தன்னை சின­மூட்­டிய சுற்­றுலாப் பய­ணியை தனது புக­லி­டத்­துக்குள் இழுத்துச் சென்று கடித்துக் குதறிய கரடி!!

தன்னை சின­மூட்­டிய சுற்­றுலாப் பய­ணியை கர­டி­யொன்று தனது புக­லி­டத்­துக்குள் இழுத்துச் சென்று கடித்துக் குத­றிய சம்­பவம் தாய்­லாந்தில் இடம்­பெற்­றுள்­ளது. எனினும் அந்த சுற்­றுலாப் பயணி அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயிர் தப்­பி­யுள்ளார்.

பெட்­சபன் மாகா­ணத்­தி­லுள்ள ஆல­ய­மொன்­றி­லி­ருந்த கர­டிகள் புக­லி­டத்தைப் பார்­வை­யிடச் சென்ற நயிபம் புரொம்­ரேரி (36 வயது) என்ற மேற்­படி சுற்­று­லாப்­ப­யணி கயிறு ஒன்றைப் பயன்­ப­டுத்தி சோற்றைக் கொண்ட சட்­டி­யொன்றை குறிப்­பிட்ட கர­டியின் புக­லி­ட­மான பள்­ளத்தில் இறக்­கி­யுள்ளார்.

இதன்­போது அந்தக் கரடி சோற்றை உண்ண வரவும் அவர் சோற்று சட்­டியை அங்கும் இங்கும் அசைத்து சோற்றுச் சட்­டிக்­காக அந்தக் கரடி அலைந்து திரி­வதை தனது நண்­பர்­க­ளுக்கு வேடிக்கை காட்டும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார்..

இந்­நி­லையில் கடும் பசி­யுடன் இருந்த கரடி ஒரு கட்­டத்தில் சின­ம­டைந்து தனது பின்­னங்­கால்­களால் எழுந்து நின்று நயிபம் புரொம்­ரே­ரியை தாவிப் பிடித்து பள்­ளத்­திற்குள் இழுத்­துள்­ளது.

கர­டியின் திடீர் தாக்­கு­தலால் நயிபம் புரொம்­ரேரி மயக்க நிலைக்கு செல்­லவும் கரடி அவரைக் கடிக்க ஆரம்­பித்­துள்­ளது.

இதனால் அதிர்ச்­சி­ய­டைந்த அவ­ரது நண்­பர்கள் கரடி மீது தடி­களை வீசியும் குளிர் நீரை ஊற்­றியும் அதனை அங்­கி­ருந்து பின்­வாங்கச் செய்யும் முயற்­சியில் ஈடு­பட்­டனர். ஆனால் அவர்­க­ளது அந்த முயற்­சிக்கு பலன் கிடைக்­க­வில்லை.

கரடி நயிபம் புரொம்­ரே­ரியின் சதைப் பகு­தியை தனது வாயால் கௌவி அவரை அங்கும் இங்கும் இழுத்துச் செல்ல ஆரம்­பித்­தது.

இந்­நி­லையில் வேறு வழி தெரி­யாத அங்­கி­ருந்த சிலர், கர­டியின் புக­லி­ட­மான பள்­ளத்­துக்குள் இறங்கி கம்­புகள் மற்றும் தடி­களால் கர­டியை நேர­டி­யாக தாக்­கவும் அந்தக் கரடி நயிபம் புரொம்­ரே­ரிiயை விட்டு பின்­வாங்க ஆரம்­பித்­தது.

இத­னை­ய­டுத்து துரி­த­மாக செயற்­பட்ட நயிபம் புரொம்­ரே­ரியின் நண்­பர்கள் மயங்கிக் கிடந்த அவரை அவ­சர அவ­ச­ர­மாக அங்­கி­ருந்து மீட்­டனர்.

தொடர்ந்து சம்­பவ இடத்­துக்கு வந்த அவ­சர சேவைப் பிரி­வி­னரால் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்ட நயிபம் புரொம்­ரே­ரியின் உடல் நலம் தற்­போது தேறி வரு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. மேற்­படி சம்பவத்தில் அவர் உயிர் தப்பியமை அதிசய சம்பவம் ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட ஆலயத்தின் மதகுருமார் மேற்படி கரடியையும் ஏனைய விலங்குகளையும் வளர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலை நோயாளர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா!!

 
வவுனியா பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலை நோயாளர் விடுதிக்கான அடிக்கல்லை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் நேற்று (04.08.2017) காலை நாட்டி வைத்தார்.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் ப.சத்தியசீலன், இணைப்பாளர் பா.சிந்துஜன் , சுகாதார அமைச்சரின் அலுவலக உத்தியோகத்தர்கள், தாய் சேய் நல பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ஜெயதரன், பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து 18 மில்லியன் ரூபா நிதியில் நோயாளர் விடுதி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வாக்காளர் எண்ணிக்கையில் மாறுபாடு : விளக்கம் கோரி சிவசக்தி ஆனந்தன் எம்.பி கடிதம்!!

வவுனியா மாவட்டத்திற்குட்பட்டதான பிரிவுகளில் வாக்களர் எண்ணிக்கையில் காணப்படும் மாறுபாடு தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்இன் செயலாளரும், வன்னிமாட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாக்காளர்கள் இடாப்பிற்கும் வவுனியா வடக்கு பிரதேச சபையின் கீழுள்ள வாக்களார் இடாப்பிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள வாக்களார்கள் வித்தியாசத்தை தெளிவுபடுத்தப்படவேண்டும்.

குறிப்பாக வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு வவுனியா தேர்தல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள 2016 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்களார்கள் பட்டியலில் 11747 பேரும், வவுனியா வடக்கு பிரதேசச் செயலாளருக்கு வழங்கப்பட்ட வாக்களர்கள் பட்டியலில் 8577 பேரும், பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட பட்டியலுக்கிடையில் 3170 வாக்காளர்கள் வித்தியாசப்படுவதற்கான காரணத்தை தெளிவுபடுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலி ஓயா கிராமத்திலுள்ள வாக்களார்கள், நெடுங்கேணி பிரதேச சபை வாக்காளர்கள் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். அத்துடன் 2015 ம் ஆண்டு வெடிவைத்தகல் கிராம சேவையாளர் பிரிவில் 18 பேரே வாக்களர்களாகக் பதிவு செய்யப்பட்டிருந்தார்கள். தற்போது இந்த கிராம சேவையாளர் பிரிவில் திடீரென 758 வாக்காளர்களாக அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் அறியவருகிறது.

இந்த விடயம் தொடர்பாக நாம் ஏற்கனவே எல்லை மீள் நிர்ணயக்குழுவிற்கு முறைப்பாடு செய்துள்ளதோடு இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களில் முன்னிலைப்படுத்தி, அதற்கான விளக்கத்தை வழங்குமாறு கோரப்பட்டபோதும் அதற்கான பதில் இன்று வரை யாராலும் எமக்கு வழங்கவில்லை.

அப்பிரதேச மக்களின் இந்த கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டியவர்களாகவிருப்பதால் இதற்கான விளக்கத்தை எனக்கு வழங்கி உதவுமாறு தங்களைத் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தின் பிரதி வவுனியா மாவட்ட செயலாளர் றோகன புஸ்பகுமாரவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நங்கூரம் வி. கழகத்தினால் இரண்டு இலட்சம் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு!!

 
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் விளையாட்டுக் கழகம், கோவில்குளம் இந்துக் கல்லூரியின் 2007 உயர்தர பழைய மாணவர்களுடன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சர்வதேச கிளைகள் என்பவற்றின் ஒன்றிணைந்த அனுசரணையுடன் கடினபந்து துடுப்பாட்ட அணிக்கான இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான முழுமையான விளையாட்டு உபகரணங்கள் நேற்று (04.08.2017) கோவில்குளம் இந்துக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் வைத்து புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கத்தால் கல்லூரி முதல்வர் த.பூலோகசிங்கம் மற்றும் விளையாட்டு பொறுப்பாசிரியர் என்.சுந்தராங்கனிடம் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வைத்து வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் புளொட் அமைப்பின் மத்திய செயற்குழு உறுப்பினரும், வட மாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், புளொட் அமைப்பின் மத்திய செயற்குழு உறுப்பினரும், செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான சு.ஜெகதீஸ்வரன்(சிவம்), வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் சு.காண்டீபன், கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு ஜோயல் நிரோஷான், கோவில்குளம் சிவன் ஆலயத்தின் அறங்காவலர் சபையின் தலைவர் மற்றும் வவுனியா தெற்கு கல்வி வலய சமூகவியல் உதவிப் பணிப்பாளர் திருமதி எஸ்.சத்தியமூர்த்தி , தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் த.நிகேதன், அமைப்பாளர் வ.பிரதீபன், ஆலோசகரும் கிராமங்களுக்கான இணைப்பாளர் சதீஸ் ஆகியோருடன் பாடசாலையின் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் ரயிலுடன் மோதிய பேருந்து :அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

 
வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இன்று (04.08.2017) மாலை 4 மணியளவில் வவுனியாவிலிருந்து பயணிகளுடன் பயணித்த வவுனியா-மெனிக்பாமிற்கான அரச பேருந்து ஒன்று புகையிரத கடவையை கடக்க முயன்ற வேளையில் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவ்விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் பேருந்தின் சாரதி ரஹீம் (வயது 30) படுகாயமடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. இப் புகையிரதகடவையானது பாதுகாப்பற்ற புகையிரத கடவை என்பது குறிப்பிடத்தக்கது.

படுகாயத்திற்குள்ளானவர்கள் செட்டிகுளம் வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

வட மாகாணத்தில் வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதற்கு மத்திய அமைச்சு அனுமதி!!

 
வடக்கு மாகாணத்திலுள்ள குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக வடக்கு சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

நேற்று (03.08) மன்னார் முருங்கன் வைத்தியசாலையில் நடைபெற்ற சத்திரசிகிச்சை பிரிவு விடுதி மற்றும் வைத்தியர் விடுதி திறப்பு விழாவில் கலந்தகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது வடக்கு மாகாணத்திலுள்ள 8 வைத்தியசாலைகளை தரமுயர்த்துவது தொடர்பில் கோரிக்கையொன்றினை கடந்த வருடம் மத்திய சுகாதார அமைச்சிற்கு அனுப்பியிருந்தோம். இவ்விடயம் தொடர்பாக 2016ம் ஆண்டு நடைபெற்ற மாகாண சுகாதார அமைச்சின் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு தீர்மானமானது மாகாண அமைச்சர் வாரியத்தின் அனுமதியுடன் மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டு சபையின் ஆதரவுடன் மத்திய சுகாதார அமைச்சிற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதில் வவுனியா மாவட்டத்தில் பொது வைத்தியசாலையை மாகாண பொது வைத்தியசாலையாகவும், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையை தள வைத்தியசாலையாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் சிலாவத்துறை, மல்லாவி மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலைகளை தள வைத்தியசாலைகளாகவும், யாழ்பாணம் மாவட்டத்தில் தெல்லிப்பளை தள வைத்தியசாலையை விசேட வைத்தியசாலையாகவும், பருத்தித்துறை தள வைத்தியசாலையை பொது வைத்தியசாலையாகவும், மன்னார் மாவட்டத்தில் முருங்கன் பிரதேச வைத்தியசாலையை தள வைத்தியசாலையாகவும் தரமுயர்த்துவது தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கொழும்பில் சுகாதார பணிப்பாளர் நாயகம் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மல்லாவி, புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலைகளை தள வைத்தியசாலைகளாகவும், மன்னார் மாவட்டத்தில் முருங்கன் பிரதேச வைத்தியசாலையை தள வைத்தியசாலையாகவும் தரமுயர்த்தவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், வவுனியா, தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலைகளை தரமுயர்த்துவது தொடர்பில் விரைவில் அமைச்சர்கள் மட்டத்தில் கூட்டமொன்று நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிலாவத்துறை, நெடுங்கேணி வைத்தியசாலைகளின் பௌதீக, மனிதவளங்களை அபிவிருத்தி செய்த பின்னர் அவற்றையும் தரமுயர்த்தவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் 122வது அறநெறி பாடசாலை தினவிழா!!

 
இலங்கை சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் 122 ஆவது அறநெறி பாடசாலைகள் தினத்தை நினைவு கூரும் விழா நேற்று (03.08) பிற்பகல் 2 மணியளவில் வவுனியா நகர கேட்போர் கூட மண்டபத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பௌத்த சாசன பிரதி அமைச்சர் எச்.ஆர்.சாரதி துஸ்மந்த மித்திரிபால, பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் நிமல் கொட்டவலகெதர, பௌத்த சாசன வலிமுரியாவே குசலதம்மதேரர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிரகுமார, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.றோகனபுஷ்பகுமார, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.கேதீஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜெயதிலக, வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள், வவுனியா மாவட்ட சாசனாரக்ஷக அலுவலகர்கள், பாடசாலை அதிபர், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும், பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியாவில் பொலிசாரும் வர்த்தகர்களும் இணைந்து டெங்கு ஒழிப்பு சிரமதானம்!!

 
வவுனியா மத்திய பேரூந்து நிலையம் மற்றும் வவுனியா நகர மத்தியிலிலுள்ள வர்த்தக நிலையங்களில் முன்பாகவுள்ள இடங்களை துப்பரவு செய்யும் பணி நேற்று (03.08.2017) காலை 8.30மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை இடம்பெற்றது.

வவுனியா பொலிஸார், வர்த்தகர்கள், நகரசபையினர் இணைந்து மேற்கொண்ட டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணியில் சுமார் 40க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டில் பல இடங்களில் டெங்கு நோய் தாக்கங்கள் அதிகரித்துள்ள நிலையில் இவர்களின் நடவடிக்கை முன்மாதிரியாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

வவுனியா பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

 
வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கையில் அமைந்துள்ள பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கு V3 அமைப்பினர் நேற்று (03.08.2017) வியாழக்கிழமை சுமார் 1500 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

பாரதி முன்பள்ளி முகாமைத்துவ குழுவினர் V3 அமைப்பிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க சாப்பாட்டுப் பெட்டி ,தண்ணீர் போத்தல், சிறுவர்களுக்கான ஆங்கிலப்புத்தகங்கள், வரைதல் கொப்பி, வெளிக்களக்கொப்பி, இயற்கையான களி, பைல் கவர், சோக் கலர் பெட்டி, பென்சில் கலர் பெட்டி ,கம் போத்தல் என்பன கொண்ட பொதிகள் கொக்குவிலைச்சேர்ந்த லண்டன் வாழ் V3 அமைப்பின் சமூக ஆர்வலர் வி.விமல்ராஜால் அவரது பாரியார் திருமதி செல்வி விமல்ராஜின் பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கி வைத்தார்.

பாரதி முன்பள்ளி ஆசிரியர் திருமதி ச.மேரி மெற்றில்டா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாஸன் பிரதம விருந்தினராகக்கலந்து கொண்டார் .

சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற அதிபர் திரு குருகுலசிங்கம் மாவட்ட சமூக சேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி தி .கலைவாணி V3 அமைப்பின் வவுனியா உறுப்பினர்கள் கே.உதயகுமார் எஸ்.புருசோத்தமன், சமூக ஆர்வலர் த.தர்மராஜா ஆகியோருடன் பெற்றோர்கள் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

வட்ஸ்அப் மூலம் வரும் பிரச்சனைகளை தவிர்ப்பது எப்படி?

பெண்களுக்கு தற்போது வரும் பிரச்சினைகளுக்கும் ஆபத்துக்களுக்கும் காரணமாக அமைவது சமூகவளைத்தளங்களாகும். தற்போது உடனுக்கு உடன் செய்திகளை பரிமாற்றத்துக்காக பிரபல்யாமானது ஒன்றுத்தான் வட்ஸ்அப். முகப்புத்தகத்தில் மட்டுமல்லாது வட்ஸ்அப்பிலும் கூட தற்போது பெண்களுக்கு பிரச்சினை வருகின்றது.

தெரியாத நபர்கள்கூட, ஸ்டேட்டஸ் மூலம் நம்மை தொடர முடியும். தெரிந்தவர்களே தெரியாதவர்கள் கூட நமது வட்ஸ்அப் கணக்கினை பார்க்க முடியும். நமது புகைப்படத்தினை பார்க்கவும் புகைப்படங்களை டவுன்ட் செய்யவும் முடியும்.

ஒரு போலி பெயருடன் ஒருவர் குறிப்பிட்ட தெலைபேசி எண்ணிலிருந்து தோன்றும்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் இவர்தான் என்று நம்மால் உறுதிபடுத்த முடியாத நிலையில், அவர் நம்முடன் தொடர்புகொண்டு, நமது தகவல்களைப் பெற வாய்ப்புள்ளது.

பெண்களால் ‘வட்ஸ்அப்’ குரூப்களில் நமது பெயர் இணைக்கப்படும்போது, அந்த குரூப்பில் ஏற்கெனவே உள்ள அனைவரிடமும் நமது தொலைபேசி எண் பகிரப்பட வாய்ப்புண்டு.

இது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, ‘வட்ஸ்அப்’ செட்டிங்கில் உள்ள, பிரைவஸி செட்டிங்கை மாற்றியமைக்க வேண்டும். அதாவது, பிரைவஸி செட்டிங் பகுதிக்குச் சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், ‘லாஸ்ட் ஸீன்’ ஆகியவற்றை, மைகான்டாக்ஸ் அல்லது ஒன்லி மீ ஒப்ஷன்களைப் பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளலாம்.

நாம் எங்கே இருக்கின்றோம் என்பதை அறிவுறுத்தும் ஸ்டேட்டஸ்களைப் பதிவு செய்வது கூடாது. குரூப்களில் இணைவதிலும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

‘ப்ளக்’ (Block) ஒப்ஷனை பயன்படுத்தி, நமக்கு தொல்லை தருபவரை நமது கணக்கைத் தொடராமல் தடுக்கும் வசதியும் இதில் உள்ளது.

ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது, அதிலிருந்து தப்பிப்பதற்கு உதவக்கூடிய ஆப்ஸ் ஒன்று, அன்ரொய்ட் போன்களில் பிரபலமடைந்துள்ளது.

இது இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவான ‘நாஸ்கொம்’ அமைப்பு நடத்திய, பெண்கள் பாதுகாப்புக்கான அப்ஸ் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் ஏதாவது பிரச்சினையில் மாட்டிக்கொண்டால், ஆபத்துதவியாக யார் இருப்பார்களோ அவருடைய செல்போன் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை இந்த அப்ஸில் பதிவு செய்ய வேண்டும்.

ஆபத்து நேரத்தில் செல்போன் திரையில் இருக்கும் இந்த அப்ஸை விரல் நுனியில் அழுத்தினாலே, வாய்ஸ் ரெக்கார்டர் வேலை செய்ய செய்ய ஆரம்பித்துவிடும். 45 விநாடிகள் பதிவானதும், நாம் இருக்கும் இடத்தினை விபரத்தோடு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் இரண்டும், அந்த ஆபத்துதவிக்கு போய் சேர்ந்துவிடும். இவ்வாறாக பெண்களை பாதுகாப்பாக இருப்பது நல்லது.

நாய்களுக்கு திருமணம் செய்துவைத்த வினோதம்!!

மதுரை மாவட்டத்தில் மழை வேண்டி இரண்டு நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மதுரை வாடிப்பட்டி தெத்தூர் பகுதி நாராயணபுரம் கிராமத்து மக்கள் ஆண் நாய் பெண் நாய்களை மணமக்களாக அலங்கரித்து தாலிகட்டி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த திருமணத்துக்கு பத்திரிகைகள் அடிக்கப்பட்டு உறவினர் மற்றும் பக்கத்து கிராமத்தினருக்கு கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு வந்தவர்கள் மொய்ப்பணம் செலுத்திவிட்டு விருந்து சாப்பிட்டு சென்றனர்.

அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் நல்ல மழை பொழிந்து வருவதால் வேண்டுதல் நிறைவேறியதாக அப்பகுதிப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

துண்டு துண்டாக வெட்டி வாய்க்காலில் வீசப்பட்ட ஆண்!!

தமிழகத்தில் துண்டு துண்டாக ஒருவரை வெட்டி கொலை செய்து விட்டு, அந்நபரை சாக்குப் பையில் வைத்து வாய்க்காலில் வீசியது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 1ம் திகதி கோவை புலியகுளம் – சவுரிப்பாளையம் சாலையில் உள்ள கல்வாயில், துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் சாக்குப் பையால் சுற்றப்பட்ட நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

அதன் பின் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட நபர் ஆவராம்பாளையத்தை சேர்ந்த நாகராஜ் என்பது தெரிய வந்தது.

இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, ஆவி வினோத் மற்றும் ஜோஸ்வா என்ற இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நாகராஜ், மீது பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டபோது நாகராஜ் படுகொலை செய்யப்பட்டதாக பொலிசார் கூறியுள்ளனர்.

முதல் குழந்தையை பெற்றெடுத்த ஆண்!!

 

அமெரிக்காவில் ஆண் ஒருவர் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Portlandல் வாழ்ந்து வரும் Trystan Reese என்ற திருநங்கையாக மாறியுள்ள ஆணே இவ்வாறு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு Leo Murray Chaplow என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் எப்போதாவது ஒரு ஆண் குழந்தை பெற்றெடுக்க முடியாது என கூறியிருந்தால், தற்போது திருநங்கை ஆணுக்கு ஒரு குழந்தை உள்ளது என கொண்டாடும் வகையில் குழந்தை புகைப்படத்துடன் Trystan Reese சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஓரினச் சேர்க்கையாளர்களான Reese, Biff Chaplow தம்பதி, ஏற்கனவே இரண்டு குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர்.

இந்நிலையில் தங்களது குடும்பத்தை விரிவாக்க நினைத்த Reese, Biff Chaplow தம்பதிகள், இணையத்தின் உதவியுடன் chronicling முறையில் ஒன்றாக தங்கள் முதல் உயிரியல் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.

ஓரினச் சேர்க்கையாளர்களான Reese, Biff Chaplow தம்பதி முதல் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்துள்ளது சர்வதேச அளவில் வைரலாகியுள்ளது.

வேலணை வடக்கு இலந்தவனபதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இசைபேழை வெளியீடு!

வேலணை வடக்கு  இலந்தவனப்பதி  ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மீது வேலணையூர் சாமி புத்தனின்  வரிகளில் இசைவாரிதி வர்ஷன் அவர்களின் இசையமைப்பில் தென்னிந்திய பாடகர்களான  டாக்டர்.நாராயணன் ,அனந்து,செந்தில்தாஸ்,முகேஷ்   வர்ஷன் மற்றும் நம்நாட்டு பாடகி  லம்பிகாத்வனி  ஆகியோரால் பாடப்பட்ட இலந்தைவனப் பாடல்கள் என்னும் இசைப்பேழை 05.08.2017 சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம்  11.00 வரை  வேலணை இலந்தைவனம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் அமரர்.கார்த்திகன் வேலாயுதனாதன் நினைவாக  வெளியிடப்பட உள்ளது.

மேற்படி நிகழ்வில்  உறவுகள் அனைவரையும் கலந்து கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள் ..

????
????
????
????
????

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இலங்கையில் விற்பனை செய்யப்படும் வாகனங்களின் விலை குறைக்கப்படலாம் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

முன்னைய காலக்கட்டத்தில் கொழும்பு துறைமுகத்திலேயே வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

ஆனால் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பல்கள் வருவது குறைவடைந்த காரணத்தினால் கொழும்பு துறைமுகத்தில் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டு கப்பல்கள் அம்பாந்தோட்டைக்கு அனுப்பப்பட்டது.

இதன் காரணமாகவே இலங்கையில் வாகனங்களில் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை செய்யப்படும்.

மேலும் கொழும்பு துறைமுகத்திலேயே வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும். அவ்வாறு கொழும்பில் இறக்குமதி செய்தால் வாகனங்களின் விலைகளில் குறைவு ஏற்படலாம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டில் உயிருக்கு போராடும் நபர்கள் : இலங்கைப் பெண்ணின் மகத்தான பணி!!

அபுதாபியில் பணியாற்றும் பெண்ணொருவர் செய்யும் மகத்தான சேவை தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

புற்றுநோய் நோயாளர்களுக்கு வழங்கப்படும் கீமோதெரபி சிகிச்சையினால் முடி உதிர ஆரம்பிக்கும் போது, அது அவர்களின் சுய மதிப்பில் தாழ்வு நிலையை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் அபுதாபியில் உள்ள இலங்கை மருதாணி கலைஞர், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் தலைகளில் அழகான மருதாணி கிரீடம் வரைந்து அவர்களின் நம்பிக்கையை வலுவடைய உதவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இந்த சேவையினை இலவசமாகவே மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாத்திமா ரபியா என்ற இலங்கை பெண் தனது பிறந்த நாளில் ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென எண்ணி இந்த நல்லெண்ண சேவையை ஆரம்பித்துள்ளார்.

பின்னர் அவர் தனது சேவையை வழங்க நோயாளர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை சந்தித்து இந்த சேவையை வழங்கி வருகிறார்.

முன்னாள் முதன்மை பாடசாலை ஆசிரியரான ரபியா பல ஆண்டுகளாக மருதாணி கலைஞராக செயற்பட்டு வருகின்றார்.

அவருடைய நிபுணத்துவத்தைப் பார்த்த, நண்பர் ஒருவர் தனது மாடலிங் திட்டத்தின் ஒரு பகுதியில் இணையுமாறு கோரியுள்ளார். இதன் போதே அவர் இந்த மருதாணி கிரீடத்தை பரிந்துரைத்துள்ளார்.

அதற்கமைய இந்த திட்டம் வெற்றியளித்துள்ளதாகவும், அவர் இதனை ஒரு சேவையாக செய்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மருதாணி கிரீடம் மக்களை அழகாக காட்டுவதனால், அவர் அதையே செய்து வருகிறார்.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த கிரீடம் மிகவும் பிரபலமாக உள்ளன. இதனை இலங்கையிலும் அணுகுவதற்கு ரபியா விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.