தினமும் காலையில் 30 நிமிடம் நடைப்பயிற்சியை சரியாக பின்பற்றி வந்தால், நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து காண்போம்.
நடைப்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்?
தினசரி 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்து வருவதன் மூலம், ஒரு வருடத்தில் நம் உடலில் உள்ள மூன்றரை கிலோ கொழுப்பைக் கரைக்க முடியும்.
காலையில் தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதை பின்பற்றி வந்தால், இதயநோய்கள் ஏற்படுவதற்கான 50 சதவிகிதம் வாய்ப்புகளை குறைக்கலாம்.
நடைப்பயிற்சி செய்வதன் மூலம் நமது உடலில் ஏற்படும் ரத்த அழுத்தப் பிரச்சனையை தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, கெட்ட கொழுப்பை எளிதில் கரைக்கிறது.
மார்பக மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்டவர்கள், வாரத்திற்கு 3-5 மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் வரை தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தால், உயிர்வாழும் நாட்களை 50 சதவிகிதம் அதிகரிக்கலாம்.
மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் தொடர்ந்து காலையில் நடைப்பயிற்சி செய்து வந்தால், அது உடம்பில் உள்ள என்டோஃபின் சுரப்பைத் தூண்டி, மனதை அமைதிப்படுத்தி, மனப் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
உலகின் மிகவும் அவலட்சணமான நாய்களுக்கான போட்டி அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவின் பெட்டலுமாவில் கடந்த 29 ஆண்டுகளாக ரசிகர்களின் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் மார்த்தா எனும் நாய் 13 போட்டியாளர்களை தோற்கடித்து முதல் பரிசு பெற்றது. சிவப்பு கண்களுடன், தோல்கள் மிகுந்த மடிப்புகளுடன், கீழ் தாடையில் அதிக சதைக் கொண்ட மாஸ்டினோ இனத்தைச் சேர்ந்த இந்த நாய், பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது. 3 வயதாகும் மார்த்தாவிற்கு பரிசாக கோப்பையும், 1500 அமெரிக்க டாலர்களும் வழங்கப்பட்டது.
மார்த்தா பற்றி அதன் உரிமையாளர் ஜின்ட்லர் கூறுகையில், இது நாய்கள் பாதுகாப்பு மையத்தில் இருந்து மீட்டெடுக்கப்பட்டது என தெரிவித்தார்.
அப்போது மார்த்தா பார்வை திறனை இழந்து இருந்தது. பல அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு மார்த்தாவால் தற்போது பார்க்க முடிகிறது என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து நடுவர்கள் கூறுகையில், இந்த போட்டியானது நாய்களை தத்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக நடத்தப்படுகிறது. மார்த்தா அனைத்திலும் வித்தியாசமாக இருந்ததால் கிரீடத்தை வென்றுள்ளதாக நடுவர்கள் தெரிவித்தனர்.
சிறுநீரை பயன்படுத்தி சிறிய விளக்குகள் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கு சார்ஜ் செய்யும் முறையினை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
நுண்ணுயிர் எரிபொருள் செல்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை மின்சக்திக்கு மாற்றும் புதிய முறையை பிரிஸ்டல் ரோபோடிக்ஸ் உயிரி பொறியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். குறைவான அளவு சிறுநீரில் ஸ்மார்ட்போன்கள் ஆறு மணி நேரம் சார்ஜ் ஆகும்.
ஆனால் சிறுநீர் மூலமாக ஸ்மார்ட்போனுக்கு மூன்று மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரிஸ்டல் பயோ ஆற்றல் மையத்தின் இயக்குனர், பேராசிரியர் அயோனிஸ் இரோபுலஸ் கூறுகையில், “இந்த திட்டம் மூலம் கழிவுப்பொருள்களில் இருந்து அதிகபட்ச மின்சாரம் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்காக நுண்ணுயிர் எரிபொருள் செல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நாம் இயற்கையாக உற்பத்தி செய்யும் கழிவுகளை நுண்ணுயிரிகள் நேரடியாக மின்சாரமாக மாற்றுகிறது. அவை துணைப்பொருளாக எலக்ட்ரான்களை தயாரிக்கின்றன.
எலக்ட்ரான்கள் உற்பத்தி ஆவதன் மூலம் மின்சாரம் உருவாகிறது. இந்த நுண்ணுயிரிகள் 30 முதல் 40 மில்லிவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இது ஸ்மார்ட்ஃபோன், சிறிய விளக்குகளை சார்ஜ் செய்ய போதுமானதாகும் எனத் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய விடயங்களை பேசியதையடுத்து இலங்கை கிரிக்கெட் சபைக் குழு மலிங்கவிடம் இன்று விசாரணை நடத்தவுள்ளது.
இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ஜெயசேகர சில தினங்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் சரியான உடல் தகுதியுடன் இல்லை என விமர்சித்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இலங்கை வீரர் லசித் மலிங்க, விளையாட்டு துறை அமைச்சர் இலங்கை வீரர்கள் அதிக எடையுடன் இருப்பதாக கூறியதாக அறிந்தேன்.
நாங்கள் 5 முறை உலக கோப்பை இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளோம். மலிவான விளம்பரத்துக்காக எதாவது சொல்கிறார்கள்.
அவர்கள் விளையாட்டுக்காக என்ன செய்தார்கள் என தாம் கேட்க விரும்புவதாக மலிங்க கூறியிருந்தார்.
இதையடுத்து, அமைச்சரை விமர்சிக்கும் வகையில் பேசியதாக மலிங்கவிடம் இலங்கை கிரிக்கெட் சபைக் குழு இன்று ஒழுங்குமுறை விசாரணை நடத்தவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா தலைமையில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
புதுமண தம்பதிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில், கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஆதித்யகுமார் (31) இவர் சென்னையில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
அதே நிறுவனத்தில் பணிபுரியும் விஜயலட்சுமி (28) என்ற பெண்ணை காதலித்து வந்த ஆதித்யகுமார் இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த மே மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தன் அத்தை வீட்டுக்கு விருந்துக்காக ஆதித்யகுமார், மனைவி விஜயலட்சுமி மற்றும் நண்பர் ஷியாம்தேஜாவுடன் சென்றார்.
இந்நிலையில், கடந்த 17ஆம் திகதி பைக்கில் மனைவியுடன் ஆதித்யகுமார் ஹரித்துவாரில் இருந்து டெல்லிக்கு வந்தார். உடன் அவர் நண்பரும் இன்னொரு பைக்கில் சென்றார்.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே வந்த போது மர்ம நபர்கள் ஆதித்யகுமாரை துப்பாக்கியால் சுட்டனர்.
அப்போது துப்பாக்கி தோட்டா ஆதித்யகுமார் அணிந்து இருந்த ஹெல்மெட்டின் பக்கவாட்டை துளைத்து அவரது தாடையை கிழித்துக்கொண்டு வாய் வழியாக வெளியேறியது.
இதையடுத்து மனைவியுடன் பைக்கிலிருந்து ஆதித்யகுமார் கீழே விழுந்தார். விஜயலட்சுமிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷியாம்தேஜா, இருவரையும் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தார்.
பின்னர், அங்கு சிகிச்சை பலனின்றி ஆதித்யகுமார் உயிரிழந்தார். துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் யார் என இன்னும் தெரியாத நிலையில், இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரயில் பாதையில் நடப்போரை சுற்றி வளைக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 29ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை புகையிரத பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
தங்களதும் ஏனையவர்களினதும் உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் வகையில் ஆபத்தான முறையில் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தி இவ்வாறான நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர். இவ்வாறு ரயில் பாதையில் நடப்போருக்கு மூவாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளது.
26 பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கரையோரப் பாதுகாப்பினை இலக்கு வைத்து இந்த சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ள உள்ளனர்.
முதலில் கரையோரப் பகுதிகளில் இந்த சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஆபத்து மற்றும் இவ்வாறு ரயில் பாதையில் நடப்பதனால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பம்பலப்பிட்டி, வஜிர வீதியில் அதி நவீன மெர்சீடிஸ் பென்ஸ் கார் ஒன்றை செலுத்திய சிறுவன் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
15 வயதுடைய சிறுவன் சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனத்தை செலுத்தி சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
நேற்று பிற்பகல் நிகழ்ந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தும்புள்ள சந்தியில் இருந்து அதிக வேகத்தில் வந்த இந்த கார் வஜிர வீதியில் வைத்து வலதுபுறமாக திரும்பியுள்ளதுடன் வீதியில் இருந்த மின் விளக்கு கம்பம் ஒன்றையும் தேசப்படுத்தியுள்ளது.
பிரபல தனியார் வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் ஒரு உயர் அதிகாரியுடன் தொடர்புடைய இந்த சிறுவனே குறித்த புதிய காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை நிற பென்ஸ் கார் கடுமையான சேதமடைந்துள்ள நிலையில், காரை ஓட்டிச் சிறுவன் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுவன் மற்றும் வாகனத்தை விடுவிக்குமாறு கோரி சில உயர் அதிகாரிகளிடமிருந்து பல தொலைபேசி அழைப்புகளை பொலிஸாருக்கு வந்தள்ளது. எனினும் அவர்களின் கோரிக்கைக்கு இணங்கவில்லை என பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் விபத்து குறித்து சிறுவனின் பெற்றோரிடம் அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அரியவகை நாக பாம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. நல்லுார் வடக்கு வாலையம்மன் ஆலய மீள் நிர்மாணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது வெள்ளை நாகப் பாம்பு ஒன்று அங்கு நேற்று வருகை தந்துள்ளதாக தெரிய வருகிறது.
கீரியுடன் கடுமையாகப் போராடிய வெள்ளை நாகம் பாதுகாப்பு தேடி ஆலயத்திற்குள் நுழைந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் பிரித்தானிய கடலில் மூழ்கி உயிரிழந்த ஐந்து இலங்கையர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
இதன்போது பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி பலியான தமிழர்கள் நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் என தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் சகோதரர்கள் இருவர் உட்பட ஐவர் உள்ளடங்குகின்றனர்.
கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 24ஆம் திகதி லண்டன் பகுதியில் வசித்த குறித்த ஐவரும், பிரித்தானியாவின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் விளையாட சென்ற போது நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
22 வயதுடைய நிதர்ஷன் ரவி, 23 வயதுடைய இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராஜா, 22 வயதான கோபிநாதன், 19 வயதான கெனிகன் சத்தியநாதன், 27 வயதான குருசாந்த் சிறிதவராஜா ஆகியோரே உயிரிழந்தவர்களாகும். உயிரிழந்த ஐவர் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.
உயிரிழந்த கோபிநாதன் மற்றும் அவரது சகோதரர் கெனிகன் நன்கு நீச்சல் தெரிந்தவர்கள். எனினும் இரண்டு சகோதரர்களும் நீரில் மூழ்கியுள்ளதாக விசாரணையின் போது நோயியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மரணத்தின் ஊடாக பல பாடங்களை கற்றுக் கொண்டுள்ளதாகவும் இது போன்ற அனர்த்தத்தை வேறு யாரும் சந்திக்க கூடாதென உயிரிழந்தவர்களின் குடும்ப வழக்கறிஞர் Patrick Roche தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சகோதரர்கள் இருவரும் நன்கு நீச்சல் திறனை கொண்டவர்கள் எனவும், இலங்கையில் அவர்களது கிராமம் மூன்று மிக பெரிய ஆறுகளால் சூழப்பட்டதென உயிரிழந்த சகோதரர்களின் தந்தை ஆறுமுகம் சத்தியநாதன் குறிப்பிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு 10 முதல் 14 வயதில் பிரித்தானியாவுக்கு வருவதற்கு முன்னர் இலங்கையில் தனது பிள்ளைகள் இருவரும் கிரிக்கெட், கால்பந்து மற்றும் நீச்சல் விளையாட்டுகளில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஈடுபடுவார்கள் என அவர் கூறியுள்ளார்.
தாங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு கோடைகாலத்திலும் பிரித்தானியாவிலுள்ள கடற்கரைக்குச் செல்வோம் எனவும் சில சந்தர்ப்பங்களில் தாம் இல்லாமல் பிள்ளைகள் மாத்திரம் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Brighton பல்கலைக்கழகத்தில் கோபி வர்த்தக கற்கைகளை மேற்கொண்டார். அவர் கெம்பர் கடலை நேசித்தார். 2016ஆம் ஆண்டு உயிரிழப்பதற்கு முன்னர் 3 முறை அந்த கடலுக்கு அவர் சென்று வந்தார் என தந்தை கூறியுள்ளார்.
கெனிகன் என்பவர் உயர்தர மாணவராகும். அவர் மிகவும் ஆரோக்கியமானவராகும். அத்துடன் எந்தவொரு நோயினாலும் பாதிக்கப்படவில்லை எனவும் கோபிக்கும் பெரிய அளவிலான எந்த நோய் தன்மையும் காணப்படவில்லை என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஐவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை ஒசாமா பின்லேடன் இறந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு அவரது மகன் ஹம்ஜா பின்லேடன் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.
2001 ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜலாலாபாத் என்ற பகுதியில் அமைந்துள்ள மலைத்தொடரில் ஒரு தந்தை தன் மூன்று மகன்களுடன் அமர்ந்து பேசினார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு புராதன மணிமாலையைக் கொடுத்தார். அந்தத் தந்தை ஒசாமா பின்லேடன். அந்த மகன்களில் ஒருவர்தான் ஹம்ஜா பின்லேடன்.
ஹம்ஜாவை அல் கொய்தாவின் தலைவராக்கும் எண்ணம் ஒசாமாவுக்கு இருந்ததாக இப்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.
2001 செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்தது.
இதைத் தொடர்ந்து பின்லேடனின் பல குடும்ப உறுப்பினர்களும் அல் கொய்தா உயர்மட்டத் தலைவர்களும் ஈரானுக்கு சென்றனர். ஈரானுக்குள் அமெரிக்க இராணுவம் நுழையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானிய அதிகாரிகள் சில முக்கியமானவர்களை தங்கள் வசம் வைத்திருந்தனர். வருங்காலத்தில் தாங்கள் விரும்பியதை சாதிக்க அவர்களைப் பணயக் கைதிகளாக பயன்படுத்தலாம் என்ற எண்ணம்.
அவர்களில் முக்கியமானவர்கள் ஹம்ஜா மற்றும் அவரது தாயாரான காய்ரியா. ஈரானின் பாதுகாப்பில் இருந்து கொண்டே ஹம்ஜா திருமணம் செய்து கொண்டு சில குழந்தைகளுக்குத் தந்தை ஆனார்.
அதற்குப் பிறகு தன் தந்தையை ஹம்ஜா பார்க்கவில்லை. என்றாலும் ஒசாமா பின்லேடனைப் போலவே அவர் உருவாகிக் கொண்டிருந்தார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
2014ல் அல் கொய்தாவும், ஐ.எஸ். அமைப்பும் அதிகாரபூர்வமாகப் பிரிந்தன. அல் கொய்தா தனது ‘மிக உலகின் பயங்கரமான பயங்கரவாத அமைப்பு’ என்ற விம்பத்தைப் பறிகொடுத்தது.
ஐ.எஸ்.அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி புதிய ஒசாமா பின்லேடனாகக் கருதப்பட்டார்.
இன்று ஈராக் இராணுவம், குர்துகள், அமெரிக்க இராணுவம் போன்ற பலவற்றால் ஐ.எஸ்.அமைப்பு எதிர்க்கப்பட்டு வரும் நிலையில், அல் கொய்தா மீண்டும் தலையெடுத்துள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவை ‘ஒரு கிரிமினல் கூட்டத்தின் கறுப்பர் இனத்தலைவர்’ என்று விமர்சித்தார் ஹம்ஜா.
2015ல் சிறையில் உள்ள அல் கொய்தா உறுப்பினர்களை விடுவிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டார்.
ஏமன் நகரிலுள்ள ஈரானியத் தூதரகத்தில் அல் கொய்தா குண்டுகளை வெடிக்கச் செய்தது. இந்தக் கலவரத்தில் இரண்டு ஈரானிய தூதர்களை உயிரோடு பிடித்துச் சென்றனர்.
அல் கொய்தாவின் மூன்று தலைவர்களை விடுவித்தால்தான் இவர்களை அனுப்புவோம் என்று கூற, அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டது.
சென்ற ஆண்டு ஹம்ஜாவிடமிருந்து ஒரு ஒலிநாடா வெளியானது. ‘‘ஜெருசலேம் என்ற மணமகளுக்கு நமது சீதனம் நமது இரத்தம்தான்’’ என்றது.யூதர்கள் மீது தாக்குதல் நடத்துவதை அது ஊக்குவித்தது.
21 நிமிடப் பேச்சு கொண்ட அந்த ஒலிநாடாவில் ‘‘நாங்கள் ஒவ்வொருவருமே ஒசாமாதான்’’ என்று கூறினார் ஹம்ஜா. குறிப்பாக அமெரிக்காவுக்கு நேரடியாகவே சவால் விட்டிருக்கிறார்.
‘‘என் தந்தையின் இறப்புக்குப் பழி வாங்குவோம். சொல்லப் போனால் என் தந்தையைக் கொலை செய்ததற்காக என்றில்லை, இஸ்லாமைப் பாதுகாப்பவர்களின் உறுதிமொழி இது’’ என்றார் ஹம்ஜா.
யாழ்ப்பாணத்தின் வான்வெளியில் பறக்கும் தட்டு பறப்பதாக இராப்பொழுது செய்திகள் உலாவர ஒருசாரார் பதற்றமடைய ஒருசாரார் விடுப்பு பார்க்க வீதிகளிக்கு வந்துள்ளனர்.
யாழில் நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மேலும் ஆராய்ந்த போது உண்மை நிலை வெளிவந்துள்ளது.
இந்த நிலையில், புளியங்கூடல் அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இதன்போது அங்கு பயன்படுத்திய பெரிய மின் விளக்குகள் வானை நோக்கி செலுத்திய ஒளி, திரண்ட முகில் கூட்டங்கள் மீது பட்டு அவை பாரிய ஒளிவட்டங்களாக தென்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவற்றையே சிலர் பறக்கும் தட்டு என்று வதந்திகளை ஏற்படுத்த அந்த செய்தி 3 மணித்தியாலங்கள் உண்மைச் செய்தி போல உலாவி வந்தன.
ஆனால் அந்த ஒளிவட்டத்திற்கான காரணம் தெரியவர மக்கள் மத்தியில் பதற்றம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தனர்.
இதேவேளை, யாழ். மக்கள் இந்த ஒளிக்கீற்றை பார்வையிடுவதற்காக வீதிகளில் வந்து வேடிக்கை பார்த்துள்ளதுடன், இந்த ஒளிவட்டம் உண்மைக்கு புறம்பானது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், இவ்வாறான செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மது அருந்துவதற்கு பணம் கொடுக்கவில்லை என தாயை மிகக் கொடூரமாக தாக்கிய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஊரகஸமங்ஹந்திய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மது அருந்துவதற்கு பணம் வழங்கவில்லை என ஆத்திரமுற்ற மகன் தாயை கொடூரமாக தாக்கியுள்ளார். தாக்குதல் நடத்திய நபரை எதிர்வரும் 5ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு அல்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாயின் ஆடையில் மறைத்து வைத்திருந்த பணத்தைத் தருமாறு கோரி தாக்குதல் நடத்தியுள்ளார். சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் குறித்த நபரின் வீடு சென்றிருந்த போதும், குறித்த நபர் வீட்டின் பின் புறத்தில் மது அருந்திக் கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
ஊரகஸ்மங்ஹந்திய பகுதியைச் சேர்ந்த 23 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கால்களிலும், தலையிலும் பலத்த காயங்களுக்கு உள்ளான தாய், நோயாளர் காவு வண்டி ஒன்றின் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் பெண் ஒருவரை கூட்டாக வன்புணர்ந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கு தலா எட்டு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.டெப் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஓர்நாள் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாது வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எட்டு வருட சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் தலா ஐயாயிரம் ரூபாய் அபராதமாகச் செலுத்துவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒருவர் 25 ஆயிரம் ரூபா வீதம் நஷ்டயீடாக வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு வழங்காவிட்டால் மேலும் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதே பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கோபாலபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மூதூர் பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த சிறுவன் தனது தந்தையுடன் மாடு மேய்க்கும் வாடியில் இருந்தபோது, நிலாவெளி 10 ஆம் கட்டை பகுதியில் யானை தாக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தாக பொலிஸார் கூறினர்.
சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட வேளையில் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வட்ஸ் அப் நாளுக்கு நாள் தனது பயனாளிகளுக்கு புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் அதன் பயனாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல மில்லியன் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வட்ஸ் அப்ப்பின் ஊடாக இதுவரை சில வகையான கோப்புக்களை (வீடியோ, படங்கள், PDF, SpreadSheet, Word Document) மட்டுமே பகிரக்கூடியதாக இருந்தது.ஆனால் இந்த வரையறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் எந்தவொரு கோப்பு வகையினையும் பகிர்ந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் iOS சாதனங்களில் 128 MB ஆகவும், Android சாதனங்களில் 100 MB கோப்பின் கொள்ளளவு வரையறுக்கப்பட்டுள்ளது.