வவுனியா பூவரசன்குளம் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 8 வது நாளான நேற்று (05.06.2017 முருகப்பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
வவுனியா பூவரசங்குளம் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா 29.05.2017 அன்று ஆரம்பமானது. 04.06.2017 அன்று வேட்டை திருவிழாவும், 05.06.2017 அன்று சப்பரதிருவிழாவும், 06.06.2017அன்று தேர் திருவிழாவும் இடம்பெற்றது.
நாளை 07.06.2017 அன்று தீர்த்ததிருவிழாவுடன் கொடி இறக்கம் இடம்பெற்று கலைநிகழ்வுகள் இடம்பெறும். தொடர்ந்து 08.06.2017 அன்று பூங்காவனத் திருவிழாவுடன் மகோற்சவம் நிறைவு பெறுகின்றது.
இன்று (06.06.2017) வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் வவுனியா அஸ்திரம் நற்பணி மன்றத்தினர் மிகவும் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவிக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றை வழங்கி வைத்தனர். இந்த நிகழ்வு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்றது.
பூவரசங்குளம் மகாவித்தியாலய மாணவியான ஏழாம் ஆண்டு கல்வி கற்கும் செல்வி ரா.வர்ஸா என்பவர் மிகவும் வறுமைப்பட்டவர் .தாய் தந்தை இருவரும் வாய்பேச முடியாதவர்கள் ஜந்து பிள்ளைகளையுடைய இந்த குடும்பத்தில் ஒரு மகனும் வாய் பேச முடியாதவர் யாழ் நவீல்ட் பாடசாலையில் கல்வி கற்கின்றார். தற்போது மூன்று பிள்ளைகள் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர் இவர்களுக்டகு இன்று பிறந்ததினத்தைக் கொண்டாடும் லண்டனைச் சேர்ந்த தேதுசா நாதன் சார்பில் இது வழங்கி வைக்கப்பட்டது. கம்பாறிசன் கருணை அமைப்பு லண்டனில் இருந்து இந்த ஏற்பாட்டை செய்தனர் .
பூவரசங்குளம் மகாவித்தியாலய அதிபர் திரு.தர்மகடாட்சம் நிகழ்வில் கலந்து கொண்டு துவிச்சக்கர வண்டியை வழங்கி வைத்தார்.
அகில இலங்கை செவிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் கணநாதன் குறித்த இந்தக்குடும்பத்தின் நிலையை அறிந்து மாவட்ட சமூகசேவை அலுவலகமூடாக வேண்டுகோள் விடுத்திருந்தார் . நிகழ்வில் அஸ்திரம் அமைப்பின் நா.கிருஸ்ணமூர்த்தி கம்பாறிசன் அமைப்பின் பிரதிநிதி நா.ஸ்ரீகரன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எஸ்.கே.வசந்தன், திருமதி கோமளா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெற்ற தாயை மட்டையால் தாக்கி கொலை செய்த மகள் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. மாத்தறை-அக்குரெஸ்ஸ வில்பிட்ட பிரதேசத்திலேயே இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
44 வயதான மகளின் தாக்குதலினால் குறித்த தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளின் தாக்குதலினால் கே.சிறியாவத்தி என்ற 73 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் குறித்த தாயின் மகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்குரெஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி டீ.சேனாநாயக்கவின் ஆலோசனைக்கமைய,சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிரியாவின் கொடூரமான உள்நாட்டு யுத்தத்திற்கு மறக்க முடியாத அடையாளச் சின்னமாக அமைந்த சிறுவன் தான் Omran Daqneesh.
முகத்தில் ரத்தக் கறையுடன், வான் தாக்குதலால் ஏற்பட்ட புழுதியை உடலெங்கும் அப்பிக்கொண்டும், அதிர்ச்சி நீங்காத நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அமர்ந்திருந்த சிறுவனின் ஒற்றைப் புகைப்படம் உலகையே ஒரு கணம் உலுக்கி இருந்தது.
ஆனால் தற்போது அந்த சிறுவன் முழு ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி நெகிழ வைத்துள்ளது.
சிரியாவின் ஆசாத் அரசுக்கு ஆதரவாக செயல்படும் லெபனான் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அந்த சிறுவனின் தந்தையுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ரத்தக்கறை தோய்ந்த சிறுவனின் புகைப்படம் முதலில் வெளியானபோது அவனது குடும்பத்தினர் எவரும் ஊடகங்களுடன் கருத்து தெரிவிக்க மறுத்து வந்தனர்.
ஆசாத் ஆதரவாளர்கள் எவரேனும் தங்கள் குடும்பத்தினரை குறிவைக்கலாம் என்ற அச்சமே அதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது.
மட்டுமின்றி தற்போது சிறுவனின் புகைப்படத்தை வெளியிட்ட பத்திரிகையாளர் Kinana Allouche ஆசாத் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு இவர் ஆசாத அரசுக்கு எதிராக போராடும் போராளிகளின் சடலங்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மட்டுமின்றி வான் தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுவர்களின் உடல்களை பார்த்து சிரித்த முகத்துடன் இவர் வெளியிட்ட காணொளியும் கண்டனங்களை எதிர்கொண்டது.
அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களை வன்மையாக கண்டிக்கின்றேன் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செய்திக்குறிப்பில்,
வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினது அறிக்கை என்னிடம் கையளிக்காத நிலையில் அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு செய்தியை நான் வழங்கியதாக சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகி உள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றேன்.
கடந்த மாதம் 22 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு ஜெனீவாவில் தங்கியிருந்தேன்.
இந்த நிலையில் மாநாடு முடிவடைந்ததும் அங்கிருந்து நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகளைச் சந்திப்பதற்காகவும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள நீண்ட கால அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்களை அந்நாட்டில் வதியும் தாயக மருத்துவர்களைச் சந்தித்து கலந்தரையாடும் பொருட்டும் தற்போது நோர்வேயில் தங்கியுள்ளேன்.
இந்த நிலையில் முதலமைச்சர் அவர்களால் விசாரணை அறிக்கை அமைச்சர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்.
இதுவரையில் எனக்கான அறிக்கை முதலமைச்சர் அலுவலகத்தால் என்னிடம் கையளிக்கப்படாத நிலையில் அறிக்கையின் உள்ளடக்கங்களை நானே ஊடகங்களுக்கு வழங்கியதாக உண்மைக்கு புறம்பான செய்திகள் சில இணையத்தளங்களில் வெளியாகி இருப்பது வேடிக்கையாக உள்ளது.
தொடர்ந்தும் என்மீது வீண் பழி சுமத்தும் வகையில் திட்டமிட்டு சிலரால் மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சாரத்தை முற்றாக மறுக்கின்றேன்.
இது தொடர்பில் பூரணமான தன்னிலை விளக்கமொன்றை நாடு திரும்பியதும் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கவுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டார் விமானங்களுக்கு தனது வான்பரப்பை எகிப்து மூடிவிட்ட நிலையில் சவுதி மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் கட்டார் விமானங்களுக்கு தங்கள் வான்பரப்பை இன்று செவ்வாய்க்கிழமை மூடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளைகுடா பகுதியில் பயங்கரவாதத்திற்கு கட்டார் ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்தி, கட்டாருடனான தங்கள் இராஜதந்திர உறவுகளை பல நாடுகள் துண்டித்துவிட்டன.
பஹ்ரைன்,சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் உள்ள கட்டார் நாட்டினர் இரண்டு வாரங்களில் அந்நாடுகளிலி்ருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கட்டார் மறுக்கிறது; “வெளிப்படைத்தன்மையுட னும் நேர்மையுடனுமான பேச்சுவார்த்தைகளுக்கும்” பிற நாடுகளை கட்டார் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியிலிருந்து, மறு அறிவிப்பு வரும்வரை, எகிப்து வான்பரப்பு கட்டார் விமான சேவைகளுக்கு மூடப்படும் என எகிப்து தெரிவித்துள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்துகளை இணைக்கும் முக்கிய தளமாக கட்டாரின் தலைநகர் டோகா இருப்பதால், போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கட்டார் ஏர்வேஸ், எத்திஹாட் மற்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டார் நாட்டின் மேற்கில், பெரிய நாடாக இருக்கும், சவுதி அரேபியாவின் வழியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றால் கட்டார் நாட்டு விமானங்கள், கூடுதல் தூரப் பாதைகள் மூலம் பயணிக்க வேண்டும், எனவே பயண நேரமும் அதிகமாகும்.
இருப்பினும் கட்டார் விமானங்கள், சர்வதேச கடல் பகுதி என்றும் சர்வதேச வான்வெளியில் பறக்க முடியும் என்று கட்டாரின் வெளியுறவு அமைச்சர், ஷேக் முகமத் பின் அப்துல் ரஹ்மான் அல்- தனி, அல்ஜசிரா தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.
சோமாலியாவிற்கு உட்பட்ட வான்பரப்பை, வழக்கத்தைவிட அதிகமாக திங்கட்கிழமை 15 கட்டார் விமானங்கள் பயன்படுத்தியதாக, பெயர் வெளியிடாத சோமாலி அதிகாரி ஒருவர் ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள கணிணி திருத்தும் நிலையத்தில் இன்று (06.06.2017) மதியம் 2.15 மணியவில் திடீரென ஏற்ப்பட்ட தீ விபத்தினால் பல பொருட்கள் சேதமாகியுள்ளன. இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்.
பிரிண்டர் திருத்தும் சமயத்தில் பிரண்டர் வயரில் ஏற்ப்பட்ட மின்சார கோளாறு காரணமாக பிரிண்டர் வயர் திடீரென தீப்பற்றியது. தீப்பற்றிய வயரை அங்கு பணிபுரிந்த ஒருவர் நிலத்தில் தூக்கி எறிந்த சமயத்தில் நிலத்தில் இருந்த காப்பற்றில் பற்றிய தீ கடை முழுவதும் பரவி கடையிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின
உடனடியாக நகரசபையின் தீயணைப்பு வாகனம் வரைவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இத் தீ விபத்தினால் சுமார் இருபது லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து சாம்பளாகியுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் 04.06.2017 ஞாயிற்றுக்கிழமை ஆலய பங்குதந்தை அருட்பணி சத்தியராஜ் அடிகளார் தலைமையில் கொடியேற்றதுடன் ஆரம்பமானது ..
மேற்படி திருவிழா 04.06.2017 தொடக்கம் 13.06.2017 வரை பத்து தினங்கள் இடம்பெறுகின்றது .. திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தை சூழவுள்ள பகுதிகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் திரு.சசிகுமார் தலைமையில் சூழல் தினம் யூன்- 05 ஆம் திகதியான நேற்று கொண்டாடப்பட்டது.
அன்று முதல் நிகழ்வாக பாடசாலை அதிபரின் சூழல் தொடர்பான உரை காலை பிரார்தனை கூட்டத்தில் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து மாணவியின் சூழல் தொடர்பான பேச்சு இடம்பெற்றது. தொடர்ந்து பாடசாலையில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் .
பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி கட்டார் நாட்டுடனான உறவை சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் துண்டித்துள்ளன.
இதற்கு பதிலடியாக சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டதாக கத்தார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால் இந்நிலையில் கட்டாருடனான உறவை இஸ்லாமிய நாடுகள் துண்டித்துக் கொண்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன?
சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்து உறுதியான பின்புலமாகவும் கட்டார் விளங்குகிறது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்ட தாலிபான்களை டோகாவில் அலுவலகம் திறக்கச் செய்து, அவர்களை அரசியல் பாதையில் செலுத்த கட்டார் முயன்றது.
இவை தவிர, ஏமன், லெபனான், சோமாலியா, பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளின் அன்றாட நடவடிக்கைகளை தீர்மானிப்பதிலும் கட்டார் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
வளைகுடா நாடுகளில் அமைதியையும், அரசியல் நிலைத்தன்மையையும் ஏற்படுத்த விரும்பும் நாடுகள், கட்டாரின் ஒத்துழைப்பைப் பெற வேண்டியது அவசியம் என்பதே இன்றைய நிலை.
கணிசமான எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடு என்பதால் கட்டாருக்கு எதிரான நடவடிக்கை இவற்றின் விலையில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும் இந்தியாவின் இறக்குமதி முழுவதும் நேரடியாக கடல் வழியாக நடப்பதால், பாதிப்பு குறைவாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில் சவுதி அரேபியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் கட்டார் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்வதாக கட்டார் அறிவித்துள்ளது.
இதேபோல், அபுதாபியில் இருந்து கட்டார் செல்லும் எத்திஹாட் ஏர்வேஸ் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அரபு நாடுகளில் வசிக்கும் கட்டார் நாட்டைச் சேர்ந்தவர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், கட்டாரில் வசிக்கும் சவுதி அரேபிய, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரபு நாடுகளில் வசிப்பவர்களுக்கு கட்டார் நாட்டுக்கு திரும்புவதற்கு 14 நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கட்டார் நாட்டுடனான எல்லையை மூடப்படுவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
சாலை, கப்பல், விமானம் ஆகிய போக்குவரத்துகள் மற்றும் தூதரக ரீதியிலான உறவை முடித்துக்கொள்வதாகவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது. இதேபோல் மற்ற நாடுகளும் கட்டார் நாட்டுடான அனைத்து வகையான உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன.
சவுதி அரேபியாவில் இருந்து செயல்படும் ஏமன் அரசும், கட்டாருடனான உறவைத் துண்டிப்பதாகக் கூறியிருக்கிறது.
7 பேரை பலிகொண்ட லண்டன் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறி இரண்டு நபர்களின் பெயர்களை லண்டன் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் சென்று கொண்டிருந்த வான் ஒன்று தாறுமாறாக ஓடி பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இதனையடுத்து மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடினர்.
கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் பலியாகினர். 48 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல்தாரிகள் மூன்று பேரையும் லண்டன் போலீஸ் சுட்டுக் கொன்றது. தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாகவே கருதப்படுவதாக லண்டன் போலீஸ் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக 12 பேரை கைது செய்துள்ளதாக லண்டன் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஏழு உயிர்களை பறித்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்தவன் முக்கிய குற்றவாளி என்று தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், முக்கிய குற்றவாளிகள் இருவரின் பெயர்களை லண்டன் போலீசார் வெளியிட்டுள்ளனர்.குராம் ஷாஸத் மற்றும் ராசித் ரெடவுனே ஆகிய இருவரின் பெயர்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இதில், குரான் ஏற்கனவே ஐ.எஸ் இயக்கத்தை ஆதரித்து வீடியோ வெளியிட்டிருந்தார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பழங்களின் அரசன் என்று அழைக்கப்படும் மாம்பழங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. மாம்பழத்தில் உள்ள மருத்துவ பலன்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மாம்பழங்களில் விட்டமின்கள் சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. அவை கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு துணைபுரியும்.
விட்டமின் ஏ மாம்பழத்தில் அதிகம் இருக்கிறது. கண்கள் வறட்சி அடைவதை தடுக்கும். பார்வை திறனை மேம்படுத்தவும் உதவும்.
மாம்பழங்களில் காணப்படும் பீட்டா கரோட்டின் ஆஸ்துமா தோன்றுவதை தவிர்க்க வகை செய்யும்.
முகப்பருக்களை போக்குவதற்கும் மாம்பழத்தை பயன்படுத்தலாம்.
மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி தண்ணீர் கலந்து ஜூஸாக தயாரித்து பருகினால் உடல் குளிர்ச்சியடையும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாத உணவு களின் பட்டியலில் மாம்பழங்கள் உள்ளன. ஆதலால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவும்.
மாம்பழத்தில் இருக்கும் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்துக்கு வலுசேர்க்கின்றன.
மாம்பழங்களில் இரும்பு சத்தும் உள்ளது. மாதவிலக்கு நிற்கும் 50 வயது பெண்களும், கர்ப்பிணிகளும் மாம்பழங்களை சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
மாம்பழங்களில் உள்ள ஒருவகை நுட்பமான சத்துக்கள் புற்றுநோய்களுக்கு எதிராக உடலை பாதுகாக்க உதவுகின்றன என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
மென்பொருள் பாதுகாப்பு துறையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சமீபத்தில் 3.65 கோடி அண்ட்ரொய்ட் ஸ்மார்ட்போன்களை ஜூடி எனும் மால்வேர் (Judi malware) பாதித்ததைத் தொடர்ந்து கூகுளின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிதாய் வெளியிடப்படும் அண்ட்ரொய்ட பதிப்புகள் மிகவும் பாதுகாப்பானதாக உருவாக்கப்படுவதால், சமீபத்தில் கூகுள் பக் கண்டறிதல்(Bug Founding) திட்டத்தில் யாரும் பரிசு பெறவில்லை.
இதனால் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியாளர்களை ஈர்க்கும் வகையில் Bug Founding திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பரிசுத் தொகை 200,000 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அண்ட்ரொய்ட் இயங்குதளத்திற்கான Bug Founding திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூகுள் துவங்கியது.
இத்திட்டத்தின் கீழ் பிழை கண்டறிபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் வழங்கப்படும் பரிசுத் தொகை பொறியாளர்கள் கண்டறியும் பிழையை சார்ந்து நிர்ணயம் செய்யப்படும்.
உலக நாடுகளில் காலநிலை மாற்றமானது வெகுவாக மாறி வருகின்றது. இதன் காரணமாக வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டு தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது.
இதனைக் கருத்திற்கொண்டு வல்லரசு நாடுகள் இணைந்து பாரிஸ் உடன்படிக்கை ஒன்றினை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப்பும் ஆதரவு தெரிவித்துள்ளார். சூழல் வெப்பநிலை அதிகரிப்பில் வாகன பாவனை அதிகரிப்பும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
அதிலும் எரிபொருளில் இயங்கும் வாகனங்களால் பாதிப்பு அதிகமாகும்.
இதனைக் கருத்திற்கொண்டு இந்தியாவும் 2030 ஆம் ஆண்டிலிருந்து எரிபொருளில் இயங்கும் கார்களை உற்பத்தி செய்வதை முற்றாக நிறுத்தவுள்ளது.
முற்று முழுதாக மின்சாரத்தில் இயங்கும் இலத்திரனியல் கார்களை மட்டுமே உற்பத்தி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இத் தொழில்நுட்பம் எரிபொருளை விடவும் செலவு குறைவாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இரண்டு வயது மகளை கொதிக்கும் நீரில் குளிக்க வைத்த காரணத்தால் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் Brisbane நகரை சேர்ந்தவர் Shane David Stokes (30) இவர் மனைவி Nicole Betty More (23). இவர்களுக்கு Maddilyn-Rose (2) என்னும் மகள் உள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் Maddilynயின் பெற்றோர் அவரை கொதிக்கும் தண்ணீர் உள்ள தொட்டியில் குளிக்க வைத்துள்ளனர்.
இதில் சூடு தாங்காமல் திணறிய Maddilynக்கு கால், முதுகு என உடலில் பல இடங்களில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
காயங்களுடன் குழந்தை சில நாட்கள் அவதிப்பட்டு கொண்டிருக்க அதை பெற்றோர் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். இதனிடையில் சில தினங்களுக்கு முன்னர் Maddilynக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து Maddilyn மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குழந்தையின் உடலில் இருந்த காயங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இது குறித்து பொலிசிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனிடையில், சிகிச்சை பலனளிக்காமல் Maddilyn பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து, பொலிசார் குழந்தையின் பெற்றோரான Shane மற்றும் Nicole ஐ கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது குழந்தையை கொலை செய்த குற்றம் மற்றும் சித்ரவதை செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து புலானாய்வு அதிகாரி Tim Trezise கூறுகையில், குழந்தை உடலில் ஏகப்பட்ட காயங்கள் ஏற்பட்டும் அவரின் பெற்றோர் எந்த உதவியையும் யாரிடமும் கோரவில்லை.
கொதிக்கும் தண்ணீரால் தான் காயங்கள் ஏற்பட்டது என்பதை மட்டும் ஒத்து கொண்ட அவர்கள் இது ஒரு விபத்து என தெரிவித்ததாக கூறியுள்ளார்.
மேலும், Maddilynன் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவரின் இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என Tim கூறியுள்ளார்.
Maddilyn வீட்டின் அருகில் வசிக்கும் Rhonda கூறுகையில், Maddilyn எப்போதும் சிரித்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்.
குழந்தையை கடந்த புதன்கிழமை கடைசியாக பார்த்ததாக கூறியுள்ள Rhonda, Maddilyn வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.