உலகை உலுக்கிய இதயத்தை நொறுங்க வைக்கும் புகைப்படம்!!

 
உச்சியை பிளக்கும் வெயிலில் சிறு குட்டையில் தேங்கிய அழுக்கு நீரை மண்டியிட்டு வாயால் உறுஞ்சிக் குடிக்கும் சிறுமியின் புகைப்படம் ஒன்று வெளியாகி உலகை உலுக்கியுள்ளது.

ஆஜென்டீனாவின் Mbya Guarani சமூகத்தைச் சேர்ந்த 3 அல்லது 4 வயது மதிக்கத்தக்க அந்த சிறுமி உச்சியை பிளக்கும் அந்த வெயிலில் தண்ணீர் தாகத்தால் இவ்வாறு தேங்கிய நீரை வாயால் உறுஞ்சிக் குடித்துள்ளார்.

வறுமையால் தத்தளிக்கும் குறித்த சமூகத்தினர் பகல் வேளைகளில் பிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் குறித்த புகைப்படத்தை தமது பேஸ்புக் பக்கத்தில் பகிரவும், தற்போது அது வைரலாகி பொதுமக்களிடையே விவாத பொருளாகவும் மாறியுள்ளது.

மட்டுமின்றி சமூக ஆர்வலர் Migue Ríos இந்த விவகாரம் தொடர்பில் தேசிய அளவில் விவாதத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த புகைப்படம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், நாடு வறுமையால் தீபற்றி எரிந்துகொண்டிருக்கும்போது, இச்சிறுமி தம்மை தற்காத்துக் கொள்ள நிலத்தில் மண்டியிட்டுள்ளார்.

ஒரு சமுதாயமாக நாம் ஏதோ தவறிழைக்கின்றோம் இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை எவரும் பேச முன்வராத பிரச்னை தொடர்பில் இறுதியாக நம்மை பேச வைத்துவிட்டாள் குறித்த சிறுமி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த புகைப்படத்தை பதிவு செய்த பத்திரிகையாளர் தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடவும் தற்போது அது பல மில்லியன் மக்களால் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

பலர் தங்கள் கருத்துகளை அரசுக்கு எதிராக காட்டமாக பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒருவர், பசியால் பலர் தினம் இறந்து கொண்டிருக்க, எனது ஆடம்பர வாழ்க்கை குறித்து நான் தம்பட்டம் அடித்து வாழ்ந்து வருகிறேன் என்றால் எத்துணை வெட்கக்கேடானது அது என பதிவிட்டுள்ளார்.

அதே இடத்தில் நீங்கள் உங்களை வைத்து ஒருகணம் சிந்தியுங்கள் அல்லது உங்கள் குழந்தைகளை அதே நிலையில் வைத்துப் பாருங்கள் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

சவுதியில் கொன்று புதைக்கப்பட்ட நீதிபதியின் சடலம் கண்டுப்பிடிப்பு!!

சவுதியில் கடத்தி கொலை செய்யப்பட்ட நீதிபதி ஷேக் முகமதின் சடலத்தை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

நீதிபதி ஷேக் முகமது அல்-ஜிரானி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தேடி வந்த நிலையில், நாட்டின் குட்டீப் மாநகராட்சியில் அதிகாரிகள் செவ்வாய் கிழமை சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்குள்ள பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஷேக்கின் சடலத்தை அதிகாரிகள் கைப்பற்றியதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தின் போது சல்மான் அல்-பராஜ் என்ற தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் கொன்றனர்.
சிறப்பு பாதுகாப்பு அதிகாரி காலித் அல்-சல்மெடியும் இந்த தாக்குதலின் போது உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பான செய்தியை கூடுதல் தகவலுடன் மாநில உள்துறை அமைச்சகம் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜோதிடரின் பேச்சைக் கேட்டு மகனின் வாழ்வில் விளையாடிய தாய்!!

தமிழகத்தில் ஜோதிடரின் பேச்சை கேட்டு தாய் ஒருவர், தனது மகனின் பள்ளிப் படிப்பை நிறுத்தி அவரின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கியுள்ள சம்பவம் பலரையும் அதிர வைத்துள்ளது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் செல்வி, இவருக்கு விக்னேஷ்குமார்(13) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வி சில மாதங்களுக்கு முன் ஜோதிடரைப் போய் பார்த்துள்ளார்.

அப்போது அந்த ஜோதிடர் உன் மகன் தனியாக பள்ளிக்கு சென்றால், அவனுடைய உயிருக்கு ஆபத்து என்று தெரிவித்துள்ளார். மகனின் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்து அதிர்ச்சியைடைந்த அவர், மகனை பள்ளிக்கு அனுப்புவதையே நிறுத்தியுள்ளார்.

இதனால் பெரிதும் விரக்தியடைந்த விக்னேஷ் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன் பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து குழந்தை நலத்துறையினர் அவரிடம் விசாரித்த போது, மகனின் உயிர் முக்கியம் என்பதால் பள்ளிக்கு அனுப்பவில்லை என்றும் தன்னுடைய மூத்த மகன் 12-ஆம் வகுப்பு படிக்கிறான், அவனை நான் பள்ளிக்கு அனுப்பி தான் வைக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் இரண்டு நாட்கள் கவுன்சிலிங் கொடுத்ததைத் தொடர்ந்து, தற்போது மகனை பள்ளிக்கு அனுப்புவதற்கு செல்வி சம்மதம் தெரிவித்துள்ளார்.

மகன் செய்த செயலால் குடும்பமே உயிரை விட்ட சோகம்!!

வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை மகன் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் மனம் உடைந்த பெற்றோர் தங்கள் மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள மறையூரை சேர்ந்தவர் முருகன் (50). இவர் மனைவி முத்துலட்சுமி (45). இவர்களுக்கு பாண்டியராஜ் (25) என்ற மகனும், பானுப்பிரியா (21) என்ற மகளும் உள்ளனர்.

பாண்டியராஜ் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், கல்லூரியில் படித்த போதே ஒரு பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பாண்டியராஜின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலியை சில நாட்களுக்கு முன்பு பாண்டியராஜ் திருமணம் செய்துகொண்டார்.

இதனால் அவமானம் தாங்காத முருகன், பானுப்பிரியா, முத்துலட்சுமி ஆகியோர் கொழுமம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதையடுத்து மூவரின் சடலத்தையும் கைப்பற்றிய பொலிசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

வவுனியாவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியது!!

 
வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (20.12.2017) மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காகவே இந்தக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

சிறிரெலா கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வாசல, வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் குமாரசாமி உள்ளிட்டோரை கட்டுப்பணத்தை செலுத்தினர்.

இதன்போது தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஏற்பட்ட பேச்சுக்களில் இணக்கம் காணப்படாமையால் அபிவிருத்தியை விரும்பும் எமது மக்களின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாக ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

கணித பாடம் தொடர்பான அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்!!

கணித பாடம் தொடர்பிலான அச்சத்தினால் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

தெஹியத்தகண்டிய அரலகங்கவில கெக்குலுவெல பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய குறித்த மாணவன், கணித பாடத்திற்கு உரிய முறையில் பதிலளிக்கத் தவறியதாக மன வேதனைக் கொண்டு நஞ்சருந்தி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளான்.

17 வயதான இசார ஜனித் சந்திரசிறி என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

கணித பாட பரீட்சைக்குத் தோற்றி வீடு திரும்பிய மாணவன், தாம் சரியாக பதிலளிக்கத் தவறியதாக மன வேதனைக் கொண்டு நேற்று முன்தினம் நஞ்சு அருந்தியுள்ளார்.

உடனடியாக உறவினர்கள் நஞ்சு அருந்திய மாணவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

கல்வி நடவடிக்கைகளில் அதி சிறந்த விளங்கும் இந்த மாணவன் தவணைப் பரீட்சைகளில் வகுப்பில் முதல் நிலையை எல்லா சந்தர்ப்பங்களிலும் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் 600 யாசகர்கள் : ஜனவரி முதல் யாசகத்தில் ஈடுபட தடை!!

கொழும்பு நகரில் யாசகத்தில் ஈடுபடுவதற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து தடை செய்யப்படுவதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், கொழும்பு நகரில் 600 யாசகர்கள் யாசகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாசகத்தில் ஈடுபடுவோர்களின் வாழ்வாதாரம் கருதி, அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக அம்பலாந்தோட்டை – ரிதிகமயில் 80 மில்லியன் ரூபா செலவில் புனர்வாழ்வு நிலையமொன்றை அமைத்துள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

யாசகத்தில் ஈடுபடுவதை நிறுத்துமாறு முதலில் அவர்களிடம் கருணை அடிப்படையில் கோருவதாகவும், அதன்படி அவர்கள் செயற்படா விட்டால், மாநகர சபை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் பல பகுதிகளில் அடைமழை!!

இலங்கையில் வட,கிழக்கு பருவமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டின் பல பகுதிகளில் அடைமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு ஆகிய பிரதேசங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடை மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் மாலை நேரங்களில் மழை பெய்யும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சையில் மோசடி செய்த மாணவருக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

 

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடியான முறையில் கணிதப்பாடத்திற்கு விடையெழுதியதாக கூறப்படும் மாணவரின் பெறுபேறுகளை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த மாணவர் எஞ்சியுள்ள ஏனைய பாடங்களை எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இம்முறை பரீட்சைக்கு தோற்றிய பாடங்களின் பெறுபேறுகளை இரத்து செய்வதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனுராதபுர வெலிசிங்க ஹரிஸ்சந்திர வித்தியாலய மாணவர் ஒருவரே இந்த நிலைக்கு முகம்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சாதாரண தரப் பரீட்சையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவின் பேரில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வௌியீட்டுக்கு தயாராகும் இமைக்கா நொடிகள்!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் இமைக்கா நொடிகள் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் இமைக்கா நொடிகள். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

மேலும் பொலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மறுபுறத்தில் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் அடுத்த ஆண்டு ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தீர்மானம்!!

நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது.

சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் நேற்று கூடிய வாழ்க்கைச் செலவு குழு கலந்துரையாடியது.

இதன்போது நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் அதிகளவில் நுகர்வு செய்யப்படும் நாட்டரிசி உள்ளிட்ட அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

இதனால் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டு நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேற்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக வாழ்க்கைச் செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மகள் வயதுடைய பெண்ணை திருமணம் செய்யும் பிரபல நடிகர்!!

நடிகர்களின் காதல் விவகாரம் பற்றிய செய்திகள் ரசிகர்கள் மத்தியில் எளிதில் தீயாக பரவிவிடுகிறது. அதுவும் அதில் எதாவது சர்ச்சையான விஷயம் என்றால் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து விடுவார்கள்.

அந்த வகையில் 52 வயதாகும் பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன் 23 வயதாகும் Ankita Kowarஐ காதலித்து வருவது பற்றி முன்பே விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் அவர்கள் இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர். மிலிந்த் சோமன் சமீபத்தில் Ankita Kowarன் குடும்பத்தை சந்தித்து பேசியுள்ளார். அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதால் அடுத்த வருடம் திருமணம் நடைபெறவுள்ளது.

DD எடுத்த அதிர்ச்சி முடிவு!!

தொகுப்பாளர்களில் மிகவும் ரசிகர்களை கொண்டவர் டிடி. இவர் சில வருடங்களுக்கு முன் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணம் முடிந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர் ஒரு சில நாட்களாக தன் கணவரை விட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டது.

இதை உண்மை என்று நிரூபிக்கும் பொருட்டு பவர் பாண்டி படத்தில் ‘செல்வி’ திவ்யதர்ஷினி என்று தான் இவர் பெயர் திரையிடப்பட்டது.

தற்போது இவர் தன் கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக சில செய்தி சேனல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசி வருகின்றனர்.

வெளிவந்தது ஜெயலலிதாவின் அப்பல்லோ வீடியோ : தமிழகத்தில் பரபரப்பு!!

அப்பல்லோ வைத்தியசாலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி உயிரிழந்தார்.

இவரது இறப்பில் பல மர்மம் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தற்போதும் அவர் வைத்தியசாலையில் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

20 நொடிகள் உள்ள அந்த காட்சியில், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே ஜெயலலிதா பழச்சாறு அருந்திக்கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோவை தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் என்பவர் வெளியிட்டுள்ளார், நாளை ஆர்கே நகர் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண்ணொருவர் தொடர்ந்து அவமதித்ததால் தற்கொலை செய்த இளைஞன்!!

நீர்கொழும்பில் பெண் ஒருவரால் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். கட்டான, கிம்புலாப்பிட்டிய பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெண் ஒருவரிடம் பெற்றுக்கொண்ட 25000 ரூபா கடனை திருப்பி செலுத்த முடியாமல், ஏற்பட்ட அவமானத்தால் அவர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
கடன் வழங்கிய பெண் குறித்த இளைஞனின் வீட்டுக்கு சென்று அவமதித்துள்ளார். இதனால் மனவிரக்தியடைந்த இளைஞன் இந்த முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த இளைஞர் அந்த பிரதேச பட்டாசு தொழிற்சாலையில் சேவை செய்துள்ள நிலையில் அதன் உரிமையாளரான பெண் ஒருவரிடம் கடன் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த இளைஞர் அந்த பெண்ணிடம் வட்டிக்கே 25000 ரூபாய் பணம் பெற்றுள்ளார் என உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
இடையில் அவரால் ஒழுங்கான முறையில் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உரிமையாளர் அவரை அவமதிக்கவும் அங்கிருந்து விலக்க தீர்மானித்துள்ளார்.
எனினும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பார்க்கும் இடம் எல்லாம் அந்த பெண்ணால் அவர் அவமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் மரவிரக்தியடைந்தவர் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நண்பகலுடன் நிறைவு!!

248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.

இதற்கமைய வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகளும் நாளை நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.

அதன் பின்னர் ஒன்றறை மணித்தியாலங்கள் ஆட்சேபனை தெரிவிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளதோடு, பிற்பகல் 01.30க்கு தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வேட்புமனு தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இம்முறை பெப்ரவரி 10ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.