கணவனை 10 முறை பாம்பை வைத்து கடிக்க விட்டு கொலை செய்த மனைவி!!

ரூ.1,000க்கு பாம்பு ஒன்றை வாங்கி வந்து, கணவனை கடிக்க விட்டு கொலைச் செய்து மொத்த மாநிலத்தையும் அதிர செய்திருக்கிறார் இளம்பெண் ஒருவர்.

சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து ட்ரம்மில் கான்கிரீட் போட்டு மூடிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இப்போது அதே மீரட்டில் மற்றொரு கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இம்முறை மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கணவரை பாம்பினை கடிக்க வைத்து கொலை செய்துள்ளர். 10 முறை பாம்பினை கொண்டு கணவனை கடிக்க வைத்திருக்கும் கொடூரச் செயலை மனைவி செய்திருப்பதாக தெரிகிறது.

மீரட்டில் வசித்து வரும் அமித்தை கொலை செய்த விவகாரம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அமித்தின் உடல் கட்டிலில் கிடப்பதையும், விஷப் பாம்பு அவரை பலமுறை கடிப்பதையும் காண முடிகிறது. போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அமித் விஷம் ஏறி மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் அடிப்படையில் அமித்தின் மனைவி ரவிதாவை போலீசார் கைது செய்து விசாரித்தனர். பின்னர் ரவிதா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு பகீர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

அந்த வாக்குமூலத்தில், தனது காதலன் அமர்தீப்புடன் சேர்ந்து கணவன் அமித்தைக் கொலை செய்ததாக ரவிதா ஒப்புக் கொண்டுள்ளார்.

கணவரை கொலை செய்வதற்காக ரவிதா ரூ.1,000 கொடுத்து ஒரு பாம்பை வாங்கியதாகவும், அதனை வைத்து அமித்தைக் கொன்றதாகவும் தெரிகிறது.

ரவிதாவும் அமர்தீப்பும் சேர்ந்து முதலில் அமித்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதன் பிறகு அமித்தை கொன்றதை மறைக்க, பாம்பை கொண்டு கடிக்க வைப்பது வைத்து வீடியோ எடுத்துள்ளனர்.

அதன்படி, தங்களை காப்பாற்றிக் கொள்ள பாம்பு கடித்து அமித் இறந்தார் என தவறான தகவலை பரப்பி விட்டுள்ளனர். போலீசாரின் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட இருவரும் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது.

புற்றுநோய் பாதித்தவர், மனைவியை சுட்டு கொன்றுவிட்டு எடுத்த விபரீத முடிவு!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர், என் மருத்துவ சிகிச்சைக்காக பணம் வீணடிக்கப்படுவதை விரும்பவில்லை. மனைவியை நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்” என்று எழுதி வைத்து விட்டு, தனது மனைவியை சுட்டுக் கொன்று விட்டு, தானும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ரியல் எஸ்டேட் டீலராக பணி செய்து வந்தவர் குல்தீப் தியாகி (46). இவர் தனது வீட்டில் துப்பாக்கியால் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு, தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

திடீரென வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்டு, இவரது 2 மகன்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அம்மா, அப்பாவை அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் ஏற்கனேவே இருவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குல்தீப்பின் அறையில் இருந்து ஒரு தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், “நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். என் குடும்பத்தினருக்கு இது பற்றித் தெரியாது. என்னால் நீண்ட நாட்கள் வாழ முடியாது.

என் மருத்துவ சிகிச்சைக்காக பணம் வீணடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நானும் என் மனைவியும் எப்போதும் ஒன்றாக இருப்போம் என்று சபதம் செய்துள்ளதால், என் மனைவியை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு” என்று குல்தீப் எழுதியுள்ளார்.

வீட்டிலிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 குழந்தைகளை கதறக் கதற கழுத்தறுத்து கொலை செய்த தாய் எடுத்த விபரீத முடிவு!!

தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் உள்ள ஜீடிமெட்லா பகுதியில் உள்ள கஜுலராமரம் பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தேஜா .

இவருக்கு வயது 35. இவர் தனது இரு குழந்தைகளின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து அடுக்குமாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது கணவர் வெங்கடேஸ்வர ரெட்டியுடன் சேர்ந்து தேஜா வாழ்ந்து வந்தார். இச்சம்பவம் குறித்து மாலை 4 மணிக்கு தகவல் கிடைத்ததும், ஜீடிமெட்லா போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த நேரத்தில், தேஜா மற்றும் அவரது மகன் ஹர்ஷித் ரெட்டி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். அவரின் இளைய மகன் 9 வயது ஆஷிஷ் ரெட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

சம்பவ இடத்திலிருந்து தேஜா எழுதிய 6 பக்க தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தற்கொலைக் கடிதத்தில், கணவர் மீது கோபம், குழந்தைகளின் உடல்நிலை,

மன அழுத்தம் மற்றும் உடல்நலக் கோளாறுகள் ஆகியவை தனது முடிவுக்கு காரணம் என தேஜா எழுதியிருந்ததாக தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கனடா நிராகரித்த விசாக்கள் : புலம்பெயர காத்திருப்போருக்கு எச்சரிக்கை!!

கடந்த ஆண்டில் 2.35 மில்லியன் தற்காலிக விசா விண்ணப்பங்களை கனடா நிராகரித்துள்ளது. கோவிட் பரவலுக்கு பின்னர் அதிகரித்து வரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், சுகாதாரம் மற்றும் பொதுச் சேவைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காகவே விசாக்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிராகரிக்கப்பட்ட 2.35 மில்லியன் விசாக்களில் 1.95 மில்லியன் விசாக்கள் பயண விசாக்கள் ஆகும். அத்துடன், ஆய்வு அனுமதி மற்றும் பணி அனுமதி விசாக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

புதிதாக கனடாவிற்கு புலப்பெயர்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனடா தனது குடிவரவு விதிகளை கடுமையாக்குகிறது என்பதை இது காட்டுகிறது.

வளங்களை சிறப்பாக நிர்வகிப்பதற்காகவே கனேடிய அரசாங்கம் இந்த மாற்றங்களைச் செய்து வருகிறது.

இதேவேளை, இந்த மாற்றங்கள் வீட்டுவசதி மற்றும் சுகாதாரத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும் அதேவேளையில், பல்வேறு தொழில்களில் தொழிலாளர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மட்டக்களப்பில் பெரும் சோகம் : திருமணமான 9 நாளில் விபத்தில் பலியான மணமகன்!!

மட்டக்களப்பில் சம்பவித்த கோர விபத்தில் திருமணமான ஒன்பது நாளில் மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக நேற்று மாலை இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சந்திவெளியைச் சேர்ந்த 27 வயதான வடிவேல் மோகன சாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்திவெளியில் நேற்று நடைபெறவிருந்த கரப்பந்தாட்ட நிகழ்வில் கலந்து கொள்வோருக்காக உணவினை பெற்றுக்கொள்ள சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த இளைஞன் 9 நாட்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தையை கொலை செய்த 20 வயது மகன் : கொழும்பில் சம்பவம்!!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளார்.

மகன் மற்றும் தந்தை ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, மகன் இரும்பு கம்பி ஒன்றைக் கொண்டு தனது தந்தையின் தலையில் அடித்துள்ளார்.

இதன்போது தாக்குதலுக்கு இலக்கான தந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குற்றத்தை செய்த அவருடைய 20 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் தந்தையின் டிப்பர் வாகனத்தில் சிக்கி ஒன்றரை வயதுக் குழந்தை பலி!!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் ஒன்றரை வயது உடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் ரக வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் நேற்று (18.04.2025) பிற்பகல் 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாள் குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தந்தை செலுத்திய டிப்பர் வாகன முன் சில்லுக்குள் சிக்கி ஒன்றரை வயதுடைய பெண்குழந்தை உயிரிழந்துள்ளது.

சம்பவ இடத்தை சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட பதில் நீதிவான், உடற்கூற்று விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசிய தடகள போட்டிகளில் இலங்கைக்கு கிடைத்த பதக்கங்கள்!!

சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் 18 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள செம்பியன்சிப் 2025இன் பெண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் தருசி அபிசேகா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இதற்கிடையில், ஆண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் சவிந்து அவிஸ்க 1:53.41 நேரத்தில் ஓடி வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆண்கள் உயரம் தாண்டுதலில் பங்கேற்ற பவன் நெத்ய சம்பத், வெண்கலப் பதக்கத்தை வென்றார். அந்தப் போட்டியில் அவர் 2.03 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

 

இலங்கையின் வானிலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (19.04) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்றுக்கொண்டிருந்த கார் மீது உருண்டு விழுந்த பாறைகள் : விபத்தில் சிக்கிய 4 இளைஞர்கள்!!

ஹல்துமுல்ல நகருக்கு அருகில் மலையிலிருந்து பல பாறைகள் உருண்டு விழுந்ததில் கடவத்தையிலிருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற கார் ஒன்று கடுமையாக சேதமடைந்ததாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

காரில் நான்கு பேர் பயணித்ததாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், கார் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 7.30 மணியளவில் கடவத்தையிலிருந்து பண்டாரவளைக்கு பயணம் செய்து கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

தற்போது பெய்து வரும் மழையால் மலைச் வீதிகளுக்கு மேலே உள்ள மலைகளில் இருந்து பாறைகள் கீழே விழுந்துள்ளதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடனும் வாகனம் ஓட்டுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வயலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த விபரீதம் : தமிழர் பகுதியில் சோகம்!!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் உடல், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (18) மாலை குறித்த உடல் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர், ஒரு பிள்ளையின் தந்தையான, சம்மாந்துறை, செந்நெல் கிராமம்-2 பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர், மற்றொரு நபருடன் வேலை நிமித்தம் வயலுக்கு சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதன்போது, உயிரிழந்தவரின் அருகில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த மற்றொரு நபர் காயமடைந்து, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்மாந்துறை நீதிமன்ற நீதவானின் உத்தரவின்படி, பிரதேச மரண விசாரணை அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட பின்னர், உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மரண விசாரணையின் பின்னர், மின்னல் தாக்கத்தால் மரணம் நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தப்பட்டு, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டில் மூடப்படும் 100 பாடசாலைகள் : வெளியான அறிவிப்பு!!

மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை இப்போது 500ஐ தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகளில் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டுமே உள்ளதாகவும், இவ்வாறான பாடசாலைகளை மூடி, அந்த மாணவர்களை வசதிகள் உள்ள பாடசாலைகளில் சேர்ப்பதற்கான முறையான திட்டத்தைத் தொடங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள பல சிறிய பாடசாலைகள் மூடப்பட்டு, அவற்றின் மாணவர்கள் தற்போது வேறு பாடசாலைகளை அனுப்பப்படுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம் :தென்னைப் பயிர்கள் சேதம் : மக்கள்சிரமம்!!

வவுனியா வேலங்குளம் கோவில்புளியங்குளம் கிராமத்தில் நேற்றயதினம் இரவு உட்புகுந்த காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெருமளவு தென்னை பயிர்களை சேதமாக்கிச்சென்றுள்ளது.

குறிப்பாக வேலங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம், கோவில்மோட்டை, செங்கற்படை, சின்னத்தம்பனை சிவநகர், குஞ்சுக்குளம், கோவில் புளியங்குளம் போன்ற கிராமங்களுக்குள் அண்மையநாட்களில் தொடர்ச்சியாக செல்கின்ற காட்டு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் தோட்டபயிர்களை சேதமாக்கிச் செல்கின்றது.

நேற்று இரவும் குறித்த கிராமங்களுக்குள் உட்புகுந்த யானைகள் காய்க்கும் நிலையில் இருந்து தென்னைபயிர்களை நாசமாக்கிச்சென்றுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் எமக்கான தீர்வை எந்த ஒரு அதிகாரிகளும் இதுவரை முன்வைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிப்பதுடன் எமது கிராமத்தை சுற்றியானை வேலியைஅமைத்து தருமாறு பல்வேறு தரப்பிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம்.ஆனால் இதுவரை கிடைக்கவில்லை என கிராமமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் பாடசாலைகள் மட்ட உதைபந்தாட்ட போட்டியில் வெற்றி : பெண்கள் பிரிவில் நெளுக்குளம் வெற்றி!!

வவுனியா மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம் நடத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலயமும் பெண்கள் பிரிவில் நெளுக்குளம் மகாவித்தியாலமும் வெற்றிவாகை சூடியது.

கடந்த இரு தினங்களாக இடம்பெற்றுவந்த சுற்றுப் போட்டி இறுதிநாள் நிகழ்வு வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று (18.04) மாலை இடம்பெற்றிருந்தது.

பரபரப்பான இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயமும், பெண்கள் பிரிவில் நெளுக்குளம் மகாவித்தியாலயமும் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றின. வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக்கேடயங்கள விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

குடும்பச் சண்டையால் எரிந்து கருகிய மோட்டார் சைக்கிள்!!

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (17.04.2025) மாலை கொட்டகலை பகுதியில் உள்ள சுரங்கத்தை அண்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளது.

அத்தோடு, இருவருக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் சண்டையில் முடிந்து இருவரும் படுகாயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரினங்கள் வாழ்வதற்கான புதிய கோள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு!!

உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை கொண்ட புதிய கோள் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கே2-18பி (K2-18b) என அழைக்கப்படும் கோளோன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்திய கேம்பிரிஜ் பல்கலை கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

K2-18b பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது
பூமியிலுள்ள உயிரினங்களால் மாத்திரம் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகள் இந்த கோளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) மூலம் கிரகத்தின் வளிமண்டலத்தில் உயிர்களுடன் தொடர்புடைய இரசாயனங்கள் கண்டறியப்பட்டது.

இந்த முடிவுகளை உறுதிப்படுத்துவதற்கு மேலதிக தரவுகள் அவசியம் என ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

K2-18b பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது மற்றும் நம்மிடமிருந்து 700 டிரில்லியன் மைல்கள் அல்லது 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. எந்தவொரு மனிதனும் ஒரு வாழ்நாளில் பயணிக்கக்கூடிய தூரத்தை விட மிக இது அதிகம்.

JWST மிகவும் சக்தி வாய்ந்தது, அது சுற்றும் சிறிய சிவப்பு சூரியனில் இருந்து வரும் ஒளியைக் கொண்டு கிரகத்தின் வளிமண்டலத்தின் வேதியியல் கலவையை பகுப்பாய்வு செய்ய முடியும்.

கேம்பிரிட்ஜ் குழு வளிமண்டலத்தில் உயிர்களுடன் தொடர்புடைய இரண்டு மூலக்கூறுகளில் குறைந்தது ஒன்றின் வேதியியல் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. டைமெத்தில் சல்பைடு (DMS) மற்றும் டைமெத்தில் டைசல்பைடு (DMDS).

பூமியில், இந்த வாயுக்கள் கடல் பைட்டோபிளாங்க்டன் மற்றும் பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. வளிமண்டலத்தில் இந்த வாயுவின் அளவை நாம் மதிப்பிடுவது பூமியில் உள்ளதை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமாக உள்ளது.