முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

 
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேதலாவ கதிரேகொட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுங்காயடைந்து கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தம் இன்று (19.02) அதிகாலை 1.30 மணியளவில் கினிகத்தேனை – அம்பேதலாவ பிரதான வீதியில் கதிரேகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கதிரேகொட பகுதியில் மரண சடங்கு வீட்டு ஒன்றுக்கு சென்று மீண்டும் தெஹிகஸ்தென்ன பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட ஐந்து பேர் பயணித்துள்ளதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், படுங்காயடைந்து கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அத்தோடு சாரதி சிறு காயங்களுக்கு உள்ளானார்.

விபத்தில் உயிரிழந்தவர் கினிகத்தேனை – தெஹிகஸ்தென்ன பகுதியை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்கவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதி மதுபானம் அருந்திவிட்டு முச்சக்கரவண்டியை செலுத்தியதினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

முச்சக்கரவண்டி சாரதியை கினிகத்தேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மரண அறிவித்தல் : அமரர் சோமசுந்தரம் நகுலேஸ்வரம்பிள்ளை!!

அமரர் சோமசுந்தரம் நகுலேஸ்வரம்பிள்ளை

பிறப்பு : 04-01-1951 || இறப்பு : 17-02-2017

(சமாதான நீதவானும், தொழிற்சட்ட ஆலோசகரும், ஓய்வு பெற்ற உதவித் தொழில் ஆணையாளர் – தொழிற் திணைக்களம், வவுனியா)

யாழ் நெடுந்தீவு கிழக்கினை பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நகுலேஸ்வரம்பிள்ளை 17.02.2017 அன்று காலமானார்.

இவர் அமரர் சோமசுந்தரம் ( ஓய்வு பெற்ற அதிபர்), அமரர் சோதிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வரும், அமரர் கதிரமலை, நவமணி தம்பதிகளின் மருமகனும் சோதிமதி அவர்களின் பாசமிகு கணவரும், திருமகள்(வைத்தியர்,வவுனியா பொது வைத்தியசாலை), யசிவன் (மிருக வைத்தியர், பிராந்திய முகாமையாளர் , CIC Feeds, Northern Animal Clinic,கோண்டாவில்), அரவிந்த் (பொறியியலாளர், அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருவருட்செல்வன் (வைத்தியர்,வவுனியா பொது வைத்தியசாலை), விஜயதர்சினி (அரச கால்நடை வைத்தியர், கால்நடை வைத்திய அலுவலகம், நல்லூர்), சோபனா (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

மகேஸ்வரி(விசுவமடு), கேதீஸ்வரம்பிள்ளை (வைத்தியர், வெல்லவாய), கமலேஸ்வரி(விசுவமடு), கோணேஸ்வரம்பிள்ளை(கனடா), அமரர் சிவகணேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், திருக்கார்த்திகன், ராகவர்சினி, சப்தகன், சேயோன் ஆகியோரின் பேரனுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 20.02.2017, திங்கட்கிழமை, பிற்பகல் 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக பத்தினியார் மகிழங்க்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

இல: 51, 1ம் ஒழுங்கை,
திருநாவற்குளம்,
வவுனியா.

0242223638
0718711206

வவுனியாவில் முன்னாள் போராளி அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு!!

வவுனியாவில் இன்று(19.02.2017) காலை முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் வசித்துவரும் முன்னாள் போராளியான கோபு என்று அழைக்கப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இலங்கராசா இளங்கோவன்(வயது 28) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராகும்.

இவர் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி என்பதுடன் புனர்வாழ்வு பெற்று இயல்பு வாழ்க்கையில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரது சடலத்திற் அருகில் தூக்குக் கயிறு ஒன்று காணப்படுகிறது. ஆனாலும் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய கார் ஓட்டுநர்!!

பிரபல மலையாள சினிமா நடிகை பாவனா கேரளாவிலுள்ள கொச்சினில் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை பாவனா இவருக்கு வயது 30, இவர் நேற்று முன்தினம் இரவு எர்ணாகுளம் பொலிசில் ஒரு புகாரை அளித்தார். அந்த புகாரில் தனது படப்பிடிப்பை முடித்து வீட்டு வீடு திரும்பும் போது, ஒரு டிராஃபிக் சிக்னலின் அருகே ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரது காரை மடக்கிபிடித்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவரை பாலியல் தொந்தரவு செய்ததாகவும், செல்போனில் படம் பிடித்தாகவும் புகார் அளித்துள்ளார்.

பொலிஸ் விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுத்த அந்த ஐந்து பேரில் ஒருவர் சுனில் என்றும் அவர் பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுநராக இருந்தவர் என்றும் அவர் இல்லாத நேரங்களில் வேறு ஓட்டுநர்களை பாவனாவுக்காக அவர் ஏற்பாடு செய்துதருவார் என்றும் தெரியவந்துள்ளது.

அதுபோல் நேற்று இரவு சுனில் ஏற்பாடு செய்த கார் ஓட்டுநர் பாவனாவின் காரை ஓட்டி வந்துள்ளார், அப்போது வேறு சிலர் வலுக்கட்டாயமாக அந்தக் காரை மடக்கி பிடித்து, அதனுள் நுழைந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காரில் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் நடிகை பாவனாவை விதம் விதமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவிட்டு, பாவனாவிடம் போலீசிற்கு கூடாது என்றும் அதனை மீறினால் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவதாகவும் கூறி மிரட்டி உள்ளனர். பின்னர் இரவு 10 மணியளவில் அவரை பாவனாவின் நண்பர் வீட்டின் அருகில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நடிகை பாவனா, இந்த சம்பவத்தை தனது நண்பரின் துணையுடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சுனில் மற்றும் அவரது நண்பர்கள் தான் அவரை கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்டதாக புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் பொலிசார் ஓட்டுநரை கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

முதன் முறையாக ஒரு பிரபல நடிகையை அவரது ஓட்டுனரே கடத்தி பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் திரையுலகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா பொதுப் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!!

 
வவுனியா நகரசபை பொதுப் பூங்காவில் நேற்று (18.02.2017) மாலை சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கீழே விழுந்து சிறுவன் ஒருவர் படுகாயமடைந்து பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இன்று (19.02.2017) காலை பொதுப் பூங்காவிற்குச் சென்ற வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் உடைந்து விழுந்த ஊஞ்சலினைப் பார்வையிட்டதுடன் பூங்கா ஒப்பந்த உரிமையாளர்களையும் அழைத்து கலந்துரையாடியதுடன் அங்குள்ள அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் மறு பரிசீலனை மேற்கொள்ளுமாறும் அதுவரையில் நகரசபை பொதுப் பூங்காவினைத் தற்காலிகமாக மூடிவிடுமாறும் தெரிவித்துள்ளதுடன் நகரசபை செயலாளருடனும் தொலைபேசியில் உரையாடி நகரசபை செயலாளரின் அனுமதியுடன் பொதுப் பூங்கா இன்று முதல் மறு அறிவித்தல் வரும்வவரை திருத்தவேலைகள் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்தி : வவுனியா நகரசபை பூங்காவில் ஊஞ்சல் ஆடிய சிறுவனுக்கு நேர்ந்த கதி!!

பாடசாலையில் மாணவர்களால் கூட்டாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி தற்கொலை!!

அவுஸ்திரேலியாவில் பாடசாலையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதிய கடிதத்தை அவர் தாய் சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

அவுஸ்திரேலியா நாட்டில் வசித்து வருபவர் Linda, இவரின் மகள் பெயர் Cassidy Trevan (13). இவர் அங்குள்ள பாடசாலையில் படித்து வந்தார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் Cassidy பாடசாலையில் இருக்கும் போது அவருடன் படிக்கும் சில மாணவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், அந்த மாணவர்கள் Cassidyவை அடித்து துன்புறுத்தும் செயலிலும் ஈடுப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வீட்டுக்கு வந்த Cassidy தற்கொலை செய்ய முடிவெடுத்து அதற்கு முன்னர் ஒரு கடிதம் எழுதினார். அதில், என் பெயர் Cassidy Trevan, நான் என்னுடன் படிக்கும் மாணவர்களாலேயே அடித்து துன்புறுத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டேன்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை எச்சரிக்கை செய்யவே இந்த கடிதம். எனக்கு இன்று நடந்தது நாளை மற்றவர்களுக்கும் நடக்கலாம். இப்படி உங்களுக்கு நடந்தால் தைரியாக எதிர்த்து போராடுங்கள் என எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தை Cassidyவின் தாய் Linda மன தைரியத்தை வரவழைத்து கொண்டு மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க சமூகவலைதளங்களில் அதை பகிர்ந்துள்ளார்.

கைக் குழந்தையை கொடிய விலங்குகளுக்கு இரையாக போட்ட பெற்றோர் : அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் ஒரு மாத கைக்குழந்தையை மிருகங்கள் வாழும் காட்டில் வீசிச்சென்ற பெற்றோரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு அடர்ந்த காட்டின் வழியாக பொது மக்கள் சிலர் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அருகில் சென்று பார்த்த போது 1 மாத கைக் குழந்தை அங்கு அழுது கொண்டிருந்தது.

உடனே குழந்தையை மீட்ட அந்த மக்கள் அதை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். 2 கிலோ எடை மட்டும் இருந்த குழந்தைக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொலிசார் நடத்திய விசாரணையில், அந்த குழந்தையை பேருந்தில் எடுத்து வந்து அதன் பெற்றோரே காட்டில் போட்டிருப்பது தெரியவந்தது.

அவர்கள் பற்றிய தகவல்கள் ஏதும் தெரியாத நிக்லையில், காட்டில் வாழும் கொடூர மிருகங்கள் அந்த குழந்தையை கொல்ல வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம் என தெரியவந்துள்ளது.

ஜேர்மனியில் டிஜிட்டல் பொம்மைகளுக்கு தடை!!

ஜேர்மனியில் சிறுவர்கள் அதிகம் பயன்படுத்தும் இணைய தொடர்புள்ள டிஜிட்டல் பொம்மைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி நாட்டில் My Friend Cayla என்னும் பொம்மை சிறுவர், சிறுமிகளிடம் மிக பிரபலமாகும்.

இந்த பொம்மை மூலமாக ஏதாவது கேள்வி கேட்டால் அது இணைய உதவியுடன் ஆப்ஸ் உடன் இணைத்து கொண்டு கேள்விக்கான பதிலை சொல்லும்.

பெற்றோர்களுக்கு தெரியாமல் குழந்தைகள் எது பேசினாலும் இதில் பதிவாகிவிடும். இதை வேறு தவறான வழியில் கூட பயன்படுத்த முடியும்.

இதை கருத்தில் கொண்டும், இது ரகசிய உளவுகள் தரும் சாதனமாகவும் திகழ்வதால் இந்த வகையான பொம்மைகளை தடை செய்ய ஜேர்மனியின் மத்திய நெட்வொர்க் ஏஜென்சி உத்தரவிட்டுள்ளது.

இதுபோலவே செயல்படும் வேறு பொம்மைகளையும் தடை செய்யவும் தயங்க மாட்டோம் என அந்த ஏஜன்சி கூறியுள்ளது.

இந்த தடை உத்தரவுக்கு ஐரோப்பிய நுகர்வோர் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இளம் பெண் சோபிகாவை கொன்ற அகதி சுவிசில் கைது : காரணம் என்ன தெரியுமா?

 

ஜேர்மனில் கரித்தாஸ் தொண்டு நிறுவனத்தில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிய தமிழ் யுவதி பரமநாதன் சோபிதா (வயது 22) படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டு நைஜீய நாட்டு புகலிட கோரிக்கையாளரான 27 வயது இளைஞன் ஒருவர் சுவிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை கைது செய்ய ஐரோப்பிய நாடுகளுக்கான பிடியாணை ஜேர்மனியால் பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் ரயில் நிலையம் ஒன்றுக்கு அருகில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை கைது இடம்பெற்றது.

இவரை நீதிமன்ற விசாரணைக்காக கையளிக்க வேண்டும் என்று ஜேர்மனிய அதிகாரிகள் கோரி உள்ளனர்.

ஒருதலை காதலே படுகொலைக்கு காரணம் என்று கூறப்படுகின்றது. காதலனிடம் இருந்து அண்மையில்தான் சோபிதா பிரிந்தார். இன்னொருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்த கூடிய மனநிலையில் இவர் இருந்திருக்கவில்லை.

ஆனால் நைஜீரிய இளைஞன் தொடர்ச்சியாக காதலை வெளிப்படுத்தி வந்திருக்கின்றார். கடந்த வலண்டைன் தினத்துக்கு முந்திய நாட்களில் மிக தீவிரமாக நடந்து கொண்டார். ஆயினும் சோபிதா இவரின் காதலை இத்தடவைகளிலும் நிராகரித்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞன் கடந்த சனிக்கிழமை கத்தியால் சோபிதாவின் தலை, கழுத்து, மார்பகங்களில் மாறி மாறி குத்தி படுகொலை செய்து உள்ளார்.

200 இளம்பெண்களை பலாத்காரம் செய்தேன் : ஐ.எஸ் தீவிரவாதி பகீர் வாக்குமூலம்!!

ஈராக் நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதி ஒருவர் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பலாத்காரம் செய்துள்ளதாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் நாட்டில் செயல்பட்டு வந்த ஐ.எஸ் தீவிரவாதியான Amar Hussein(22) என்பவனை அந்நாட்டு பொலிசார் கடந்த 15ம் திகதி கைது செய்துள்ளனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதியிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அப்போது, 14வது வயதிலேயே ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் இணைய வேண்டும் என முயற்சி செய்து கடந்த 2013ம் ஆண்டு தான் சேர்ந்தேன். இதே ஆண்டு முதல் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி இதுவரை 500க்கும் மேற்பட்ட வரை கொன்று குவித்துள்ளேன். உயிரிழப்புகளை அதிகளவில் ஏற்படுத்தும் தீவிரவாதிக்கு தலைமை அதிகளவில் சலுகைகளை வழங்கும்.

இந்த வகையில், ஈராக் நாட்டு சிறுபான்மை இனத்தவரான யாஸிதி பெண்களை பலாத்காரம் செய்ய என்னுடைய தலைமை அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய இடத்தில் வசித்து வந்த யாஸிதி இளம்பெண்களை பலாத்காரம் செய்துள்ளேன். இதுவரை 200க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்துள்ளேன்.

இந்த குற்றங்களுக்காக தான் இப்போது சிறையில் வருந்துகிறேன்.
இத்தனை ஆண்டுகள் செய்த பாவத்தை தீர்த்துக்கொள்ள தற்போது புனித நூலான குரானை நாள்தோறும் படித்து வருகிறேன்’ என தீவிரவாதி தெரிவித்துள்ளான்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதி அளித்த இந்த வாக்குமூலம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

தன்னுடைய சட்டையை தானே கிழித்துக் கொண்டாரா ஸ்டாலின்?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றியடைந்துள்ளது. சட்டசபை கூட்டம் தொடங்கியவுடன் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரியும், ஒருவாரம் கழித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர் திமுக எம்எல்ஏ-க்கள்.

இதனை சபாநாயகர் தனபால் மறுத்ததால் ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏ-க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சபாநாயகரின் உத்தரவின்படி ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏ-க்களை கூண்டாக வெளியேற்றினர்.

அப்போது ஸ்டாலின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சட்டையை கிழித்து அவமானப்படுத்தியதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

ஆனால் அவர் சட்டசபையில் இருந்து வெளியே வந்த போது சட்டை பையில் பேனா இருந்துள்ளது, அடுத்த படத்தில் சட்டை பை கிழிந்துள்ளது.

யார் இவரது சட்டையை கிழித்திருப்பார்கள் அல்லது இவரே கிழித்துக் கொண்டு அதிமுக மீது குற்றம் சுமத்துகிறாரா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

யாழில் இடம்பெற்ற விபத்து : அதிவேகத்தால் பறிபோன 23 வயது இளைஞனின் உயிர்!!

 
பருத்தித்துறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ் நகரைசேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில், யாழ் நகரை சேர்ந்த செல்லக்கணபதிப்பிள்ளை சஞ்ஜீவ் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பகல் 3 மணியளவில் பருத்தித்துறை வீதி, குஞ்சர் கடைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், இளைஞர் வந்த மோட்டார் வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

அத்துடன் குறித்த விபத்துக்கு அதி வேகமே கரணம் என்றும், உழவு இயந்திர சாரதி படு காயமடைந்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மேலும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏரியில் வீசப்பட்ட குழந்தைக்கு தாயான பெண் பொலிஸ் அதிகாரி!!

 
மொனராகலையில் கைவிடப்பட்ட குழந்தையை பொலிஸ் பெண் அதிகாரிகள் பராமரிக்கும் நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மொனராகலை கச்சேரி சந்தியில் 4 மாத பெண் குழந்தை ஒன்று ஏரியில் வீசப்பட்ட நிலையில் மக்களால் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த குழந்தையை புத்தல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே ஏரியில் வீசியுள்ளார். அந்தப் பெண் குழந்தையின் தாய் எனவும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏரியில் மீட்கப்பட்ட குழந்தையை மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண் பொலிஸ் அதிகாரிகள் அந்த குழந்தை குளிப்பாட்டி பால் கொடுத்து பராமரித்துள்ளனர்.

எனினும் குறித்த குழந்தை அவரின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உலகின் முதல் திருநங்கை பொம்மை நாளை முதல் விற்பனையில்!!

உலகின் முதல் திருநங்கை பொம்மைகள் நியூயோர்க் விளையாட்டுப்பொருள் கண்காட்சியில் இன்று வெளியாகவிருக்கின்றன. கிங்ஸ்டனில் உள்ள டொன்னர் பொம்மை நிறுவனம் இந்த பொம்மைகளைத் தயாரித்துள்ளது.

அமெரிக்காவின் ஓரினச்சேர்க்கை மற்றும் இருபால் உறவு ஆதரவுக் கழகத்தின் பேச்சாளருமான ஜாஸ் ஜென்னிங்ஸ் இந்த பொம்மையை வடிவமைத்திருக்கிறார்.

பதினாறு வயதேயான ஜென்னிங்ஸ், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறி, அமெரிக்காவின் மிக இளவயது திருநங்கையாகத் தன்னைப் பதிவுசெய்துகொண்டவர். இதனால், அமெரிக்கா முழுவதும் இவர் புகழ்பெற்றிருக்கிறார். இந்த பொம்மையைத் தயாரித்து வெளியிடுவதன் மூலம், திருநங்கையாக இருப்பது தொடர்பான நேர்மறைச் சிந்தனைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும் என்று நம்புவதாக இவர் தெரிவித்துள்ளார்.

“சிறுவயது முதலே – அதாவது நான் ஆணாக இருந்தபோதே பொம்மைகளுடன் விளையாடுவதை விரும்பினேன். இதன் மூலம் என் பெற்றோருக்கு என்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறேன் என்றே நம்புகிறேன். இது என்னுடைய பயணத்திற்கான தருணம் என்றே கருதுகிறேன்” என்று ஜென்னிங்ஸ் தெரிவித்துள்ளார்.

திருநங்கை பொம்மையை வடிவமைத்தமைக்காக டொன்னர் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ரொபர்ட் டொன்னர், ஜென்னிங்ஸைப் பாராட்டியிருக்கிறார். காலோசிதமான சிந்தனையும், துணிச்சலும், படைப்புத்திறனும் கொண்ட ஜென்னிங்ஸ், இந்த பொம்மையை வடிவமைக்கும் கற்பனையைச் செயற்படுத்தியிருப்பது அவர் மீதான மரியாதையை அதிகரித்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகத்தை தானமாகப் பெற்ற இளைஞர் : 56 மணித்தியால சத்திரசிகிச்சையின் பின் அழகாகினார்!!

அமெரிக்காவின் மின்னெ கோட்டா மாகாணத்திலுள்ள வுயோமிங் நகரைச் சேர்ந்தவர் ஆன்டி கான்ட்னெஸ் (31). கடந்த 2006 ஆம் ஆண்டு இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார்.

ஆனால், அவர் மரணமடையவில்லை. முகம் சிதைந்தது. மனம் வெறுத்த நிலையில் வாழ்ந்து வந்தார். பின்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றார். ஏனைய உறுப்புகளைப் போன்றே முகத்தையும் தானமாகப் பெற்று சீரமைக்கலாம் என மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.

முகத்தைத் தானமாகத் தருபவருக்காக ஆன்டி கான்ட்னெஸ் காத்திருந்தார். இந்நிலையில், மின்னெ கோட்டாவைச் சேர்ந்த காலன் ரோஸ் என்பவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி லில்லியின் அனுமதி பெற்று அவரது முகம் தானமாகப் பெறப்பட்டது.

அதைத் தொடர்ந்து, காலன் ரோஸின் முகத்தில் இருந்து மூக்கு, தாடைகள், வாய், உதடுகள், நாடி, மற்றும் பற்களை அகற்றி அதனை ஆன்டி கான்ட்னெஸிற்கு மருத்துவர்கள் பொருத்தினர்.

இதனை முக சீரமைப்பு சிறப்பு நிபுணர் மருத்துவர் சமீர் மார்தானி நடத்தினார். சத்திரசிகிச்சை முடிந்து 3 வாரங்கள் கழித்து கண்ணாடியில் சான்ட்னெஸ் தனது முகத்தைப் பார்த்தார். அப்போது தனது முகம் முழுவதும் அழகாக மாறியிருப்பதைக் கண்டு அதிசயித்தார்.

முக மாற்று சத்திரசிகிச்சையை 56 மணி நேரம், 60 பேர் கொண்ட மருத்துவக்குழு நடத்தியது.

மருத்துவர்களுக்கும் தனது கணவர் ரோசின் முகத்தைத் தனக்கு தானமாக அளித்த அவரது மனைவி லில்லிக்கும் நன்றி கூறியுள்ளார் சான்ட்னெஸ்.

கடற்படைக்கு பயந்து களனி ஆற்றில் குதித்த இளைஞர் பரிதாபமாக பலி!!

பியகம – யபரலுவ பகுதியில் இளைஞர் ஒருவர் கடற்படையினருக்கு பயந்து களனி ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது கடற்படை படகொன்று குறித்த பகுதிக்கு வந்துள்ளது.

குறித்த கடற்படை படகை கண்ணுற்ற இளைஞர் உடனடியாக களனி ஆற்றில் குதித்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரின் சடலத்தை கடற்படையினர் மீட்டுள்ளனர். உயிரிழந்தவர் பரம்பரகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதானவர் என தெரியவந்துள்ளது.