யாழ். பருத்தித்துறைக் கடலில் தாய்லாந்து மக்களால் உருவாக்கப்பட்ட வீடொன்று கடலில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுத் தற்போது கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டவர்கள் தமது மூதாதையருக்குப் பிதிர்க்கடன் செய்யும் போது தாம் வசிக்கும் வீட்டை ஒத்த வகையிலான வீடொன்றை உருவாக்கிக் கடலில் மிதக்க விடுவது அவர்களின் மரபாகவுள்ள நிலையில் அவ்வாறானதொரு வீடே குறித்த வீடு எனத் தெரியவருகிறது.
தற்போது கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குறித்த அதிசய வீட்டைப் பார்வையிட ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டு விவசாயம் செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹன்னா ராஸ், க்ளோவி எலிசபெத் என்ற ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள், விடுமுறைக்காக இந்தியா வந்துள்ளனர்.
தமிழர்களின் கலாச்சாரமும், பண்பாடும் இவர்களை கவரவே, தாங்களும் அந்த கலாச்சாரத்திற்கு மாறியுள்ளனர். தமிழ் பெண்களைப் போல புடவை அணிந்து, நெற்றியில் பொட்டு வைத்து, காலில் கொலுசு அணிந்துள்ளனர்.
இவர்கள் விவசாயப் பணியை திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருநின்றவூரின் கசுவா எனும் கிராமத்தில் செய்து வருகின்றனர்.
இங்குள்ள தோட்டத்தில் விளைந்துள்ள காய்கறிகளை பறிப்பது, மாடுகளுக்கு வைக்கோல் வைப்பது, அவற்றை பராமரிப்பது முதலிய வேலைகளை இவர்கள் செய்கிறார்கள்.
மேலும் சேவாலயம் என்னும் அமைப்பின் மூலமாக, இங்கு தங்கியுள்ள இந்த பெண்கள் இருவரும், மாணவர்களுக்கு பாடம் கற்று கொடுக்கின்றனர். வரும் ஆகஸ்ட் மாதம் சொந்த நாட்டிற்கு திரும்ப உள்ள இவர்கள், அங்கு செல்வதற்குள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் தமிழ் கலாச்சாரத்தால் கவரப்பட்ட தங்களுக்கு, உழவுப்பணி ஆத்ம திருப்தியை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஹன்னா ராஸ் கூறுகையில், ‘தமிழக மாணவர்கள் ஆர்வத்துடன் பாடங்களை கற்றுக் கொள்கிறார்கள். இங்கு இயற்கை முறை வேளாண்மை மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
இயற்கை வேளாண்மை மிகவும் அற்புதமானதாக இருக்கிறது. பூச்சி மருந்துகள் கிடையாது. தீமை விளைவிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை. இது மிகவும் ஆரோக்கியமான விஷயமாக இருக்கிறது.
இந்திய கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதிலும் தமிழ் கலாச்சாரத்தை கற்றுக்கொள்ளவும், விரும்பவும், பின்பற்றவும் ஆரம்பித்துவிட்டேன். நான் சொந்த நாடு திரும்பினாலும் அங்கும், இங்கு கற்றுக் கொண்ட நல்ல பாடங்களை பின்பற்றுவேன்’ என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆனைக்கோட்டை வீதியில் வயோதிபப் பெண் ஒருவர் மர்ம நபர்களினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். தனிமையில், உறவினர் ஒருவரின் உதவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
72 வயதுடைய ஜெகநாதன் சத்தியபாமா என்ற மூதாட்டியே தலையில் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது பெறாமகன் கிளிநொச்சியில் வசித்து வருகின்றார். வழமையாக பெறாமகன் வந்து பார்வையிட்டு செல்வதுடன், இவருக்கான உணவுகளை வேறு நபர்களிடம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
அதேநேரம் இந்த மூதாட்டிக்கு பாதுகாப்பாக அவரது மைத்துனர் ஒருவர் வழமையாக இரவில் தங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வயோதிபப் பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை மூதாட்டியின் நகைகள் காணாமல் போயுள்ளமையினால் திருட்டிற்காக இந்த கொலை சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிப்பதுடன், கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.
150 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை பொலிஸ் கீதம் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது.
வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலக வளாகத்தில் நேற்று பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இதனை வெளியிட்டார்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் 150 வருடங்களுக்கு பின்னர் பொலிஸ் கீதம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள தேசிய கீதம், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தமிழ் பொலிஸ் கீதத்தை வவுனியாவைச் சேர்ந்த பாடகர் கந்தப்பு ஜயந்தன் பாடியுள்ளார். பாடலுக்கு வரிகளை வீரசிங்கம் பிரதீபன் எழுதியுள்ளார்.
வவுனியா தோணிக்கல் மயானத்தில் நேற்று (20.01.2018) மூன்று பெண்களுடன் சாமியாரொருவரை இளைஞர்கள் மடக்கி பிடித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
வவுனியா தோணிக்கல் பகுதியில் ஆலயம் ஒன்றை அமைத்து குறி சொல்வது, வசியம் செய்வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சாமியாரொருவர் நேற்றைய தினம் (20.01.2108) இரவு பத்து மணியளவில் தோணிக்கல் மயானப்பகுதியில் வைத்து மூன்று இளம் யுவதிகளுடன் மயானப் பூசை எனக் கூறி பெண்களுடன் தகாத முறையில் ஈடுபட முனைந்த வேளையில் பெண்ணொருவர் அவ்விடத்திலிருந்து கதறிய படி வீதிக்கு ஓடிவந்துள்ளார்.
அதனையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் குறித்த சாமியாரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
எனினும் குறித்த பெண்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முன்வராத காரணத்தால் பொலிஸார் குறித்த சாமியாரை விடுதலை செய்துள்ளதாக அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்த பகுதிகளில் இச் சாமியார் பல நாட்களாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் எனவே இதற்கு யாரும் துணை போக வேண்டாம் என்றும் அப்பகுதி வாழ் மக்கள் தெரிவித்தனர்.
தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் ஜேபி டுமினி, முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் முதல் தர போட்டியில், கேக் கோப்ராஸ் அணிக்காக டுமினி விளையாடி வருகிறார்.
இந்நிலையில் நைட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 240 ஓட்டங்கள் இலக்கினை விரட்டியது கோப்ராஸ் அணி. அந்த அணியில் களம் இறங்கிய டுமினி, 36வது ஓவரில் எடி லெயி வீசிய பந்துவீச்சை சிதறடித்தார்.
முதல் நான்கு பந்துகளை சிக்சர்களாக விளாசிய டுமினி, ஐந்தாவது பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். கடைசி பந்தை பவுண்டரிக்கு அவர் விளாசிய போது, நடுவர் அந்த பந்தை ‘No ball’ என்று அறிவித்தார். இதனால் மீண்டும் ஆறாவது பந்தை எதிர்கொண்ட டுமினி, அதனை இம்முறை சிக்சராக மாற்றினார்.
இதன் மூலம் ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் சேர்த்து, உள்ளூர் போட்டி வரலாற்றிலேயே ஒரே ஓவரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
சிறப்பாக விளையாடிய டுமினி 37 பந்துகளில் 70 ஓட்டங்களை குவித்து, கோப்ராஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இலங்கையில் அதிசயமிக்க பாம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
தோப்பூர் நீணாக்கேனிப் பிரதேசத்தில் அபூர்வமான நாகப்பாம்பு ஒன்று ஊர் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் அச்சம் காரணமாக அதனை அடித்து கொன்றுள்ளனர்.
இந்த பாம்பு விசித்திரம் நிறைந்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் நீளமான நாகப்பாம்பு மனித முகத்தை கொண்டுள்ளமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான பாம்பு இனம் இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளர்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகின்றன.
வவுனியா பண்டாரிகுளம் குளக்கட்டுப்பகுதியில் இன்று(20.01.2018) பிற்பகல் 3.30 மணியளவில் குப்பை கொட்டுவதற்குச் சென்ற நபரை அங்குள்ள பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா பண்டாரிகுளம் குளக்கட்டுப்பகுதியில் குளத்தை அண்டிய பகுதியில் மீன்கழிவுகளை பொதி செய்து மோட்டார் சைக்கிலில் எடுத்து வந்த சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த நபரை அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் சிலர் துரத்திப்பிடித்து விசாரணை மேற்கொண்டபோது குறித்த மீன் கழிவுகளை தோணிக்கல் பகுதியில் மீன் வியாபாரம் மேற்கொள்ளும் ஒருவருடையது என்றும் அவரே இக்கழிவுகளை கொண்டு வீசுமாறும் அதற்கு கூலி தருவதாகத் தெரிவித்திருந்தார் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பண்ணடாரிக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிசார் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்று கழிவகளை வீசிய நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதுடன் மீன் வியாபாரம் மேற்கொண்ட நபரையும் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.
குறித்த பகுதியில் பிள்iயார் ஆலயம் உள்ளதுடன் வீதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகின்றதுடன் நேற்றும் இப்பகுதியில் பெண் ஒருவருடைய தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு சிலர் மோட்டார் சைக்கிலில் தலைமறைவாகியுள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் நேற்று (19.01.2018) இரவு உள்ளுராட்சி தேர்தல் சம்பந்தமான சுவரொட்டிகளை ஒட்டிய மூவரை வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா கூமாங்குளம், பண்டாரிக்குளம் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டுவதாக பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சுவரொட்டிகளுடன் உக்குளாங்குளம் பகுதியினைச் சேர்ந்த 48, 31,20 வயதுடைய மூன்று பேரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து சுவரொட்டிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் (19.01) வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கென்டர் ரக வாகனம் ஒன்று நொச்சி மோட்டை பகுதியை அண்மித்த வேளை அதே திசையில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீதும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதுடன் கென்டர் வாகனத்தின் சாரதி ஓமந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
உணவு என்பது ஓர் மனிதனுக்கு எவ்வளவு அவசியமான ஒன்று, தினசரி மூன்று வேளைகளில் ஒருவேளை உணவு சாப்பிடாவிட்டாலும் மயக்கம், உடல் சோர்வு ஏற்படும் நிலை உருவாகும்.
இவ்வாறு இருக்கையில் எவ்வித சோர்வும் இன்றி தயங்காமல் சேற்றை சாப்பிட்டு வாழ்கிறார் 100 வயது முதியவர். “சேறு தான் தினசரி சோறு” என்கிறார் ஜார்க்கண்ட் மாநிலம், சாஹிப்கஞ் மாவட்டத்தில் வசிக்கும் கரு பஸ்வான்.
குடும்ப வறுமை காரணமாக 11 வயதிலிருந்தே சேறு சாப்பிட ஆரம்பித்தவருக்கு பின்னாளில் இதுவே பழக்கமாகி போனது. இது தொடர்பில் அவர் கூறுகையில், தினசரி 1 கிலோ சேறு வரை எடுத்துக்கொள்வேன், வறுமையின் உச்சத்தை தொட்டதாலும், இறப்பிலிருந்து பிழைக்கவே இதை உண்டு உயிர் வாழ்கிறேன். தினசரி இந்த சேற்றையே உண்டதால் அதற்கு அடிமையாகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இப்படிப்பட்டவருக்கு குடும்பம், குழந்தைகளும் உள்ளனர் என்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பம் இந்த பழக்கத்தை நிறுத்த பலமுறை வலியுறுத்தியும் செவி சாய்க்கவில்லையாம்.
இப்படி சேறு, மண் சாப்பிடுபவர்களுக்கு பசியின்மை எனப்படும் Pica syndrome போன்ற பாதிப்புகள் ஏற்பட நேரிடும். இவரின் செயல் அருவருப்பாக இருந்தாலும் இவரை பாராட்டி 2015-ல் Bihar’s Sabour Krishi Vidyalaya எனும் பல்கலைக்கழகம் கௌரவித்துள்ளது.
சுவிஸ்லாந்தின் அல்ப்ஸ் மலையில் அடுத்த மாதம் உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
இதற்கான டைமண்ட்ஸ் அணியில் இலங்கையின் முன்னாள் நட்சத்திரங்களான டில்ஷான் ஜெயவர்த்தன, மலிங்க ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அல்ப்ஸ் பனிமலைத் தொடரில் அமைந்துள்ள அழகான பகுதி செண்ட் மோரிட்ஸ் ரிசர்ட், இது கடல் மட்டத்தில் இருந்து 5910 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இங்கு கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு, போட்டிகள் நடத்தும் வித்தியாசமான முயற்சிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, வரும் பிப்ரவரி மாதம் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையும் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, டைமண்ட்ஸ் மற்றும் ரோயல்ஸ் என்ற உலகின் முன்னணி வீரர்கள் உள்ள இரு அணிகளும் மோத உள்ளன.
டைமண்ட்ஸ் அணியில் சேவாக், சகீர் கான், அஜித் அகர்கர், ஜெயவர்தன, டில்ஷான், மலிங்க, மைக்கல் ஹசி முதலிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ரோயல்ஸ் அணியில் ஸ்மித், சோயிப் அக்தர், பிராவோ, அப்துல் ரசாக், மேட் பிரையர், நாதன் மெக்கல்லம், டேனியல் விட்டோரி முதலிய வீரர்கள் உள்ளனர்.
உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் முதன் முறையாக பனிமலை கிரிக்கெட்டில் விளையாட உள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தபால்கர், கௌரி லங்கேஷ் வரிசையில் கவிஞர் வைரமுத்துவையும் படுகொலை செய்ய பிஜேபியினர் திட்டமிட்டுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மனித நேய மக்கள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றி வருபவர் சையது. தமிழகத்தில் ஆண்டாள் குறித்த சர்ச்சை பூதாகரமாக வெடித்து வரும் நிலையில் சிவகங்கையில் அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டது கவலை அளிக்கவில்லை, ஆனால் இந்திய அரசின் இந்த துரோக செயல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹச்.ராஜா போன்ற பாஜக மூத்த தலைவர்கள் ரவுடித்தனமாக அரசியல் செய்து வருவது நாட்டிற்கு நல்லதல்ல, இந்த போக்கு நீடித்தால் இந்தியாவின் ஒற்றுமை சீர்குலையும் என தெரிவித்துள்ளார்.
மேலும் எழுத்தாளர்கள் தபோல்கர், கௌரி லங்கேஷ் போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்ட வரிசையில் வைரமுத்துவையும் கொலை செய்ய பாஜகவினர் திட்டம் தீட்டியுள்ளனர்.
அப்படி ஒரு நிலை வைரமுத்துவிற்கு ஏற்படுமேயானால், அவரை மனித நேய மக்கள் கட்சியினர் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆண்டாள் குறித்த சர்ச்சை பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் சையது இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.