உலகத்தை கண்காணிக்க போகும் புதிய தொலைநோக்கி : நாசாவின் விண்வெளி திட்டம்!!

உலகத்திலேயே பெரிய தொலைநோக்கி ஒன்றை நாசா விண்ணுக்கு அனுப்ப இருக்கிறது. இந்த திட்டம் விண்வெளி உலகில் பெரிய மைல் கல்லாக இருக்கும் என்று நாசா கூறியுள்ளது.

இந்த தொலைநோக்கி மூலம் உலகத்தை புதிய தோற்றத்தில் பார்க்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த தொலைநோக்கி கேமரா போலவும் செயல்படும்.

இதனால் நாள் முழுக்க உலகத்தை கவனிக்க முடியும். சில முக்கிய கண்காணிப்பு பணிகளுக்கு இந்த தொலைநோக்கியை பயன்படுத்தலாம்.

நாசா அனுப்பும் இந்த தொலைநோக்கிக்கு ”வைட் பீல்ட் இன்ஃப்ராரெட் சர்வே டெலிஸ்கோப்” பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

இது டார்க் எனர்ஜி குறித்து ஆராய உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுவரை உலகில் இருக்கும் அறிவியல் கோட்பாடுகள் அனைத்தையும் இந்த தொலைநோக்கி முடிவிற்கு கொண்டு வர வாய்ப்பு இருப்பதாகவும் நாசா கூறியுள்ளது.

பொதுவாக விண்வெளியில் இருக்கும் ‘ஹப்பிள்’ ரக தொலைநோக்கிகளே இதிலும் பயன்படுத்தப்படும். ஆனாலும் இதில் மிகவும் பெரிய அளவில் அந்த தொலைநோக்கி அனுப்பப்படும்.

ஒரு சிறிய தொலைநோக்கி அனுப்பும் 10 புகைப்படத்திற்கு சமமாக இந்த பெரிய தொலைநோக்கி ஒரு புகைப்படம் அனுப்பும். அதில் இருப்பதை விட 100 மடங்கு அதிக இடத்தை இதில் பார்க்க முடியும்.

இதன் மூலம் உலகத்தின் மொத்த புகைப்படத்தையும் எடுக்க முடியும். மேலும் நாம் பார்க்காத இடங்கள் குறித்தும் மிக எளிதாக புகைப்படம் எடுக்க முடியும்.

எத்தனை ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் இது துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்பும். மேலும் பூமியையும் தேவைப்படும் சமயங்களில் துல்லியமாக கண்காணிக்க முடியும்.

இந்த திட்டம் நாசா வரலாற்றில் மிகவும் பெரிய திட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை நாசா விண்வெளி துறையில் செலவு செய்ததை விட இதற்கு அதிக செலவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

இதனால் இந்த திட்டம் நிறைவடைய எப்படியும் 2020 மே மாதம்ஆகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

யாழில் பீதியை ஏற்படுத்தியுள்ள பேய் நடமாட்டம் : புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை?

யாழ். மாநகர சபையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள சிற்றங்காடி வியாபார தொகுதியில் அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் பேய், பிசாசு நடமாட்டம் மற்றும் அமானுஷ்ய சக்திகள் குறித்து இன்று காலை முதல் பலரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக யாழ். சிற்றங்காடி தொகுதியின் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாநகர சபையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள சிற்றங்காடி வியாபார தொகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வியாபாரிகள் உள்ளிட்ட அவர்களின் உறவினர்கள் என ஒன்பது பேர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனைவரும், திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக குறித்த சிற்றங்காடி வியாபார தொகுதியின் வியாபாரிகள் கவலை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், இந்த சிற்றங்காடியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் நட்டத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பகுதியில் நடமாடும் அமானுஷ்ய சக்திகள் தான் இதற்கெல்லாம் காரணம் என வியாபாரிகள் கவலை வெளியிட்டிருந்த நிலையில், அது குறித்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையிலலேயே தற்போது அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் குறித்து பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் வர்த்­த­கரை கடத்தி கப்பம் கோரிய மூன்று பேர் கைது!!

வவு­னி­யாவில் வர்த்­தகர் ஒரு­வரைக் கடத்தி கப்பம் கோரி­ய­தாக கூறப்­படும் மூவரைக் கைது செய்­த­தாக பொலிஸார் தெரிவித்தனர். யுக்­ரே­னுக்கு அடிக்­கடி சென்­று­வரும் வவு­னியா, வேப்­பங்­குளம் பகு­தியைச் சேர்ந்த அருந்­ததிராசா என்­ப­வரை கடத்தி 15 இலட்சம் ரூபா கப்பம் கோரி­ய­தாக கூறப்­படும் மூவரையே இவ்­வாறு கைது செய்­த­தாக பொலிஸார் தெரிவித்தனர்.

உக்­ரேனில் இருந்து நாட்­டுக்கு வந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி வவு­னியா நக­ரத்­துக்கு சென்ற குறித்த வர்த்­தகர் காணாமல் போயுள்­ள­தாக அவ­ரது சகோ­த­ர­ரினால் வவு­னியா பொலிஸ் நிலை­யத்தில் முறை­யி­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் வவு­னியா பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போன குறித்த வர்த்­தகர் , வவு­னியா பொலிஸ் நிலையம் திரும்­பி­யுள்ள நிலையில், தான் வவு­னியா நக­ருக்கு சென்ற போது முச்­சக்­கர வண்­டியில் வந்த சிலர் தன்னை கடத்திச் சென்­ற­தா­கவும் குடும்­பத்தார் பணம் வழங்­காமல் இழுத்­த­டித்­த­மையால் தன்னை விடு­வித்­த­தா­கவும் அவர் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் தன்னை அவர்கள் பளை பிர­தேச வீடொன்றில் தடுத்து வைத்­தி­ருந்­த­தா­கவும், 15 இலட்சம் ரூபாவை விடு­வித்த பின்னர் சென்று வழக்­கு­வ­தாக காகிதம் ஒன்றில் எழுதி கையெ­ழுத்து வழங்­கிய பின்­ன­ரேயே விடு­வித்­த­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் விசா­ரணை செய்த பொலிஸார் பளை, வவுனியா பகு­தி­களைச் சேர்ந்த 27 மற்றும் 45 வய­துக்கு உட்­பட்ட மூவரை கைது செய்­துள்­ளனர். அவர்­க­ளிடம் முன்னெடுக்கப்பட்ட விசா­ர­ணையின் போது, வர்த்­த­கரை கடத்­தி­யதை அவர்கள் ஒப்­புக்­கொண்­டுள்­ள­துடன், அவர் வழங்க வேண்­டிய கடன் தொகையை வசூ­லிக்க அவரைக் கடத்தி கப்பம் கோரி­ய­தாக தெரி­வித்­துள்­ளனர்.

இந் நிலையில் சந்­தேக நபர்கள் நேற்று வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்ப்ட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

-வீரகேசரி-

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதலிடங்களைப் பெற்று சாதனை!!

 
2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் சுந்தர் சுகிர்தன் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 3A சித்திகளுடன் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

மேலும் கலைப்பிரிவில் பிரண்ஜா ஜெகதீஸ்வரன் 3A சித்திகளைப்பெற்று மாவட்ட மட்டத்தில் 2ம் இடத்தையும் , தெய்வேந்திரன் மிதிலைமாறன் 2A,C சித்திகளைப்பெற்று மாவட்ட மட்டத்தில் 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளகின்றோம்.

 

[news_list title=”இவற்றையும் படியுங்கள்” count=”5″ show_more=”on” show_more_type=”link” header_background=”#5681a0″ header_text_color=”#ffffff” hide_dots=”yes”]

வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற 3 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைவு!!

 
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் புனர்வாழ்வு பெற்றுவந்த மூன்று முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கும் நிகழ்வு பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி கப்டன் குணசேகர தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கடந்த ஒருவருடம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த மார்க்கண்டு நேவிநாதன் யாழ்ப்பாணம், ஆறுமுகம் அருள்பிரகாஷ் கிளிநொச்சி, பெர்னாண்டோ எமில்தாஸ் முல்லைத்தீவு ஆகிய மூன்று முன்னாள் போராளிகள் இன்று அவர்களின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டனர்.

மேலும் இந்நிகழ்வில் சர்வ சமயத்தலைவர்கள், புனர்வாழ்வு ஆணையாளர் நாயக்கப் பணிமனையின் அதிகாரி கேணல் அஷாட் இசைடீன், கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டத்தின் பின் இணைப்பு அதிகாரிகள், பூந்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வன்னி விமானப்படையின் நிலையப் பொறுப்பதிகாரி, முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

யாழ் மாணவன் கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடம்!!

தற்போது பெறுபேறுகள் வெளியாகியுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் கணிதப் பிரிவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

யாழ்.பெற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த போல் ஜனாசன் என்ற மாணவனே அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தையும், மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த மாணவன் ஆங்கில மொழிமூலத்தில் பரீட்சையில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் விஞ்ஞானப் பிரிவில் புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் 3A சித்திகளுடன் முதலிடம்!!

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

சுந்தர் சுகிர்தன் என்ற மாணவனே உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 3A பெறுபேற்றைப் பெற்று தேசியப் பாடசாலைகளை பின்தள்ளி வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 69வது இடத்தையும் பெற்று வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளகின்றோம்.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவி கலைப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடம்!!

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவி கலைப் பிரிவில் 3A செய்திகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

கம்சத்வனி ஸ்ரீபதிநாதன் என்ற மாணவியே கலைப் பிரிவில் 3A பெறுபேற்றைப் பெற்று வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளகின்றோம்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் கணிதப் பிரிவில் முதலிடம்!!

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் கணிதப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

கனகலிங்கம் கீதாரஞ்சன் என்ற மாணவனே, 2A, B பெறுபேற்றைப் பெற்று வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளகின்றோம்.

2017 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர் விபரம்!!

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய அகில இலங்கை ரீதியில் முதல் இடம்பிடித்த மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இம்முறை இணையத்தில் வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளுக்கமைய அகில இலங்கை ரீதியாக முதல் இடத்தை மாத்தறை, இரத்தினபுரி, பருத்தித்துறை பகுதிகளை சேர்ந்த பாடசாலைகள் பெற்றுள்ளன.

அதற்கமைய இம்முறை உயர்தர பரீட்சையில் கலைப் பிரிவில் இரத்தினபுரி சந்தர்மாலங்கார பிக்கு பாடசாலையில் கல்வி கற்ற பத்பெரி தேரர் முதலிடம் பிடித்துள்ளார்.

மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தில் இம்முறையில் இரண்டு மாணவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர். அதற்கமைய அந்த பாடசாலையில் கல்வி கற்ற திலினி சுனீத்தா என்ற மாணவி உயிரியல் பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளார். அதே பாடசாலையின் திலானி ரசான்ந்திக என்ற மாணவி வணிக பிரிவில் முதலாமிடத்தை பிடித்துள்ளார்.

பௌதீக விஞ்ஞான பிரிவில் யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் துவாரகன் முதலிடம் பெற்றுள்ளார்.

வெளியாகியுள்ள முடிவுகளுக்கமைய பொறியியல் தொழில்நுட்ப பிரிவில், மாத்தறை மஹிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் கல்வி கற்ற ஹெட்டிஆராச்சி என்ற மாணவன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களின் சிறந்த பெறுபேறு : பலருக்கு 3A சித்திகள்!!

 
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள நிலையில் மாவட்ட மட்ட ரீதியாக சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியை சேர்ந்த நான்கு மாணவர்கள் 3A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்ந்துள்ளனர்.

பெளதீக விஞ்ஞானத்தில் மாணவன் பிரபாகரன் பிரதீஸ் 3A சித்தியை பெற்றுள்ளார். இவர் மாவட்ட மட்டத்தில் 8ஆவது நிலையையும் தேசிய ரீதியில் 77ஆவது நிலையையும் பெற்றுள்ளார்.

பெளதீக விஞ்ஞானத்தில் மாணவன் விக்டர் ஜெயக்குமார் வசந்த் கோட்ப்ரே 3A சித்தியைப் பெற்றுள்ளார். இவர் மாவட்ட மட்டத்தில் 21ஆவது இடத்தையும் தேசிய ரீதியில் 248ஆவது நிலையையும் பெற்றுள்ளார்.

வணிகப் பிரிவில் மாணவி அஸ்வினி ஸ்கந்தராஜா 3A சித்தியைப் பெற்றுள்ளார். இவர் யாழ். மாவட்ட மட்டத்தில் 37ஆவது நிலையைப் பெற்றுள்ளார்.

வணிகப் பிரிவில் மாணவி அனோஜா சத்தியசீலன் 3A சித்தியைப் பெற்றுள்ளார். இவர் யாழ் மாவட்ட மட்டத்தில் 45ஆவது நிலையைப் பெற்றுள்ளார்.

இதேவேளை அகில இலங்கை ரீதியாக பௌதீக விஞ்ஞான பிரிவில் யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் துவாரகன் முதலிடம் பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்.

2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறு : அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் முதலிடம்!!

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.

யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலோலி, புற்றளை, உபயகதிர்காமத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் யாழ். வடமராட்சி வலய கணணி வள முகாமையாளர் சிறிதரனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் P.மைக்கல் இயந்திரவியல் தொழினுட்பத் துறையில் அகில இலங்கை ரீதியில் பத்தாம் இடத்தையும், மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும், தயாளன் தயாநிதி உயிரியல் விஞ்ஞானத் துறையில் மாவட்ட ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கல்வி அமைச்சின் புதிய அறிவித்தல்!!

2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகளுக்கு அமைய 2018 ஆம் ஆண்டு தரம் 6இற்கு சேர்த்து கொள்வதற்குரிய மீள் கோரிக்கைக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தினை www.moe.gov.lk என்ற இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை, கல்வி பணிப்பாளர், கல்வி நடவடிக்கைகளுக்கான பிரிவு, கல்வி அமைச்சு, இசுறுபாய, பெலவத்தை, பத்தரமுல்லை என்ற முகவரிக்கு தபால் மூலமாகவும் அனுப்பி வைக்க முடியும் என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெற்றிருந்தன. இதில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இணையத்தளத்தினை பார்வையிட இங்கே அழுத்தவும்.

ஒரு நாளைக்கு 20 லிட்டர் தண்ணீர் குடிக்கும் விசித்திர மனிதன்!!

 
ஜேர்மனியில் நபர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜேர்மனியில் கட்டிடக் கலை நிபுணராக பணிபுரிந்து வருபவர் மார்க்வுப்பன் கார்ஸ்ட்(36). மருத்துவர்களின் பரிந்துரைப்படி சராசரி மனிதர்கள் நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கலாம்.

ஆனால் அரிய வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு அதிக தண்ணீர் தாகம் எடுப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இதனால் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் குடித்து உயிர் வாழ்ந்து வரும் இந்த நபரால் தினமும் 2 மணி நேரம் மட்டுமே தூங்க முடிகிறது.

தண்ணீர் குடித்தவுடன் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை உள்ளதால் இரண்டு மணி நேர தூக்கத்துடன் தண்ணீர் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வருகிறார்.

இவ்வாறு அதிக அளவு தண்ணீர் குடித்து வந்தால் நாளடைவில் மூளையில் தண்ணீர் தேங்கி உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த அரிய வகை நீரிழிவு நோயில் இருந்து குணமடைவதற்காக இந்த நபர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

7 வயதில் மார்பக அறுவை சிகிச்சை செய்த சிறுமி!!

 
அமெரிக்காவை சேர்ந்த 7 வயது சிறுமி மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது மகள் ஆசையாக கெஞ்சி கேட்டுக்கொண்டதால் இந்த அறுவை சிகிச்சையை அவளுக்கு பரிசாக அளித்துள்ளேன் என அவரது தாய் Dana Manson தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவை சேர்ந்த Juliet Manson(7) என்ற சிறுமிக்கு, தனது மார்பகத்தை பெரிதாக்கி கொள்ள வேண்டும் என்பதில் ஆசை இருந்துள்ளது. இதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால், உனக்கு தற்போது 7 வயதாகிறது. நீ வளர ஆரம்பிக்கும்போது உடல் உறுப்புகள் வளரும் என தனது மகளிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், தாயின் இந்த பதிலால் திருப்தியடையாத Juliet, தனது உடல் குறித்து கவலை கொண்டு, தனது தாயிடம் தினம் தினம் கெஞ்சியவாறு இருந்துள்ளார்.

இதற்கு தாய் ஒத்துழைக்காத காரணத்தால் மன அழுத்தம் அடைந்துள்ளார். கலிபோர்னியாவில் இந்த சிறு வயதிலேயே மார்பக அறுவை சிகிச்சை செய்ய எந்த ஒரு மருத்துவமனையும் முன்வரவில்லை.

இதனால், தனது மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சீனாவில் உள்ள ஒரு மருத்துவமனையை தொடர்பு கொண்டு அனுமதி வாங்கியுள்ளார்.

அதன்படி கிறிஸ்துமஸ்க்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சீனாவிற்கு சென்று தனது மகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதையே தனது மகளுக்கு தான் கொடுத்துள்ள கிறிஸ்துமஸ் பரிசு எனவும் கூறியுள்ளார்.

இந்த புகைப்படங்களை Juliet தனது சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார், இதனை பார்த்த பலரும் இப்படி சிறு வயதில் இந்த அறுவை சிகிச்சை தேவைதானா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மனைவியின் அழுகிய சடலத்துடன் வாழ்ந்த கணவன்!!

அமெரிக்காவில் மனைவியின் அழுகிய சடலத்துடன் கணவர் இருந்த நிலையில் மனைவி இறந்ததே தனக்கு தெரியாது என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, ஸ்டீவன் செய்லர் (60) என்ற நபர் மனைவி தமரா வில்சனை (58) விட்டு பிரிந்திருந்த நிலையில் அவர் இருக்கும் அடுக்குமாடி வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு சில நாட்கள் இருந்த நிலையில் தமரா வீட்டுக்கு பொலிசார் வந்துள்ளனர், அப்போது தான் தமரா உயிரிழந்து சில நாட்கள் ஆகிய அவரின் சடலம் அழுகிய நிலையில் இருந்ததை பொலிசார் கண்டுப்பிடித்தனர்.

இதையடுத்து அங்கிருந்த ஸ்டீவனை பொலிசார் கைது செய்தார்கள். பொலிசாரிடம் ஸ்டீவன் கூறுகையில், மனைவி இறந்தது எனக்கு தெரியவே தெரியாது, சடலத்திலிருந்து நாற்றம் வந்தும் நான் உணரவில்லை.

என் மகள் போன் செய்த போது தான் வீட்டில் மனைவி இறந்து கிடப்பதை பார்த்தேன் என கூறியுள்ளார். பொலிசார் கூறுகையில், தமரா வீட்டுக்கு சென்ற போது வீடு பூட்டியிருந்தது, கதவை உடைத்து தான் உள்ளே சென்றோம். ஸ்டீவன் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து தமராவின் ஐடி கார்ட், டெபிட் கார்ட், திருமண மோதிரத்தை கைப்பற்றினோம்.

டெபிட் கார்ட் மூலம் ஸ்டீவன் தங்க நாணயம் வாங்கிவிட்டு பின்னர் அடகு கடையில் அதை விற்றுள்ளார். ஏற்கனவே மனைவியை கொடுமைபடுத்தியதாக அவர் மீது கடந்த 2009ல் வழக்கு பதியப்பட்டு $120,000 நஷ்டஈடு தமராவுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.

மேலும் தமரா வீட்டுக்கு போக ஸ்டீவனுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி அவர் போயுள்ளதாக கூறியுள்ளனர். தொடர்ந்து ஸ்டீவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.