இரு பிறப்புறுப்புகளைக் கொண்ட பெண்!!

இரு பிறப்புறுப்புகளைக் (யோனி) கொண்ட பெண் ஒருவர் தனது விசித்திர நிலை குறித்து விவரணப் படமொன்றில் பேசியுள்ளார். நிக்கி என்ற பெயரில் மாத்திரம் அறியப்பட்டவர் இப்பெண்.

17 வயதுவரை இவர் ஏனையோரைப் போன்று சாதாரணமாகத் தான் இருந்தார். ஆனால், அதன்பின் தனக்கு இரு யோனிகள் இருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தாராம் நிக்கி. இவரின் இந்த விசித்திர நிலை குறித்து விவரணப்படமொன்று பிபிசியினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இம் மாத இறுதியில் இணையத்தின் மூலமும் இந்த விவரணப்படத்தை பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்கான இந்த விவரணப்படத்தில், இரு பிறப்புறுப்புகளைக் கொண்டிருப்பதால் தான் எதிர்கொண்ட உடலியல் மற்றும் உளவியல் பிரச்சினைகள் குறித்து நிக்கி பேசியுள்ளார்.

தனக்கு ஏற்படும் நீடீத்த மாதவிடாய், ஏராளமான தடவைகள் கருச்சிதைவு ஏற்பட்டமை குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

பெண் ஒருவர் இரு யோனிகளைக் கொண்டிருப்பது பெரும் சாதாகமான விடயம் என ஆண்கள் கருதக்கூடும். இரு யோனிகளைக் கொண்ட பெண் ணுடன் நான் பாலியல் உறவு கொண்டேன் எனக் கூறி தாம் பெருமடைய லாம் என எண்ணக்கூடும்.
ஆனால், என்னைப் பொருத்தவரை நான் இயற்கையின் குறும்பு போன்று உணர்கிறேன்’ என நிக்கி கூறுகிறார்.

நிக்கியின் இரு யோனி துவாரங்களில் ஒன்றை மருத்துவர்கள் சத்திர சிகிசிச்சை மூலம் முடியுள்ளனர். தற்போது, திருமணமாகி மகிழ்ச்சியாக வாழ்வதாக நிக்கி கூறுகிறார்.

19 வயதில் தான் சந்தித்த அன்டி எனும் இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். எனினும், நிக்கி செய்து கொண்ட சத்திரசிகிச்சையொன்றின் காரணமாக இவர் குழந்தைகளைப் பெற முடியாது.

இதனால், குழந்தையொன்றை தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாக நிக்கியும் அன்டியும் கூறுகின்றனர்.

ஆசிய கிரிக்கட் சபையின் வளர்ந்துவரும் அணிக்கான கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை!!

 
ஆசிய கிரிக்கட் சபையின் வளர்ந்துவரும் அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது.

இலங்கை 23 வயதுக்குற்பட்டோர் மற்றும் பாகிஸ்தான் 23 வயதுக்குற்பட்டோர் அணிகளுக்கிடையிலான இறுதி போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 133 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ரிஸ்வான் மற்றும் சபர் கோஹார் தலா 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் செஹான் ஜயசூரிய 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 23.5 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் சமரவிக்ரம 45 ஓட்டங்களை குவித்தார். இந்நிலையில் போட்டியின் சிறப்பாட்டக்காரராக செஹான் ஜயசூரிய தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடர் ஆட்டநாயகனாக சரித் அசலங்க தெரிவுசெய்யப்பட்டார்.

81 படகுகளை குண்டுவைத்து தகர்த்த இந்தோனேசிய கடற்படை!!

 
எல்லை தாண்டி வந்து மீன் பிடியில் ஈடுபட்ட 81 படகுகளை இந்தோனேசிய கடற்படை குண்டுவைத்து தகர்த்துள்ளது.

இந்தோனேசியா கடல் பகுதியில் மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மீனவர்கள் எல்லை மீறி வந்து மீன்பிடித்த குற்றத்திற்காக அந்நாட்டு கடற்படையினர் 81 படகுகளை சிறைப்படுத்தியிருந்தனர்.

மேலும் இந்தோனேசியாவின் கடல் எல்லையில் அத்துமீறி வந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டு மீனவர்கள் மீது அந்நாடு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கைப்பற்றிய 81 படகுகளை அந்நாட்டு கடற்டபடையினர் குண்டுவைத்து தகர்த்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

அத்தோடு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தோனேசியா, எல்லை தாண்டி வரும் படகுகளை அளித்து வருகின்றது. இதனடிப்படையில் இதுவரை சுமார் 317 மீன்பிடி படகுகளை அந்நாட்டு கடற்படையினர் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

மாலபே தனியார் வைத்திய கல்லூரியினை அரசுடைமையாக்குமாறு அரசினை வலியுறுத்தும் முகமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எதிர்வரும் 7 ஆம் திகதி நாடு தழுவிய 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

எனினும் தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் அனைத்திலும் அவசர நோயாளர் சேவைகள் இடம்பெறும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இது இலங்கை வைத்திய சேவையிற்கு தரமற்ற வைத்தியர்களை அரசியல் செல்வாக்குக்காகவும், பணத்துக்காகவும் உருவாக்கி நோயாளர்களின் உயிரை பணயம் வைக்கும் அரசியல் வியாபாரிகளுக்கு எதிரான போராட்டம் ஆகையினால் எம்முடன் இம்முறை நூற்றுக்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கைகோர்த்துள்ளன.

இதே தினம் கொழும்பில் மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் இப் போராட்டத்தினை வலியுறுத்தி 11 மணி தொடக்கம் 3 மணிவரையில் நடைபெறும் என்றும் அவசர நோய் அல்லது விபத்துகளின் போது உடனடியாக தயங்காமல் வைத்தியசாலையை நாடுங்கள் அங்கு எமது வைத்தியர்கள் உங்கள் உயிர்காக்க எப்போதும் போலவே தயார் நிலையில் இருப்பார்கள் எனவும் குறிப்பிட்டார்.

70 வயது நபருக்கு 6 மனைவிகள், 54 குழந்தைகள்!!

பாகிஸ்தானில் அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பலூசிஸ்தான் மாகாணத்தில் ஒருவருக்கு 54 குழந்தைகள் பிறந்துள்ளது தெரியவந்தது.

 

பலூசிஸ்தான் மாகணத்தில், நுஷ்கி மாவட்டத்தில் வசிக்கும் ஹாஜி அப்துல் மஜீதின் தற்போதைய வயது 70 என்று பீ.பீ.சி செய்தியாளர் மொஹம்மத் காஜ்மி தெரிவிக்கிறார். அப்துல் மஜீத் ஓட்டுநராகப் பணியாற்றியவர்.

குவெட்டாவில் இருந்து சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கில் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் நுஷ்கி மாவட்டம் அமைந்துள்ளது.

அப்துல் மஜீத் ஆறு முறை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதில் இரண்டு மனைவிகள் இறந்துவிட்டனர், தற்போது நான்கு மனைவிகளுடன் வசித்துவருகிறார்.

22 மகன்கள், 20 மகள்கள் என 42 குழந்தைகள் மற்றும் நான்கு மனைவிகளைக் கொண்ட அப்துல் மஜீத் தான் பெரிய குடும்பத்தைக் கொண்டவராக இருக்கிறார்.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்னர், 36 குழந்தைகளுக்கு தந்தையான ஜான் மொஹம்மத் கில்ஜி தான் அதிக குழந்தைகள் பெற்றவர் என்று குவெட்டா நகரவாசிகள் கூறிவந்தனர்.

இப்போது அதிக குழந்தை பெற்றவர் பட்டியலில் அப்துல் மஜீத், எளிதில் அசைக்க முடியாத முதலிடத்தில் இருக்கிறார்.

வவுனியா சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் தொடரில் யுனிபைற் அணி வெற்றி!!

 
கூமாங்குளம் சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக் கழகமும் கூமாங்குளம் நண்பர்களும் இணைந்து நடத்திய அமரர் சின்னராசா சுதர்சன் சூசை அவர்களின் 10 வது ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி சுப்பர் ஸ்ரார் விளாயாட்டுக்கழக தலைவர் J.தியாகச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டி யுனிபைட் விளையாட்டுக் கழகம் எதிர் ஜெயம் விளையாட்டுக் கழக அணிகளுக்கிடையே 02.03.2017 அன்று இடம் பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஜெயம் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 10 பந்துப்பரிமாற்ற நிறைவின் போது 9 இலக்குகளை இழந்து 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். இதில் மயூரன் 30 ஓட்டங்களை பெற்றுக்கொண்டர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யுனிபைற் அணியினர் 2 இலக்குகளால் வெற்றிபெற்றனர்.

இதில் சிறந்த துடுப்பாட்ட வீரராக மயூட்சனும், சிறந்த பந்து வீச்சாளர் கிருபாகரனும் ஆட்ட நாயகனாக அனுஷனும் தொடராட்ட நாயகனாக மூர்த்தியும் (நியபைட்) தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வெற்றி கிண்ணங்கள் வழங்கி வழங்கப்பட்டது.

இதேவேளை சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக் கழகமும் கூமாங்குளம் நண்பர்களும் இணைந்து நடத்திய அமரர் சின்னராசா சுதர்சன் சூசை அவர்களின் 10 வது ஞாபகார்த்த கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் விடி வெள்ளி விளையாட்டுக்கழகமும் சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக்கழக அணிகளுக்கிடையிலான போட்டியில் விடி வெள்ளி அணியினர் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டனர்.

வவுனியா குருமன்காட்டில் இ.போ.ச பேரூந்தினை வழிமறித்த இளைஞன் : நடந்தது என்ன?

வவுனியா குருமன்காடு பகுதியில் இன்று (03.04.2017) இ.போ.ச பேரூந்தினை இளைஞன் ஒருவர் வழிமறித்ததுடன் போக்குவரத்துப் பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடாக மெனிக்பாம் செல்லும் இ.போ.ச பேரூந்து எவ்வித சமிச்சை விளக்குகளுமின்றி ( பிறேக் லைட், சிக்னல்) குருமன்காடு வரை பயணித்துள்ளது. இதனைக் கண்ட இளைஞர் ஒருவர் இ.போ.ச பேரூந்தினை வழிமறித்துடன் போக்குவரத்துப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பேரூந்தின் சமிக்கை விளக்குகளை சோதனை செய்ததுடன், பேரூந்தினை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இதன் பின்னர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பேரூந்தினை சீர் செய்யுமாறு இ.போ.ச சாரதி, நடத்துனர்களை பணித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த பேரூந்தின் நடத்துனரை தொடர்பு கொண்ட போது,

வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் ஊடான பாதை பல வருடகாலமாக சீரற்றுக் காணப்படுகின்றது. பள்ளம் நிறைந்த இவ்வீதியில் பயணம் செய்வது மிகக்கடினம். தினசரி பேரூந்தின் சமிச்சை விளக்குகளை சீர்செய்தாலும் அவ்வீதியால் சென்றால் மீண்டும் பழுதாகி விடுகின்றது.

நாங்கள் மக்களுக்காகவே சேவைகளை மேற்கொள்கின்றோம். இரண்டு மணித்தியாலங்கள் நாங்கள் பேரூந்தினை திருத்த வேலைக்காக எமது சாலைக்கு எடுத்துச்சென்றால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் . தற்போது பேரூந்து இ.போ.ச வவுனியா சாலையில் திருத்த வேலைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் பிறந்து ஒரே நாளேயான சிசுவை தீ வைத்து கொளுத்திய தாய்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பிரதேசத்தில் பிறந்து ஒரு நாள் மாத்திரமே ஆகின்ற சிசு ஒன்றின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மல்லிகைத்தீவு கிராமத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் இந்த குழந்தையை பிரசவித்து, எரித்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கணவனை பிரிந்து வாழ்ந்துவரும் வாய் பேச முடியாத ஒரு பிள்ளையின் தாயார் ஒருவருக்கு நேற்று (02) நள்ளிரவு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதனை தொடர்ந்து பிறந்த குழந்தையை குறித்த தாயார் வீட்டின் அருகில் உள்ள பற்றை காடு ஒன்றில் குப்பைகளுடன் சேர்த்து எரித்துள்ளார். இந்த சம்பவங்களை அவதானித்த குறித்த பெண்ணின்13 வயதான மகள் இன்றைய தினம் பாடசாலையில் நடந்த சம்பவங்களை ஆசிரியருக்கு விபரித்துள்ளார். இதனை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட பாடசாலை நிர்வாகம் அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கமான 119 இற்;கு அழைத்து முறையிட்டனர்.

இதனை தொடர்ந்து குறித்த பகுதிக்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டதுடன் குழந்தையை பிரசவித்த தாயாரையும் கைது செய்தனர். அத்தோடு எரிந்த நிலையில் காணப்பட்ட சிசுவின் சடலத்தை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதவான் எம் எஸ் சம்சுதீன் சிசுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார்.

வவுனியாவில் 39வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 39 ஆவது நாளாகவும் இன்று(03.04.2017) தொடர்கிறது.

குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் மீண்டும் வாள்வெட்டு : இளைஞர்கள் வைத்தியசலையில்!!

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இரு இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று இரவு மட்டுவில் வடக்கு முத்துமாரி அம்பாள் ஆலயதிற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த தெரியாத 4 பேர், வீதியோரத்தில் கதைத்துக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கு நின்ற முச்சக்கரவண்டியையும் கடுமையாக சேதப்படுத்திவிட்டு ஓடியுள்ளார்.

இந்த சம்பவத்தில், மட்டுவில் முத்துமாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த பெரியநாயகம் பாலகுமார் என்ற வயது 22 வயதுடையவரும், சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் ஜனார்த்தனன் என்ற வயது 24 வயதுடையவர்களே படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் அயலவர்கள் உதவியுடன் படு காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இதன் போது, குறித்த நபர்களுக்கு கழுத்து மற்றும் கை பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டமையின் காரணமாக மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரஷ்யா மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடி குண்டு தாக்குதல் : 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி!!

ரஷ்யா St Petersburg மெட்ரோ ரயில் நிலையத்தில் இடம்பெற்ற வெடி குண்டு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் 20 பேர் வரையில் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

St Petersburg, Sennaya Ploshchad மற்றும் அதன் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், குறித்த சம்பவம் தீவிரவாத தாக்குதல் சம்பவமா..? என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு!!

வவுனியா, வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையில் மக்கள் குடிமனை செறிவாகவுள்ள பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதி மற்றும் 10 ஆம் ஒழுங்கைப் பகுதி அதிக குடியிருப்புக்கள் உள்ள பகுதியாகவும், மாணவர்கள் கல்வி கற்கும் தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாகவுள்ள பகுதியாகவும் சனச் செறிவு மிக்க பகுதியாகவும் உள்ளது.

இப்பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்று தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைத்து வருகிறது. இதனால் தமக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் எதிர்காலத்தில் தாம் அச்சத்துடனேயே வாழ வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் மக்கள் செறிவற்ற பகுதிகளில் பல காணிகள் இருந்தும் மக்களது நாளாந்த வாழ்க்கை மற்றும் இயல்பு நிலையைக் குழப்பும் வகையில் இத்தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்படுவதற்கான காரணம் என்ன எனவும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இச் செயற்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், அல்லாதுவிடின் வாழ்வுரிமைக்காக தாம் வீதியில் இறஙகிப் போராட வேண்டி வரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா நகரசபைச் செயலாளர் திரு.தயாபரன் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது,

குறித்த தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்காக எம்மிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார்கள். ஆனால் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. நகரசபையின் அனுமதி பெறாது மேற்கொள்ளப்பட்டு வந்த வேலைகள் மக்களது முறைப்பாட்டையடுத்து கடந்த சனிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது இது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். மக்களது கோரிக்கைகே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் பாடசாலை அதிபரை இடமாற்றக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியா பாலமோட்டை ஓமந்தை மாதர்பணிக்கர்மகிழங்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியலாயத்தில் இன்று (03.04.2017) காலை பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள், பழையமாணவர்கள் ஒன்றிணைந்து தமது பாடசாலை அதிபரை இடம்பெற்றம் செய்யுமாறு கோரி பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

குறித்த பாடசாலை அதிபர் தகாத வார்த்தைகளைப் பேசி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அழைப்பதாகவும் இடம் நேரம் காலம் பார்க்காமல் தரைக்குறைவான வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்வதாகவும், காலை பிராத்தனை இடம்பெறும்போது தகுதி தராதரம் பார்க்காமல் பேசி மாணவர்களை அழைப்பதாகவும் உடனடியாக அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப் பாடசாலைக்கு ஓமந்தைப் பொலிசார், அப்பகுதி கிராம அலுவலகர் சென்று மாணவர்களை ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுமாறும் பேசி சமாதான முறையில் தீர்வு பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தனர். எனினும் மாணவர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை 12 மணிவரை மேற்கொண்டனர்.

பாடசாலைக்கு வவுனியா வடக்கு கல்விப்பணிப்பாளர் வி.ஸ்ரீஸ்கந்தராஜா சென்றதுடன் அதிபர், ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.

பின்னர் ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா வலய கல்விப்பணிப்பாளர் மற்றும் அதிபருடன் கலந்துரையாடலை மேற்கொண்ட பின்னர் மாணவர்களை பாடசாலைக்குள் செல்லுமாறும் உரிய தீர்வு பெற்றுத்தருமாறு தெரிவித்ததையடுத்து மாணவர்கள் உட் சென்றனர்.

எனினும் பாடசாலை விடுமுறை 5ம் திகதியாகையால் உடனடியாக வலயப் பணிப்பாளர் எதுவும் செய்யமுடியாது, அதிபரை இடமாற்றுவதற்கு உடனடி சாத்தியமில்லை விடுமுறை ஆரம்பமாகும்போது உரிய கவனம் எடுத்து தீர்வு பெற்றுத்தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்கு மாணவர்கள் சென்றனர்.

அதிபரின் செயற்பாட்டிற்கு பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரிய பதாதைகளுடன் மாணவர்கள் இன்றைய போராட்டத்தை மேற்கொண்டனர்.

வவுனியா- மன்னார் வீதியோரத்தில் இருந்து முச்சக்கரவண்டி மீட்பு : பொலிசார் விசாரணை!!

 
வவுனியா, பம்பைமடு பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் வீதியோரத்தில் இருந்து நெளுக்குளம் பொலிசாரால் இன்று (03.04.2017) காலை மீட்கப்பட்டுள்ளது. எனினும் இவ்விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான எதுவித தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

அத்துடன் இவ்விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி வீதியில் இருந்து 10 மீற்றர் தூரத்திற்கு தள்ளிச்செல்லப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்த நிலையில் வீதியோரத்தில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது

இவ்விபத்து எவ்வாறு நிகழ்ந்தது, இது யாருடைய முச்சக்கர வண்டி என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் எட்டாம்நாள் ரூபாய் நோட்டு அலங்காரம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் எட்டாம்  நாளான நேற்று 02-04 -2017 ஞாயிற்றுக்கிழமை காலை முதல்மகோற்சவ   குரு சிவஸ்ரீ கமலேஸ்வர   குருக்கள் தலைமையில்  காலையில் சங்காபிசேகம் நடைபெற்று  பின்னர் தைலாப்பிய உற்சவத்துக்குரிய அபிசேகங்கள் இடம்பெற்று   வசந்தமண்டப  பூஜையின் பின் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  இடபவாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும்  திருவீதி உலா வந்த நிகழ்வு இடம்பெற்றது .

மீண்டும்  மாலை உற்சவத்துகுரிய  அலங்காரங்கள் அபிசேகங்கள்மாலை 4.30மணிக்கு  ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின் மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  இடபவாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும்  திருவீதி உலா வந்த நிகழ்வு  இடம்பெற்று இன்றைய திருவிழா இனிதே நிறைவு பெற்றது.


 

 

 

வவுனியாவில் புகையிரதம் மோதி யானை பலி : வயிற்றில் இருந்த குட்டியும் இறப்பு!!

 
வவுனியா பறயனாளங்குளத்தில் புகையிரதம் மோதி யானை பலியாகியுள்ளது. அதன் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து இன்று (03.04.2017) அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதமே பறயனாளங்குளம் பகுதியில் யானையுடன் மோதியுள்ளது.

இந் நிலையில் குறித்த யானையினை மீட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அதனை அங்கிருந்த அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.