கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்!!

கொட்டாஞ்சேனை கல்பொத்த பகுதியில் கடந்த 29ஆம் திகதி தொடர்மாடி குடியிருப்பில் 16 வயது மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.

தற்போது இந்த விடயம் பேசுபொருளாகியுள்ளதுடன், justiceforamshi என்ற வாசகமும் தற்போது இணையத்தில் பரவலாக எல்லோராலும் பகிரப்பட்டு வருகின்றது.

மாணவியின் பெற்றொர் முதற்தடவையாக “லங்காசிறி“ ஊடகத்துக்கு முன் வந்து மாணவியின் மரணத்திற்கு காரணம் ,

பின்னனியில் நடந்த விடயங்களையும் தற்போது சமூக ஊடகங்களில் மாணவியின் மரணம் குறித்து பலவிதமாக பேசப்படும் விடயங்கள் தொடர்பாகவும் மனம்திறந்து பேசியுள்ளனர்.

நடந்த உண்மைகளை வெளிப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த மரணத்துடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும் என்ற நோக்கத்திலும் ஒரு

பொறுப்புவாய்ந்த ஊடகமாக லங்காசிறி செய்தி குழுவினர் நாம் இந்த பெற்றோரிடம் உண்மைகளை கேட்டு அவர்களுடைய கருத்துக்களை பதிவு செய்து அவர்களுடைய முழு அனுமதியுடன் ஒரு முழுக்காணொளியாக வெளியிடுகின்றோம். இந்த நேர்காணலை முழுமையாக கீழள்ள காணொளியில் காணலாம்…

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 980,475 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 34,590 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 276,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,710 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 253,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,270 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 242,150 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

 

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்திய விரிவுரையாளர் : அதிர்ச்சியில் பெண்கள்!!

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்தி ஆண் மற்றும் பெண் விரிவுரையாளர்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும் விரிவுரையாளர் ஒருவர் பன்னல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னல பொலிஸ் காவலில் இருந்து குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

வடமேற்கு பல்கலைக்கழகத்தின் உணவு தொழில்நுட்பம் மற்றும் ஊட்டச்சத்து பீடத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்த 34 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பொலிஸார், பி அறிக்கை மூலம் தகவல் வழங்கியுள்ளனர்.

சந்தேக நபர் உட்பட 7 பெண் விரிவுரையாளர்கள் மற்றும் 9 ஆண் விரிவுரையாளர்கள் பயன்படுத்தும் கழிப்பறை அமைப்பில் மின்சார கட்டணங்களுடன் இணைக்கப்பட்டு முகம் கழுவும் தொட்டியின் கீழ் ரகசியமாக பொருத்தப்பட்ட ஒரு சிறிய கமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் விரிவுரையாளர் அதைக் கவனித்து நிர்வாக மேற்பார்வையாளருக்கு தகவல் அளித்த பின்னர், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் மடிக்கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவை வழக்குப் பொருளாக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மறைக்கப்பட்ட கமரா சம்பவம் அம்பலமான நிலையில், பல்கலைக்கழக வளாகத்திலிருந்து தப்பிச் செல்லும் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அபாயம் இருப்பதாக கூறி, சந்தேக நபருக்கு பிணை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டாம் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் சார்பாக ஆதாரங்களை முன்வைத்த வழக்கறிஞர், இந்த விடுதி வளாகத்தில் தற்போது 9 விரிவுரையாளர்கள் வசிக்கின்றனர். அவர்களில் 7 பேர் பெண்கள் என்று சுட்டிக்காட்டினார்.

விரிவுரையாளர்களில் ஒருவர் முகம் கழுவிக் கொண்டிருந்த இடத்தில், தொட்டியின் அடியில் இருந்து கறுப்பு நிற கம்பி தொங்குவதைக் கவனித்ததை அடுத்து, சந்தேகமடைந்து சக விரிவுரையாளரிடம் தெரிவித்ததாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

ஆய்வு செய்ததில், அது வைபை சின்னத்துடன் கூடிய மிகச் சிறிய, உயர் தொழில்நுட்ப கமரா என அடையாளம் காணப்பட்டது. பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வேறு இடத்தில் சேமிக்கப்பட்டுள்ளன.

குறித்த கழிப்பறையை அங்கு பணியாற்றும் விரிவுரையாளர்களின் பிள்ளைகளும் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த வீடியோக்கள் மூன்றாம் தரப்பினருக்கு கசிந்துவிடும் அபாயம் உள்ளதென வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் அவருக்கு பிணை வழங்க முடியாதென கூறிய நீதிபதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

07ஆம் திகதியும் நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!!

புதிய இணைப்பு :  நாளைய தினம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 07ஆம் திகதியும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

20 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ள குறித்த பாடசாலைகளைத் தவிர ஏனைய பாடசாலைகள் வழக்கம் போல நடைபெறும் என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

முதலாம் இணைப்பு :  நாளைய தினம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (05) மற்றும் நாளை(06) ஆகிய இரு தினங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மேலும், எதிர்வரும் 07ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் பரபரப்பு வீதியில் துரத்தி துரத்தி சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன் : வெளியான காணொளி!!

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்கிஸ்ஸ கடற்கரை வீதியில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிப்பதற்காக கிளை வீதியொன்றில் இருந்து பிரதான வீதியை நோக்கி ஓடிய இளைஞனை துரத்தி துரத்தி துப்பாகிதாரி சுட்டுப் படுகொலை செய்துள்ளார்.

அதிகதூரம் ஓட முடியாது தடுமாறி விழுந்த இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றனர். இது தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் தெஹிவளை, ஓபன் பிளேஸில் வசிக்கும் ஒரு இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உயிரிழந்த நபர் நகரசபையின் துப்புரவு பணியில் ஈடுபடும் ஊழியர் என்றும், தெரிவிக்கப்படுகின்றது.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் : மேலும் நான்கு மாணவர்கள் கைது!!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் பல்கலை மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இந்த நால்வரையும் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவர் தனது வீட்டில் உயிர் மாய்த்துக் கொண்டார்.

புஸ்ஸல்லாவை – இஹலகம பகுதியைச் சேர்ந்த சரித் டில்ஷான் என்ற இளைஞன் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சையில் மகன் Fail ஆனதை கொண்டாடிய பெற்றோர்!!

மகன். பரீட்சையில் Fail ஆனதை பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள பசவேஸ்வரா ஆங்கில பாடசாலையில் அபிஷேக் சோழச்சகுடா என்ற சிறுவன் 10 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

சமீபத்தில், பத்தாம் தர பரீட்சைக்கு தோற்றிய நிலையில் சில நாட்களுக்கு முன்பு பரீட்சை முடிவுகள் வெளிவந்தன. எல்லா பாடங்களிலும் சித்திபெறாமல் அபிஷேக் 600இற்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.

இந்நிலையில் மாணவனின் பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. கொண்டாட்டத்தில் அபிஷேக் கேக் வெட்டினார்.

இந்த சந்தர்ப்பத்தில், அபிஷேக்கின் பெற்றோர், ‘நீ பரீட்சையில் மட்டும்தான் தோல்வியடைந்தாய். வாழ்க்கையில் இல்லை. நீ மீண்டும் முயற்சி செய்யலாம். வெற்றிக்கான வாய்ப்பும் உள்ளது” என்று ஊக்கப்படுத்தினர்.

பெற்றோரின் ஆதரவை கண்டு அபிஷேக் கண்ணீர் விட்டார். ‘நான் தோல்வியடைந்தாலும் என் பெற்றோர் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். நான் மறுபடியும் பரீட்சை எழுதுவேன். நான் பரீட்சையில் வெற்றி பெறுவேன். வாழ்க்கையிலும் வெற்றி பெறுவேன் என நம்ப்பிகைட்யுடன் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

ஐ.டி. ஊழியர்களான பெற்றோரின் மூட நம்பிக்கை : 3 வயதுக் குழந்தைக்கு நேர்ந்த துயரம்!!

இந்தியாவில் மூட நம்பிக்கைகியால் உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை பெற்றோரே சாகும் வரை பட்டினி போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி குழந்தை பட்டினி போடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் (35) மற்றும் வர்ஷா ஜெயின் (32) தம்பதி ஐ.டி. ஊழியர்கள். இவர்களுடைய 3 வயது பெண் குழந்தை வியானா மூளை கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆன்மிக தலைவரும் சமண துறவியுமான ராஜேஷ் முனி மகராஜின் ஆலோசனையின் பேரில் ‘சந்தாரா’ வழக்கப்படி குழந்தைக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அந்தக் குழந்தை கடந்த மார்ச் 21-ம் திகதி உயிரிழந்துள்ளது. இந்த சூழ்நிலையில், ‘சந்தாரா’ என்ற சமண சடங்கை சபதம் செய்த உலகின் இளைய நபர் வியானா என்று ‘கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ சான்றிதழ் வழங்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மூளை கட்டியால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் மும்பையில் அறுவை சிகிச்சை செய்துள்ளதனால் குழந்தையின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.

எனினும், கடந்த மார்ச் மாதம் நிலைமை மோசமடைந்துள்ளது. மருத்துவ ரீதியிலான முயற்சி தோல்வி அடைந்ததால், ஆன்மிக தலைவரின் ஆலோசனையைக் கேட்டு சந்தாராவில் ஈடுபடுத்தியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சமண மதத்தில் சந்தாரா அல்லது சல்லேகானா அல்லது சமாதி மாறன் என்ற வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. இது உணவு மற்றும் தண்ணீரை படிப்படியாக கைவிடுவதன் மூலம் தாமாக முன்வந்து இறப்பதற்கான ஒரு மத சபதம் ஆகும்.

இது ஆன்மாவை சுத்திகரிக்கும் ஒரு வழியாக கருதுகின்றனர். இந்த வழக்கம் ஒரு வகையான தற்கொலை என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, கடந்த 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

ஆனாலும், இந்த வழக்கத்தில் சிறார்களை ஈடுபடுத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து, வியானாவின் பெற்றோர் அல்லது ஆன்மிக தலைவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய பிரதேச குழந்தைகள் உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் சிறீ சபாரத்தினம் நினைவு தினத்தினை முன்னிட்டு இரத்ததானம்!!

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

அந்த வகையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 39வது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியா பொதுவைத்தியசாலை இரத்த வங்கியில் இன்றைய தினம்(05) இரத்ததானம் இடம்பெற்றது.

உதிரம் கொடுப்போம் உ யிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் சிறீ தமிழ் ஈழ விடுதலை (சிறீ ரெலோ) இயக்கத்தின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான முகாமில் 15க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

வவுனியா மாவட்டத்தில் 1605 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் : மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்!!

வவுனியா மாவட்டத்தில் 1605 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும், அரச அதிபருமான பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (05.05.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திரமானதும், நேர்மையானதுமான தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஒரு மாநகரசபை மற்றும் நான்கு பிரதேச சபைகளுக்காக 103 பேர் தெரிவு செய்யப்பட்டவுள்ளனர். இதற்காக 1731 பேர் போட்டியிடவுள்ளனர்.

ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 293 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 154 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 1605 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுளனர். 1307 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் வாக்குப்பெட்டிக்கள் அனுப்பிவைப்பு!!

வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிசாரின் பாதுகாப்புடன் இன்று அனுப்பி வைக்கப்பட்டது. நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் வவுனியா மாவட்டத்தில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 154 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள், மற்றும் ஏனைய தேவையான ஆவணங்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து இன்று காலை முதல் அனுப்பி வைக்கப்பட்டது.

பொலிசாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

எங்காவது மாடு ஸ்கூட்டி ஓட்டி பார்த்திருக்கிறீர்களா?

மாடு வீதியில் செல்லும்போது பல்லரும் அஞ்சி ஒதுங்கி போவார்கள் காரணம் மாடும் தம்மை முட்டிவிடும் என்கிற அச்சத்தினால் தான். அப்பாடியான சம்பவங்களும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றது.

இந்நிலையில் மாடு வண்டி ஓட்டி சென்ற காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருகையில்,

இந்தியாவின் உத்தரகாண்டில் இருக்கும் ரிஷிக்கேஷில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மாடு ஒன்று ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கிறது.

ஒரு ஓரத்தில் சென்று கொண்டே இருந்த அந்த மாடு, ஒரு கட்டத்தில் வெள்ளை நிறத்தில் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஸ்கூட்டியை பார்க்கிறது.

அதை கடந்து போக நினைத்து மீண்டும் அதனை பார்த்து மீண்டும் அதனருகில் செல்கிறது. பின்னர் என்ன நினைத்ததோ தெரியவில்லை, அந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு தள்ளிக்கொண்டு பாேய்விட்டது.

பின்னர், சிறிது தூர இடைவேளைக்கு பிறகு அதனை நிறுத்தி வைத்துவிட்டு, அது ஒரு பக்கமாக நடந்து செல்கிறது. ஸ்கூட்டி எங்கே என தேடியவர்கள் சிசிடிவி கேமராவை பார்க்கையில் இதனை கண்டுபிடித்திருக்கின்றனர்.

இதில், ஒரு மாடு சிவனேன்னு ரோட்டில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி, அதனை தள்ளிக்கொண்டு செல்லும் காட்சியை பார்த்து அதிர்ந்து போனார்கள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த வண்டியையும் மாடு யார் மீதும் மோதவில்லை, யாரும் வந்து அந்த மாட்டின் மீது மோதவில்லை. மாடு, ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு போகும் வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.

மன்னார் – யாழ் பிரதான வீதியில் கோர விபத்து : பலர் படுகாயம்!!

மன்னார் – யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து, கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதன் போது பேருந்துக்கு நேர் எதிரே அதிவேகமாக வந்த பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோதியதுடன், வீதியில் உந்துருளியில் நின்று கொண்டிருந்வர் மீதும் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் போது உந்துருளியில் நின்ற நபரும் காயமடைந்ததுடன், அவரது உந்துருளியும் பலத்த சேதமடைந்துள்ளது. விபத்தில் பாரவூர்தியின் சாரதி, உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளதுடன் ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் 09 பேரும் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்கைப் தளத்துக்கு குட் பை சொன்ன மைக்ரோசொப்ட்!!

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் புதிய உச்சங்களை அடைந்து வரும் நிலையில், நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்து வரும் தொழில்நுட்பங்கள் காலாவதி ஆகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ‘ஸ்கைப்’ தளம் இணைந்துள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ‘ஸ்கைப்’ தளத்தை நிறுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் 21 ஆண்டுகளாக பயனாளர்களுக்கு இலவச வீடியோ கால் சேவைகளை வழங்கி வந்த ‘ஸ்கைப்’, தனது சேவையை இறுதியாக நிறைவு செய்ய உள்ளது.

எஸ்டோனியாவை சேர்ந்த 4 மென்பொருள் பொறியாளர்களால் கடந்த 2003-ம் ஆண்டு ‘ஸ்கைப்’ தளம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து வேறு நிறுவனங்களுக்கு கைமாறிய ‘ஸ்கைப்’, கடந்த 2011-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் வந்து சேர்ந்தது.

ஸ்கைப் தளத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 8.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. அதற்கு முன் பயன்பாட்டில் இருந்த ‘விண்டோஸ் லைவ் மெசென்ஜர்’ தளத்திற்கு மாற்றாக ‘ஸ்கைப்’ கொண்டு வரப்பட்டது.

இதற்கு பயனாளர்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. உலகம் முழுவதும் 2023 பிப்ரவரி நிலவரப்படி, தினந்தோறும் 30 கோடியே 60 லட்சம் பேர் ஸ்கைப் தளத்தை பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஸ்கைப் தளத்தின் சேவை நிறுத்தம் செய்யப்படுவதாக வெளியாகி இருக்கும் அறிவிப்பு, அதன் பயனாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைக்ரோசாப்ட் டீம்ஸ்(Microsoft Teams) தளத்தில் கவனம் செலுத்தவும், மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் தங்கள் சேவையை மாற்றியமைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வவுனியா வடக்கு வலயம் உயர்தர பெறுபேறுகளில் வடக்கு மாகாணத்தில் முதலிடம்!!

வெளியாகிய 2024ஆம் ஆண்டு உயர்தரப் பெறுபேற்றில் வடக்கு மாகாணத்தில் வவுனியா வடக்கு வலயம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் 12 கல்வி வலயங்களில் இருந்தும் பரீட்சைக்கு முதல் தடவை தோற்றி சித்தி பெற்றவர்களின் வீதத்தை அடிப்படையாக கொண்டு வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தால் வெளியிடப்பட்ட பகுபாய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் வெளியாகியுள்ளது.

அதன்படி, வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களில் வவுனியா வடக்கு வலயத்தில் இருந்து முதல் தடவையாக 253 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், 189 பேர் சித்தி பெற்றுள்ளனர்.

அந்தவகையில், 74.7 சதவீதமானவர்கள் சித்தி பெற்று வடக்கில் முதலாவது இடத்தை பிடித்துள்ளனர்.

அத்துடன், 73.5 சதவீத சித்தியைப் பெற்று தென்மராட்சி வலயம் இரண்டாம் இடத்தையும், 70.5 சதவீத சித்தியைப் பெற்று மன்னார் வலயம் மூன்றாம் இடத்தையும், 70.1 சதவீத சித்தியைப் பெற்று யாழ்ப்பாண வலயம் நான்காம் இடத்தையும்,

69.8 சதவீத சித்தியைப் பெற்று மடு வலயம் ஐந்தாம் இடத்தையும், 69.4 சதவீத சித்தியைப் பெற்று தீவக வலயம் ஆறாம் இடத்தையும், 68.1 சதவீத சித்தியைப் பெற்று வலிகாமம் வலயம் ஏழாம் இடத்தையும்,

67.8 வீத சித்தியைப் பெற்று வவுனியா தெற்கு வலயம் எட்டாம் இடத்தையும், 65.2 சதவீத சித்தியைப் பெற்று வடமராட்சி வலயம் ஒன்பதாம் இடத்தையும், 62.3 சதவீத சித்தியைப் பெற்று துணுக்காய் கல்வி வலயம் பத்தாம் இடத்தையும்,

60.6 சதவீத சித்தியைப் பெற்று கிளிநொச்சி தெற்கு வலயம் பதினொராவது இடத்தையும், 55.4 சதவீத சித்தியைப் பெற்று கடைசி இடத்தை கிளிநொச்சி வடக்கு வலயமும் பெற்றுக் கொண்டுள்ளது.

தாயாருக்குப் பதில் எட்டு வயதுக்குழந்தையை கைது செய்த பொலிஸார்!!

நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண்ணொருவரைக் கைதுசெய்ய முடியாத நிலையில் அவரது எட்டுவயதுக் குழந்தை பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவம் வெலிஓயா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வெலிஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசமொன்றில் வசிக்கும் பெண்ணொருவருக்கு நீதிமன்றம் மூலம் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் குறித்த பெண்ணின் வீடு தேடிச் சென்ற போது, அவர் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டில் தனிமையில் இருந்த எட்டு வயதுக்குழந்தையை பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து வந்து தடுத்து வைத்துள்ளனர்.

அதன் பின் குழந்தையின் தாயார் வந்து பொலிஸில் சரணடைந்த பின்னரே குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

எனினும் குழந்தையின் தாயார் பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தர்ப்பத்தில் குழந்தை தனிமையில் இருந்த காரணத்தினால் அதன் பாதுகாப்புக்காகவே பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளது.