கருப்பாக இருப்பதாக கிண்டல் செய்ததால் தீ வைத்து எரித்துக்கொண்ட மாணவி!!

தெலுங்கானா மாநிலத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் தன்னை கிண்டல் செய்த காரணத்தால் மனமுடைந்து தனக்குத்தானே தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

லாவண்யா (14) என்ற மாணவி, Domadugu கிராமத்தில் உள்ள Pragathi High School- இல் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவருடன் படிக்கும் சக மாணவர்கள், லாவண்யாவின் தோல் நிறத்தை கிண்டல் செய்துள்ளனர், கருப்பாக இருக்கிறாய்… பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது என அடிக்கடி கிண்டல் செய்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த லாவண்யா இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்தும், அவர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த கிண்டல் தொடர்ந்து கொண்டே இருந்ததால், மனமுடைந்த லாவண்யா, தனது வீட்டில் தனக்குத்தானே தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில், இவரது உடல் 45 சதவீதம் எரிந்துள்ளது.

தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாவண்யாவிடம், சிகிச்சைக்கு பின்னர் வாக்குமூலம் பெறப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தந்தை மீது பொலிசில் புகார் அளித்த சிறுவன் : காரணம் என்ன தெரியுமா?

உத்தரபிரதேச மாநிலத்தில் தன் மீது தனது தந்தைக்கு அக்கறை இல்லை என்று கூறி 12 வயது சிறுவன் பொலிசில் புகார் அளித்துள்ளது பரபரப்பாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் இட்டாவா நகரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஓம் நாராயண் குப்தா, தன்னுடைய தந்தை மீது பொலிசில் புகார் அளித்துள்ளான்.

அதில் ’தந்தைக்கு குடும்பத்தின் மீது அக்கறை இல்லை, குடும்பத்தினருடன் அவர் நேரம் செலவிடுவதே இல்லை, அவர் நடத்தி வரும் கடையிலினால் மிகவும் ஓய்வில்லாமல் இருக்கிறார்.

மேலும், என்னுடைய நண்பர்கள் கண்காட்சி ஒன்றிற்கு செல்ல இருக்கின்றனர். நானும் அவர்களுடன் செல்ல அவரிடம் அனுமதி கேட்டபோது, தனக்கு வேலை இருப்பதால் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

எனவே, அவரை அழைத்து திட்டி அனுப்புங்கள்’ என தெரிவித்துள்ளான். சிறுவனின் புகாரை ஏற்ற பொலிசார், சுமார் 40 முதல் 50 பிள்ளைகளை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நாராயண் குப்தாவையும் அவர்களுடன் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் இது குறித்து பொலிசார் கூறுகையில், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள், வேலை காரணமாக தங்களது பிள்ளைகளை கவனித்துக் கொள்ள தவறுகின்றனர். சமூகத்தில் இது மிகவும் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

சாதி அடிப்படையில் கொடுமைப்படுத்தப்பட்ட தமிழ் மாணவர்!!

குஜராத் மாநிலத்தில் மருத்துவம் படிக்க சென்ற தமிழக மாணவர் சாதியின் அடிப்படையில் தனக்கு நேர்ந்த அநியாயம் குறித்து கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிராஜ் என்பவர், அகமதாபாத் அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியாக பி.ஜே மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்துள்ளார்.
சாதி, பிராந்தியவாதம் மற்றும் மொழி தொடர்பான பாகுபாட்டினால் தொடர்ந்து மாரிராஜ் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த இவர் தற்கொலைக்கு முயற்சித்து, அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
தன் மீதான பாகுபாடு குறித்து 2015ம் ஆண்டே மருத்துவமனை அதிகாரிகளிடம் மாரிராஜ் புகார் அளித்துள்ளார். ”பாகுபாட்டை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்கிறார். தனது சீனியர்களுக்காக நாற்காலியை விட்டு எழுந்திருக்கச் செல்லப்பட்டதாகவும் அனைவருக்கும் தேநீர், சிற்றுண்டி வாங்கிவரவும் சொல்லப்பட்டதாகவும் மாரிராஜ் கூறியுள்ளார்.
என்னை, மூத்த மருத்துவர்களுடன் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், நான் எப்போதும் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டேன்” என்கிறார் அவர். நான் ஒரு அடிமையாக நடத்தப்பட்டேன், அறுவை சிகிச்சை அரங்கிற்கு வெளியே காவலாளி போல நிற்க கட்டாயப்படுத்தப்பட்டேன். என்னைத் தவிர அனைத்துப் பயிற்சி மருத்துவர்களும் கருத்தரங்க வகுப்பு எடுக்க அனுமதிக்கப்பட்டனர் என்று கூறியுள்ளார்.
மாரிராஜ் படிக்கும் துறையின் தலைவர் டாக்டர் பிரசாந்த் மேத்தா, இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என கூறியுள்ளார்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாரிராஜ் அளித்துள்ள புகாரில் டாக்டர் மேத்தா பெயரும் இடம்பெற்றுள்ளது. ‘சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்று வருகிறோம். போதிய ஆதாரங்கள் பெற்ற பிறகு குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்வோம் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

1000 ரூபாய்க்கு விற்கப்பட்ட இளைஞர் : வலுக்கட்டாயமாக பிச்சையெடுத்த அவலம்!!

இந்தியாவில் கடத்தல் கும்பலால் பிச்சைக்கார கும்பலிடம் விற்கப்பட்ட இளைஞர் வலுக்கட்டாயமாக சாலையில் பிச்சையெடுத்த நிலையில் நபர் ஒருவர் உதவியால் மீட்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அனுப் சிங். இவர் வேலை தேடி மும்பைக்கு வந்த நிலையில் கடத்தல் கும்பலிடம் சிக்கியுள்ளார். அவர்கள் அனுப்பை புனேவை சேர்ந்த பிச்சைக்கார கும்பலிடம் 1000 ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

இதையடுத்து கும்பலில் உள்ள துனு கேள் என்ற பெண் அனுப் சிங்-கை தன்னுடன் சேர்ந்து வலுக்கட்டாயமாக பிச்சையெடுக்க வைத்து வந்துள்ளார். இதில் அனுப் சிங்குக்கு நாள் ஒன்றுக்கு 1500 ரூபாய் வருமானம் வந்த நிலையில் அதை அந்த கும்பல் வாங்கி கொண்டு கொஞ்சமாக உணவு மட்டும் கொடுத்து வந்துள்ளனர்.

இதோடு அனுப் சிங் காலை உடைத்து, சிகரெட்டால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்த நிலையில் புனேவில் என்.ஜி.ஓ நிறுவனம் நடத்தி வரும் யோகேஷ் என்பவர் சில தினங்களுக்கு முன்னர் காரில் சென்று கொண்டிருந்த போது அனுப் மற்றும் துனு ஆகியோர் பிச்சையெடுப்பதை பார்த்து சந்தேகம் அடைந்துள்ளார்.

இதையடுத்து காரை நிறுத்தி அவர்களிடம் சென்ற போது துனு பயந்து ஓட இது தான் தப்பிக்க சமயம் என கருதிய அனுப் எல்லா விடயத்தையும் யோகேஷிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அனுப்பை மீட்ட யோகேஷ், துனுவை பிடித்து பொலிசில் ஒப்படைத்தார். துனு மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இதில் பலருக்கும் தொடர்பு இருக்கும் என்ற அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை : காதலால் வந்த வினை!!

காதல் விவகாரத்தால் பெண்ணொருவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் சேர்ந்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவருக்கு சீதை எனும் மனைவியும், சொர்ணமாரி, பத்மா என்ற இரு மகள்களும் இருந்தனர்.

இவரின் மூத்த மகள் சொர்ணமாரி, அம்பாசமுத்திரம் அருகே உள்ள சங்குபுரம் கிராமத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வந்தார். அவர் தினமும் பேருந்தில் சங்குபுரத்திற்கு பயணம் செய்தபோது, பேருந்து நடத்துநர் வேலுச்சாமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளாடைவில் இவர்கள் காதலர்களாகியுள்ளனர்.

அதன் பின்னர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், சொர்ணமாரி தனது குடும்பத்தினருடன் சங்குபுரம் கிராமத்திலேயே வாடகைக்கு குடியேறியுள்ளார்.

இந்நிலையில் சொர்ணமாரியின் தந்தை பழனி உடல் நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து, இருவருக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டது. சொர்ணமாரி நான்கு மாத கர்ப்பமான நிலையில், வேலுச்சாமி அதனை கலைத்துள்ளார். அதன்பின்னர், திடீரென சென்னைக்குச் சென்ற வேலுச்சாமி, சொர்ணமாரியுடனான பேச்சுவார்த்தையை தவிர்த்துள்ளார்.

மேலும் திருமணம் செய்யவும் மறுத்துள்ளார். எனவே, மனமுடைந்த சொர்ணமாரி, தனது தாய் சீதை மற்றும் தங்கை பத்மா ஆகியோருடன் சேர்ந்து விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார்.

சொர்ணமாரி தனது குடும்பத்தினரின் தற்கொலைக்கு, வேலுச்சாமி, மெர்சி, குமுதா, ராமச்சந்திரன் ஆகியோரே காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வட்ஸ் அப்பில் நண்பனிடம் இளம்பெண் சொன்ன அந்த வார்த்தையால் உயிரிழந்த பரிதாபம்!!

 
பெங்களூரில் இளம் பெண் ஒருவர் எனக்கு முஸ்லீம்களை பிடிக்கும் என்று கூறியது அவரது உயிர் போவதற்கு காரணமாகியுள்ளது.

சிக்மகளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தன்யாஸ்ரீ (20), இவருக்கு சந்தோஷ் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் வட்ஸ் அப்பில் தங்கள் மாவட்டத்தில் நிலவும் மதக் கலவரங்களைப் பற்றி பேசியுள்ளனர்.

அப்போது தன்யாஸ்ரீ இது போன்ற கலவரங்கள் எல்லாம் நல்லது கிடையாது என்று கூறியுள்ளார். அதற்கு சந்தோஷ், அதுபோன்ற நிலை இருப்பது நல்லதுதான், இல்லையெனில் லவ் ஜிகாத் அதிகமாகிவிடும் என்று கூறியுள்ளார்.

உடனடியாக தன்யாஸ்ரீ எனக்கு முஸ்லிம்களை பிடிக்கும் என பதில் தெரிவித்ததால், சந்தோஷ் இப்படியெல்லாம் இருக்க கூடாது, நீயும் லவ்ஜிகாத்திற்குள் தள்ளப்படுவாய் என குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் அந்த பெண் கூறியதை, அவர் ஸ்கிரீன் சொட் எடுத்து, தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதைக் கண்ட சிலர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளனர். அதிலும் குறிப்பாக பாஜக இளைஞர் பிரிவு தலைவர் அனில்ராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட கும்பல் கடுமையாக திட்டியதாகவும், இனிமேல் இது போன்று இருக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளனர்.

இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை, தன்யாஸ்ரீ படத்தையும் வேறு மதத்தை சேர்ந்தவர் படத்தையும், இணைத்து மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதைக் கண்டு பெரிது மன உளைச்சலுக்காளான தன்யாஸ்ரீ வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, அவரது வீட்டில் ஒரு கடிதம் சிக்கியுள்ளது. அதில் தன்யா, தன்னை மிரட்டியதாலும், போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாலும் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும், என்னுடைய தற்கொலைக்கு காரணமான அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் பயங்கரம் : ஒருதலைக்காதலால் குத்தி கொலை செய்யப்பட்ட இளம்பெண்!!

 

ஆந்திராவில் தனது காதலை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் இளம்வயது பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜானகி(23) என்ற பெண் ஹைதராபாத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வருகிறார். அங்கு, இவருடன் பணியாற்றும் ஆனந்த் என்பவர் கடந்த 6 மாதகாலமாக ஜானகியை காதலித்து வந்துள்ளார்.

மேலும், தன்னை காதலிக்குமாறும் இல்லையென்றால் உன்னை கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்வேன் என அவ்வப்போது மிரட்டி வந்துள்ளார். ஆனால் இதற்கு ஜானகி சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற போது, ஜானகியின் வீட்டிற்கு ஆனந்த் சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த ஜானகியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், அதன்பின்னர் தான் கொண்டுவந்திருந்த கத்தியை எடுத்து ஜானகியை சரமரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துசென்றுள்ளார்.

ரத்தவெள்ளத்தில் கிடந்த ஜானகியை ரூபா என்ற அவரது தோழி அருகில் இருப்பவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டபோதும், ரத்தம் அதிகமாக வெளியேறி ஜானகி இறந்துவிட்டார்.

ஜனாகியின் மரணம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொலிசார் ஆனந்தை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் ஹைதராபாத்தில் ஒருதலைக்காதலால், இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து உயிரோடு எரித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பத்திற்கு வாழ்வளித்த பொலிசார்!!

 
வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள வாரிக்குட்டியூர் யுனிட் 6ல் வசித்து வரும் சொலமான் மேரி சாலட் என்பவருக்கு இன்று (10.01.2018) காலை பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தினரின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட புதிய வீடு கையளிக்கும் நிகழ்வு பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசிங்க தலைமையில் இடம்பெற்றது.

வறுமை நிலையில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்திரவின் வழிகாட்டிலில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் முயற்சியில் பூவரசன்குளம் பொலிசாரினால் உதவிகள் வழங்கப்பட்டு 15 இலட்சம் ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டினை செட்டிகுளம், பூவரசன்குளம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே உத்தியோக பூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்து பயனாளியிடம் கையளித்தார்.

இந் நிகழ்வில் கிராமசேவையாளர் சிவசுப்பிரமணியம், பொலிஸ் பிரஜைகள் குழுவின் தலைவர், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், மாதர் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தென்னிலங்கை இளைஞர்களின் கண்டுபிடிப்பு!!

 

விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப வழிமுறைகளை பயன்படுத்தி, தென்னிலங்கை இளைஞர்கள் சிலர் படகு ஒன்றை தயாரித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியை பயன்படுத்தி கடலில் பயணிக்கும் இயந்திரம் ஒன்றை இளைஞர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர்.

முச்சக்கர வண்டிக்கு சில இயந்திரங்களை பயன்படுத்தி அதில் வெற்றிகரமாக கடலில் பயணிப்பதற்கான முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டுபிடித்தவர் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் இது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த முயற்சி வெற்றியளித்தால், இதனை மேலும் அபிவிருத்தி செய்து வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களுக்கு தேவையான இயந்திரங்களை, அங்குள்ள வளங்களை கொண்டு தயாரித்து வெற்றி கண்டிருந்தனர்.

இவ்வாறு தயாரிக்கப்பட்டவையில் கடற்கரும்புலிகளுக்கு தேவையான படகுகள் சிறப்பு வாய்ந்ததாகும். விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப உத்திகள் சர்வதேசத்தை மிளரச் செய்திருந்தது.

இந்நிலையில் அதேபாணியில் தென்னிலங்கை இளைஞர்களும் கடலில் சவாரி செய்யும் முச்சக்கரவண்டி படகினை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் சிறுமி துஸ்பிரயோகம் : தலைமறைவாகிய குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தீர்ப்பு!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கடந்த 5 வருடங்களாக தலைமறைவாகி இருந்த நபருக்கு நேற்று தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது.

குறித்த நபரை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று முன்னிலைப்படுத்திய போது அவருக்கு தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது.

இதன்படி குற்றவாளிக்கு 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 5 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை 09.01.2018 (நேற்று) தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவிட்டார். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் 2007ஆம் ஆண்டு 16 வயதுக்கு உட்பட்ட சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரும் அவருக்கு உதவிய ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று சந்தேகநபர்கள் இருவக்கு எதிராகவும் யாழ்.மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணைகளின் நிறைவில், சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்துக்காக முதலாவது எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையையும், அவருக்கு உதவிய குற்றத்துக்கு இரண்டாவது எதிரிக்கு 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அப்போதைய நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7ஆம் திகதி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, இரண்டாவது எதிரியான சாவகச்சேரி, கச்சாயைச் சேர்ந்த கனகரத்தினம் கமலதாஸ் (குட்டி) தலைமறைவாகியதால் அவரை கைது செய்ய பொலிஸாருக்கு மேல் நீதிமன்று கட்டளை வழங்கியது.

இந்த நிலையில் 3 ஆண்டுகளின் பின் இரண்டாவது எதிரியான கனகரத்தினம் கமலதாஸ் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதையடுத்து குறித்த நபருக்கு நேற்று வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிமன்றால் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் குற்றவாளி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார்.

இதில் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வாசித்தார். “குற்றவாளிக்கான 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை 09.01.2018 தொடக்கம் நடைமுறைக்கு வருகின்றது.” என நீதிபதி உத்தரவிட்டார்.

சூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு!!

சூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அது பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. சூரியனைப் போன்றே அளவும், பரப்பளவும் கொண்டுள்ளது. சூரியனின் வயதையொத்தது. இந்த நட்சத்திரம் ரோசட்டா கல் போன்ற வடிவில் உள்ளது.

சூரியனைப் போன்றே கடுமையான வெப்பத்தை வெளியிடுகிறது. ஆனால் அதில் உள்ள இரசாயனப் பொருட்களின் அளவு மட்டும் வேறுபடுகின்றது. சூரியனில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற இரசாயனப் பொருட்கள் அதிகளவில் உள்ளன.

ஆனால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நட்சத்திரத்தில் இவை 2 மடங்கு உள்ளன. இது வெளியிடும் வெப்பம் மற்றும் இரசாயனப் பொருட்களால் பூமியின் தட்பவெப்ப நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, பருவ நிலை மாற்றம் ஏற்படுகிறது.

இத்தகவலை டென்மார்க் ஆர்கஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கிறிஸ்டோபர் கரோப் தெரிவித்துள்ளார்.

கெப்லர் விண்கலம் அனுப்பிய புகைப்படங்கள் மற்றும் தகவல் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் இவை தெரிய வந்துள்ளது.

இலங்கையில் இனி பெண்களும் மதுபானத்தை கொள்வனவு செய்யலாம் : தடை நீங்கியது!!

மதுபான விற்பனை நிலையங்களில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீளப் பெறுவதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துவது மற்றும் பெண்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்வது போன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட தடையே இவ்வாறு நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரசவம் வரை தாயாகப் போவதே தெரியாமல் இருந்த பெண்!!

இங்கிலாந்துப் பெண்ணொருவர் ஆண் குழந்தைக்குத் தாயானார். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? தாயாவதற்கு நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு முன் வரை அவர் கர்ப்பிணி என்பது அவருக்கே தெரியாது.

லிசா லெதர்ட் (35) என்பவர் இங்கிலாந்தின் ப்ளிம்ப்டன் நகரைச் சேர்ந்தவர். இவரது கணவர் நிக் (45). குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்பது லிசாவின் விருப்பம். ஆனால், இறைவன் கொடுக்க விரும்பினால் தடுக்க முடியுமா?

அண்மையில் ஒரு நாள் அடி வயிற்றில் கடும் வலி எடுத்ததால் வைத்தியசாலைக்குச் சென்றார் லிசா. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குப் பிரசவ வலி எடுத்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

ஆனால் வைத்தியர்கள் கூறியதை லிசாவால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால் புறத் தோற்றத்தில் அவருக்கு கர்ப்பிணிக்கான எந்தவித அறிகுறியும் இருக்கவில்லை.

எனினும் மருத்துவர்கள் அடித்துக் கூறியதையடுத்து உடனடியாக சத்திர சிகிச்சைக் கூடத்துக்கு செல்ல ஒப்புக்கொண்டார். மிகச் சரியாக நாற்பத்தைந்து நிமிடங்களில் அழகான, ஆரோக்கியமான ஆண் குழந்தைக்குத் தாயாரானர் லிசா.

“வலிக்குக் காரணம் இதுதான் என்று சத்தியமாக நான் நினைத்திருக்கவில்லை. வயிற்று வலி காரணமாக வேலைக்கு வர ஒரு மணிநேரம் தாமதமாகும் என்று கூறியிருந்தேன். ஆனால் மூன்று மாதங்களுக்கு ஓய்வெடுக்க நேரிடும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை” என்கிறார் லிசா.

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி!!

 
கொழும்பில் வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. மருதானை ஆசிரி வைத்தியசாலைக்கு முன்னால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீப்பற்றியமைக்கான காரணம் என்ன என இன்னமும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எரிந்த முச்சக்கர வண்டிக்கு அருகிலிருந்த அனைத்து வாகனங்களையும் அங்கிருந்து அகற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் அடையாளம் காணப்பட்டது : தற்கொலைக்கான காரணமும் வெளியாகியது!!

 
மட்டக்களப்பு – கல்லடி புது முகத்துவாரம், களப்பிலிருந்து இன்று காலை 10 மணியளவில் மீட்கப்பட்ட ஆணின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த நபர்தற்கொலைசெய்து கொண்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நபர் மட்டக்களப்பு நகர் பொதுச் சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவரான 73 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான வைத்திலிங்கம் தர்மலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் வீட்டில் சண்டைபிடித்து விட்டு நேற்று இரவு 7 மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர் கல்லடிப் பாலத்திலிருந்து கடலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாமென உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தற்கொலைசெய்து கொண்டவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலை வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இப்படியும் ஓர் அதிசயம்!!

 
வவுனியா வெங்கடேஸ்வரா சுப்பர் மார்கெட் உரிமையாளர் ஆ.இராஜேந்திரன் பட்டானிச்சூரில் அமைந்துள்ள அவரது வீட்டுத்தோட்டத்தில் அதிகூடிய நிறையினைக் கொண்ட இராசவள்ளிக் கிழங்கினை அறுவடை செய்துள்ளார்.

இவ் இராசவள்ளிக் கிழங்குக் கொடியானது வெறுமனே 10 மாதங்களில் 30 கிலோ கிராம் நிறையுடன் காணப்படுகின்றது.

அதுமட்டுமின்றி இலங்கையிலேயே இது முதல்முறை எனவும் கருதப்படுகின்றது.