இலங்கையின் பிரபல நடிகை சுசந்தா சந்திரமாலி திடீர் மரணம்!!

இலங்கையின் பிரபல நடிகையான சுசந்தா சந்திரமாலி காலமானார்.

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், தனது 61 ஆவது வயதில் இன்று காலமானார்.

நடிகை சுசந்தா சந்திரமாலி, இலங்கையின் இளம் நடிகையான திசுரி யுவனிகாவின் தாயார் ஆவார்.

 

விரைவில் சேவையில் இருந்து விடைபெறுகின்றது Skype!!

2025 மே மாதம் முதல் Microsoft நிறுவனம் Skype இணையச் சேவையை நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சேவை 2003ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

2011ஆம் ஆண்டில் Microsoft நிறுவனம் Skype சேவையை வாங்கியது. இந்த ஆண்டு (2025) மே மாதம் முதல் Skype இருக்காது என்று Skype தளம் அதன் சமூக ஊடகங்களில் தெரிவித்தது.

முதலில் இலவசமாக கணினிகளுக்கு இடையே குரல் அழைப்புகளை வழங்கியது Skype. அந்தக் காலத்தில் அது புரட்சிகரமாகப் பார்க்கப்பட்டது. ஆண்டுகள் கடந்துபோக இணையத்தின் வேகம் முன்னேற்றம் அடைந்தது.

பிறகு Skype தளத்தில் காணொளி அழைப்புகளும் சேர்க்கப்பட்டன. 2005ஆம் ஆண்டுக்குள் Skype தளத்திற்கு 50 மில்லியன் பேர் பதிவு செய்தனர். அதேசமயம் அண்மை ஆண்டுகளில் அறிவார்ந்த கைப்பேசிகள் அறிமுகம் கண்டன.

Meta நிறுவனத்தின் WhatsApp, Zoom போன்ற தளங்கள் வந்தவுடன் Skype மீதான ஈர்ப்பு பாவனையாளர்களிடம் குறைந்த நிலையில், Skype இணையச் சேவையை நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிரபலமான யுவதியை கொன்ற காதல்!!

சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலஸ்முல்ல பகுதியை சேர்ந்த 24 வயதான இமாஷி ஹெட்டியாராச்சி என்ற இளம் பெண்ணே இந்த முடிவை எடுத்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான குறித்த பெண், காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலஸ்முல்ல தயாரத்ன வீதியிலுள்ள வீட்டிலுள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு அவரை உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரிக்ரொக் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான இமாஷி, அதிகளவான விசிறிகளை கொண்ட இளம் பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரை மாய்த்துக் கொள்வது பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வான அமையாது எனவும் இவ்வாறான தவறான முடிவுகளை எடுப்பது தவிர்க்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கனடாவில் நடைபெற்ற தேர்தலில் இரு ஈழத்தமிழர்கள் அமோக வெற்றி!!

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற தேர்தலில் ஈழத்தமிழர் இருவர் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

ஒண்டாரியா மாகாண சபைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் டக் ஃபோர்ட் தலைமையிலான புரோகிரஸிவ் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

தேர்தல் முடிவுகளுக்கமைய புரோகிரஸிவ் கன்சர்வேடிவ் கட்சி 81 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. என்.டி.பி. (NDP) 26 இடங்களைப் பெற்றுள்ளனர். இதன்மூலம் மீண்டும் எதிர்க்கட்சியாக செயற்படவுள்ளனர்.

லிபரல் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், கட்சித் தலைவர் பானி க்ராம்பி (Bonnie Crombie) தனது தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.

இந்நிலையில் வெற்றிக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்த டக் ஃபோர்டு, “ஒன்டாரியோவை பாதுகாக்க ஒரு வலுவான, வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது பெரும்பான்மை ஆட்சியை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தத் தேர்தல் புரோகிரஸிவ் கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம், லோகன் கணபதி ஆகியோர் மீண்டும் மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

இவர்கள் இருவரும் மூன்றாவது தடவையாகவும் மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகி உள்ளமை விசேட அம்சமாகும்.

பரோட்டா சாப்பிட்ட 11 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சோகம்!!

தமிழகத்தில் உணவகங்களில் சமைக்கப்படும் உணவுகள் பெரும்பாலான இடங்களில் தரமில்லாததாகவும், சுகாதார குறைவாகவும் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக அசைவ வகையான உணவுகளில் கலப்படம், கெட்டுப் போன இறைச்சி பயன்படுத்துதல் போன்றவை அடிக்கடி அரங்கேறுகின்றன.

பிரியாணியில் கரப்பான்பூச்சி, சிக்கன் க்ரேவியில் எலி தலை போன்றவை இருந்த சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஆயிரக்கணக்கில் கெட்டுப் போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் பரோட்டா சாப்பிட்ட 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ஏழுமலை, சங்கீதா. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில், இவர்கலின் மகன் சுதர்சனன் தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வீட்டின் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் சுதர்சனன் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார்.

இதில் வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சுதர்சனன் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை சரியாகாததால் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று காலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக பெற்றோர்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் மரணத்திற்கான உண்மை காரணம் தெரியவரும். அதே நேரத்தில் பரோட்டா சாப்பிட்டதால் தான் சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதால் மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த தாய்!!

வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றியதால் பெட்ரோல் ஊற்றி தாயே மகனை எரித்துக்கொன்ற சம்பவம் திருவள்ளூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மருமகள் கொடுத்த புகாரின்பேரில் இறந்த வாலிபரின் தாய் கைதானார்.

கடம்பத்தூர் ஒன்றியம், தொடுகாடு ஊராட்சி நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (23). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

கிருஷ்ணமூர்த்தியின் தாயாரான ஜெயந்தி (45) என்பவரும் இவர்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் கிருஷ்ணமூர்த்திக்கு வேலை கிடைக்காததால் குடித்துவிட்டு ஊர்சுற்றி வந்துள்ளார்.

இதனிடையே தொழில் தொடங்க பணம் வேண்டுமென்று கூறி அடிக்கடி குடிபோதையில் தாயிடம் கிருஷ்ணமூர்த்தி சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி காலை 7 மணிக்கு கிருஷ்ணமூர்த்தி தனது தாய் ஜெயந்தியிடம் தொழில் தொடங்க பணம் கேட்டு மீண்டும் பிரச்னை செய்துள்ளார். அதற்கு பணம் தர முடியாது என மறுத்துவிட்டதால், ஆத்திரத்தில் தாயை கிருஷ்ணமூர்த்தி மிரட்டியுள்ளார்.

அப்போது, ‘‘வேலைக்குப் போகாமல் ஊர்சுற்றி வந்ததோடு, வீட்டிலேயே இருந்துகொண்டு என்னையே மிரட்டுகிறாயா’’ என கேட்டவாறு, வீட்டின் சமையல் அறையில் வைத்திருந்த பெட்ரோல் எடுத்து வந்து மகன் கிருஷ்ணமூர்த்தி மீது ஊற்றி, ‘‘இத்தோடு செத்துப் போடா’’ என்று கூறி தீயை வைத்து மகனை கொளுத்தியுள்ளார்.

இதனால் கிருஷ்ணமூர்த்தி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்களது உதவியுடன் கிருஷ்ணமூர்த்தியை மீட்ட மனைவி பாரதி, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது கணவரை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, ஆபத்தான நிலையில் இருந்த கிருஷ்ணமூர்த்தியை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் நள்ளிரவு கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி பாரதி மப்பேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் ஜெயந்தியை கைது செய்தனர். பின்னர், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

வேலைக்குச் செல்லாமல், குடிபோதையில் ஊர் சுற்றி வந்த மகனை தாயே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகின் பெரும் பணக்காரர்களின் புதிய பட்டியல் : முதலிடத்தில் தெரியுமா?

அமெரிக்காவின்(USA) பிரல்யமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிக்கை உலகின் 24 சூப்பர் பில்லியனர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த சூப்பர் பில்லியனர்கள் 50 பில்லியன் டொலர்களுக்கு மேல் நிகர மதிப்பைக் கொண்டுள்ளனர்.

தொழில்நுட்பம், வணிகம் என பல்வேறு துறைகளில் ஜாம்பவான்களாக உள்ளவர்கள் இதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த பட்டியலில் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா(Tesla) உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலோன் மஸ்க் (Elon Musk) முதலிடம் பிடித்துள்ளார்.

அவரது சொத்து மதிப்பு 419.4 பில்லியன் டொலர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அவர் சென்டி-பில்லியனர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸோஸ் உள்ளார்.

மூன்றாம் இடத்தில், LVMH தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார். அடுத்த இடங்களில் லாரன்ஸ் எலிசன், மார்க் ஜூக்கர்பெர்க், செர்ஜி பிரின், ஸ்டீவன் பால்மர், வாரன் பஃபெட் மற்றும் ஜேம்ஸ் வால்டன் ஆகியோர் உள்ளனர்.

இதேவேளை, இந்திய பணக்காரர்களான முகேஷ் அம்பானி 17வது இடத்தையும், கௌதம் அதானி 21வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

வவுனியாவில் உடமையில் கேரள கஞ்சாவை வைத்திருந்த சட்டத்தரணி : மேன்முறையீட்டை அடுத்து பிணையில் விடுதலை!!

வவுனியாவில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் சட்டத்தரணி ஒருவரை குற்றவாளியாக அடையாளம் கண்ட நீதிமன்று அவருக்கு 10ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து தீர்பளித்தது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த 2021ஆம் ஆண்டு வவுனியா செட்டிகுளம் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்தபகுதியில் வைத்து இளம்சட்டத்தரணி ஒருவரிடம் சோதனை நடாத்தப்பட்டது.

இதன்போது அவரது உடமையில் கஞ்சா இருந்ததாக தெரிவித்து குறித்த சட்டத்தரணி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுவந்தது. இந்நிலையில் இன்றையதினம் அதற்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக சட்டத்தரணியை குற்றவாளியாக அடையாளம் கண்ட நீதிமன்றம் அவருக்கு 10ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தது.

இதேவேளை குறித்த சட்டத்தரணி மேன்முறையீடு தொடர்பான அறிவித்தலை நீதிமன்றில் வழங்கியதன் பிரகாரம் மேன்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருப்பதன் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றுடன் ஒன்று மோதிய முச்சக்கரவண்டிகள் : மூவர் படுகாயம்!!

மஹியங்கனை – ஹெட்டிபொல பிரதான வீதியில் வில்கமுவ சந்தியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று வியாழக்கிழமை (27) பிற்பகல் இரண்டு முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டு யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த ஆசிரியை!!

பொலன்னறுவை, நிக்கபிட்டிய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (27) காலை இடம்பெற்றுள்ளதுடன், எலஹர, நிக்கபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆசிரியை ஒருவரே இதன் போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ஆசிரியை உணவு தயாரிப்பதற்குப் பாத்திரங்களைக் கழுவுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த போது காட்டு யானை தாக்கி படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, படுகாயமடைந்த ஆசிரியை பக்கமுன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

பொது மக்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை (TRCSL) ஒன்றை விடுத்துள்ளது.

இதன்படி, தொலைபேசி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு, பரிசுகளை வென்றுள்ளதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மோசடி செய்பவர்கள், தனிநபர்களிடம் பரிசு வென்றுள்ளதாக தெரிவித்து, குறுஞ்செய்திகள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் அவர்களை தொடர்பு கொண்டு பரிசுகளைப் பெற வரி அல்லது கட்டணங்களைச் செலுத்துமாறு,

மோசடிக்காரர்கள் பணமோசடியில் ஈடுபடுவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரான விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், இதுபோன்ற மோசடிகளுக்கு உட்படாமல் இருக்கவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளதோடு எந்தவொரு பரிசு கோரிக்கைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்,

தேவையற்ற செய்திகள் அல்லது அழைப்புகளின் அடிப்படையில் எந்தப் பணத்தையும் செலுத்த வேண்டாம் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி!!

இந்த வாரம் முழுவதும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் உயர்வடைந்துள்ளது.

நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291.40 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் (28) 291.19 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

அதன்படி அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி நேற்று 299.98 ரூபாவாக காணப்பட்டதோடு, இன்று 299.73 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 364.96 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 378.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.58 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 313 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200.21 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 208.71 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179.10 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 188.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (28) வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்ந்துள்ளது.

NDB வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 291.75 இலிருந்து ரூ.291.50 ஆகவும் விற்பனை விலை ரூ.299.75 இருந்து ரூ.299.50 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ.290.32 லிருந்து ரூ.290.02 ஆகவும் ரூ.300.73 லிருந்து ரூ.300.43 முறையே பதிவாகி இருப்பதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதிரூ.290.39 லிருந்து ரூ.289.89 வரையிலும் விற்பனை பெறுமதி ரூ.299 லிருந்து ரூ.298.50 என்றவாறாகக் காணப்படுகிறது.

இளம் பெண்ணின் விபரீத முடிவு : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!!

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வலஸ்முல்ல பகுதியை சேர்ந்த 24 வயதான இமாஷி ஹெட்டியாராச்சி என்ற இளம் பெண்ணே இந்த முடிவை எடுத்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான குறித்த பெண், காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலஸ்முல்ல தயாரத்ன வீதியிலுள்ள வீட்டிலுள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு அவரை உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரிக்ரொக் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான இமாஷி, அதிகளவான விசிறிகளை கொண்ட இளம் பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரை மாய்த்துக் கொள்வது பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வான அமையாது எனவும் இவ்வாறான தவறான முடிவுகளை எடுப்பது தவிர்க்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

2025-ல் நடக்கப்போகும் பேரழிவுகள்!!

ஒருவர் எதிர்காலத்திற்குப் பயணித்ததாக கூறி, 2025 ஆம் ஆண்டு குறித்து தனது கணிப்புகளில் ஆன்லைனில் அதிர்வலையை ஏற்படுத்திய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்கலில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

இந்த விடயம் தொடர்பி்ல் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, காலப் பயணி என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட எல்விஸ் தாம்சன் (@elvis.thompson.927) என்ற நபர், ஜனவரி 1ஆம் திகதி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அதில் 2025-ம் ஆண்டில் பேரழிவு நிகழ்வுகள் நடக்கும் என்று அவர் நம்பும் ஐந்து குறிப்பிட்ட திகதிகளைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

இவர் கூறும் பேரழிவுகள் அனைத்தும் அமெரிக்காவில் தான் நடக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோவில், ஏப்ரல் 6ஆம் திகதி மணிக்கு 1046 கிலோமீட்டர் வேகத்தில் 24 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு சூறாவளி அமெரிக்காவின் ஓக்லஹோமாவைப் பேரழிவிற்கு உட்படுத்தும் என்று தாம்சன் கணித்துள்ளார்.

மேலும், மே 27ஆம் திகதி, இரண்டாவது அமெரிக்க உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்றும், இது டெக்சாஸ் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்றும், அணு ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட உலகளாவிய மோதலைத் தூண்டி, இறுதியில் அமெரிக்காவை அழிவில் ஆழ்த்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது போதாதென்று செப்டம்பர் 1ஆம் திகதி சாம்பியன் என்ற வேற்றுகிரகவாசியின் வருகையை அவர் முன்னறிவித்ததால், தாம்சனின் கணிப்புகள் வேற்று கிரகவாசிகளின் பக்கமும் திரும்பியுள்ளது.

சாம்பியன் என்ற பெயருடைய இந்த வேற்று கிரகவாசி, 12,000 மனிதர்களை அவர்களின் பாதுகாப்புக்காக மற்றொரு மக்கள் வசிக்கும் கிரகத்திற்கு கொண்டு செல்வார்கள் என்றும் அவர் கூறுகிறார். பூமிக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் விரோதமான வேற்றுகிரகவாசிகள் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

எதிர்காலத்தில், செப்டம்பர் 19 அன்று அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை ஒரு பெரிய புயல் தாக்கும் என்று தாம்சன் கணித்துள்ளார்.

இறுதியாக, நவம்பர் 3ஆம் திகதி , நீலத் திமிங்கலத்தை விட ஆறு மடங்கு பெரியதும், செரீன் கிரவுன் என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய கடல் உயிரினம் பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

தாம்சனின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாகப் பரவி வைரலாகியுள்ளதோடு, 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் ஏராளமான கருத்துகளையும் பெற்றுள்ளது.

எனினும் சில பார்வையாளர்கள் இவரின் கணிப்புகளுக்கு சந்தேகம் தெரிவித்துள்ளனர். தாம்சன் அடுத்த வார லாட்டரியில் பரிசு போகும் எண்களை எதிர்காலத்திற்குச் சென்று கணித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நகைச்சுவையாக ஒரு யூசர் கருத்து தெரிவித்துள்ளார்.

இவரது வீடியோவைச் சேமித்து வைத்திருப்பதாகவும், ஒருவேளை தாம்சனின் கணிப்புகள் பொய்யென்று நிரூபிக்கப்பட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் மற்றொரு யூசர் ஆவேசமாக கூறியுள்ளார்.

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் : ஒருவர் பலி!!

செவனகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செவனகல 10 மைல்கல் வீதியில் ஹபரலுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவனகல பிரதேசத்தில் இருந்த பயணித்த மோட்டார் சைக்கிளும் அதற்கு எதிர் திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதுடன், ஏனையவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர் கந்தேயாக, மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தநபர் 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை செவனகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல் : கட்டாயமாகும் நடைமுறை!!

பிரான்ஸில் குடியுரிமை பெற பிரெஞ்சு மொழி அறிவு அவசியம் என உள்துறை அமைச்சர் புறுனோ ரெத்தாயோ தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு முதல் பிரான்ஸில் தங்கியிருப்பதற்கான பல்வேறு விதமான விசா அட்டைகளை பெற்றுக்கொள்ளவும் இந்த நடைமுறை பொருத்தும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய 2 தொடக்கம் 4 வருட விசாவை பெற்றுக்கொள்ள A2 மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 வருட விசா பெற்றுக்கொள்ள B1 மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரெஞ்சு குடியுரிமை பெற B2 மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போகும் இந்த சட்டம் குறித்து பிரெஞ்சு ஊடகங்கள் முக்கித்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய மொழி நிலையான A2 நாட்டிற்கு புதிதாக வருபவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.