மருத்துவராக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே இலட்சியம்!!

சிறந்த மருத்துவராக வந்து எமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம் என உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் மன்னார் மாவட்ட ரீதியில் 1ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி எஸ்.மேரி நிதுசா சோசை தெரிவித்தார்.
குறித்த மாணவி மேலும் தெரிவிக்கையில், உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் மன்னார் மாவட்ட ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளேன்.
நான் இந்நிலைக்கு முன்னேறக் காரணமாய் இருந்த ஆசிரியர்கள் அதிபர் நண்பர்கள் குறிப்பாக பெற்றோர் சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். விசேட விதமாக எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதமும் பெற்றோர்களின் ஆசீர்வாதமும் தான்.
சிறந்த மருத்துவராக வந்து எமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம் என குறித்த மாணவி தெரிவித்தார்.
இவர் சீலன் சோசை ஆனந்தி குருஸ் தம்பதிகளின் புதல்வி என்பதுகுறிப்பிடத்தக்கது.

யாழில் தொடரும் மர்மம் : மற்றுமொரு பெண் இன்று உயிரிழப்பு : அச்சத்தில் மக்கள்!!

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் பரவும் மர்ம காய்ச்சலில் பாதிக்கப்பட்டமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

முல்லைத்தீவு பெண் ஒருவர் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்த நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

முல்லைத்தீவு வட்டுவால் பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான முருகானந்தன் ஜெயனி என்ற இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காய்ச்சலில் பாதிக்கப்பட்ட ஜெயனி ஆரம்பத்தில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை ஆபத்தாக இருந்தமையினால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதே காய்ச்சல் காரணமாக முருகானந்தன் என்ற அந்த பெண்ணின் கணவர் 17 நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த நோய் என்ன என்பதனை அடையாளம் காணுவதற்காக சுகாதார அமைச்சின் விசேட வைத்தியர்கள் சிலர் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.

யாழ்ப்பாண நகர மக்கள் இந்த நோய் அமானுஷ்யமாக இருக்கலாம் என கூறுகின்றனர். இதனால் யாழ்ப்பாணம் முழுவதும் அச்சமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவில் இருவர் உயிரிழ்ந்துள்ளமையினால் இந்த அச்சம் முல்லைத்தீவிற்கும் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆலயத்திற்கு சென்று திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

மட்டக்களப்பு – தேற்றாத்தீவு பகுதியிலுள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், இதில் தேற்றாத்தீவு பழைய தபாலக வீதியைச் சேர்ந்த குமாரசாமி பூபதிப்பிள்ளை (71வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்துக்கு சென்று திரும்பும் போது திருகோணமலையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று அவரை மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிரிக்கெட் விளையாட்டு வர்த்தகப் பொருளாகிவிட்டது : மஹேல ஜயவர்தன!!

பாடசாலைகள் கிரிக்கெட் தேசிய மூன்றாண்டுகள் திட்டம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்தி பாடசாலை வீரர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெறத் தேவையான பலத்தையும், அனுபவத்தையும் பெற்றுக்கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த நிகழ்வில் இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களான சிதத் வெத்தமுனி, ரொஷான் மஹானாம, மஹேல ஜயவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

சேதமடைந்த நாணயத்தாள்களை வைத்திருந்தால் தண்டனைக்குரிய குற்றம் : உடனடியாக மாற்றுங்கள்!!

சேத­ம­டைந்த நாண­யத்­தாள்கள் நாளை முதல் செல்­லு­ப­டி­யற்­ற­தாகும். எனவே சேத­ம­டைந்த நாணயத் தாள்­களை எதிர்­வரும் ஜனவரி மாதம் முதலாம் திக­திக்கு முன்னர் மாற்றிக் கொள்­ளு­மாறு இலங்கை மத்­திய வங்கி அறி­வித்­துள்­ளது.

சிதைக்­கப்­பட்ட நாணயத் தாள்கள் மற்றும் கிழிந்த நாணயத் தாள்­களை வைத்­தி­ருப்­ப­வர்கள் அருகில் உள்ள இலங்கை மத்­திய வங்கி கிளை­களில் மாற்றிக் கொள்­ளு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாண­யத்­தாள்­களில் எழு­துதல், அவற்றை ஏதேனும் ஒரு வகையில் சிதைத்தல் மட்­டு­மல்­லாது அவற்றை வைத்­தி­ருப்­பதும் தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும் என மத்­திய வங்கி தெரி­வித்­துள்­ளது. எனவே சிதைக்­கப்­பட்ட நாண­யத்­தாள்கள் மற்றும் கிழிந்த நாண­ய­த்தாள்­களை எதிர்­வரும் முதலாம் திக­திக்கு முன்னர் இலங்கை மத்­திய வங்கி அல்­லது மத்­திய வங்கி கிளை­களில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

டிசம்பர் மாதம் 31 ஆம் திக­திக்கு பின்னர் சிதை­வுக்­குள்­ளான நாண­யத்­தாள்கள் செல்­லு­ப­டி­யற்­ற­தாகும். அவற்றை பாவ­னைக்­குட்­ப­டுத்த முடி­யாது. அத்­தோடு நாண­யத்­தாள்­களை வேண்­டு­மென்றே சேதப்­ப­டுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்கம் 58 நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப் பணம் அல்லது சிறை தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும் என்பதும் குறிப்பிடத்தக்க தாகும்.

காதலியை மணந்த கிரிக்கெட் வீரர்!!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் சகல துறை ஆட்டக்காரர் குணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் ஆவார். குணால் பாண்ட்யாவுக்கும், அவரது நீண்ட கால காதலி பன்குரி ஷர்மாவுக்கும் நேற்று முன்தினம் மும்பையில் திருமணம் நடந்தது.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் சர்மா, உரிமையாளர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

சிறந்த நடிப்புக்காக விஷால்-அமலா பாலுக்கு விருதுகள்!!

2017ம் ஆண்டிற்கான பிலிம்டுடே விருது விழா சென்னை வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நேற்று (வெள்ளி) மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

விழாவில் இந்த வருடத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த வருடத்திற்கான சிறந்த கலைஞர்களுக்கான விருது வருட இறுதியிலேயே வழங்கப்பட்டதால், முக்கிய கலைஞர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

விருது பெட்ரா கலைஞர்கள் விபரம் வருமாறு..

சிறந்த நடிகர் : விஷால், படம் துப்பறிவாளன்,
சிறந்த நடிகை : அமலாபால் படம்: வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே-2,
சிறந்த நடிகை (சிறப்பு) : தான்ய ரவிச்சந்திரன் படம் : கருப்பன், சிறந்த புதுமுக நடிகை: அதிதி பாலன், படம்: அருவி,
புதுமுக நடிகர் : நந்தன் ராம் (பள்ளி பருவத்திலே)
சிறந்த வில்லன்: எஸ்.ஜே.சூர்யா (மெர்சல்)
சிறந்த வில்லன் சிறப்பு: பிரசன்னா,
சிறந்த தயாரிப்பாளர்: எஸ்.ஆர்.பிரபு படங்கள் : மாநகரம், அருவி, தீரன் அதிகாரம் ஓன்று,
சிறந்த இசைமைப்பாளர் : டி.இமான்,
சிறந்த இசையமைப்பாளர் (சிறப்பு) : அம்ரீஷ்,
சிறந்த இயக்குனருக்கான விருது பி.வினோத் (தீரன் அதிகாரம் ஓன்று),
சிறந்த கமர்சியல் இயக்குனர் கே.வி.ஆனந்த் (கவண்),
சிறந்த இயக்குனர் சிறப்பு விருது சுசிகணேசன்
மற்றும் டி.ராஜேந்தர்,

எஸ்.ஏ.சந்திரசேகரன், குஷ்பு, தேவா, ராதா ரவி, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, உமாபதி, அம்பிகா, யோகிபாபு, முனீஸ்காந்த், ஆர்.கே.சுரேஷ், தமிழருவி மணியன் மற்றும் ஏராளமானோர் விருது பெற்றனர்.

இது 2017ம் ஆண்டிற்கான முதல் விருது விழா என்பது குறிப்பிடத்தக்கது.

கமலின் முன்னாள் மனைவிக்கு இப்படியொரு பிரச்சனை!!

நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியதோடு அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சந்தோஷமடைந்து வர வந்தார்.

ஸ்ருதியின் அம்மாவும், கமலின் முன்னாள் மனைவியுமான சரிகா பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ருதியின் அம்மா சரிகா கடந்த நவம்பர் மாதம் தன் தாயை இழந்தார். அதற்கு பின் அவருக்கு எதிர்பாராத பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. மராட்டிய சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான சரிகா, தான் சம்பாதித்த பணத்தில் தன் அம்மா மூலம் பெரிய அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியிருந்திருக்கிறார்.

ஆனால் அவரின் அம்மா இறப்பதற்கு முன் இந்த சொத்தை தன் குடும்ப நண்பரான டாக்டர் ஒருவரின் பெயரில் உயில் எழுதி வைத்துவிட்டாராம். விசயம் தெரிந்த சரிகா பெரும் அதிர்ச்சியாகியுள்ளார் சொந்த வீடு இல்லாமல் தவித்ததோடு, நீதிமன்றத்தில் சொத்து வழக்குக்காக அலைந்தார்.

இந்நிலையில் இவரது தோழியான நுஸ்ஸத் தன் அண்ணனான நடிகர் அமீர் கானிடம் விசயத்தை சொல்லியிருக்கிறார். அமீர்கான் அவருக்கு உதவி செய்துள்ளார்.

தற்போது தங்க வீடு இல்லாமல் இருக்கும் சரிகா, ஸ்ருதி வாங்கியுள்ள வீட்டில் தான் தங்கியிருக்கிறாராம்.

இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கு குடியுரிமை வழங்க கட்டணம் : மக்கள் குற்றச்சாட்டு!!

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கான இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் 25,000 ரூபாய் கட்டணம் அறவிடுவதாக ஈழ புகலிடக் கோரிக்கையாளர் புனர்வாழ்வு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

யுத்தம் காரணமாக சட்டவிரோதமான முறையில் இந்தியா நோக்கி சென்ற இலங்கை அகதிகளின் சுமார் 25 பிள்ளைகள் தற்போது நாடற்றவர்களாக இருக்கின்றார்கள் என அந்த அமைப்பின் ஸ்தாபர் சீ.சந்திரதாஸன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாடற்றவர்கள் என்ற நிலைமையை மாற்றியமைக்க தமது முயற்சியின் பயனாக இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினால் தற்காலிக குடியுரிமையொன்று வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை திரும்பும் குறித்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் 25 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கட்டணமாக அறவிடுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

தமது உயிரை பணயம் வைத்து, எந்தவித ஆவணங்களும் இன்றி இந்தியாவிற்கு சென்று மீண்டும் தாயகம் திரும்பும் இலங்கை அகதிகளுக்கு இவ்வாறு கட்டணம் அறவிடப்படுகின்றமை சட்டவிரோதமான நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இலங்கைக்கு திரும்பும் குறித்த இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கான குடியுரிமையை பெற்றுக் கொள்ள கட்டணம் அறவிடப்படக் கூடாது என சந்திரதாஸன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை அமைச்சரவை விரைவில் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைக்கு மீள திரும்பும் இலங்கை அகதிகளின் பிள்ளைகளை நல்லிணக்க செயற்பாடுகளுடன் இணைந்துக் கொள்ளவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ புகலிடக் கோரிக்கையாளர் புனர்வாழ்வு அமைப்பின் ஸ்தாபர் சீ.சந்திரதாஸன் குறிப்பிட்டுள்ளார்.

-பிபிசி-

30 வயதுப் பெண் சடலமாக கண்டெடுப்பு!!

 
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலமொன்றை நோட்டன் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சுந்தரலிங்கம் சிவகுமாரி என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

திருமணம் முடித்து ருவன்புர பகுதியில் வசித்து வந்த குறித்த பெண், தாய் வீட்டிற்கு வந்திருந்த நிலையிலே நீர்த்தேக்கத்தின் கரையோர பகுதியில் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நோயினால் பாதிக்கப்படிருந்த குறித்த பெண்ணிண் பாதனிகள் நீர்தேக்கத்தின் கரையோரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது

சடல்த்தை ஹட்டன் மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின் பிரேத பரிசோதனைக்கு நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்தாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

17 மா மூடைகளை வாயால் கவ்வி 30 மீற்றர் தூரம் சுமந்து கின்னஸ் சாதனை!!

 
இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊழியரான ஜனக காஞ்சன முதன்நாயக்க பார்வையாளர்கள் முன்னிலையில் ஒவ்வொன்றும் 50 கிலோ நிறை கொண்ட 17 மா மூடைகளை 30 நிமிடங்களுக்குள் 30மீற்றர் தூரம் கொண்டு சென்று கின்னஸ் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

ஏற்கனவே இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை நிலைநாட்டியுள்ள அவருக்கு இது மூன்றாவது கின்னஸ் உலக சாதனையாகும்.

தனது தந்தை ஏற்கனவே ஏழு கின்னஸ் உலக சாதனைகளை நிலைநாட்டியிருப்பதாக கூறிய அவர் அதனிலும் அதிகமாக 18 கின்னஸ் உலக சாதனைகளை நிலைநாட்டி தாய் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே தனது இலட்சியம் என்றும் அவர் கூறினார்.

சமூக வலுவூட்டல் நலன்புரி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வை மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.

எவ்வாறாயினும் இரண்டு 50 கிலோகிராம் நிறை கொண்ட மா பைகளை அவரால் முழுமையாக 30 மீற்றர் தூரம் கொண்டு செல்ல முடியாமையினால் அவை சாதனையாக கருதப்படவில்லை.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர், பார்வையாளர்களால் எடுக்கப்படும் ஔிப்பதிவு நாடா கின்னஸ் உலக சாதனை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வவுனியாவில் வரலாற்றில் முதன்முறையாக ஆதிவாசிகளுடன் கிரிக்கெட் போட்டி!!

வரலாற்றில் முதன்முறையாக வவுனியாவில் ஆரம்பமாகியுள்ள ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக மக்கள் ஆவலுடன் திரண்டுள்ளனர்.

குறித்த போட்டி வவுனியா – யங்ஸ்டார் மைதானத்தில் இன்று(30.12) காலை ஆரம்பமாகியுள்ளது.

இந்த போட்டியில், ஆதிவாசிகளின் கிரிக்கெட் குழுத் தலைவராக ஆதிவாசிகளின் உப தலைவர் புஞ்சி பண்டியா களமிறங்கியுள்ளார்.

இவர்களுடன் மோதுவதற்கு, வவுனியா மாவட்ட இளைஞர்கள் குழு, பொலிஸ் குழு, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்கள் குழு மற்றும் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் குழு என்பன களமிறங்கியுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னகோன், உதவி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிய ஸ்ரீ பெர்ணான்டோ, வவுனியா பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரி மஹிந்தவில்லு ஆராய்ச்சி மற்றும் ஆதிவாசிகளின் உப தலைவர் புஞ்சி பண்டியா ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி : வவுனியாவில் வரலாற்றிலேயே முதன்முறையாக ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டி!!

வவுனியாவில் வரலாற்றிலேயே முதன்முறையாக ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டி!!

 
வரலாற்றிலேயே முதன்முறையாக வவுனியாவில் ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டிகள் வவுனியா – யங்ஸ்டார் மைதானத்தில் நாளை (30.12) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

இதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னகோன், உதவி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியஸ்ரீ பெர்ணான்டோ, வவுனியா பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரி மஹிந்தவில்லு ஆராய்ச்சி மற்றும், ஆதிவாசிகளின் உப தலைவர் புஞ்சி பண்டியா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன் ஆரம்ப நிகழ்வாக ஆதிவாசிகளின் வரவேற்பு நடனம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதில், ஆதிவாசிகளின் கிரிக்கெட் குழுவின் தலைவராக ஆதிவாசிகளின் உப தலைவர் புஞ்சி பண்டியா களமிறங்கவுள்ளார்.

இவர்களுடன் வவுனியா மாவட்ட இளைஞர்கள் குழு, பொலிஸ் குழு, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்கள் குழு மற்றும் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் குழு ஆகியன மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[news_list title=”இவற்றையும் படியுங்கள்” count=”10″ show_more=”on” show_more_type=”link” header_background=”#5681a0″ header_text_color=”#ffffff” hide_dots=”yes”]

வவுனியா உயர் தொழில்நுட்பவியல் நிறுவன மாணவர்களால் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள்!!

வவுனியா உயர் தொழில் நுட்பவியல் நிறுவன இயக்குனர் பெ.இளங்குமரன் தலைமையில் ஆழிப்பேரலை நாளின் நினைவாக வறுமைகோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

இதன்போது ஓமந்தை வேப்பங்குளம், நொச்சிமோட்டை மற்றும் கற்குளம் கிராமங்களை சேர்ந்த பெண்களை தலைமைத்துவமாக கொண்டதும், கல்விகற்பதற்கு போதிய வசதி கொண்டிராத வறுமைகோட்டிற்கு உட்பட்ட 09 குடும்பங்களில் உள்ள 22 பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் மாணவர்களினால் வழங்கப்பட்டது.

சொந்த மனைவியை அவரின் காதலனுக்கு திருமணம் செய்துவைத்த கணவன்!!

மனைவியை அவர் காதலிக்கும் நபருக்கே கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலத்தின் ஹஜிபூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அருண்குமார் என்பவருக்கும் மது குமாரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகிய நிலையில் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வேலை விடயமாக அருண்குமார் அடிக்கடி வெளியூர் சென்ற நிலையில் மதுவுக்கு ஸ்ரவான் குமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் தனிமையில் இருந்ததை பார்த்த ஊர் மக்கள் இது குறித்து அருண்குமாரிடம் கூறியுள்ளனர். இந்த வழக்கு ஊர் பஞ்சாயத்திடம் சென்ற நிலையில் ஸ்ரவான் குமாருடன் தான் சேர்ந்து வாழ விரும்புவதாக மது கூறியுள்ளார்.

இதையடுத்து மனதை கல்லாக்கி கொண்டு மதுவின் கணவர் அருண்குமார் மனைவியை அவர் காதலனுடன் சேர்த்து வைக்க முடிவெடுத்தார்.

அதன்படி மதுவுக்கும், ஸ்ராவன் குமாருக்கும் கோவிலில் அருண்குமார் திருமணம் நடத்தி வைத்தார். மேலும், சட்ட சிக்கல் வரக்கூடாது என திருமணத்தை நீதிமன்றத்திலும் பதிவு செய்து கொடுத்துள்ளார். தம்பதியை மனதார வாழ்த்தி அனுப்பிய அருண்குமார் தன் இரு குழந்தைகளையும் மதுவிடம் ஒப்படைத்துள்ளார்.

 

[news_list title=”இவற்றையும் படியுங்கள்” count=”10″ show_more=”on” show_more_type=”link” header_background=”#5681a0″ header_text_color=”#ffffff” hide_dots=”yes”]

அப்பாவால் இப்படி ஆனேன் : ஜப்பான் மில்லியனரின் நெகிழ்ச்சிக் கதை!!

 
அப்பா விட்டுச் சென்ற ரெசிப்பியின் குறிப்பால் தான் இன்று இந்த அளவு வளர்ச்சி அடைய முடிந்துள்ளதாக ஜப்பானின் மில்லியனர் தெரிவித்துள்ளார்.

தெற்கு ஜப்பானின் ஒசகா பகுதியைச் சேர்ந்தவர் ஹிரோய்-டனகா(Hiroe-Tanaka). ரியல் எஸ்டேட் தொழில் புரிந்து வந்த இவரின் தந்தை, ஒசகாவின் முக்கிய உணவான குஷிகட்சு(Kushikatsu)-வை மிகவும் ருசியாக சமைப்பதில் வல்லவர்.

சிக்கனுடன் காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படும் அந்த உணவுதான் அவரின் மகளான ஹிரோயிக்கும் மிகவும் பிடித்த உணவாக இருந்துள்ளது.

திடீரென ஒருநாள் ஹிரோயின் தந்தை இறந்துவிட, அத்துடன் அந்த ரகசிய ரெசிப்பியும் இறந்துவிட்டதாக ஹிரோய் உட்பட அனைவரும் நினைத்துள்ளனர்.

ஹிரோயி 21வயதில் இருந்தபோதே அவரின் தந்தை மறைந்து விட்டதால் அவரால் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் போக, நண்பர் கைஜி நுகி நடத்தி வந்த உணவகத்தில் சமையல் கலை நிபுணராக பணியில் அமர முடிவு செய்தார்.

அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் அப்பாவின் கைப்பக்குவம் வராமல் தவித்தபோது 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியால் உணவகத்தை மூடிவிட நண்பர் கைஜி முடிவு செய்துள்ளார்.

அப்போதுதான் அதிர்ஷ்டவசமாக வீட்டின் ஒரு பெட்டியில், அப்பா விட்டுச் சென்ற அந்த ரெசிப்பியின் குறிப்புகள் கிடைத்துள்ளது. அதன்பின் மிகவும் உற்சாகமான ஹிரோயி மத்திய டோக்கியோ பகுதியில் சிறிய அளவில் உணவகத்தை துவக்கியுள்ளார்.

ஆரம்பம் முதலே குவிய தொடங்கிய கூட்டம், ஒரு கட்டத்தில் வாகன நெரிசல் ஏற்படும் அளவிற்கு ஒரு மணி நேரம் ஆனாலும் காத்திருந்து உணவை உட்கொள்ளும் தீவிர உணவுப் பிரியர்களின் வருகையால் கலைகட்டியுள்ளது.

தற்போது 46 வயதாகும் ஹிரோய் 146 உணவகங்களுக்கு சொந்தக்காரர் மட்டுமல்லாது ஜப்பானின் மல்டி-மில்லியனர்களுள் ஒருவராகவும் வளர்ந்துள்ளார்.

அப்பா விட்டுச் சென்ற அந்த ரெசிப்பி மட்டும் இல்லையென்றால் என்றோ காணாமல் போயிருப்பேன் என அவரே கூறுவது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

[news_list title=”இவற்றையும் படியுங்கள்” count=”10″ show_more=”on” show_more_type=”link” header_background=”#5681a0″ header_text_color=”#ffffff” hide_dots=”yes”]