13 பிள்ளைகளை பட்டினி போட்டு நாய்களுக்கு உணவளித்த பெற்றோர்!!

அமெரிக்காவில் பெற்றெடுத்த 13 பிள்ளைகளைப் பட்டினி போட்டு, சங்கிலியால் கட்டி வைத்துக் கொடுமைப்படுத்திய வழக்கில் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

David(வயது 57), Louise Turpin(வயது 49) ஆகியோர் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தனர், இதற்கிடையில் விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

இரவு முழுவதும் தூங்க அனுமதிக்கப்படாத பிள்ளைகள் பகலில் மட்டுமே தூங்கியதால் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியே உள்ளவர்களுக்குத் தெரியவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பிப்பதற்குமுன் 2 ஆண்டுகள் பிள்ளைகள் திட்டமிட்ட நிலையில், சங்கிலியால் பிணைக்கப்பட்டனர். ஒரு மகன் மட்டும் கல்லூரிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறான், ஆனால் அவனது தந்தை அவனது கல்லூரிக்கு அருகிலேயே நின்று அவனை நோட்டமிட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்.

அவர்களது கடைசிக்குழந்தைக்கு மட்டும் சரியான உணவளிக்கப்பட்டிருக்கிறது. மீட்கப்பட்ட 29 வயது மகள் 37 கிலோ எடை மட்டுமே இருந்திருக்கிறார்.

பிள்ளைகள் மணிக்கட்டுக்கு மேல் கழுவ அனுமதிக்கப்படவில்லை.பொம்மைகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்கப்படவில்லை.

பிள்ளைகளைப் பார்க்க வைத்து பெற்றோர்கள் கேக் போன்றவற்றை சாப்பிட்டிருக்கிறார்கள், பிள்ளைகளுக்குக் கொடுக்கவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டிலிருந்து மீட்கப்பட்ட நாய்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு கொடுக்கப்பட்டுள்ளது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 23ஆம் திகதி மீண்டும் இந்த சித்திரவதைத் தம்பதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.

உயரம் குறைந்து கொண்டே வரும் இளைஞர் : வினோத நோயால் தவிப்பு!!

தமிழ்நாட்டில் வினோத நோய் பாதிப்பு காரணமாக இளைஞர் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளில், இரண்டு அடி உயரம் குறைந்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள காமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். கட்டுமான தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரமேஷ் தமது உடலில் மாற்றத்தை உணர்ந்துள்ளார். சில மாதங்களில் அவரின் உடல் எடை குறைந்ததுடன், உயரமும் குறைந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர்களிடம் அணுகியும் நோயை கண்டறிய முடியவில்லை. இது தொடர்பில் ரமேஷ் கூறுகையில், 21 வயது வரை எனது உடல்நிலை நன்றாக இருந்த நிலையில் அதன் பின்னரே மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விநோத நோயை குணப்படுத்த அரசு எனக்கு உதவ வேண்டும் என கோரியுள்ளார்.

பிராமண சமூகத்தில் பிறந்து காதல் கணவருக்காக மயானத்தில் வேலை செய்யும் பெண்!!

 
முட்டையின் வாசனைகூட பிடிக்காத தமக்கு பிணவாடை பழகியது எப்படி என உணர்ச்சி பொங்க விவரிக்கிறார் மயான மேலாளர் ஜெயந்தி.

தமிழகத்தின் திருச்சியில் பிராமண குடும்பத்தில் மூன்றாவது மகளாக பிறந்தவர் ஜெயந்தி, பொருளாதாரத்தில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ள ஜெயந்தி, வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.

திருமணத்திற்கு பின் குடும்ப வறுமையின் காரணமாக உறவினர்களின் எதிர்ப்பை மீறி நாமக்கல் நகராட்சி மின் மயானத்தில் பூங்கா பராமரிப்பு பணியில் இணைந்துள்ளார்.

அதன்பின் அந்த மயானத்தில் சடலங்கள் எரிக்கும் பணிக்கு ஆள் தேவைப்பட்டதால், அந்த பணியை தாமே செய்வதாக அதிகாரிகளிடம் முறையிட்டு அந்த பணியை பெற்றுள்ளார் ஜெயந்தி.

2013-ஆம் ஆண்டு நாமக்கல் நகராட்சி மின் மயானத்தின் சடலங்களை எரிக்கும் ஒப்பரேட்டராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், “முட்டை வாடை கூட பிடிக்காத எனக்கு, தற்போது பிண வாடை எல்லாம் சகஜமாகிவிட்டது” என ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தது பிரபலமானது.

மேலும் சடலங்களை எரிக்கும் பணியில் ஈடுபடுவது, கடவுளுக்கு செய்யும் பணிக்கு ஈடாக கருதி வேலை செய்கிறேன். தற்போது என் கணவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் ஜெயந்தி கூறியுள்ளார்.

இதுவரை 2800 சடலங்களை மின்மயானத்தில் தகனம் செய்துள்ள ஜெயந்தியின் அச்சமில்லாத துணிச்சலை பாராட்டி, தமிழக அரசு சார்பில் ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற பழமொழியை பின்பற்றி சிறப்பாக பணியாற்றிய ஜெயந்திக்கு, அண்மையில் அதே மயானத்தின் மேலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாடகி கழுத்து அறுக்கப்பட்டு கொலை!!

ஹரியானாவில் பஜனை மற்றும் நாட்டுப்புற பாடகி ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மம்தா சர்மா, இவர் பஜனை பாடல்கள் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் பாடும் பாடகி ஆவார். இவருக்கு திருமணமாகி 20 வயதில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மம்தா சர்மாவைக் காணவில்லை என்று அவரது மகன் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் மம்தா சர்மா இறந்த நிலையில், பனித்யானி என்னும் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கிடந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் மம்தாவின் உடலைக் கைப்பற்றினர். அப்போது அவரின் கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது, வாயில் ரத்தம் படர்ந்திருந்தது.

இதுகுறித்து மம்தாவின் மகன் கூறும்போது, தனது தாய் காணாமல் போன அன்றே பொலிசில் புகார் அளித்ததாகவும், ஆனால் பொலிசார் விசாரணை மேற்கொள்ள மெத்தனம் காட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

பொலிசார் தரப்பில் கூறும்போது, சந்தேகத்தின் பெயரில் இருவரை கைது செய்துள்ளதாகவும், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குளிரில் மூழ்கவுள்ள இலங்கையின் பல பகுதிகள்!!

இலங்கையின் பல பகுதிகளிலும் இரவு மற்றும் காலை வேளைகளில் உலர் வானிலையுடன், குளிரான காலநிலையும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் இரு நாட்களுக்கு நுவரெலியாவில் உறைபனி பொழியும் சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு பலத்த திடீரென வீசும் வாய்ப்புள்ளதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அதிகமான மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்பதுடன், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வட மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனி நிலைமை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழனுக்காக நாடு கடந்து வந்த அமெரிக்க பெண்ணின் வியக்க வைக்கும் செயல்!!

அமெரிக்காவைச் சேர்ந்த கிருஸ்தவ பெண்ணொருவர் தனது காதலனை தமிழ்க் கலாச்சாரப்படி கைப்பிடித்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இவர்களது திருமணம் நேற்றைய தினம் மதுரையில் வைத்து இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்து வந்த காரைக்குடியைச் சேர்ந்த வைத்தியர் சிவக்குமாரும், பாஸ்டன் நகரை சேர்ந்த எலிசபெத் ஆனும் காதலித்து வந்துள்ளனர். பள்ளிக் காலத்திலிருந்து காதலித்து வந்த இவர்கள் கல்வியை முடித்தவுடன் இரு வீட்டாரினதும் சம்மதத்துடன் திருமணத்திற்கு ஆயத்தமாகியுள்ளனர்.

எனினும் மணமகள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர், மணமகன் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இருவரும் ஆலோசித்து தமிழ்க் கலாச்சாரப்படி திருமணம் செய்ய தீர்மானத்துள்ளனர்.

இதனையடுத்து மதுரைக்கு வந்த காதல் ஜோடி நேற்றைய தினம் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளதுடன், தமிழ் முறைப்படி சடங்கு சம்பிரதாயங்களையும் செய்துள்ளனர்.

மேலும் இவர்களின் திருமணத்திற்காக அமெரிக்காவிலிருந்து மணமகளின் உறவினர்கள் 12 பேர் அமெரிக்காவில் இருந்து மதுரைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவைச் சேர்ந்த இருவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை!!

 
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் ஒரு தங்கப் பதக்கம் உட்பட ஐந்து பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் கடந்த 12, 13, 14 ஆம் திகதிகளில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட வூசோ குத்துச்சண்டை சுற்றுப்போட்டியில் வடமாகாணத்தின் வூசோ குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் செல்வரத்தினம் நந்தகுமார் தலைமையில் இரண்டு பெண் வீராங்கனைகள் உட்பட ஏழு வீரர்கள் பங்கு கொண்டிருந்தனர்.

கண் போய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் குத்துச்சண்டை வீரர்களுக்கான தங்கசாமி தர்சிகா 23 வயதுக்குட்பட்ட 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கத்தையும், தியாகராசா நாகராஜா 19 வயதுக்குட்பட்ட 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும்,

புருசோத்தமன் சியாமினி 19 வயதுகுட்பட்ட 48 கிலோ எடைப்பிரிவில்வெண்கலப் பதக்கத்தையும், குகனேந்திரன் கபிசன் 19 வயதுக்குட்பட்ட 70 கிலோஎடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும், மகேந்திரராசா பிரவீன் 23 வயதுக்குட்பட்ட70 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தனர்.

தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்ற வீரர்கள் தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் ஆசிய நாடுகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகாலையில் யாழில் நடந்த பயங்கரம் : சிறுமி கொலை, தாய் ஆபத்தான நிலையில்!!

 
யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை, வடமேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் மூன்று வயது குழந்தை உயிரிழந்ததுடன் கொலையாளி தானும் நஞ்சருத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் தாய் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் தாக்குதலை மேற்கொண்டு நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டவர் 33 வயதான ஈஸ்வர் என்று தெரியவந்துள்ளது.

வயதாகிய தனுசன் நிக்சையா என்ற குழந்தை உயிரிழந்துள்ளதுடன், 55 வயதுடைய பலமேஷ்வரி என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

உயிரிழந்த நபர் குறித்த தாயின் மூத்த மகனாவார். இவர் தனது மகள் முறையான சகோதரனின் மகளையும் தாயையும் கொடூரமாக வெட்டியுள்ளார். இது தொடர்பாக தெரிய வருகையில்,

தற்கொலை செய்து கொண்ட நபரின் தாயும், அவருடைய சகோதரனின் 3 வயது மகளும் வண்ணார்பண்ணை, வடமேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் உள்ள வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர்.

அப்போது குறித்த நபர் அங்கு சென்று, வீட்டில் இருந்த தாய் மற்றும் குழந்தை மீது கொடூரமாக கோடரியால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளதுடன், தாயார், கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த கொலையாளியான ஈஸ்வர், நஞ்சை உட்கொண்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கான காரணம் வெளிவராத நிலையில், யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் கசிப்பு விற்பனை செய்தவர் பொலிசாரால் கைது!!

வவுனியாவில் நேற்று மாலை சிதம்பரபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் நேற்று மாலை சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனை மேற்கொண்ட வடிவேல் சதீஸ்குமார் என்ற வயது 36 வயது நபரை 750மில்லி லீற்றர் சட்டவிரோ கசிப்பு விற்பனையின்போது கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்க்பபட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதவான நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக பாடநெறியில் புதிய அறிமுகம் கொண்டுவர வாய்ப்பு!!

நாட்டின் தொழில் துறைக்கு அமைய பல்கலைக்கழக பாட நெறிகளை அறிமுகப்படுத்துவதற்கும் வேலைவாய்ப்புக்களை அடையாளம் காண்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தொழில் கேள்வி தொடர்பான கணக்கெடுப்பில் தனியார்துறையில் மட்டும் சுமார் 4 இலட்சத்திற்கு மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாக புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொகை மதிப்பு புள்ளி விபர திணைக்களம் கடந்த ஆண்டு இறுதியில் நடத்திய நாடு தழுவிய ரீதியிலான கணக்கெடுப்பில் இந்த விபரங்கள் பதிவாகியுள்ளன.

இக் கணக்கெடுப்பின் போது 3500 தனியார் நிறுவனங்களிடம் இருந்து தகவல் திரட்டப்பட்டதாகவும் அதில் 497302 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது தனியார் துறையில் சகல தரங்களிலும் கிட்டத்தட்ட 50 இலட்சம் ஊழியர்கள் பணியாற்றுவதுடன் பல்வேறு துறைகளில் 5 இலட்சம் வெற்றிடங்கள் நிலவுகின்றன என்கின்றன அந்தப் புள்ளிவிபரம்.

அதிகளவிலான வெற்றிடங்கள் தையலுடன் தொடர்பான துறையிலும், பாதுகாப்பு உத்தியோகஸ்தர் துறையிலும் காணப்படுகின்றது. இவற்றை தவிர இயந்திர பொறியியலாளர், கணக்கியல், தொழில்நுட்பவியலாளர் தொடர்பான உயர் தொழில் துறைகளிலும் வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்கெடுப்பின் போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நடத்தட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் நாட்டின் தொழில் துறைக்கு அமைய பல்கலைக்கழக பாட நெறிகளை அறிமுகப்படுத்துவதற்கு வேலைவாய்ப்புக்களை அடையாளம் காண்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் கல்வி முறையின் அடிப்படையில் மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டு சிறந்த பெறுபேற்றினைப் பெற்றாலும் அவர்கள் தங்களுக்கான திறன்களை வளர்த்துக் கொள்வதில் பின் நிற்கிறார்கள்.

குறிப்பாக, வேலை வாய்ப்புக்கு ஏற்ற முறையிலான கல்வித்திட்டங்கள் இல்லாமையினாலேயே நமது மாணவர்க்ள இந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆகவே, வேலை வாய்ப்புக்கு ஏற்ற முறையிலான கல்வியமைப்பும் கொண்டுவரப்படவேண்டியது இன்றைய தொழில்நுட்பப் புரட்சியில் இன்றியமையாத காரணியாக மாறியுள்ளது என்கிறார்கள் கல்வியியலாளர்கள்.

பெற்ற தாய்க்கு மகன் ஒருவர் செய்த மோசமான செயல்!!

70 வயதான தனது தாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவரை மாத்தறை – வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மாத்தறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம், வெலிகம – முகுதுகமுவ, விஜேரத்ஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் 13 ஆண்டுகளாக சிறையிலிருந்த நிலையில், கடந்த மாதமே விடுதலை செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது சகோதரியின் மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த நபர் தனது தாயையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண்களை அவமதிக்கும் விளம்பரப் பதாகை!!

பெண்களை அவமதிக்கும் வகையில் பொறிக்கப்பட்டிருக்கும் விளம்பர பதாகைகளை அகற்றுமாறு பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார். ராஜகிரியவில், பெண்களை அவமரியாதைப்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டுள்ள பதாகையை அகற்றப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

குறித்த விளம்பரப் பதாகை பிரபல உடற்பயிற்சி கூடத்தினால் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெரல் ஒன்றும், இது பெண்களுக்குரிய தோற்றம் அல்ல என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளதுடன், பெண்கள் ‘பெரல்’ போல் இருக்கக்கூடாது என்ற விளம்பரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பெண்களை அவமதிக்கும் விளம்பரங்களை அனுமதிக்க மாட்டேன். இதனை அகற்றுமாறு நகர சபையிடம் கோரியுள்ளேன் என பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து அரசியல் பயணம் ஆரம்பமாகும் : கமல் தெரிவிப்பு!!

ராமேஸ்வரத்திலுள்ள டொக்டர் அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தென்னிந்திய திரைப்பட நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்திய குடியரசின் முன்னாள் தலைவரான டொக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமிற்கு பல கனவுகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், அது போன்ற கனவுகள் கொண்டவர்களில் தானும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களின் மேம்பாட்டிற்காக உழைப்பதே தனது முழு நேர கடமையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அரசியலில் கமலுடன் இணைந்து செயற்படுவது குறித்து காலமே பதில் சொல்லும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கருத்தை தான் வழிமொழிவதாக நடிகர் கமல்ஹாசன் ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.

தீப்பிடித்து எறிந்த பேரூந்து : 52 பேர் உயிரிழப்பு!!

கஜகஸ்தானின் வட மேற்குப் பகுதியில் நேற்று காலை பஸ் ஒன்றில் தீப்பிடித்ததில் 52 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

கஜகஸ்தானின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சமரா – சைம்கேன்ட் சாலை பகுதியில் நேற்று காலை 10.30 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கஜகஸ்தானுடன் ரஷ்யாவை இணைக்கும் இந்த சாலையின் வழியாகத்தான் ரஷ்யாவில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்காக கஜகஸ்தான் தொழிலாளர்களை அழைத்துச்செல்வது வழக்கம்.

சம்பவத்தின் போது குறிப்பிட்ட பஸ்ஸில் இரண்டு ஓட்டுநர்கள் உட்பட 57 பேர் பயணம் செய்ததாக கஜகஸ்தான் நாட்டு அவசர சேவைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தீ விபத்தின் பொழுது பஸ்ஸில் இருந்த 5 பேர் மட்டும் தப்பித்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில், தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பயணிகள் அனைவரும் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் மன அழுத்தங்களுடன் வாழும் இலங்கை அகதிகள் : தற்கொலைகளும் அதிகரிப்பு!!

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். இவர்களில், 61,845 பேர் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களிலுள்ள 107 முகாம்களில் தங்கியுள்ளதாக ஈழ அகதிகள் மறுவாழ்வு மையத்தின் பொருளாளர் எஸ்.சி. சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் மாத்திரமே இலங்கை அகதிகளுக்கான முகாம்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகளில் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலும் ஈழ அகதிகள் மறுவாழ்வு மையம் கவனம் செலுத்தியுள்ளது.

அகதி முகாம்களில் அதிகளவிலான தற்கொலைகள் இடம்பெறுவதாக ஈழ அகதிகள் மறுவாழ்வு மையத்தின் பிரதான வைத்திய அதிகாரி எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

அவ்வாறான தற்கொலைகளைத் தடுப்பதற்காக முகாம்களிலுள்ள மக்களுக்கு ஆரம்ப ஆற்றுப்படுத்தல் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முகாம்களில் மக்களின் மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் இந்தியப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என எஸ்.சி. சந்திரஹாசன் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டிலிருந்து கடந்த வருடத்தின் இறுதி வரை 2,573 குடும்பங்கள் நாடு திரும்பியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 6,900 அகதிகள் நாடு திரும்பியுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தமிழகத்தின் முகாம்களில் இன்னல்களை எதிர்நோக்கிய மக்கள் தாயகம் திரும்பிய போதிலும் எதிர்பார்ப்புகள் ஈடேறாத நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நேரியகுளம் பகுதியில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய சுமார் 35 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், இதுவரை எந்தவித வசதிகளும் தமக்கு ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

நாடு திரும்பிய மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

2016 ஆம் ஆண்டில் 630 பேருக்கும் 2017 ஆம் ஆண்டில் 300 பேருக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் எனவும் மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.

திட்டமிட்டபடி 22 திகதி நடைபெறவுள்ள பாவனாவின் திருமணம்!!

மலையாளம், தமிழ் உள்பட பல மொழி சினிமாக்களில் நடித்துள்ளவர் பிரபல நடிகை பாவனா. இவர் கன்னட சினிமாவில் நடித்தபோது தயாரிப்பாளர் நவீனுடன் காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் முதலில் தங்கள் காதலை ரகசியமாக வைத்திருந்தனர். இவர்கள் காதல் தொடர்பாக கிசு கிசு வெளியான பிறகு தங்கள் காதலை ஒத்துக்கொண்டனர்.

இதைதொடர்ந்து நடிகை பாவனா மற்றும் தயாரிப்பாளர் நவீன் குடும்பத்தினர் சம்மதத்துடன் இவர்கள் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றது.

கடந்த மார்ச் மாதம் நடிகை பாவனா – நவீன் நிச்சயதார்த்தம் திருச்சூரில் மிகவும் எளிமையாக நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் பங்கேற்றனர்.

நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து அவர்கள் திருமணத்தை விரைவில் நடத்த இருவீட்டாரும் திட்டமிட்டனர். கடந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடத்தவும் ஏற்பாடுகள் நடந்தன.
ஆனால் நவீனின் தாயார் மரணம் போன்ற சில காரணங்களால் இவர்கள் திருமணம் தள்ளிப்போனது.

இந்த நிலையில் நடிகை பாவனா – நவீன் திருமணம் திருச்சூரில் வருகிற 22ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திகதியில் திருமணம் நடைபெறாது என்று சமூக வலை தளங்களில் பரபரப்பு தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் இதை நடிகை பாவனாவின் சகோதரர் ராஜேஷ் மறுத்துள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி திருச்சூரில் 22ம் திகதி காலை பாவனா திருமணம் நடைபெறும் என்றும், அன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அவர் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.