வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தில் ஐந்தாம் நாள் பக்தி முக்தி பாவனோற்சவம்!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் இன் ஐந்தாம் நாளான நேற்று 30/03/2017 வியாழக்கிழமை காலை பக்தி முக்தி பாவனோற்சவம் இடம்பெற்றது.

மேற்படி உற்சவத்துக்கான  அபிசேகங்கள் ஆரம்பமாகி நாற்குரவர்களான  திருஞானசம்பந்தர் திருநாவுகரசர் சுந்தரமூர்த்தி நாயனார் மாணிக்கவாசகர் ஸ்வாமிகள் ஆகிய மூர்த்திகளும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி  விசேட அபிசேகங்கள்  ஆராதனைகள் முதலியவற்றுடன் சண்டேஸ்வரர் பெருமானும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அவருக்கும் விசேட கிரியைகள் நடை பெற்று   பன்னிரு திருமுறைகள ஓதப்பட்டு  நாற்குரவர்களுடன் சண்டேஸ்வரப் பெருமானும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் முருகப்பெருமான் விநாயகர் முதலானோர் உள்வீதி  வெளி வீதி வலம் வந்து சுப்ரமணியகோமம் கலைக்கப்பட்டு பகல் திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

மீண்டும் மாலை நான்கரை மணிக்கு பபூஜைகள் ஆரம்பமாகி   மாலை ஏழு மணியளவில் சண்டேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர்  வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் முதலானோர் உள்வீதி வெளிவீதி வலம் வந்து மாலை திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

வவுனியாவில் கொலை செய்து கிணற்றுக்குள் போட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை!!

வவுனியா பாவற்குளம் பகுதியில் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக எதிரிக்கு வவுனியா மேல் நீதிமன்று நேற்று (30.03.2017) மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பாவற்குளம் பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25, 26 திகதி காலப்பகுதியில் ஆறுமுகம் இலங்கராசா என்பவருக்கு மின்சாரம் பாய்ச்சி கிணற்றுக்குள் போட்டு கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டிற்காக 2016ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் தில்லையம்பலன் மகேஸ்வரன் அல்லது ரவி மற்றும் சுப்பிரமணியம் மயில்வாகனம் ஆகிய இரு எதிரிக்கு எதிராக வழங்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2016ம் ஆண்டிலிருந்து வழக்கின் விளக்கங்கள் இடம்பெற்று நேற்று தீர்ப்பளிக்க நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கிலே இரண்டாம் எதிரியான சுப்பிரமணியம் மயில்வாகனத்திற்கு எதிராக வழக்குத் தொடுனர் தரப்பினால் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை என தீர்ப்பு வழங்கி இரண்டம் எதிரியை விடுவித்து விடுதலை செய்ததுடன் முதலாம் எதிரியான தில்லையம்பலன் மகேஸ்வரன் அல்லது ரவி என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு குறித்த ஆறுமுகம் இலங்கராசா என்பவரின் மரணத்தை விளைவித்தார் என்ற விடயம் வழக்குத் தொடுநர் தரப்பினால் சந்தேகத்திற்கு அப்பால் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது எனக்கூறி முதலாம் எதிரியை கொலைக்குற்றத்திற்கு குற்றவாளியாகக்கண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

திறந்த நீதிமன்றில் தீர்ப்பு வழங்கியபோது மின் குமிழ்கள் மின்விசிறிகள் அனைத்தும் அனைக்கப்பட்டு நீதிபதி உட்பட மன்றில் நின்ற அனைவரும் எழுந்து நின்றபோது தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்குத் தொடுநர் தரப்பில் அரச சட்டவாதியான ஸக்கி ஸ்மாயில் வழங்கினை நெறிப்படுத்தியிருந்தார்.

இலங்கை மந்திரவாதி குவைத்தில் கைது!!

குவைத்தில் மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்த இலங்கையர் ஒருவர் அந்நாட்டு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிந்த குடும்பங்களைச் சேர்த்து வைத்தல், வேறு சிக்கல்களைத் தீர்த்து வைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும் அபூர்வ சக்தி தன்னிடம் இருப்பதாக அவர் பலரையும் நம்ப வைத்து ஏமாற்றியிருந்தார்.

அவரை நாடிவரும் வாடிக்கையாளர்களிடம் 250 குவைத் தினார்கள் தொடக்கம் பெருந்தொகையான பணத்தை அவர் கட்டணமாக அறவிட்டுள்ளார்.

அவரது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் குவைத் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் என்றும் பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

குறித்த நபரின் மாந்திரீக வேலை குறித்து தகவல் அறிந்த பொலிசார் புலனாய்வு முகவர் ஒருவரின் உதவியுடன் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.

இரண்டாவது தடவையும் பரீட்சையில் ஏற்பட்ட தோல்வி : மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இந்தவாரம் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் ஹோமாகம கிரிவத்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் சலனி என்ற மாணவி கணித பாடத்தில் S சித்தி பெற்றமையினால் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

குறித்த மாணவி 2015ம் ஆண்டு முதன் முறையாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதியுள்ளார். எனினும் பரீட்சையில் சாதாரண சித்தியடைந்து ஹோமாகம மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார். எனினும் அவருக்கு வர்த்தக பிரிவில் உயர்தரம் கற்க வேண்டும் என்பதே கனவாகியுள்ளது.

இதனால் அவர் மீண்டும் 2016ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை எழுதி பல கனவுகளுடன் முடிவுகளுக்கு காத்திருந்தார்.

எனினும் நேற்று முன்தினம் 12.30 மணியளவில் பரீட்சை முடிவுகளை பார்த்த குறித்த மாணவி, மாலை 7.30 மணியளவில் வீட்டின் பின் பக்கத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

வர்த்தக பிரிவில் உயர்தரம் கற்பதற்கு போதுமான பெறுபேறுகள் இல்லாமையினாலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையர்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை!!

ஈமெயில் மூலமாக கணனியின் நினைவக சேமிப்புகளை அழிக்கும் வைரஸ் ஒன்று குறித்து இலங்கை சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈமெயில் மூலமாக அனுப்பப்படும் குறித்த வைரஸ் ஆனது, அதனைத் தாங்கி வரும் ஈமெயிலைத் திறந்தவுடன் செயற்படத் தொடங்கி, கணனியில் இருக்கும் தகவல்களை முற்றாக அழித்து விடும் ஆற்றல் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இலங்கையர்கள் இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இணையத்தள பாதுகாப்பு அமைப்பின் முக்கியஸ்தர் சந்திரகுப்த தேநுவர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அறிமுகமற்றவர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான ஈமெயில் தகவல்களை புறக்கணிப்பது இவ்வாறான வைரஸ்களிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வழியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை!!

யாழ். சாவகச்சேரி பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , கைதடி பகுதியில் வசித்த இளைஞன் ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞன் 29வயதான தங்கவடிவேல் உதயகுமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர் கைதடி கிழக்கு பகுதியில் வசித்து வந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் பற்றி தகவல் அறிந்தவுடன் சாவகச்சேரி பொலிசார் சடலத்தைக் கைப்பற்றி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.

இளைஞரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மகளை 16 வருடங்கள் வீட்டுச் சிறை வைத்த கொடூர தந்தை : அதிரவைக்கும் காரணம்!!

பிரேசிலில் 20 வயதில் மகள் கற்பமானதால் தந்தை அவரை 16 வருடங்கள் வீட்டுச் சிறை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் Uruburetama பகுதியில் Maria Lúcia de Almeida Braga (36) என்ற பெண் சிறிய அளவிலான வீடு ஒன்றில் எந்த ஒரு சுகாதாரமின்றி வீட்டுச் சிறையில் இருந்துள்ளார்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அப்பெண் இருந்த வீட்டின் கதவை உடைத்து பெண்ணை மீட்டுள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட பெண் 20 வயதில் கற்பமாகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, இது வெளியில் தெரிந்தால் தலை காட்ட முடியாது. இவளை கொடூரமாக தண்டிக்க வேண்டும் என்று வீட்டுச் சிறையில் வைத்துள்ளார்.

மேலும் அப்பெண் இந்த வீட்டில் 16 வருடங்கள் இருந்துள்ளார். வீட்டில் எந்த ஒரு வசதியும் இல்லை.பெரும்பாலான காலங்களில் அவர் இருட்டிலே இருந்துள்ளார்.

அந்த வீட்டினுள் எந்த ஒரு வசதியும் இல்லாத காரணத்தினால், வீடு சுகாதரமற்று கிடந்தது. இதில் அப்பெண் எப்படி தான் வாழ்ந்து வந்தார் என்று தெரியவில்லை. மிகவும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

அப்பெண்ணிற்கு உணவுகள் போன்றவைகளை அவர்கள் குடும்பத்தினர் தான் கொடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அவரது தந்தை மற்றும் சகோதரரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வாயில்லா ஜீவனை துடிக்கத் துடிக்க அடித்துக் கொல்லும் மனித மிருகம்!!

நபர் ஒருவர் நாயை பெரிய கட்டையால் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

குறித்த வீடியோவில், நாய் கழுத்தில் கயிறு கட்டிய படி நபர் ஒருவர் பிடித்து வைத்துள்ளார்.அப்போது, பெரிய கட்டையுடன் வரும் மற்றொரு நபர் கயிறை பிடித்து கொடூரமாக நாயை தாக்குகிறார். இதில், அந்த வாயில்லா ஜீவன் துடி துடித்து உயிரிழக்கிறது.

பின்னர், அந்த நபர் இறந்த நாயை கயிறு மூலம் தரதரவென இழுத்துச் செல்கிறார்.

குறித்த வீடியோவில் சுற்றியுள்ள நபர்களில் தமிழில் பேசுகின்றனர். நாயை அடித்துக் கொல்லும் வீடியோ எங்கே எடுக்கப்பட்டது, எதற்காக அதனை அடித்துக் கொன்றார், யார் இதனைப் படம் பிடித்தது என்பது போன்ற தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 வயதில் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி: உலகின் இளம் வயது அம்மாக்கள் இதோ!!

 
ஒரு குழந்தைக்கு தேவையான அறிவும், அரவணைப்பும் தங்களது பெற்றோரிடம் இருந்தே அதிகமாக கிடைக்கின்றன.

தந்தை அறிவை போதித்தால், தாய் அன்பை போதிக்கிறாள். இப்படி நாம் குழந்தையாய் இருக்கும்போதே பெற்றோரிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பும் அரவணைப்பும் சரியான முறையில் கிடைத்தால், எதிர்காலத்தில் வெற்றிபெற்ற நபராக இந்த சமுதாயத்தில் திகழ்வோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆனால், இளம் வயது குழந்தைகளே, பெற்றோர்கள் ஆனால் வாழ்க்கை என்ன ஆவது?

இதோ உலகின் இளம் வயது அம்மாக்கள்

Alfie Patten & Chantelle Stedman

Alfie Patten என்ற 13 வயது சிறுவனுக்கும், இவரது காதலியான 15 வயது Chantelle- க்கும் குழந்தை பிறந்துள்ளது.

April Webster and Nathan Fishbourne

இளம் வயது பெற்றோர்களின் வரிசையில் April Webster மற்றும் Nathan Fishbourne ஆகிய இருவரும் இணைந்துள்ளனர். இருவருக்குமே 14 வயது தான். இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Ionel Stanescu and Rifca Stanescu

11 வயதான Rifca Stanescu தனது காதலனான Ionel- ஐ திருமணம் செய்தார். திருமணமாகி ஒரு வருடத்திற்குள் இவருக்கு மரியா என்ற பெண் குழந்தை பிறந்தது.

மரியாவுக்கு 15 வயது சிறுவன் Ion என்பவனுடன் திருமணம் நடந்தது. இதனால் இளம் வயதிலேயே Rifca பாட்டியாகியுள்ளார்.

Lina Medina

பெரு நாட்டை சேர்ந்த Lina Medina 5 வயதில் தாயாகியுள்ளார் என்பது அதிர்ச்சியான செய்தி. இச்சிறுமிக்கு 6 பவுண்ட் எடையில் ஆண் குழந்தை பிறந்தது. இச்சிறுமிதான் உலகிலேயே மிகவும் இளம்வயது தாய் ஆவார்.

Tressa Middleton

பிரித்தானியாவை சேர்ந்த இந்த மாணவிக்கு வயது 11. இவரது சகோதரனால் பலாத்காரம் செய்யப்பட்ட இச்சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.

நோயாளியை கை கால்களை பிடித்து தூக்கி சென்ற கொடுமை!!

பீகாரில் அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் வசதி இல்லாததால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது உறவினர்கள் கை கால்கள் பிடித்து தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் அரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர்.

உடல் நலம் பாதிக்கபட்ட பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து எடுத்து செல்ல வேண்டும் என்று அங்கிருந்த ஊழியர்களிடம் அந்த பெண்ணின் உறவினர்கள் கேட்டுள்ளனர்.

ஆனால் ஸ்ட்ரெச்சர் வசதி இல்லை என்று ஊழியர்கள் கைவிரித்துள்ளனர். இதனால் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு வெளியே சாலையோரம் நீண்ட நேரம் படுக்க வைக்கப்பட்டு இருந்துள்ளனர். அருகில் செய்வதறியாது அவரது கணவர் கை குழந்தையுடன் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார்.

இதனிடையே அங்கு வந்த அவரது உறவினர்கள் பெண்ணின் கை, கால்களை பிடித்து தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு உள்ளே எடுத்துச் சென்றனர்.

மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் தூக்கி சென்றது அங்கு இருந்த பார்வையாளர்களை கண்கலங்க வைத்தது. அந்தபெண்ணிற்கு ஸ்ட்ரெச்சர் தர மறுத்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

24 கரட் தங்கத்தினால் பாதணிகள் தயாரிக்கும் இத்தாலிய வடிவமைப்பாளர்!!

 
இத்தாலியைச் சேர்ந்த பாதணி வடிமைப்பாளர் ஒருவர், 24 கரட் தங்கத்தினால் பாதணிகளை தயாரித்துள்ளார். அன்டோனியோ வியெட்ரி எனும் இவர், இத்தாலியின் வட பிராந்திய நகரான டூரினைச் சேர்ந்தவர்.

சுத்தமான 24 கரட் தங்கத்தினால் பாதணி தயாரிக்கப்படுவது இதுவே முதல் தடவை என அவர் தெரிவித்துள்ளார். சுவூதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலான வளைகுடா நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் இப் பாதணிகளை வாங்குவார்கள் என வியெட்ரி நம்புகிறார்.

இப் பாதணிகளில் தங்கம் வெறுமனே பூசப்படவில்லை. ஒரு பொத்தான் போன்று தங்கம் பொருத்தப்படவில்லை. மாறாக, பாதணியின் முக்கிய பகுதியாக தங்கம் உள்ளது அவர் கூறுகிறார். ஒவ்வொரு ஜோடி பாதணியும் 230 கிராம் தங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளன.

24 கரட் தங்கத்தினால் பாதணிகளை தயாரிப்பது குறித்து 8 மாத கால ஆய்வு மற்றும் முயற்சிகளின் பின்னர் 2016 ஆம் ஆண்டு இப் பாதணிகளைத் தயாரிக்க ஆரம்பித்ததாக அன்டோனியோ வியெட்ரி தெரிவித்துள்ளார்.

தங்கத்தின் உறுதியையும் பாதணியின் நெகிழ்வுத் தன்மையையும் சமநிலைப்படுத்துவது கடினமானதாக இருந்தது. பாதணி மிக இறுக்கமாக இருந்தால், தங்கம் வளைந்துவிடும். அதேவேளை பாதணி மிக பாரமாக இருந்தாலும் பாதிப்பு ஏற்படும்” என்கிறார் அவர்.

தங்கத்தினால் தயாரிக்கப்பட்ட, ஆண்களுக்கான பாதணி ஒரு ஜோடியின் விலை தலா 25,000 யூரோ (சுமார் 41 இலட்சம் ரூபா) எனவும் பெண்களுக்கான ஒரு ஜோடி பாதணியின் விலை 30,000 யூரோ (சுமார் 50 இலட்சம் ரூபா) வியெட்ரி தெரிவித்துள்ளார். பாதணிகளை ஹெலிகொப்டர் மூலம் விநியோகிப்பதற்கான செலவும் இவ் விலையில் அடங்குமாம்.

அவித்த முட்டைக்குள் வைரக்கல் : இங்கிலாந்துப் பெண்ணுக்கு வாய்த்த அதிர்ஷ்டம்!!

இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண்ணுக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ளது.

சேலி தாம்சன் என்ற பெண் காலை உணவாக அவித்த முட்டையை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, நறுக்கென்று கல் போன்ற ஒரு பொருள் அவர் பல்லில் சிக்கியது.

என்னவென்று சுத்தம் செய்து பார்த்த பொழுது பட்டை தீட்டப்பட்ட குபிக் சிர்கோனியா என்ற ஒரு வகை வைரக்கல் என்பது தெரியவந்தது. தனக்கு கிடைத்த வைரம் குறித்து அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டார்.

இதனையடுத்து, முட்டைக்குள் எவ்வாறு வைரம் சிக்கியிருக்க முடியும் என பலதரப்பினரும் விளக்கங்களை முன்வைத்து வருகின்றனர்.

கோழி அந்தக் கல்லை விழுங்கியிருக்கலாம் எனவும் பின்னர் அந்தக் கல் செரிமாணம் ஆகாமல் முட்டைக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சில நாட்களில் திருமணம் செய்துகொள்ளப்போகும் தாம்சனுக்கு வைரக்கல் கிடைத்திருப்பதால், அவர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

வௌ்ளப்பெருக்கில் மூழ்கிய நகரம்!!

அவுஸ்திரேலியாவில் பெய்துவரும் தொடர் மழையுடன் கூடிய வௌ்ளப் பெருக்கினால் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பசுபிக் சமுத்திரத்தில் நிலைக்கொண்டுள்ள தாழமுக்க நிலைமை காரணமாக அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் இந்த வௌ்ள பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த தாழமுக்க நிலைமை காரணமாக அவுஸ்திரேலியாவில் 40 சென்றீ மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு தொடர் மழையுடன் கூடிய வானிலை நிலவி வருகின்றமையினால் குயின்ஸ்லாந்து பகுதியில் வௌ்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் வௌ்ள பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், வாகன ​போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவில் பெய்துவரும் கடும் மழையுடன் கூடிய வானிலையினால் சுமார் இரண்டாயிரம் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அத்துடன், அரச அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களின் நடவடிக்கைககள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 50 பேர் வரை சிக்குண்டுள்ளதாகவும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மீட்பு பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தரத்தில் 5 பல்டிகள் : புதிய உலக சாதனை!!

பனிச்சறுக்கு விளையாட்டில் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார் ஆண்ட்ரி ரகெட்லி.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பனிச்சருக்கு விளையாட்டு வீரர், சுமார் 35 மீட்டர் உயரத்தில் வானில் பறந்தபடி ஐந்துமுறை சுழன்றார். அவர் அந்தரத்தில் அடித்த ஐந்து பல்டிகளில் அவரது தலை நான்கு முறை கீழே வந்து மேலெழும்பியது.

“இது மயிர்க்கூச்செரியும் அனுபவம். வானில் தலைகீழாக சுற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. அப்படி சுற்றியபடி நிலத்தில் பாதுகாப்பாக வந்து சேர்ந்தது அதைவிட மகிழ்ச்சியான அனுபவம்”, என்கிறார் தொழில்முறைசாரா பனிச்சருக்கு விளையாட்டு வீரர் ஆண்ட்ரி ரகெட்லி.

சர்வதேச இந்திய சினிமா அகடமி விருதுகள்!!

சர்வதேச இந்திய சினிமா அகடமி ஒவ்வொரு வருடமும் தமிழ் மற்றும் இதர மொழிகளில் வெளியாகி சாதனை படைத்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில், இந்த வருடமும் இந்த விருது வழங்கும் விழா நேற்று தொடங்கி இன்று நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவுக்காக நடந்த இந்த விழாவில் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’, மாதவன் நடிப்பில் வெளிவந்த ‘இறுதிசுற்று’ ஆகிய படங்கள் தலா மூன்று விருதுகளை வாங்கியுள்ளன. ‘தெறி’ படம் சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லன், சிறந்த இயக்குனர் ஆகிய விருதுகளை வாங்கியுள்ளது. ‘இறுதிசுற்று’ சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என மூன்று பிரிவுகளில் விருது பெற்றிருக்கிறது.

மேலும், விருது பெற்றவர்களின் முழு பட்டியல் கீழே:-

சிறந்த நடிகர் – மாதவன் (இறுதிசுற்று)
சிறந்த நடிகை – ரித்திகா சிங் (இறுதிசுற்று)
சிறந்த இயக்குனர் – அட்லி (தெறி)
சிறந்த துணை நடிகர் – நாகர்ஜுனா (தோழ)
சிறந்த துணை நடிகை – பேபி நைனிகா (தெறி)
சிறந்த காமெடியன் – ஆர்.ஜே.பாலாஜி (தேவி)
சிறந்த வில்லன் – மகேந்திரன் (தெறி)
சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரகுமான் (அச்சம் என்பது மடமையடா)
சிறந்த பாடலாசிரியர் – அருண் ராஜா காமராஜ் (நெருப்புடா – கபாலி)
சிறந்த பின்னணி பாடகர் – அனிருத் (தங்கமே, நீயும் நானும் – நானும் ரவுடிதான்)
சிறந்த பின்னணி பாடகி – நீதி மோகன் (நீயும் நானும் – நானும் ரவுடிதான்)
சிறந்த கதை – கார்த்திக் நரேன் (துருவங்கள் பதினாறு)

காணாமற்போன இளைஞன் மலைப்பாம்பின் உடலிலிருந்து சடலமாக மீட்பு!!(வீடியோ)

இந்தோனேஷியாவில் காணாமற்போன இளைஞன் ஒருவர் மலைப்பாம்பின் உடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷிய நாட்டின் சுலவேசி தீவைச் சேர்ந்த 25 வயது வாலிபர் அக்பர் சலுபிரோ தனது தோட்டத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரைத் தேடி அலைந்துள்ளனர்.

இந்நிலையில், அக்பரின் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில், பெரிய மலைப்பாம்பு ஒன்று வயிறு வீங்கிய நிலையில் காணப்பட்டது.

சந்தேகமடைந்த உறவினர்கள் 7 மீட்டர் நீளமுள்ள அந்த பாம்பின் வயிற்றைக் கிழித்தபோது, அதில் காணாமற்போன அக்பரின் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அக்பரின் உடலை மலைப்பாம்பின் உடலிலிருந்து வெளியே எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.