முல்லைத்தீவு மாங்குளம் கற்குவாறி பகுதியில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. ஆரோக்கிய அன்ரனி சஞ்சித் எனும் ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த பாட்டியின் மாத்திரையை யாரும் கவனிக்காத நிலையில் குழந்தையொன்று எடுத்து நேற்று(04.03) மாலை விழுங்கியுள்ளது.
நேற்று இரவு திடீரென குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்டதனை தொடர்ந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(5) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 860,233 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 30,350 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 242,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 26,560 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 212,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 232,000 ரூபாவாகும்.
இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 214,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் (Jaffna) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதடி ஒழுங்கையில் இந்திய துணை தூதுவர் காரியாலத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் யாழ் பெருமாள் ஆலயத்தில் கணக்காளராக பணிபுரிந்து வரும் சூழலில் கடந்த மூன்று மாதகாலமாக தனிமையில் வசித்து வந்துள்ளார். 41 வயதான இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு இன்று காலை சடலமாக மீட்கபட்டுள்ளார்.
இது தொடர்பில் யாழ்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இல்லம் ஒன்றில் போதை மாத்திரை வியாபாரம் செய்யப்படுவதாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,
மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் (DCDB) பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகத்திற்கிடமான குறித்த இல்லம் மீது திடீர் சுற்றிவளைப்பை இன்றைய தினம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 188 போதை மாத்திரைகளுடன் அதேபகுதியை சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரனைகளில் குறித்த போதை மாத்திரைகள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த நடவடிக்கையானது வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜயசோமமுனி அறிவுறுத்தலின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக்க தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்க, அசங்க, மற்றும் பொலிஸ் கொன்ஸ்தாபில்களான சிந்நக்க, விதுசன், பொலிஸ் சாரதி திசாநாயக்க ஆகியோர் இணைந்து செயல்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தமிழினி மரணம் தற்கொலை அல்ல கொலை என தந்தை பொலிஸில் புகார் அளித்த நிலையில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உதவி பிரதேச செயலாளர் தமிழினி, தீ வைத்து உயிரிழந்ததாக கூறப்பட்ட மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் வந்ததால் சாவகச்சேரி பொலிஸார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த பெண் அரச உத்தியோகஸ்தர் கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீக்காயங்களால் உயிரிழந்தார். மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனையின்போது இறந்த உதவி பிரதேச செயலாளரின் கணவர் தவறுதலாக தீப்பிடித்ததாக தெரிவித்துள்ளார்.
எனினும் , சமர்ப்பிக்கப்பட்ட மேலும் சில சாட்சியங்களின் அடிப்படையில், அது தற்கொலை என்று தீர்மானிக்கப்பட்ட பின்னர், அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறந்த உதவி பிரதேச செயலாளரின் கணவர் யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கிராம அலுவலராக பணிபுரிகிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மனைவியும் கணவரும் அறையில் மெழுகுவர்த்தி ஏற்ற சென்றபோது உதவி பிரதேச செயலாளரின் உடலில் தீப்பிடித்ததாக கூறியுள்ளனர்.
உயிரிழந்த தமிழினி தனது பணியை அர்ப்பணிப்புடன் செய்த அதிகாரியாக மக்களிடையே பிரபலமானவர்.
இதற்கிடையில், பெண்ணின் தந்தை பி. சண்முகராஜா கோப்பாய் பொலிஸில் புகார் அளித்து, தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தகவல்கள் தவறானவை என்றும், இது ஒரு கொலை என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழினியின் மரணம் தொடர்பாக மேலும் அநாமதேய புகார்களும் தொலைபேசி அழைப்புகளும் பொலிஸாருக்கு வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கோப்பாய் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞனின் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்டுள்ளது.
கொக்குவில் பகுதியில் உள்ள கடை ஒன்றின் களஞ்சிய சாலையில் , களஞ்சிய சாலை பொறுப்பாளராக குறித்த இளைஞன் வேலை செய்து வருகின்றனர்.
அந்நிலையில் அவரது மோட்டார் சைக்கிளில் வந்த வாள்களுடன் வந்த இருவர் , களஞ்சிய சாலைக்குள் அத்துமீறி நுழைந்து வேலையில் இருந்த இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
வாள் வெட்டில் இளைஞனின் கை விரல் துண்டாடப்பட்டுள்ள நிலையில் , இளைஞன் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் , தாக்குதலை நடத்திய இருவரையும் பொலிஸார் இனம் கண்டுள்ள நிலையில் ,அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடலூரில், திருமணமான 25 நாட்களில் கலையரசன் என்ற இளைஞருக்கு, மனைவி ஷாலினி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார். ஷாலினிக்கு திருமணத்தில் விருப்பமில்லாததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உடல்நலக்குறைவால் கலையரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கலையரசனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கடலூரில் திருமணமான 25 நாட்களுக்கு கணவருக்கு கூல்டிரிங்க்ஸில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் கலையரசன் என்பவருக்கு கடந்த ஜனவரி 26ஆம் தேதி திருமணம் நடந்தது.
பெரியோர் சம்மதத்துடன் நடந்த இந்தத் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் மணப்பெண் ஷாலினிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை.
திருமணம் முடிந்து முதல் இரவின்போது தான் இன்னொருவரைக் காதலிப்பதாக ஷாலினி கலையரசனிடம் கூறியுள்ளார். இதனால் ஷாலினியை அவரது வீட்டிற்கே அனுப்பி வைத்துவிடலாம் என்று இருவீட்டாரும் பேசி முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பிப்ரவரி 20ஆம் தேதி ஷாலினி கலையரசனுக்கு கூல்ட்ரிங்க்ஸில் விஷம் கலந்து கொடுத்துவிட்டார் என்றும் இதனால் கலையரசன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
தங்கள் மகனை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி செய்த பெண்ணுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கலையரசனின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளடனர். கடலூர் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
திருமணமாகி ஒரு மாதத்திற்குள் கணவனுக்கு கூல்டிரிங்க்ஸில் விஷம் கலந்து கொலை முயற்சி நடந்திருப்பது அயன் கருவேப்பம்பாடி கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் மீது பறவை மோதியதால் திடீரென தீப்பிடித்த எரிய துவங்கியது அமெரிக்காவில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
விமானத்தில் இருந்த பயணிகள் அலறிய நிலையில், இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருந்து இண்டியானா மாகாணத்திற்கு சரக்கு விமானம் ஒன்று கிளம்பிச் சென்ற நிலையில், நடுவானில் விமானம் பறந்துக் கொண்டிருந்த போது திடீரென பறவை ஒன்று விமானத்தின் மீது மோதியது.
இதில் விமான என்ஜின் தீப்பிடித்து எரிய துவங்கிய நிலையில், உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நெவார்க் ஏர்போர்ட்டில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, அங்கு ஏற்கெனவே உஷார்படுத்தப்பட்ட நிலையில் தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் விமானத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பாபா வங்கா கணித்திருப்பதாக அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகும். அந்த வகையில், 2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இயற்கைப் பேரழிவுகள் நேரிடு, அவசரகாலத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று குறிப்பிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025ஆம் ஆண்டில், உலகில் மிக முக்கியமான மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கப்படும். இது வருங்காலத்துக்கு ஏற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுவரை நிகழ்ந்ததைவிட உலகம் முழுவதும் பரவலாக நிலநடுக்கங்கள் நேரிடும் என்றும், அது மட்டுமல்லாமல், சூறாவளி, சுனாமி போன்றவை நேரிடும்,
மக்கள் இயற்கையை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் நேரம் வந்துவிட்டதாகவும், அவசரகாலங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கேலிய பண்டேவா குஷ்டெரோவா என்ற 81 வயதான கியூபா நாட்டைச் சேர்ந்த இவரை பாபா வங்கா என்றே இவரைத் பின்தொடர்வோர் அன்போடு அழைக்கிறார்கள். அவர் இந்த ஆண்டுக்கான கணிப்புகளை மட்டுமல்ல,
5079 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஆறு கணிப்பு வீதம் ஒவ்வொரு ஆண்டுக்கும் தெள்ளத்தெளிவான கணிப்புகளை வெளியிட்டுள்ளாராம். அது என்ன 5079 ஆம் ஆண்டு வரை என்கிறீர்களா அவரது கணிப்பின்படி, 5079ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த உலகமுமே அழிந்துவிடுமாம்.
அவர் எழுதிய பல கணிப்புகள், இரட்டைக் கோபுரங்கள் தாக்குதல், டயானா மரணம், ரஷ்யா – உக்ரைன் போர் என பலவும் சொன்னபடி நடந்ததால், அவரைப் பின்தொடர்வோர் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தான்சானியா நாட்டை சேர்ந்த ஒருவர் 20 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் தகவல் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தான்சானியாவில் பழங்குடியினத்தில் திருமணத்திற்கு தடையில்லாததின் காரணத்தினால் அவர் 20 திருமணங்களை செய்து கொண்டதாக தெரிய வருகிறது.
கபிங்கா எனப் பெயர் கொண்ட நபர் 20 மனைவிகளுடன் ஒரே வீட்டில் தகராறு இல்லாமல் வாழ்ந்து வருகிறாராம். அவருக்கு ஆண்களும் பெண்களுமாக 104 பிள்ளைகளும் 144 பேரன் பேத்திகளும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஒடிட்டி சென்ட்ரலின் (Oddity Central) அறிக்கையின்படி,
தான்சானியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் கபிங்கா என்ற நபர் வசித்து வருகிறார். அவருக்கு தற்போது 16 மனைவிகள், 104 குழந்தைகள் மற்றும் 144 பேரக்குழந்தைகள் உள்ளனர். வீட்டை தாண்டி, ஒரு கிராமம் போலவே வாழ்ந்து வருகின்றனர்.
1961இல் கபிங்கா முதல் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். அவரது தந்தை குடும்பத்தை விரிவுபடுத்தும்படி கேட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் இன்னும் திருமணம் செய்தால், வரதட்சணைக்கு பணம் தருவதாக முன்மொழிந்துள்ளார். இதையடுத்து 7 உண்மையான சகோதரிகளை அவர் மணந்துள்ளார்.
கபிங்காவின் தந்தை அவரது 5 திருமணங்களுக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால் அடுத்தடுத்த திருமணங்களை அவரே செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், பலருக்கும் இந்த தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளின் பாடத்திட்டங்கள் மட்டுமே முழு மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் என தேசிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் மஞ்சுளா விதானபதிரன தெரிவித்தார்.
அதோடு , 10 ஆம் வகுப்பு பாடத்திட்டம் ஓரளவு மாறும் என்றும் இயக்குனர் ஜெனரல் கூறினார். புதிய சீர்திருத்தங்களின் கீழ் மற்ற வகுப்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்காது என்றும் விதானபதிரன தெரிவித்தார்.
இந்த மூன்று வகுப்புகளுக்கான புதிய கற்றல் கற்பித்தல் செயல்முறை 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வகுப்பறைகளில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
அதற்காக அமைச்சரவை பத்திரங்களுக்கான தகவல்களை வழங்குதல், ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தல், தொகுதிகளை தயாரித்தல்,
புத்தகங்களை தயாரித்தல் போன்ற சீர்திருத்த செயல்முறைகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் ஜெனரல் தெரிவித்தார். மேலும் தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த அதிகபட்ச அர்ப்பணிப்பை வழங்கியுள்ளனர் என்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் மஞ்சுளா விதானபதிரன கூறினார்.
நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று முதல் (04) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
எதிர்வரும் நாட்களில் இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததை தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று காலை பங்கேற்றபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கை மக்கள் நாட்டை விட்டு வெளியேறாத நிலையை அடைவார்கள். கடந்த நெருக்கடி காலகட்டத்தின் போது இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் விரைவில் நாட்டிற்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டு அவர்கள் முதன்முதலில் நாட்டிற்கு வந்தபோது, நாட்டு மக்களுக்கு எரிபொருள், எரிவாயு, மருந்துகள் போன்றவற்றின் தேவை இருந்தன. அந்த நேரத்தில், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக இருந்தன.
எனினும், தற்போது நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் கையிருப்புகள் இப்போது கணிசமாக அதிகரித்துள்ளன.
திட்டத்தின் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளில் அரைவாசி ஏற்கனவே எட்டப்பட்டுள்ளமை ஊக்கமளிப்பதாக பீட்டர் பிரூவர் மேலும் தெரிவித்துள்ளார்.