வவுனியா புகையிரத நிலைய வீதியில் முச்சக்கரவண்டி விபத்து : இருவர் படுகாயம்!!

 
வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (27.12.2017) இரவு 7 மணியவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரிலிருந்து வைரவப்புளியங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள இலங்கை வங்கிக்கு அருகே மற்ரொரு முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாயமான மகள்: வைரலாகும் தாயின் உருக்கமான பதிவு!!

பிரித்தானியாவில் 21 வயதான இளம்பெண் திடீரென மாயமான நிலையில் அவரது தாயாரின் பேஸ்புக் பதிவு வைரலாகியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி Lynn, இவரின் 21 வயது மகள் சோபியா, நேற்று அதிகாலை 3 மணியளவில் காணாமல் போயியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த Lynn பொலிசில் புகார் அளித்தார். எனினும் இதுவரை அப்பெண் கிடைக்காததால், பேஸ்புக் பக்கத்தில் சோபியாவிற்கு தகவல் அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

அதில், சோபியா ஸ்மித், நீ தான் என் உலகம். உன்னை பாதுகாக்க நான் ஏன் தவறினேன் என்று தெரியவில்லை. தயவுசெய்து என்னிடம் வந்துவிடு என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த சோபியாவின் நண்பர் ஒருவர், சமூக வலைதளத்தில், ‘சோபியா ஸ்மித் என்ற பெண், அதிகாலை மூன்று மணியளவில் Gorleston நகரில் உள்ள Avondale road/bells road பகுதியில் காணாமல் போயுள்ளார்.

சுமார் 5 அடி 6 அங்குலம் உள்ள குறித்த பெண், Leggings உடை அணிந்திருந்தார். இவரை கண்டால் உடனடியாக அவரின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
நீங்கள் ஒருவேளை வணிகராக இருந்தால், உங்கள் பகுதியில் உள்ள CCTV கமராக்களில் பதிவான காட்சிகளை, உடனடியாக ஆய்வு செய்து தகவல் தெரிவித்து உதவுங்கள்.

ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகளைக் கொண்டு வெளியில் தேடுவதில் ஒரு பயனும் இல்லை. எனவே, உங்களின் தகவல் தான் உதவும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கடற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், காணாமல் போன 21 வயது இளம் பெண்ணை தேடும் பணியில் கடற்படையுடன் காவல்துறை அதிகாரிகளும் இணைந்துள்ளனர்.

கடந்த 9 மணிநேரமாக ஹெலிகாப்டரின் உதவியுடன் தேடி வருகிறோம். இனியும் தேடும் பணி தொடரும். எவருக்கேனும் அப்பெண் குறித்த தகவல் தெரிந்தால், உள்ளூர் பொலிசாரை உடனடி தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்மார்ட்போனில் விவாகரத்து கூறிய கணவன்: கதறும் மனைவி!!

ஓமன் நாட்டை சேர்ந்த கணவர் தன்னுடைய மனைவிக்கு போனில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.

ஓமனை சேர்ந்த சைத் ஜஹ்ராப் அலி என்பவருக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த கவுசியா பேகம் என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட சைத், ஏழு பெண்களில் இருந்து கவுசியாவை தெரிவு செய்தார். திருமணம் முடிந்து சில நாட்கள் அவருடன் தங்கி இருந்தவர் ஓமன் நாட்டுக்கு சென்று விட்டார்.

ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா வரும் சைத், மனைவியுடன் சந்தோஷமாக இருந்துவிட்டு செலவுக்கு பணத்தை கொடுத்துவிட்டு செல்வது வழக்கமாம்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் போன் செய்த ஹைத், மூன்று முறை முத்தலாக் கூறி விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கவுசியா, கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத்தரக்கோரி வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் எனது உறவினர்கள் மூலம் திருமணம் நடந்தது, 10 லட்சம் மதிப்பிலான வீட்டை வாங்கித் தருவதாக கூறி திருமணம் செய்து கொண்டார். ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வந்து என்னை பார்த்துவிட்டு செல்வார், செலவுக்கும் பணம் தருவார்.

திடீரென ஆகஸ்ட் மாதம் போன்று செய்து முத்தலாக் கூறினார், என் தந்தையும் இறந்துவிட்டார், தாயை பராமரிக்க ஆள் இல்லை. திருமணம் செய்து வைத்த என் உறவினர்களிடம் கூறினால், வேறொரு ஆளை திருமணம் செய்து கொள் என்கிறார்கள்.

எனது கணவரிடம் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆண் வேடமிட்டு 3 பெண்களை திருமணம் செய்தது ஏன்? இளம்பெண்ணின் பதில்!!

ஆந்திர மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் ஆண் போன்று வேடமிட்டு 3 பெண்களை திருமணம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் நிறுவனத்தில் பணியாற்ற வந்த ரமாதேவி(21) தன்னுடன் பணியாற்றிய சாந்தி(18) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரமாதேவி ஒரு பெண் என்பது கூட தெரியாமல், சாந்தியும் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணத்திற்கு பின்னர்தான் ரமாதேவி ஒரு பெண் என்பது தெரியவந்ததையடுத்து, தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, சாந்தியின் பெற்றோர் ஜம்மலமொடுகு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த பொலிசார், சாந்தியை மீட்டதுடன் ரமாதேவியை நேற்று கைது செய்தனர்.

விசாரணையில் சாந்தி மட்டுமல்ல, இதற்கு முன்னர் இரு பெண்களையும் காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரிவந்தது.

பெண்ணாக இருந்து கொண்டு பெண்களையே திருமணம் செய்துகொள்ள காரணம் என்ன? என பொலிசார் கேட்டதற்கு, எனக்கு ஆண்களைப் பிடிக்கவில்லை என்றும் எனவேதான், ஆண் போல வேடமிட்டு பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறேன் என பதிலளித்துள்ளார்.

மனைவியின் கல்லறையிலேயே தற்கொலை செய்து கொண்ட கணவன் : நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு பட்டம் சுமத்தியதில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்க முடியாமல் கணவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிகண்டன்- வசந்தி தம்பதியினருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர், வசந்தி அருகில் உள்ள சூப்பர்மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.

சூப்பர்மார்க்கெட் உரிமையாளரின் வீட்டின் நகைகளை காணவில்லை என்றும் அதனை வசந்தி தான் எடுத்துள்ளார் என அவர் மீது திருட்டுபட்டம் சுமத்தப்பட்டது. இதனால் மனவேதனையடைந்த வசந்தி, இதுகுறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார்.

இதனைகேட்ட மணிகண்டன், இனிமேல் நீ வேலைக்கு போகவேண்டாம் என வசந்தியிடம் கூறியுள்ளார். இருப்பினும் வேதனை அடைந்த வசந்தி கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலைக்கு முன் இரு பக்க கடிதமும் எழுதி வைத்து இருந்தார். இதன் அடிப்படையில் கடையாலுமூடு போலீசார் விசாரணை நடத்தி, சூப்பர் மார்க்கெட் உரிமையாளரின் மனைவி சுகிலா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், வசந்தி இல்லாத உலகில் என்னால் வாழ இயலாது, அவள் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை என்று வசந்தியின் பெற்றோரிடம் புலம்பி தவித்துள்ளார்.

இந்நிலையில், தனது மனைவியின் கல்லறையிலேயே மணிகண்டன் விஷம் குடித்து இறந்துபோனார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3 மாநிலங்களை அதிர வைத்த பாலியல் தொழில் : 16 வயது சிறுமியின் வாக்குமூலம்!!

இந்தியாவின் டெல்லி, உத்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பாலியல் தொழில் செய்து புகழ்பெற்றவர் சோனு பஞ்சபான்.

இவரை கடந்த 2011ம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்தும், சாட்சி ஏதும் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். 2012ம் ஆண்டு 16 வயது சிறுமி தைரியமாக வாக்குமூலம் அளிக்க முன்வந்தார், தான் சோனு பஞ்சபான்னிடம் சிக்கியது குறித்தும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டது குறித்தும் தெரிவித்தார்.

ஆனால் சிறுமியின் வாக்குமூலம் வெளியாகும் முன்பே தலைமறைவானார், இதனையடுத்து சிறுமியை பற்றி பொலிசார் விசாரிக்க தொடங்கியதில் 2009ம் ஆண்டு காணாமல் போனவர் என்பதும், 11 பேரிடம் கைமாறி கடைசியாக சோனு பஞ்சபானிடம் வந்து சேர்ந்ததும் தெரியவந்தது.

மேலும் சோனுக்கு பயந்தே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது, இந்நிலையில் ஒருவழியாக சிறுமியை கண்டுபிடித்த பொலிசார், சோனு பஞ்சபானை கைது செய்துள்ளனர்.

இவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதுடன் குற்றத்தையும் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது, இதன்மூலம் மூன்று மாநிலங்களிலும் பாலியல் தொழில் தடுத்து நிறுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனிமேல் பேஸ்புக் உங்களை எச்சரிக்காது!!

எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பலன் தராததால் போலிச் செய்திகளைக் காட்டும் சிவப்பு நிற எச்சரிக்கை சின்னத்தை இனி அந்தப் பதிவுகளின் அருகே காண்பிக்கப் போவதில்லை என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

போலிச் செய்திகளை பரிசோதனை செய்யும் வலைத் தளங்களால் பொய் என்று உறுதிசெய்யப்பட்ட செய்திகளின் அருகே கடந்த டிசம்பர் 2016 முதல் அந்த சர்ச்சைக்குரிய சின்னத்தை ஃபேஸ்புக் நிறுவனம் காட்டத் தொடங்கியது.

சிகப்பு நிற எச்சரிக்கை சின்னத்துக்குப் பதிலாக இனி தொடர்புடைய செய்திகளை அந்தப் போலிச் செய்திகளின் அருகில் காண்பிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

“சிகப்பு நிறக் குறியீட்டைப் போன்ற வலிய சின்னங்களை அந்தப் போலிச் செய்திகளுக்கு அருகில் வைப்பதால் அது அச்செய்தி மீது ஆழமான நம்பிக்கையை உருவாக்குகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது எங்கள் நோக்கத்திற்கு நேர் எதிரானது,” என்று அந்நிறுவனத்தின் டெஸ்ஸா லயான்ஸ் கூறியுள்ளார்.

அந்த எச்சரிக்கை சின்னம் காண்பிக்கப்படுவதால் போலிச் செய்திகள் படிக்கப்படுவது குறையாவிட்டாலும், அவை பகிரப்படுவது குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இனிமேல் எச்சரிக்கை சின்னம் காண்பிக்கப்படுவதற்கு பதிலாக உண்மைத் தன்மை உறுதிசெய்யப்பட்ட செய்திகள் அந்தப் பதிவுகளின் அருகில் காண்பிக்கப்படும்.

வவுனியாவில் எயிட்ஸ் நோய் அதிகரிக்க பாலியல் தொழிலே காரணம்!!

வவுனியாவில் பாலியல் தொழில் காரணமாக இந்த வருடம் மாத்திரம் 20 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட வைத்திய கலாநிதி கு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

எயிட்ஸ் நோயின் பாதிப்பு தொடர்பாக இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வவுனியாவில் கடந்த காலத்தை விட தற்போது எயிட்ஸ் நோய் பரவுவதற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் நடைபெறும் பாலியல் தொழிலே காரணமாகும்.

வவுனியாவில் இவ்வாறான பாலியல் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 2766 பேர் எயிட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதில் வவுனியாவில் 20 பேர் இந்நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் வைத்திய கலாநிதி கு.சந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அதிநவீன கார் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்!!

 
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிசொகுசு வாகனம் ஒன்று வந்திறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையின் பிரபல எவென்ரா ஹோட்டல் நிறுவனத்தினால் இந்த மோட்டார் வாகனம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பெராரி 488 Spyder என அழைக்கப்படுகின்ற வாகனமே இவ்வாறு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரகத்திலான இந்த மோட்டார் வாகனம் 10 நொடியில் 100 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லக் கூடியது என குறிப்பிடப்படுகின்றது.

இந்த வாகனத்தின் வரியுடன் கூடிய விலை 1000 இலட்சம் அல்லது 100 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் லெம்போகினி கார் தொடர்பான தகவல்கள் பெரிதும் பேசப்பட்டன. இந்நிலையில் புதிய கார் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

தெற்காசியாவில் முதலிடம் பிடித்த இலங்கை!!

உலக உணவு பாதுகாப்பு சுட்டெண்ணில் தெற்காசியாவில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

பிரித்தானியாவில் இயங்கும் பொருளாதார புலனாய்வு பிரிவு டுபொன்ட் நிறுவனத்தின் உதவிக்கமைய வருடாந்தம் இந்த சுட்டெண் தயாரிக்கப்படுகின்றது.

உலகின் 113 நாடுகளில் இலங்கைக்கு 66வது இடம் பிடித்துள்ள நிலையில், தெற்காசியாவில் முதலிடம் பிடித்துள்ளது.

இலகுவாக பெற்றுக் கொள்ள கூடிய துல்லியம், தரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய பிரதான 3 விடயங்களின் கீழ் 28 துறைகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அடுத்து தெற்காசியாவில் அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்த சுட்டெண்ணில் அயர்லாந்து முதலாம் இடத்திலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது மற்றும் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

கொழும்புக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய எச்சரிக்கை!!

கொழும்பு விரைவில் புதுடெல்லியை போன்று வளி மாசடைதல் நிலைமையை எதிர்கொள்ளும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல்துறை நிதியப் பணிப்பாளர் சஞ்சீவ சாமிக்கர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கொழும்பில் நாள்தோறும் பாரியளவில் வளி மாசடைதல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாரிய நிர்மாணப் பணிகளின் மற்றும் வாகனங்களின் அதிகரிப்பு காரணமாகவே இந்த நிலைமைஏற்பட்டுள்ளது.

கொழும்பு சிட்டி திட்டமும் வளி மாசடைதலுக்கு காரணமாக உள்ளது என்று சாமிக்கர சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணிலை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய சிறுவன்!!

 
நுவரெலியாவில் சிறுவர்களுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நத்தார் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

நுவரெலியா கெமுனு மாவத்தையில் அமைந்துள்ள பெய்ன்டர் மற்றும் எஸ்.ஓ.எஸ் சிறுவர் இல்லங்களை சேர்ந்த சிறுவர்களுடன் பிரதமர் நத்தார் கொண்டாடியுள்ளார்.

நத்தார் தினத்தன்று மாலை முதலாவதாக பெய்ன்டர் சிறுவர் இல்லத்திற்கு பிரதமர் சென்றுள்ளார். அங்கு நத்தார் கரோல் கீதங்களுக்கு செவிமடுத்த பிரதமர் அங்குள்ள 38 பிள்ளைகளுக்கு பரிசு வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து அங்கு கண்கானிப்பு விஜயம் ஒன்றையும் பிரதமர் மேற்கொண்டுள்ளார்.

அதன் பின்னர் நுவரெலியா எஸ்.ஒ.எஸ் சிறுவர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள 120 சிறுவர்களுக்கு பிரதமர் பரிசு வழங்கியுள்ளார்.

இதன்போது எதிர்பாரத வகையில் சிறுவன் ஒருவர் புகைப்படம் வழங்கி, பிரதமரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த விஜயத்தின் போது பிரதமருடன் அவரின் மனைவியும் கலந்து கொண்டுள்ளார்.

பணிப்பெண்ணாக சவுதிக்கு சென்ற தாய் உருக்குழைந்து பிணப் பெட்டியில் வீட்டிற்கு வந்த சோகம்!!

சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்று அங்கு இரண்டு மாடிக்கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து மூன்று ஆண்டுகளாக அந் நாட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தனது தாயின் உடலை மீட்டுத் தருமாறு கெகிராவ, கிதுல்ஹிடியாவ பிரதேசத்தைச் சேர்ந்த உயிரிழந்த தாயின் மகன் ஊடகங்கள் மூலமாக கோரிக்கை விடுத்திருந்தார்.

கோரிக்கை விடுக்கப்பட்டதற்கமைவாக உயிரிழந்து ஒரு மாதம் கடந்த நிலையில் வெளிவிவகார அமைச்சர் தலதா அதுகோரள தலையிட்டு அரச செலவில் உயிரிழந்த தாயின் உடல் நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு முடியாத அளவிற்கு உடல் உருக்குழைந்து காணப்பட்டதால் குறித்த தாயின் உடல் பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய தாயை அடையாளம் காணமுடியாத அளவிற்கு அவரின் உடல் உருக்குழைந்து காணப்பட்டதாகவும் அவரின் கால் நகம் ஒன்று இல்லாமல் இருந்த நினைவு தனக்கு தோன்றவே அதை வைத்தே தங்களிடம் ஒப்படைக்கப்பட்டது தனது தாயின் உடல் என அடையாளம் கண்டு கொண்டதாக என்.கே.ஏ.கனுஷ்க தேராஜ் என்ற உயிரிழந்த தாயின் மகன் தெரிவித்துள்ளார்.

கிதுல்ஹிடியாவ பிரதேசத்தில் வசிப்பிடமாக கொண்ட தீபானி குமாரசிரி என்ற உயிரிழந்த குறித்த தாய் 2011ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்று 2013ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு ஏற்பாடு செய்திருந்த வேளை அவர் வேலை செய்த வீட்டில் சம்பளம் வழங்காது வீட்டில் சிறை வைத்து வேலை வாங்கியதாக கனுஷ்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும் பல மாதங்களாக தாயிடமிருந்து எது வித தகவலும் இல்லாத நிலையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்த பின்னரே தனது தாய் இரண்டு மாடிக் கட்டிடத்திலிருந்து விழுந்து அந் நாட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்தள்ளது.

அதன் பிறகு கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி தனது தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திலிருந்து உயர் அதிகாரி ஒருவர் தொலைப்பேசி ஊடாக தொடர்பு கொண்டு அறிவித்ததாகவும் கனுஷ்க தெரிவித்தார்.

சவுதி அரேபியாவில் வான்வெளித் தாக்குதல் : 25 பேர் பலி!!

 
சவுதி அரேபியாவில் கூட்டுப் படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏமன் நாட்டு ஜனாதிபதி அலி அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேசமயம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையும் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏமன் நாட்டு மேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிறைந்துள்ள பகுதியின் மீது சவுதி அரேபிய கூட்டுப்படையினர் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அதே பகுதியில் வசித்து வந்த குழந்தைகள் உள்பட 25-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 15-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 48 மணி நேரத்தில் கூட்டுப் படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் 70-க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காதல் விவகாரத்தில் மோதல் : ஒருவர் கொலை!!

இரத்தோட்டை – எலகலவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காதல் தொடர்பு காரணமாக இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தில் பலியானவர் 46 வயதான ஒருவராகும். அத்துடன், 27 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

கோலியின் திருமண விருந்துபசாரத்தில் இலங்கை இரசிகர்!!

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரின் திருமண விருந்துபசாரம் மும்பையில் நடைபெற்றது.

இதில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள், நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் என பலர் கலந்துக்கொண்டனர்.

மேலும் இந்த விருந்துபசாரத்திற்கு இலங்கை அணியின் தீவிர இரசிகரான கயான் சேனானாயக்கவையும் கோலி அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.