வவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தாயை காணவில்லை : கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியை சேர்ந்த இரண்டு மற்றும் மூன்று வயதுடைய குழந்தைகளின் தாயான கார்த்திகா தினேஸ்குமார் என்பவரை கடந்த இரண்டு தினங்களாக காணவில்லை என குறித்த பெண்ணின் கணவர் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

தாயை காணாமல் அவரின் இரண்டு குழந்தைகளும் ஏக்கத்தில் காய்ச்சலால் சிரமப்படுவதாக குறித்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

எனது மனைவினை கண்டவர்கள் அருகேயுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் அல்லது 0770745487 என்ற தனது தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாரும் கணவன் மேலும் தெரிவித்துள்ளார்.

உயர் தரப்பரீட்சையில் மூன்று ஏ சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 8267 மாணவ மாணவியர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர்.

வெளியாகியிருந்த 2017ம் ஆண்டுக்கான பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் விபரங்கள் குறித்து இலங்கை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மூன்று பாடங்களிலும் சித்தியடையத் தவறிய மாணவ மாணவியரின் எண்ணிக்கை 22021 ஆகும்.

கடந்த 2016ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்ட மாணவ மாணவியரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

2016ம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையில் 7126 மாணவ மாணவியர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்டிருந்தனர்.

இதேபோன்று 2016ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது மூன்று பாடங்களிலும் சித்தியெய்த தவறிய மாணவ மாணவியரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டில் 22392 மாணவ மாணவியர் மூன்று பாடங்களிலும் சித்தியடையத் தவறியிருந்தனர். மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்ட மற்றும் மூன்று பாடங்களிலும் சித்தியடையாத மாணவ மாணவியரைக் கொண்ட மாகாணமாக மேல் மாகாணம் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இரட்டைக் குழந்தைகள் தொடர்பான வழக்கு : நீதிமன்ற உத்தரவு!!

யாழ். போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை வேறொரு பெண்ணிற்கு வழங்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை நேற்று யாழ். நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளை பிரசவித்துள்ளார். இதேவேளை, அன்றைய தினத்தில் மற்றுமொரு பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

ஆனால் அவரின் சிசு இறந்துவிட்டதாக தெரியவந்துள்ள நிலையில் வைத்தியசாலை உத்தியோகத்தரினால் இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை மாற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த பெண் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், யாழ் நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

மேலும்,முறைப்பாட்டில் எதிராளியாக குறிப்பிடப்பட்டுள்ள பெண் வெளிநாட்டில் உள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

புலமைப் பரிசில் பரீட்சை : 234 மாணவர்களின் புள்ளிகளில் மாற்றம்!!

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் குறித்த மீள் மதிப்பீட்டில் 234 மாணவ மாணவியரின் புள்ளிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் சுமார் திருப்தியில்லாத 20000 மாணவ மாணவியர் மீள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பம் செய்திருந்தனர்.

இவர்களில் 234 மாணவ மாணவியரின் பரீட்சை பெறுபேறுகளில் குறிப்பாக புள்ளிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

புள்ளிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள மாணவ மாணவியரின் பெறுபேறுகள் கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மீள்மதிப்பீட்டுக்காக விண்ணப்பித்து புள்ளிகளில் மாற்றம் ஏற்படா மாணவ மாணவியரின் விபரங்கள் அந்தந்த பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவ மாணவியருக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் இந்த மாத இறுதிக்குள் பூர்த்தியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகள் கிடைக்கப்பெறாத மாணவ மாணவியர் எதிர்வரும் மாதம் 15ம் திகதி வரையில் மேன்முறையீடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடைகளைத் தாண்டி வௌியீட்டுக்கு தயாராகும் பத்மாவத்!!

பல்வேறு தடைகளைத் தாண்டி பத்மாவத் படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. படம் வெளியாகும் நாளில் நடிகை தீபிகா படுகோனே ரசிகர்களுடன் படம் பார்ப்பதாக கூறப்படுகிறது.

நடிகை தீபிகா படுகோனே நடித்த சித்தூர் ராணி பத்மாவதியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பத்மாவதி திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் படத்தின் தலைப்பு பத்மாவத் என மாற்றம் செய்யப்பட்டும், சில காட்சிகள் நீக்கப்பட்டும், கனவு பாடல் காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து படத்தின் தணிக்கை குழு ‘யு/ஏ’ என அனைவரும் பார்க்கும் வகையிலான சான்றிதழ் அளித்து அனுமதி வழங்கியுள்ளது.

அனைத்து தடைகளையும் நீக்கியதை தொடர்ந்து படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி பத்மாவத் படம் இந்தியா முழுவதும் வெளியாகின்றது. இது தவிர 60 நாடுகளிலும் படம் திரையிடப்படுகிறது.

மும்பையில் பத்மாவத் படம் வெளியாகும் திரையரங்குகளில் அந்தப் படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனே, நடிகர்கள் ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் நேரில் தோன்றுகிறார்கள். ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே தணிக்கை குழு அனுமதி அளித்த பின்பும், ராஜஸ்தான் மாநிலத்தில் பத்மாவத் படத்திற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணி பத்மினியின் தியாகம் மாநில மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்டது. அவரது தியாகத்தை பெருமையாக கருதுகிறார்கள்.

எனவே மக்களின் உணர்வுகளுக்கு எதிரான எதையும் அனுமதிக்க மாட்டோம். எந்த விலை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறட்டையைக் கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தை அறிமுகம்!!

மனிதர்கள் உறங்கும் போது குறட்டை விடுவதைத் தானாகக் கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தையை அமெரிக்க நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட் மெத்தையில் உறங்குபவர்களின் குறட்டை பிரச்சினை தானாக சரியாகிவிடும் எனவும் சௌகரியமான உறக்கம் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஸ்லீப் நம்பர் எனும் குறித்த நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் மெத்தை ஸ்லீப் நம்பர் 360 i10 என அழைக்கப்படுகிறது.

லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சி.இ.எஸ். 2018 விழாவில் இந்த மெத்தை அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

இரவில் உறங்கும் போது உடல் அசைவுகளுக்கு ஏற்ப மெத்தையை தானாக மாற்றியமைத்துக்கொள்ளும் வகையில் இந்த மெத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் மெத்தையில் ஒருவர் குறட்டை விடும் போது, இந்த மெத்தை அதில் உறங்குபவரின் தலையை ஏழு கோணம் அளவு உயர்த்தும். இவ்வாறு செய்யும் போது அடிப்படையில் ஒருவர் குறட்டை விட காரணங்களாக இருக்கும் உடல் அசைவுகள் மாற்றப்பட்டு குறட்டை கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும், இந்த மெத்தை அதனை பயன்படுத்துவோரின் நேர வழக்கத்தை அறிந்து கொண்டு மெத்தையின் அடிப்பாகத்தை வெப்பமாக்கும். இதில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் அலாரம் அம்சம் உறங்குபவர் எழ வேண்டிய நேரத்தில் எழுப்பி விடும். CES வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவில் சிறந்த கண்டுபிடிப்பிற்கான விருது ஸ்மார்ட் மெத்தைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட் மெத்தையின் விற்பனை இவ்வாண்டில் ஆரம்பமாகவுள்ளது. இதன் விலை 4000 டொலர்கள்.

கலிபோர்னியாவில் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு!!

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் உள்ள மலை பிரதேசங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பனி உறைந்து கிடந்த ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் கலிபோர்னியா மாகாணத்தில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது.

மேலும், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 13 பேர் பலியாகி உள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கப்பலுடன் மோதிய படகு : இரு மீனவர்கள் பலி, ஒருவர் மாயம்!!

மீன்பிடிப் படகொன்று, கார்களை ஏற்றி வரும் கப்பல் ஒன்றுடன் மோதியதில் இரு இலங்கை மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் மூவர் காப்பாற்றப்பட்டுள்ளதோடு, ஒருவரைக் காணவில்லை எனவும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தெய்வேந்திரமுனை கடற்பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை  அம்பாள் ஆலய தைபொங்கல் விழா -2018

வவுனியா ஓமந்தை  அரசர்பதி ஸ்ரீ கண்ணகை  அம்பாள்  ஆலயத்தில் எதிர்வரும் 14.01.2018  ஞாயிற்றுகிழமை  காலை 9.00 மணி முதல்  பொங்கல் விழா இடம்பெறவுள்ளது .

முற்றிலும் பாரம்பரிய முறைப்படி  கோவில் வயலில் நெல்லை அறுவடை செய்து நெற்கதிர் ஊர்வலமாக மாட்டு வண்டியில் எடுத்துவரப்பட்டு ஆலய முன்றலில் பாரம்பரிய முறையில் குத்தி அரிசி ஆக்கப்பட்டு கண்ணகை அம்மனுக்கு விசேட பொங்கல் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ் நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வண்ணம் கலை நிகழ்ச்சிகளும்,சிறப்பு நடனம் ,சிறப்பு மேள கச்சேரி , உறிஉடைத்தல் போன்ற நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

கிளிநொச்சியில் சற்று முன்னர் கோர விபத்து  : சம்பவ இடத்திலேயே நால்வர் பலி!!

 
கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நால்வர் பலியாகியுள்ளனர். இச் சம்பவம் சற்று முன்னர் 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கயஸ் வாகனம் ஒன்று இன்னொரு வாகனமொன்றுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ் விபத்து சம்பவம் இம்பெற்றுள்ளது.

இந்த விபத்து மாங்குளம்- கொக்காவில் ஏ9 வீதியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரைக் காத்த தமிழர்களுக்கு நன்றி சொல்ல வந்த ஜப்பான் இளைஞர்!!

ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், விபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிய தமிழக மருத்துவர்களை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் ஆசிரியராக பணியாற்றி வந்த இஷோவா, கடந்த ஆண்டு தமிழகத்துக்குச் சுற்றுலா வந்திருந்தார். திருச்சி பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்றிருந்த அவர் ஸ்ரீரங்கத்தில் பேருந்தில் ஏறினார். அப்போது, தவறி கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நினைவுத் தப்பியது.

இதைப் பார்த்த செய்தியாளர்கள் இருவர் இஷோவாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் 20 நாள்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. செய்தியாளர்களும் அவரின் நண்பர்களும் இஷோவாவை அவ்வப்போது வந்து பார்த்து சென்றனர். மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையால் இஷோவா உயிர் பிழைத்துக் கொண்டார்.

அவருக்கு நினைவும் திரும்பியது. எனினும், அவரால் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூற இயலவில்லை. இந்த நிலையில் மருத்துமனை நிர்வாகத்தினர் ஜப்பான் துதரகத்தை அணுகி, இஷோவாவை தாய்நாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

தாய்நாட்டில் சிகிச்சை பெற்ற அவர் முற்றிலும் குணமடைந்தார். இதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு வந்த அவர், திருச்சியில் தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களையும் அரசு மருத்துவமனை டீன் அனிதாவையும் சந்தித்து நன்றி கூறினார்.

தன்னை காப்பற்ற உதவிய செய்தியாளர்களையும் நேரில் சந்தித்து இஷோவா நன்றி தெரிவித்தார். தன் உயிரைக் காப்பற்றியவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறுவதற்காக ஜப்பானில் இருந்து வருகை தந்த இஷோவாவின் பண்பு சுற்றியிருந்தவர்களை நெகிழ வைத்துள்ளது.

வெறுத்த மனைவி மற்றும் கள்ளக்காதலி : உயிரைப் பறித்த காதல் போதை!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை தனது மனைவி மற்றும் கள்ளக்காதலி ஆகிய இருவரும் கைவிட்டு விட்டதால் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராமநாதன் என்பவருக்கு மேனகா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நில புரோக்கர் மற்றும் பிரபல கட்சியிலும் இணைந்து அதிக பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததால், குடிப்பழக்கம் மற்றும் தவறான பழக்கத்திற்கு அடிமையானார்.

இதனால் இவரது மனைவி தனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பிரிந்துசென்றுவிட்டார். இந்நிலையில், ராமநாதனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ள செண்பகவல்லியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக செண்பகவல்லியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது கள்ளக்காதல் பற்றி அக்கம்பக்கத்தினர் தவறாக பேசியதால், செண்பகவல்லி தனியாக பிரிந்துசென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த ராமநாதன், செண்பகவல்லியின் வீட்டின் முன்பு சென்று, தன்னோடு வந்து வாழுமாறு சண்டைபோட்டுள்ளார், மேலும் தொலைபேசிக் கோபுரம் மீது ஏறிநின்று கொண்டு தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ளார்.

இவரை பொலிசார் மீட்டனர், சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்கள் ஆகியும், செண்பகவல்லி வராத காரணத்தால் மனமுடைந்த ராமநாதன் செண்பகவல்லியின் தோட்டத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இலங்கையில் பெற்ற தாயை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய மகள்!!

கண்டியில் உணவு, நீர் வழங்காமல் சிறை வைக்கப்பட்டிருந்த 94 வயதான தாய் ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை யட்டியாவல பிரதேச வீட்டில் தாயை அடைத்து வைத்து மகள் கொடுமைப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாய் சிறுநீர் மற்றும் மலம் கழித்து பல மாதங்களாகியும் அவற்றினை சுத்தப்படுத்தாமையினால் அவரது உடல் முழுவதும் பூச்சி, புழுக்கள் காணப்பட்டுள்ளன.

இருட்டு அறையை பொலிஸ் அதிகாரிகள் திறந்து பார்க்கும் போது, மிகவும் கெஞ்சியவாறு அவர் உணவு கோரியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

3 ஆண் பிள்ளைகள் மற்றும் 3 பெண் பிள்ளைகள் இந்த தாயார் உள்ளதாகவும், ஒரு மகள் இவ்வாறு தாயை தடுத்து வைத்துள்ளதாகவும், ஏனையவர்கள் தாயை பார்க்க இந்த மகள் அனுமதிப்பதில்லை என பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

அந்த பகுதி மக்கள் தாயாருக்கு உணவு வழங்குவதற்கு முயற்சித்த போதிலும், அதற்கும் அந்த மகள் அனுமதிக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தனது தாயை பார்க்க விடாமல் அடைத்து வைத்திருப்பது தொடர்பில் மகன் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கமைய இன்றைய தினம் அவ்விடத்தை சோதனையிட்டு தாயை மீட்டுள்ளனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பாத­சா­ரிக் கடவை அமைக்கக் கோரிக்கை!!

 
வவு­னியா புதிய பேருந்து நிலை­யத்­துக்கு முன்­பாக சாலை­யில் பாத­சா­ரி­கள் கடவை இல்­லா­த­தால் பயணி­கள் சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­ற­னர்.

கடந்த முத­லாம் திக­தி­யி­லி­ருந்து வவு­னியா புதிய பேருந்து நிலை­யத்­தில் தனி­யார் மற்­றும் இ.போ.ச. சேவை­கள் நடைபெற்று வரு­கின்­றன. எனி­னும் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்­பாக பாதசாரிக்கடவை­கள் அமைக்கப்படவில்லை.

சுமார் 195 மில்­லி­யன் ரூபா செல­வில் அமைக்­கப்­பட்ட இந்­தப் பேருந்து நிலை­யத்­துக்கு முன்­பாக பாதசாரிக் கடவை இல்லை. இதன் கார­ண­மாக பேருந்து நிலை­யத்துக்கு சாலையைக் கடந்து செல்­லும் பய­ணி­கள் சிரமக்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

விபத்து இடம்­பெ­ற­லாம் என்ற பயத்­து­டன் சாலையைக் கிடைக்கவேண்டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. வடக்குப் பகுதிக்கான முதன்­மை­யான கண்டி சாலை­யில் இரவு – பகலாக கன­ரக வாக­னங்­கள் பயணிக்­கின்­றன. இதனால் விபத்­து­கள் இடம்­பெ­றும் அபா­யம் அதி­கம் காணப்­ப­டு­கின்­றது.

வவுனியா ஓமந்தையில் இரண்டு துப்பாக்கியுடன் மூவர் கைது!!

வவுனியா பாலமோட்டைப் பகுதியில் நேற்று (08.01.2018) இரவு பொலிசாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இரண்டு கட்டுத் துவக்குடனும் மரை இறைச்சியுடனும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமோட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக கட்டுத்துவக்கு வைத்திருப்பதாக ஓமந்தை பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் அங்கு சென்ற ஓமந்தைப் பொலிசார் சுகந்தன், ஜெயதிலக்க, பிரதீப், நிஷாந்தன் ஆகியோரின் தேடுதலின்போது நால்வரில் மூவர் 41வயது, 45வயது, 72வயது ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டதாகவும் இவர்களிடமிருந்து இரண்டு கட்டுத் துப்பாக்கிகள் மற்றும் மரை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவில் சக்கர நாற்காலி வழங்கிவைப்பு!!

இன்று (09.01.2018) வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கை குகன் நகரைச்சேர்ந்த திருமதி மேரி மெற்றில்டா சந்திரசேகரனின் கணவன் மூளையில் நடைபெற்ற சிகிச்சை காரணமாக கைகால் இயங்காத நிலையில் நாளாந்த கருமங்களை மேற்கொள்ள சக்கர நாற்காலி மற்றும் Walker கேட்டு வந்த நிலையில் வவுனியா மக்கள் வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர் திரு நந்தகுமார் உதவியுடன் மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் வைத்து சக்கரநாற்காலி வழங்கப்பட்டது.