இலங்கையில் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதியில்லை : விலை நிர்ணயம் தொடர்பில் வெளியான தகவல்!!

இலங்கையில் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதியில்லை என அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் இராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலக சந்தையைக் கருத்திற் கொண்டே இலங்கையில் தங்க விலை நிர்ணயிக்கப்படுகிறது.

தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு இலங்கையில் அனுமதி இல்லை. பொருளாதார பிரச்சினை காரணமாக எந்தவொரு அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விலையேற்றம் காரணமாக தங்க வியாபாரம் தற்போது வீழ்ச்சியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் விடுமுறை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் படி, தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்க்காக விடுமுறையை கோரினால், அவருக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடுமுறை, தற்காலிக தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும். அத்துடன், இது தொழிலாளர்களின் வழக்கமான விடுமுறை உரிமைகளுக்கு மேலதிகமானது எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழிலாளரின் பணியிடம் மற்றும் வாக்குச்சாவடிக்கு இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான விடுமுறை காலம் தீர்மானிக்கப்படும்.

இதன்படி, 40 கிலோமீட்டர் அல்லது அதற்கு குறைவாக இருப்பின் அரை நாள் விடுமுறையும் 40 முதல் 100 கிலோமீட்டருக்கு இடைப்பட்ட தூரமாக இருந்தால் ஒரு நாள் விடுமுறையும் 100 முதல் 150 கிலோமீட்டருக்கு இடைப்பட்ட

தூரமாக இருந்தால் 11/2 நாட்கள் விடுமுறையும் 150 கிலோமீட்டருக்கு அதிகமாக இருப்பின் 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.

கடன் அட்டையை பெறும் போது கட்டாயமாகும் நடைமுறை!!

கடன் அட்டையை பெறும் போது வரி செலுத்துவோர் அடையாள எண்ணை கட்டாயமாக்குவதன் அவசியம் குறித்து உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

2023ஆம் ஆண்டு மே மாதம் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் உள்நாட்டு வருவாய் திணைக்களத்திடம் இருந்து வரி செலுத்துவோர் அடையாள எண்ணை பெற வேண்டும் என்று அரசாங்கம் ஒரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது.

வர்த்தமானி அறிவிப்பிற்கமைய, 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களும், 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பிறகு 18 வயது பூர்த்தியடைபவர்களும் கட்டாயமாக வரி எண்ணைப் பெற வேண்டும்.

அதற்கமைய, வாகனத்தை பதிவு செய்தல், வாகனத்தை வேறொரு நபருக்கு மாற்றுதல், காணி பதிவு செய்தல், வணிகத்தை பதிவு செய்தல் மற்றும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை மாற்றுதல் ஆகியவற்றின் போது வரி எண் கட்டாயமாக இருக்கும் என்று உள்நாட்டு வருவாய் திணைக்களம் தெரிவித்துள்ளது.

18 வயதை நிறைவு செய்த 10 மில்லியன் மக்களுக்கு வரி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 7 மில்லியன் பேர் வரி எண்களுக்கு இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களில் வரி எண்களைப் பெறுவதற்கு இந்த நாட்களில் அதிகளவில் மக்கள் வருகைத்தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச்சூடு : வட்டித் தொழிலால் ஏற்பட்ட விபரீதம்!!

கட்டுநாயக்க ஹீனட்டியன பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 5:35 மணியளவில், குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த இளைஞர், வட்டிக்கு பணம் வழங்குவது மற்றும் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த இளைஞர் முதலில் மினுவங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்றது.

உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 3,33,185 பரீட்சார்த்திகள் தோற்றினர். அதில் 2,53,390 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 79,795 பேர் தனியார் விண்ணப்பதாரர்களாகும்.

நாடு முழுவதும் 2,312 மத்திய நிலையங்களிலும் 319 ஒருங்கிணைப்பு மையங்களிலும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் லொறி ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் லக்ஸ்மன் பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது மரணம் தொடர்பான விசாரணையினை வவுனியா பொலிசார் மற்றும் திடீர்மரண விசாரணை அதிகாரி ஆகியோர் முன்னெடுத்திருந்தனர்.

அதிகாலையில் இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு : வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த இளைஞர், வட்டிக்கு பணம் வழங்குவது மற்றும் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் தனது தந்தையுடன் வீட்டில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

காயமடைந்த இளைஞர் முதலில் மினுவங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடமான வீட்டு அறையில் இருந்து இரண்டு வெற்று துப்பாக்கி தோட்டா உறைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

யாழில் புகைப்பிடித்தவாறு மீன் வெட்டியவருக்கு தண்டம்!!

யாழ்ப்பாணத்தில் புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட மீன் வியாபாரிக்கு, மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ் மானிப்பாய் சந்தை பகுதியில் புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரிக்கு எதிராக மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் கி. அஜந்தன் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, மன்றில் முன்னிலையாகி இருந்த மீன் வியாபாரி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார்.

இதை அடுத்து, வியாபாரியை கடுமையாக எச்சரித்த மன்று 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

பாடசாலையில் திடீரென உயிரிழந்த மாணவி : தமிழர் பகுதியில் சோகம்!!

மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் 16 வயது மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் இன்று (25) பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கிரான்குளம் 8 பிரிவு அமரசிங்க வீதியைச் சேர்ந்த க.பொ.த சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய இராஜன் வினோஜினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிரான் குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்விகற்றுவரும் குறித்த மாணவி வழமைபோல இன்று பாடசாலைக்கு சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் வகுப்பறையில் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து மாணவியை செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் சடலம் வைத்தியசாலைய பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு உள்ளிட்ட மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு கடுமையான மின்னல் தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

தென்னிலங்கையில் அண்ணனை கொலை செய்து விட்டு பொலிஸ் நிலையத்திற்கு ஓடிய தம்பி!!

பாணந்துறை பிரதேசத்தில் தனது மூத்த சகோதரனை தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் தம்பி சரணடைந்துள்ளார். அதற்கமைய, சந்தேக நபரான தம்பியை கைது செய்துள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்வத்த மீகஹா கோவில வீதியைச் சேர்ந்த 39 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், தம்பி தனது கையால் மூத்த சகோதரனின் தலையில் அடித்ததாகவும், தாக்கப்பட்ட மூத்த சகோதரர் தரையில் விழுந்து தலை மோதியதால் மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் பின்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடொன்றில் கடலில் விழுந்த விமானம் : ஐவர் பலி!!

தாய்லாந்தில் (Thailand) விமானமொன்று விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்து நொருங்கியதில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடக்கள் செய்தி ளெியிட்டுள்ளன.

ஹுவா ஹின் மாவட்டத்தில் பரசூட் பயிற்சிக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டிருந்த விமானமே இன்று (25) விபத்துக்குள்ளாகியுள்ளது. அத்துடன், ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தாய்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வைக்கிங் டிஎச்சி – 6 டுவின் ஓட்டர் விமானம் ஹ_வா ஹின் விமானநிலையத்திற்கு அருகில் விபத்திற்குள்ளாகியுள்ளாகியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காலநிலையை அவதானிப்பதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விமானம் புறப்பட்டு ஒரு நிமிடத்தின் பின்னர் கட்டுப்பாட்டை இழந்தது கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானம் புறப்பட்டு ஒருசில நிமிடங்களில் வெடிப்பு போன்ற சத்தம் அதன் இயந்திரத்திலிருந்து வந்ததாகவும் விமானி விமானத்தை விமானநிலையத்தில் தரையிறங்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கரையிலிருந்து 100 மீற்றர் தொலைவில் விமானத்தின் சிதைவுகள் காணப்படுவதுடன் விமானம் இரண்டாக உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், விமானத்தில் ஆறு பொலிஸார் பயணித்துள்ள நிலையில் ஐவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடன் முழுமையான போர் : பகிரங்க எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்!!

பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவுடன் “முழுமையான போர்” ஏற்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிப்பதை ஒப்புக்கொள்கின்றேன் அமெரிக்காவிற்காக இந்த செயலை நாங்கள் செய்ய ஆரம்பித்தோம்.

நாங்கள் சுமார் 3 தசாப்தங்களாக அமெரிக்காவிற்காக இந்த வேலையைச் செய்து வருகிறோம்.

சோவியத் யூனியனுக்கு எதிரான போரிலும், பின்னர் நடந்த போரிலும் பாகிஸ்தானின் சாதனையை மறுக்க முடியாது” என கூறியுள்ளார். பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை (ICP) மூடுதல்,

பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா விலக்குத் திட்டத்தை (SVES) இடைநிறுத்துதல், அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்ப 40 மணிநேரம் அவகாசம் அளித்தல் மற்றும் குறைத்தல் போன்ற பல இராஜதந்திர நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு அறிவித்தது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து 1960 இல் கையெழுத்திடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தியது.

இந்தத் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள், அதற்கு சதி செய்தவர்களுடன் சேர்ந்து, அவர்கள் கற்பனைக்கு எட்டாத தண்டனையை எதிர்கொள்வார்கள் என்றும் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

பயங்கரவாதத்தின் மீதமுள்ள கோட்டைகளை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும், 140 கோடி இந்தியர்களின் மன உறுதி இப்போது பயங்கரவாதக் குற்றவாளிகளின் முதுகெலும்பை உடைக்கும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!!

மாத்தளை, லக்கலை, ஹெட்டிப்பொல பிரதேசத்தில் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து கடந்த புதன்கிழமை (23.04) காலை இடம்பெற்றுள்ளது. தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறிருப்பினும் காரானது தீயில் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

கட்டுநாயக்கவில் வர்த்தகர் மீது கொலை முயற்சி : தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி கைது!!

கட்டுநாயக்க, ஆண்டியம்பலம பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (22) காலை வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி செய்து பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (24) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் அநுராதபுரம் இராஜாங்கனை பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கட்டுநாயக்க, ஆண்டியம்பலம பிரதேசத்திற்கு நேற்றைய தினம் காலை 10.00 மணியளவில் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் சென்ற துப்பாக்கிதாரிகள் இருவர், வட்டிக்கு பணம் கோரும் போர்வையில் 33 வயதுடைய வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

வட்டிக்கு பணம் கோரி வந்த துப்பாக்கிதாரிகள் தொடர்பில் சந்தேகமடைந்த வர்த்தகர் அவர்களை வீட்டிற்குள் வைத்து கதவை மூடியுள்ளார்.

இதனை அறிந்துகொண்ட துப்பாக்கிதாரிகள் வர்த்தகரை சுட்டுக்கொல்ல முயன்றுள்ளனர். இதன்போது துப்பாக்கிதாரிகளிடம் இருந்த துப்பாக்கி செயலிழந்துள்ளது.

பின்னர் வர்த்தகரும் இரு துப்பாக்கிதாரிகளும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, துப்பாக்கிதாரிகள் இருவரும் வர்த்தகரின் வீட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டின் மதிலிலிருந்து கீழே குதித்துள்ளனர்.

இதன்போது ஒரு துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் மற்றைய துப்பாக்கிதாரியின் கால் வீட்டின் மதிலில் மோதி காயமடைந்துள்ளது.

காயமடைந்த துப்பாக்கிதாரி தனது கையிலிருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொல்ல முயன்ற போது துப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கட்டுநாயக்க பொலிஸார் காயமடைந்த 33 வயதுடைய துப்பாக்கிதாரியை கைது செய்துள்ளனர். காயமடைந்த துப்பாக்கிதாரி சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் இராஜாங்கனை பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாமரை கோபுரத்திற்கு அருகில் திடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்!!

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திற்கு அருகில் ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கொழும்பு நகராட்சியின் தீயணைப்புப் பிரிவு தீயை அணைத்தது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.