எயிட்ஸ் விழிப்புணர்வு : சர்ச்சையாகும் மாணவிகளின் ஜிமிக்கி கம்மல் நடனம்!!(வீடியோ)

கேரளா மாநிலத்தில் முஸ்லீம் மாணவிகள் நடுரோட்டில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மோகன்லால் நடிப்பில் வெளியான வெளிப்பயின்டே புஸ்தகம் என்ற படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் ரசிகர்கள் மூலம் நாடு முழுவதும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பாடலுக்கு ரசிகர்கள் நடனம் ஆடி வெளியான வீடியோ பிரபலமடைந்ததை அடுத்து ஜிமிக்கி கம்மல் பாடல் பிரபலமானது.

இந்நிலையில் கேரளா மலப்புரத்தில் பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் முஸ்லீம் மாணவிகள் 3 பேர் நடுரோட்டில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்காக மாணவிகள் நடமானடியுள்ளனர்.

சிலர் இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக அவர்கள் உடை அணிந்திருப்பது கண்டிக்கத்தக்கது என கடுமையாக சாடியுள்ளனர். ஆனால் பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில், எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக தலையில் ஹிஜாப் அணிந்த மூன்று பெண்கள் வீதியில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

குறித்த எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழை்ச்சி மலப்புரத்தில் சுகாதாரத்துறையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல் மருத்துவம் பயிலும் மூன்று இஸ்லாமிய மாணவிகள் குறித்த பாடலுக்கு நடனமாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காஞ்சனா 3 படத்தில் இருந்து விலகிய ஓவியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஓவியாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது. கடை திறப்பு, விளம்பர நிகழ்ச்சிகள் இவரை தேடி வருகின்றன. புதிய பட வாய்ப்புகளும் வந்துள்ளன.

அதுமட்டுமின்றி ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 3 படத்திலும் நாயகியாக ஒப்பந்தமானார். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஓவியா இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் என்றும், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காஞ்சனா-3 படக்குழுவினர்.. “ காஞ்சனா-3 படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து வருகிறது. இதில் ராகவா லாரன்சுடன் ஓவியா நடித்து வருகிறார். அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக யாரோ புரளியை கிளப்பிவிட்டுள்ளனர். இந்த படத்திற்கு ஓவியா முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். ஏன் இப்படி ஒரு வதந்தியை பரப்புகிறார்கள் என்பது தெரியவில்லை” என்றனர்.

அணு ஆயுதப் போர் எந்நேரத்திலும் வெடிக்கலாம் : வடகொரிய ஊடகங்கள் எச்சரிக்கை!!

அணு ஆயுதப் போர் எந்த நேரத்திலும் தொடங்கும் என்று வடகொரிய ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

சர்வதேச விதிமுறைகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.

தென்கொரியாவையும் அதற்கு ஆதரவாக உள்ள அமெரிக்காவையும் தரைமட்டமாக்கி விடுவோம் என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து வருகிறார்.

இந்நிலையில், வடகொரிய அச்சுறுத்தலை சமாளிக்க, தென்கொரியா, ஜப்பான், அமெரிக்க விமானப் படை வீரர்கள் கொரிய தீபகற்பப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரிய தீபகற்ப பகுதியில் தென் கொரியா, அமெரிக்கா போர் பயிற்சிகளை தொடர்ந்து வரும் நிலையில், அணுஆயுத போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்று வடகொரிய ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

வடகொரிய – தென்கொரிய எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருவதையடுத்து அங்கிருக்கும் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் குடும்பங்களை தென் கொரியாவிலிருந்து வெளியேறச் சொல்லி அமெரிக்கா கூறியுள்ளது.

இதுகுறித்து குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்ஸே கிரஹாம் கூறும்போது, “கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க வீரர்களின் குடும்பங்கள் தென்கொரியாவில் தங்கி இருப்பது சரியானது அல்ல என்று கூறியுள்ளார்.

நவ­நா­க­ரி­கத்­துக்­காக ஜீன்ஸ் அணியும் பெண்­களை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்த வேண்டும்!!

நவ­நா­க­ரி­கத்­துக்­காக கிழிந்த ஜீன்ஸ் ஆடை அணியும் பெண்­க­ளுக்கு தண்­ட­னை­யாக அவர்­களை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்த வேண்டும் என அழைப்­பு­வி­டுத்த எகிப்­திய சட்டத்தரணியொ­ருவ­ருக்கு 3 வருட சிறைத்­தண்­டனை விதிக்கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் நபிஹ் அல் வாஹ்ஷ் என்ற மேற்­படி சட்­டத்­த­ர­ணிக்கு அவ­ரது வன்­மு­றையைத் தூண்­டி­விடும் பொறுப்­பற்ற விமர்­ச­னத்­துக்­காக சிறைத்­தண்­ட­னைக்கு மேலதி­க­மாக 20,000 எகிப்­திய பவுண் (1,130 அமெ­ரிக்க டொலர்) தண்டப் பணமும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

விப­சா­ரத்­திற்கு எதி­ரான சட்ட வரைபு குறித்து தொலைக்­காட்­சியில் ஒளி­ப­ரப்­பப்பட்ட விவாத நிகழ்ச்­சியின் போது நபிஹ் மேற்படி விமர்­ச­னத்தை வெளி­யிட்­டி­ருந்தார்.

“யுவதி ஒருவர் தனது பின் பாகத்தின் அரைப் பகுதி வெளியே தெரிய வீதியில் நடந்தால் நீங்கள் மகிழ்ச்­சி­ய­டை­வீர்­களா?” என அந்­நி­கழ்ச்­சியில் கேள்வி எழுப்­பிய நபிஹ், “அவ்­வாறு நடந்து செல்லும் யுவ­திகள் தொடர்பில் நான் கூறு­வது என்­ன­வென்றால், அத்­த­கைய யுவ­திகள் மீது பாலியல் ரீதி­யான தாக்­கு­தலை நடத்­து­வது தேசப்­பற்­றுள்­ளவர் ஒரு­வ­ரது கட­மை­யா­க­வுள்ள அதே­ச­மயம் அத்­த­கை­ய­வர்­களை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­து­வது தேசிய கட­மை­யாகும்” எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

“நவ­நா­க­ரிகம் கருதி கிழிந்த ஆடை­களை அணியும் பெண்கள் தம்மை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய் ­வ­தற்கு ஆண்­க­ளு க்கு வர­வேற்­ப­ளிக்­கின்­றனர்” என அவர் மேலும் கூறினார். அவ­ரது மேற்­படி விமர்­ச­ன­மா­னது பொது­ மக்கள் மத்­தி­யிலும் பெண்கள் உரி­மைகள் செயற்­பாட்­டா­ளர்கள் மத்­தி­யிலும் கடும் சினத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

நபிஹின் விமர்­சனம் பாலியல் வல்­லு­றவு மற்றும் வன்­மு­றையை தூண்­டு­வ­தா­க­வுள்­ள­துடன் எகிப்­திய அர­சி­ய­ல­மைப்­பி­லுள்ள அனைத்து பிரி­வு­க­ளையும் மீறும் செயற்­பா­டா­கவும் உள்­ளது எனத் தெரி­வித்து அந்­நாட்டு தேசிய பெண்கள் உரி­மைகள் சபை வழக்குத் தாக்கல் செய்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் மேற்­படி வழக்கை விசா­ரித்த நீதி­மன்றம் அவ­ருக்கு 3 வருட சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

நபிஹ் இதற்கு முன்னர் பிறி­தொரு தொலைக்­காட்சி நிகழ்ச்­சியில் நான் இஸ்­ரே­லியர் எவ­ரை­யா­வது பார்த்தால் அவரைக் கொல்வேன் எனத் தெரி­வித்து பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தமை குறிப்பிடத் தக்கது.

அத்துடன் அவர் கடந்த ஒக்டோபர் மாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பெண்கள் முக்காடு அணியத் தேவையில்லை எனக் கருதுவதாக கருத்து வெளியிட்டிருந்த மதகுரு ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்தியப் பெருங்கடலில் தத்தளித்த இலங்கையர்கள் : போராடிக் காப்பாற்றிய ஈரானிய கப்பல்!!

இந்தியப் பெருங்கடலில் படகு கவிழ்ந்த நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த ஐவரையும் ஈரானிய எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்று காப்பாற்றியுள்ளதாக இர்னா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் படகு கவிழ்ந்த நிலையில் அதன் மீது ஏறி நின்று ஐந்து இலங்கை மீனவர்களும் உதவி கோரியுள்ளனர்.

இந்த மீனவர்களை மீட்கும் போராட்டம் சுமார் ஐந்து மணிநேரம் நீடித்ததாக, ஸ்ட்ரீம் என்ற எண்ணெய்த் தாங்கி கப்பலின் தலைவர் மஹ்மூத் பக்கெஸ்தானி தெரிவித்துள்ளார்.

மீனவர்களை நாளை மறுநாள் சபஹார் துறைமுகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த மீனவர்கள் 2 அல்லது 3 நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்து வருடங்களின் பின்னர் கனடாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழ் குடும்பம்!!

கனடாவில் வசித்து வந்த இலங்கை தமிழ்க் குடும்பம் ஒன்று, நேற்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளது.

கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை மறுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நேற்றுமாலை Montreal’s பகுதியில் உள்ள Trudeau விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை மிகவும் வருத்தமாக உள்ள போதிலும் நாம் இன்னமும் கனடாவை நேசிப்பதாக நாடு கடத்தப்பட்ட குடும்பத்தின் தலைவர் ரொபர்ட் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

கனேடிய சட்டங்களுக்கு நாம் கட்டுப்படுகிறோம். எனினும் கடந்த 5 வருடங்களாக கனடாவில் நாங்கள் மகிழ்ச்சியாக வாழந்தோம் என லோரன்ஸ் கனேடிய ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குடும்பத்தினர், மனிதாபிமான அடிப்படையில் கனடாவில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்த போதிலும், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்தே, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

போரின் போது கிழக்கு மாகாணத்தில் ஐ.நா அமைப்புக்காக பணியாற்றிய லோரன்ஸ், 2012ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் கனடாவில் தஞ்சமடைந்திருந்தார்.

எனினும் கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை மறுக்கப்பட்டதை அடுத்தே, இவரது குடும்பத்தினர் நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தும் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கனடிய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Ralph Goodale இதனை மீள்திருத்தம் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையை நெருங்கும் ஆபத்து : கவனமாக செயற்படுமாறு எச்சரிக்கை!!

அந்தமான் தீவுக்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து கிழக்கு பகுதியின் 1350 கிலோ மீற்றர் தூரத்தில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் நிலை கொண்டுள்ளது. இந்த தாழமுக்கம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மூன்று நாட்களில் தாழமுக்கம் மேல் திசையை நோக்கி பயணித்து வங்காள விரிகுடா கடல் பிரதேசம் ஊடாக இந்தியாவை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் இலங்கைக்கு நாளை பாதிப்பு ஏற்படும் எனவும், இது தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்படுமாறும் பொது மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

தாழமுக்கம் தொடர்பில் எதுவித மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக அறிவிக்கப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதனால் மீனவ மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதம் அடை மழை பெய்யும் எனவும் மண் சரிவுகள் தொடர்பில் அவதானத்தை செலுத்துமாறும் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களில் வெளியாகும் அனர்த்த முகாமைத்துவ தகவல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் நாளை முதல் மழையுடன் கூடிய வானிலை!!

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் நாளை (05) முதல் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அந்தமான் தீவின் தென்பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கமானது மேலும் வலுப்பெறுவதால் மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

75 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வானிலை அதிகாரி கணபதிப்பிள்ளை சூரியகுமாரன் தெரிவித்தார்.

நாளை முதல் நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என்பதால், மீனவர்களும் கடற்சார் தொழிலாளர்களும் அவதானமாக செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பதுளை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,பலாங்கொடையில் மண்சரிவு அபாயமிக்க பகுதியில் வசிக்கும் 12 குடும்பங்களுக்கு அங்கிருந்து வௌியேறுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்தது.

மழை காரணமாக அதிகரித்திருந்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

களு, நில்வளா, கிங் கங்கைகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.

எவ்வாறாயினும், பலத்த மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய சீரற்ற வானிலையால் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூவாயிரத்திற்கும் அதிகமானார் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் 15 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 191 உயிரைக் காவு கொண்ட விமான விபத்து : 43 வருடங்கள் கடந்தது!!

1974ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் திகதி இரவு 10.10க்கு மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் – தெப்பட்டன் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

இந்தோனேசியாவின் சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கிச் சென்ற மார்டின் எயார் டீ.சீ 8 ரக பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு, சப்த கன்னியா என அறியப்படும் ஏழு கன்னியர் மலையின் ஐந்தாவது குன்றின் மீது மோதி சிதறியது.

இதன்போது விமான ஓட்டிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர். இதனையடுத்து, விபத்தில் பலியான 190 பேர் தெப்பட்டன் தோட்ட கொத்தலென பகுதியிலேயே புதைக்கப்பட்டனர்.

அடையாளம் காணக்கூடியவாறு இருந்த விமானப் பணிப் பெண்ணின் உடலை மட்டும் அவரின் காதலர் ஹெலிகொப்டர் மூலமாக இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்ற நெகிழ்ச்சியான சம்பவமும் இதில் அடங்கும்.

அத்தோடு, விபத்துக்குள்ளான விமான பாகங்களில் எஞ்சியிருக்கும் டயர்கள் இரண்டு மட்டும் இதுவரை பாதுகாக்கபட்டு வருகின்றது.

ஒரு டயர் நோட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ளது. நல்ல நிலையிலிருக்கும் டயர் நோட்டன் விமலசுரேந்திதர அணைக்கட்டுக்கும் செல்லும் வழியில் சம்பவங்ளை சுருக்கமாக தாங்கி பார்வைக்காக காட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

விமானத்தின் கருப்புப்பெட்டி தகவலின் படி தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை இதுவரை வெளிநாட்டு விமானம் ஒன்றுக்கு ஏற்பட்ட மிக மோசமான விபத்து இதுவாகும்.

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கார்த்திகை விளக்கீடு!

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கார்த்திகை விளக்கீடு மற்றும்  சொக்கபானை  உற்சவம் நேற்று 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை  மாலை  இடம்பெற்றது.

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் கார்த்திகை விளக்கீடு!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் கார்த்திகை விளக்கீடும் சொக்கபானை உற்சவமும் நேற்று (03.12.2017) மாலையில் மிக சிறப்பாக இடம்பெற்றது .

வசந்தமண்டப பூஜையின் பின் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் உள்வீதி வலம் வந்து கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதுடன் வெளிவீதியில் சொக்கபானை உற்சவமும் இடம்பெற்றது .

 

 

வவுனியாவில் தனியார் மருத்துவமனையின் அசமந்தப்போக்கு : முதியவர் உயிரிழப்பு!!

வவுனியா குருமன்காடு பகுதியிலுள்ள தனியார் கிளினிக் நிலையத்திற்கு சுகயீனம் காரணமாக சென்ற முதியவர் ஒருவர் கிளினிக் நிலையத்தில் போடப்பட்ட ஊசி ஒவ்வாமை காரணமாக மரணமடைந்துள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கடந்த 30.11.2017 அன்று காலை 7.30 மணியளவில் மூன்று பிள்ளைகளின் தந்தையான ஏரம்பு சிவலிங்கம் என்ற 64 வயது முதியவர் சுகயீனம் காரணமாக குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் கிளினிக் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அவரை குறித்த கிளினிக்கின் வைத்தியர் பரிசோதித்து ஊசி ஒன்றைப் போட்டுள்ளார். குறித்த ஊசி ஒவ்வாமை காரணமாக முதியவரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து உடனடியாக குறித்த வைத்தியர் முச்சக்கரவண்டியொன்றின் மூலம் குறித்த நபரை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். எனினும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

எனது தந்தைக்கு இதுவரை எந்தவொரு நோய்களும் ஏற்பட்டதில்லை. இதுவே முதற் தடவையாக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். தனியார் கிளினிக் நிலையத்தில் வழங்கப்பட்ட ஊசியே எனது தந்தை உயிரிழப்பதற்கு காரணமாகும்.

அவர்கள் ஊசி ஏற்றிய உடன் எனது தந்தை இறந்துவிட்டார். இவர்கள் தாங்கள் தப்பிப்பதற்காக எனது தந்தை இறக்கவில்லை எனத் தெரிவித்து நாடகமாடி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

எனது தந்தையின் மரணத்திற்கு முழுப்பொறுப்பையும் குறித்த தனியார் மருத்துவமனையே ஏற்க வேண்டும். இது போன்ற சம்பவம் இனிமேல் யாருக்கும் இடம்பெறக்கூடாது என்று இறந்த வயோதிபரின் மகன் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பாக குறித்த தனியார் மருத்துவனையின் வைத்தியரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கேட்டபோது,

குறித்த நோயாளிக்கு நான் தான் வைத்தியம் பார்த்ததாகவும், அவருக்கு ஏற்றிய ஊசி ஓவ்வாமை காரணமாக அவர் மயக்கமடைந்ததாகவும், உடனடியாக அவரை முச்சக்கரவண்டி மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து காப்பற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவித்தார்.

உயிரிழந்த முதியவரின் உடற்பாகங்கள் உடற் கூற்றுப்பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விடயம் தொடர்பாக உயிரிழந்த முதியவரின் உறவினர்களினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!

 
உலக இந்துக்களால் இன்று (03.12.2016) கார்த்திகைத்தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வழிபடுகின்ற நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மேலும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகளும், விளக்கீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டத்தையும் காணக்கூடியதாக இருந்தது.

கார்த்திகை விளக்கீட்டின் தத்துவம்

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல் மத்தியில் நீந்தி சாதனை படைத்த கனடியர்!!

 
மது நாகராஜா என்னும் கனடியர், அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையே நீந்தி சாதனைப் படைத்துள்ளார்.

ஒண்டாரியோவில் மென்பொருள் மேம்பாட்டாளராக பணிபுரிபவர் 47 வயதான மது நாகராஜா. இவர் கடந்த நவம்பர் 29ஆம் திகதி, தென் அமெரிக்காவின் முனைப் பகுதியில் சுமார் 3.9 கிலோ மீட்டர் தூரம் நீந்தி கடந்துள்ளார்.

இதன் மூலமாக Magellan பகுதியில் வெற்றிகரமாக நீந்திக் கடந்த முதல் கனடியர் என்ற சாதனையையும், உலக அளவில் 23வது நபர் என்னும் சாதனையையும் மது நாகராஜா படைத்துள்ளார்.

இந்த சாதனை குறித்து நாகராஜா கூறுகையில், ‘கனடாவின் 150வது பிறந்த நாள் இந்த ஆண்டு ஆகும். அதற்காக எனது பரிசாக இந்த சாதனையை செய்ய நினைத்தேன்.

தனித்துவமான புவியியல் அமைப்பு பல ஊக்கங்களைத் தருகிறது. அதன் மூலமாகவே, 4 செல்சியஸ் குளிர்ந்த நீரில், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய காற்றை எதிர்த்து என்னால் நீந்த முடிந்தது.

இரண்டு மீட்டர் உயரத்திற்கு எழும்பிய அலைகளை எதிர்த்து நீந்தியது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது கடினமாக இருந்தாலும், சாகசமாக நினைத்து செய்ததால் என்னால் சாதிக்க முடிந்தது.

இதே நாளில், அமெரிக்காவின் Michelle Macy என்பவரும் இதே போல நீந்தியுள்ளார்’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘கடைசியாக நான் சந்தித்த தோல்வியே, தற்போது ஒரு மணிநேரம் 19 நிமிடங்களில் நீந்தி சாதனை படைக்க உந்துதலாக இருந்ததது’ என தெரிவித்துள்ளார்.

பெற்ற குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை: காரணம் என்ன?

பெற்ற குழந்தைக்கு விஷம் ஊட்டி கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஷெனாய்நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (30). இவர் மனைவி பிரியா (26). தம்பதிக்கு தன்வந்த் (3) என்ற மகளும், 11 மாத ஆண் குழந்தையான வசீகரனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் ஏழுமலை வழக்கம் போல வேலைக்கு சென்றார். வீட்டில் பிரியாவும் இரண்டு பிள்ளைகளும் இருந்த நிலையில் வீட்டு உரிமையாளர் வீட்டு கதவை வெகுநேரம் தட்ட அவர் திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த உரிமையாளர் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டு கதவை உடைத்து பார்த்த போது படுக்கையில் வசீகரன் மற்றும் பிரியா ஆகிய இருவரும் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர்.

தன்வந்த் அழுதபடி நின்று கொண்டிருந்தான். இதையடுத்து இரண்டு சடலங்களையும் பொலிசார் கைப்பற்றிவிட்டு ஏழுமலைக்கு தகவல் கொடுத்தனர். பொலிசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பிரியாவுக்கு 2 குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளதும், இதனால் அவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

ஏழுமலை தனது மனைவி மற்றும் குழந்தைகளை நன்றாகவே கவனித்து வந்துள்ளார். ஆனாலும், பிரியா எதற்காக குழந்தையை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார் என்பது புரியாத நிலையில் பொலிசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

மணமகளுக்கு மாலை அணிவிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மாப்பிள்ளை மரணம்!!

 
மணமேடையில் மணமகள் கழுத்தில் மாலை அணிவிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மணமகன் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வரீந்தர் கேதா என்பவர் வங்கி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பெயர் சவுரவ் கேதா (28). இவர் செல்போன் மற்றும் ஸ்டேசினரி கடை நடத்தி வந்தார்.

சவுரவுக்கும், ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அந்த நிகழ்வு நடைபெற்றது.

அப்போது மணபெண் சவுரவ் கழுத்தில் மாலை அணிவித்தார். இதையடுத்து சவுரவ் தனது வருங்கால மனைவி கழுத்தில் மாலை போட முயன்ற போது மேடையிலேயே சுருண்டு விழுந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் சவுரவை எழுப்ப முயற்சித்தும் அது முடியாததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சவுரவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக கூறினார்கள்.

ஆனாலும் இதை நம்பாத சவுரவின் பெற்றோர் வேறு மருத்துவமனைக்கு மகனை தூக்கி செல்ல அங்கும் அவர் இறந்து போனது உறுதி செய்யப்பட்டது. மணமேடையிலேயே மாப்பிள்ளை உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.