உலகின் மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்றான டுபாயில் உள்ள டோர்ச் டவரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துபாயின் மரினா பகுதியில் சுமார் 1,105 அடி உயரம் கொண்ட, உலகில் மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்றான Torch டவரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது உள்ளூர் நேரப்படி காலை 1 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.
கட்டிடத்தின் 9வது மாடியில் இருந்து தீப்பற்றி எரிந்து கொண்டு அப்படியே அடுத்தடுத்து பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென்று ஏற்பட்ட இந்த தீ விபத்தை அறிந்து, தீயணைப்பு படையினர் அங்கு விரைந்துள்ளதாகவும், கட்டிடத்தில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பது குறித்து எந்த ஒரு தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை என்றும் முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டோர்ச் டவர் உலகின் மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்று எனவும், 1,105 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடம் 2011 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது என்றும் பிப்ரவரி 2015 ஆம் ஒரு தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் யாருக்கும் எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நொச்சியாகம – போகஹவேவ பிரதேசத்தியை சேர்ந்த 3 வயதுடைய சிறுவன் ஒருவன் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளான்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், பேஷல இதுரங்க எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சுமார் 15 அடி ஆழமுடைய கிணறில் சிறுவன் மற்றும் அவனது தாய், வீட்டின் அருகாமையில் உள்ள மரம் ஒன்றின் கீழ் உறங்கஅத்துடன், தனது தம்பியை காணவில்லை என அறிந்து மூத்த மகனான அண்ணன், தம்பியை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளார்.
இதேவேளை, அயலவர்களின் உதவியுடன் சிறுவனை கிணற்றில் இருந்து மீட்டு நொச்சியாகமை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இருப்பினும், சிறுவன்,வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2100-ஆம் ஆண்டில் வெப்ப அலைகள் அதிகரித்து, தெற்காசியாவில் உயிர் வாழ முடியாத நிலை ஏற்படும் என Science Advances என்ற இதழில் வெளியான ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
வட இந்தியாவின் பெரும்பகுதி, தெற்கு பாகிஸ்தான், வங்கதேசத்தின் சில பகுதிகள் மேலும் உஷ்ணமடைய வாய்ப்புள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவின் கங்கைநதிப் படுகையில் அடர்த்தியான மக்கள் தொகை நிரம்பிய பகுதிகள் இதில் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்ப அளவு மற்றும் காற்றில் ஈரப்பதம் காரணமாக நோய்களும், அறிதல் திறன் குறைபாடுகளும் தோன்றும் என கூறப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் நல்ல காற்று, நிழல் வசதி இருந்தும், உடல்நிலையில் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட மரணமடையும் வாய்ப்புள்ளது.
கங்கைநதிக்கரை பகுதிகள், வடகிழக்கு இந்தியா, இந்தியாவின் கிழக்குக் கடற்கரை பகுதி, சோட்டா நாக்பூர் பீடபூமி, பாகிஸ்தானின் சிந்து சமவெளிப்பகுதி ஆகியவை வெப்ப நிலை அதிகரிப்பின் தாக்கங்கள் ஏற்பட்டு மனித உயிருக்கு அதி ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்கிறது இந்த ஆய்வு.
யெமன் நாட்டில் 2 இலட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக Save the Children அமைப்பு தெரிவித்துள்ளது.
அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அங்கு அரச கட்டுப்பாட்டில் சில பகுதிகளும், புரட்சிப்படையினர் கட்டுப்பாட்டில் சில பகுதிகளும் உள்ளன.
இரு தரப்பினரும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு போதிய உணவு மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை. எனவே, ஏராளமானோர் பட்டினியால் வாடுகின்றனர்.
சுகாதார சீர்கேட்டால் பரவிய கொலரா நோயால் ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்தும் கொலரா நோய் பரவி வருகிறது.
மக்கள் பட்டினியால் வாடுவதால், அவர்களிடம் போதிய நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. இதனால், குழந்தைகளின் நிலைமை மிக மோசமாகியுள்ளது.
அவர்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்பை சந்திக்க நேரிடும் என சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான Save the Children கூறி இருக்கிறது.
இவ்வாறு 2 இலட்சம் குழந்தைகள் வரை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, சர்வதேச சமுதாயம் ஏமன் நாட்டு குழந்தைகளைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் என அவ்வமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
புரோட்டா சூரியாக நடித்து கொமடி நடிகரானவர் சூரி. அதற்கு பின் புஷ்பா புருஷன் என்ற கரக்டரில் நடித்து சிரிக்க வைத்தார். இப்போது கதையின் நாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார்.
இவரை அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசீந்திரனே இவரை கதையின் நாயகனாகவும் அறிமுகப்படுத்துகிறார். இது குறித்த செய்தி இணையதளங்களில் வெளியானது. உடனே இதற்கு பதிலளித்திருக்கும் சுசீந்திரன்,‘ நான் தற்போது அறம் செய்து பழகு என்ற படத்தின் வெளியிட்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.
அத்துடன் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் படத்தையும் இயக்கி வருகிறேன். ஆனால் இணையத்தில் வெளியானது போல் அப்படத்தின் பெயர் இளமை ஊஞ்சலாடுகிறது அல்ல. அப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறேன். அதுவரை காத்திருக்கவும்’ என்று பதிலளித்திருக்கிறார்.
வைகைப்புயல் வடிவேலு, சின்ன கலைவாணர் விவேக், சந்தானம் ஆகியோர் கொமடியிலிருந்து கதையின் நாயகனாக நடிக்க தொடங்கிய பிறகு அவர்களுக்கு ஏற்பட்ட முன்னேற்றம் சூரிக்கும் கிட்டும் என்று நம்புவோமாக.
இன்று அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிசென்ற தனியார் சொகுசு பேருந்து கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்திற்கு அருகில் மின்சார கம்பங்களையும் அருகில் இருந்த கடைத்தொகுதியையும் உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளானது.
சாரதி உட்ப்பட ஆறு பேர் காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளமையால் இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது என அத தெரண செய்தியாளர் தெரிவிக்கின்றார்
அத்துடன் இவ் விபத்து அதிவேகத்தினாலோ அல்லது சாரதி நித்திரை துங்கியதனாலோ இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கி
வவுனியா இராமனூர் புளியங்குளம் பகுதியில் இன்று காலை 8.45 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .
மேற்படி விபத்தானது வேகமாக வந்த டிப்பர் வாகனம் மரத்துடன் மோதியதில் ஏற்பட்டுள்ளது .
டிப்பர் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளார் . புளியங்குளம் போலீசார் விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .
நேற்று மாலை வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளான புளொட் , ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகளின் இரகசிய சந்திப்பொன்று வவுனியா இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
அண்மைக்காலமாக தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக செயற்பட்டுவரும் நிலையில் ஆயுதப் போராட்டத்தின் வழிவந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து பேசியுள்ளமை பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
குறித்த ஒன்றுகூடல் தொடர்பில் அதில் கலந்துகொண்ட பிரதிநிதி ஒருவரிடம் எமது ஊடகவியலாளர் வினவியபோது தாங்கள் ஒன்றுகூடி பேசியது உண்மை எனவும், அந்த ஒன்றுகூடலில் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததாகவும், மாவட்ட ரீதியில் மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முடிவெடுத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மாதாந்தம் இப்படியான ஒன்றுகூடல்கள் தொடருமெனவும் குறிப்பிட்டதுடன் கலந்து கொண்டவர்களின் பெயர்களை குறிப்பிட மறுத்துவிட்டார்.
மாற்றுத் தலைமை, கூட்டுத்தலைமை போன்ற கருத்தியல்கள் உருவாகியுள்ள நிலையிலும் பிளொட்டுக்கு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாண சபையின் சுழற்சிமுறை ஆசனம் தமிரசுக்கட்சியின் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதுடன் இந்த ஒன்றுகூடல் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டார் என குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.நிஷாந்த சில்வா சாட்சியமளித்துளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை நேற்று யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது புங்குடுதீவு மாணவி கொலைவழக்கின் பிரதான விசாரணை அதிகாரியான குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.நிஷாந்த சில்வா சாட்சியம் அளித்தார். அவரது சாட்சியத்தில்,
தொலைதொடர்பு கோபுரங்கள் ஊடாக கையடக்க தொலைபேசிகளுக்கு உள்வந்த அழைப்புக்கள் மற்றும் வெளி சென்ற அழைப்புக்கள் ஆராயப்பட்டன. குற்றசெயல் நடந்த நேரத்தில், அந்த சூழலில் இருந்தவர்கள் தொடர்பில் அறிந்து கொண்டேன் என அவர் சாட்சியமளித்துளார்.
குற்றச் செயல் நடந்த இடம் மக்கள் நடமாட்டம் இல்லாத இடமாக இருந்தாலும், எதேச்சையான மக்கள் நடமாட்டம் இருக்கும் என்பதனை எனது தனிப்பட்ட உளவாளிகள் மூலம் அறிந்து கொண்டேன். அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டேன்.
அத்துடன் குற்ற சம்பவம் நடைபெற்ற கால பகுதியான 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி காலை முதல் 14ஆம் திகதி மதியம் வரையிலான கால பகுதியில் குற்ற சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்கள் கூடாக கையடக்க தொலைபேசிகளுக்கு உள்வந்த அழைப்புக்கள் மற்றும் வெளிசென்ற அழைப்புக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டேன்.
அந்த பகுதியில் காணப்பட்ட நான்கு தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு சொந்தமான நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் தகவல்களை பெற்றுக்கொண்டேன். அதன் அடிப்படையில் 10 பேர் தொடர்பில் விசாரணை செய்ய தீர்மானித்தோம்.
அதன் பிரகாரம் அவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் விசாரணைக்கு வருமாறு அழைத்தோம்.
அதில் மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் என்பவர் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தோம். அதன் போது அவருக்கு இந்த வழக்கின் 5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திஹாசன் மற்றும் 6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்த் ஆகிய இருவரின் கையடக்க தொலைபேசியில் இருந்து மாப்பிள்ளை என்பவருக்கு குற்ற சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாளான 12ஆம் திகதி மற்றும் குற்ற சம்பவம் நடைபெற்ற தினமான 13ஆம் திகதி அழைப்புக்கள் சென்றுள்ளன.
அது தொடர்பில் மாப்பிள்ளையிடம் கேட்ட போது , தான் கள்ளு விற்பனை செய்வதனால் தன்னிடம், கள்ளு வேண்டும் என கோரி அவர்கள் அழைப்பு எடுத்து இருந்தனர் என கூறினார்.
குற்ற சம்பவம் நடைபெறுவதற்கு முதல்நாள் 12ஆம் திகதி மதியம் 12.25 மணிக்கும் இரவு 21.56 மணிக்கும் இடையில் சந்திரஹாசன் மற்றும் துஷாந்த் ஆகிய இருவரது தொலைபேசியில் இருந்து அழைப்புக்கள் சென்றுள்ளன.
குற்ற சம்பவம் நடைபெற்ற 13ஆம் திகதி மாலை 15.50 மணிக்கு பிறகு மாப்பிள்ளையின் தொலைபேசிக்கு எந்த அழைப்புக்களும் வரவில்லை. இது தொடர்பில் அவரிடம் விசாரணை செய்த போது , அன்றைய தினம் (13ஆம் திகதி) தனது தொலைபேசியை நிறுத்த சொல்லி சந்திரஹாசன் கூறியதனால் தான் அதனை நிறுத்தி வைத்ததாக கூறினார்.
அதில் இருந்து இந்த குற்ற சம்பவத்திற்கும் மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரனுக்கும் தொடர்பு இருக்கின்றது என்பதனை அறிந்து கொண்டோம்.
அதன் பின்னர் தான் நீதவான் முன்னிலையில் வாக்கு மூலம் அளிக்க விரும்புவதாக நடராஜா புவனேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் இந்த வழக்கின் இரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார், மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் ஐந்தாம் எதிரியான தில்லைநாதன் சந்திரஹாசன் ஆறாம் எதிரியான சிவதேவன் துஷாந்த் மற்றும் உதயசூரியன் சுரேஷ்கரன் ஆகியோர் குற்றசம்பவ்வம் இடம்பெற்ற தினத்தன்று மாணவி பாடசாலை செல்லும் பாதையில் காலை 7 மணியளவில் சின்ன ஆலடி எனும் இடத்தில் நின்று இருந்தார்கள் அவர்கள் எதோ காதல் விடயம் பேச போவதாகவே நான் எண்ணி இருந்தேன். ஆனால் திடீரென அவ்வாறு செயற்ப்பட்டார்கள் என என்னிடம் விசாரணையின் போது மாப்பிள்ளை கூறினார்.
அதனால் அவர் அந்த இடத்திற்கு எதிர்பாராத விதமாக சென்று இருந்தார் என்பதனை அறிந்து கொண்டேன். அதனால் அவரை கைது செய்யவில்லை. அவர் கேட்டதற்கு இணங்க ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் அவர் வாக்கு மூலம் அளிக்க நீதவானிடம் அனுமதி பெற்று ஏற்பாடு செய்தேன்.
அதேவேளை மாப்பிள்ளையிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபராக உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவர் உள்ளார் எனும் தகவலை அறிந்தேன். அதன் பிரகாரம் சுரேஷ்கரனை அரியாலையில் வைத்து கைது செய்தேன்.
கைது செய்யப்பட்ட சுரேஷ்கரனிடம் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரமே மாணவியின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும், சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றினுள் வைத்தே மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார் என அறிந்து கொண்டோம். அதன் பிரகாரம் மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக சுரேஷ்கரன் கூறிய இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டோம். அதன் போது எம்மால் மேலதிக தடய பொருட்கள் சான்றுகளை பெற முடியவில்லை.
அதேவேளை எமது விசாரணைகளின் போது குற்ற சம்பவம் இடம்பெற்ற கால பகுதியில் குற்ற சம்பவம் இடம்பெற்ற இடத்தில் 4ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன், 7ஆம் எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதன், 8ஆம் எதிரியான ஜெயதரன் கோகிலன் மற்றும் 9ஆம் எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள தனியார் தங்குமிடத்தில் தங்கி இருந்தார்கள் என அறிந்து கொண்டேன். அது தொடர்பில் அவர்கள் தங்கி இருந்த தங்குமிட உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டேன்.
இந்த வழக்கு தொடர்பில் குற்றபுலனாய்வு திணைக்களம் ஒன்றரை வருடங்கள் விசாரணைகளை முன்னெடுத்து இருந்தது. விசாரணைகள் முடிவடைந்ததும் விசாரணை கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.
அதன் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தால் இந்த வழக்கின் 10ஆவது சந்தேக நபரான ஜெயவர்த்தன ராஜ்குமார் மற்றும் 12ஆம் எதிரியான தர்மலிங்கம் ரவீந்திரன் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதேவேளை 11ஆவது சந்தேக நபரான உதயசூரியன் சுரேஷ்கரன் அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்டார் என பிரதான விசாரணையின் போது 35ஆவது சாட்சியமான குற்றப்புலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.நிஷாந்த சில்வா சாட்சியமளித்தார்.
மின்சாரத்தினை பிரதானமாகக் கொண்டு புதிய உணவினை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
Lappeenranta University of Technology (LUT) மற்றும் VTT Technical Research Centre of Finland ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்தே இப் புதிய கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த உணவானது இரவு உணவினை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச் செயன்முறைக்கு மின்சாரம், நீர், காபனீரொட்சைட்டு மற்றும் சில நுண்ணுயிர்கள் பயன்படுத்தப்படுகின்றது.
மேற்கண்ட மூலப் பொருட்களை சேர்த்து மின்சாரத்தினை பாய்ச்சும்போது 50 சதவீதம் புரதமும், 25 சதவீதம் கார்போஹைட்ரேட்டும் காணப்படக்கூடிய உணவு உற்பத்தியாகின்றது.
மிகவும் குறைந்த சக்தியைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இவ் உணவானது ஏற்கணவே பரிசோதனை முயற்சியில் இருக்கக்கூடிய ஆய்வுகூட இறைச்சி உற்பத்தி மற்றும் உணவுக்கான பூச்சி பண்ணை உருவாக்கம் என்பவற்றிற்கு சிறந்த மாற்றீடாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லொறியுடன் பயங்கரமாக மோதி கார் விபத்துக்குள்ளானதில் தாய் மற்றும் அவரின் இரண்டு மகன்கள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Milton Keynes நகரை சேர்ந்தவர் Paul . இவர் மனைவி Jane Baker-Lockett (43) இவர்களுக்கு James (12) Amy Gaskin (12) மற்றும் 14 வயதில் இன்னொரு மகனும் உள்ளனர். இதில் James மற்றும் Amy ஆகியோர் இரட்டையர்கள் ஆவார்கள்.
சம்பவத்தன்று Jane தனது காரில் James மற்றும் Amy-ஐ அழைத்து கொண்டு சென்று கொண்டிருந்தார். அவர் கார் பின்னால் வேறு ஒரு காரில் Paul தனது 14 வயது மகனை அழைத்து கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
Jane கார் வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் எதிரில் திடீரென வந்த ஒரு லொறி மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தை பின்னால் காரில் வந்து கொண்டிருந்த Paul பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு பொலிசாரும், மீட்பு குழுவினரும் விரைந்தார்கள். ஆனால் விபத்து நடந்த இடத்திலேயே Jane பரிதாபமாக உயிரிழந்தார்.
அம்புலன்ஸில் அழைத்து செல்லும் வழியில் Amy-ன் உயிர் பிரிந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட James அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த சாலை தற்காலிகரமாக மூடப்பட்டது. சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இளைஞர் ஒருவரின் குடியிருப்பில் பயன்படுத்தப்பட்ட ஃப்ரீஸரில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த Arturo Novoa என்பவர் யங்ஸ்டவுன் பகுதியில் தமது காதலி ஷனான் கிரேவ்ஸ் என்பவருடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த யூன் 22 ஆம் திகதி ஷனான் கிரேவ்ஸ் மாயமானதாக கூறப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் மாயமான காதலி குறித்து எவ்வித வருத்தமும் இன்றி Arturo Novoa தமது புதிய காதலியுடன் அதே குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
இதனிடையே தமது ஃப்ரீஸர் அடிக்கடி பழுதடைவதால், அதை அந்த குடியிருப்பு உரிமையாளரின் பேஸ்மெண்ட் அறைக்கு மாற்றக் கொள்ள அனுமதி கேட்டுள்ளார்.
இதுபோன்ற விண்ணப்பங்கள் சகஜம் என்பதால் குடியிருப்பு உரிமையாளருக்கு முதலில் சந்தேகம் எதுவும் எழவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆனால் பேஸ்மெண்ட் அறைக்கு மாற்றப்படவிருந்த ஃப்ரீஸர் திறக்கமுடியாத அளவுக்கு பேட்லாக்கால் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டதும் சந்தேகம் வலுத்துள்ளது.
இதையடுத்து பொலிசாருக்கு தகவல் அளிக்கவும் சந்தேகத்திற்கிடமான குறித்த ஃப்ரீஸரை திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஃப்ரீஸரின் உள்ளே பல்வேறு பைகளில் மனித சடலத்தின் மிச்சங்கள் துண்டு துண்டாக பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் அந்த சடலம் யாருடையது என்று இன்னும் ஆதாரத்துடன் நிரூபணமாகவில்லை. இருப்பினும் அது நோவாவின் முன்னாள் காதலியின் உடல் பாகங்களாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் நோவா மற்றும் அவரது தற்போதைய காதலி Katrina Layton இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
இதனிடையே, சந்தேகத்துக்கிடமான அந்த ஃப்ரீஸரை வாங்கியது நோவாவின் தற்போதைய காதலியான Katrina Layton தான் என அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
மட்டுமின்றி மாயமான ஷனான் கிரேவ்ஸ் பயன்படுத்திய கார் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் உடனடியாக இவர் தன்னுடையது போன்று பயன்படுத்தவும் தொடங்கியுள்ளார். இதுவே அவரை இந்த வழக்கில் மிக விரைவில் சிக்க வைத்துள்ளது என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
போர்த்துக்கல் கடற்கரையில் மக்கள் கூட்டத்திற்குள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 8 வயது குழந்தை மற்றும் 50 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தலைநகர் லிஸ்பன், Caparica பகுதியில் உள்ள கடற்கரையிலே இச்சம்பவம் நடந்துள்ளது. கடற்கரையில் நூற்றுக்கணக்கான மக்கள் இருந்த போது திடீரென சிறிய ராக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தை கண்ட மக்கள் கடலில் ஓடி உயிர் தப்பித்துள்ளனர். எனினும், இந்த விபத்தில் பெற்றோர்களுடன் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமி மற்றும் 50 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இதில், சிறுமியின் பெற்றோர் எந்த காயமும் ஏற்படாமல் தப்பித்துள்ளனர். மேலும், விமானத்திலிருந்த இருவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என சம்பவயிடத்திலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் விமானத்தில் இருந்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக கடற்கரையில் தரையிறக்க நேரிட்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் நண்பனின் பிறந்தநாள் விழாவின் போது, நீரில் மூழ்கிய 8 பேரின் உயிரை காப்பாற்றிவிட்டு தன் உயிரை விட்ட இளைஞனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
சேலம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசு(19). இவர் தனது பிறந்த நாளின் காரணமாக உறவினரான மதன் என்பவரை அழைத்துள்ளார். இவர் திருச்சங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இருவரும் பிறந்த நாளை கொண்டாட மேட்டூரில் உள்ள காவிரி ஆற்றுப் பகுதிக்கு சென்றுள்ளனர். பிறந்தநாளை கொண்டாடிய அவர்கள், அதன் பின் அங்கிருக்கும் பரிசிலில் செல்லலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
அப்போது பரிசல் ஓட்டுனர், பரிசலில் 9 பேரை ஏற்றிச் செல்ல முடியாது என்று கூறியுள்ளார். இருந்தபோதும் அனைவரும் ஒரே பரிசலில் தான் செல்ல வேண்டும் என அவர்கள் கூறியதால் ஓட்டுனரும் சம்மதித்துள்ளார்.
ஆற்றில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பரிசல் கவிழ்ந்துள்ளது. பரிசல் கவிழ்ந்த வேகத்தில், ஓட்டுனர் கரைக்கு சென்றுள்ளார்.
ஆனால் படகில் சவாரி செய்த தமிழரசன் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 9 பேர் நீரில் தத்தளித்துள்ளனர். அப்போது நன்கு நீச்சல் தெரிந்த மதன் என்ற இளைஞர், அனைவரையும் காப்பாற்றியுள்ளார்.
இறுதியாக அவர் வர முயன்ற போது ஆற்றில் இருந்த களிமண்ணில், சிக்கியுள்ளார். அதில் இருந்து மீள முயன்றும், அவர் மீள முடியாததால், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.