சர்வதேச அளவில் சாதனை படைத்த இளம் தமிழச்சி!!

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த மூன்றரை வயது சிறுமிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் நேத்ரா. மூன்றரை வயது சிறுமியான இவர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் அபார திறமையுள்ளவராக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியின் 4 வயதுக்கு உட்பட்டோருக்கான 500 மீ – 1000 மீ பிரிவில் நேத்ரா சமீபத்தில் கலந்து கொண்டார்.

இந்த போட்டியில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்திய நேத்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் இந்தியாவில் இருந்து 4 வயதுக்கு உட்பட்டோருக்கான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கு பெற்ற முதல் சிறுமி என்ற பெயரையும் நேத்ரா பெற்றுள்ளார்.

ஏற்கனவே தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்துள்ள நேத்ரா, தற்போது உலக அளவிலான போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

13 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அவமானம் : சாதித்துக் காட்டிய மார்க் ஜூக்கர்பெர்க்!!

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தன்னை கல்லூரியிலிருந்து வெளியேற்றிய ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் கெளரவ டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2004ஆம் ஆண்டு படிக்கும் போது பேஸ்புக் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்ததால் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தற்போது 13 ஆண்டுகளுக்கு பின்னர் எந்த ஹார்வர்ட் பல்கலைகழகம் மார்க்கை அப்போது வெளியேற்றியதோ, அதே பல்கலைகழகம் மார்க்குக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது.

பட்டமளிப்பு விழாவின் போது அங்கிருந்த மாணவர்களிடம் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட ஜூக்கர்பெர்க், தான் பேஸ்புக்கிற்காக திட்டமிடப்பட்ட கம்ப்யூட்டர் குறித்த படங்களை அவர்களிடம் காட்டினார்

பின்னர், ஹார்வர்ட் பல்கலைகழகத்தை சுற்றி பார்த்த அவர், அங்கு புகைப்படங்களையும் எடுத்து கொண்டுள்ளார்.

பறக்கும் விமானத்தில் நபரின் செயல் : 10 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்!!

பறக்கும் விமானத்தின் கழிவறையில் பிரித்தானிய நபர் ஒருவர் புகை பிடித்த குற்றத்திற்காக அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிரவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானியாவின் Coates Road, Kidderminster பகுதியை சேர்ந்தவர் 46 வயதான ஜான் காக்ஸ். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிர்மிங்க்ஹாம் விமான நிலையத்தில் இருந்து எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் பகுதிக்கு பயணம் மேற்கொண்டார்.

விமானம் 33,000 அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது கழிவறைக்கு சென்ற ஜான் காக்ஸ் புகை பிடித்ததாக கூறப்படுகிறது. கழிவறையில் இருந்து புகை மூட்டம் எழுந்ததும் நெருப்பு போன்ற அசம்பாவித சம்பவத்தின்போது எழுப்பப்படும் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த விமான ஊழியர்கள் உடனடியாக விமானிக்கு அளித்த புகாரின் அடிப்படையில் விமானத்தை அவசரமாக தரையிறக்கும் முடிவுக்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து எகிப்திய அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பிரித்தானியர் ஜான் காக்ஸ் கழிவறையில் புகை பிடித்தது தெரியவந்தது.

தொடர்ந்து அவரை கைது செய்த அதிகாரிகள் பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பியதுடன் நில்லாமல் அவர் மீது பல பிரிவுகளில் வழக்கும் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 4 ஆண்டுகளும் 6 மாதமும் சிறை விதித்து பிரித்தானியாவில் உள்ள கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனிடையே விமான நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு செய்ததில், குறித்த நபருக்கு வழங்கப்பட்ட தண்டனையானது மிகவும் குறைவு எனவும், இது எஞ்சியோருக்கு பாடமாக அமைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு 9 ஆண்டுகளும் 6 மாதமும் சிறை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

குறித்த சம்பவம் நடந்த Monarch Airbus விமானத்தின் விமானி இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 20 ஆண்டுகளாக விமானியாக பணியாற்றி வருகிறேன், ஆனால் இதுபோன்ற ஒரு ஆபத்தை வரவழைக்கும் செயல் இதுவே முதன் முறை என்றார்.

பெற்ற தாயை கொன்று ரத்தத்தில் படம் வரைந்தது ஏன் : மகன் பகீர் வாக்குமூலம்!!

பெற்ற தாயை கொன்று ரத்தத்தில் ஸ்மைலி வரைந்தது ஏன் என்று மகன் பொலிசில் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கு விசாரணை குழுவில் உள்ள மும்பை கர் பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஞானேஷ்வரின் மனவைி கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

தீபாலியின் உடலில் இருந்து வெளியேறிய ரத்தத்தை வைத்து ஸ்மைலி வரையப்பட்டிருந்தது, வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் மாயமாகியிருந்தது.

சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவான இவர்களின் மகன் சித்தாந்தை(வயது 21) பொலிசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ராஜஸ்தானில் வைத்து சித்தாந்தை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில், பிஎஸ்சி தேர்வை நான் எழுதாமல் விட்டுவிட்டேன். ஆனால், அம்மா தொடர்ந்து என்னிடம் மார்க்ஷீட்டை கேட்டுக்கொண்டிருந்தார்.

இதனால் தற்கொலை செய்ய நினைத்திருந்தேன், ஆனால் அம்மாவுக்கும் எனக்கும் பிரச்னை ஏற்பட்டது. கோபத்தில் கத்தியால் குத்திவிட்டேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

பிச்சை எடுத்துதான் படிக்க வைக்கிறேன் : செத்துவிடலாம் என்றுகூட தோன்றும் : கண்ணீர் மல்க தாய்!!

தமிழகத்தின் திருப்பத்தூர் அருகே உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு, தற்போது சென்னையில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய நிலைமை பற்றி கூறுகையில், சின்ன வயதிலேயே அப்பா, அம்மா இறந்துவிட்டார்கள். உறவினர்கள் என்னைப் பிச்சை எடுக்கிற கும்பல்கிட்டே விற்றுவிட்டார்கள் . சின்ன வயதிலிருந்தே பிச்சை எடுக்கிறது பிழைப்பாகிவிட்டது.

பிச்சை எடுக்கும்போது எல்லாரும் கேவலமா பார்ப்பாங்க. சிலர் அசிங்கமா திட்டி துரத்துவாங்க. அந்த நேரத்தில் செத்துடலாம்னுகூட தோணும் என்று கண் கலங்கி கூறியுள்ளார்.

திருப்பத்தூரில் நான் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த வெங்கடேசைப் பார்த்தேன்.

என்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பினார். நமக்கும் ஒரு துணை வேனும் என்பதால் திருமணம் செய்து சென்னைக்கு வந்தோம்.

இங்கு தான் எங்கள் குடும்ப வாழ்க்கை ஆரம்பித்தது. யார்கிட்டயும் பிச்சை கேட்கக் கூடாது, எங்கேயாவது வேலைக்குப் போகலாம்னு முடிவுப் பண்ணினோம். ஆனால், வேலைக் கேட்கப்போனா இடத்துல எல்லாம் நம்பாமல் விரட்டினாங்க. வேற வழியில்லாமல் மறுபடியும் பிச்சை எடுக்க ஆரம்பித்துவிட்டோம்.

எங்களுக்கும் பல ஆசைகள் இருக்கு. ஆனா, அந்த ஆசைகள் எல்லாம கனவாவே இருக்கும். எங்களுக்கு இரண்டுப் பெண் குழந்தைகள். நாம் தான் இப்படி இருக்கோம். நம்ம குழந்தைங்கள் படிச்சு, உழைச்சு சம்பாதிக்கட்டும் முடிவுப் பண்ணினோம்.

இரண்டு பேரும் திருப்பத்தூர் விடுதியில் தங்கி படிக்கிறாங்க. எங்களை கேவலமா பேசின சொந்தக்காரங்களின் பிள்ளைகள் படிக்கிற அதே பள்ளியில் படிக்கிறாங்க. பிச்சை எடுத்துதான் படிக்க வைக்கிறேன். எங்களை மாதிரி வாழ்க்கை இவங்களுக்கு இருக்காதுங்கிற நம்பிக்கையோடு இருக்கோம் என்று கூறியுள்ளார்.

நடிக்கிற வேலையை மட்டும் பார் : அரசியல் பேசாதே என சொல்லவேண்டாம் : பிரபல நடிகை ஆவேசம்!!

பிரபல சின்னத்திரை நடிகையும், செய்தி வாசிப்பாளருமான மோனிகா சமூக வலைதளங்களில் மக்கள் பிரச்னைக்கான என் குரல் பலமா ஒலிச்சுட்டுதான் இருக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

நடிகை மோனிகா சமீபகாலமாக மக்களின் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருகிறார். அதை அவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் மோனிகா, ஜெயலலிதா இறந்த காலக்கட்டத்தில் பல குழப்பங்கள், சந்தேகங்கள், பிரச்னைகள் இருந்தது. .இதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு, எழுச்சி இயக்கம் என்ற ஓர் இயக்கத்தை ஆரம்பித்தேன்.

அதில் நான் பேசும் எல்லா வீடியோக்களையும் பதிவிட்டேன். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சினு பார்க்காமல், மக்கள் நலனைச் சிந்திக்காத எல்லா அரசியல் கட்சிகளையும் எதிர்த்து குரல் கொடுத்தேன்.

உனக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம். நடிக்கிறதோடு நிறுத்திக்கோ. இனி நீ அரசியல் பேசக் கூடாது. மீறி பேசினா நிறைய பிரச்னைகளை சந்திக்கணும்னு மிரட்டல்கள் வந்தது. அதேசமயம், நீங்க தொடர்ந்து தைரியமா பேசுங்கனு மக்கள் தரப்பில் ஆதரவும் வந்தது.

யாருமே பேசாம இருப்பதால் தான் அரசியல்வாதிகள் தப்பு செய்து கொண்டே இருக்கிறார்கள். நான் தொடந்து பேசிக்கிட்டேதான் இருப்பேன்’னு சொல்லிட்டேன்.

நம்மில் பலரும் நடப்பு பிரச்னைகளுக்கு ஏதாவது ஒரு வகையில் குரல் கொடுத்தாலும், அந்தப் பிரச்னையோட மூலக்காரணத்தைப் பத்தி பெரிதாக பேசுவதில்லை.

நான் மூலகாரணங்களைப் பேசுறதோடு, பிரச்னைகள் வந்தால் அதையும் எதிர்கொள்ளத் தயாரா இருக்கிறேன். பேசும் பிரச்னையின் ஆழத்தையும் மக்களின் கருத்துகளையும் தெரிஞ்சுகிட்டு, அதை எப்படி மக்களுக்குக் கொண்டுபோனால் பயன் தரும்னு யோசித்து தான் வீடியோவா வெளியிடுறேன்.

நான்கு பிரச்னைகள் இல்ல, நாற்பதாயிரம் பிரச்னைகள் வந்தாலும், நாம குரல் கொடுக்காத வரைக்கும் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி கொண்டு தான் இருப்பார்கள்.

17 வருடமாக மக்கள் மத்தியில் எனக்கான அடையாளத்தோடுதான் இருக்கேன். மக்களுக்கு நல்லது நடக்கணும் என்பது மட்டுமே என்னோட எண்ணம். அதேசமயம் நடிப்போடு நிறுத்திக்கோ அரசியல் பேசாத’னு யாரும் சொல்லாதீங்க என்று கூறியுள்ளார்.

நடத்தையில் சந்தேகம் : மனைவி மற்றும் குழந்தையை கொடூர முறையில் கொன்ற கணவன்!!

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரையும், குழந்தையையும் கொடூரமாக கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது பஷிர் (44). இவருடைய மனைவி சகிதா (37) இவர்களுக்கு கதிஜாதுல் மிஸ்திரி (1) என்னும் மகள் உள்ளார்.

முகமது பஷிருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணவன் மற்றும் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று பஷிருக்கும், சகிதாவுக்கு சண்டை உச்சத்தை அடைந்துள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த பஷிர் தனது மனைவியின் கை, கால்களை கட்டி போட்டார். பின்னர் வீட்டில் இருந்த சலவை பெட்டியை வைத்து அவர் உடல் முழுவதும் சூடு வைத்து அவரை துடிதுடிக்க கொலை செய்துள்ளார்.

இந்த நேரத்தில் வீட்டில் இருந்த பஷிரின் குழந்தை அழுதுள்ளது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர் படுக்கையில் இருந்த தலையணையை குழந்தையின் முகத்தில் அழுத்தினார்.

குழந்தைக்கு மூச்சு திணற, பின்னர் குழந்தையை எடுத்து சுவரில் வீசி கொடூரமாக பஷிர் கொலை செய்தார்.

பின்னர், கதிஜாதுல் சடலத்தை ஒரு பெட்டியில் அடைத்து வைத்து அதை காரில் ஏற்றி கொண்டு கோழிக்கோடு அரையடத்து பாலம் பகுதிக்கு சென்ற பஷிர், பின்னர் அங்கு காரை நிறுத்தி குழந்தையை அந்த இடத்தில் புதைத்துள்ளார்.

பின்னர், தன் மனைவி சடலத்தை எடுக்க பஷிர் வீட்டின் அருகில் வந்த போது அங்கு பொலிசார் இருப்பதை கண்டு தலைமறைவானார்.

அதன் பின்னர், பஷிரை பிடிக்க பொலிசார் தனிப்படை அமைத்து தேட கல்லடிக்கோடு என்ற இடத்தில் பதுங்கி இருந்த அவரை பொலிசார் கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், அதன் பிறகு சிறையில் அடைக்கபட்டார்.

வீதி விபத்தில் நடிகை பலி!!

வீதியில் நின்று கொண்டிருந்த லொறி மீது கார் மோதிய விபத்தில் துணை நடிகை மற்றும் கார் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அனுஷா சிங் (20). பெங்களூரு அருகே உள்ள கெங்கேரி எம்.ஏ.புரா பகுதியை சேர்ந்தவர் பவானி (20) துணை நடிகைகளான இருவரும் துபாயில் நடந்த தமிழ் திரைப்பட படப்பிடிப்பில் நடித்து விட்டு, நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து வாடகை காரில் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தனர். காரை ஹரிகிருஷ்ணன் (29) என்பவர் ஓட்டி சென்றார்.

நேற்று அதிகாலை ஓசூர் மேம்பாலத்தில் கார் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் மீது கார் மோதியது.

இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக உடைந்தது. இந்த கோர விபத்தில் அனுஷா சிங் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பவானி படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அங்கிருந்த மக்கள் பவானியை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

கார் ஓட்டுனர் அதிவேகமாக காரை ஓட்டியதால் விபத்து நடந்திருக்கலாம் என கூறிய பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

பெண்ணை காப்பாற்ற போராடிய இராணுவ சிப்பாய் பரிதாபமாக மரணம்!!

இயற்கையின் சீற்றத்தில் சிக்கிய பெண்ணொருவரை காப்பாற்ற முனைந்த விமானபடை சிப்பாய் உயிரிழந்துள்ளார்.

காலியில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட போது, ஹெலிகப்டரில் இருந்து கீழே வீழ்ந்த நிலையில் காயமடைந்த விமானபடை சிப்பாய் உயிரிழந்துள்ளார்.

வெள்ளத்தில் சிக்கியிருந்த பெண் ஒருவரை கேபிள் உதவியுடன் ஹெலிகப்டருக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட போது விமானபடை சிப்பாய் கீழே விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை விமான படையில் பணியாற்றும் வை.எம்.எஸ்.யாப்பாரத்ன என்ற 38 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துலிஎத்த என்ற தேயிலை தொழிற்சாலையில் சிக்கியிருந்த இரண்டு பெண்களில் ஒருவரை காப்பாற்றிவிட்டு மற்ற பெண்ணை காப்பாற்றுவதற்காக கேபிள் மூலம் கீழே இறங்கும் போதும் அவர் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்துள்ளார்.

பின்னர் வேறு விமான படை உறுப்பினரால் அவர் காப்பாற்றப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பெருக்கெடுத்தது வெள்ளம் : தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நீரில் மூழ்கியது!!

 
தெற்கு அதிவேகப் பாதையின் மூன்று நுழைவாயில்கள் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை தொடக்கம் மாத்தறையின் கொக்மாதுவை நுழைவாயில், களுத்துறையின் வெலிப்பென்ன நுழைவாயில் என்பன வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் வெள்ளி மாலை தொடக்கம் கடுவலை நுழைவாயில் பகுதியையும் வெள்ளம் மூழ்கடித்து, அதிவேகப் பாதைக்கு வாகனங்கள் உட்பிரவேசிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழிகள் ஊடாக அதிவேகப் பாதைக்கு உட்பிரவேசிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மைதானத்துக்கு வரும் ஒவ்வொரு ரசிகர்களும் பாதுகாக்கப்படுவீர்கள் : ஐ.சி.சி!!

சம்பியன்ஸ் கிண்ணத்தை மைதானத்தில் பார்வையிட வரும் ஒவ்வொரு ரசிகர்கள் மற்றும் வீரர்கள் சிறப்பாக பாதுகாக்கப்படுவீர்கள் என சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரோனி பிளானகன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகரில் இடம்பெற் தீவிரவாத தாக்குதல் காரணமாக சம்பியன்ஸ் கிண்ண தொடரின் பாதுகாப்பில் உறுதியற்ற தன்மை காணப்பட்டது.

எனினும் தற்போது பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ரோனி பிளானகன், “ சம்பியன் கிண்ண தொடரை முழு பாதுகாப்புடன் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். போட்டிகளை பார்வையிட வரும் ரசிகர்கள் மற்றும் விளையாடும வீரர்களுக்கான முழு பாதுகாப்பை நாம் வழங்க தயாராகவுள்ளோம்”.

“மென்செஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் நாட்டின் பல பகுதிகளுககும் ஆயுதம் தாங்கிய இராணுவ அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் இன்னுமொரு தீவிரவாத தாக்குதல் இடம்பெறாது அதுமாத்திரமின்றி சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான உயர்தர பாதுகாப்பு வழங்கப்படும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

வடக்கு கிழக்கிலும் காற்றின் வேகம் அதிகரிப்பு!!

இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக் கி சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என கூறியிருக்கும் யாழ்.மாவட்ட வானிலை அவதான நிலையம் மீனவர்கள் மிக மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் சீரற்ற காலநிலை நிலவும் நிலையில் யாழ். மாவட்டத்திற்கு பாதிப்புக்கள் உண்டா என யாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகின்றது. இது மேலும் அதிகரிக்கலாம். இதனால் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதியில் காற்றின்வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.

தரையில் சுமார் 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை இருக்கலாம். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதில் மிக மிக அவதானமாக இருக்கவேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

கின்னஸ் புத்தகத்தில் பத்து சாதனைகளைப் படைப்பதே கனவாக இருந்துள்ளது : விக்னேஸ்வரன்!!

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் குறைந்தது பத்து சாதனைகளையாவது உள் புகுந்த வேண்டும் என்பதே ஆழி குமார் ஆனந்தனின் இளவயது கனவாக இருந்துள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை குமரன் நினைவாக யாழ். வல்வெட்டித்துறையில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நேற்று காலை நாட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இயற்கையின் கோர தாண்டவம் : நூற்றுக்கு மேற்பட்டோர் பலி, 100 பேர் மாயம், 230 பேர் காயம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று அதிகாலையிலிருந்து 24 மணித்தியால காலப்பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேவேளை 230 பேர் காயமடைந்துள்ளதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகவும் , 53000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது மழையுடன் கூடிய காலநிலை குறைவடைந்துள்ள போதும், மத்திய மலைநாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால், அங்கிருந்து வரும் வெள்ளம் காரணமாக களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாய கட்டத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏழு மாவட்டங்களில் அரசாங்கத்தினால் அனர்த்த நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தை விடவும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.

தற்சமயம் நிலவும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிர்களை பாதுகாப்பதும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று நிவாரணம் வழங்குவது பிரதான பணியாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரச நிறுவனங்கள், முப்படையினர், பொலிஸார் இதற்காக இணைந்து செயற்படுகிறார்கள்.

இரத்தினபுரி, காலி, மாத்தறை, கேக்காலை, களுத்துறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காலி மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கேகாலை நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் களுத்துறை மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மாத்தறை மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கண்டி மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவிலும் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய காலநிலை குறைவடைந்தாலும் இரவு நேரத்தில் மீண்டும் மழை பெய்யலாம். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளும் உணவு, மருந்து வகைகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் 450 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

அவசர அனர்த்த நிலைமை தொடர்பில் அறிவிப்பதற்கு 24 மணித்தியால சேவையான 1902 என்ற இலக்கத்திற்கு எந்த இணைப்பிலிருந்தும் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

48 மணித்தியாலங்களில் பாரிய வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கை!!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும், நாளையும் கடும் மழை பெய்யக் கூடும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் அனைத்து கங்கைகளும் நீரில் நிரம்பலாம் எனவும் அதனால் குறித்த கங்கைகளை அண்டிய பிரதேசங்களில் பாரிய வெள்ள நிலைமை ஏற்படும் ஆபத்துக்கள் காணப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவ்வாறான இடங்களுக்கு அருகில் இருப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியைச் சேரந்த வீடுகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது.

வெள்ளபெருக்கு ஏற்படும் ஆபத்துக்கள் உள்ள அனைத்து பிரதேசங்களின் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறும் அந்த பாடசாலைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, தென், சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் பொதுவாக 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்று மழை நேரத்தில் கூடுதல் வேகத்துடன் வீசக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மாலைநேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இன்றும் நாளையும் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அக்குரஸ்ஸ பிரதேசத்தின் தற்போதைய நிலை!!

 
மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ பிரதேசத்தின் தற்போதைய நிலை தொடர்பில் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

குறித்த புகைப்படத்தில் “அக்குரஸ்ஸ” பெயர்பலகை வரை நீர்மட்டத்தின் அளவு உயர்ந்து காணப்படுகின்றது.

இன்று பெய்த அடை மழையினால் இலங்கை முழுவதும் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டதுடன் 91 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

அதிலும் களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

மேலும் இதில் மக்களின் பொதுச்சொத்துக்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் இத்தனை அழிவுகள் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியில் மக்களுடைய வீடுகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.