நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 பேர் கைது!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான பாவனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த 7 பேரை கேரளா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தற்போது பாவனா நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் அருகே நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விட்டு நடிகை பாவனா கடந்த வெள்ளிக்கிழமை இரவு காரில் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், மர்ம குழு ஒன்று இவரது காரை வழிமறித்து, அதில் ஏறி அவரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாக பொலிஸில் நடிகை பாவனா முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

இதுதொடர்பாக, பாவனாவின் கார் சாரதியான மார்ட்டினை கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரை கேரளா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் எதற்காக பாவானாவிடம் அத்துமீறினார்கள் என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பேராதனை பல்கலை மாணவர்கள் 15 பேர் கைது!!

பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக பேராதனை பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ​

​இன்று அதிகாலை 01 மணியளவில் குறித்த சந்தேகத்திற்குரிய மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ​

பேராதனை – கலஹா வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து விவசாய பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேருக்கு, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் பகிடிவதை வழங்குவதாக பல்கலைக்கழக ஒழுக்காற்று மேற்பார்வையாளருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. ​

இதன்படி, அவர் பேராதனை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சம்பவம் இடம்பெற்ற வீட்டை சுற்றிவளைத்து மாணவர்களை கைது செய்துள்ளனர்.

பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

சந்தேககத்திற்குரிய மாணவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

5 வயதுச் சிறுமி 71 முதியவரால் துஷ்பிரயோகம்!!

இந்தியாவில் 5 வயது சிறுமி 71 முதியவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது. மும்பை Nalasopara பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.

குறித்த குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வந்த 71 வயது முதியவர், 5 வயது சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்று தவறாக நடந்துள்ளார்.

இதைகண்ட அக்குடியிருப்பை சேர்ந்த ஒருவர் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், குடியிருப்பாளர்கள் காவலாளியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

குற்றவாளியை கைது செய்த பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் 7 வயது சிறுமி ஹாசினி குடியிருப்பை சேர்ந்த 22 வயது இளைஞரால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டது நினைவுக் கூரதக்கது.

மனைவியை பார்த்த நபரை பொதுஇடத்தில் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளிய கணவர்!!(வீடியோ)

மெக்சிகோவில் கணவர் ஒருவர் தன் மனைவியை ஏன் பார்க்கிறாய் என்று கூறி, அருகில் இருந்த நபரை அந்த இடத்திலே சுட்டுத்தள்ளிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் மர்ப நபர் ஒருவர், திடீரென்று தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தன் அருகில் பேசிக்கொண்டிருந்த நபரை சுட்டுத்தள்ளிவிட்டு சாதரணமாக நடந்து சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ அந்நாட்டு ஊடகங்களில் செய்தியாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இச்சம்பவம் மெக்சிகோவின் Chimalhuacán பகுதியில் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் காபி நிறத்தில் டீ-சர்ட் அணிந்த நபருக்கும், அவர் அருகே இருந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது டீ சர்ட் அணிந்த நபர், மனைவி ஒருவர் அருகில் இருக்கும் போது ஏன் மற்றவரின் மனைவியை பார்க்கிறாய் என்று கேட்டுக்கொண்டே தன் பையில் இருந்த துப்பாக்கியை எடுக்கிறார்.

இதற்கு அந்த நபரோ துப்பாக்கியை எடுத்தால் தான் பயந்துவிடுவேனா, தனக்கு எந்த ஒரு பயமும் இல்லை என்று கூறியுள்ளார். அப்போது திடீரென்று அந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அப்பகுதியை விட்டு வெளியேறுகிறார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானதால், தற்போது இது மிகவும் வைரலாக பரவி வருகிறது. மேலும் தாக்குதல் நடத்திய நபர் அடையாளம் காணப்படவில்லை என்றும், தாக்குதலுக்கு உள்ளான நபரின் நிலைமையும் என்ன ஆனது என்பது குறித்து சரியான தகவல் வெளிவரவில்லை என்று அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காதலியின் சடலத்தை 15 மாதங்களாக அலுமாரியில் வைத்திருந்த காதலன்!!

பிரித்தானியாவில் காதலியின் சடலத்தை 15 மாதங்களாக வீட்டு அலமாரியில் மறைத்து வைத்திருந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் Bolton நகரில் வசித்து வருபவர் Victoria Cherry (44) இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போய் விட்டார். அவர் வீட்டார் பொலிசிடம் புகார் அளித்தும் Victoria பற்றிய விவரங்கள் தெரியாமலே இருந்து வந்தது.

இந்நிலையில் போன மாதம் ஒரு வீட்டில் பயங்கர துர்நாற்றம் வருவதாகவும் உடனே வருமாறும் பொலிசாருக்கு தகவல் வந்தது.
தகவல் வந்த இடத்துக்கு சென்று பார்த்த பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் அவர்கள் போன வீட்டின் அலமாரியில் ஒன்றரை வருடங்கள் முன்னர் காணாமல் போன Victoria வின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது.

அந்த வீட்டில் இருந்த Andrew Colin (43) என்பவரின் காதலி தான் Victoria எனவும் அவர் தான் சடலத்தை ஒன்றரை வருடங்களாக அலுமாரியில் வைத்திருந்ததும் தெரியவந்தது.

Andrewவை கைது செய்த பொலிசார் Victoria இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

வவுனியாவில் கவிஞர் ஜீ.எம்.பரஞ்சோதி எழுதிய நாங்கள் விட்டில்கள் அல்ல நூல் வெளியீடு!!

 
கவிஞர் ஜீ.எம்.பரஞ்சோதி எழுதிய நாங்கள் விட்டில்கள் அல்ல நூல் வெளியீடு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இன்று (19.02.2017) மாலை 3.30 மணியளவில் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், மாவட்ட காலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், வவுனிய தேசியற்கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் ந.பார்த்தீபன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், மூத்த எழுத்தாளர் தமிழ்மணி மேழிக்குமரன், கௌரவ விருந்தினர்களாக திரு.சேனாதிராசா, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு.சந்திரகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதற்பிரதியை ந.பார்த்தீபன் வெளியிட பிரதம விருந்தினர் செல்வம் அடைக்கலநாதன் பெற்றுக் கொண்டார்.

வவுனியா நுண்கலை மாணவர்களின் வரவேற்று நடனம், வேப்பங்குளம் சிறுவர் இல்ல அன்பகம் மாணவர்களின் நடன நிகழ்வு எனபன இடம்பெற்றன.

யாழ்.பல்கலையில் மாணவர்களிடையே மோதல் : 6 மாணவர்கள் கைது!!

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரையும் கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் சிலர் வெளியில் தங்கி தமது கல்வியை தொடர்ந்து வருகின்றார்கள்.

இவ்வாறு வெளியில் தங்கியுள்ள மாணவர்களை தாம் தங்கியுள்ள விடுதிக்கு வந்து தங்குமாறு ஏனைய மாணவர்கள் அழைத்துள்ளனர். எனினும் விடுதிக்கு செல்ல மறுத்துள்ளதுடன் நேற்று பல்கலைக்கழக மைதானத்தில் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தக்குதலின் போது, படுகாயமடைந்த மாணவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் மாணவர்களை விசாரணைக்கு வருமாறு இன்று (19) பொலிஸார் அழைத்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் ஏனைய மாணவர்கள் தங்கியிருந்த நோர்தேன் சென்ரருக்கு முன்பாக இருந்த வீட்டில் தங்கியிருந்த 8 மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் 4 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் ஒருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், 6 பேரை நேற்று கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதேவேளை, விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் கோப்பாய் பொலிஸார் கூறியுள்ளனர்.

இவ் வருடத்திற்கான பாடசாலை பரீட்சை கால அட்டவணைகள் வெளியாகியுள்ளன!!

கல்விப்பொதுத் தராதர (உயர் தர) பரீட்சைகள் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 02ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஞாயிறு தினங்கள் மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர ஏனைய நாட்களில் வழமையான பரீட்சைகள் நடைபெறும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி செயன்முறை பரீட்சைகள் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 05ம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்.

பொது தொழினுட்ப பரீட்சை 2017 ஓக்டோபர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

கல்விப்பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சைகள் 2017 டிசம்பர் 12 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர்க்கப்படும்.

சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் 2018 பெப்ரவரி 27 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 9 ஆம் திகதிவரை, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர்த்து நடத்தப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பூனே அணித் தலைவர் பதவியிலிருந்து டோணி நீக்கம்!!

இந்தியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள ஐ.பி.எல் போட்டியில், பூனே சுப்பர் ஜயன் அணியின் தலைவராக ஸ்டீவன் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இறுதியாக கடந்த வருடம் இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியின் போது பூனே அணிக்கு தலைமை வகித்த இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி தலைமை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் இடம்பெற்ற ஐ.பி.எல். போட்டியின் போது பூனே அணி 7 இடத்தை பிடித்து தொடரிலிருந்து வெளியேறியது. ஆகவே இதனால் டோனி அணித்தலைமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை டோனி இந்திய அணியின் தலைமைத்துவத்திலிருந்து விலகியதற்கு பிறகு சிறப்பாக துடுப்பெடுத்தாடுவதால் அவர் தலைமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் முன்னாள் போராளியின் சடலம் மீட்பு : நடந்தது என்ன?

 
வவுனியாவில் நேற்று (18.02.2017) இரவு 11.00 மணியளவில் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் வசித்துவரும் முன்னாள் போராளியான இலங்கராசா இளங்கோவன் (31வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே அவரது வீட்டில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர்களின் உறவினர்களிடம் கேட்டபோது..

திருமணம் முடித்து 10வருடங்கள் கடந்துள்ள நிலையில் தினசரி இவர்களுக்கிடையே சிறு சிறு சண்டைகள் ஏற்ப்படுவது வழமை நேற்றைய தினம் (18.02.2017) இரவு 11 மணியவில் கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் மனைவி தெரிவித்துள்ளார்.

எனினும் உறவினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த சமயத்தில் குறித்த சடலம் தலையில் காயங்களுடன் நிலத்திலியே காணப்பட்டதாகவும் தாங்கள் குறித்த நபரின் மனைவியிடம் தூக்கில் தொங்கிய கயிறு மற்றும் தலையில் காயம் எவ்வாறு ஏற்ப்பட்டது என்று வினவிய போது தூக்கில் தொங்கிய நிலையில் கணவர் காணப்பட்ட போது கயிற்றினை கழற்ற முற்ப்பட்ட சமயத்தில் கயிறு அறுந்ததாகவும் அதன் போதே தரையில் வீழ்ந்து தலையில் காயம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் மனைவி தெரிவித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தபோது, நேற்று (18.02.2017) இரவு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக எமக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தினை பார்வையிட்டதாகவும் தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் தலையில் காயம் இருப்பதாக சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பதில் நீதவான் சடலத்தினை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் சடலத்தை பார்வையிட்டதுடன் கிராம மக்களுடனும் கலந்துரையாடினார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் முன்னாள் போராளி அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு!!

அதிரடியால் அசத்திய அசேல குணரத்ன : இறுதிப் பந்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய இலங்கை!!

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் குணரத்னவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றிபெற்ற இலங்கை அணி, தொடரையும் கைப்பற்றியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவுஸ்திரேலிய அணி சார்பில் ஹென்ரிக்கியுஸ் 56 ஓட்டங்களையும், கிலிங்கர் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் குலசேகர 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இறுதி பந்தில் தனது வெற்றியை பதிவுசெய்தது. இந்த போட்டியில் ஆரம்பத்தில் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது.

எனினும் குணரத்ன, கபுகெதர ஜோடி அணிக்கு ஆறுதல் அளித்து. இந்நிலையில் கபுகெதர 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை கடும் சவாலுக்கு உள்ளானது.

எவ்வாறாயினும் தனியொரு ஆளாக களத்தில் நின்ற குணரத்ன ஆட்டமிழக்காமல் 46 பந்துகளுக்கு 84 ஓட்டங்களை விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இதனடிப்படையில் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

குறித்த இருபதுக்கு-20 தொடர் வெற்றியானது அவுஸ்திரேலியாவில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட 3 ஆவது இருபதுக்கு-20 தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூல் ஊடாக அறிமுகமானவர்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம்!!

முகநூல் ஊடாக அறிமுகமானவர்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என பொலிஸார் கோரியுள்ளனர். முகநூல் ஊடாக நட்புறவை ஏற்படுத்தி மோசடியான முறையில் பணம் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் பதிவாகின்றன என தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பணம் மோசடி செய்த 10 நைஜீரிய பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்னளர்.

தனிப்பட்ட தகவல்களை பெற்றுக் கொண்டு வங்கிகளின் ஊடாக மோசடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நைஜீரிய பிரஜைகள் சுற்றுலா வீசாக்களின் மூலம் இலங்கைக்குள் பிரவேசித்து முகநூல் ஊடாக மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாகக் கூறி இவ்வாறு பணம் மோசடி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெருந்தொகைப் பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

எடப்பாடிக்கு சசிகலா விதித்துள்ள மூன்று நிபந்தனைகள் : கலக்கத்தில் முதல்வர்!!

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ள நேற்றைய தினம் சட்டப்பேரவையில் தனது அணியின் பெரும்பான்மையையும் நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு சிறையில் இருக்கும் அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா மூன்று உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக அதிமுக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சசிகலாவின் அந்த மூன்று உத்தரவுகளையும் தற்போது துணை பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தி கூறியதாக கூறப்படுகிறது. சசிகலாவின் நிபந்தனை என தினகரன் கூறிய அந்த மூன்று உத்தரவுகள்:

1. ஆட்சி நிர்வாகத்தை கவனிப்பதற்கு உங்களை நியமித்தாலும், அதை நீங்கள் மட்டும் தனித்து செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.

2. ஆட்சி நிர்வாகத்தில் எந்த முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானாலும் அதனை என்னிடமும் திவாகரனிடமும் நடராஜனிடமும் தெரிவித்து எங்கள் ஒப்புதல் பெற்ற பின்னரே செயல்படுத்த வேண்டும். எங்கள் மூவரிடமும் ஆட்சி நிர்வாகத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் கூறி எங்களின் வழிகாட்டுதலோடு ஆட்சியை நடத்த வேண்டும்.

3. வாரத்திற்கு ஒரு நாள் சிறையில் இருக்கும் சசிகலாவை கட்டாயம் சந்திக்க வேண்டும். அவரிடமும் ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் அனைத்து விவரங்களையும் கூறி அவரது ஒப்புதலையும் பெற வேண்டும்.

இவ்வாறு மூன்று கட்டளைகளை சசிகலா தினகரன் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறப்பித்ததாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான சந்தோஷத்தை விட இந்த உத்தரவுகளை நினைத்து கலக்கத்தில் உள்ளாராம்

லண்டன் விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது!!

லண்டன் விமான நிலையத்தில் வைத்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இசைக்கலைஞர் தசன் மதுஷான் (Dasun Madushan) என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதிகள் ஊடாக இரண்டு கிலோகிராம் கொக்கைனை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது.

லண்டன் ஹித்ரோ விமான நிலையத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட இலங்கையரிடம் லண்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

எனினும் தான் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பாடகர் மறுத்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் தனது அதிருப்பதியை அவர் வெளியிட்டுள்ளார்.

“இது சிறந்த நகைச்சுவையாக உள்ளது” தசன் மதுஷான் தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆறு இலங்கையர்களுக்கு குவைத்தில் மரண தண்டனை!!

குவைத்தில் ஆறு இலங்­கை­யர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக குவைத்­திற்­கான இலங்கைத் தூதுவர் நந்­தீபன் பால­சுப்­ர­ம­ணியம் தெரி­வித்­துள்ளார்.இவ்­வாறு மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட ஆறு­பேரும் போதைப்­பொருள் மற்றும் கொலைக் குற்­றச்­சாட்­டு­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் என்றும் அவர் தெரி­வித்தார்.

கொலைக்­குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்கள், கொலை செய்­யப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் நஷ்­ட­ஈட்டைப் பெற்­றுக் ­கொள்­வ­தற்கு சம்­ம­தித்தால் மர­ண­தண்­ட­னை­யி­லி­ருந்து விடு­பட முடியும். ஆனால் போதைப்­பொருள் குற்­றச்­சாட்­டின்­பேரில் மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அவ்­வாறு மரண தண்­ட­னை­யி­லி­ருந்து விலக்­க­ளிக்க முடி­யாது.

இதற்கு முன்னர் இலங்­கையைச் சேர்ந்த ஒருவர் கொலைக் குற்­றத்­திற்­காக மர­ண­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டார். அவர் இலங்கை தூத­ர­கத்தின் உத­வி­யுடன் நட்ட ஈட்டை வழங்கி தண்­ட­னை­யி­லி­ருந்து விடு­பட்டார்.

எவ்­வா­றெ­னினும் குவைத் அர­சாங்கம் 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை தற்­கா­லி­க­மாக மர­ண­தண்­ட­னையை நிறுத்­தி­வைத்­தி­ருந்­தது. ஆனால் இந்த வருடம் தொடக்கம் மீண்டும் மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்றி வரு­கி­றது. அந்த வகையில் இந்த வரு­டத்தில் குவைத் அரச குடும்­பத்தில் ஏழுபேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்றும் தூதுவர் சுட்டிக்காட்டினார். சிங்கள வாரநாளேடொன்று இச் செய்தியை வெளியிட்டுள்ளது

ஈழத்தில் மிகச்சிறந்த ஒளிப்பதிவுத் தொழில்நுட்ப வல்லுனர் மரணம் : அதிவேகத்தால் பறிபோன உயிர்!!

பருத்தித்துறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இளைஞர் மிகச்சிறந்த ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனர் என தெரியவந்துள்ளது.

யாழ். நகரைச் சேர்ந்த செல்லக்கணபதிப்பிள்ளை சஞ்ஜீவ் என்ற 23 வயதுடைய இளைஞர் உயிரிழந்தார்.

மூன்று மாதங்களுக்கு முன், சஞ்சீவ் தன் ‘‘Drone Camera’’ மூலம் ‘ஒரு பறவையின் பார்வையில்’ என்ற தலைப்பில் யாழ். மண்ணின் அழகைப் படம்பிடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இளைஞர் வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறை வீதி, குஞ்சர் கடைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அத்துடன் குறித்த விபத்துக்கு அதி வேகமே காரணம் என்றும், உழவு இயந்திர சாரதி படுகாயமடைந்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.