முள்ளம் பன்றி ஒன்றை பிடித்து உண்ணுவதற்கு முயற்சித்த மலைப்பாம்பு ஒன்று, முள்ளம் பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாம்பின் உடல் முழுவதும் பன்றியின் முற்கள் காணப்படுவதும் அது வலியால் துடிப்பதுமான காணொளியே வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் பிரேசிலில் உள்ள கிராமபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை முள்ளம் பன்றியின் தாக்குதலுக்கு இலக்கான குறித்த பாம்பு மீண்டும் நாய் ஒன்றிடம் மாட்டிக்கொள்வதும் நாயிடம் இருந்து விடுபட போராடுவதுமான காட்சியும் அக்காணொளியில் பதிவாகியுள்ளது.
பதில் பதிவுகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது ட்விட்டர். இன்று முதல் இந்தப் புதிய வசதி ட்விட்டர் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு ட்விட்டர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அலைபேசியில் அனுப்பப்படும் செய்திகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கை 140ஆக இருந்தது. இதனால், ட்விட்டரும் அதையே தொடரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
எனினும் ஃபேஸ்புக்கில் நீண்ட கட்டுரைகளைக் கூட எழுத முடிவதால், விஸ்தாரமான பதிவுகளை நாடும் பயனாளர்கள் ட்விட்டரைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
இதைக் கருத்திற்கொண்டு, ஒவ்வொரு பதிவுக்குமான எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாக ட்விட்டர் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. அதன் முதற்கட்டமாக, பதில் பதிவுகளின் எண்ணிக்கையை இன்று முதல் அதிகரித்துள்ளது.
இதன்படி, தொடர்ந்தும் 140 எழுத்துக்களுக்கு மட்டுமே இடம் இருந்தாலும் கூட, பதில் பதிவுகளின்போது குறித்த ட்விட்டராட்டியின் பெயருக்காக எடுத்துக்கொள்ளப்படும் இடம், கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இதனால், அதற்காக எடுத்துக்கொள்ளப்படும் இடத்தை ட்வீட்டுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று ட்விட்டர் அறிவித்துள்ளது.
கிரிக்கெட் வீரர், விராட் கோஹ்லியின் காதல் இளவரசி அனுஷ்கா சர்மா, பார்ப்பதற்கு மென்மையானவராக தோற்றமளித்தாலும், மனதளவில் தைரியமான பெண்ணாக இருக்கிறார்.
இப்போதெல்லாம், வெயிட்டான ரோலில் நடிக்கிறீர்களே என, கேட்டால், துவக்கத்தில் சில உப்புமா ரோல்களில் நடித்தேன். இப்போது, எனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். இரண்டு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி விட்டு செல்ல, நான், சாதாரண பெண் அல்ல என, ஆவேசமாக பேசுகிறார்.
எவ்வளவு நாட்களுக்கு படங்களில் நடிப்பேன் என தெரியவில்லை. ஆனால், மற்ற நடிகையரில் இருந்து மாறுபட்டு இருக்க விரும்புகிறேன். எனக்கென தனித்துவம் வேண்டும். அப்படிப்பட்ட படங்களில் மட்டுமே நடிப்பேன்’ என்கிறார், அனுஷ்கா
தற்கொலை செய்ய முயன்ற தனது வீட்டுப் பணிப்பெண்ணை காப்பாற்றுவதற்கு பதிலாக, அதை ஒளிப்பதிவு செய்து இணையதளத்தில் பகிர்ந்த வீட்டு உரிமையாளரான பெண்ணை குவைத் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தற்கொலைக்கு முயன்ற அந்த கறுப்பின பணிப்பெண், கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது. எனினும், தான் விழுவதை அவரால் தடுக்க முடியாமல் போனது. எவ்வாறெனினும், ஜன்னல் கண்ணாடிச் சட்டகத்தை ஒரு கையால் பிடித்துக்கொண்டு உதவிக்காகக் கதறினார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த வீட்டு எஜமானி, அவருக்கு உதவி செய்யாமல் அந்தக் காட்சியைப் படம்பிடித்ததுடன், “என்ன பைத்தியக்காரத்தனம்? மேலே எழும்பி வா” என்றும் கூறினார். இதற்கிடையில், ‘என்னைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என கத்திய அந்தப் பணிப்பெண்ணின் கை நழுவவே கீழே விழுந்தார். அப்போதும் ஒளிப்பதிவைக் கைவிடாத அந்த எஜமானி, அவர் விழுவதையும் படமாக்கினார். இந்தக் காட்சியை அவர் இணையதளத்திலும் பதிவேற்றியுள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து குறித்த எஜமானியை பொலிஸார் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். இது தற்கொலை முயற்சியா அல்லது கொலை முயற்சியாக இருக்கலாமா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
எவ்வாறெனினும், ஏழாம் மாடியில் இருந்து விழுந்த அந்தப் பணிப்பெண், தெய்வாதீனமாக சில காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல பங்களாதேஷ் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரிலும் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன.
நிரோஷன் டிக்வெல்ல கையில், பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக இவர் பங்களாதேஷ் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் விளையாடமாட்டார் எனவும், இரண்டாவது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் பத்ம விபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுவதும் வழக்கம். இந்நிலையில் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழா நடைபெற்றது.
பத்ம விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி மாளிகையில் விருதுகளை வழங்கினார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பின்னணி பாடகி அனுராதா பட்வால், சேகர் நாயக், தீபா மாலிக், தீபா கர்மாகர், சாக்ஷி மாலிக், உள்ளிட்டார் பத்மஸ்ரீ விருது பெற்றனர்.
இந்த விழாவில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
எங்கேயும் எப்போதும் காதலித்துக் கொண்டிருந்த நட்சத்திர ஜோடிகளை பலூன் மீண்டும் இணைத்துள்ளது. அந்த நட்சத்திர ஜோடிகளுக்குள் இருந்த சிறு காதல், இந்த பலூன் மூலம் மேலும் அதிகமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் தற்போது ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
அவர்கள் யாரென்றால், சித்தியுடனான பிரச்சினையில் வீட்டை விட்டு வெளியே வந்த நாயகியும் வலியவனான நாயகரும்தான். இரண்டு பேரும் ஏற்கனெவே ஒரு படத்தில் சேர்ந்து நடித்தபோது, இவர்களுக்குள் காதல் என்று ஒரு பேச்சு அடிபட்டது. அப்போதைக்கு இருவரும் தங்களுக்குள் காதல் இல்லை என்று சொல்லிக்கொண்டாலும், எங்கேயும் எப்போதும் ஒன்றாகவே சுற்றிக் கொண்டு வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, இருவரும் வீட்டில் ஒன்றாக தோசை சுட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாதிரியான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இவர்கள் மறுபடியும் காதலர்களாகிவிட்டார்கள் என்று சொல்லப்பட்டது. முன்பு, தங்கள் காதலர்கள் என்ற செய்தியை மறுத்தவர்கள், தற்போது கூறப்படும் செய்தி குறித்து எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார்கள்.
எனவே, இவர்களுக்குள் காதல் இருக்கிறது என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இதற்குள் இவர்கள் இரண்டு பேரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் ஒரு செய்தி அடிபடுகிறது. இந்த வருடத்திற்குள் இவர்கள் இரண்டு பேருககும் திருமண நடந்துவிடும் என்றும் கூறுகின்றனர். இதற்கு, இருவரும் கூடிய விரைவில் பதில் சொல்வார்கள் என திரையுலகமே காத்திருக்கிறது.
\மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை வீதியில் உள்ள வீட்டின் கிணறில் இருந்து, சிசுவின் சடலம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.
இன்று இரவு வாவிக்கரை, மேல்மாடி வீட்டு வீதியில் உள்ள ஒருவரின் வீட்டின் கிணறில் இருந்தே இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிசுவினை பிரசவித்தவர்கள் சீலையில் சுற்றி கல்லைக்கட்டி குறித்த வீட்டின் கிணற்றில் வீசிவிட்டுச் சென்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால் கிணற்றினை துப்புரவுசெய்யும்போது சிசுவின் சடலத்தைக்கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் குறித்த வீட்டில் வேலைசெய்துவந்த பெண்ணின் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இந்த சிசு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் குற்ற தடவியல் பிரிவு பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இலங்கையில் அதிக வயதில் பரீட்சை எழுதிய பெண்மணி என்ற பெருமையை அத்தபத்து கல்யாணவத்தி எனும் மூதாட்டி பெற்றுள்ளார்.
74 வயதான நாணயக்கார ஹேவா அத்தபத்து கல்யாணவத்தி என்ற மூதாட்டி கடந்த வருடம், க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதியுள்ளார். இவர் மாத்தறை, நாதுகல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
இவர் சாதாரண தரத்திலான இரண்டு பாடங்களுக்கு பரீட்சை எழுதியுள்ளார். எனினும் இரண்டு பாடங்களிலும் சித்தியடையவில்லை.
அதற்கமைய அவர் தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடங்களை தெரிவு செய்து, மாத்தறை கொட்டுவேகொட இல்மா மத்திய மகா வித்தியாலயத்தில் தனியார் விண்ணப்பதாரியாக பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்..
எனினும் அவர் பரீட்சை எழுதிய இரண்டு பாடங்களிலும் சித்தியடையவில்லை என தெரியவந்ததனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த முறை ஆயத்தம் இன்றி பரீட்சை எழுதியதாகவும், இம்முறை மேலதிக வகுப்புகளுக்கு சென்று பரீட்சையில் சிறந்த முறையில் முகம் கொடுப்பதற்கு ஆயத்தமாகுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலையில் வழங்கப்பட்ட மருந்தை அருந்தியதால் 2ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று மாத்தறை – பாலட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையில் வழங்கிய மருந்தை அருந்திய மாணவன் வீட்டிற்கு வந்து பாடசாலையில் தனக்கு நடுக்கம் ஏற்பட்டதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் உடனடியாக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனின் நிலை பின்னர் கவலைக்கிடமானதால், மேலதிக சிகிச்சைகளுக்காக காலி கரபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இருப்பினும் நேற்றைய தினம் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பெற்றோர்கள், “பாடசாலையில் வழங்கப்பட்ட மருந்து விஷமானதால் தான் தமது பிள்ளை இறந்ததாக” குற்றம் சுமத்தியுள்ளனர்.
இருப்பினும், தாங்கள் கடந்த 5 வருட காலமாக மாணவர்களுக்கு மருந்து வழங்கி வருவதாகவும், உரிய மருத்துவர்களினால் வழங்கப்பட்ட மருந்தே இவ்வாறு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (31.03.2017) பிற்பகல் 1 மணியளவில் மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து மகாகச்சக்கொடி செல்லும் வீதியில் இன்று காலை வயலில் வேலை செய்து கொண்டிருந்போது வயல் உரிமையாளர் மோட்டார் குண்டு ஒன்று தமது வயலில் இருப்பதைக் கண்டுள்ளார்.
இதையடுத்து மடுக்கந்த பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் நீதிமன்ற அனுமதி பெற்று விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன்; கைப்பற்றப்பட்ட மோட்டார் குண்டினை செயலழக்கச் செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான செயலமர்வு இன்று(31.09.2017) வவுனியா விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இச் செயலமர்வில் அரச திணைக்களங்களில் இருந்து தகவலறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் முறைகள், தகவல் வழங்கும் உத்தியோகத்தரின் கடமைகள் தகவல் வழங்க மறுக்கும் பட்சத்தில் உள்ள தண்டணைகள், திணைக்கள ரீதியாக தகவல்களை வழங்குவதற்கு தகுதியுடைய உத்தியோகத்தர்கள் அவர்களது பணிகள், மக்கள் தகவலை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பாக இச் செயலமர்வு இடம்பெற்றிருந்தது.
இச் செயலமர்வினை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் முறைப்பாட்டு பொறுப்பதிகாரி எம்.எஸ்.அமீர் உசைன் வழிநடத்தலில் சட்டத்தரணி கே.ஐங்கரன் வளவாளராக கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கியிருந்தார்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (31.03.2017) 36வது நாளாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தினை சுழற்சி முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 36வது நாளாகவும் தொடர்ந்து வருகின்றது.
எங்களது கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து முடிவு தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா A9 வீதியில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 36வது நாளாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலங்கம் கலந்துகொண்டிருந்தார்.
தந்தை செல்வாவின் 119வது பிறந்த தின நிகழ்வுகள் வவுனியா நகர மத்தியில் இடம்பெற்றதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுமற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்ட தளத்திற்கு சென்ற சுகாதார அமைச்சர் உட்பட்ட வவுனியா தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இதன் போது பல தாய்மார் கண்ணீவிட்டழுது தமது நிலைமைகளை விளக்கியிருந்ததுடன் தமது பிள்ளைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
தந்தை செல்வநாயகம் என அழைக்கப்படும் தமிழரசுக்கட்சியின் தலைவரான செல்வநாயகத்தின் 119 ஆவது பிறந்ததினம் இன்று (31.03.2017) வவுனியா நகர மத்தியில் உள்ள அன்னாரது சிலையடியில் வட மாகாண சுகாதார அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை தலைவருமான ப.சத்தியலிங்கத்தின் தலைமையில் இடம்பெற்றது.
காலை 9 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் அன்னாரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் சுகாதார அமைச்சரினால் நினைவுரையும் நடத்தப்பட்டது.
இதன்போது தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு சீருடை வெளியீடு 30.03.2017 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் அதிபர் திரு செ.சசிகுமார் தலைமையில் பாடசாலை முன்றலில் இடம்பெற்றது.
இச் சீருடை பாடசாலை அதிபர் மற்றும் மாணவர்களின் முயற்சியினால் புதிதாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.