மின்னேரிய அருகே இன்று (01.05.2025) மாலை நடைபெற்ற பாரிய விபத்தொன்றில் இருவர் உயிரிழந்து, 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். மின்னேரிய – ஹபரணை பிரதான வீதியில் ராணுவ முகாம் ஒன்றின் முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எதிரெதிராக வந்த இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் காரணமாக இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் 30 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மின்னேரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள முட்டை விற்பனை நிலையத்தில் பாடசாலை உட்பட பலருக்கு பழுதடைந்த முட்டை விற்பனை செய்ததாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையை நேற்று (30.04.2025) மாலை மேற்கொண்டனர்.
இதன்போது பொது சகாதார பரிசோதகர்களால் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகளும் மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.
வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் இயங்கி வரும் முட்டை விற்பனை நிலையத்தில் இருந்து பாடசாலை மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் பழுதைடைந்த நிலையில் கணப்பட்டதாக வவுனியா பொது சுகாதர பரிசோதகர்களுக்கு கிடைத்த 3 முறைப்பாடுகளையடுத்து குறித்த வர்த்தக நிலையம் மீது சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது பாவனைக்கு உதவாத முறையில் முட்டை விற்னை செய்ததாக குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், அதிகளவலான முட்டைகளும் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டன.
வவுனியா நகரத்தில் சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இருவர் வவுனியா பொலிசாரால் நேற்று (30.04.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா யாழ்வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வாகனம் ஒன்றில் வந்த இருவர் உணவுப்பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.
குறித்த வாகனத்தினை சுகாதார பரிசோதர்கள் பரிசோதனை செய்ய முற்பட்டபோது விற்பனையாளர்களினால் அவர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சற்றுநேரம் குழப்பநிலை ஏற்ப்பட்டது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகில் தின்பண்டங்களை விற்பனை செய்வதனால், உணவில் நச்சுவாயுக்கள் கலக்கும் சந்தர்ப்பம் ஏற்படுவதுடன் அந்தபகுதியில் கழிவுநீர் வழிந்தோடும் கால்வாயும் காணப்படுகின்றது.
எனவே இவ் வாகனத்தை வேறு பகுதிக்கு எடுத்துச் சென்று அங்கே விற்பனை செய்யுமாறு சுகாதார பரிசோதகர்களால் தெரிவிக்கப்பட்ட போதும் விற்பனையாளர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.
இதனை அடுத்து சுகாதார பரிசோதகர்களால் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசார் குறித்த இருவரினையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பிரான்ஸ் பரிஸ் Le Bourget ரயில் நிலையத்தில் இடம்பெற்றதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த 24 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார். பிரான்ஸில் வதிவிட உரிமை மறுக்கப்பட்டதால், இளைஞன் மனஉளைசலுக்குள்ளாகி இந்த விபரீத முடிவை எடுத்ததாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பெரும்தொகை பணத்தை செலவு செய்து கனவுடன் வெளிநாடு சென்ற இளைஞர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பிரான்ஸ் வாழ் தமிழர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் மே மாதம் முதல் பல ஐபோன் மொடல்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக செயலி இனி இயங்க மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஐபோன் 5s, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் போன்ற ஐபோன் மொடல்கள் உள்ளிட்ட பழைய ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக வலையமைப்பு இனி இயங்க மாட்டாது.
இந்நிலையில், iOS 15.1இற்கு முன்பு இருந்த மொபைல் போன் மொடலை புதிய இயக்க முறைமைக்கு புதுப்பிக்க முடியாவிட்டால், வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாத்தறை, வெலிகம பகுதியில் பேருந்து ஒன்றில் பயணி ஒருவர் மறந்துவிட்டு சென்ற பயணப்பையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் ரூபாய் பணத்துடனான பையை கண்டெடுத்த இளைஞன், அதனை உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
அளுத்கம பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் பணிபுரிந்த ஒருவர், வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக மாத்தறை-கொழும்பு பேருந்தில் ஏறி, பின்னர் ரத்கம பகுதியில் இறங்கியிருந்தார்.
அப்போது அவரிடம் இருந்த கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் கொண்ட பணப்பையை அவர் பயணம் செய்த பேருந்தில் மறந்து விட்டு சென்றுள்ளார்.
இதனை அவதானித்த பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவர் அதனை பெற்று, அது குறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
பின்னர், பணப் பையின் உரிமையாளரை தொலைபேசி அழைப்புகள் மூலம் கண்டுபிடித்த இளைஞன் உரிமையாளரின் அடையாளத்தை உறுதிசெய்து, அதனை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த முன்மாதிரியான செயலுக்காக பணப் பையின் உரிமையாளர் அந்த இளைஞருக்கு பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் வழங்கியுள்ளார்.
எனினும் அந்த இளைஞன் அதை மறுத்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பண நெருக்கடியாக காலத்தில் இந்த இளைஞனின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
நேற்று முன்தினம் (28.04.2025) இரவு கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி வந்த அரச பேருந்தில் இருந்து ஒரு நபர் தவறுதலாக கீழே விழுந்த பின் அந்த நபரையும் உடன் வந்த நபரையும் இடையிலே விட்டுவிட்டு அரச பேருந்து ஒன்று சென்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, குறித்த பேருந்தில் இரு நண்பர்கள் கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணம் செய்துள்ளனர்.
இரு நண்பர்களும் பயணத்தை மேற்கொண்ட போது இரு நண்பர்களில் ஒருவர் தவறுதலாகவோ அல்லது வேறு காரணத்தாலோ கீழே விழுந்து உள்ளார். அதனை அவதானித்த உடன் வந்த நண்பர் பேருந்தை நிருத்துமாறு சத்தம் எழுப்பியுள்ளார்.
இருப்பினும், அந்த சத்தம் சாரதிக்கு கேட்காத நிலையில் பின் பயணிகளின் கோரிக்கைக்கமைய நடத்துனர் இணங்க பேருந்தை சுமார் 1km தூரத்திற்கு அப்பால் பேருந்தை நிருத்தியுள்ளார்.
சிறிது நேரத்தின் பின்னர் காலை 1:30 மணி அளவில் விழுந்த நபரையும் அவரின் நண்பரையும் இடையிலே விட்டுவிட்டு பேருந்து புறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக உடன் வந்த பயணிகள் அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு செல்லுமாறு சாரதியையும் நடத்துனரையும் கேட்ட போது அவர்கள் பயணிகளின் கருத்துக்கு இணங்கவில்லை.
மேலும் குறித்த பேருந்து யாழ்ப்பாணம் கொழும்பு என அடையாளப்படுத்தி இருந்தும் ஆனால் வவுனியா மட்டும் தான் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறான குழப்பத்தால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர் மற்றும் பேருந்தில் வந்த சாரதிக்கும் நடத்துனர்க்கும் தமிழ்மொழி தெரியாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.
அமெரிக்காவில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் மனைவி மற்றும் மகனை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், தானும்(கணவர்) துப்பாக்கியால் சுட்டு தவறான முடிவை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் கர்நாடக பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் கிகாரி (வயது 57) அவரது மனைவி சுவேதா பன்யம் (வயது 44) மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர், 2017ம் ஆண்டு ஹர்ஷ்வர்தன் மனைவியுடன் சேர்ந்து ஹாலோ வால்ட் என்ற ரோபோர்ட்டிக் நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். ஹர்ஷ்வர்தன் குடும்பத்துடன் நியூகேஸ்டல் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 24ம் திகதி ஹர்ஷ்வர்தன் தனது வீட்டில் மனைவி சுவேதா மற்றும் மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு மகன் வெளியே சென்றிருந்த நிலையில் மற்றொரு மகனையும், மனைவியையும் ஹர்ஷ்வர்தன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார், 3 பேரின் உடல்களையும் பெற்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
குருநாகல் பிரதேசத்தில் கவனக்குறைவாக இயக்கப்பட்ட தனியார் பேருந்தில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் காயமடைந்த நிலையில் அவரது இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் இரண்டு 15 வயதான தருஷ தனஞ்சய நிருஷன் ரத்நாயக்க மற்றும் அவரது சகோதரரான ஜனிந்து சாமோத் ரத்நாயக்க என்பவர்களே உயிரிழந்துள்ளனர்.
அனுஷா குமாரி என்ற 45 வயதான தாயார் பலத்த காயமடைந்து குருநாகல் போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 27ஆம் திகதி குருநாகல்-கொழும்பு வீதியின் குருநாகல் மணிக்கூண்டு கோபுரத்திற்கு முன்னால் நான்கு வழி சந்திப்பில் அதிகாலை 4.50 மணியளவில் விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பேருந்தின் ஓட்டுநர், குருநாகல் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
55 வயதான தனியார் பேருந்தின் சாரதியான ஜயதிலக பண்டார என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் விசாரணையில், பேருந்து அதிவேகமாகவும், பொறுப்பற்ற முறையிலும் இயக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை வெளிநாட்டில் உள்ள நிலையில் விபத்து குறித்து பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டில் உள்ள மனைவியை அச்சுறுத்த தன்னுடைய 12 வயதான மகளின் கழுத்தை அறுத்த, அவருடைய தந்தை, தனது கழுத்தையும் அறுத்து கொண்ட சம்பவம், தியத்தலாவ, கொஸ்லாந்த பெட்டிக்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தன்னுடைய மனைவிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தபோது, இருவருக்கும் இடையில், கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 29ஆம் திகதியன்று ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே, 12 வயதான மகளின் கழுத்தை அறுத்த பின்னர், தன்னுடைய கழுத்தையும் அறுத்து கொண்டுள்ளார்.
கடுமையான காயங்களுக்கு உள்ளான இருவரும், தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என லியங்காவல பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் இடம்பெற்ற போது, ஆறு வயதான சிறுவனும் வீட்டில் இருந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக, ஒரு வருடத்துக்கு முன்னர், அவருடைய மனைவி வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
அதன்பின்னர், இவ்விருவருக்கும் இடையில், தொலைபேசியில் அவ்வப்போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளான தந்தை, மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பண்டாரவளை லியங்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.
45 வயதுடைய பெண்ணொருவர் கடத்தப்பட்டு, முச்சக்கர வண்டி மற்றும் வீட்டிற்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வெலிபென்ன பொலிஸார் ஐவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாட்டின்படி, திங்கட்கிழமை இரவு 8:50 மணியளவில் கல்மட்டை நகரில் உள்ள 05வது போஸ்ட் சந்திப்பில் பேருந்தில் இருந்து இறங்கிய பின்னர் இனந்தெரியாதோர் கடத்தியுள்ளார்.
முச்சக்கர வண்டியில் வந்த மூன்று ஆண்கள் தன்னை வலுக்கட்டாயமாக முச்சக்கர வண்டிக்குள் இழுத்துச் சென்று, முச்சக்கர வண்டிக்குள் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் சந்தேக நபர்கள் தன்னை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர்கள் தொலைபேசி மூலம் மேலும் இருவரைத் தொடர்பு கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
பின்னர் இரண்டு ஆண்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார்கள். சந்தேக நபர்களில் நான்கு பேரை அடையாளம் கண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 19, 23, 24 மற்றும் 38 வயதுடைய சந்தேக நபர்கள் மீகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள், மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் எனத் தெரிவித்த வெலிபென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலையில் இருந்து இடைவிலகிய தனது அண்ணாவினாலேயே நான் இந்த நிலையை அடைந்தேன் என உயிர் முறைமை தொழில்நுட்ப பிரிவில் வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி ச.ருக்சிகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வெளியான கா.பொ.த உயர்தர பரீட்சையில் உயிர்முறைமை தொழில்நுட்பப் பிரிவில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி சந்திரசேகரன் ருக்சிகா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதில் உயிர்முறைமை தொழில்நுட்பப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த சைவப்பிரகாச மகளிர் கல்லூரி
மாணவி சந்திரசேகரன் ருக்சிகா 2ஏபி சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 134 ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவி கருத்து தெரிவிக்கையில், எனது பாடசாலை அதிபர் மற்றும் எனக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றிகள். எந்த நேரத்திலும் நாம் சந்தேகங்களை கேட்டாலும் ஆசிரியர்கள் எமது சந்தேகங்களை தீர்த்து வைத்தனர்.
அதனால் தான் இந்த இடத்தில் நிற்கின்றேன். வேறு மொழி பரீட்சை வினாத்தாள்களையும் ஆசிரியர்கள் கற்பித்தனர். பெற்றோரின் ஆதரவும் முக்கியமானது. எனது அப்பா விவசாயம் தான் செய்கிறார்.
என்னை சாதாரண தரத்தில் இருந்து படிக்க வைத்தது எனது அண்ணாதான். அண்ணா சாதாரண தரத்துடன் தனது படிப்பை நிறுத்திக் கொண்ட போதிலும் நான் படிக்க வேண்டும் என நினைத்து வேலைக்கு போய் என்னை படிக்க வைத்தான்.
அண்ணா இல்லை எனில் நான் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ஹட்டனில் இருந்து தனது கடமைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு காரில் பயணித்த செவிலியர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள நோர்வூட் கெண்தகொல்ல தோட்டம் பகுதியில் இன்று (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
காருக்கு முன்பாக பயணித்த தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது, எதிர் திசையில் வந்த லொறியில் மோத முயன்ற நிலையில் காரை தேயிலைத் தோட்டத்தை நோக்கி திருப்பியுள்ளார்.
இதன் போது அவரது கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த பெண் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் ஜக்தியால் மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரசன்னா. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி திருப்பதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு வயதில் ஒரு மகன் உள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே கணவனுக்கு மனைவி நடத்தை மீது சந்தேகம் . இதனையடுத்து பிரசன்னா தனது மனைவி லட்சுமி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி அடித்து கொடூரமாக துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் லட்சுமி தனது வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்து மகனை கவனித்து வந்தார். மேலும் மொத்த வரதட்சணை தொகையை கொடுக்கவில்லை எனக் கூறி திருப்பதியின் தாய் தொடர்ந்து லட்சுமியை துன்புறுத்தி வந்தார்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த லட்சுமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஜாகித்யாவில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் வீட்டு கண்ணாடியில் அம்மா அப்பா நான் வாழ விரும்பவில்லை.
கவனமாக இரு மகனே. தயவு செய்து என் மகனை அவர்களிடம் கொடுத்து விடாதீர்கள் என எழுதிவிட்டு லட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் லட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் திருப்பதி மற்றும் அவரது பெற்றோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷிர்புர் தாலுகா பகுதியில் வசித்து வருபவர் கிரண் மாங்களே. இவர் ஓய்வு பெற்ற துணை ராணுவ அதிகாரி ஆவார். இவருக்கு 24 வயது திருப்தி என்ற மகள் உள்ளார்.
இவர் புனே மாவட்டத்தில் வசித்து வரும் அவினாஷை காதலித்து வந்தார். இந்நிலையில் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் நீண்ட நாட்களாக தனது பெற்றோருடன் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் திருப்தி தனது கணவருடன் ஜல்காவ் மாவட்டத்தில் நடந்த உறவினரது திருமணத்தில் கலந்து கொண்டார். அவருடைய தந்தையும் அந்த திருமணத்திற்கு வந்திருந்தார்.
அப்போது திருப்தி கணவருடன் இருந்ததை கண்டு கோபமடைந்த கிரண் ஆத்திரத்தில் தனது மகளை கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டார்.
திருப்தியை காப்பாற்ற முயற்சி செய்த அவரது கணவரையும் சுட்டுக்கொன்றார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் ராணுவ அதிகாரி கிரண் மீது சராமாரி தாக்குதல் நடத்தினர்.
இந்த தகவல் அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் உயிரிழந்த திருப்தி மற்றும் அவரது கணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த கிரண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், திருப்தி ஒரு எம்பிபிஎஸ் பட்டதாரி. அவிநாஷ் வெறும் 12ம் வகுப்பு முடித்து தொழிலாளியாக இருந்தது தான். கிரண் மங்களே ஓய்வுபெற்ற அதிகாரியாக இருந்ததால்,
அவருக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தார். இந்த தற்காலிக கோபத்தில் பயங்கரத் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கனடாவில் ஒட்டாவாவில் கடந்த 3 நாட்களாக இந்திய மாணவி மாயமானதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் காணாமல் போன இந்திய மாணவி வான்ஷிகா சடலமாக மீட்கப்பட்டதாக இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 25 அன்று இரவு வாடகை அறை பார்ப்பதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்ட வான்ஷிகா, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரது தொலைபேசி இரவு 11:40 மணிக்கு அணைக்கப்பட்டதோடு, மறுநாள் நடைபெறவிருந்த முக்கியமான தேர்வையும் தவற விட்டார்.
அவருடைய குடும்பத்தினரும், நண்பர்களும் தீவிரமாக தேடியும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தற்போது உள்ளூர் போலீசார் மரணத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வான்ஷிகாவின் மரணம் கனடாவில் இந்திய சமூகத்தை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், 21 வயதான இந்திய மாணவி ஹர்சிம்ரத் ரந்தாவா, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தவறுதலாக உயிரிழந்தார்.
அதேபோல், ஒட்டாவா அருகே ராக்லேண்ட் பகுதியில் மற்றொரு இந்தியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது. இந்த வகைத் தாக்குதல்கள் கனடாவில் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சனைகளை முன்னிறுத்தியுள்ளது.
வான்ஷிகாவின் மரண விவகாரம் குறித்து அதிகாரிகளிடம் எடுத்துச் செல்லப்பட்டு இருப்பதாக இந்திய தூதரகம் மரணத்திற்கான காரணம் குறித்து உள்ளூர் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வான்ஷிகாவின் குடும்பத்தினரும், இந்திய சமூகமும் நியாயத்திற்காக குரல் கொடுத்து வருகின்றனர். இந்திய தூதரகம் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.