வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஆறாம் நாளான நேற்று ம 31-03 -2017 வெள்ளிகிழமையன்று காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கமலேஸ்வர குருக்கள் தலைமையில் நடராஜ பெருமானுக்கு விசேட யாகம் மற்றும் அபிசேகங்கள் முதலியன இடம்பெற்று 10.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம் பெற்று விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் தனி தனி வாகனங்களிலும் நடராஜரும் பார்வதியும் அசைந்து ஆடி ஆடி வீதி வலம் வந்தமை இன்றைய தினம் விசேட அம்சமாகும்.
ஈற்றில் நடராஜ பெருமானுக்குரிய யாகம் கலைக்கப்பட்டு வழமையான மதிய பூஜையுடன் பகல் திருவிழா நிறைவு பெற மாலை மமீண்டும் வழமை போல நான்கரை மணிக்கு மகா யாகம் தொடங்கப்பட்டது .
அதன் பின் தம்ப பூஜை வசந்த மண்டப பூஜையுடன் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் மூசிகம் மற்றும் மயில் வாகனங்களிலும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் இடப் வாகனத்திலும் திருவீதி உலா வந்து மாலை திருவிழா இரவு ஒன்பது மணியளவில் நிறைவு பெற்றது.
மாலைத்தீவின் பிரபல மொடல் அழகி வங்கதேச மருத்துவ கல்லூரி விடுதியில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் மருத்துவ கல்லூரில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் 21 வயதான Raudha Athif மொடல் அழகியே இவ்வாறு இறந்துள்ளார். பிரபல மொடல் அழகியான Raudha Athif பெண்கள் விடுதியில் தங்கி மருத்துவ படிப்பு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தின் போது Raudha Athifயின் அறை அடைக்கப்பட்டிருந்ததை கண்ட மாணவியர்கள் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
Raudha Athif தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
2014ம் ஆண்டு ப்ளூ நிற கண்களுடன் எடுக்கப்பட்ட Raudha Athifயின் மொடல் புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாகி பிரபலமடைந்தது. இந்த புகைப்படத்தை கண்ட மாலைத்தீவு முன்னாள் பிரதமர் Raudha Athifவை புகழ்ந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, பிரபல பத்திரகையான VOGUE அட்டை படத்தில் Raudha Athifயின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் விபத்தில் சிக்கிய நபர் ஒருவருக்கு அவரது கையில் காதை வளர்த்து அதையே அவருக்கு பொருத்தி மருத்துவர்கள் செயல்பட வைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் சியான் நகரத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் காதை இழந்த ஜி என்பவருக்கு செயற்கையாக ஒரு காதை கையில் வளர்த்து, அதை பொருத்தி வெற்றியடைந்துள்ளனர் சீன மருத்துவர்கள்.
3டி தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, விலா குருத்தெலும்பை காது போல் வடிவமைத்து அது கையில் வளர்க்கப்பட்டது. இது ஜியின் கையில் பல மாதங்களுக்கு வளரக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மருத்துவர்களின் உதவியால் கடந்த நவம்பர் மாதம் ஜி காதை வளர்க்க தொடங்கினார். கடந்த 4 மாதங்களாக காது ஜியின் கையில் வளர்க்கப்பட்டது.
அந்தக் காது அவரது உடலில் ஒட்டி வளர ஆரம்பித்துவிட்டதாம். வளரவளர அந்தக் காது உணர்ச்சியுள்ள காதாக மாறிவிட்டதாக மருத்துவர் குவோ தெரிவித்துள்ளார்.
தற்போது நன்கு வளர்ச்சி அடைந்த அந்த காதை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி காது இருக்க வேண்டிய இடத்தில் பொருத்தியுள்ளனர்.
சுமார் ஏழு மணி நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றியடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக பொருத்தப்பட்ட அவரது காது தற்போது நன்றாக கேட்கப்படுகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பாலியல் தொல்லை காரணமாக 14 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் அவர் கைப்பட எழுதி படுக்கையில் வைத்திருந்த கடிதத்தை குடும்பத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
அதில், தனது சாவுக்கு பள்ளியின் தாளாளர் சரவணன் தான் காரணம் என சிறுமி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த பொலிசார் நடத்திய விசாரணையில் அதிரச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் அவரது அத்தை வீட்டுக்காரரான சரவணன் பள்ளியின் தாளாளராக உள்ளார்.
கடந்த ஆண்டு சிறுமி அவரது வீட்டிற்கு சென்ற போது சரவணன் மயக்க மருத்து கொடுத்து சிறுமியை சீரழித்துள்ளார்.
இதனையடுத்து தொடர்ந்து சரவணனின் பாலியல் தொல்லை தாங்க முடியாத சிறுமி இரண்டு மாதத்திற்கு முன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது, உண்மையை கண்டறிந்த சிறுமியின் குடும்பத்தினர், சரவணனை உறவினர் என்பதால் தண்டிக்காமல் விட்டுள்ளனர். இதனையடுத்தும் சரவணன் மீண்டும் மீண்டும் மிரட்டியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சிறுமியின் அத்தை கணவரான சரவணனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தான் காதலித்து வந்த மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை நான்கு முறை திருமணம் செய்து, தன்னுடைய காதல் புனிதமானது என்பதை இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்திய மேலாண்மை நிறுவனத்தில் படித்து வந்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஃபயஸ் மற்றும் இந்து சமுதாயத்தைச் சேர்ந்த அங்கீதாவும் பார்த்த முதல் பார்வையில் காதலிக்கத் துவங்கி விட்டனர்.
ஆனால், இந்த காதலுக்கு அங்கீதாவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. அங்கீதாவின் பெற்றோர் அரியானாவில் உள்ள ஹிசாரில் வசித்து வருகின்றனர்.
அங்கீதாவை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், ”அங்கீதாவை மதம் மாற வலியுறுத்த மாட்டேன். மாமிச உணவுகள் சாப்பிட வற்புறுத்த மாட்டேன். அவரது வாழ்க்கையை அவர் வாழலாம்” என்று அங்கீதாவின் பெற்றோரிடம் சொல்லிப் பார்த்துள்ளார் ஃபயஸ். ஆனால், அங்கீதாவின் பெற்றோரை சமாதனப்படுத்த முடியவில்லை.
இதற்குப் பின்னர் ஒருவரை பிரிந்து ஒருவர் இந்த உலகில் உயிர் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்த காதலர்கள் இருவரும், முதலில் மகாலட்சுமி நகரில் உள்ள ராமர் கோயிலில் திருமணம் செய்துள்ளனர்.
இரண்டாவது நீதிமன்றத்தில் திருமணம் செய்துள்ளனர். மூன்றாவது முஸ்லிம் முறைப்படி கோவாவில் திருமணம் செய்துள்ளனர்.
நான்காவது முறையாக கோவா பீச்சில் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளனர்.
தங்களது காதலை நிரூபிக்க அங்கீதாவை ஃபயஸ் நான்கு முறை திருமணம் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஆனால் என்ன நடந்தாலும் இவர்களது திருமணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று அங்கீதாவின் தந்தை சபதம் செய்து பங்ககேற்கவில்லையாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந்துள்ளது. தற்போது இவர்கள் தம்பதிகளாக அனைத்து இந்து மற்றும் முஸ்லிம் விழாக்களையும் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது அங்கீதாவின் பெற்றோர், ”நாங்கள் பார்த்து இருந்தால் கூட இந்தளவிற்கு பொருத்தமான மாப்பிள்ளையை பார்த்து இருக்க முடியாது. ஃபயஸ் எங்களது மகன் போன்றவர் என்று புகழ்ந்து பேசுகின்றனராம்.
ஆர்.கே நகர் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற சசிகலா ஆதரவாளர் சி.ஆர் சரஸ்வதி மீது அழுகிய தக்காளி மற்றும் காய்கறிகள் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர்.கே நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன் தொடர்ந்து மக்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக நேற்று அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி திறந்த ஜீப்பில் நின்று தொப்பி சின்னத்திற்கு ஓட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஓ.பிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்னு சொல்லிட்டு பிணமாக தானே கொண்டு வந்தீங்க என அவரை நோக்கி கூச்சலிட்டனர்.
அப்போது இதை பார்த்து அங்கு வந்த பெண்கள், கீழே கிடந்த அழுகிய தக்காளி, காய்கறிகளை எடுத்து சரஸ்வதி மீது வீசினார்கள். இதையடுத்து அவர் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்று விட்டார்
6 வயது சிறுவனை சுட்டுத்தள்ளிய பொலிசாருக்கு, 55 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் மார்க்ஸ்வெல்லி பகுதியில் Chris Few என்பவர் தனது ஆறு வயது மகன் Jeremy Mardis உடன் காரில் சென்றுள்ளார்.
அப்போது பொலிசார் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆறு வயது மகன் Jeremy Mardis பரிதாபமாக பலியானார். Chris Few படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அது தொடர்பான வழக்கு நடந்து வந்த வேளையில் தற்போது நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதில் 6 வயது சிறுவனை சுட்டு கொலை செய்த Derrick Stafford என்ற பொலிசாருக்கு நீதிமன்றம் 55 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிக்காக பின்பற்ற வேண்டிய புதிய பல சட்டத்திட்டங்கள் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளன.
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட 2001/2 இலக்கம் கொண்ட விசேட வர்த்தமானிக்கமைய இந்த சட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் இந்த புதிய சட்டங்களை செயற்படுத்தும் தினம் குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்படாத நிலையில் விசேட வர்த்தமானி வெளியிட்டு இந்த புதிய சட்டத்தை 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து செயற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய வாடகைக்கு அல்லது பொருட்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்படும், முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களினால் அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்படுத்தப்படும் டெக்ஸி மீட்டர் பொருத்தப்பட்டிப்பது கட்டாயமாகும்.
மேலும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட 2001/2 இலக்க விசேட வர்த்தமானிக்கமைய கட்டணம் செலுத்திய பின்னர் அதற்கான பற்று சீட்டு வழங்குவது சாரதியின் பொறுப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் வாகனங்களின் பெற்றோல் தாங்கிகளை முற்றாக நிரப்ப வேண்டாம் என்று எரிபொருள் விற்பனை நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையினால் பெற்றோல் தாங்கிகள் வெடிப்புக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக உரிய நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
இதனால் பெற்றோல் தாங்கியின் அரைவாசியை மாத்திரம் பெற்றோலால் நிரப்புமாறும் ஏனைய பகுதியை வெற்றிடமாக விடுமாறும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அறிவித்திருக்கிறது.
எனினும் குறித்த நிறுவனத்தினால் முன்னெடுக்கும் பிரசாரத்தை அமைச்சர் சந்திம வீரக்கொடி முற்றாக நிராகரித்துள்ளார்.
பெற்றோல் தாங்கிகள் வெடித்துச் சிதறிய ஐந்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. ஆனால், இதனை உறுதிப்படுத்துவதற்கான எந்தச் சான்றும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. இதனால் உரிய நிறுவனத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
தமிழகத்தின் வாணியம்பாடி அருகே வானத்தில் இருந்து சக்தி வாய்ந்த ஒளி தாக்கியதில் காயமடைந்த பெண் இன்று மரணமடைந்துள்ளார்.
வாணியம்பாடி அருகே துரிஞ்சாபுரம் கிராமத்தில் கடந்த 24ஆம் திகதி அதிகாலையில், புவனேஸ்வரி என்ற பெண்ணின் வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் ஒளி விழுந்தது.
அப்போது இடி விழும்போது ஏற்படும் சத்தத்தை விட, அதிக சத்தம் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சக்திமிக்க ஒளி வீட்டை தாக்கியபோது வீட்டின் ஓடுகள் உடைந்து சிதறின.
இந்தச் சம்பவத்தில், புவனேஸ்வரி படுகாயமடைந்தார். இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நாட்றம்பள்ளி தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டப்பகலில் எரி கல் விழுந்து ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது
வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (31.03.2017) வீடுடைத்து திருட்டுச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா மகாறம்பைக்குளம் கல்வியற்கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் வீட்டார்கள் திருமண நிகழ்விற்காக நேற்றையதினம் வீட்டினை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பிய சமயத்தில் வீட்டின் கூறையினை உடைத்து வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் வீட்டினுள் இருந்த ஒருலட்சத்தி அறுபதாயிரம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் இரு தொலைபேசிகளை களவாடிச்சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
நியூஸிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா 2 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது. இதனை அடுத்து சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 500,000 அமெரிக்க டொலர்கள் தென் ஆபிரிக்காவுக்கு பணப்பரிசாக வழங்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2–1 என்ற ஆட்டக் கணக்கில் தனதாக்கிக்கொண்ட இந்தியா 122 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக செவ்வாயன்று ஐ.சி.சி.யின் வெற்றி கோலையும் 10,000,000 அமெரிக்க டொலர் பணப்பரிசையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மூன்றாம் இடத்தைப் பெற்ற அவுஸ்திரேலியாவுக்கு 300,000 அமெரிக்கா டொலர்களும் நான்காம் இடத்தைப் பெற்ற இங்கிலாந்துக்கு 100,000 அமெரிக்க டொலர்களும் பணப்பரிசாக வழங்கப்பட்டது.
2016 ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 2017 மார்ச் 31வரையான 12 மாத காலப்பகுதியில் ஒரு ஒற்றை டெஸ்ட் உட்பட இந்தியா ஐந்து தொடர்களில் வெற்றிபெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் (20), நியூஸிலாந்து (3–0), இங்கிலாந்து (4–0), பங்களாதேஷ் (1–0), கடைசியாக அவுஸ்திரேலியா (2–1) ஆகிய நாடுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியா வெற்றிபெற்றது.
இதே காலப்பகுதியில் நியூஸிலாந்து (சொந்த மண்ணில் 1–0, அந்நிய மண்ணில் 1–0), அவுஸ்திரேலியா (2–1), இலங்கை (3–0), ஆகிய நாடுகளுக்கு எதிரான தொடர்களில் தென் ஆபிரிக்கா வெற்றிகொண்டது.
அவஸ்திரேலியாவின் பெறுபேறுகள் சிறப்பாக அமையவில்லை. இலங்கை (0–3), தென் ஆபிரிக்கா (1–2), இந்தியா (1–2) ஆகிய நாடுகளிடம் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்ததுடன் பாகிஸ்தானை (3–0) மாத்திரம் வெற்றிகொண்டிருந்தது.
நான்காம் இடத்திலுள்ள இங்கிலாந்து 2–0 என இலங்கையை வெற்றிகொண்டதுடன் பாகி ஸ்தான் (2–2), பங்களாதேஷ் (1–1) ஆகிய நாடுகளுடனான டெஸ்ட் தொடர்களை சமப்படுத்தியது. இந்தியாவுக்கு எதிராக 0–4 என தோல்வி அடைந்தது.
டெஸ்ட் தரவரிசை (2017 மார்ச் 29 வரை)
இந்தியா 122 (+1)
தென் ஆபிரிக்கா 109 (+2)
அவுஸ்திரேலியா 108 (-1)
இங்கிலாந்து 101
பாகிஸ்தான் 97
நியூஸிலாந்து 96 (-2)
இலங்கை 90
மேற்கிந்தியத் தீவுகள் 69
பங்களாதேஷ் 66
ஸிம்பாப்வே 05
அமெரிக்க ஜனாதிபதியின் தலைமை உதவியாளராக அவரது மகள் இவன்கா ட்ரம்பை நியமிக்கவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இவன் காவின் கணவரான ஜெரெட் குஷ்னர் ட்ரம்பின் ஆலோசகர்களில் ஒருவராக பதவி வகித்து வருகிறார்.
அரச நிர்வாகத்தில் தன்னுடைய மகளான இவன்காவிற்கு ஆர்வம் அதிகமாக இருப்பதால் வெள்ளை மாளிகையில் இவன்காவிற்கு ஓர் அலுவலகத்தை ட்ரம்ப் ஒதுக்கினார்.
ஆனால், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘நிர்வாகப் பதவி எதையும் வகிக்காமல் வெள்ளை மாளிகையில் இவன்காவிற்கு அலுவலகம் ஒதுக்குவது தவறு’ என விமர்சனம் எழுந்தது.
இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து தன்னுடைய முதன்மை உதவியாளராக இவன்காவை பதவியில் அமர்த்துவதாக ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதன்மூலம் ஜனாதிபதியுடன் முழு நேரமும் இருப்பதுடன், அவருடைய முக்கிய நடவடிக்கைகளைக் கவனிக்கும் கூடுதல் பொறுப்பு தற்போது இவன்காவிற்கு கிடைத்துள்ளது.
இந்தப் பதவியைத் தொடர்ந்து எதிர்காலத்தில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி பதவியில் அமர இவன்கா இப்போதே அச்சாரம் போட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கல்விப் பொதுத் தராதர சாதரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கும் உயர்தரத்தில் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவ் வேலைத்திட்டத்துக்கமைவாக 26 புதிய கற்கை நெறி பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த காலங்களில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்கள் தங்களது பாடசாலை கல்வியை கைவிட்டு சிறு தொழில் செய்யும் நிலை காணப்பட்டது.
இதனால் அவர்களது வாழ்வாதாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இன்றி பாரிய இன்னல்களை எதிர்நோக்க வேண்டிய நிலை இருந்தது.
ஆனால், அதனை மாற்றியமைத்து நாட்டில் அனைவருக்கும் சிறந்த கல்வியை ஏற்படுத்துவதே நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்காகவே நாம் கடந்த காலத்தை விடவும் அதிகமாக கல்வித்துறைக்கு முதலீடு செய்துள்ளோம்.
கல்வி பொதுத் தராதர சாதாரணத் தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கும் உயர்கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதன்மூலம் குறித்த சித்தியடையாத மாணவர்களும் உயர்தரக்கல்வியை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பேற்படும்.
அவர்களுக்கான விளையாட்டு தொழிநுட்பம் உள்ளிட்ட 26 தொழில் ரீதியான கற்கைநெறி பிரிவுகள் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த 26 கற்கை நெறிபிரிவுகளில் மாணவர்கள் மூன்று பாடங்களில் தங்களது கற்கை நெறியினை தொடருவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இத் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் எனவும் சுட்டிக் காட்டினார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2016ம் வருடத்திற்கான அதி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்வீல்ட் சோபர்ஸ் விருதை இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் பெற்றுக்கொண்டார்.
இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி முடிவில் இந்த விருதை இந்திய உலக சம்பியன் (1983) அணித் தலைவர் கபில் தேவ் சம்பிரதாயபூர்வமாக வழங்கினார்.
இந்த விருதுடன் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் அதி சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதையும் அஷ்வின் பெற்றுக்கொண்டார். இந்த விருதை சுனில் காவஸ்கர் வழங்கினார்.
சர்வதேச தொழில்நுட்ப சந்தையில் நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட சம்சுங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்ஃபோன்கள் நேற்றிரவு அமெரிக்காவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன.
சம்சுங் S8 மற்றும் S8+ என இரு ஸ்மார்ட்ஃபோன்களின் விற்பனையும் ஏப்ரல் 21 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சம்சுங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்ஃபோன்கள் ஐந்து வித நிறங்களில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்சுங் S8 மற்றும் S8+ ஸ்மார்ட்ஃபோன்கள் அந்நிறுவனத்தின் குரல் சார்ந்த வெர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிக்ஸ்பி (Bixby) என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை முதன் முதலாக சம்சுங் S8 சீரிசில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று சம்சுங் பிக்ஸ்பி அப்பிளின் சிரி, கூகுள் அசிஸ்டண்ட், கார்டனா மற்றும் அமேசானின் அலெக்சா உள்ளிட்ட சேவைகளுக்குப் போட்டியாக அமைந்துள்ளது.
கேலக்ஸி S8 ஸ்மார்ட்ஃபோன்களில் பிக்ஸ்பி சேவையை சப்போர்ட் செய்யும் செயலிகளும் வழங்கப்பட்டுள்ளன.
சம்சுங் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்ஃபோன்களில் ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வசதி கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய ஐரிஸ் ஸ்கேனர் இருப்பதால் பல்வேறு சேவைகளைப் பாதுகாப்பாக இயக்க உங்களது கண் பார்வை மட்டுமே போதுமானது. இத்துடன், கூடுதல் பாதுகாப்பு வழங்க இரு மாடல்களிலும் கைரேகை ஸ்கேனரும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மைக்ரோசொப்ட் காண்டினியம் போன்ற வசதியை புதிய ஸ்மார்ட்ஃபோன்களில் சாம்சங் வழங்கியுள்ளது. சாம்சங் டெக்ஸ் (Samsung Dex) என அழைக்கப்படும் இந்த சாதனம் உங்களது ஸ்மார்ட்ஃபோனை கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்த வழி செய்யும். சாம்சங் டெக்ஸ்-இல் புதிய S8 ஸ்மார்ட்போனினை வைத்தால் கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்தலாம்.
முந்தைய கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்களைப் போன்றே புதிய ஸ்மார்ட்ஃபோனிலும் Water and dust proof வசதி வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்ஃபோன்களும் அண்ட்ரோய்ட் 7.0 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த சாம்சங் UI கொண்டு இயங்குகிறது.
சிறப்பம்சங்களைப் பொருத்த வரை கேலக்ஸி S8 ஸ்மார்ட்ஃபோனில் 5.8 இன்ச் QHD+1440×2960 ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளேயும், S8+ ஸ்மார்ட்ஃபோனில் 6.2 இன்ச் QHD+1440×2960 ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளேயும் வழங்கப்பட்டுள்ளது. இவை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.
அமெரிக்க சந்தையில் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்ஃபோன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்படும் என்றும் இதர சர்வதேச சந்தைகளில் எக்சைனோஸ் 8895 சிப்செட் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மெமரியைப் பொருத்த வரை இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களிலும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியைக் கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி, என்எஃப்சி மற்றும் ஜிபிஎஸ் ஒப்ஷன்களுடன் பல்வேறு இதர சென்சார்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றில் சாம்சங் பே வசதியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்ஃபோன்களில் Fast Charging வசதி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும், S8+ ஸ்மார்ட்போனில் 3500 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.
சம்சுங் கேலக்ஸி S8 விலை 750 டொலர்கள் எனவும் S8+ ஸ்மார்ட்ஃபோன் விலை 850 டொலர்கள் எனவும் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.