4 மாத குழந்தைக்கு 6 முறை மாரடைப்பு : அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!!

மும்பையில் 4 மாத குழந்தைக்கு 6 முறை மாரடைப்பு ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளது.

விசாகா மற்றும் வினோத் தம்பதியினருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்ற 45 வது நாளில் குழந்தைக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தைக்கு பரிசோதனை செய்ததில், குழந்தை இதய பாதிப்புடன் தமனிகள் மாறி இருப்பது தெரியவந்ததையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

சுமார் 12 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையடுத்து இதயம் சீரானது, ஆனால் நுரையீரல் செயல்படவில்லை.

தொடர்ந்து குழந்தையின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தொடர்ச்சியாக குறைந்த கொண்டே வந்தது. கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்தது. இதனால், கடந்த 51 நாட்களாக அந்த குழந்தை ஐசியுவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அப்போது அந்த குழந்தைக்கு 6 முறை மாரடைப்பு ஏற்பட்டது, இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

நுரையீரல் செயல்பாட்டுக்கு கொண்டு வர வென்டிலேட்டர் பயன்படுத்தப்பட்டது. தற்போது, தொடர்ந்து அக்குழந்தையின் நுரையீரல் சரியாக இயங்கி வருகிறது.

அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ரூ.5 லட்சம் வரை செலவானதாகவும் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த தொகை மருத்துவமனைக்கு கட்டியதாகவும் அந்த குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நள்ளிரவில் பிரபல வணிக வளாகத்தை சுற்றிவளைத்த கமாண்டோக்கள்!!

 
சென்னை இராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ என்கிற பிரபல வணிக வளாகம் உள்ளது. இன்று நள்ளிரவு 2 மணி அளவில் அந்த ஷாப்பிங் மாலை சுற்றி காவல் துறையின் வாகனங்கள் அரண் அமைத்து நின்றன.

திடீரென்று வந்த ஆயுதம் தாங்கிய கமாண்டோ படையினர், ஷாப்பிங் மாலுக்குள் செல்லும் பாதைகளை மறித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். வெளியே இருந்த பொதுமக்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

அந்நேரம் மாலுக்குள் இருந்து இரவுக் காட்சி சினிமா முடிந்து வெளியே வந்த பொதுமக்கள், கமாண்டோ படையினர் சுற்றி வளைத்து இருப்பதை கண்டு அச்சப்பட்டனர்.

கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை எடுத்துக்கொண்டு வெளியே வரமுயன்ற அவர்கள், மாலுக்குள் ஏதோ விபரீதம் நடக்கிறது என்று நினைத்து, பதற்றம் அடைந்தனர். பின்னர்தான் அது தமிழக காவல் துறை கமொண்டோ பிரிவின் பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை எனத் தெரியவந்தது.

வெளிநாட்டொன்றில் கொடூர தாக்குதல் : இலங்கைப் பெண் மரணம்!!

வெளிநாடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண்ணொருவர் கடுமையான தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

முள்ளந்தண்டு உடைந்தமையினால் எழுந்து நிற்க முடியாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

நொச்சியாகம, கொக்கெனேவ பகுதியை சேர்ந்த சுஜானி ராஜபக்ச என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் கடந்த ஏழாம் திகதி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் குவைத்துக்கு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், அவர் பணியாற்றிய வீட்டில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

பெண் மற்றும் ஆண் ஒருவர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 10 மாதங்கள் எழுந்து நிற்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த வருடம் கடும் தாக்குதலுக்கு உள்ளான சுஜானி, அநாட்டு வைத்தியசாலையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் அவர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு ஒரு மாத கால சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊர்காரர்கள் கைவிட்ட சடலத்தை பாதுகாத்த நாய்!!

கலகா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லெவலன் தோட்ட மணிக்கட்டி பிரிவில் குளவி தாக்குதலில் இறந்த ஒருவரின் சடலத்தை புதைக்காமல் அதனை சில மணிநேரம் கைவிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இறந்தவரின் சடலத்தைக்கொண்டு நேற்றைய தினம் ஊரவர்கள் மயானத்துக்கு சென்றுள்ளனர். இதன்போது மரம் ஒன்றில் இருந்து குளவிகள் களைந்து சென்று சடலத்தை தாங்கிச் சென்றவர்களை தாக்கியுள்ளன.

இதனையடுத்து சடலத்தை தாங்கிச்சென்றவர்கள் அதனை மயானத்திலேயே கைவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். எனினும் நாய் ஒன்று மாத்திரமே அங்கு சடலத்துடன் நின்றுள்ளது.

சம்பவம் இன்று மாலை 4.30க்கு இடம்பெற்ற நிலையில் மீண்டும் 6 மணியளவிலேயே தனித்துவிடப்பட்ட சடலத்தை ஊரவர்கள் சென்று புதைக்கமுடிந்துள்ளது.

சம்பவத்தின்போது 8பேர் வரை காயமடைந்து கலகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிறுவன் ஒருவர், சடலத்தை புதைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து காயமடைந்ததாக தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பொலிஸ் அத்தியட்சகரின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு : 2 நாட்களாக மயங்கி காணப்பட்ட மனைவி!!

அத்­து­ரு­கி­ரிய ஹோகந்­தர ரத்­னா­ராம பிர­தே­சத்­தி­லுள்ள வீடு ஒன்­றி­லி­ருந்து முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சுசந்த டி சில்வா மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். அத்­துடன் அவ­ரது மனைவி மயங்கி கிடந்த­தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ஹோகந்­தர ரத்­னா­ராம வீதியில் அமைந்துள்ள வீடொன்­றி­லி­ருந்து துர்­நாற்றம் வீசு­வ­தாக பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற தக­வ­லுக்­க­மைய குறித்த இடத்­துக்கு சென்று பார்த்­த­போது குறித்த வீட்­டி­லி­ருந்து 68 வய­தான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஒரு­வரின் சடலம் நிர்­வா­ண­மாக மீட்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் மனை­வி­யான 70 வய­தான பெண்ணும் நிர்­வா­ண­மாக வீட்­டினுள் மயங்­கிக்­கி­டந்­த­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

மாலபே ரத்­னா­ராம வீதியின் 5ஆம்­கு­றுக்கு வீதியில் வசித்­து­வந்த சுசந்த டி சில்வா என்ற ஓய்வு பெற்ற பொலிஸ் அத்­தி­யட்­சகரே இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ரெ­னவும், அவ­ரது மனை­வி­யான நிரஞ்­சலா விஜே­சிறி என்ற முன்னாள் ஆசி­ரி­யையே இவ்­வாறு மயங்கிக் கிடந்­த­வ­ரெ­னவும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

நேற்­று­முன்­தினம் அய­ல­வர்கள் குறித்த வீட்­டினுள் இருந்து துர்­மணம் வீசு­வ­தனை அவ­தா­னித்து வீட்­டுக்­க­தவை தட்­டிய போது திறக்­கப்­ப­டா­மை­யினால் அவ்­வீட்டின் தொலை­பேசி இலக்­கத்­துக்கு அழைப்பு விடுத்­த­போதும் பதில் கிடைக்­கா­ததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்­த­போது மேற்­படி தம்­ப­தி­யினர் வீழ்ந்து கிடப்­ப­தனை கண்டு அத்­து­ரு­கி­ரிய பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்­ளனர்.

சம்­பவ இடத்­துக்கு பொலிஸார் சென்று பார்த்­த­போது முன்னாள் பொலிஸ் அதி­கா­ரியின் உடல் துர்­ம­ணத்­துடன் கட்­டி­லுக்கு அருகில் கிடந்­த­துடன் அவ­ரது மனைவி கத­வுக்கு அருகில் மயங்கிக் கிடந்­துள்ளார்.

அதன்­போது பிரேத பரி­சோ­தகர் அப்­பெண்ணின் அருகில் சென்று சத்­த­மிட்­ட­போது அவ­ரது உடலில் அசைவு ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து அவர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு கொண்­டு­செல்­லப்­பட்டார்.

இத்­தம்­ப­தி­யினர் அய­ல­வர்­க­ளு­டனோ உற­வி­னர்­க­ளு­டனோ நெருக்­க­மாக தொடர்பை கொண்­டி­ருக்­க­வில்லை எனவும், ஓய்வு பெற்ற அதி­காரி பாரி­ச­வா­தத்­தினால் பாதிக்கப்பட்­டி­ருந்­த­தா­கவும் இத் தம்பதிக்குப் பிள்­ளைகள் எவரும் இல்­லை­யெ­னவும் தெரி­ய­வந்­துள்­ளது. பொலிஸார் வீட்டில் மேற்­கொண்ட சோத­னைக்­க­மைய வீட்டின் அரை­வா­சிப்­ப­குதி சுத்தம் செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் எவ்­வித தடயப் பொருட்­களும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

இதே­வேளை குறித்த அதி­கா­ரியின் சடலம் மீட்­கப்­பட்ட தினத்­தி­லி­ருந்து இரண்டு நாட்­க­ளுக்கு முன்னர் உயி­ரி­ழந்­துள்ள நிலையில், அவ­ரது மனைவி இரண்டு நாட்­க­ளாக வீட்­டி­னுள்­ளேயே மயங்­கிக்­கி­டந்­தமை பொலி­ஸா­ருக்கு சந்­தே­கத்தை தோற்­று­வித்­துள்­ளது. அத்­துடன் மேற்­படி இரு­வரும் எதற்­காக நிர்­வா­ண­மா­கினர் என்­பது தொடர்­பிலும் சரி­வர தெரி­ய­வ­ர­வில்லை.

வீட்டில் கொள்ளை சம்­ப­வங்கள் எவையும் இடம்­பெற்­ற­தற்­கான சான்­று­களும், சாட்­சி­களும் தென்­பட்­டி­ருக்­க­வில்­லை­யென பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட் டுள்ள பெண் சுய­நி­னை­வுக்கு திரும்பும் வரையில் எவ்­வித தக­வல்­க­ளையும் தெரி­விக்க முடி­யாது எனத் தெரி­விக்கும் அத்­து­ரு­கி­ரிய பொலி ஸார் மேல­திக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் இறகுகள் கொண்ட டைனோசர் இனத்தைச் சேர்ந்தவை!!

சீனாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் குட்டிகளின் எலும்பு படிமங்கள், இறகுகள் கொண்ட புதிய டைனோசர் இனமாக கண்டறியப்பட்டுள்ளது.

‘பேபி லூயி’ என்று பெயர் சூட்டப்பட்ட, முட்டையிலிருந்து வந்த அந்த டைனோசர் குட்டி, டைனோசர் முட்டைகள் அடங்கிய கூட்டிற்குள் இருந்து எடுக்கப்பட்டது.

இந்த டைனோசர் குட்டி, ‘பெய்பெய்லாங் சினென்சிஸ்’ அதாவது சீனாவின் ‘பேபி டிராகன்’ என்று புதை படிமங்களின் நிபுணர்களால் அழைக்கப்படுகிறது.

இறகுகள் கொண்ட டைனோசர் இனத்தைச் சேர்ந்த பறவை போல் தோற்றமளிக்கும் பிரமாண்ட டைனோசர் இனத்தில் கண்டறியப்பட்ட முதல் படிமம் இதுவென தெரிவிக்கின்றனர்.

அந்த டைனோசரின் புதைபடிவம் சிறியதாக இருந்தாலும் அது 1,000 கிலோ எடை வரை வளர்ந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

சீனா, தென் கொரியா, மங்கோலியா மற்றும் வட அமெரிக்காவில் கண்டறியப்பட்ட டைனோசரின் முட்டைகளின் படி பெய்பெய்லாங் இன டைனோசர்கள் சுமார் 100 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1980களின் கடைசி பகுதி மற்றும் 1990களின் ஆரம்ப பகுதிகளில், உள்ளூர் விவசாயிகளால் ஹெனான் மற்றும் சீனாவில் உள்ள பாறைகளில் இருந்து ஆயிரக்கணக்கான டைனோசர் முட்டைகள் சேகரிக்கப்பட்டன.

அதில் மாதிரி படிமங்கள் உட்பட சில முட்டைகள் அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டன.

பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்பகுதிக்காக படம்பிடிக்கப்பட்ட பிறகு அந்த டைனோசர் குட்டியின் எலும்புக்கூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் அது `பேபி லூயி` என்று அழைக்கப்பட்டது.

பிறகு அந்த புதைபடிமம் 2013 ஆம் ஆண்டு சீனாவிற்கு கொண்டு வரப்பட்டு தற்போது அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

முன்னர் கண்டுப்பிடிக்கப்பட்ட டைனோசர் இனத்துடன் இந்த படிமத்தை சீனா மற்றும் கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒப்பிட்டு இது ஒரு புதிய இனம் என்று கண்டறிந்துள்ளனர்.

கடுமையான வறட்சி : நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் பாதிப்பு!!

நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 53 குடும்பங்களில் வாழும் 10 இலட்சத்து 24 ஆயிரத்து 566 பேர் கடுமையான வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள பருவ மழை வீழ்ச்சியினால் நாடளாவிய ரீதியில் தொடரும் வரட்சியான சூழல் குறித்து கேள்வி எழுப்பிய போதே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடக பேச்சாளர் பிரதிப் கொடிப்புலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கால் மேல் கால் போட்டு உட்காருவது ஏன் தவறு?

வீட்டிலோ, பொது இடங்களிலோ சாதாரணமாக சோபாவில், நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது, பேப்பர் படிக்கும் போது, தொலைக்காட்சி பார்க்கும் போது, யாருடனாவது பேசும் போது என பல சமயங்களில் நாம் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்போம்.

முன்பெல்லாம், நமது வீட்டில் தாத்தா, பாட்டி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால், அப்படி உட்காராதே தவறு என கூறுவார்கள். இதை பல சமயங்களில் மரியாதை தவறுதல் என்றும் கூட கூறுவார்கள். ஆனால், இன்றைய உலகில் இது சர்வசாதாரணம்.

ஆனால், சமீபத்திய அறிவியல் கூற்றின் படி, கால் மீது கால் போட்டு அமர்வது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கிறது என ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

பெண்கள்!
ஆண்களை காட்டிலும் பெண்கள் மத்தியில் கால் மீது கால் போட்டு அமரும் வாடிக்கை அதிகமாக இருக்கிறது.
இதை அழகு நயம் வாய்ந்தது அல்லது பெண்பால் உடல்மொழி என்பது போன்ற மனப்பான்மை உருவாகும் அளவிற்கு பெண்கள் அதிகமாக கால் மீது கால் போட்டு அமர்கிறார்கள்.

ஒரே நிலையில்!
கால் மீது கால் போட்டு அல்லது கால்களை மடக்கி ஒரே நிலையில் பல மணி நேரம் அமர்ந்திருத்தல் ஆழப் பெரோன்னியல் நரம்பு (peroneal nerve ) எனும் பாரலசிஸ் உண்டாக காரணியாக அமைகிறது.

முக்கியமாக கால்களை குறுக்காக, கால் மீது கால் போட்டு அமரும் போது இது உண்டாக நிறைய வாய்ப்புகள் உள்ளன.

2010 ஆய்வு
கடந்த 2010-ம் ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் கால் மீது கால் போட்டு நீண்ட நேரம் அமர்வது உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்க காரணியாக இருக்கிறது.
மேலும் இரத்த அழுத்தம் சார்ந்த வேறுசில உடல்நல குறைபாடுகள் ஏற்படவும் இது காரணியாக இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இது உடல் முழுவதும் சீரான முறையில் செல்லும் இரத்த ஓட்டத்தை தடை செய்து, ஆரோக்கியத்தை சீர்குலைய செய்கிறது.

இரத்த ஓட்டம்!
கால் மீது கால் போட்டு உட்காருவதால், கீழ் உடலை விட மேல் உடலில் அதிக இரத்த சுழற்சி உண்டாகிறது.
இதனால் இதயம் அதிகமாக இரத்தத்தை பம்ப் செய்கிறது.
இது இரத்த அழுத்தம் உண்டாக முக்கிய காரணியாக திகழ்கிறது.

இடுப்பு நிலை
நீண்ட நேரம் கால் மீது கால் போட்டு அமர்வது, இடுப்பின் சமநிலையை பாதிக்கிறது. இதனால், தசை சார்ந்த பிரச்சனைகளும் உண்டாகலாம். மூட்டு வலி அதிகமாகலாம்.

ஸ்பைடர் வெயின்!
சிலந்து போல நரம்புகள் கால்களில் தென்படுவதை ஸ்பைடர் வெயின் என்பார்கள்.
கால் மீது கால் போட்டு அதிக நேரம் உட்காருவதால் இந்த ஸ்பைடர் வெயின் பிரச்சனை உண்டாகலாம்.

மூன்று மணிநேரம்
ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நீங்கள் கால் மீது கால் போட்டு உட்காருவதால். முதுகு வலி, கழுத்து வலி, இடுப்பில் அசௌகரியமான உணர்வு போன்றவை உண்டாகிறது.

எனவே, முடிந்த வரை இனிமேல் கால் மீது கால் போட்டு அமர்வதை தவிர்த்துவிடுங்கள்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் 4 பேர் பலி!!

பொலன்னறுவை, பெந்திவெவ பகுதியில் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

குறித்த 4 பேரும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலங்கள் இன்றைய மரண விசாரணைக்காக பொலன்னறுவை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

ரஜினியின் 2.0 -பாகுபலியை விட பெரிதல்ல : கோபால் வர்மா!!

ரஜினி நடிப்பில் உருவாகும் 2.0 திரைப்படம், பாகுபலியை விட பெரிதான படமல்ல என்று ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ள பாகுபலி படத்தை தமிழகத்தில் ராஜராஜன் வெளியிட்டுள்ளார். விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது பாகுபலி 2.

இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்கள் பலரும் பாகுபலி 2 படத்துக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளார்.

இது குறித்து இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஹிந்தி, தமிழ், தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள் பாகுபலி 2 படத்தின் வெற்றி கர்ஜனையிலிருந்து தப்பிக்க தங்களது காதுகளை மூடிக் கொண்டுள்ளனர்.

யானை போன்ற படம் வரும்போது பிற இயக்குனர்கள் நாயை போன்று குரைக்கின்றனர். ஆனால் பாகுபலி 2 டைனோசர் போன்றது. அதனால் நாய், புலி, சிங்கம் என அனைத்தும் ஓடி மறைந்து கொண்டன.

எஸ்.எஸ். ராஜமெளலி இந்திப் பட உலகின் கான்கள், ரோஷன்கள், சவுத்திரிகளை விட பெரியவர்.
பாகுபலியை விரும்பும் அனைத்து இந்திய மக்களும் ராஜமெளலியை போன்ற வைரத்தை கண்டறிந்ததற்காக கரண் ஜோகரனின் காலைத் தொட வேண்டும்.

இனி இந்திய சினிமா பாகுபலிக்கு முன் பாகுபலிக்கு பின் என்று பார்க்கப்படப் போகிறது. ராஜமெளலியின் பாகுபலி 2-வின் தாக்கத்தை கண்டு ஹிந்தி திரையுலகம் நடுங்கியுள்ளது. பாகுபலி 2 படத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலம் பாலிவுட் திரையுலகினர் முகத்தில் ராஜமெளலி அறைந்திருக்கிறார்.

வித்தியா வழக்கை கொழும்புக்கு மாற்ற வேண்டாம் : மக்கள் போராட்டம்!!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு வித்தியா பாலியல் வன்புணர்வு கொலை வழக்கு விசாரணையானது யாழ்.மேல் நீதிமன்றில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது ரயலட்பார் முறையில் யாழ்.மேல் நீதிமன்றிலேயே இடம்பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி புங்குடுதீவு பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நேற்று மேற்கொண்டிருந்தனர்.

இதன்படி புங்குடுதீவு கந்தசாமி கோவிலடியில் இருந்து எதிர்ப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகள் தாங்கியவாறு பேரணியாக நடந்து புங்குடுதீவு 11 வட்டாரம் ஆலடி சந்திவரை சென்றிருந்தனர்.

பின்னர் அப் பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி கவனீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்இ குறித்த மாணவியின் கொலை சம்பவம் இடம்பெற்ற இடமானது யாழ்ப்பாண மேல் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியாக உள்ள நிலையில் தற்போது எதற்காக இவ் வழக்கு கொழும்பு நீதிமன்றுக்கு மாற்றப்பட வேண்டியுள்ளது.

இவ் செயற்பாடனாது யாழ்.மேல் நீதிமன்றின் நீதித் தன்மையை கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும் இம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் இடம்பெற்றதும் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த ஜனாதிபதி குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் விஷேட நீதிமன்றம் அமைத்து நீதி வழங்குவதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது குறித்த வழக்கை கொழும்புக்கு மாற்றுவதானது ஜனாதிபதி கூறிய வாக்குறுதியை மீறுகின்ற செயற்பாடெனவும் குறிப்பிட்டிருந்தனர்.

எனவே ஜனாதிபதி கூறியது போன்று யாழ்ப்பாணத்திலே குறித்த விஷேட நீதிமன்றத்தை அமைத்து திருகோணமலை யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலுள்ள தமிழ் நீதிபதிகளை நியமித்து இவ் வழக்கை விசாரணை செய்து தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் இம் மக்கள் இதன்போது தெரிவித்திருந்தனர்.

அத்துடன் குறித்த வழக்கு விசாரனையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றக்கூடாது என்ற தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினை இப் பகுதி மக்கள் அதில் கையெழுத்திட்டு அம் மகஜரினை வடமாகண ஆளுநர்இ ஜனாதிபதிஇ பிரதம நீதியரசர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் மக்கள் தெரிவித்திருந்தனர்.

வவுனியா வடக்கில் முழுநிலா கலைவிழா!!

 
வடக்கு கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம் நடாத்தும் முழு நிலா கலை விழா இன்று (11.05.2017) வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

வவுனியா வடக்கு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் வ.ஸ்ரீஸ்கந்தராசா தலைமையில் இடமபெற்ற இந் நிகழ்வில் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பிரதேசத்தினை சித்திரிக்கும் ஊர்திகளும் வலம் வந்திருந்தன.

வவுனியா நெடுங்கேணி முருகன் ஆலயத்தில் அதிதிகளுக்கு மாலை அணிவித்து ஊர்திகள் சகிதம் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு மைதானத்தில் ஆரம்பமான நிகழ்வுகளில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராசா, ஆர்.இந்திரராசா, செ. மயூரன் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் 77ஆவது நாளாக தொடரும் போராட்டம்!!

 
வவுனியாவில் கடந்த 77 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (11.05.2017) 77ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

தீர்வு கிடைக்கும் வரை சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் எட்டாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களின் தொடர் போராட்டம்!!

 
வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்கள் கடந்த 04.05.2017 பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்து இன்று (11.05.2017) எட்டாவது நாளாகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றனர்.

யுத்த்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாம் கடமையாற்றி பல உயிர்களை காப்பாற்றிய எங்களுக்கு நியமனம் இல்லையா?, நீண்ட காலமாக சேவை ஆற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா?, வெயில் மழை பாராமல் ஊதியம் இல்லாமல் கடமை ஆற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா?, வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்திய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா? என பல்வேறு பதாதைகளை தாங்கியபடி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை போராட்டத்தினை தொடரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 8 பேர் பலி, 20 பேர் காயம்!!

சீனாவின் வடமேற்கு பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சின்ஜியாங் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப் பதிவாகியுள்ளது.

இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் சில இடிந்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.

180 வீடுகள் வரை சேதமடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடத்தில் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்தில் கடுகதி புகையிரதம் இராணுவ வாகனத்தை மோதியது!(படங்கள்)

சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்தில் இருந்து இருநுாறு மீற்றர் துாரத்தில் சில மணி நேரங்களுக்கு ( 1.30 மணியளவில்) ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இன்ரசிற்றி ரயில் மீது வேகமாக வந்துகொண்டிருந்த இராணுவ வாகனம் மோதியதில் இராணுவத்தை சேர்ந்த ஒருவர் பலத்த காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.