இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாவே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது.
இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கெதிராக முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ள இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதியும் 2 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 2 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, அணியின் உதவித் தலைவராக கடமையாற்றி வந்த டினேஸ் சந்திமல் நீக்கப்பட்டு உதவித்தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார். திஸர பெரோர அணியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் அண்மைக்காலமாக சிக்கல்களில் சிக்கிவரும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் இன்று அறிவிக்கப்பட்ட இலங்கை குழாம் பின்வருமாறு,
அஞ்சலோ மெத்தியூஸ் (அணித் தலைவர்), உபுல் தரங்க (உதவி அணித் தலைவர் ), நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, வனிது ஹசரங்க, சந்தகன், அகில தனஞ்சய, நுவான் பிரதீப் பொர்னாண்டோ, லசித் மலிங்க, துஷ்மந்த சாமிர, லகிரு மதுஷங்க ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
விருந்துக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியிலிருந்து கீழே விழுந்தவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று தாக்கி கொலை செய்து நீரோடைப் பகுதியில் எரிந்தார்கள் என சந்தேகிக்கப்படும் தாய் மற்றும் மகனை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (27) ஆஜர்படுத்துவதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்
கடந்த 15 ம் திகதி மாலை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரயனகம வக்கம பிரதேச நீரோடையில் சடலமொன்றை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மீட்டனர். 56 வயதுடைய எய்ச்.டி .சுனில்சாந்த என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்
சடலத்தை மீட்ட நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மரணம் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்த நிலையிலே நேற்று (26) மாலை தாய் மற்றும் மகனையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் சடலமாக மீட்க்கப்பட்ட நபரும் 14 ம் திகதி இரவு மதுபான விருந்தொன்றுக்கு சென்று மீண்டும் முச்சக்கரவண்டியில் தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அந்த வேளையில் மதுபோதையில் இருந்த குறித்த நபர் முச்சக்கரவண்டியிலிரூந்து வெளியில் வீழ்ந்தார்.
காயமுற்ற குறித்த நபரை மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மகனும் தாயும் தாக்கி கொலை செய்து வைக்கம பிரதேசத்திலுள்ள நீரோடைப்பகுதியில் வீசியதாக தெரியவருகின்றது
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ைவக்கம பிரதேசத்தை சேர்ந்த தாய் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதியான மகனையும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் இன்று (27) ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .
முகநூலின் ஊடாக அறிமுகமாகும் நபர்களிடம் பலவாறாக ஏமாற்றி வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு நிதி வைப்பிடச்செய்யும் மோசடிகள் தொடர்பாக 15 க்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இது தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வருபவர்கள் மற்றும் கல்விக்காக வருபவர்கள் முகநூல் உள்ளிட்ட சமூக வளைத்தளங்கள் ஊடாக உள்நாட்டவர்களை நட்பு பாராட்டி இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
பலவிதமான முகநூல் முகவரிகளில் இருந்து விடுக்கப்படும் நட்பு அழைப்புகளில் இருந்து பரிசுத்தொகைகள் கிடைக்கப்பெறும் என குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக குற்றவிசாரணை திணைக்களத்தின் ஆரம்ப விசாரணகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Zee தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்’ நிகழ்ச்சியில் ரன்னராக வந்தவர் டிசாதனா.
ஆறாம் வகுப்பு படிக்கும் அவருக்கு, குழந்தையிலிருந்தே இசையின் மீதான ஆர்வம் ஊற்றெடுத்துள்ளது. தானும் குடும்பத்தாரும் இலங்கையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், சந்திக்கும் வலிகளைப் பகிர்ந்துகொண்டார்கள் டிசாதனாவும் அவரது தாயாரும்.
டிசாதனாவின் அம்மா கமலேஷ்வரி, ”நாங்கள் இலங்கையில் பட்ட வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. அப்போது எனக்கு வயசு 11. ஆறாம் வகுப்பு படிச்சுட்டிருந்தேன். ஆர்மி கேம்ப்க்கு பக்கத்துலதான் எங்க ஸ்கூல். அங்கேதான் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்குமிடையே சண்டை நடந்துச்சு.
முழுக்க முழுக்க அடக்குமுறை இருந்ததால், பள்ளிக்கூடம் போகமுடியாது. எனக்கோ பள்ளிக்கூடம் போக அவ்ளோ பிடிக்கும். ஆனால், படிப்பைவிடவும் உயிர் முக்கியமில்லியா? அதனால், ஒவ்வொரு நாளும் ஜனங்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிய வீதிகளை ஜன்னல் வழியாகக் கண்ணீர் வழிய ஏக்கத்தோடு பார்த்துட்டே இருப்பேன். இப்படி வீட்டுக்குள்ளே எத்தனை நாள்கள்தான் இருக்க முடியும்? நம்ம பிள்ளைகள் வாழணும்னு அப்பாவும் அம்மாவும் ஆசைப்பட்டாங்க.
இருக்கிற நகைகளை வித்து சாப்பிட்டுட்டு இருந்தோம். ஒரு கட்டத்துக்கு மேல சாப்பாட்டுக்கே கஷ்டம். பனை ஓலை மரத்தை வெட்டி, அதுல இருக்கிற குருத்தைச் சாப்பிட்டோம். ‘இங்கே கஷ்டப்பட்டது போதும், வேற நாட்டுக்குப் போறதைத் தவிர வேற வழியில்லை’னு முடிவுப் பண்ணினாங்க.
அங்கிருந்து அவ்வப்போது போகும் பஸ்ஸில் ஏறினோம். நாமக்கல், பரமத்தி வேலூருக்கு வந்துசேர்ந்தோம். உறவுகளை எல்லாம் விட்டுவிட்டு தன்னந்தனியா இன்னொரு நாட்டுக்கு அகதிகளாகப் போகும் துயரத்தை வார்த்தைகளால் விளக்க முடியாதுங்க.
அது எச்சிலை விழுங்க முடியாமல் நெஞ்சை அடைச்சுக்கும் அவஸ்தை. நான் விளையாடின அந்தத் தெரு, நான் சுற்றித் திரிந்த ஊர் பாதைகள், வாழ்ந்த வீடு என எல்லாத்தையும் விட்டுவிட்டு வந்துட்டோம். பரமத்தில் வேலூருக்கு எங்களோடு சேர்த்து ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அகதியா வந்துச்சு. சொந்த பூமியை விட்டு வந்த துயரத்தில் பல நாள்கள் தூக்கமே இல்லை. கிடைச்ச வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சோம்.
பிறகு என் படிப்பைத் தொடர்ந்தேன். ஓரளவுக்கு பள்ளிப் படிப்பை முடிச்சேன். கல்யாணமும் ஆச்சு. ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தாங்க. எங்க வாழ்க்கையின் மிகப்பெரிய சந்தோஷம்னா இந்த இரண்டு பிள்ளைச் செல்வங்கள்தான்.
என் கணவர் விமலநாதன் கட்டடவேலை பார்த்துட்டிருந்தார். டிசாதனாவுக்கு குழந்தையிலிருந்தே இசை ஆர்வம் அதிகம். தலையாட்டி, கையசைத்து இசையை ரசிப்பதைப் பார்த்தோம். கொஞ்சம் வளர்ந்ததும் பாட்டு வகுப்புக்கு அனுப்பினோம். கோவையில் ஜி தமிழ் நடத்திய ஆடிசனுக்குத் தயக்கத்தோடுதான் அழைச்சுட்டுப் போனோம்.
‘இலங்கை அகதியான எங்களுக்கு வாய்ப்புக் கொடுப்பீங்களா?’னு கேட்டோம். ‘திறமை எங்கே இருந்தாலும் வாய்ப்பு உண்டு’னு உற்சாகத்தோடு அனுமதிச்சாங்க. ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றிபெற்று நிகழ்ச்சியில் பாட ஆரம்பிச்சா என் பொண்ணு. டிசாதனா ஒவ்வொரு நாள் ஷூட்டிங் போகும்போதும், நானே சாதிச்சுட்ட திருப்தி இருக்கும். வெற்றி தோல்வி சகஜம் என்பதை ஆரம்பத்திலிருந்தே அவளுக்குச் சொல்லிக்கொடுத்தோம். தமிழ்நாட்டுக்கு நாங்க வந்து 26 வருஷம் ஆகிடுச்சு. ஜி தமிழ் ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்’ நிகழ்ச்சியில், ‘விடைக்கொடு எங்கள் நாடே’ பாட்டைப் பாடும்போதுதான், நாங்க பட்ட கஷ்டங்கள் பற்றி டிசாதனாகிட்டே முதல்முறையா சொன்னோம்” என்று கலங்கும் கண்களைத் துடைத்துக்கொண்டே மகளைப் பார்த்து புன்னகைக்கிறார்.
”அம்மா எத்தனையோ முறை ‘இலங்கைக்குப் போயிடலாம்டா. நம்ம சொந்த ஊர் மாதிரி சொர்க்கம் எதுவும் இல்லைடா’னு சொல்லுவாங்க. நிலைமை சரியாகிட்டா அங்கே போய் இருக்கலாம் என்கிற ஆசை மனசுக்குள் இருக்கு. எங்க சொந்தக்காரங்க அங்கே இருக்காங்க. ஏதாவது பிரச்னைனாலோ, நல்லது நடந்தாலோ போனில் சொல்வாங்க.
அதைக் கேட்கும்போது, அங்கே தவிச்சுட்டு இருக்கவங்களுக்கு எப்போ விடிவு காலம் வரும்னு நினைப்பேன். என் அம்மாவின் அப்பா, அம்மா மீன்பிடித் தொழிலில் இருந்தவங்க. அம்மா இலங்கையில் இருந்தப்போ, இந்த மாதிரி பெரிய அளவில் பிரச்னைகள் இல்லை. மீனவர்களைச் சுட்டுக் கொன்றதில்லை. ஆனால், இப்போ நிலைமையே வேதனையா இருக்கு” என அனுபவம் மிகுந்த வார்த்தையால் பேசுகிறார் டிசாதனா.
அவரைத் தொடர்ந்து பேசிய கமலேஷ்வரி, ”இலங்கையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைத்தான் அடிக்கடி சொல்லிட்டே இருக்காங்க. எங்களுக்கு அந்த நாட்டின் குடியுரிமையும் இல்லை, இந்திய நாட்டின் குடியுரிமையும் இல்லை. இரண்டுப் பக்கமும் எந்த உரிமையில் இல்லாமல் ஊசலாடறோம்.
ஏதாவது ஒரு நாட்டின் குடியுரிமை கிடைச்சால் போதும். தங்குவதிலிருந்து அத்தனை அடைக்கலத்தையும் தமிழ்நாடு கொடுக்குது. ஆனால், எங்க நாட்டைப் பிரிஞ்சு இருக்கோமேனு நினைக்கும்போது கண்ணீரை அடக்க முடியலை.
எங்க தலைமுறை என்னவாகும்னு நினைக்க நினைக்க நெஞ்சே அடைக்குது. டிசாதனாவுக்கு இப்போ நிறைய வாய்ப்புகள் வருது. ஜி தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் மிகப்பெரிய நன்றிகள். அவள் பெறும் வெற்றிகளை எங்க தாய்நாட்டு மக்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்” என்கிறார் கண்ணீருடன்.
வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் முதலாவது மகோற்சவ பெருவிழா கடந்த 25.06.2017 ஞாயிற்று கிழமை மதியம் 12.00 மணியளவில் மகோற்சவ குரு சிவஸ்ரீ .முத்து ஜெயந்தி நாத குருக்கள் தலைமையில் இடம்பெற்றது ..
மேற்படி ஆலயத்தின் முதலாவது வரலாற்று சிறப்பு மிக்க மகோற்சவத்தில் எதிர்வரும்
வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலய பாடசாலை மாணவர் பாராளுமன்ற விளையாட்டுத்துறை அமைச்சினால் வவுனியா வடக்கு வலய பாடசாலைகளுக்கிடையிலான அணிக்கு ஏழு பேர் ஆறு பந்து (14-20 வயது) பரிமாற்றங்களை கொண்டக கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி எதிர்வரும் 01-07-2017 சனிக்கிழமை அன்று பாடசாலை மைதானத்தில் நடைபெற உள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் ஏற்கனவே அனைத்து பாடசாலைகளுக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையால் அனைத்து பாடசாலை அணிகளும் கலந்து சிறப்பிகுமாறு பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலை மாணவர் பாராளுமன்றம் கேட்டுக்கொள்கின்றது.
தம்புள்ளை மருத்துவமனையில் நபரொருவரின் வயிற்றில் இருந்து 10 கிலோ எடையுடைய கட்டியொன்று சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
மெல்சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த எம்.பி.சேனாநாயக்க (62 வயது) என்ற நபரின் வயிற்றில் இருந்தே இந்த கட்டி அகற்றப்பட்டுள்ளது.
குறித்த நபர் வயிற்று வலி காரணமாக கடந்த தினத்தில் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் குறித்த நபருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், இடது சிறுநீரகத்திற்கு அருகில் வயிற்றில் பாரிய கட்டியொன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த நபருக்கு தம்புள்ளை மருத்துவனையின் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் குழுவினரால் இன்றைய தினம் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், சுமார் பத்து கிலோ எடையுடைய குறித்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
குறித்த நபர் நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கட்டியை ஆய்வகத்திற்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் அமெரிக்காவில் 90 வயது முதியவர் ஒருவரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் அமெரிக்கா – அலபாமாவில் உள்ள மொபைல் பிராந்தியத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யலோலா சுரங்கனி மெக்கன்ட் என்ற பெண், அமெரிக்காவில் இயங்கும் ‘அவர்ரைம்’ சமுக வலைதளத்தின் ஊடாக, முதியவருடன் அறிமுகமாகி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து 310, 000 டொலர்களை களவாடியதாக இலங்கை பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க முதியவரின் கணக்கில் இருந்து 310, 000 டொலர்கள் பணம், யலோலா சுரங்கனி மெக்கன்டின் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகவும், அதை அறிந்த புலனாய்வாளர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பெண் அடுத்த மாதம் தமது குடும்பத்துடன் இலங்கை திரும்ப திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை பெண் கடந்த 2016 ஆம் ஆண்டு இவ்வாறு முதியவர் ஒருவரை ஏமாற்றி இருப்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கினை நாளைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும், அது தொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 186 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி செல்வவிநாயகம் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
செல்வவிநாயகம் தன்னுடைய மனுவில், ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்திற்கு விடைகாணும் வகையில் விரிவான விசாரணை நடத்தக் கோரி, தான் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் ஆனால் அதன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
எனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 186 பேரிடம் விரிவான விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தன்னுடைய மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது நாளைக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
பிரபல தேடல் பொறியான கூகிள் நிறுவனத்திற்கு 645 ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இணைய விற்பனை துறையில் முறையற்ற வகையில் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தினால் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.
இணைய பயனாளர்கள் என்ன விதமான தேடல்களை மேற்கொள்கின்றார்கள் என்பதை கட்டுப்படுத்தும் அதிகாரம் மறைமுகமாக கூகுள் நிறுவனத்திடம் உள்ளது.
இந்நிலையில் இணைய விற்பனைத் துறையிலும் கூகிள் நிறுவனம் கால் பதித்துள்ளது. இதனை கருத்திற் கொண்டு பிற இணைய விற்பனை நிறுவனங்கள் தொடர்பான தேடல்களை கூகிள் நிறுவனம் தடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 90 சதவீதமான இணைய தேடுதல்கள் கூகிள் வழியாகத்தான் நடைபெறுகின்றன. இதன் காரணமாக கூகிள் நிறுவனத்தின் செயற்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வியாபார போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இணைய விற்பனை துறையில் தாங்கள் கால் பதிப்பது சில்லறை விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நல்லது என கூகிள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து வந்த கூகிள் நிறுவனத்தின் மீதான வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி இணைய விற்பனை துறையில் ஏகபோக அதிகாரத்தை செலுத்த முனைந்த குற்றத்திற்காக 645 கோடி ரூபாய் வரையில் அபராதம் விதிக்கபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் தனது சேவையை பிரதானப்படுத்தும் நோக்கத்துடன், இதர சேவை நிறுவனங்கள் பற்றிய தகவல்களை தேடுதலில் காட்டாமல் தடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படும் என்று தெரிகிறது.
கனடாவில் தமிழ் பெண்ணொருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 45 வயதான இரு பிள்ளைகளின் தாயான கலைச்செல்வி சாள்ஸ் ஜெயந்தன் என்பவரே உயிரிழந்தள்ளார்.
ஸ்காபிரோவில் அமைந்துள்ள Canbe உணவகத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. Canbe உணவகம் தமிழர் ஒருவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் அதிகாலை 1:13 மணியளவில் எரிகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டதாக அவசர உதவிப் பிரிவு தெரிவித்துள்ளது.
Ellesmere வீதியில் அமைத்துள்ள Canbe உணவகத்திற்கு பின்புறம் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் கலைச்செல்வி கடுமையான தீக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக அவசர உதவிப் பிரிவினர் தெரிவித்தனர்.
உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பின் ரொரண்டோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் பாலமீன்மடு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து உயிரிழந்த நிலையில் சிறுவனொருவனின் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
பாலையா ஜெயகாந்தன் என்னும் 16 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவனின் சடலம் வீட்டின் அறையொன்றில் இருந்து, கழுத்தில் சேலை சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பிரிவு பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சடலம் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புலன்ஸ் வண்டி சாரதிகள் இன்று (27.06.2017) வவுனியாவில் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவரும் பணி பகிஸ்கரிப்பின் தொடர்ச்சியாக அகில இலங்கை மாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கத்தின் வவுனியா மாவட்டத்தின் தலைவர் டி.ஜி.சரத்குமாரசிறி தலைமையில் வவுனியாவில் பணிப் பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார திணைக்களக சாரதிகள் 11 பேருக்கு வேறு திணைக்களகங்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்யவேண்டும்.
சகல மாகாணங்களிலும் சுகாதார திணைக்களக சாரதிகள் அத் திணைக்களகங்களில் மாத்திரமே பணியாற்ற அனுமதிக்கப்படவேண்டும்.
சுகாதார மத்திய அமைச்சர் ராஜித சேனாரத்தினவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அமைவாக அமைச்சரின் உத்தரவை மாகாண சுகாதாரத் திணைக்களங்களில் நடைமுறைப்படுத்தக் கோரியும் நாடளாவிய ரீதியில் மாகாண சுகாதார திணைக்களக சாரதிகள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை வவுனியா மாவட்டம் 49, கிளிநொச்சி மாவட்டம் 32, யாழ்ப்பாண மாவட்டம் 63, முல்லைத்தீவு மாவட்டம் 39, மன்னார் மாவட்டம் 39 ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த 222 சுகாதாரத் திணைக்களக சாரதிகள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பணிப் பகிஸ்கரிப்பு நாட்களில் அவசர சேவைகள் வழமைபோல் முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால்துறை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தால் வவுனியாவில் தபால்துறை முடங்கியுள்ளது.
நிர்வாக ரீதியாக தாம் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 24 மணிநேர பணி பகிஸ்கரிப்பாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று (27.06.2017) அதிகாலை 12 மணியில் இருந்து 24 மணிநேரம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடும் நிலையில் இதற்கான தீர்வு வழங்கப்படாத நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதியில் இருந்து தொடர் போராட்டமாக நடத்த தீர்மானித்துள்ளனர்.
இதன் காரணமாக வவுனியா பிரதான தபால் நிலையம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும் மூடப்பட்டு காணப்படுகின்றது.
ஊழியர்கள் பணியில் இன்மையால் பல்வேறு தேவைகளுக்காகவும் தபால் நிலையங்களுக்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காணக்கூடியதாக உள்ளது.
நயினையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்-25.06.2017 ஆயிரகணக்கான பக்தர்கள் சூழ கடந்த 25.06.2017 மதியம் 12.00 மணியளவில் ஆலய உற்சவகுரு சிவஸ்ரீ .முத்து குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. மேற்படி மகோற்சவத்தில்
எதிர்வரும்
04.07.2017 செவ்வாய்கிழமை மஞ்ச உற்சவமும்
05.07.2017 புதன்கிழமை விஷேட கருட சர்ப பூஜையும்
07.07.2017 வெள்ளிக்கிழமை சப்பற உற்சவமும்
08.07.2017 சனிக்கிழமை இரதோற்சவமும்
09.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்கமும்
10.07.2017 தெப்போற்சவம் (பூங்காவனம்)
என்பன நடைபெறும்.
ஈழவள நாட்டின் வடபால் வவுனியா நகரில் முத்தமிழ் விளங்கும் வேப்பங்குளம் பகுதியில் இந்து அன்பக பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ.சிவசுப்பிரமணிய சுவாமியின் தியானத்தினாலும் தேவியின் திருவருளினாலும் அமைக்கப்பட்ட இவ்வாலய வருடாந்த அலங்கார உற்சவம் நிகழும் மங்களகரமான ஏவிளம்பி வருடம் ஆனித்திங்கள் 11ம் நாள் (25.06.2017) ஞாயிற்றுக்கிழமை பிரதமைத் திதியும் புனர்பூச நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுப தினத்தில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது .
20ம் நாள் (04.07.2017) செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரமும் துவாதசி திதியும் கூடிய சுப தினத்தில் அம்பாளுக்கு நவோத்திர சகஸ்ர சங்காபிஷேகம் (1008) நடைபெற்று மறுநாள் (05.07.2017) புதன்கிழமை பூங்காவனத்திருவிழாவுடனும், 06.07.2017 வைரவர் சாந்தியுடனும் நிறைவு பெற திருவருள் கூடியுள்ளது.