வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் ஒன்பதாம் நாள் பிச்சாடன உற்சவம்!! (படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்ஒன்பதாம் நாளான நேற்று  03.04.2017 திங்கட்கிழமை  பிச்சாடன  உற்சவம் இடம்பெற்றது.

பிச்சாடன உற்சவம் என்பது  அன்பின் வடிவினனான சிவனை ரிக் வேதம் அழகின் ரூபியாக சித்தரிக்கிறது.இவர் தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அடக்க வந்த சிவனின் கோர ரூபம்.தாருகாவனத்து முனிவர்கள் தம் தவ வலிமையினால் மமதை கொண்டு தாமே கடவுள் என்ற இறுமாப்புடன் வாழ்ந்து வந்தனர்.அவர்களின் ஆணவத்தை அடக்க உடலில் ஆடையில்லா கோலத்துடன் பிச்சை பாத்திரம் ஏந்தி நாயுடன் தாருகாவனம் சென்றார்.

இவரின் கோலத்தைக் கண்டு இச்சித்த முனிவர்களின் மனைவிகளின் கற்புத்திறன் அழிந்தது.இதனால் முனிவர்களின் மமதையும் நீங்கியது.இக் கதையை சித்தரிக்கும் முகமாக மேற்படி திருவிழா கொண்டாடபடுகிறது சிவன் கோவில்களில்  தொடர்ந்து  வசந்த மண்டப பூஜையின் பின் சிவபெருமான் பிச்சண்டியாகவும்  விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருக பெருமானும் சண்டேஸ்வர பெருமானும்  உள்ளவீதி வெளி வீதி  வந்தனர்.

 

மீண்டும் மாலையில்ஆறுமணிக்கு வசந்த மண்டபபூஜையை  தொடர்ந்து அழகிய  மலர் தண்டிகையில் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரரும் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் மயிலிலும்  விநாயகர்  மூசிக வாகனத்திலும் பவனி வந்தனர்.

நடிகை நந்தினியின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை!!

நடிகை நத்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நந்தினி. மேலும் ஒருசில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் இவருக்கு, திருமணமாகி 8 மாதங்கள் ஆகின்றது. தியாகராய நகரில் உடற்பயிற்சிக் கூடம் வைத்துள்ள கார்த்திகேயன் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமான தருணத்திலேயே இவர்கள், இருவருக்கும் ஏதோ மனக்கசப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நந்தினி தனது கணவர் கார்த்திகேயனுடன், வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றார். இந்நிலையில், நேற்று தனது வீட்டின் அருகாமையிலுள்ள விடுதி ஒன்றில் தங்கிய கார்த்திகேயன், அந்த விடுதியிலேயே குளிர்பானத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெகுநேரமாகியும் விடுதியில் அவரது அறை திறக்கப்படாததால், அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகத்தினர் பொலிசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பொலிசார் வந்து பார்த்த போது, வாயில் நுரைதள்ளிய படி கார்த்திகேயன் பிணமாகக் கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள விருகம்பாக்கம் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வவுனியாவில் வீதியை சீர்செய்து தருமாறு பொதுமக்கள் மாணவர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியா தாலிக்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஒன்றுதிரண்டு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 7 மணிக்கு வாரிக்குட்டியூர் சந்தியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஒன்றுகூடி வீதியை திருத்தம் செய்து தா, மாணவர்களின் போக்குவரத்துக்கு பாதுகாப்பான வீதி வேண்டும், எங்கள் ஊரில் கிரவல் எடுத்து A9 வீதியை திருத்துவதா போன்ற கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஊர்வலமாக தமது பாடசாலையான கணேஸ்வரா வித்தியாலயத்திற்கு சென்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தாலிக்குளம் மற்றும் பாவற்குளம் மக்கள் தாலிக்குளத்தில் இருந்து மன்னார் வீதி வரை வீதியை திருத்தம் செய்து தா என்ற கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1958 ஆம் ஆண்டு குடியேறிய இப்பகுதி மக்கள் தமது வீதி தற்போதுவரை சீரின்றியே காணப்படுவதாகவும் இதன் காரணமாக தமது கிராமம் முன்னேற்றம் காணாதுள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் தமது கிராமத்திற்கு வரும் அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை செய்து தருவதில்லை எனவும் விசனம் தெரிவித்தனர்.

வவுனியாவில் 2 பெண்கள் உட்பட 6 பேர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நேற்று (03.04) இரவு இரு குழுக்கழுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் இரு பகுதியினரும் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

 

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு இரு பகுதியினருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்ப்பட்டுள்ளது. இதையடுத்து சமாதானப்படுத்தும் நோக்கில் ஒரு பகுதியினர் மற்றைய பகுதியினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

இதையடுத்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதன்போதே ஒருபகுதியினர் வாள் கொண்டு மற்றைய பகுதியினர் மீது வெட்டியுள்ளனர்.

அதையடுத்து வெட்டுக்காயத்திற்குள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் வைத்தியசாலையில் வைத்து அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது வெட்டுக்காயத்திற்குள்ளான இரு பகுதியையும் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 6பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

எமனான ஐபோன் சார்ஜர் : அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை செய்தி!!

ஐபோனை சார்ஜ் போட்டு தூங்கிய நபருக்கு மின்சாரம் தாக்கியதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

விலே டே (32) என்னும் நபர் சில தினங்களுக்கு முன்னர் தன் ஐபோனை சார்ஜ் போட்டுவிட்டு அதன் அருகிலேயே படுத்து தூங்கியுள்ளார்.

இரவு விலே நன்றாக தூங்கிவிட்டு காலை வேளையில் தூக்க கலக்கத்தில் புரண்டு படுத்துள்ளார்.

அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த் இரும்பு உலோக சங்கிலி, அருகில் இருந்த சார்ஜர் ஹெட்டுடன் உரசியதில் திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது.

மின்சாரம் விலேவின் கழுத்தில் பாய அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பின்னர் மருத்துவமனை சிகிச்சையில் அவர் உயிர் பிழைத்தார்.

ஆனாலும் தற்போது அவர் கண் பார்வை மங்கியுள்ளது. மேலும் அவரின் இதயத்துடிப்பு அவரின் காதுகளுக்கு இடிச்சத்தம் போல கேட்கிறது.

தொடர் சிகிச்சையில் இருக்கும் அவர் தற்போது அவரருகில் சார்ஜ் போடுவதில்லை.

யாரும் செல்போனுக்கு சார்ஜ் அருகில் வைத்து போடாதீர்கள் என விலே எச்சரிக்கிறார்.

விமானத்திலிருந்து குதித்து காதலை சொன்ன இளைஞர் : நெகிழ வைக்கும் வீடியோ!!

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் விமானத்திலிருந்து குதித்து காதலியிடம் காதலை வெளிபடுத்திய சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

டென்னசி நகரைச் சேர்ந்த 19 வயதான மேயர் என இளைஞனே இச்செயலில் ஈடுபட்டுள்ளான். மேயர் அதே பகுதியைச் சேர்ந்த கேட்டி பார்ட்டர் என் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

காதலை எப்படி சொல்வது என்பது குறித்து யோசித்த மேயர், வித்தியசமாக பாரசூட்டிலிருந்து குதித்து காதலை தெரிவிக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக காதலியை குறிப்பிட்ட இடத்திற்கு வர சொன்ன அவர், கையில் காதலை சொல்லும் பதாகையை ஏந்தி படி விமானம் ஒன்றில் இருந்து பாரசூட் மூலம் குதித்துள்ளார்.

இதை கண்ட கேட்டி பார்ட்டர் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

பெண்ணை மிரட்டி தவறாக நடந்து வசமாக மாட்டிக் கொண்ட போலிச் சாமியார்!!

தமிழ்நாட்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரியில் ஆதி சிவ பிரம்ம சிவனடியார்கள் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் அண்ணாமலை (48).

இவரிடம் அதே பகுதியை சேர்ந்த திருமணமான 24 வயது பெண் உடல் நல பிரச்சனை காரணமாக குறி கேட்க வந்துள்ளார். அப்போது ஆசிரமத்தில் இருந்த சாமியார் அண்ணாமலை விபூதி தருவதாக கூறி பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார்.

மேலும், இங்கு நடந்ததை யாரிடமாவது கூறினால் உன்னுடைய குழந்தைக்கு கை, கால் செயல்படாமல் மந்திரம் மூலம் கட்டி விடுவேன், கணவரை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லாத பெண் மன அழுத்ததில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை காப்பாற்றிய கணவர் இது குறித்து மனைவியிடம் விசாரிக்க சாமியாரை பற்றி அவர் கணவரிடம் கூறியுள்ளார்.

பின்னர் இதை அக்கம்பக்கத்தினரிடம் கணவர் கூற ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு சாமியார் தங்கியிருந்த இடத்திற்கு சென்று சாமியாரை சரமாரியாக அடித்து உதைத்து கூடுவாஞ்சேரி பொலிசில் ஒப்படைத்தனர்.

பின்னர் சாமியார் அண்ணாமலையை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரித்தனர். விசாரணையில், அவர் முன்னர் சைக்கிள் மெக்கானிக்காக இருந்ததும், பின்னர் போலி சாமியாராக வலம் வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட அவரை பொலிசார் சிறையில் அடைத்தனர்.

தனுஷ் வழக்கில் திடீர் திருப்பம்!!

நடிகர் தனுஷ் வழக்கில் கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் புதிய மனுவை மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

பிரபல திரைப்பட நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என சிவகங்கையை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதிகள் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் பல திருப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அவர்கள் மீண்டும் ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

அதில் நீதிமன்றத்தில் தனுஷ் சமீபத்தில் தாக்கல் செய்த மனுவின் நகலை தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அவர்களை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்துள்ளதாக இருக்கும் மனுவில் உள்ளது தனுஷ் கையெழுத்து கிடையாது, அது போலியான கையெழுத்து எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

யாழில் பரீட்சையில் தோல்வியடைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

யாழ் பாடசாலை மாணவி ஒருவர் நேற்று தற்கொலை செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால் அவர் தற்கொலை செய்துள்ளார்.

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, வேலணை கிழக்கு பகுதியை சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

வேலணை மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் அருட்பிரகாசம் ரேணுகா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். அவருக்கு வயது 16.

எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால், குறித்த மாணவி கடும் மன வேதனையில் இருந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளியான பெறுபேறுகளுக்கு அமைய ஒரு ஏ சித்தி, ஒரு பீ சித்தி மற்றும் 6 சி மற்றும் ஒரு எஸ் சித்தியை பெற்றுள்ளார்.

டெங்கு அபாய வலயங்களாக 12 மாவட்டங்கள் பிரகடனம்!!

டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து நாட்டின் 12 மாவட்டங்கள் டெங்கு அபாய வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கல்முனை, இரத்தினபுரி,கேகாலை ஆகிய 12 மாவட்டங்களே அபாய வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த மூன்று மாதங்களில் நாடெங்கும் 24,562 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 40 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார அமைச்சு கடந்த 29ஆம் திகதி ஆரம்பித்த தேசிய டெங்கு ஒழிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

முதல் நாளில் மாத்திரம் 83,274 இடங்கள் பரீட்சிக்கப்பட்டன எனவும், இந்த இடங்களில் 1,542 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, 3,389 பேருக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது எனவும், 162 பேருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலைகள், கட்டட நிர்மாணங்கள் நடந்து வரும் இடங்கள், வணக்கஸ்தலங்கள் போன்றவற்றிலேயே டெங்கு நுளம்புகள் பெருகும் வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அநாதரவாக உயிரிழந்த முதியவர் : மனிதாபிமானமிக்க முச்சக்கரவண்டி சாரதிகளின் செயற்பாடு!!

 
யாருமற்ற நிலையில் உயிரிழந்த நபரின் சடலத்தை பொறுப்பேற்ற முச்சக்கர வண்டி சாரதிகள், அவருக்கு இறுதிக் கிரியைகள் செய்து அடக்கம் செய்துள்ளனர்.

அனுராதபுரம் வைத்தியசாலையில் மூன்று நாட்கள் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவரின் உடலை, பொறுப்பேற்க யாரும் வரவில்லை. இந்நிலையில் அந்தப் பகுதி முச்சக்கரவண்டி சாதிகள், தமது தொழில் புரியும் இடத்திற்கு உடலை கொண்டுவந்து மத வழிப்பாடுகளை மேற்கொண்டதன் பின்னர் அடக்கம் செய்துள்ளனர்.

அனுராதபுர பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகளின் பங்குபற்றலுடன், நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு அதிக காலம் அனுராதபுரத்தில் உள்ள பேரூந்து நிலையத்திற்கு அருகில் வெற்றிலை விற்பனை செய்த ஒருவரின் சடலமே இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டுள்ளது..

உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்தவர் அல்ல எனவும், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கலேவல பிரதேசத்தில் இருந்து வருகைத்தந்து, பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் சிறிய கடையொன்றில் வெற்றிலை விற்பனை செய்துள்ளார். அவர் கலே மாமா என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளார்.

நோயில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை ஏற்றுக் கொள்வதற்கு ஒருவரும் இல்லாத காரணத்தினால் அரசாங்கத்தின் செலவில் உடலை அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் பேரூந்து நிலையத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி சாரதிகள், அருகில் உள்ள வர்த்தகரின் நிதி உதவியுடன் உடலை அடக்கம் செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் நாட்டிற்கே எடுத்துக்காட்டாகியுள்ளனர் என அங்கு மத வழிப்பாட்டினை மேற்கொண்ட தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலா : அவதானம்!!

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடன் அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று அங்கு கடமையாற்றும் மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜயசுந்தர பண்டார இந்த அறிவுறுத்தலை ஊடகங்களின் ஊடாக விடுத்துள்ளார்.

தற்போது நாடு முழுவதிலும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது எனவும் அது சாதாரண ஓர் காய்ச்சல் நிலையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் ஏற்பட்டால் அரசாங்க வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக் கொள்வதே சிறந்த வழியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைவலி, இருமல், தடிமன் மற்றும் உடல் வலி போன்ற நோய்க் குறிகள் காணப்பட்டால் அது வைரஸ் காய்ச்சலாக இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளார்.

காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களினால் பரிந்துரைக்கப்படும் மருந்து மாத்திரைகளை உட்கொள்வதுடன், போதியளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் திடீரென ஏற்பட்ட அனர்த்தம் : உறுப்பினர்கள் வெளியேற்றம்!!

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றினால் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட அலங்கார மின் விளக்கு திடீரென விழும் நிலைக்கு சென்றுள்ளது.

செப்பு மற்றும் பிற உலோகங்களால் நிர்மாணிக்கப்பட்டு வெள்ளி முலாம் பூசப்பட்ட மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின் விளக்கு மாதம் ஒரு முறை கீழே இறக்கி அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் இருந்த இடத்திலேயே பொருத்தப்படும்.

அதனை கீழே இறக்கும் போதும் உரிய உயரத்தில் நிறுத்தப்படும் பின்னர் ஏணியின் உதவியுடன் அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மின் மோட்டார் ஊடாக மேலே கீழே இறக்கி ஏற்றப்படும் குறித்த மின் விளக்கினை இருந்த இடத்தில் பொருத்தப்பட்ட சந்தர்பத்தில் திடீரென பூமிக்கு இரண்டு அடி மட்டம் வரையில் கீழே வேகமாக இறங்கியுள்ளது.

மின் விளக்கினை பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஊழியர் உடனடியாக செயற்பட்டு, மின்விளக்கினை மீண்டும் பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் பதறக்கமடைந்த பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால அந்த இடத்திற்கு வருகைத்தந்து மின் விளக்கை பொருத்து வரும் கண்கானிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில் நாடாளுமன்றத்திற்குள் எந்தவொரு உறுப்பினரையும் செல்ல அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாணவியை அருகில் அழைத்து ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி!!

 
கிளிநொச்சியைச் சேர்ந்த பாஸ்கரன் சியானுகா என்ற மாணவியின் உரையை கேட்ட ஜனாதிபதி அவரை அருகில் அழைத்து உரையாடியுள்ளார்.

தேசிய பால்சார் உற்பத்தி கைத்தொழிலுக்கு பாரிய முதலீட்டை சேர்க்கும் வகையில் மீரிகம பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கொத்மலை புதிய பாற்பண்ணையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்தார்.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து புதிய பாற்பண்ணையை திறந்து வைத்து அதனை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது “சருதின” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புலமைப் பரிசில்களும், மடிக் கணனிகளும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன. இந்த புலமைப்பரிசிலை பெற்ற கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தைச் சேர்ந்த பாஸ்கரன் சியானுகா என்ற மாணவியினால் உரையொன்று ஆற்றப்பட்டது.

பின்னர் குறித்த மாணவியை தமது அருகில் அழைத்த ஜனாதிபதி அம்மாணவியிடம் பாடசாலையின் விபரங்களைக் கேட்டறிந்தார்.

தனது பாடசாலையில் காணப்படும் சில குறைகளை அந்த மாணவி ஜனாதிபதியிடம் தெரிவித்ததுடன், அவற்றை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் அமைச்சர்களான அர்ஜூன ரணதுங்க, பீ.ஹெரிசன், லுவிஸ் பேஜ், பிரதி தலைவர் ரஞ்சித் பேஜ் உள்ளிட்டோர் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்கமைய, கொழும்பிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் பயணிகளின் நலன்கருதி எதிர்வரும் 7 ஆம் திகதி தொடக்கம் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டது.

கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை, மஹவ, யாழ்ப்பாணம், கண்டி, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களுக்கு விசேட சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) முதல் விசேட பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த பஸ் சேவைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர குறிப்பிட்டார்.

1955 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக பயணிகள், போக்குவரத்து சேவைகள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு புகுந்த வான் கோழி!!

 
வீதியில் சென்றுகொண்­டி­ருந்த கார் ஒன்றின் மீது, பறந்து வந்த வான்­கோ­ழி­யொன்று மோதி­யதால் காரின் முன்­புறக் கண்­ணாடி உடைந்­த­துடன், அக்­ கண்­ணா­டியில் வான்­கோ­ழியின் உடல் இறு­கிக்­கொண்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

இன்­டி­யானா மாநி­லத்தில் கடந்த வாரம் இடம்­பெற்ற இச்­ சம்­ப­வத்தில் சுமார் 15 கிலோ எடை­யுள்ள மேற்­படி வான் கோழி உட­ன­டி­யாக இறந்­தது. இச்­ சம்­ப­வத்­தினால் தாம் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­த­தாக காரில் சென்று கொண்­டி­ருந்த குடும்பத்தினர் தெரிவித்து ள்ளனர்.