வவுனியாவில் பாலியல் குற்றவாளி விடுதலை : அச்சத்தில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தாயார்!!

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுமடு கிராமத்தில் பத்து வயது சிறுமி ஒருவரை கடந்த 24.05.2016 பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபருக்கு 19.01.2018 நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையிலேயே பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எனது மகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் நெடுங்கேணி பொலிசாரினால் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்படவில்லை, சிறுமியை கண்டிக்கும் விதமாகவே சந்தேக நபர் தாக்கியுள்ளார் என உண்மையை மறைத்து குற்றவாளிக்கு சார்பாக வழக்கு பதியப்பட்ட நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் உண்மைச் சம்பவத்தை முறைப்பாடு செய்திருந்தேன். பிரதி பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைவாக மீண்டும் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கிய நிலையில் சந்தேகநபர் மீண்டும் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அந்தவகையில் கடந்த 12.10.2017 அன்று பாதிக்கப்பட்ட எனது மகளை நடுநிசியில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபரொருவர் கடத்திச் செல்ல முற்பட்டவேளை சுதாகரித்துக்கொண்ட நான் சத்தமிட்டதன் காரணமாக மர்மநபர் தனது முயற்சியை கைவிட்டு தப்பித்துச் சென்றிருந்தார்.

எனது மகள் கடத்தல் முயற்சி தொடர்பாக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் 13.10.2017 முறைப்பாடு செய்திருந்தேன். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார் மர்மநபரின் தடயப் பொருட்கள் என சந்தேகிக்கப்படும் செருப்பு ஒரு ஜோடி மற்றும் கயிறு ஆகியவற்றை கைப்பற்றியிருந்தனர். ஆனால் இன்றுவரையில் கடத்தல் சம்பவம் தொடர்பாக எவரையும் கைது செய்யவில்லை.

இந்நிலையில் சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில் நானும் எனது குடும்பத்தினரும் அச்சமடைந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

எட்டு வயது மகளைக் கொல்லும் முன் பீட்சா வாங்கிக் கொடுத்த தந்தை!!

 
பிரித்தானியாவின் Brownhills பகுதியைச் சேர்ந்தவர் 54 வயது Bill Billingham. தனது பிள்ளைகளின் புகைப்படங்களை Facebookஇல் அவ்வப்போது வெளியிடுவது அவரது வழக்கம்.

தனது 8 வயது மகள் பீட்சா சாப்பிடும் புகைப்படம் ஒன்றை நேற்றிரவு வெளியிட்டார். சரியாக ஒரு மணி நேரம் கழித்து, தற்போது அவரை விட்டுப் பிரிந்து வாழும் அவரது மனைவி, சாலையில் நின்று தனது மகள் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூச்சலிட்டார்.

விரைந்து வந்த பொலிசார் Mylee Billingham என்னும் அந்த எட்டு வயதுச் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவள் உயிரிழந்தார்.

கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் சிறுமியின் தந்தையின் உடலிலும் கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் Bill Billingham வேலையிழந்ததாகக் கூறப்படுகிறது. பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Bill Billinghamஇன் சகோதரரான Mark Billingham, Brad Pitt, Angelina Jolie மற்றும்Tom Cruise ஆகியோரின் தனிப்பட்ட பாதுகாவலராகப் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

இனி வட்ஸ் அப் மூலமாக பணப் பரிமாற்றம் செய்யலாம் : வட்ஸ் அப்பின் புதிய வசதி அறிமுகம்!!

வட்ஸ்அப் செயலியில் பணப் பரிமாற்றம் செய்யும் புதிய வசதியை, அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட்ஸ்அப் செயலியில் பணப் பரிமாற்றம் செய்யும் வசதி, அடுத்த மாதம் முதல் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பணப் பரிமாற்றம் செய்யும் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த வட்ஸ்அப் வசதி, பணப்பரிமாற்றத்தை ஒருங்கிணைந்த Payment Interface கொண்டு நிறைவு செய்யும். இதற்காக, வங்கிகளுடன் இணைந்து பல்வேறு கட்டங்களில் UPI சார்ந்த வழிமுறையை செயல்படுத்த வட்ஸ்அப் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில், ‘Unified Payments Interface’ மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்படுவது, கடந்த சில மாதங்களில் அதிக அளவில் நடைமுறையில் உள்ளது. இதன்மூலமாக, கடந்த டிசம்பர் மாதம் மட்டுமே, 14.5 கோடி அளவில் பரிமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து State bank of india, ICICIC bank, HDFC bank, Axis bank உள்ளிட்ட வங்கிகள், வட்ஸ்அப் பணப் பரிமாற்ற வசதியின் மூலமாக சேவையை வழங்கும் என தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் இந்த வசதியை செயல்படுத்த, வட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதமே, மத்திய அரசின் அனுமதியை பெற்றுவிட்டது.

இந்நிலையில், இது குறித்து மூத்த வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘செயலியில் இந்த அம்சத்தை செயல்படுத்த பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்தப்பட வேண்டும். SMS போல அதிவேகமாக பணம் அனுப்ப, பல்வேறு நிலைகளில் Encryption செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 5 வயதுச் சிறுவன்!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளான்.

யு.கே.ஜி படிக்கும் சிறுவன் ஒருவனை அவனது ஆசிரியர் புத்தகப்பையை கீழே இறக்கி வைக்கும்படிக் கூறியுள்ளார்.

மறுத்த அவன், பையைக் கழற்றினால் அதனுள் வைக்கப்பட்டுள்ள குண்டு வெடித்துவிடும் என்று கூறியுள்ளான்.

உடனடியாக அவனது தந்தைக்குத் தகவல் தெரிவித்த பள்ளி நிர்வாகம் அவன் ஒரு நாள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவனை வந்து அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளது.

பள்ளிக்கு வந்த சிறுவனின் தந்தை, மகன் இடை நீக்கம் செய்யப்படுவதற்கான காரணத்தைக் கேட்டுள்ளார்.

சட்டப்படி அப்படித்தான் செய்ய முடியும் என்று கூறிய பள்ளி நிர்வாகம் அவன் வேண்டுமென்றே மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித்தது.

பின்னர் சிறுவன் தீவிரவாத மிரட்டல் விடுத்ததாக மாற்றிக் கூறிய பள்ளி அவனது தவறை நிரந்தரக் கருப்புப் புள்ளியாக பதிவு செய்துள்ளது.

அவ்வாறு பதிவு செய்துள்ளதை நீக்க விரும்பும் சிறுவனின் பெற்றோர் அவன் வெடிகுண்டு என்று கூறியது தவறுதான் என்றாலும் அவனை நாங்கள் கடிந்துகொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.

சிறுவனிடம் அவன் ஏன் அப்படிச்செய்தான் என்று கேட்டபோது, தான் வேடிக்கைக்காகவே செய்ததாகப் பெற்றோரிடம் கூற “எல்லோருக்கும் வேடிக்கைக்காக இவ்வாறு செய்வது பிடிக்காது” என்று மட்டும் அறிவுறுத்தியதாகவும், அவன் எப்போதும் ஒரு மகிழ்ச்சியான சிறுவனாகவே இருப்பதை அவர்கள் விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

முன்னாள் காதலியை தென் கொரியாவுக்கு அனுப்பி வைத்த வடகொரிய தலைவர்!!

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதை ஒட்டி, தமது முன்னாள் காதலியும் பாடகியுமான Hyon Song-wol என்பவரை கிம் ஜோங் உன் கலைக்குழு சார்பில் தென் கொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வடகொரியாவின் பிரபல பாடகியாக வலம் வந்தவர் Hyon Song wol. இவரையே ஆபாச வீடியோவில் நடித்ததாக கூறி கடந்த 2013 ஆம் ஆண்டு கிம் அரசு படுகொலை செய்ததாக தகவல் வெளியாகி பரபரபபை ஏற்படுத்தியது.

கிம் அரசு அரசியல் படுகொலைகளை சர்வசாதாரணமாக நடத்தி வந்துள்ளதை சர்வதேச ஊடகங்கள் பலவும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளன. அந்த வகையிலேயே பாடகி Hyon Song-wol படுகொலையும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் அதன் அடுத்த ஆண்டு அவர் டிவி நிகழ்ச்சிகளில் தோன்றி தாம் உயிருடன் இருப்பதை நிரூபித்தார்.

பாடகி Hyon Song-wol மற்றும் அவரது குழுவை சேர்ந்த 11 பேர் மீது ஆபாச படத்தில் நடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட கிம் அரசு, அவர்களுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

தற்போது குளிர்கால ஒலிம்பிக் தொடர்பில் வடகொரியாவில் இருந்து செல்லும் கலைக்குழுவினருக்கு பாடகி Hyon Song-wol தலைமை தாங்கி செல்ல உள்ளார் என வடகொரிய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் தமது முன்னாள் காதலியை தென் கொரியாவுக்கு அனுப்பும் திட்டம் என்ன என்பது குறித்து இதுவரை நம்பத்தகுந்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மருத்துவரை மயக்கி வைத்துள்ள நித்யானந்தா : பெற்றோர்கள் கதறல்!!

தமிழகத்தில் பெற்ற மகனை நித்யானந்தா மயக்கி வைத்துள்ளதாக நித்தி ஆசிரமத்தின் முன்பு தம்பதியர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காந்தி(வயது 63) என்னும் நபரின் மகனான மனோஜ்குமார்(வயது 30) என்பவர் மருத்துவம் படித்து அரசு சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் மதுரையில் நித்யானந்தா நடத்திய தியான பயிற்சியில் கலந்து கொள்வதற்காக மருத்துவர் மனோஜ் சென்றுள்ளார்.

அதன்பின் மனோஜ் வீடு திரும்பவில்லை. அதேபோல் மனோஜின் மூத்த சோகதரி வனிதா கூறுகையில், நானும் எனது 17 வயது மகள் நிவேதாவும் மதுரையில் நடந்த நித்யானந்தாவின் தியான பயிற்சிக்கு சென்றோம்.

அப்போது ஒரு மாத சிறப்பு தியான பயிற்சி என திருவண்ணாமலைக்கு எங்களை அழைத்து வந்தனர். அதற்காக 3 லட்சம் செலுத்தினோம். சில நாட்களுக்கு பிறகு, என் தந்தைக்கு உடல் நலக்குறைவு காரணமாக ஊருக்கு சென்றுவிட்டேன். பின்னர், என் மகளை அழைத்துச் செல்ல வந்தேன். ஆனால் அவளை என்னுடன் அனுப்ப மறுத்துவிட்டனர். என் மகளை போல, சுமார் 50 பேர் ஆசிரமத்தில் உள்ளனர் என கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்து அவரது பெண் சீடர்கள் சிலர் வெளியிட்ட வீடியோக்களை பார்த்த மனோஜின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தன் மகன் மற்றும் பேத்தியும் இப்படித்தான் உள்ளார்களோ என எண்ணிய மனோஜின் தந்தை, கடினப்பட்டு விவசாயம் செய்து மகனை மருத்துவம் படிக்க வைத்தேன். எனது மகன் மற்றும் மகள் வழி பேத்தி நிவேதா இருவரையும் மீட்டுத் தர வேண்டும் என திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரம முகப்பில் அமர்ந்து காந்தி மற்றும் அவரது மனைவி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மனோஜ் இங்கில்லை. அவர் பெங்களூரு மடத்தில் தீட்சை பெற்று சீடராக மாறிவிட்டார் என கூறி அவர்களை விரட்ட முயன்ற நித்யானந்தா சீடர்களிடம் இருந்து அவர்களை மீட்டு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் ஆரம்பித்த சுசி லீக்ஸ் : ஆபாச வீடியோ வெளியாவதால் நடிகைகள் கலக்கம்!!

மீண்டும் சுசி லீக்ஸ் விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதால் நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் வெளியாகின.

இது தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுசித்ராவும், அவருடைய கணவர் கார்த்திக்கும் பொலிசில் புகார் செய்தனர். நடந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று பாடகி சுசித்ரா பெயரில் உள்ள ஒரு டுவிட்டர் பக்கத்தில் ஓராண்டு நிறைவு என்ற குறிப்புடன் நடிகைகள் பெயரில் அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியாகின.

கபாலி படத்தில் ரஜினி பேசும் வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்ற பஞ்ச் வசனம் ஒலிக்க பெண்களின் குளியல் காட்சிகள் வெளியாகின.

தொடர்ந்து பிரபல நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு, எந்த நடிகையின் வீடியோ வேண்டும் என்ற கருத்துக்கணிப்பும் நடத்தப்பட்டது. இதனால் நடிகைகளிடையே மிகுந்த கலக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பின்லேடன் கைது!!

இந்திய மாநிலம் குஜராத்தில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட இந்தியாவின் பின்லேடன் டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் நீண்ட 9 ஆண்டுகளாக பொலிசாரால் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு, யூலை 26ம் திகதி குஜராத்தில் அகமதாபாத் நகரில் 21 குண்டுகள் வெடித்தன. இதில் 56 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சிமி-ஐஎம் அமைப்பைச் சேர்ந்த அப்துல் சுபான் குரோஷி. இந்தியாவில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை நிறுவ இவர் முயற்சி செய்து வந்தார். இதையடுத்து இவரை தேடப்படும் குற்றவாளியாக குஜராத் பொலிஸார் அறிவித்தனர்.

குரேஷி என்ற தவுகீர் எனும் பெயரில் வலம் வந்த அப்துல் சுபான் குரேஷியை தேசிய புலனாய்வு அமைப்பினரும் தேடி வந்தனர். கடந்த 2006ம் ஆண்டு மும்பையில் நடந்த புறநகர் ரயில் குண்டுவெடிப்பிலும் இவருக்கு தொடர்பு இருந்தது.

இதையடுத்து குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவினரும், அகமதாபாத் குற்றவியல் பிரிவினரும், டெல்லி சிறப்பு பொலிஸாருடன் இணைந்து குரேஷியை தேடி வந்தனர்.

காவல்துறை வட்டாரங்களில் இந்தியாவின் பின்லேடன் என்று குரேஷி அழைக்கப்பட்டார். தனது தோற்றத்தையும், பெயரையும் பலமுறை மாற்றி பொலிஸாரிடம் தப்பி உள்ளதால் இந்த பெயரை பொலிஸார் வைத்தனர்.

மேலும் வெடிகுண்டுகள் செய்வதிலும் திறன்படைத்தவரான குரேஷி, பெங்களூரு, ஐதராபாத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

கடந்த 1998ம் ஆண்டு சிமி இயக்கத்தில் சேர்ந்த குரேஷி, அதன்பின் இந்தியாவில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை நிறுவ முயன்றுள்ளார்.

இந்நிலையில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நேபாளத்துக்கு தப்பிச் சென்ற குரேஷி அங்கு தலைமறைவாக வாழ்ந்துவந்தார். தற்போது மீண்டும் இந்தியாவுக்குள் இந்தியன் முஜாகிதீன் அமைப்பை நிறுவ முயன்றபோது குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை ஸ்ருதியின் வலையில் விழுந்த ஆண்கள்: சினிமாவை மிஞ்சும் நிஜக்கதை!!

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்ருதி என்ற இளம்பெண் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வெளிநாட்டு ஆண்களை ஏமாற்றிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எப்படியெல்லாம் நாடகம் நடத்தி இப்படி பல இளைஞர்களை வலையில் விரித்தார்கள் என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடலூரை சேர்ந்த சித்ரா என்பவர் தனது கணவர் இறந்துவிட்டதால் தனது இளம்வயது மகள் ஸ்ருதி, மகன் சுபாஸ் ஆகியோருடன் வசித்து வந்தார். இடையில் பிரச்சன்னா வெங்கடேஷ் என்பவரை சித்ரா திருமணம் செய்துகொண்டு கோவையில் வசித்து வந்துள்ளார்.

சித்ராவின் தொழில் கல்யாண புரோக்கர் என்பதால், அந்த தொழில் மூலம் எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கலாம், எப்படி மற்றவர்களிடம் பழகலாம், எளிதில் எப்படியெல்லாம் ஆண்களை வலையில் வீழ்த்தலாம் என்பதெல்லாம் சித்ராவுக்கு கைவந்த கலை.

தனது மகள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால், இது அவருக்கு வசதியாகிவிட்டது. மேலும், ஸ்ருதி 2 படங்களில் நடித்துள்ளார், அது இன்னும் வெளியாகவில்லை. தனது மகளை விதம் விதமாக புகைப்படம் எடுத்து மேட்ரிமோனியில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இவர்கள் வீசும் வலை, வெளிநாட்டு ஐடி இளைஞர்களுக்கு. அப்படி சிக்கியவர்தான் ஜேர்மனியில் வசித்து வந்த பாருமுருகன் என்பவர். சுமார், 40 லட்சத்தை ஸ்ருதிக்கு கொடுத்து அவரால் ஏமாற்றப்பட்டு, சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

இவர் மட்டுமல்ல, நாமக்கல் சந்தோஷ்குமார் 43 லட்சம், நாகப்பட்டினம் சுந்தர்15 லட்சம், திண்டுக்கல் ராஜ்கமல் 21 லட்சம், நாமக்கல் சசிகுமார் 22 லட்சம், சிதம்பரம் அருள்குமாரராஜா 20 பவுன் தங்க நகை, என ஒரு பட்டியலே செல்கிறது.

எப்படி வலைவிரிக்கிறார்கள்?

ஸ்ருதி தனது பெயரை மைதிலி என மேட்ரிமோனியில் மாற்றிவைத்துள்ளார். இவர்தான் முதலாவதாக அந்த ஆண்களிடம் பேசுவார். எனது அப்பா வெளிநாட்டில் வேலை பார்க்கிறார், எனது அம்மா ஹவுஸ் வைப், நானும் எனது தம்பியும் இருக்கிறோம். நான் இன்ஜினியரிங் கடைசி ஆண்டு படிக்கிறேன். படித்து முடித்தவுடன் எனது வீட்டில் திருமணம் செய்து வைக்கப்போகிறார்கள் என்று தன்னை பற்றி அறிமுகப்படுத்திக்கொள்வார்.

அதன்பின்னர் வட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் தொடர்ந்து பேசி அந்த ஆண்களை தனது வலையில் வீழ்த்திவிடுவார். இவரது பேச்சால் கவரப்பட்ட ஆண்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிடுவார்கள். அதன்பிறகு, நிச்சயதார்த்தம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுக்கும் ஸ்ருதியின் குடும்பம், கடைசிவரை நிச்சயதார்த்தம் செய்துகொள்ள மாட்டார்கள். நிச்சயதார்த்தம் செய்து கொள்வோம் என்ற அந்த இளைஞரை வெளிநாட்டில் இருந்து வரவழைக்கும் இவர்கள், வீட்டிற்கு அழைக்கமாட்டார்கள், பொது இடத்தில் சந்தித்துக்கொள்வார்கள்.

அந்த இளைஞனின் பணத்தில் நகை, ஆடைகள் என ஸ்ருதி ஷொப்பிங் செய்துகொள்வார். வட்ஸ் அப்பில் கொஞ்சி பேசும் ஸ்ருதி, நேரில் சற்று அடக்கியேவாசிப்பார். நிச்சயதார்த்தம் செய்துகொள்ளும் நேரம் பார்த்து, எங்கள் உறவினர்கள் எதிர்க்கிறார்கள், தந்தையால் வரமுடியவில்லை என பல காரணங்களை கூறி நிச்சயதார்த்தத்தை தவிர்த்துவிடுவார்கள்.

கடைசியில் அந்த இளைஞன் தனது பணத்தையெல்லாம் செலவழித்துவிட்டு, வெளிநாட்டுக்கு திரும்பி செல்ல வேண்டும். அங்கு சென்றவுடன், தனது தாய்க்கு உடம்பு சரியில்லை என்று காரணம் சொல்லி பணம் பறிக்கும் வேலையில் ஸ்ருதி இறங்குவார்.

இதில் நீ எனக்கு பாதி கணவனாகிவிட்டாய் என்ற வார்த்தைகளால் அந்த இளைஞரை மூழ்கடிப்பார். ஸ்ருதி மீது இன்னும் பல இளைஞர்கள் புகார் கொடுத்துள்ளனர். ஒட்டுமொத்த புகார்களையும் திரட்டி வைத்துக் கொண்டு, ஸ்ருதி குடும்பத்தினரை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால்தான், உண்மைகள் வெளியே வரும் என பொலிஸ் கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.

சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்ந்த குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தீர்ப்பு!!

பூநகரி – நாச்சிக்குடா, வலப்பாடு என்ற இடத்தில் 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்ந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி இளஞ்செழியனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் திகதி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா, வலப்பாடு என்ற இடத்தில் 12 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்ந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது மைத்துனன் உறவு முறை கொண்ட குடும்பத்தலைவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிரான சுருக்கமுறையற்ற விசாரணை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் நடத்தப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகநபரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்றமை மற்றும் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வன்புணர்ந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை சந்தேகநபருக்கு எதிராக முன்வைத்து சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ். மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது எதிரியும் பாதிக்கப்பட்ட தரப்பும் மன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

“எதிரி தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்கின்றார். மதுபோதையில் அவ்வாறு நடந்து கொண்டமைக்கு இப்பொது வருத்தப்படுகிறார். அவருக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்கி மன்று விடுவிக்கவேண்டும்” என்று எதிரி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் கருணை விண்ணப்பம் செய்துள்ளார்.

“எதிரி தனது குற்றத்தை தானாக முன்வந்து ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு உச்சபட்ச தண்டனையை மன்று வழங்க வேண்டும்” என்று வழக்குத் தொடுனரான அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றில் விண்ணப்பம் செய்துள்ளார்.

“எதிரி குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். அவரது முதலாவது குற்றமான பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து சிறுமியைக் கடத்திச் சென்றமைக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அத்துடன் 5000 ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 2 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

இரண்டாவது குற்றமான சிறுமியை வன்புணர்ந்த குற்றத்துக்கு எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டப் பணமாக 5 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 2 இலட்சம் ரூபா பணத்தை வழங்கவேண்டும்.

எதிரி இரண்டு வகை சிறைத் தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்” என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

நண்பனுடன் சென்ற இலங்கை அகதியை அடித்துக் கொலை செய்த பரிதாபம் : கொந்தளித்த மக்கள்!!

இந்தியா – கரூர், இராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த டைசன் ஜெயக்கொடி என்பவரது மரணத்திலேயே சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் அதே முகாமை சேர்ந்த, இந்து நேசன் என்பவருடன் வெளியே சென்று பின்னர் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனிடையே வெள்ளியனை, முனியப்பன் கோயில் அருகே அடிப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது. குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை உடனடியாக கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் இறந்த வாலிபரின் படத்தை இணையத்தின் மூலம் அனுப்பியுள்ளனர். குறித்த படத்தை பார்த்த அகதிகள் முகாம் மக்கள் இறந்தது டைசன் ஜெயக்குமார் என உறுதிப்படுத்தியுள்ளனர். இவர் எப்படி இறந்தார்? என்ன நடந்தது? என்பதை விசாரிக்க இவருடன் வந்த இந்து நேசனை மக்கள் தேடி உள்ளனர்.

அவர் தாந்தோன்றி மலையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருப்பதாகவும், அங்கு இந்து நேசன் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதையடுத்து முகாம் மக்கள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்களுக்கும் முகாம் மக்களுக்கும் கைகலப்பு எற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சண்டையின் போது சீருடை அணியாத பொலிஸார் முகாம் மக்களை தாக்கியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் இலங்கை இளைஞன் டைசன் ஜெயக்கொடியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், முகாம் மக்களை தாக்கியதை கண்டித்தும் இராயனூர் இலங்கை அகதிகள் முகாம் முன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் கும்மராஜா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தீவிர அரசியலில் களமிறங்க தயார் : உதயநிதி ஸ்டாலின்!!

தீவிர அரசியலில் களமிறங்குவதற்கு தயாராகவுள்ளதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தாம் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பதாகவும், நடிப்புத்துறைக்கு வருவதற்கு முன்னர் அரசியலில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நடிப்பதற்கு ஆரம்பித்த பின்னர் அரசியலில் இருந்து சற்று விலகியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

தற்போது பல நடிகர்கள் அரசியலுக்கு வரும் நிலையில் தாமும் தீவிர அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வீட்டில் பணம் திருடிய மகனுக்கு தாய் கொடுத்த நூதன தண்டனை!!(வீடியோ)

சீனாவில் ‌ஷயோடாங் பகுதியில் உள்ள லுடியான் கவுன்டி என்ற இடத்தில் ஒரு தாய் தனது இளைய மகனை மோட்டார் சைக்கிளின் பின்னால் கயிற்றால் கையை கட்டி இழுத்துச் சென்றார். கயிறு கட்டப்பட்ட நிலையில் இருந்த சிறுவன் கதறி அழுதபடி இருந்தான்.

இக்காட்சியை ஒருவர் தனது செல்போனில் வீடியோ ஆக எடுத்தார். பின்னர் அது இணையதளத்தில் வைரலா பரவியது. அதைத் தொடர்ந்து பொலிஸார் சிறுவனின் தாயாரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது “தனது மகள் வீட்டில் இருந்து சுமார் 20 ஆயிரத்தை திருடி விட்டான். அதை ஏன் திருடினாய். எப்படி செலவு செய்தாய் என கேட்டபோது அவன் பதில் சொல்ல மறுத்து விட்டான்.

அந்த பணம் எனது கணவன் ஒருமாத சம்பளத்துக்கு இணையானது என்றார். மேலும் பணம் குறித்து பதில் கூறாத தனது மகனை இன்னும் 2 அல்லது 3 நாட்கள் இதுபோன்று செய்யப்போகிறேன்” என மிரட்டினார்.

இனிமேல் அதுபோன்று செய்யக்கூடாது. வார்த்தைகளால் மிரட்டினால் போதும் என அவருக்கு அறிவுரை கூறி பொலிஸார் அனுப்பி வைத்தனர்.

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் : ஊழல் தடுப்பு படை விசாரணை?

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வெளியான புகார் குறித்து ஊழல் தடுப்பு படை விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்துதர சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவுக்கு 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கடந்த ஆண்டு குற்றம்சாட்டி இருந்தார்.

இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை குழுவை கர்நாடக அரசு அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்தி அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில், 2 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கூறிய குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இல்லை என்றும், இதுபற்றி லோக் அயுக்தா அல்லது ஊழல் தடுப்பு படை விசாரணைக்கு உத்தரவிடலாம் எனவும் பரிந்துரை செய்திருந்ததாக தகவல்கள் வெளியானது.

தற்போது அந்த அறிக்கை உள்துறையின் கூடுதல் தலைமை செயலாளரிடம் இருக்கிறது.

இந்த நிலையில், விசாரணை குழு அளித்த அறிக்கையின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி தீர்மானித்திருப்பதாகவும், இதனால் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக ரூபா கூறிய குற்றச்சாட்டு குறித்து ஊழல் தடுப்பு படை அல்லது லோக் அயுக்தா பொலிஸார் விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் ஏற்கனவே ஊழல் தடுப்பு படையில் டி.ஐ.ஜி. ரூபா புகார் கொடுத்திருப்பதால் ஊழல் தடுப்பு படை பொலிஸ் விசாரணைக்கு கூடிய விரைவில் மாநில அரசு உத்தரவிடலாம் என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி கர்நாடக அரசு அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

நடிகர் சௌந்தரராஜாவுக்கு தமன்னாவுடன் திருமணம்!! (படங்கள்)

 
சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. பின்னர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தங்கரதம், தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலம் சிலுக்குவார்பட்டி சிங்கம், ஈடிலி, கடைக்குட்டி சிங்கம் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் என பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் சௌந்ததராஜாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

“க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட்“ நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கும் தமன்னாவுக்கும் – சவுந்தர்ராஜாவுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.

செளந்தரராஜா – தமன்னா திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. வருகிற மே மாதம் மதுரை, உசிலம்பட்டியில் சொந்த பந்தங்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற இருக்கிறது.

இலங்கை கடற்கரையில் ஒதுங்கிய புத்திசாலித்தனமான பாரிய உயிரினம்!!

 
புத்தளம், கற்பிட்டி கடற்கரையில் பெரியளவிலான டொல்பின் மீன் ஒன்றின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

இன்று அதிகாலையில் மீனின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த டொல்பின் 10 அடி நீளமும் 4 அடி அகலமும் கொண்டுள்ளதென கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுறா இனத்தை சேர்ந்த இந்த டொல்பின் மீன், டொல்பின் மீன்களை விடவும் புத்திகூர்மையானதென தெரிவிக்கப்படுகின்றது.

பாரிய அலைகளில் சிக்கிய டொல்பின், கரையொதுக்கி இருக்கலாம் எனவும், விஷத் தன்மை காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனவும் மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.