ஜெயிலின் உள்ளே நடன அழகிகளுடன் பொலிசார் செய்த செயல்!!(வீடியோ)

ஹரியானாவில் நடன அழகிகளுடன் ஜெயலின் உள்ளே ஆட்டம் போட்ட பொலிசாரின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தில் உள்ள சிறையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியின் போது வெளியிலிருந்து நடன பெண்களை அழைத்து வந்து பொலிசாரும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது சீருடையுடன் நடனமாடும் பொலிஸ் ஒருவர், நடன அழகிகள் மீது ரூபாய் நோட்டுகளை வீசியதும் இந்த வீடியோ காட்சியில் பதிவானது. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில சிறைத்துறை ஐ.ஜி உத்தரவிட்டார்.

விசாரணையின் முடிவில், ஜெயில் உள்ளே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வெளியிலிருந்து பெண்களை அழைத்து வந்த தலைமை ஜெயில் வார்டன் சத்வான் சிங்-ஐ சஸ்பெண்ட் செய்து ஐ.ஜி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

பசு வதையில் ஈடுபடுவோருக்கு தூக்குத் தண்டனை : முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பசு வதையல் ஈடுபடும் நபர்களை தூக்கலிலிடுவோம் என அம்மாநில முதல்வர் ரமண் சிங் அதிரடியாக பேட்டியளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பசு, காளை, எருமை மற்றும் கன்றுக் குட்டிகளை இறைச்சிக்காக கொல்வது, அந்த இறைச்சியை வைத்திருப்பது, இதர மாநிலங்களுக்கு கொண்டு செல்வது ஆகியவற்றுக்கு தடை உள்ளது.

அதனைமீறி, பசு வதையில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையுடன் 50 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், சத்தீஸ்கரில் பசு வதையில் ஈடுபடுவோருக்கு எதிராக மேலும் கடுமையான நிலைப்பாட்டை அரசு எடுக்குமா என்று முதல்வர் ரமண் சிங்கிடம் செய்தியாளர்கள் சனிக்கிழமை கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், சத்தீஸ்கரில் கடந்த 15 ஆண்டு கால பாஜக ஆட்சியில் அதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடைபெற்றதா? இல்லையென்றே கருதுகிறேன். அதுபோன்ற சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டால், அவர்களை தூக்கிலிடுவோம் என் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதே சமயம் குஜராத்தில் பசு வதையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகைசெய்யும் சட்டத் திருத்த மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது நினைவுக் கூறதக்கது.

வவுனியாவில் 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய பஸ் நிலையம் பயனற்ற நிலையில்!!

வவுனியாவில் 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட முழுமையாகப் பூர்த்தியாகாத நிலையில், எவ்விதப் பயனுமின்றி மூடியே காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவை வவுனியா நகரில் உள்ள பஸ் நிலைத்திலும் தனியார் பஸ் சேவை வவுனியா நகரின் முதலாம் குறுக்குத்தெரு, பண்டாரவன்னியன் வீதி உள்ளிட்ட 5 இடங்களில் இருந்தும் சேவையை முன்னெடுத்து வந்தன.

வவுனியாவில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு பஸ் தரிப்பிடமில்லாத காரணத்தால், கடந்த 2012 ஆம் ஆண்டு புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான தீர்மானம் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், வவுனியா நகரில் இருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் தூரத்தில் 4 ஏக்கர் காணியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக 2013 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

எனினும், இதன் போது குறித்த பகுதியில் பஸ் நிலையம் அமைப்பதற்கு வவுனியா வரி இறுப்பாளர் சங்கமும் தனியார் பஸ் சங்கமும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவை, புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடும் என தெரிவித்தே கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி புதிய பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

அதனையடுத்து, இரண்டு சேவைகளும் ஒரே பஸ் நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டன. எனினும், நேர சுசி முறையாக இன்மையினால் இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்தது.

இரண்டு தரப்பினருக்குமிடையில் இந்த பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
எனினும், பேச்சுவார்த்தை இடம்பெற்று ஒரு வாரத்தின் பின்னர் பழைய இடத்தில் இருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் இயங்க ஆரம்பித்ததுடன், வட மாகாண போக்குவரத்து அமைச்சருக்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

குறித்த பிர்ச்சினைக்கு தீர்வு வழங்கும் முகமாக மார்ச் 31 ஆம் திகதி வரை புதிய பஸ் நிலையத்தினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுவதற்கான புதிய இணைந்த நேர சுசியை அமைப்பதாக மாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரனால் வாக்குறுதி வழங்கப்பட்டது

எனினும், நேற்றுடன் காலக்கேடு முடிவுற்ற நிலையில் எவ்வித தீர்வுமின்றி 195 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பஸ் நிலையம் காட்சியளிக்கின்றது.

670 கோடி செலவில் தங்க முலாம் சட்டகம் அமைக்கும் டுபாய்!!

 
சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக சுமார் 670 கோடி செலவில் டுபாய் நகரின் மத்தியில், அரைவாசி ஈபிள் கோபுரத்தின் உயரத்தை ஒத்த தங்க முலாம் பூசப்பட்ட புகைப்பட சட்டகமொன்றை டுபாய் அரசு அமைத்துள்ளது.

தங்க முலாம் பூசப்பட்ட குறித்த புகைப்பட சட்டமானது, 160 மீற்றர் உயரத்திலும் 93 மீற்றர் அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் நகரின் முழுத்தோற்றத்தையும் பிரதிபலிக்கும் வகையில் குறித்த புகைப்பட சட்டகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பழைய வடக்கு டுபாய் மற்றும் புதிய தெற்கு டுபாய் உள்ளிட்ட இரு நகர்ப்பகுதிகளின் தோற்றத்தை முழுமையாக குறித்த சட்டகத்திற்குள் புகைப்படமாக வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்காக டுபாய் மாநகர சபையால் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த புகைப்பட சட்டகத்தினுடாக வருடமொன்றிற்கு சுமார் 20 இலட்சம் சுற்றுலாப்பயனாளர்களை எதிர்பார்ப்பதாக மாநகர சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dubai Frame under construction above Zabeel Park – UAE; Shutterstock ID 370743674

மூன்று மாதங்களில் டெங்குக் காய்ச்சலால் 53 பேர் உயிரிழப்பு : வைரஸ் தொடர்ந்தும் பரவி வருகிறது!!

கடந்த மூன்று மாதங்களுக்குள் டெங்கு காய்ச்சலினால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 776 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

களுத்துறை – வஸ்கடுவ பகுதியில் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட 23 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இளைஞர் உயிரிழந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் கூறினர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு பூராகவும் சுமார் 26,000 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இவர்களுள் 50 வீதமானவர்கள் மேல்மாகணத்தில் பதிவாகியுள்ளனர்.

கொழும்பில் 5838 பேரும் கம்பஹாவில் 2965 பேரும் திருகோணமலையில் 1745 பேரும் யாழ்ப்பாணத்தில் 1525 பேரும் காலியில் 1507 பேரும் களுத்துறையில் 1386 பேரும் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சுகாதார அமைச்சினால் கடந்த புதன்கிழமை (29) தொடக்கம் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதுவரை சுமார் 24,000 டெங்கு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சுமார் 2999 இடங்களில் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதேவேளை, இன்ப்ளுயன்சா வைரஸ் தொடர்ந்தும் பரவி வருகின்றது.

கடந்த மூன்று மாதங்களுள் 528 பேர் இன்ப்ளுயன்சா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

வெளிநாடுகளிலிருந்து வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் சுகாதார அமைச்சினால் விசேட நடவடிக்கையொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

108 கிலோ எடை கொண்ட நடிகை : மேலும் எடையை அதிகரிக்க மறுப்பு!!

108 கிலோ­கிராம் எடை­யுள்ள நடிகை ஒருவர் தொலைக்­காட்சித் தொட­ரொன்­றுக்­காக மேலும் எடையை அதி­க­ரிக்­கு­மாறு விடுக்­கப்­பட்ட கோரிக்­கையை நிரா­க­ரித்­துள்ளார்.

அஞ்­சலி ஆனந்த் எனும் இந்த நடிகை தஹாய் கிலோ பிரேம் எனும் தொலைக்­காட்சித் தொடரில் நடித்து வரு­கிறார். நாளை முதல் ஸ்டார் பிளஸ் அலை­வ­ரி­சையில் இத் தொடர் ஒளி­ப­ரப்­பா­க­வுள்­ளது.

இத்­ தொ­டரில் பரு­மான ஒரு யுவ­தியின் பாத்­தி­ரத்தில் நடிக்கும் அஞ்­சலி ஆனந்­திடம் மேலும் எடையை அதி­க­ரித்­துக்­கொள்­ளு­மாறு தொலைக்­காட்சித் தொடரின் தயா­ரிப்புக் குழு­வி­னர் ­கோ­ரினர். எனினும், இக்­கோ­ரிக்­கையை அஞ்­சலி ஆனந்த் நிரா­க­ரித்­துள்ளார்.

“தற்­போது நான் மிகுந்த உடற்­செ­யற்­பாடு கொண்ட வாழ்க்கைப் பாணியை பின்­பற்­று­கிறேன். மலை­யே­று­வ­தையும் மலை­களில் சைக்­கி­ளோ­டு­வ­தையும் விரும்பும் ஒரு­வ­ளாக உள்ள நிலையில் இதற்கு மேலும் எடையை அதி­க­ரிக்க விரும்­ப­வில்லை.

நான் 108 கிலோ எடை­யுடன் உள்ளேன். இதற்கும் மேலும் எடையை அதி­க­ரித்தால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்­பு­வது கடினம்” என அஞ்­சலி ஆனந்த் தெரி­வித்துள்ளார். இத்­ தொ­டரில் கதா­நா­ய­க­னாக நடிக்கும் மெஹேர்ஸான் மஸ்டாவும் தனது எடையை 16 கிலோகிராமினால் அதிகரித்துக் கொண்டுள்ளார்

கொலம்பியாவில் பாரிய நிலச்சரிவு : 200 பேர் பலி, 202 பேர் படுகாயம்!!

 
கொலம்பியாவின் தென் மேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 200 பேர் உயிரிழந்துள்ளதுடன், 202 பேர் காயமடைந்துள்ளனர்.

பல மணி நேரம் பெய்த கன மழையின் காரணமாக, மொகோவா ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, புடுமயோ மாகாணத்தில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் அதில் பலரை காணவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் மீட்பு பணிக்காக 1100 இராணுவம் மற்றும் பொலிஸார் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.

புதைக்குழிக்குள் சிக்குண்ட 11 யானைகள் பாதுகாப்பாக மீட்பு!!

கம்போடியா – கியோ செய்மா வனவிலங்கு சரணாலயத்திலுள்ள புதைக்குழிக்குள் சிக்குண்டிருந்த 11 யானைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.

வியட்நாம் யுத்தத்தின் ​போது குறித்த சரணாலயத்தின் பல்வேறு பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டுள்ளமையினால், அங்கு பாரிய குழிகள் ஏற்பட்டு அவை புதைக்குழிகளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதைக்குழிகளில் கடந்த 24ஆம் திகதி நீர் அருந்துவதற்காக 3 குட்டி யானைகளும், 8 பெரிய யானைகளும் சென்றுள்ளன.

இவ்வாறு நீரை அருந்த முயற்சித்த வேளையிலேயே குறித்த யானைகள் புதைக்குழிக்குள் வீழ்ந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யானைகள் குழிக்குள் வீழ்ந்துள்ளதை அவதானித்த பிரதேசவாசிகள் வனத்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த வனத்துறை மீட்புக்குழுவினர் மூன்று நாட்கள் போராட்டத்தின் பின்னர் யானைகளை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் மாணவி பாலியல் துஷ்பிரயோகம் : மாணவன் கைது!!

வவுனியாவில் பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று முன்தினம் (31.03.2017) இரவு பாடசாலை நிகழ்வு ஒன்று மடுக்கந்த பகுதியில் நடை பெற்றுக்கொண்டிருந்தபோது அந்தப்பகுதிக்குச் சென்ற அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் குறித்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

குறித்த மாணவன் மாணவியுடன் நீண்ட நாட்களாக நட்பு ரீதியில் பழகிவந்துள்ளார் என விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த மாணவனைக் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்டவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் 7 ஆம் நாள் வசந்த உற்சவம் !(படங்கள்,வீடியோ!)

வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஏழாம் நாளான நேற்று 01-04 -2017 சனிக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் ஆர்ரதனைகள் இடம்பெற்று மதியம் வசந்த மண்டபபூயையின் பின் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் மூசிகம் மற்றும் மயில் வாகனங்களிலும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் இடப வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர் .

மாலை வசந்தமண்டப பூஜையின் பின் அமிர்தவர்ஷினி தீர்த்த கரைக்கு விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் மூசிகம் மற்றும் மயில் வாகனங்களிலும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் இடப வாகனதிலும் எழுந்தருளியிருந்தனர் .பின்னர் தீர்த்தக்கரையில் மன்மதன் ரதிக்கான அபிசேகங்கள் இடம்பெற்று திருபொற்சுண்ணம் முதலியவை பாடப்பட்டு பக்தர்கள் தீர்த்தக்கரையில் இறைவனை நோக்கி கற்பூரம் கொளுத்தி விடுகின்ற அருமையான வசந்த உற்சவம் இடம்பெற்றது. தொடர்ந்து திருவீதி உலாவந்து வசந்த உற்சவம் நிறைவு பெற்றது .


வவுனியாவில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு : மோப்ப நாயின் உதவியுடன் பொலிசார் சோதனை!!

 
இன்று (02.04.2017) வவுனியாவிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களின் வருகையை முன்னிட்டு வவுனியாவில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா பொது வைத்தியாசாலைக்கு வருகைதருவோர் பொலிஸாரின் சோதனைக்குப் பின்னரே வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

வடமாகாண ஆளுனர் மன்னார் ஆயர் இல்லத்தில் முள்ளிக்குள மக்களின் பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்!!

 
நேற்று (31.03.2017) வன்னி மாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் முல்லை மாவட்ட கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் பிராந்திய முகாமையாளருமான கலாநிதி எஸ்.சந்திரகுமார் தலைமையில் வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே அவர்களை மன்னார் மாவட்ட ஆயர் இல்லத்தின் குரு முதல்வர் சிலாவத்துறை பங்குந்தந்தை, இலங்கை செஞ்சிலுவைச்சங்க தலைவர் சந்தித்து முள்ளிக்குள மக்கள் தமது பூர்வீக நிலங்களை பெறுவதற்காக போராட்டம் தொடர்பாக கலந்துரையாடலும் நடைபெற்றது.

இச் சந்திப்பின் போது மன்னார் அப்போஸ்தல பரிபாலகர் மேதகு வணக்கத்துக்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை மேற்படி மக்களின் போராட்டம் தொடர்பாக இலங்கை அதிமேதகு ஜனாதிபதி அவர்கட்கு எழுதிய கடிதம் ஒன்றை ஆளுநரிடம் கையளித்தனர்.

கல்வி இராஜாங்க அமைச்சர் யாழ் மாவட்ட கிறிஸ்தவ மத போதகர்களுடன் கலந்துரையாடல்!!

 
கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ்.இராதாகிருஷ்ணன் யாழ் மாவட்ட விஜயத்தின் போது வன்னி மாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் கலாநிதி.எஸ்.சந்திரகுமாரின் ஆலோசனைக்கிணங்க யாழ் மாவட்ட கிறிஸ்தவ மத போதகர்களின் ஐக்கியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மத போதகர்கள், நிர்வாக உறுப்பினர்கள் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடல் யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதியில் அமைந்துள்ள ஏஞ்சல் சர்வதேச பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் சுமார் 150 மத போதகர்கள், கிறிஸ்தவ பாடத்திற்கான ஆசிரியர்கள் மற்றும் கல்விமான்கள், சமூகவியலாளர்கள், கல்வி ஆசான்கள் ஒன்று சேர்ந்து யாழ் மாவட்டத்தின் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை சம்மந்தமாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

வவுனியாவில் புகை பிடிப்பவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்!!

 
இன்னும் சிகரட் புகைக்கும் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்து வவுனியா மாவட்ட இளைஞர்களினால் இன்று (01.04.2017) விழிப்புணர்வுப் பேரணியொன்று இடம்பெற்றது.

வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து காலை 10 மணிக்கு ஆரம்பமான இவ் விழிப்புணர்வுப் பேரணி வவுனியா நகரை வலம்வந்தது.

குறிப்பாக வவுனியா மத்திய பேரூந்து நிலையம், மத்திய சந்தை, பஜார் வீதி, குருமன்காடு, வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில் இவ் விழிப்புணர்வுப் பேரணி சென்றது.

இப்பேரணியில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்ப்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரம், சுவரொட்டிகளை ஒட்டினர்.

வவுனியாவில் 37வது நாளாகத் தொடரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!!

 
வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று(01.04.2017) 37வது நாளாக தொடர்ந்து வருகின்றது.

எங்களது கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து முடிவு தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது!!

வவுனியாவில் நேற்று (31.03) பிற்பகல் மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இராணு வீரரை கையும் மெய்யுமாக பொலிசார் கைது செய்துள்ளர்.

நேற்று பிற்பகல் பேருந்து நிலையத்தில் தம்புள்ளை பகுதியைச் செர்ந்த இராணுவ வீரர் ஒருவர் 100 கிராம் 700 மில்லி கிராம் கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டள்ளார்.

குறித்த இரணுவ வீரர் ஏற்கனவே கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவரை விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பவுள்ளனர்.