வவுனியாவில் புகையிரதம் மோதி யானை பலி : வயிற்றில் இருந்த குட்டியும் இறப்பு!!

 
வவுனியா பறயனாளங்குளத்தில் புகையிரதம் மோதி யானை பலியாகியுள்ளது. அதன் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து இன்று (03.04.2017) அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதமே பறயனாளங்குளம் பகுதியில் யானையுடன் மோதியுள்ளது.

இந் நிலையில் குறித்த யானையினை மீட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அதனை அங்கிருந்த அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் ரகசிய கோப்புகளை லொக் செய்வது எப்படி?

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ லப்டப் அல்லது கணனியில் உள்ள தகவல்கள் திருடு போகாமல் அதனை பாதுகாப்பதற்கு சில Software-களை நாம் உபயோகிப்போம்.

எந்த Software-ம் பயன்படுத்தாமல் ஒரு பைலினை நம்மால் பூட்டி(Lock) வைக்க இயலும். இந்த முறையினை விண்டோஸ் இயங்குதளத்தினை கொண்ட அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த இயலும்.

செயல்படுத்தும் முறை

முதலில் கணனி அல்லது லப்டப்பில் எந்த பைலினை பாதுகாக்கவேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்து கொள்ளவேண்டும்.

அந்த பைல் மேல் Right click–> Send to–>Compressed File என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்போது மற்றொரு Zip பைலானது உருவாகிவிடும். பின்னர் முதலில் உருவாக்கிய பைலினை(Original File) அழித்துவிடவேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்ட Zip பைலில் File Menu–> Add Password என்பதை தேர்ந்தெடுக்கவேண்டும்.

பின் Password-ஐ அளிக்கவேண்டும், தற்போது இந்த பைலினை மற்றவர்களால் Password இல்லாமல் பார்க்க முடியாது.

தாய், மகனை கொடூரமாக கொலை செய்த பிச்சைக்காரன்!!

பிரித்தானிய நாட்டில் தாய் மற்றும் மகனை கொலை செய்த பிச்சைக்காரர் ஒருவரை அந்நாட்டு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள Stourbridge நகரில் Peter(47) மற்றும் Tracey(50) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர். இருவரும் Lydia(18) என்ற மகள் மற்றும் Pierce(13) என்ற மகனுடன் ஆடம்பரமான வீட்டில் வசித்து வந்துள்ளனர். தாயார் மிகவும் இரக்க குணமுடையவர் என்பதால் உதவிக்கு வருபர்களுக்கு பணம் கொடுத்து உதவுவார்.

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு Aaron Barley(23)) என்ற பிச்சைக்காரர் தெருவில் படுத்து உறங்கிக்கொண்டு இருப்பதை பார்த்துள்ளார்.

தற்காலிகமாக அவருக்கு தாயார் உணவளித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இது பல நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

நபர் மீது அதிகப் பாசம் கொண்ட தாயார் தனது கணவரிடம் கூறி சுமார் 30 மைல்கள் தொலைவில் ஒரு வீடு ஒன்றை ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளனர்.

நபருக்கு கணவர் ஒரு வேலையையும் ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளார். இதனால் பிச்சைக்காரரின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று காரில் தாயார், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவரும் லேண்ட் ரோவர் காரில் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது, வீட்டுக்கு வெளியே அந்த முன்னாள் பிச்சைக்காரர் காத்துக்கொண்டு இருந்துள்ளார்.

கார் வீட்டின் முன்பு நின்றவுடன் காரில் இருந்து மூவரும் இறங்கியுள்ளனர். அப்போது, மூவரும் மீது திடீரென பாய்ந்த நபர் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த தாயார் மற்றும் மகன் அதே இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

படுகாயம் அடைந்த தந்தை அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவர் இறந்துவிட்டார் எனக் கருதிய கொலையாளி காரைத்திருடிக்கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.

ஆனால், பரபரப்பான இந்த தருணத்தில் கார் ஒரு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. தாக்குதல் தொடர்பாக தகவல் அறிந்து வந்த பொலிசார் உயிருக்கு போராடி வந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சில மணி நேரத்திற்கு பிறகு கொலையாளியும் கைது செய்யப்பட்டார். எனினும், தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவரவில்லை.

நபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடல் வழியாக புலம்பெயர்ந்த போது நான்கு வயது குழந்தை மீட்பு : நெகிழ்ச்சி சம்பவம்!!

ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக புலம்பெயர்ந்த பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தை உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் லிபியா கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். அப்போது ஸ்பெயின் நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் கடற்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு லிபியாவின் சப்ரதாவில் இருந்து சில கி.மீற்ற தொலைவில் ரப்பர் படகில் பலர் சென்று கொண்டிருப்பதை பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்துள்ளனர்.

அவர்களை மீட்டு பாதுகாப்பாக வைத்துள்ளனர். நாளை அவர்கள் அனைவரும் இத்தாலி செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

இதில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தை ஒன்றும் உள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு வீரர் ஒருவர் கூறுகையில் நேற்று ஒரு பிணத்தை கண்டெடுத்தோம். இன்று ஒரு புதிய உயிரை மீட்டுள்ளோம் என்று உணர்ச்சியுடன் கூறியுள்ளார்.

மீட்கப்பட்ட குழந்தையின் தாய் நைஜீரியாவை சேர்ந்தவர் ஆவார். தந்தை கானாவைச் சேர்ந்தவர். இவர்களும் இதில் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் லிபியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளனர். குழந்தை பிறந்த பின்னர் ஐரோப்பிய நாடுகளில ஒன்றிற்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து குழந்தையின் தந்தை கூறுகையில் நாங்கள் பிரான்ஸ் அல்லது ஜெர்மனி செல்ல விரும்புகிறோம். எங்கள் குடும்பத்திற்கு அங்குதான் ஒரு எதிர்காலம் உள்ளது என்று கூறியுள்ளார்.

பூமியில் வாழும் ஏலியன் மனிதன் : ஆச்சரியமூட்டும் உண்மை!!

அமெரிக்காவில் ஏலியனாக மாறுவதற்காக வாலிபர் ஒருவர் 110 அறுவை சிகிச்சை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் Vinny Ohh(22) என்பவர் தான் இந்த தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

மேக்-அப் நிபுணரான இவருக்கு 15 வயது முதல் பாலியல் உறவில் விருப்பமில்லை. இதனால் ஆணாக இருந்து பெண்ணாக மாறுவதை விட ஏலியனாக மாறுவது சிறந்தது என முடிவு செய்து மருத்துவர்களை சந்தித்து வந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக 17 வயது முதல் பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளார். உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பையும் இவர் மாற்றி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது வரை சுமார் 50,000 டொலர் வரை இந்த சிகிச்சைகளுக்கு செலவிட்டுள்ளார்.

இன்னும் சில மாதங்களில் ஆணுறுப்பு, மார்புக்காம்புகள், தொப்புள் உள்ளிட்ட அனைத்தையும் நீக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் 1,60,000 டொலர் நிதியை திரட்டி வருகிறார்.

இது குறித்து வாலிபர் பேசியபோது, ‘பாலியல் உணர்வுகள் இல்லாமல் என்னால் வாழ முடியும் என்றபோது அதற்கு தேவையான உறுப்புகளை மட்டும் ஏன் வைத்திருக்க வேண்டும்?

கூடிய விரைவில் இந்த உலகத்தில் ஒரு புதிய உயிரினமாகவே தன்னை மாற்றிக்கொண்டு ஏலியனாக மக்கள் மத்தியில் வலம் வருவேன்’ என Vinny Ohh கூறியுள்ளார்.

பிறந்த ஆறு மணிநேரத்தில் குழந்தையை துடிதுடிக்க புதைத்த தந்தை!!

ஒடிசாவில் பிறந்து ஆறு மணி நேரங்களே ஆன குழந்தையை, அவரது தந்தை உயிரோடு புதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் ஜெய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்சந்திரா பசண்ட்டியா(35). இவரது மனைவிக்கு கடந்த சனிக்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்து ஆறு மணி நேரமே ஆன குழந்தையை அவர் அருகில் உள்ள இடத்தில் துடி துடிக்க உயிரோடு புதைத்துள்ளார்.

புதைக்கப்பட்ட குழந்தையின் கால்களை கண்ட அங்கிருந்த கிராம மக்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையை புதைத்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரமேஷ் சந்திரா ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நான்கு குழந்தைகள்.

அதில் தனக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள், மூன்றாவதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் புதைத்து விட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

வவுனியா கடற்படை முகாமில் அதிகாரி மரணம்!!

வவுனியா, பூனாவ கடற்படை முகாம் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த அதிகாரி தனது படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே கீழேவிழுந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து 37 வயதான குறித்த அதிகாரியை வவுனியா வைத்தியசாலையில்அனுமதித்த பின்னரே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த அதிகாரியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில்வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றனர்.

தவானை வேடிக்கைக்காக ஏமாற்றிய யுவராஜ் சிங்!!

ஏப்ரல் 1ம் திகதி முட்டாள் தினம் என்று அழைப்பதுண்டு. இந்த திகதியில் ஒருவர் நமக்கு பிடித்த நபரை ஏமாற்றுவது வழக்கம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை வேடிக்கையாக செய்வார்கள். இந்த வேடிக்கையை சர்வதேச விளையாட்டு வீரர்களும் செய்து சந்தோசம் அடைந்துள்ளனர்.

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் முன்னணி வீரரான வெயின் ரூனே, மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு WWE-ல் கலந்து கொள்கிறார் என்ற செய்தி வெளியிடப்பட்டது.

அதேபோல் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிராண்டன் மெக்கல்லம் இதுதான் தனக்கு கடைசி ஐ.பி.எல். தொடர் என்று வேடிக்கையாக கூறியிருந்தார்.

தற்போது ஐ.பி.எல். தொடருக்கான ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் யுவராஜ் சிங்கும், தவானும் இடம்பெற்றுள்ளனர்.

யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் யுவராஜ் சிங் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். தவான் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது யுவராஜ், தவானிடம் ‘‘உங்கள் மனைவி போன் செய்தார்கள். அப்போது உங்களை பற்றி கேட்டார்கள். அவரை உடனடியாக போன் செய்ய சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்’’ என்று கூறினார்.

உடனே, தவான் ஓடி வந்து தனது பேக்கை திறந்து போனை எடுக்க முயற்சி செய்தார். அப்போது யுவராஜ் சிங் ஏப்ரல்-1 முட்டாள் தினத்தன்று உங்களை வேடிக்கைக்காக ஏமாற்றினேன் என்றார்.

உடனே இருவரும் சிரித்துக் கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டனர்.

இளைஞன் மீது கொலை வெறித் தாக்குதல் நடாத்திய பொலிஸார் அதிரடியாக பணி இடைநீக்கம்!!

களுத்துறையில் சைக்கிள் ஓட்டுனருரை கடுமையாக தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடங்கொட பிரதேசத்தில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிள் சாரதியான இளைஞரை பொலிஸார் கொடூரமாக தாக்கினர் இது தொடர்பான காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸாரில் ஒருவர் தொடங்கொட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சார்ஜென்ட். மற்றவர் அங்கு பணியாற்றும் கான்ஸ்டபில் என தெரிய வந்துள்ளது.

அவர்கள் இருவரும் இணைந்து தொடங்கொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

சாரதி அனுமதி பத்திரமின்றி, உத்தரவை மீறி குறித்த இளைஞர் பயணித்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாம்மை தாக்க வேண்டாம் என பல முறை கூறி போதிலும் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்ட இந்த அதிகாரிகள் யார் என்பதனை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மோட்டார் சைக்கிள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் அடுத்த மாதம் அறிமுகம்!!

அடுத்த மாதம் முதல் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.உத்தேச இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை அமுல்படுத்தும் வரையில், இந்த ஸ்மார்ட் அடையாள அட்டை அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஸ்மார்ட் அடையாள அட்டையை அறிமுகம் செய்ய ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த ஸ்மார்ட் அடையாள அட்டை அறிமுகத்துடன், 1972ம் ஆண்டு முதல் இதுவரையில் புழக்கத்தில் உள்ள லெமினேடிங் செய்யப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் முறைமை ரத்தாகும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பதினைந்து வயதை பூர்த்தி செய்தவர்களுக்கும், அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியவர்களுக்கும், காணாமல் போனவர்களுக்கும் இவ்வாறு புதிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

பழைய இயந்திர சாதனங்களைப் பயன்படுத்தி கடந்த 45 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் தேசிய அடையாள அட்டைகளில் காணப்படும் சில குறைபாடுகளைப் பயன்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த பழைய முறைமை தற்காலத்தில் எந்த வகையிலும் பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பெரிய விமானங்களுக்காக காத்திருக்கும் கட்டுநாயக்க விமான நிலையம்!!

ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக வழமையான செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொண்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையம் எதிர்வரும் 7ம் திகதி முதல் வழமைபோன்று இயங்கவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு பணிகளுக்காக கடந்த ஜனவரி 06ம் திகதி தொடக்கம் ஏப்ரல் ஐந்தாம் திகதி வரை விமான நிலையத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

இதற்காக நாளாந்தம் எட்டுமணிநேரம் வரை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, ஓடுபாதைகள் புனரமைப்பு பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஓடுபாதை புனரமைப்பு பணிகளுக்கு 48 மில்லியன் டொலர்கள் செலவழிக்கப்பட்டிருந்ததுடன், இத் தொகை அரசாங்கம் மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் செலவழிக்கப்பட்டிருந்தது.

தற்போது விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு பணிகள் முற்றாக நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 07ம்திகதி தொடக்கம் விமான நிலையம் வழமை போன்று இயங்கத் தொடங்கவுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்ட ஓடுபாதை புனரமைப்பு பணிகள் காரணமாக உலகின் மிகப் பெரிய விமானங்களும் எதிர்வரும் காலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்து செல்வதற்கான ஓடுபாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

73 வயது மூதாட்டியின் அட்டகாசம் : சுற்றி வளைத்த பொலிஸார்!!

73 வயதான மூதாட்டியினால் நடத்தப்பட்டு வந்த சூதாட்ட மையமொன்று. பண்டாரகம பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம விதாகம பிரதேசத்தில் நீண்ட காலமாக இந்த சூதாட்ட மையம் சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வந்துள்ளது. 73 வயதான மூதாட்டி தனது வீட்டிலேயே இந்த சூதாட்ட மையத்தை நடத்தி வந்துள்ளார்.

சூதாட்ட மையத்தை நடத்தியமை தொடர்பில் ஏற்கனவே இந்த மூதாட்டிக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் மூதாட்டியுடன், சூதாடிக் கொண்டிருந்த மேலும் சில பெண்களும் கைது செய்பய்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் 30 முதல் 40 வயது வரையிலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டவெளியில் பேரொளியுடன் வெடிப்பு : நட்சத்திரங்களை விட ஆயிரம் மடங்கு ஒளியை ஏற்படுத்தியது!!

அண்டவெளியில் மர்மமான வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாகவும், அது அனைத்து நட்சத்திரங்களையும் விட ஆயிரம் மடங்கு ஒளியை ஏற்படுத்தியதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டவெளியில் விஞ்ஞானி சந்திரசேகரின் பெயரில் அழைக்கப்படும் சந்திரா களம்-தெற்கு என்ற இடத்தில் பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டதை நாசா அமைப்பின் எக்ஸ்ரே புகைப்படம் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இதுபோன்றதொரு எக்ஸ்ரே புகைப்படத்தை விஞ்ஞானிகள் இதற்கு முன் கண்டதில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வெடிப்பு நிகழ்ந்தபோது அண்டவெளியில் உள்ள அனைத்து நட்சத்திரங்களையும் விட ஆயிரம் மடங்கு பேரொளி ஏற்பட்டதாகவும் பூமியில் இருந்து 170 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள அண்டவெளிப் பகுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பெரு வெடிப்பிற்கு அறிவியல் ரீதியில் மூன்று வாய்ப்புகள் காரணமாகக் கருதப்படுகின்றன. அவற்றில் இரண்டு வாய்ப்புகள், காமா கதிர்களின் வெடிப்பை சுட்டிக்காட்டுகின்றன. ஒரு பெரிய நட்சத்திரத்தின் சிதைவு அல்லது ஒரு நியூட்ரான் நட்சத்திரத்துடன் மற்றொரு நியூட்ரான் நட்சத்திரம் இணைவது போன்ற காரணங்களால் காமா கதிர்களின் வெடிப்பு ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் பொய்யான தகவலை பதிவேற்றியவருக்கு நேர்ந்த அவலம் : அவதானம்!!

பெண்ணொருவர் பேஸ் புக்கில் பதிந்த ஒரு பொய்யான பதிவிற்காக இலங்கை பெறுமதிப்படி சுமார் 761 இலட்சம் ரூபாய் தண்டப்பணமாக செலுத்துவதற்கு, நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியிலுள்ள பெண்ணொருவர், தன் நண்பர் குறித்து பொய்யான பேஸ்புக் பதிவொன்றை செய்த குற்றத்திற்காக 500,000 டொலர்கள் அபராதம் செலுத்த வேண்டுமென, வடக்கு கரோலினா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஜாக்குலின் ஹாம்மோண்ட் என்ற பெண்ணே, கடந்த 2015 ஆம் ஆண்டு டுவெயின் டயல் என்பவரின் மகன், அவர் மது அருந்திய நிலையில் கொலை செய்யப்பட்டதாக, பேஸ்புக் பதிவில் தெரிவித்திதுள்ளார். ஆனால் உண்மையில் டுவெயின் டயலின் மகன் வேறொரு நபரின் துப்பாக்கி தாக்குதலுக்கு இலக்காகி இறந்துள்ளார்.

இந்நிலையில் ஹாம்மோண்டின் பதிவால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவர் தொடர்ச்சியாகவே பொய்யான பதிவுகளை பரப்பி வருவதாக டுவெயின் டயல் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம், அவரின் பேஸ்புக் கணக்கு பற்றி விசாரணைகளை செய்ததோடு, கொல்லப்பட்டதாக கூறப்படும் சிறுவனின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து, ஹாம்மோண்ட் குற்றம் புரிந்துள்ளதாக நீதிபதி தீர்ப்பளித்து தண்டப்பணத்தொகையை செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்கா ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தந்தையை திருத்த முயன்ற மகள் தந்தையின் கொடூரத்தால் பலி : யாழில் அதிர்ச்சி சம்பவம்!!

யாழ்ப்பாணம், அளவெட்டி மத்தியில் பெற்ற மகளை தீ மூட்டி எரித்துக் கொன்ற தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தையால் தீ மூட்டப்பட்டு கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான யுவதி ஒருவர் ஒரு வாரத்தின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ் அளவெட்டி மத்திப் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் திருவளங்கன் ஜனனி என்ற 27 வயது யுவதி பரிதாபகரமாக உயிரிழந்தாள்.

குறித்த யுவதி கடந்த ஒருவார காலமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தொல்லை தரும் தனது தந்தையை திருத்துவதற்காக ஜனனி முயன்றுள்ளார்.

இருந்தும் அவர் திருந்தாத காரணத்தால் தனது உடலில் பெற்றோலை ஊற்றி தீ வைக்க முயன்றார். அப்போது ஜனனியின் தாயார் தனது மகளை கட்டிப் பிடித்துக் காப்பாற்றி ” உன்னால் தான் நான் உயிர் வாழ்கின்றேன்” என கத்தியுள்ளார்.

இதனால் ஜனனி தற்கொலை முயற்சியைக் கைவிட்டு பெற்றோலை கழுவுவதற்காக குளிப்பதற்கு கிணற்றடிக்குச் சென்ற போது ”நீ இவ்வளவுக்கு துணிந்து விட்டாயா?” என கூறிக் கொண்டு ஜனனியின் உடலில் தந்தை தீக் குச்சியைக் கொழுத்தி எறிந்துள்ளார்.

உடனடியாக ஜனனியின் உடல் தீப் பிடித்து எரிந்துள்ளார். தாயார் கத்திச் சென்று அதை அணைக்க முற்பட்டும் பயனளிக்கவில்லை.

அங்கு கூடிய அயலவர்கள் ஜனனியின் உடலில் பிடித்த தீயை ஒருவாறு அனைத்து யுவதியை தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஜனனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தற்போது தந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

மரணத்தின் போது சிலருக்கு வாழ்வளித்த ஈழ அகதி!!

தமிழகத்தில் விபத்தில் மூளைச் சாவு அடைந்த இலங்கை அகதியின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடலுறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன. ஹெலி காப்டர் மூலம் அவரது இதயத்தை சென்னை மருத்துவமனைக்கு மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் கிருபாகரன்(22). டிப்ளமோ படித்துள்ள அவர், புதுச்சேரியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 29-ம் திகதி ஊருக்கு வந்த கிருபாகரன், தனது தம்பி விக்னேஷ்வரனுடன் இருசக்கர வாகனத்தில் ஆரணிக்குச் சென்றார்.

அடையாளம் என்ற கிராமத்தில் சென்றுகொண்டு இருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்துடன் மோதியதில் இருவரும் படு காயமடைந்தனர். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கிருபாகரனை மட்டும் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், கிருபாகரன் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் நேற்று தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும் பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். கிருபாகரனின் இதயத்தை சென்னை மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சத்தீஸ்கர் மாநில இளைஞருக்கு பொருத்த முடிவானது.

அதன்படி, கிருபாகரனின் இதயம் அகற்றப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் விஐடி பல்கலைக்கழகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தயாராக இருந்த ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு இதயத்தை எடுத்துச் சென்றனர்.

கிருபாகரனின் கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. ஒரு சிறுநீரகம் சென்னை மியாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.