தாய் இறந்தது தெரியாமல் பால் குடித்த குழந்தை : நெஞ்சை உருக்கும் வீடியோ!!

மத்திய பிரதேசத்தில் தாய் இறந்து போனது கூட தெரியாமல் மார்பில் இருந்து குழந்தை பால் குடித்துக்கொண்டிருந்த வீடியோ நெஞ்சை உருக்கியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் Damoh மாவட்டத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் பெண்மணி ஒருவர் இறந்து கிடந்துள்ளார். தனது தாய் இறந்து போன கூட தெரியாமல், அவரின் 17 மாத குழந்தை தாயின் மார்பில் பால்குடித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே பொலிஸ் கூறியதாவது, இன்று காலை ரயில் டிராக்கில் ஒரு பெண்மணி இறந்துகிடப்பதை சற்று தொலைவில் இருந்து பார்த்தோம், சற்று அருகில் நெருங்கி செல்கையில் அவருக்கு பக்கவாட்டில் அவரது குழந்தை பால்குடித்துக்கொண்டிருந்ததை பார்த்ததும் எங்கள் கண்களில் கண்ணீர் வந்தது.

அந்த பெண்ணின் மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வந்ததால், இது விபத்து என்று நினைக்கிறோம், பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை அனுப்பி வைத்துள்ளோம்.

தற்போது, குழந்தைக்கு சளி பிடித்துள்ளதால் பத்திரமாக கவனித்து வருகிறோம், விரைவில் அப்பெண்ணின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து தகவல் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தையை பாதுகாப்பாக ஒப்படைப்போம் என கூறியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி!!

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் இங்கிலாந்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

உலகின் மிகப்பெரிய விமானம் என்னும் அங்கீகாரத்தினை ‘ஏர்லேண்டர்-10’ விமானம் பெற்றுள்ளது. ஏர்லேண்டர் விமானங்களில் இந்த ‘ஏர்லேண்டர்-10’ மூன்றாவது விமானமாகும்.

பயணிகள் பயன்பாட்டுக்கு இந்த ஏர்லேண்டர்- 10 விமானத்தைப் பயன்படுத்தலாமா என்பது குறித்த சோதனை தற்போது நிகழ்த்தப்பட்டது.

இந்தச் சோதனையில் தன் முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது ‘ஏர்லேண்டர்-10’.

இங்கிலாந்தில் உள்ள கார்டிங்டன் விமானப்படை தளத்தில் இருந்து சோதனை ஓட்டத்துக்கு செலுத்தப்பட்டது விமானம்.

இருபதாயிரம் அடி உயரத்தில் ஐந்து நாள்கள் தொடர்ந்து பறந்து தனது சோதனைப் பயணத்தை சாதனைப் பயணமாக நிறைவு செய்தது ‘ஏர்லேண்டர்’.

ிமானம், ஹெலிகாப்டர், விண்கலம் ஆகியவற்றின் தொழில்நுட்பங்களின் கூட்டுக்கலவையே ‘ஏர்லேண்டர்-10

தற்போது இந்தப் புதிய ரக விமானத்தின் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், பயணிகளுக்கான பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக ‘ஏர்லேண்டர்’ விமானத் தயாரிப்புகளின் முதல் விமானம் அமெரிக்க ,ராணுவத்தின் உளவுத்துறையின் கீழ் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையை ஊடறுக்கும் காலநிலை தொடர்பில் விசேட அறிவித்தல்!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.

நாட்டின் கடல் பிரதேசத்தை சுற்றி மழை மற்றும் காற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழையுடனான காலநிலை நாட்டின் ஊடாக மற்றும் நாட்டை சுற்றி படிப்படியாக ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மன்னாரில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில் இடைக்கிடையே மணிக்கு 60 மற்றும் 70 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று வீசும் போது கடல் பகுதியில் இடைக்கிடையே கொந்தளிப்பு நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அந்த கடல் பிரதேசங்களில் அடைமழை எதிர்பார்க்க முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறு கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் இடைக்கிடையே 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்பதனால் அந்த பிரதேசங்களில் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட கூடும்.

இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

37 வருடங்களின் பின்னர் இலங்கையில் தாயை தேடும் டென்மார்க் பெண்!!

டென்மார்க்கில் வசித்து வரும் பெண்ணொருவர் இலங்கையிலுள்ள தனது தாயை தேடி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

38 வயதான சந்திரா ஹார்ம்ஷன் தனது தாயை தேடி வருவதாகவும், அது தொடர்பான ஆவணங்களை அவர் வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சீலவத்தி காலுஹெதர என்ற பெயர் கொண்ட தாய், கண்டி வைத்தியசாலையில் பிறந்த தனது குழந்தையை, டென்மார்க் தம்பதிக்கு தத்துக் கொடுத்துள்ளார்.

சந்திரா காலுஹெதர என்ற குழந்தை 15.05.1978ம் ஆண்டில் பிறந்துள்ளார். 1979ம் ஆண்டு ஜூலை 27ம் திகதி Birte Andersen மற்றும் Peter Harmsen தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வயது குழந்தையாக டென்மார்க் சென்றுள்ள சந்திராவுக்கு தற்போது 38 வயதாகும் நிலையில், அவரது சொந்த தாய் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் இலங்கை வந்து தனது தாயை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தனது சிறுவயது புகைப்படம், தாயின் புகைப்படம் மற்றும் பிறப்பு அத்தாட்சி சான்றிதழ்கள் என்பவன்றை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

தனது தாய் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் தகவல் அறிவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தீவுக்குள் ஏற்பட்ட அதிசயம் : யாழில் கிடைக்கும் புதுமை!!

 
யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள Hammenhiel கோட்டை நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை மற்றும் காரைதீவு ஆகிய தீவுகளுக்கு இடையிலுள்ள சிறிய தீவு ஒன்றில் Hammenhiel என்ற கோட்டை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

17ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் போர்த்துகீசரினால் சுண்ணாம்பு பயன்படுத்தி கோட்டை நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், 1680ஆம் ஆண்டு டச்சுவினரால் அது கைப்பற்றப்பட்டுள்ளது.

எண்கோண வடிவில் காணப்படும் இந்த கோட்டையில் பல வருடங்களுக்கு முன்னர் ரோஹன விஜேவீர சிறை வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இந்த கோட்டை கடற்படையினரால் நவீன விடுமுறை விடுதியாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடுமுறை விடுதிக்கு சென்று சிறை கைதியின் அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

உடற்பயிற்சி செய்தும் எடையை குறைக்க முடியாததற்கான காரணங்கள் என்ன தெரியுமா?

உடல் எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம். அது ஏன் என்று தெரியுமா…

சமையல் எண்ணெயில் ஒமேகா-6 பேட்டி அமிலம் அதிக அளவிலும், ஒமேகா-3 பேட்டி அமிலம் குறைவான அளவிலும் உள்ளது.

பேட்டி அமிலங்களில் இப்படி ஏற்றத்தாழ்வு இருப்பதால், அதன் காரணமாக உடலினுள் அழற்சி ஏற்பட ஆரம்பிக்கும். எனவே சரிசம அளவில் அத்தியாவசிய பேட்டி அமிலங்கள் நிறைந்த விர்ஜின் ஆலிவ் ஆயிலையோ அல்லது சமையல் எண்ணெயையோ தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்

எண்ணெயில் பொரித்த உணவுகள், பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், பாஸ்ட் புட் உணவுகளில் தான் அதிகம் இருக்கும். இந்த கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புக்கள்.

இவை உடலினுள் சென்றால் நல்ல கொழுப்புக்களின் அளவு குறைந்து, உடலினுள் அழற்சி ஏற்பட்டு, எடை அதிகரிப்பு ஏற்படும்.

பால் பொருட்களை எடையைக் குறைக்கும் போது எடுத்து வந்தால், அதுவே உங்களுக்கு தடையை ஏற்படுத்தும்.

உணவில் சிறிது சர்க்கரையை சேர்த்தாலும் அதனால் நீரிழிவு, பற் சொத்தை மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படும். என்ன தான் நீங்கள் டயட்டில் இருந்து சர்க்கரை சேர்க்காமல் இருந்து, கடைகளில் விற்கப்படும் டயட் சோடாக்கள், ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றைக் குடித்து வந்தாலும், அதில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையினால் உடல் எடையை அதிகரிக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மாட்டிறைச்சிகளில் Neu5Gc என்னும் பொருள் உள்ளது.இந்த வகை உணவுகள் உடல் பருமனை உண்டாக்கும்.

வவுனியாவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு : வீடுகள், வாகனங்கள் பல சேதம்!!

 
வடக்கு, கிழக்கின் சில பகுதிகளில் நேற்று கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் பல வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று பகல் வவுனியாவில் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக சில பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது.

வவுனியா பொலிஸ் நிலைய கட்டிடத்தின் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையால் கட்டிடத்தின் ஒரு பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா – குருமங்காடு பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், திருநாவற்குளம் பகுதியில் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழையினால் அந்த பகுதியிலுள்ள சில வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், அந்த பகுதியில் சில மணிநேரம் மின்சாரமும் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக மக்களிடம் கெஞ்சிய சிறுவன்!!

அமெரிக்காவை சேர்ந்த 6 வயது சிறுவன், வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து சமூக வலைதளத்தில் வீடியோவொன்றை பதிவிட்டுள்ளார்.

முக்கியமாக அமெரிக்காவில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறையை ஒடுக்க மிசூரி, செயின்ட் லூயிஸ் பகுதியை சேர்ந்த Jeffrey Laney என்ற 6 வயது சிறுவனே இவ்வாறு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Jeffrey Laney பேசிய வீடியோவை அவரின் தாய் LeeLee Cheatham தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோவில் Jeffrey Laney பேசியதாவது, ஒருவருக்கொருவர் கொல்லப்படுவதை மக்கள் நிறுத்த வேண்டும், வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டும்.

ஏனென்றால் நான் சாகப்போவது மிகவும் பயமாக இருக்கிறது, என் குடும்பத்தினர் இறந்து போவதை பார்க்க எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.

துப்பாக்கிகள் உட்பட அனைத்து கெட்ட விஷயங்களும் எனக்கு தெரிகிறது. நான் ஒரு குழந்தை, இந்த வயதில் எனக்கு கெட்ட விஷயங்கள் பற்றி தெரியாமல் இருக்க வேண்டும் என கெஞ்சியுள்ளார்.

சமீபத்தில் Jeffrey Laney-யின் உறவினர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதே இதுபோன்ற ஒரு விழிப்புணர்வு வீடியோ வெளியிட தூண்டியதாக Jeffrey Laney-யின் தாய் தெரிவித்துள்ளார்.

பேய் மனிதன் : வீட்டை விட்டு வெளியே வரத் தயங்கும் பரிதாபம்!!

 
பிலிப்பைன்சில் இளைஞன் ஒருவருக்கு அரிய வகை தோல் நோயினால் அவர் தீய ஆவி, பேய் மனிதன் என்று அங்கிருப்பவர்கள் கூறி வருவதால், அவர் மிகுந்த மனவருத்திற்கு உள்ளாகியுள்ளார்.

பிலிப்பைன்சின் Aklan மாகாணத்தைச் சேர்ந்தவர் Antonio Reloj( 26). இவர் பிறக்கும் போதே ichthyosis என்ற நோயின் தாக்கத்துடன் பிறந்துள்ளார்.

இதனால் அவரது தோல்கள் தடித்தும், வெடித்தும் மற்றும் எரிந்த நிலையில் இருப்பது போன்று காணப்படும். இவருடைய கண்கள் பா ர்ப்பதற்கும் பயங்கரமாக இருக்கும்.

இந்த நோயின் தாக்கத்தால் Antonio Reloj பிறந்ததால், அவரது தாய் 12-வயதில் இவரை கைவிட்டுவிட்டர். அதைத் தொடர்ந்து இவரது பாட்டி அவரை வளர்த்து வருகிறார். அவருக்கு நாட்டின் தலைநகரமான Manila-வில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Antonio Reloj-பொழுது போக்கிற்காக அங்குள்ள மார்க்கெட்டுகள் மற்றும் தேவலாயங்கள் போன்ற இடங்களுக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில் அவர் இது குறித்து கூறுகையில், தான் சிறுவயதில் இருக்கும் போது தன்னுடைய தோற்றத்தைக் கண்டு பலரும் இவன் ஒரு பேய் என்று பயந்தனர். அப்போது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் தற்போது அதுவே வினையாக உள்ளது. தன்னை பேய் மனிதன் என்றும் தீய ஆவி என்றும் இங்கிருப்பவர்கள் கூறுவதால், வீட்டை விட்டு வெளியே வருவதற்கே மிகவும் சங்கட்டமான சூழ்நிலை ஏற்படும்.

தனக்கு எலக்டீரிசியன் ஆக வேண்டும் என்பது ஆசை, இதனால் நான் ஒரு மிகச் சிறந்த எலக்ட்ரிசியனாக வருவேன் என்றும் தான் ஒரு மனிதன், தனக்கும் ஆசைகள் இருக்கும் அனைவரும் புரிந்து கொள்ளுங்கள் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் Antonio Reloj பிறந்தவுடனே அவரது தந்தையும் கைவிட்டுவிட்டார், 12-வயதில் அவரது தயாரும் கைவிட்டுவிட்டார்.

இதனால் Antonio Reloj தனக்கு வந்த இந்த நோயினால் மிகவும் வேதனைப்படுவார். வெளியில் வருவதற்கு கூச்சப்படுவார், இதனால் நான் வெளியில் வரமாட்டேன் தன்னை காணவேண்டும் என்றால் நீ வீட்டிற்கு வா, வந்து பார்த்து செல் என்று கூறுவார் என அவரது உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

தற்போது அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் உதவினால் அவன் கூடிய விரைவில் நலமாக முடியும். அதனால் முடிந்த அளவிற்கு யாரேனும் உதவ முன் வாருங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒரே தொலைபேசி அழைப்பில் மாறிய வாழ்க்கை : அசிட் வீச்சு தாக்குதல் பெண்ணின் நெகிழ்ச்சி தருணம்!!

 
அசிட் வீச்சு தாக்குதலில் முகம் முழுவதும் வெந்து போன இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் லலிதா (26), கடந்த 2012ல் லலிதாவின் உறவுகார இளைஞர்கள் சிலர் குடும்ப பகை காரணமாக அவர் முகத்தில் அசிட் வீசியுள்ளனர்.
இதில் லலிதாவின் முகம் முழுவதும் வெந்த நிலையில், அவர் முகத்தில் இதுவரை 17 சத்திர சிகிச்சைகள் நடந்துள்ளன.

ஆனால், தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வந்த லலிதா சில மாதங்களுக்கு முன்னர் தவறுதலாக ஒரு நம்பருக்கு தனது செல்போனிலிருந்து போன் செய்துள்ளார்.

எதிர்முனையில் ராகுல் (27) என்னும் நபர் போனை எடுத்து பேசியுள்ளார். ராங் காலில் ஆரம்பித்த ராகுல், லலிதாவின் நட்பு பின்னர் காதலாக மாறியுள்ளது. வாழ்க்கையில் தனக்கு நடந்த கொடூரமான விடயங்களை பற்றி லலிதா, ராகுலிடம் மனம் திறந்து கூறியுள்ளார்.

அதன் பின்னர் லலிதா-வின் வெளி அழகை பார்க்காத ராகுல், அவர் நல்ல மனதை பார்த்து அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

இதையடுத்து இவர்களின் திருமணம் நேற்று கோலாகலமாக நடைப்பெற்றது. இவர்களின் புனிதமான காதலை அறிந்த இந்தி திரைப்பட உலகின் நட்சத்திரங்கள் பலர் அவர்கள் திருமணத்துக்கு பண உதவி செய்துள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தி திரைப்பட நடிகர் விவேக் ஓப்ராய், லலிதா – ராகுல் திருமணத்தில் கலந்து கொண்டதோடு அவர்களுக்கு அடுக்குமாடி வீடு ஒன்றையும் பரிசளித்துள்ளார்.

திருமணமான மகிழ்ச்சியில் பேசிய லலிதா, எனக்கு திருமணம் ஆகும் என நான் நினைத்தே பார்க்கவில்லை. என் நிலைமையை பற்றி தெரிந்தும் ராகுல் என்னை திருமணம் செய்து கொண்டுள்ளார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ராகுல் கூறுகையில், வாழ்க்கையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய எனக்கு எப்போதும் தோன்றும், லலிதாவை திருமணம் செய்ய என் மொத்த குடும்பமும் எனக்கு துணையாக இருந்தனர்.

ஒரு தவறான அழைப்பால் என் வாழ்க்கையையே மாற்றும் என நான் எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார். ராகுல்- லலிதா தம்பதிகள் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நடிகர் விவேக் ஒப்ராய் வாழ்த்தியுள்ளார்.

ஜெயிலில் இருந்து பிணமாகத்தான் வருவேன் : கண்ணீர் விட்டு அழுத இளவரசி!!

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலாவுடன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசி, தன்னை சந்திக்க வந்த மகள், பேரன்களிடம் தன்னை காப்பாற்றுமாறு கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

பெங்களூரு சிறையில் உள்ள இளவரசியை அவரது மகள் மற்றும் பேரன்கள் சென்று சந்தித்துள்ளனர்.அவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத இளவரசி, ஜெயில்ல இருந்து வரும்போது நான் பிணமாகத்தான் வருவேன்.

இத்தனை வருடம் அவங்களுக்கு சமைச்சுப் போட்டதுக்கும் அவங்க சொன்ன இடத்துல கையெழுத்து போட்டதுக்கும் தான் இப்ப நான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். உடம்பு சரியில்லை, எவ்வளவு நாள் உயிரோட இருப்பேன்னு தெரியவில்லை என கதறி அழுதுள்ளார்.

எனினும், எம்.பி தேர்தலுக்கு பின் வெளியே வந்துவிடுவோம் என சசிகலா உறுதியாக உள்ளதாகவும் இளவரசி கூறியுள்ளார்.

திருமணம் செய்வதாக ஏமாற்றிய காதலன் : காதலி எடுத்த விபரீத முடிவு!!

தமிழ்நாட்டில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து காதலன் ஏமாற்றியதால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், இவர் மனைவி ஜோஸ்பின். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர், மூத்த மகளின் பெயர் ஜெயதேவி (30).

ஜெயராஜும், ஜோஸ்பினும் சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டனர். இதையடுத்து சகோதரிகள் மூன்று பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், ஜெயதேவி வசிக்கும் பகுதியில் இருக்கும் கருணாநிதி (34) என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது. செல்போன் மூலம் காதலை வளர்த்து வந்த இருவரும், பின்னர் தனிமையில் சந்திக்க தொடங்கினார்கள்.

இதனிடையில், ஜெயதேவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய கருணாநிதி அவரிடம் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார்.

இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கருணாநிதியிடம், ஜெயதேவி வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்து ஜெயதேவி பொலிசில் புகார் அளித்ததையடுத்து கருணாநிதியிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனிடையில் தனது வாழ்க்கையை எண்ணி மன வேதனையில் இருந்த ஜெயதேவி, நேற்று காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு அவரின் சகோதரிகள் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி ஜெயதேவி உயிரிழந்தார்.

பின்னர், ஜெயதேவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார், அவர் இறப்பதற்கு முன்னர் எழுதிய உருக்கமான கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையில் ஜெயதேவியை ஏமாற்றிய கருணாநிதியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர் சடலத்தை வாங்க மறுத்து ஜெயதேவியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதை தொடர்ந்து கருணாநிதியை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாயின் அன்பு கிடைக்காமையால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி!!(படங்கள்)

மாணவி ஒருவர் புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் நேற்று மன்னாரில் இடம் பெற்றுள்ளது.

தாயின் நீண்டகால பாசம் இன்றி தொடர்ச்சியாக வேதனைகளை சந்தித்து வந்த மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாய்ந்து குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

உயிரிழந்த மாணவி மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என தெரிய வந்துள்ளது.

தனது சொந்த இடமான முழங்காவில் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற போதே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்த அனர்த்தம் இடம்பெறும் முன்னர் மூன்று பக்கம் அடங்கிய கடிதம் ஒன்றை மாணவி எழுதி வைத்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

முழங்காவில் பகுதிக்குச் சேர்ந்த தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என்ற மாணவி மன்னார் நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.

குறித்த மாணவி முழங்காவிலில் உள்ள தனது கிராமத்தில் இருந்து உடைகள் அடங்கிய பை ஒன்றுடன் மன்னாரில் உள்ள தனது வாடகை வீட்டை நேற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த மாணவி வங்காலை புகையிரத கடவையில் இருந்து மன்னார் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதன்போது மாணவி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மாணவியின் உடலம் அதே புகையிரதத்திலேயே ஏற்றப்பட்டு மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதோடு, யுவதியின் உடமையும் சோதிக்கப்பட்டது.

இதன் போது 3 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரிய வருகின்றது. குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

தனக்கு மட்டும் பல்வேறு சோதனைகளும் வேதனைகளும் ஏற்படுவதாகவும், தனது தாய் தன்னை தனியாக தவிக்க விட்டுள்ளதாகவும், அம்மா அம்மா என்று தான் அன்பாக சென்றுள்ள போதும் கல் நெஞ்சம் கொண்ட அம்மாவாக அவர் நடந்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்காக உள்ளவர்களுடன் சண்டையிட்டு தன்னை அவர்களிடம் இருந்து பிரிக்க நினைப்பதாகவும், தொடர்ந்தும் தனக்கு துரோகம் செய்ய நினைப்தாகவும் குறித்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் தனது வாழ்க்கையில் சந்தோசம் இல்லை இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது குறித்த மாணவியின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயின் அன்பு கிடைக்காமையினால் மாணவியின் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், அனைவர் மனதையும் வேதனை ஏற்படுத்தும் விதமாக மரணம் அமைந்துள்ளது.

மனைவிகள் மிரட்டுவதால் இந்தி நடிகர்கள் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள் : சன்னிலியோன்!!

மனைவிகள் மிரட்டுவதால் இந்தி நடிகர்கள் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள் என்று கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தெரிவித்திருக்கிறார்.

இந்தி பட உலகின் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னிலியோன். இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுபற்றி கூறிய அவர்..

இந்தி நடிகர்கள் என்னுடன் சேர்ந்து நடிக்க பயப்படுகிறார்கள். இதற்கு காரணம் இந்த நடிகர்களை அவர்களுடைய மனைவிமார்கள் மிரட்டி வைத்திருப்பதுதான் என்று கேள்விப்படுகிறேன். அவர்களிடம் உங்கள் கணவர்கள் எனக்கு தேவை இல்லை என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எனக்கு தங்கமான கணவர் இருக்கிறார். அவரை நான் காதலிக்கிறேன். அவர் என் தேவைகள் அனைத்தையும் முழுமையாக, திருப்திகரமாக நிறைவேற்றுகிறார். எனக்கு யாருடைய புரு‌ஷனும் தேவை இல்லை. எனக்கு நடிக்க வேண்டும். அவ்வளவு தான். நான் சேர்ந்து பணியாற்றும் பல நடிகர்கள் திருமணமானவர்கள். அவர்களின் மனைவிகளை சந்திக்கும்போது எங்களிடையே நல்ல நட்பு ஏற்படுகிறது. அப்படி இருந்தும் நடிகர்களின் மனைவிகள் பயப்படுவது ஏன் என்று தெரியவில்லை.

என்றாலும், ஷாருக்கானின் ‘ரபீஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று அழைத்தார்கள். ராங் நம்பரை அழைத்து விட்டார்களோ என்று முதலில் நினைத்தேன். என் மீது நம்பிக்கை வைத்து ஷாருக்கான் என்னுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார்.

ஏலத்திற்கு வருகிறது நீல் ஆம்ஸ்ட்ராங் மண் எடுத்து வந்த பை!!

நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனிலிருந்து மண் எடுத்து வந்த ‘பை’ ஜூலை 12 ஆம் திகதி ஏலத்தில் விடப்படவுள்ளது. அந்த பை சுமார் 25 கோடிக்கு மேல் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாசாவின் அப்பல்லோ- 2 விண்கலம் மூலம் கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக நீல் ஆம்ஸ்ட்ராங், புஷ் ஆல்டிரின் ஆகியோர் சந்திரனுக்கு சென்றனர்.

சந்திரனில் முதன்முதலாகக் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் ஆய்வுகளுக்காக அங்கிருந்து மண், பாறை படிவங்கள் போன்றவற்றை சேகரித்து அவற்றை பையில் எடுத்து வந்தார்.

அதில் 500 கிராம் மண், 12 பாறை படிவங்கள் போன்றவை இருந்தன.

சந்திரனில் 5 பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட இந்த மண் மற்றும் பாறைகள் நினைவுச் சின்னங்களாகக் கருதப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, சந்திரனில் இருந்து மண் எடுத்துவரப்பட்ட பை ஏலத்தில் விடப்படுகிறது.

நியூயார்க்கில் உள்ள சோத்பீ மையத்தில் அந்த பை ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ-2 விண்கலம் சந்திரனில் இருந்து பூமியில் தரை இறங்கிய ஜூலை 20 ஆம் திகதியிலேயே ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கிய சிறுமிகள் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு!(காணொளி)

கார் விபத்தொன்றில் சிக்கிய இரண்டு சிறுமிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.

மெண்டி வைட் (42) என்ற பெண் பொப்பி (5) மற்றும் டெய்லர் (1) ஆகிய தனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்.

ஒரு நாற்சந்திக்கருகில், பக்கவாட்டில் வந்த கார் ஒன்று எதிர்ப்புறம் வந்த மற்றொரு காரின் பின்புறம் மோதியது. மோதுப்பட்ட கார் சுழன்று சென்று எதிர்ப்பக்கம் நடந்து வந்துகொண்டிருந்த மெண்டி வைட் மற்றும் அவரது பிள்ளைகள் மீது மோதியது.

மோதிய வேகத்தில் மெண்டி வீசுப்பட்டு விழுந்தார். அவரது பிள்ளைகள் இருவரும் நிலை தடுமாறி விழுந்தனர். எனினும் தெய்வாதீனமாக மூவரும் எவ்விதக் காயமும் இன்றி உயிர் தப்பினர்.

விபத்து பற்றித் தெரிவித்த மெண்டி, கார் மோதிய வேகத்தில் தனது குழந்தைகள் இருவரும் உடல் நசுங்கியிருப்பார்கள் என்று தாம் பயந்ததாகவும், தெய்வாதீனமாக இருவரும் உயிர் தப்பியதைக் கண்டு தாம் பெரும் ஆறுதல் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.