேஸ் அவர்கள் கையில் கிடைத்தது.

பின்னர் ஜினலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றத்தை அவர் ஒப்பு கொண்டார் இதையடுத்து அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாட்டின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊவா மாகாணம் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின் இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு வரையான கடற்கரையோர பிரதேசங்களிலும் ஓரளவு மழைபெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க வந்த இருவர் கைது!!

மலேசியாவில் இருந்து வருகைத் தந்த இந்திய நாட்டு பிரஜைகள் இருவர் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது சந்தேக நபர்களின் பயணப்பொதியில் இருந்து சுமார் 514 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த போதைப் பொருட்கள் ‘ஐஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருள் வகையை சேர்ந்தது என்றும், இதன் சந்தைப் பெறுமதி சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட நபர் திடீரென உயிரிழப்பு!!

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற தினத்தில் மாரடைப்பு காரணமாக வேட்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 10ம் திகதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஜே.வி.பி.யின் வேட்பாளர் ஒருவர் உயிரிழந்தார்.

மாவத்தஹேன தெபஹெர பிதேசத்தைச் சேர்ந்த எச்.பீ. பிரேமரட்ன என்ற 60 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக வத்துபிட்டிவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மீரிகம பிரதேச சபையின் ஜே.வி.பி வேட்பாளராக குறித்த நபர் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கில் தொங்கு சபைகள் : சிறுகட்சிகள், சுயேட்சைகளுக்கு கொண்டாட்டம்!!

புதிய தேர்தல் முறையினால் வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பகுதிகளில் உள்ள மூன்று உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சபைகளிலும், பிற கட்சிகளின் அல்லது சுயேட்சைக் குழுக்களின் ஆதரவுடனேயே ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 35 உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

எனினும் 40 உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பதாக நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

திருகோணமலையில்- 02, யாழ்ப்பாணத்தில்- 13, கிளிநொச்சியில் – 03, மன்னாரில் – 02, வவுனியாவில்- 03, முல்லைத்தீவில் -04, மட்டக்களப்பில் -05, அம்பாறையில் -03 என மொத்தம் 35 சபைகளை கூட்டமைப்பு இதுவரை வெற்றி கொண்டுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் இரண்டு உள்ளூராட்சி சபைகளில் ஈபிடிபியும், இரண்டு சபைகளில் தமிழ் காங்கிரசும் அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளன.

எனினும், பூநகரி மற்றும் வெருகல் பிரதேச சபைகளில் மாத்திரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஊர்காவற்றுறையில் ஈபிடிபியும் தனித்து ஆட்சியமைக்கக் கூடிய பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 11 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ள போதிலும், பெரும்பான்மை இன்றி சமபலநிலையே காணப்படுகிறது.

வட்டார ரீதியாக அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய போதிலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், போதிய விகிதாசார ஒதுக்கீட்டு ஆசனங்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாநகர சபைகள், மன்னார், வவுனியா, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, சாவகச்சேரி, திருகோணமலை உள்ளிட்ட நகரசபைகள் மற்றும் ஏனைய பிரதேச சபைகளில், எந்தக் கட்சியும் தனித்து ஆட்சிமைக்கக் கூடிய அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 33 சபைகளிலும், தமிழ் காங்கிரஸ் 2 சபைகளிலும், ஈபிடிபி 1 சபையிலும், ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளன.

பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு உள்ளக பேச்சுக்கள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

புதிய தேர்தல் முறை சிறிய கட்சிகள், சுயேட்சைக் குழுக்களுக்கு சாதகமானதாக இருந்தமையினால், ஆசனங்களைப் பெற்ற அத்தகைய தரப்புகளின் ஆதரவை பிரதான கட்சிகள் நாடத் தொடங்கியுள்ளன.

விரைவில் திருமணம் செய்துகொள்வேன் : அனுஷ்கா!!

நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிரபாசுடன் காதல் என அனுஷ்கா பற்றிய கிசு கிசு இன்னும் முடியவில்லை. ஆனாலும், பிரபாசுடன் தனக்கு காதல் இல்லை என அனுஷ்கா தொடர்ந்தும் கூறி வருகிறார்.

இந்நிலையில் பாகமதி படத்தின் வெற்றி விழா நிகழ்வில் கலந்துகொண்ட அனுஷ்கா, தனது திருமணம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.

எனது திருமணத்தை நான் தள்ளிப்போடவில்லை. எனக்கு குழந்தைகள் பிடிக்கும். எனவே விரைவில் திருமணம் செய்துகொள்வேன். அதற்காக உடனடியாக திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதாக அர்த்தம் இல்லை. திருமணம் பற்றி முடிவு எடுத்ததும் அதைப் பற்றி முறையாக அறிவிப்பேன்
என கூறியுள்ளார்.

நல்­லாட்சி அர­சாங்கம் 2020 வரை தொடரும்!!

2020 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தும் நல்­லாட்சி அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து செல்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

உள்­ளூ­ராட்சிமன்றத் தேர்தல் முடி­வு­களை அடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுடன் நேற்று அல­ரி­மா­ளி­கையில் ஆலோ­சனை நடத்­தினார். இந்த சந்­திப்­பின்­போதே பிர­தமர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

தேர்தல் முடி­வுகள் தேசிய அர­சாங்­கத்­திற்கு வழங்­கி­யுள்ள செய்­தியை அவ­தா­னத்தில் எடுத்­துக்­கொண்டு எதிர்­வரும் நாட்­களில் சில­பல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பான முடி­வு­களை எடுக்­கலாம். ஆனாலும் நல்­லாட்சி அர­சாங்­கத்தை 2020 ஆம் ஆண்டு பத­விக்­காலம் பூர்த்தி ஆகும்வரை முன்கொண்டு செல்வோம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாந­க­ர முதல் பெண் மேய­ராக பத­வி­யேற்­கிறார் ரோஸி சேன­நா­யக்க!!

கொழும்பு மாந­க­ர­ச­பையின் முதல் பெண் மேய­ராக ரோஸி சேன­நா­யக்க பத­வி­யேற்­க­வுள்ளார். கொழும்பு மாந­க­ர­ச­பைக்­கான தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி 1 இலட்­சத்து 31 ஆயி­ரத்து 353 வாக்­கு­களைப் பெற்று 60 ஆச­னங்­களை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது.

110 உறுப்­பி­னர்­களைக் கொண்ட கொழும்பு மாந­க­ர­ச­பையில் 60 உறுப்­பி­னர்­களை ஐக்­கிய தேசி­யக்­கட்சி பெற்­றுள்­ள­மை­யினால் தனித்து ஆட்சி அமைக்­கக்­கூ­டிய நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. ஆனால் ரோஸி சேன­நா­யக்­கவை மேய­ராகக் கொண்ட நிர்­வாகம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்தத் தேர்­தலில் பொது­ஜன பெர­முன 60 ஆயி­ரத்து 87 வாக்­கு­களைப் பெற்று 23 உறுப்­பி­னர்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 31 ஆயி­ரத்து 421 வாக்­கு­களைப் பெற்று 12 உறுப்­பி­னர்­க­ளையும் பெற்­றுள்­ளன. அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான ஒருங்­கி­ணைந்த முற்­போக்கு கூட்­டணி 27 ஆயி­ரத்து 168 வாக்­கு­களைப் பெற்று 10 உறுப்­பி­னர்­களை தன்வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதில் தொகுதி ரீதி­யாக வெள்­ள­வத்தை பாமன்­கடை மேற்கு தொகு­தியில் போட்­டி­யிட்ட பி.பாஸ்­கரா வெற்­றி­பெற்­றுள்ளார். மேயர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட சண் குக­வ­ரதன் சொற்ப வாக்கு வித்­தி­யா­சத்தில் தோல்­வி­ய­டைந்­துள்ளார். இருந்தபோதிலும் விகி­தா­சார பட்­டியல் அடிப்­ப­டையில் 9 ஆசனங்­களைப் பெற்று மொத்­த­மாக 10 உறுப்­பி­னர்­களை முற்போக்­குக்­கூட்­டணி தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது.

மக்கள் விடு­தலை முன்­னணி 14 ஆயி­ரத்து 234 வாக்­கு­களைப் பெற்று 6 ஆச­னங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. நவோ­தய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் எஸ்.கே.கிருஷ்ணா தலை­மையில் போட்­டி­யிட்ட சுயேச்­சைக்­குழு 2 ஆனது 4833 வாக்­குக்­களைப் பெற்று 2 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது. இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸுடன் இணைந்து போட்­டி­யிட்ட ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ் அணி 2853 வாக்­கு­களைப் பெற்று 1 ஆச­னத்­தையும் இலங்கை தேசிய சக்தி 3251 வாக்­கு­களைப் பெற்று 1 ஆச­னத்­தையும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி 2771 வாக்­கு­களைப் பெற்று 1 ஆச­னத்­தையும் ஐக்­கிய தேசிய சுதந்­திர முன்­னணி 1380 வாக்­கு­களைப் பெற்று 1 ஆச­னத்­தையும் கைப்­பற்­றி­யுள்­ளன.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியில் கொட்­டாஞ்­சே­னையில் போட்­டி­யிட்ட மேல்­மா­கா­ண­சபை உறுப்­பினர் ராமின் புதல்­வ­ரான ஜோன் ராம் வெற்­றி­பெற்­றுள்ளார். இதே­போன்று காயத்­திரி விக்­கி­ர­ம­சிங்க வெற்­றி­வாகை சூடி­யுள்ளார். வெள்­ள­வத்­தையில் போட்­டி­யிட்ட திரு­மதி அமிர்­தாம்­பிகை கோபாலன், பிர­ணவன் ஆகி­யோரும் வெற்­றி­பெற்­றுள்­ளனர்.

பாமன்­கடை மேற்குத் தொகு­தியில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் போட்டியிட்ட ஊடகவியலாளர் உமாசந்திர பிரகாஷ், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான நல்லையா குமரகுருபரன் ஆகியோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர். இந்தத் தொகுதியிலேயே ஒருமித்த முற்போக்கு கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்ட பாஸ்கரா வெற்றிபெற்றுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைய தயார் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!!

தமிழினம் நடுத்தெருவில் நிற்க காரணமாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கபட்டால் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில். உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் பக்கமே நிற்கின்றனர். அதனால் தான் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் மோசடிகளையும், நம்பிக்கைத்துரோகத்தையும் எடுத்து கூறினோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான விமர்சனங்கள் அனைத்தும் கொள்கை ரீதியானவையே அந்த விமர்சனங்கள் சில வேளைகளில் கடுமையாக இருந்திருக்கலாம், ஒற்றையாட்சிக்கு இணங்கி பௌத்தத்திற்கு முன்னுரிமைக்காக இணங்கியமையாலையே அவ்வாறு விமர்சனங்கள் அமைந்தன.

தமிழ் தேசிய பேரவை மாற்றத்திற்கு பெரும் அடித்தளமாக அமைந்துள்ளது. நாம் காலம்காலமாக முன் வைக்கும் குற்றசாட்டு இனத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றனர் அதற்கு எதிராகவே பேசினோம். நாம் ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல.

தமிழினம் நடுத்தெருவில் நிற்க தலமைத்துவம் வழங்கியவர்கள் நீக்கப்பட்டு நல்லதொரு தலைமைத்துவம் வகிக்க ஊழல் இல்லாத மோசடி இல்லாத வகையில் உள்ளூராட்சி சபையை நடத்த நல்லதொரு தலைமைத்துவம் அமைந்தால் ஒருமித்து செல்வோம்.

தற்போதைய யதார்த்தம் என்னவெனில் தமிழ் மக்கள் மிக உறுதியாக தேசியத்தின் பக்கம் நிற்கின்றார்கள். கூட்டமைப்பை பொறுத்த வரையில் நம்பிக்கைத்துரோகம் இழைத்து உள்ளது. கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் தேசியத்துடன் ஊழலற்று இயங்க விரும்புவோர் எம்முடன் இணைந்து தமிழ் தேசியத்தை முன்னெடுத்து செல்லாம். அவர்களை இணைக்க நாம் என்றுமே தயாராகவே உள்ளோம்.

தமிழ் தேசியத்தை காப்பாற்ற, பாதிக்கப்பட்ட தாயக நிலப்பரப்பை கட்டியெழுப்ப உள்ளூராட்சி தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்கள் முன் வரவேண்டும்.

இரண்டு வருடத்திற்கு முன்னர் எம்மை மிக கேவலமாக விமர்சித்தவர்கள் வாய் மூடி நிற்கும் வகையில் உழைத்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

வானில் வெடித்துச்சிதறியது விமானம் : 71 பயணிகள் பலி!!

 
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ வான்பரப்பில் பயணிகள் விமானமொன்று வெடித்துச் சிதறியுள்ளது. குறித்த விமானத்தில் பயணித்த 71 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மொஸ்கோ அருகே உள்ள டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏ. என்-148 என்ற சாராடோவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் 71 பேருடன் நடுவானில் நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்னவானது எனத் தெரியவில்லை. அனைவரும் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விமான பாகங்கள் விழுந்த இடம் குறித்தும், உயிருடன் யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றது.

இதில் பயணம் செய்த 71 பேரில் 65 பேர் பயணிகள் என்பதுடன் ஏனைய 6 பேர் விமான ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.

பார்சலில் அனுப்பப்பட்ட புலிக்குட்டி!!

பொதி அஞ்சலில் அனுப்பப்படவிருந்த புலிக்குட்டியொன்றை பொலிஸ் நாய் கண்டுபிடித்தது. மெக்ஸிக்கோவின் ஜலிஸ்க்கோ நகரில் புலிக்குட்டி அடங்கிய பொதி விமானம் மூலம் அனுப்பப்படவிருந்தது.

மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்த அந்தக் குட்டியின் உடல் நலம் சற்றுப் பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அது கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதை அனுப்பியவர்கள் அல்லது பெறவிருந்தவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இதைத் தனது மோப்ப சக்தியால் கண்டுபிடித்த நாய்க்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

வவுனியா மாவட்ட இறுதி முடிவுகள் : நகரசபை மற்றும் அனைத்து பிரதேச சபைகளும் ஒரே பார்வையில்!!

 

சபை முழுமையான விபரம் 
வவுனியா நகரசபை CLICK HERE
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை CLICK HERE
வவுனியா வடக்கு பிரதேச சபை CLICK HERE
வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை CLICK HERE
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை CLICK HERE

 

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..