மரணிக்க தயாராக இருக்கிறேன் : 145 வயது முதியவரின் நெகிழ்ச்சியான பகிர்வு!!

 
இந்தோனேஷியாவில் வசித்து வரும் உலகின் பழைய மனிதர், தான் மரணிப்பதற்கு தயாராக இருக்கின்றபோதும், மரணம் என்னை நெருங்க மறுக்கிறது என கூறுகிறார்.

இந்தோனேஷியாவில் வசித்து வரும் Mbah Gotho, 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி பிறந்தார். இவருக்கு தற்போது வயது 145.

இவர் இந்தோனேஷியாவின் பழைய மனிதர் மட்டுமின்றி, உலகின் பழைய மனிதர் என்ற வரிசையிலும் இடம்பிடித்துள்ளார்.

இவருக்கு 4 மனைவிகள், 10 குழந்தைகள் இருந்துள்ளனர், இவரின் மனைவியர் மற்றும் குழந்தைகள் அனைவரும் இறந்துவிட்டனர், கடைசி மகன் 1988 ஆம் ஆண்டு உயிரிழந்தான்.

இந்நிலையில் இவர் தனது பேரக்குழந்தைகள், கொள்ளு பேரக்குழந்தைகளுடன் தனது வாழ்நாட்களை கழித்து வருகிறார்.

தனது வாழ்க்கை குறித்து இவர் கூறியதாவது, எனது பேரக்குழந்தைகள் யாரையும் சார்ந்து வாழ்பவர்கள் கிடையாது, எனவே அவர்கள் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள்.

நான் தற்போது கூட மரணிப்பதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால் மரணம் என்னை நெருங்க மறுக்கிறது.

24 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1992 ஆம் ஆண்டு எனக்கு கல்லறை கட்டி வைக்கப்பட்டது. ஆனால் காலங்கள் கடந்துவிட்டபோதிலும், கல்லறை அப்படியே இருக்கிறது, என்னால் தான் இறக்கமுடியவில்லை என கூறியுள்ளார்.

இவரது பேரக்குழந்தைகளில் ஒருவர் கூறியதாவது, எனது தாத்தா எப்போதும் ரேடியோ அருகில் அமர்ந்துகொண்டு நாட்டு நடப்புகளை பற்றி தெரிந்துகொள்வார்.

அவருக்கு கண்பார்வை சரியாக தெரியாத காரணத்தால், தொலைக்காட்சி பார்க்க இயலாது, அவரது விருப்பபடியே அவருக்கு கல்லறை கட்டி வைக்கப்பட்டுள்ளது.

தனது வேலைகளை அவராகவே கவனித்துகொள்வார். கடந்த 3 மாதங்களால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் குளிப்பதற்கு கூட சிரமப்படுகிறார் என கூறியுள்ளார்.

145 வயது வரை வாழ்ந்துள்ளீர்களே, அதன் ரகசியம் என்ன என்று இந்த முதியவரிடம் கேட்டால், அதற்கு அவர் கூறிய ஒரு வார்த்தை பதில் “பொறுமை”.

பேஸ்புக் ப்ரீமியம் தொலைக்காட்சி சேவை விரைவில்!!

 

சமூக வலைத்தளங்களின் அரசனாக தொடர்ந்து விளங்கிவரும் பேஸ்புக் ஆனது தொடர்ந்தும் பல சேவைகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இவற்றின் தொடர்ச்சியாக Premium TV Shows எனும் மற்றுமொரு சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

இதன்படி இச் சேவையானது அடுத்தமாதம், அதாவது ஜுன் மாத நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சேவை இரண்டு வகையாக வழங்கப்படவுள்ளது. அவற்றில் ஒன்று நீண்ட நேரம் கொண்ட ஒளிபரப்பு, சந்தா பெறுமதி அதிகமானது.

மற்றொன்று ஒளிபரப்பு நீளம் குறைந்தது, சந்தா பெறுமதி அதிகமானது.

சுமார் இரண்டு பில்லியன் பயனர்களைக் கொண்ட பேஸ்புக் வலைத்தளத்தின் இந்த முயற்சியானது முன்னணி வீடியோ தளங்களான யூடியூப், Netflix, மற்றும் Amazon Video என்பவற்றிற்கு பெரும் போட்டியாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சம்பியன் தொடரில் விளையாட அணிக்கு திரும்பும் மலிங்க!!

இங்கிலாந்தில் நடக்கும் சம்பியன் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்துவோம் என்று இலங்கை அணிக்கு திரும்பியுள்ள வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் வரும் ஜுன் மாதம் 1-ஆம் திகதி சாம்பியன் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தங்கள் நாட்டு அணியின் வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் இலங்கை அணிக்கு வலு சேர்க்கும் வகையில் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இலங்கை அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 2015 நவம்பருக்கு பிறகு தற்போது ஒரு நாள் தொடருக்கு திரும்பியுள்ளேன். இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இங்கிலாந்தில் இத்தொடர் நடப்பதால், மிகவும் சிறப்பானதாக அமையும். எங்கள் குழுவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா போன்ற பலம் வாய்ந்த அணிகள் உள்ளன.

அதனால் போட்டிகள் கடுமையாக இருக்கும். இருந்த போதிலும் தங்கள் அணியிலும் சிறப்பான வீரர்கள் இருப்பதால், சாம்பியன் டிராபி தொடரில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் 2015-ஆம் ஆண்டு நவம்பருக்கு பின் ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணிக்கு திரும்பும் மலிங்கா, சாம்பியன் டிராபி தொடரில் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கணவனின் தொண்டையை விடாமல் கடித்த சிங்கம் : காப்பாற்ற மனைவி செய்த தந்திர செயல்!!

பிரான்சில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது கணவரை சிங்கம் கடித்து குதறிய போது, அவரது மனைவி உடனடியாக ஸ்பிரே அடித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு பிரான்சின் Doullens பகுதியில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதே போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையும் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது சிங்கம் தொடர்பான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பயிற்சியாளர் Loberot-ம் உடன் இருந்தார்.

அப்போது திடீரென்று அந்த சிங்கம் பயிற்சியாளரை தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கிழே விழுந்தார். இதனால் அவரின் தொண்டை பகுதியை சிங்கம் கடித்து குதறியது.

தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக சிங்கத்துடன் போராடினார். அப்போது திடீரென்று ஒரு பெண் சர்க்கஸி இருந்து தீயனைப்பு பாதுகாப்பு உபகரணம் (தீ அணைப்பான்) கொண்டு கேஸ் ஸ்பீரே அடித்தார்.

இதைக் கண்டு பயந்த சிங்கம் உடனடியாக பயிற்சியாளரை விட்டு அங்கிருந்து ஓடியது. பெரிதும் பாதிப்புக்குள்ளான பயிற்சியாளர் Loberot உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், இருந்த போதிலும் காயங்கள் பெரிய அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பயிற்சியாளர் Loberot-ஐ காப்பாற்றியது அவரது மனைவி தான் என்றும் இருவரும் ஒரே சர்க்கஸில் தான் பணிபுரிகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலு எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் சமார்த்தியமாக செயல்பட்டு தன் கணவனின் உயிரை அவர் காப்பாற்றியுள்ளார் என்று சமூகவலைத்தளங்களில் பலர் கூறி வருகின்றனர்.

திருநங்கை படைத்த சாதனை : விருது வழங்கப்பட்டு கெளரவம்!!

இந்தியாவில் முதன்முறை திருநங்கை பொறியியல் பட்டதாரி என்ற வகையில் சிறப்பிடம் பிடித்துள்ள திருநங்கை கிரேஸ் பானுவுக்கு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் இளம் சாதனை திருநங்கை -2017 என்ற விருது அளிக்கப்பட்டது.

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி தொடங்கியது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்திருந்தனர்.

இதையடுத்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், மிஸ் கூவாகம் அழகிப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனிடையே இளம் சாதனை திருநங்கை விருது, முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியான கிரேஸ் பானுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்கு ஆதரவான போராட்டங்களிலும், சமூக அநீதிக்கு எதிரான போராட்டங்களிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் கிரேஸ் பானு.
இந்த விருதை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியுடன் இந்த கவுரவத்துக்கு நன்றி தெரிவித்துள்ள கிரேஸ் பானு தனது பேஸ்புக் பக்கத்தில், லட்சக்கணக்கான மூத்த திருநங்கைகள் மற்றும் இளைய திருநங்கைகள் முன்னிலையில் எனக்கும் என்னுடைய சமூக செயல்பாடுகளுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வண்ணம் இளம் சாதனை திருநங்கை -2017″ என்ற விருதை வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.

எத்தனையோ அங்கீகாரங்கள் விருதுகள் நமக்கு கிடைத்தாலும் நாம் யாருக்காக போராடுகிறோமோ அவர்கள் நம்மை அங்கீகரிக்கும் மனம் யாருக்கும் வராது என் சமூகமே என்னை ஊக்குவித்து இந்த விருதை வழங்கியது மாபெரும் அங்கீகாரமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

இளைஞரின் தலையை துண்டாக வெட்டி காவல் நிலையத்தில் வீசிச் சென்ற நபர்கள் : அதிர்ச்சி வீடியோ!!

இளைஞரின் தலையை துண்டித்து, காவல் நிலையத்தில் வீசிச் சென்ற நபர்களின் செயல் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கடலூர் மாவட்டம், ரெட்டிசாவடி பகுதியில் இளைஞரின் தலை துண்டித்து காவல்நிலையம் முன்பு வீசப்பட்டுள்ளது.

இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் இளைஞரின் தலையை துண்டாக கொலை செய்து எடுத்து வந்து காவல் நிலையத்தில் வீசிச் செல்கின்றனர்.

கொலை செய்யப்பட்டவரின் உடல் புதுச்சேரி மாநிலம் பாகூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் 25 வயது மதிக்கத்தக்கவர் என தெரிய வந்துள்ளது.

சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து தலையை வீசி சென்ற கொலையாளிகள் யார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பேஸ்புக் ஊடாக பணம் கொள்ளையடித்த பெண்!!

தான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழக்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரிடம் பெண் ஒருவர் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய பெண் ஒருவரே இவ்வாறு மோசடி நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினர், கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பேஸ்புக் ஊடாக முறைப்பாட்டாளர், எக்பல் சால்ஸ் என்ற பெண்ணுடன் அறிமுகமாகி நட்புறவு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

தனது கணவர் சிரியா யுத்தத்தில் உயிரிழந்ததாகவும், அவருக்கு சொந்தமாக 9.4 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் பணம் உள்ளதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்த பணத்தில் 65 வீதத்தை நல்ல விடயங்களுக்காக பயன்படுத்தவுள்ளதாகவும், மிகுதி 35 வீதத்தை தனக்கு என்றும் 5 வீதத்தை செலவிற்காக பயன்படுத்தவுள்ளதாகவும் குறித்த பெண் முறைப்பாட்டாளரிடம் கூறியுள்ளார்.

தான் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மரணிக்கும் நிலையில் உள்ளதனால் அந்த பணத்தை ரோயல் ஸ்கொட்லேன்ட் வங்கியிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அந்த பணத்தை பெற்றுக் கொள்வதற்காக 1200 அமெரிக்க டொலர் பணத்தை தான் வழங்கும் வங்கி கணக்கில் வைப்பு செய்யுமாறும் குறித்த பெண் முறைப்பாட்டாளரிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய முறைப்பாட்டாளர் குறித்த பணத்தை வைப்பு செய்த போதிலும் அவருக்கு பணம் கிடைக்கவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுவான ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த ஜனக பிராஷாந்த என்பவரே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த முறைப்பாட்டாளராவார்.

பணம் வைப்பு செய்த வங்கி மற்றும் அந்த பணத்தை பெற்றுக் கொண்ட நபர் தொடர்பில் சீ.சீ.டீ.வி காணொளி ஊடாக விசாரணை மேற்கொள்வதற்கு பொலிஸார் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளனர்.

அதற்கு அனுமதி வழங்கிய நீதவான் விரைவாக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இரு வாரங்களில் கடுமையான மழை பெய்யக்கூடும் : திணைக்களம் தகவல்!!

அடுத்து வரும் இரு வாரங்களில் கடுமையான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 25ம் திகதியின் பின்னர் பருவப் பெயர்ச்சி மழை பெய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அதுவரையில் தற்போது நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் வறட்சியான காலநிலை நீடிக்கும் எனவும், சிறியளவில் சில பகுதிகளில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கிடையில் ஐஸ் கட்டி மழை எதிர்பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசுவமடுவில் 19 வயது மாணவன் பலி : எலிக்காய்ச்சல் என சந்தேகம்!!

முல்லைத்தீவில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவன் ஒருவர் சிகிச்சைக்கு பலனின்றி உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள விசுவமடு, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எம்.சதீஸ்குமார் என்பவரே காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு பலனின்றி கடந்த திங்கட்கிழமை இறந்துள்ளார்.

இந்த மரணத்திற்கு எலிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே கீழ் குறிப்பிடப்படும் அறிகுறிகள் காணப்படும் போதும் உடனடியாக வைத்தியசாலையை நாடி உரிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி சுகாதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எலிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளாக காய்ச்சல், உடல் உளைச்சல், அல்லது உடல் நோதல், தலையிடி, உடல் களைப்பு, அல்லது உடல் அலுப்பு, போன்ற அறிகுறிகளுடன் கண் சிவத்தல், சத்தி (வாந்தி) கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீர் வெளியேறுவது குறைதல் ஆகிய நோய் அறிகுறிகள் இருக்கலாம்.

ஆனால் சில நோயாளிகளுக்கு எந்தவொரு குண குறியும் தென்படாது. எனவே உடனடியாக வைத்தியசாலையை நாடி உரிய சிகிச்சையை பெறவேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்துகின்றனர்

மோடியின் பாதுகாப்புக்காக இலங்கை வந்த கறுப்புப் பூனைகள்!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக கறுப்புப் பூனை கொமாண்டோ படையினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ஹட்டன் டிக்கோயா வைத்தியசாலையை இந்திய பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். இதற்காக இந்திய விமான படையின் எம்.ஐ.17 உலங்கு வானூர்திகள் இரண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்திய பிரதமரின் பாதுகாப்புக்காக 600 பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, நாளை இந்தியா நோக்கி செல்லவுள்ளார். இந்திய பிரதமர் இலங்கையில் 23 மணித்தியாலங்கள் மாத்திரமே தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து செல்வதற்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன், இந்திய பிரதமர் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலின் போது காணாமல் போனோர், வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது , தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களின் விடுதலை தொடர்பிலான விடயங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனித இனத்தை போன்ற மற்றுமொரு இனம் பூமியில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு!!

மனிதப்பரிணாம வளர்ச்சி குறித்த நம் தற்போதைய புரிதலில் பெரிய அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது. சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதர்களின் மூதாதையர், வேறொரு ஆரம்பகால மனிதர்களோடு ஆபிரிக்காவில் வாழ்ந்ததற்கான புதைபடிம ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ஹோமோ நலெடி என்றழைக்கப்படும் இந்த மனித இனம், நவீன மனித இனம் பூமியில் தோன்றுவதற்கு முன்பே அழிந்துவிட்டதாக முன்பு கருதப்பட்டது. தற்போதைய கண்டுபிடிப்பு அந்த கருத்தை மாற்றியமைத்திருக்கிறது.

நியோ என்று பெயரிடப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டின் உதவியுடன் ஆய்வாளர்கள் இதை செய்துள்ளனர்.

மண்ணில் புதையுண்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட இந்த எலும்புகளைக்கொண்டு ஹோமோ நலெடி என்கிற மனித இனம் 230,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கணக்கிட்டுள்ளனர்.

முன்பு நினைத்ததைவிட இவர்கள் வாழ்ந்த காலம் நவீனமனிதர்களுக்கு நெருக்கமானது.

தென் ஆபிரிக்காவின் இந்த பகுதியில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள இந்த மனித இனமும் நவீன மனிதர்களின் மூதாதையர்களும் ஒன்றாக வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அந்த பகுதியின் குகைகளுக்குள் விஞ்ஞானிகள் இந்த புதிய மனித இனத்தின் எலும்புக்கூடுகளை கண்டெடுத்தனர்.

நிலத்துக்கு அடியில் 30 மீட்டர் ஆழத்தில் பாறை இடுக்குகளில் புகுந்து கும்மிருட்டில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட ஆய்வாளர்கள், நூற்றுக்கணக்கான எலும்புகளையும் பற்களையும் அங்கே கண்டெடுத்தனர்.

மனித மூதாதைய இனத்தவர் இறந்தவர்களை இங்கே புதைத்திருக்கக்கூடும் என்பதை இந்த சான்றுகள் குறிப்புணர்த்துகின்றன. அத்தகைய சடங்குகளுக்கான முதல் சான்றாக இது பார்க்கப்படுகிறது.

அவர்கள் இரண்டு கால்களில் நடந்தனர். ஆரஞ்சுபழ அளவிலான சிறிய மூளையைக்கொண்டிருந்தனர்.

முன்பு கண்டறியப்படாத குகைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நியோவின் எலும்புக்கூடு எதிர்கால ஆய்வுக்கான திசையை காட்டுகிறது.

நவீன மனிதர்கள் இந்த பூமியில் வேறு யாரோடெல்லாம் வாழ்ந்தார்கள் என்பதற்கான மேலதிக தரவுகள் இந்த ஆபிரிக்க நிலத்திற்குள் புதையுண்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தற்போதைய மனித இனத்தின் தொழில்நுட்பம், உபகரணங்கள், மரபுகள் போன்றவை நமக்கும் முன்பே இந்த பூமியில் வாழ்ந்தவர்களுடையவையாக இருக்கலாம் என்கிற சாத்தியத்தை இந்த புதிய கண்டுபிடிப்புகள் குறிப்புணர்த்துகின்றன.

Source: BBC

லிபிய கடற்பரப்பில் சிக்கியுள்ள குடியேற்றவாசிகளில் 350 பேர் மீட்பு!!

லிபிய கடற்பரப்பில் சிக்கியுள்ள குடியேற்றவாசிகளில் 350 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். லிபிய கடற்பிராந்தியத்தில் இருந்து இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் 350 பேரும் மீட்கப்பட்டு திரிபோலிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் கடற்படையினரும் அரச சார்பற்ற நிறுவனத்தின் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டுனீசியா, மொரோகோ, சிரியா, எகிப்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களே சப்ரதா நகரிலிருந்து 17 மைல் தொலைவில் மீட்கப்பட்டதாக லிபிய கடற்படை அதிகாரி அபோ அகில அப்டல்பெரி தெரிவித்துள்ளார்.

தாம் சப்ரதா நகரிலிருந்து 9 ஆம் திகதி பயணித்ததாக புகலிடக் கோரிக்கையாளர்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

கடற்பயணம் மூலம் ஐரோப்பாவினுள் பிரவேசிப்பதற்கான பிரதான மார்க்கமாக லிபியா காணப்படுவதால் அபாயகர கடற்பயணம் மேற்கொள்ளும் சட்டவிரோத புலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

2016 ஆம் ஆண்டில் இவ்வாறு கடல்பயணம் மூலம் 181,000 பேர் லிபியாவிற்குள் பிரவேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோடி பய­ணிக்கும் பாதை­களில் பொதுப் போக்­கு­வ­ரத்­துக்கு தடை!!

சர்­வ­தேச வெசாக் நிகழ்வை முன்­னிட்டு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்கு இன்று விஜயம் செய்­ய­வுள்ள நிலையில் கொழும்பு நகரில் இன்று மாலையும் நாளை முற்­ப­கலும் வேளை­யிலும் பல வீதிகள் மூடப்­ப­ட­வுள்­ளன. இந்­திய பிர­தமர் பய­ணிக்கும் பாதை வழியே அவர் பய­ணிக்கும் சமயம் வேறு எந்த நபரும் பய­ணிக்க அனு­ம­தி­ய­ளிக்­காத நிலையில் கொழும்பின் பல வீதிகள் இதன்­போது மூடப்­ப­ட­வுள்­ளன.

குறிப்­பாக கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தின் ஒரு பக்க ஒழுங்கை, பேலி­ய­கொடை முதல் பேஸ் லைன் வீதி ஊடாக பய­ணித்து தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரை­யி­லான வீதிகள் மற்றும் அப்­பி­ர­தான வீதி­க­ளுடன் இணையும் அனைத்து ஒழுங்­கை­களும் ஒவ்­வொரு கால நேரத்தில் முற்­றாக பொது போக்­கு­வ­ரத்து தொடர்பில் மூடப்­ப­ட­வுள்­ளன.

இது தொடர்பில் விசேட போக்­கு­வ­ரத்து திட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­வுள்­ளது. இன்று மாலை 6 மணி முதல் குறிப்­பிட்ட நேரங்­களில் குறிப்­பிட்ட பகு­தி­களை உள்­ள­டக்­கி­ய­தாக இந்த விசேட போக்­கு­வ­ரத்தும் பாதை மூடும் நட­வ­டிக்­கை­களும் இடம்­பெறும் என பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

அதன்­படி இந்­தியப் பிர­தமர் பய­ணிக்கும் பிர­தான வீதி­களும் அத­னுடன் இணையும் ஏனைய உள் வீதி­களும் இந்­திய பிர­தமர் மோடி பய­ணித்து முடியும் வரை முழு­மை­யாக மூடப்­படும் என்று அவர் சுட்­டிக்­காட்­டினார். இன்று மாலை 6.00 மணிக்கு கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டையும் மோடி, அங்­கி­ருந்து அதி­வேக பாதை ஊடாக கொழும்பு நக­ருக்குள் பிர­வே­சிக்க உள்ளார். அதன்­படி மூடப்­ப­ட­வுள்ள வீதி­களின் விப­ரங்கள் வரு­மாறு,

இன்­றைய தினம் மூடப்­படும் வீதிகள் பி.ப. 6.15 மணிக்கு – கட்­டு­நா­யக்க அதி­வேக வீதி, பேலி­ய­கொட, பொரளை பேஸ்லைன் வீதி, டி.எஸ் கல்­லூரி போக்­கு­வ­ரத்து ஒளி சமிக்ஞை சந்தி, கிரீன் பார்க், தாமரைத் தடாகம், பொது­நூ­லக சுற்­று­வட்டம், ஆனந்த குமா­ர­சு­வாமி மாவத்தை, மல் வீதி, பித்­தளை சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கங்­கா­ராம எல்லை வரை பொதுப் போக்குவரத்து தொடர்பில் தடைச் செய்­யப்­ப­ட­வுள்­ளது.

பி.ப. 07.15 மணிக்கு – கங்­கா­ராம எல்­லை­யி­லி­ருந்து நவம் மாவத்தை, உத்­த­ரா­னந்த மாவத்தை, முகம்­மது மாக்கான் மார்க்கார் மாவத்தை, காலி முகத்­திடல் சுற்­று­வட்டம், தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரையில் போக்குவரத்து தடைச் செய்­யப்ப்­ட­வுள்­ளது.

பி.ப. 08.20 மணிக்கு – தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் இருந்து காலி முகத்­திடல் வீதி, ரவுண்­டா­னாவில், என்.எஸ்.ஏ சுற்­று­வட்டம், ஜனா­தி­பதி மாளிகை வரை­யிலும் பி.ப. 10.30 மணிக்கு – ஜனா­தி­பதி மாளி­கை­யி­லி­ருந்து என்.எஸ்.ஏ சுற்­று­வட்டம், காலி முகத்­திடல் வீதி ஊடாக தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரை­யிலும் வீதிகள் முழு­மை­யாக மூடப்­ப­ட­வுள்­ளன.

நாளைய தினம் மு.ப. 09.05 மணிக்கு – தாஜ் சமுத்ர ஹோட்டல், காலி முகத்­திடல் சுற்­று­வட்டம், கொள்­ளுப்­பிட்டி சந்தி, லிபர்ட்டி சந்தி, பித்­தளை சந்தி, செஞ்­சி­லுவை சந்தி, பொது நூலக சுற்­று­வட்டம், க்ளாஸ்­ஹவுஸ் சந்தி, நந்தா மோட்டார்ஸ், சுதந்­தி­ர­ச­துக்க சுற்­று­வட்டம், சுதந்­திர மாவத்தை, பௌத்­தா­லோக மாவத்தை, மெட்லாந்ட் பிளேஸ் சந்தி, பௌத்­தா­லோக மாவத்தை ஊடாக பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­டபம் வரை வீதி மூடப்­ப­ட­வுள்­ளது.

மு.ப. 10.50 மணிக்கு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம், பௌத்தாலோக மாவத்தை, ஜாவத்தை சந்தியால் இடதுபக்கம் திரும்பி, ஜாவத்தை வீதி, கெப்பட்டிபொல சந்தியால் வலது பக்கம் திரும்பி கெப்பட்டிபொல மாவத்தை ஊடாக பொலிஸ் மைதானம் வரை வீதி மூடப்படவுள்ளது.

இசை மட்டும் போதாது : புதிய முயற்சியில் இறங்கிய ஏ.ஆர்.ரகுமான்!!

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் லீமஸ்க் என்ற படத்தை விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் இயக்கி வருகிறார். அவரே இசை அமைக்கும் இந்த படம் ரோம் நகரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இசை அமைப்பாளராக சாதனை படைத்து ஒஸ்கார் விருதை வென்ற ஏ.ஆர்.ரகுமான், ஹொலிவுட்டிலும் இசை அமைத்தார்.

இப்போது இயக்குனர் ஆகி இருப்பது குறித்து பேசிய ஏ.ஆர்.ரகுமான்,
“25 வருடங்களுக்கு முன்பு ‘ரோஜா’ படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆன போது எப்படி இருந்தேனோ இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன்.

அப்போது மணிரத்னமும், என்னுடைய குடும்பத்தாரும் மட்டும் தான் எனக்கு ஆதரவாக இருந்தனர். இப்போது பலருடைய ஆதரவு எனக்கு இருக்கிறது. இந்த படம் புதிய தொழில் நுட்பத்தில் உருவாகிறது. இது ஒரு புதிய சோதனை முயற்சி.

இந்த வி.ஆர்.தொழில்நுட்பத்தை மக்கள் எப்படி ரசிக்கப் போகிறார்கள் என்பதில்தான் எனது எண்ணம் இருக்கிறது. படம் பற்றிய கருத்துக்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.
பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்கள் எடுக்க இங்கு பல இயக்குனர்கள் இருக்கிறார்கள்.

என்னிடம் 200 கோடி பட்ஜெட் எல்லாம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இன்னொரு படத்தையும் ஏ.ஆர்.ரகுமான் இயக்குகிறார்.
இது ‘வி.ஆர்.மூவி பேஸ்’ என்ற புதிய முறையில் இந்திய நடனம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படமாக உருவாகிறது.

கிங் கங்கையில் மூழ்கி இரண்டு மாணவர்கள் பலி!!

கிங் கங்கையில் நீராடச் சென்ற 14 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை 07 மாணவர்கள் இணைந்து கிங் கங்கையில் குளிப்பதற்காக கிந்தொட்டை பாலத்தை அண்மித்த ஆற்றுப் பகுதிக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் இரண்டு பேரை நீரலையில்இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில் சுழியோடிகளின் உதவியுடன் இருவரினது சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இரண்டு பேரும் காலி பொத்தல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வாழைச்சேனை முரதானை கலப்பில் நீராடிக் கொண்டிருந்த 20 வயது இளைஞர் ஒருவர் முதலை பிடித்துச் சென்றதில் உயிரிழந்துள்ளார்.

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் வீட்டுத் திட்டம் வழங்குவதில் இழுபறி நிலை!!

 
வவுனியா சமணங்குளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒருபகுதி மயிலங்குளம் கிராமசேவகர் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கையை வீடமைப்பு அதிகாரசபை மேற்கொண்டதாக நேற்றைய தினம் ஆச்சிபுரம் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக வீட்டுத் திட்டம் வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டதுடன், பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், அபிவிருத்தி உத்தியோகத்தருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

யுத்தம் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்து மக்கள், நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டனர். 2000 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட ஆச்சிபுரம் கிராமத்தில் 365 குடும்பங்கள் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் ஆச்சிபுரம் கிராமத்திலுள்ள மக்களுக்கு வவுனியா பிரதேச செயலத்தினூடாகவே காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டது. வீடமைப்பு அதிகார சபையினூடாக 2017 ஆம் ஆண்டு 136 வீடுகள் ஆச்சிபுரம் கிராமத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அருள்குமார், ஆச்சிபுரம் கிராமம் வீடமைப்பு அதிகார சபையினால் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி மயிங்குளம் கிராம சேவகர் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அபிவிருத்தி உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இப்பிரச்சனை தொடர்பாக கருத்து தெரிவித்த ஆச்சிபுரம் கிராமத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அருள்குமார், வீடமைப்பு அதிகார சபையின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே ஆச்சிபுரம் கிராம மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

குறித்த கிராமத்தை இரண்டாக பிரித்துள்ள போதிலும் வீடில்லாத பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் வீடுகள் எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
தனியாக பிரிக்கப்பட்டுள்ள கிராம மக்களுக்கு உடனடியாக 50 வீடுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆச்சிபுரம் கிராம மக்கள் கருத்து தெரிவிக்கையில், 136 வீடுகள் தமது கிராமத்திற்கு வழங்கப்பட்டுள்ள விடயம் நேற்று மாலையில் அறிவிக்கப்பட்டது. அத்துடன், எமது கிராமம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

எல்லைக் கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களுக்கு இவ்வாறான நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், இவ்வாறு கிராமத்தை திடீரென இரண்டாக பிரிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அத்துடன் சிங்கள கிராமமான மயிலங்குளத்துடன் ஆச்சிபுரக் கிராமம் இரண்டாக பிரிக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தமக்கு வேதனையளிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளன.