திஹகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தறை மித்தெனிய வீதியின் ஹொரொன்தூவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹக்மன பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். யடியன பிரதேசத்தில் வசித்து வந்த 40 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஹகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று திங்கட்கிழமை (09) கரை ஒதுங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலமே இறந்து கரையொதுங்கியது.
குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதுமே பல மாநிலங்களிலும் வெறிநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தபோதிலும் அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழ்ந்து பொதுமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றன.
அந்த வகையில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் மான்ஸர் பகுதியில் வசித்து வந்த 3 வயது சிறுவன் ஆயுஷ் வீட்டிற்கு வெளியே தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு கூட்டமாக வந்த தெரு நாய்கள் ஆயுஷை சராமாரியாக கடித்து குதறியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவையில் இன்ஸ்டா மூலம் அறிமுகமாகி காதலித்து வந்த இளைஞன் ஏமாற்றி திருமணத்திற்கு மறுத்ததால், 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதிநகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ரமா பிரபா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 12ம் வகுப்பு படித்து வந்த ரமா பிரபாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 21 வயது இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த இளைஞர் ரமா பிரபாவுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், அந்த இளைஞர் ரமா பிரபாவைக் காதலிக்க மறுத்து குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்த ரமா பிரபா, வீட்டில் தனியாக இருந்த நிலையில், திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் காதல் தோல்வியில், மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பொருந்தா காதலால், கோவையில் 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதிநகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ரமா பிரபா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 12ம் வகுப்பு படித்து வந்த ரமா பிரபாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 21 வயது இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த இளைஞர் ரமா பிரபாவுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது.
இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், அந்த இளைஞர் ரமா பிரபாவைக் காதலிக்க மறுத்து குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்த ரமா பிரபா, வீட்டில் தனியாக இருந்த நிலையில், திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் காதல் தோல்வியில், மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்திய மாநிலம் தெலங்கானாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற புதுமாப்பிள்ளை, தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் உரகொண்டா சாய் (28). இவருக்கும் மாதுரி (23) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து, தேனிலவைக் கொண்டாட புதுமணத் தம்பதி கோவாவிற்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். அதன்படி செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு சாய், மாதுரி புதுமணத் தம்பதி சென்றுள்ளனர்.
புதுப்பெண் மாதுரி ரயிலில் இருக்க, சாய் தண்ணீர் போத்தல் வாங்கிவிட்டு ஓடும் ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி தண்டவாளத்திற்கும், ரயிலுக்கும் இடையில் விழுந்துவிட்டார். இதில் பரிதாபமாக அவர் இறந்துவிட்டார்.
ஆனால், கணவர் இறந்தது தெரியாமல் மனைவி மாதுரி மாற்றம் நண்பர்கள் கசேகுடா வரை பயணித்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் தகவல் தெரிவித்த பின்னரே கணவர் இறந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது.
கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பலில் ஏற்பட்டவேளையில், விபத்து நடந்த இடத்திற்கு விரைத்த இந்திய கடற்படை கப்பல்கள், தீயை அணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
12.5 மீற்றர் இழுவை கொண்ட 270 மீற்றர் நீளமுள்ள இந்தக் கப்பல் ஜூன் 7 ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்பட்டு மும்பைக்குச் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
கொழும்பு – தலங்கமை பிரதேசத்தில் வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் 14 தோட்டாக்களுடன் சமையல்காரர் ஒருவர் தலங்கமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தலங்கமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு – தலவத்துகொட பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபர் ஏதேனுமொரு குற்றச் செயலுக்காக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை தம்வசம் வைத்திருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் தலங்கமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று (08.06) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திறுவையாறு பகுதியில் நள்ளிரவு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேக நபரின் வீட்டு வளாகத்தில் கைவிடப்பட்ட சாக்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 31 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று (09) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயனர்கள் தங்கள் தொலைபேசி சேமிப்பிடத்தை மிகவும் திறமையாக நிர்வகிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் (WhatsApp) தயாராகி வருகிறது.
உலகலாவிய ரீதியில், ஊடகப் பகிர்வு அதிகரித்து வரும் நிலையில், குழு அரட்டைகளில் உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தானாக பதிவிறக்கம் செய்வதால் பல பயனர்கள் வரையறுக்கப்பட்ட இடத்துடன் சிரமப்படுகிறார்கள்.
இதைச் சரி செய்வதற்காக, வாட்ஸ்அப் ஒரு ‘பதிவிறக்கத் தரம்’ அம்சத்தை உருவாக்கி வருகிறது, இது பயனர்கள் தரவு கோப்புகளைப் பதிவிறக்குவதற்கு முன்பு அவற்றின் தெளிவுத்திறனைத் தெரிவுசெய்ய அனுமதிக்கும்.
இந்த அம்சம், பயனர்களுக்கு HD தரம் மற்றும் SD தரத்திற்கு இடையேயான தெரிவை வழங்குகிறது.
அந்தவகையில், இந்த அம்சத்தை அமைப்புகள் > சேமிப்பு மற்றும் தரவு தானியங்கி-பதிவிறக்கத் தரம் வழியாக அணுகலாம், அதில் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான தரவு தரத்தைத் தேர்ந்தெடுக்க முடியும்.
குறிப்பாக தினமும் அதிக அளவிலான தரவுகளை பெறுபவர்களுக்கு, இந்த நடவடிக்கை சேமிப்பக பயன்பாட்டின் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அண்மைய வாட்ஸ்அப் புதுப்பிப்பைப் பதிவிறக்கிய பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே இந்த புதிய அம்சம் தற்போது அணுகக்கூடியதாக உள்ளது என்று வாட்ஸ்அப்பீட்டா தரவுத்தளம் (WABetaInfo) தெரிவித்துள்ளது.
A9 பிரதான வீதியின் முகமாலைப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவமானது நேற்று(08.06.2025) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்தும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 7,600 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் நேற்று (08) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் எலபடகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு பொலிஸ், போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்படி, நேற்று (08) இரவு நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
வவுனியாவில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார் என்று ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, கதிரவேல்பூவரசங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அத்துடன் சந்தேகநபராக 45 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் கஞ்சா மீட்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் மனைவியின் தலையுடன் கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரு அனேகல் பகுதியை சேர்ந்த ஒருவர் மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வீடு வாடைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி, குறித்த கணவர் தனது மனைவியிடம் நான் வேலைக்குச் செல்கிறேன். 4 ஆம் திகதி காலைதான் திரும்பி வருவேன் எனத் தெரிவித்து விட்டு வேலைக்குச் சென்றுள்ளார். வேலை விரைவாக முடிய, இரவே வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
வீட்டிற்கு வந்தபோது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய மனைவி மற்றொரு நபருடன் இருந்துள்ளார். இதைப் பார்த்த பயங்கர கோபம் அடைந்துள்ளார். மனைவியுடன் இது தொடர்பாக சண்டையிட்டுள்ளார்.
மனைவியும் இவருடன் சண்டையிட்டுள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறுவதாக மனைவி கூறியுள்ளார். வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி, அடிக்கடி வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதுபோன்றுதான் நேற்றும் அவரது மனைவி வந்து தகராறு செய்துள்ளார்.
இதனால் கடுங்கோபம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்குப் பிறகு மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். அத்துடன் அவரது கோபம் தீரவில்லை. மனைவியின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல், மனைவியின் தலையை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று சரணடைந்துள்ளார்.
தனது மனைவியை தலை துண்டித்து கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். பொலிஸார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலாஎல்ல ஏரியில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச் சம்பவம் அப் பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.