நேற்றைய போட்டியில் அதிரடி காட்டிய அசேல குணவர்தனவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்திவரும் அதிரடி ஆட்டக்காரரும் சகலதுறை வீரருமான அசேல குணவர்தனவுக்கு இம் முறை ஐ.பி.எல்.இல் அதிர்ஷ்டம் கைகூடியுள்ளது.

இலங்கை அணி வீரரான அசேல குணவர்தனவை 30 இலட்சம் இந்தியன் ரூபாவுக்கு மும்மை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது. இதன் இலங்கை பெறுமதி 6.72 மில்லியன் ரூபாவாகும்.

அசேல குணவர்தன அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி இலங்கை அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல முக்கிய வீரராக இருந்ததுடன் முன்னைய போட்டியிலும் இலங்கை அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

24 வயதில் 8.3 அடி உயரம் : அசுரமாக வளரும் இளைஞர்!!

ஆந்திர மாநிலத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் 8 அடி 3 அங்குலம் வளர்ந்துள்ளார். அவர் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போவதால் அவரது பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.

இந்தியா, ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பல்வானி பகுதியை சேர்ந்தவர் சூரிய நாராயணா இவரது மனைவி ராமலட்சுமி, இருவரும் கிட்டத்தட்ட 6 அடி உயரம் கொண்டவர்கள்.

இவர்களுக்கு சண்முகராவ் (வயது 24) என்ற மகன் உள்ளார்.சண்முகராவ் சிறுவயதிலேயே உயரமாக வளரத் தொடங்கினார்.

இதனால் அவரது வளர்ச்சி தொடர்பாக பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நீங்கள் உயரமாக இருப்பதால் மகனும் உயரமாக வளரலாம் என்று அக்கம் பக்கத்தினர் கூறினர்.

இப்போது 24 வயதான நிலையில் சண்முகராவ் 8 அடி 3 அங்குலம் வளர்ந்து விட்டார். அவர் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகிறார். இதனால் அவரது பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.

சண்முகராவ் 10-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். பள்ளியில் அவரை எல்லோரும் ஏணி என்று கேலி செய்தனர். இதனால் அவர் படிப்பை நிறுத்திக் கொண்டார்.

தற்போது தெருக்களில் சென்றாலும் அவரை பார்ப்பவர்கள் கேலி செய்கிறார்கள். அதனால் அவர் வெளியில் செல்வதையும் நிறுத்தி விட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்.

வீட்டை விட்டு வெளியே வர வேண்டுமானாலும் கூரை வீடாக இருப்பதால் அவர் வாசல் வழியாக குனிந்தே வெளியே வர வேண்டி இருக்கிறது.அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் விருப்பமாக உள்ளனர்.

ஆனால் அவருக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. தாங்கள் வறுமையில் இருப்பதால் மகனுக்கு என்ன நோய்? ஏன் இவ்வளவு அசுரமாக வளர்கிறார் என்று ஆஸ்பத்திரியில் காட்டி சிகிச்சை பெற முடிய வில்லையே என்று பெற்றோர் பரிதவிப்புடன் உள்ளனர்

யாழ் பல்கலைக்கழத்திற்கு தெரிவான மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பிரதேசத்தை சேர்ந்த ரவீந்திரராஜா திவ்யா எனும் 21 வயதான யுவதியே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

நேற்றுக் காலை தாயார் இவரது அறையினை திறந்த போது இவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவரை வைத்தியசாலையில் சேர்த்த போதும் அவர் முன்பே இறந்து விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவரது மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

வவுனியாவில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 98 ஆடுகள் கைப்பற்றப்பட்டது!!

 
ஆவணங்கள் இன்றி கிளிநொச்சியிலிருந்து புத்தளம் கொண்டு செல்லப்பட்ட 98 ஆடுகளை இன்று (20.02.2017) அதிகாலை ஈரப்பெரியகுளம் பொலிசார் மேற்கொண்ட திடீர் சோனையின்போது லொறியிடன் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட 98 ஆடுகளையும் கிளிநொச்சியிலிருந்து புத்தளம் கொண்டு செல்லப்பட்டபோதே வவுனியாவில் வைத்து கைப்பற்றியதுடன் சந்தேகத்தில் மூவரையும் கைது செய்துள்ளனர்.

விசாரணைகளையடுத்து நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளம் ம.வி மாணவர்கள் கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு ஆதரவாக கவனயீர்ப்பு!!

 
வவுனியாவில் இன்று (20.02.2017) காலை 8 மணி தொடக்கம் 9 மணிவரை செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவித்து தமது பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இன்று வடக்கின் பெரும்பாலான பாடசாலை மாணவர்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் விசேட தேவைக்குட்பட்டோரின் தகவல் திரட்டும் செயற்றிட்டம் : 64 Tab வழங்கப்பட்டது!!

 
வவுனியா சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (20.02.2017) காலை 9.30 மணியளவில் விசேட தேவைக்குட்பட்டோரின் தகவல் திரட்டும் செயற்றிட்டம் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு , 64 களப்பணியில் ஈடுபடும் பொது சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு டப் ( Tab) வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட இச் செயற்த்திட்டத்தின் நான்காம் கட்டமாகவே இன்று வவுனியாவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் எஸ்.திருவாகரன் ( சுகாதார அமைச்சின் செயலாளர்- வடக்கு), வைத்தியர் திரு.கேசவன் ( சமுதாய மருத்துவ நிபுணர் – வடக்கு), திரு. சுபாகரன்( குழுத்தலைவர் – ஆசிய மன்றம்), திருமதி.பவானி (பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்) , பொது சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர்கள், பிராந்திய சேவைகள் பணிமணையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பிரித்தானியாவில் பட்டம் பெற்று உலகை தன் பக்கம் திருப்பிய இலங்கைப் பெண்!!

நீல திமிங்கலம் தொடர்பில் ஆராய்ந்த இலங்கை பெண் ஒருவர் முழு உலகத்தின் அவதானத்திற்கு உட்பட்டுள்ளார்.

கடல் வாழ் உயிரினங்களில் நீல திமிங்கலங்கள் முக்கிய உயிரினமாக கருதப்படுகின்றது. எனினும் நீல திமிங்கலம் தொடர்பில் மக்கள் மற்றும் அதிகாரிகள் உரிய அக்கறை செலுத்தாத நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த நீல திமிங்கலங்களின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தும் பெண் ஒருவர் தொடர்பில் இணையத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

அவரது பெயர் பேராசிரியர் ஆஷா டீ வோஸ் என தெரிவிக்கப்படுகின்றது. கடல் உயிரியல் விஞ்ஞானியாக செயற்படும் அவர் திமிங்கலங்கள் தொடர்பில் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பின் காரணமாகவே உலகின் பெயர் ஒன்றை பெற்றுக் கொண்டுள்ளார். அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பது சிறப்பம்சமாகும்.

அவர் சிறிய வயது முதல் நீல திமிங்கலங்கள் தொடர்பில் அக்கறை செலுத்திய பெண்ணாகும். பெற்றோருடன் கடலுக்கு செல்லும் சந்தர்ப்பங்களிலும், கடலில் உள்ள பெரிய மற்றும் சிறிய உயிரினங்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி வந்துள்ளார்.

தனது ஆர்வம் அதிகமாகியதனை தொடர்ந்து கடல் விஞ்ஞானம் கற்கைளை மேற்கொள்ள ஆயத்தமாகியுள்ளார். எனினும் இலங்கையில் அந்த கற்கை நெறிகள் இல்லாமையினால், அவர் இங்கிலாந்தின் செயிண்ட் ஆண்ட்ரூ பல்கலைக்கழகத்தில் கடல் விஞ்ஞானம் தொடர்பிலான BSC பட்டம் ஒன்றை பெற்றுள்ளார். அதன் பின்னர் அவர் அவுஸ்திரேலியாவின் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் MBA பட்டமும், ஒக்ஸ்போர்ட் பல்லைக்கழகத்தில் பேராசிரியர் பட்டமும் பெற்றுக் கொண்டுள்ளார்.

Who Am I என இணையத்தளத்தில் அவர் வெளியிட்ட கடிதத்தினால் உலகின் அவதானம் அவர் மீது செலுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் நீல திமிங்கலங்கள் தொடர்பில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பெண்ணாக மாறியுள்ளார். அவர் இலங்கையில் மாத்திரமின்றி உலகம் முழுவதும் நீல திமிங்கலங்கள் தொடர்பில் செயற்படும் பெண்ணாகியுள்ளார்.

மாங்குளத்தில் பால் வாகனம் விபத்து : அதிஷ்ரவசமாக உயிர் தப்பிய சாரதி!!

 
இன்று (20.02.2017) 1.45 மணியளவில் பால் கொள்வனவு செய்யும் நெஸ்லே வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்து இடம்பெற்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

கனகராயன்குளத்திலிருந்து மல்லாவிக்கு பால் கொள்வனவு செய்வதற்காக சென்று கொண்டிருந்த பால் வாகனம் மாங்குள சந்திக்கு முன்பு A9 பிரதான வீதியில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் வீதியை விட்டு விலகி வீதியின் மறுபக்கத்திற்கு சென்று தடம்புரண்டுள்ளது. வாகன சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

நித்திரை தூக்கம் காரணமாகவே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடுமையான வாய் துர்நாற்றமா : இதை கண்டிப்பாக படியுங்கள்!!

வாய் துர்நாற்றத்திற்கு பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளே முதன்மைக் காரணம்.

இதுதவிர நுரையீரல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளும், செரிமானக் கோளாறுகளும் காரணமாக அமைகின்றது.

எனவே இயற்கை முறையில் நமது வாயின் கடுமையான துர்நாற்றத்தை போக்குவதற்கு அருமையான மூலிகை டீ இதோ!

தேவையான பொருட்கள்

புதினா இலை – 5
தேயிலை – 1 டீஸ்பூன்
தேன் அல்லது பனங்கற்கண்டு – 1 டீஸ்பூன்
பால் – 1/4 கப்
செய்முறை

ஒரு டம்ளர் நீரில் 5 புதினா இலை மற்றும் 1 டீஸ்பூன் தேயிலை ஆகிய இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

பின் இது பாதியாகச் சுண்டியதும் அதை வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு தேவைப்பட்டல் அதில் சிறிதளவு பால் கலந்து குடிக்கலாம்.

ஆனால் இந்த டீயில் பால் சேர்க்காமல் குடிப்பது தான் மிகவும் நல்லது.

மேலும் இந்த புதினா டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் நிறைந்துள்ளதால், நமது உடம்பின் உட்புற புண்கள் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

அப்பிள் நிறுவனம் வெளியிடும் மற்றுமொரு ஐபோன் பதிப்பு!!

அப்பிள் நிறுவனம் தனது கிளை ஒன்றினை இந்தியாவில் திறக்கின்றமை தொடர்பான தகவல் ஏற்கணவே வெளியாகியிருந்தது.

இந்நிலையில் அந்நிறுவனத்தின் புதிய கைப்பேசியான iPhone 8 ஆனது இந்தியாவில் வைத்தே தயாரிக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது iPhone SE பதிப்பும் இந்தியாவில் தயாராகவிருப்பதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து இக் கைப்பேசி உற்பத்தி செய்யப்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பதிப்பானது கடந்த வருடம் அறிமுகமாகியிருந்த போதிலும் மக்களிடையே காணப்படும் வரவேற்பு காரணமாக தொடர்ந்தும் வடிவமைத்து அறிமுகம் செய்ய அப்பிள் நிறுவனம் எண்ணியுள்ளது.

இதன் காரணமாக சுமார் 300,000 தொடக்கம் 400,000 வரையான கைப்பேசிளை முதற்கட்டமாக வடிவமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவினை தளமாகக் கொண்டு செயற்படவுள்ள குறித்த நிறுவனத்துடன் இணைந்து தாய்வானின் Wistron நிறுவனமும் பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 3 வயதுச் சிறுமியை கடத்தி கொடூரமாக கொலை செய்த கும்பல்!!

சென்னை எண்ணூரில் 3 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சிறுமி கிருத்திகா. நேற்று பிற்பகல் சிறுமி கிருத்திகா அருகே உள்ள வீட்டுக்கு விளையாட சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே சிறுமியின் தயார் வெகு நேரமாகியும் சிறுமியை காணாததால் குறித்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் சிறுமியை அங்கு காணவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து கலக்கமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிருத்திகா கிடைக்காததால், பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் மணலி விரைவுச்சாலையில் உள்ள குப்பைக்கிடங்கில் உடலில் பலத்த காயங்களுடன், வாயில் துணியை வைத்து மூடிய நிலையில் சிறுமியின் சடலம் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் விசாரித்த போது, அது மாயமான சிறுமி கிருத்திகா என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், சிறுமி கிருத்திகாவை அழைத்து சென்றதாக கூறப்படும் பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே, சிறுமி கிருத்திகா பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார எனவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சுவிஸ் சொலத்தூர்ன் மாநில தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர்!!

புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் ஆளுமைகளாக மாறி வருகின்றனர்.

உலகெங்கிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றம் வரை இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் சுவிஸில் எதிர்வரும் மார்ச் 12ம் திகதி சொலத்தூர்ன் மாநில தேர்தல் இடம்பெறவுள்ளது.

இந்த தேர்தலில் சோஷலிச ஜனநாயக கட்சியின் சார்பில் சொலத்தூர்ன் மாநில OLTEN-GÖSGEN தொகுதியில் தொழிலதிபர் ஸ்ரீஸ்கந்தராஜா இராசமாணிக்கம் போட்டியிடுகிறார்.

ஈழத் தமிழர்களுக்காகவும், புலம் பெயர்ந்து வாழும் ஏனைய வெளிநாட்டினருக்காகவும் நீண்ட காலமாக சோஷலிச ஜன நாயக கட்சியுடன் இணைந்து ஸ்ரீஸ்கந்தராஜா இராசமாணிக்கம் குரல் கொடுத்து வருகிறார்.

ஸ்ரீஸ்கந்தராஜா ஈழத்தமிழர்கள் சார்பில் அரசியலில் ஈடுபடும் அனைவரும் அறிந்த, அதே நேரம் சுவிஸ் அரசியலில் ஈடுபடும் இளைய தலைமுறையினருக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்து வருவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இவரின் அரசியல் பிரவேசத்தின் குறிக்கோள் புலம் பெயர்ந்த வெளிநாட்டு மக்களின் கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு, காலை கலாசார மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படல்.

அடுத்த தலைமுறை அரசியலில் பிரவேசிக்க நாம் அதற்கான அடித்தளத்தை இடவேண்டும் இதுவே தனது முக்கிய குறிக்கோள் என்ற கருத்தை அவர் பல இடங்களில் பதிவு செய்துள்ளார்.

அதற்கேற்ப வெளிநாட்டினர் பிரஜாவுரிமை பெற்றிருந்தாலும் குற்றங்கள் புரிந்திருப்பின் அவர்களை நாடு கடத்தவேண்டும் என்று கொண்டுவரப்பட்ட சட்டத்தை சோஷலிச ஜனநாயக கட்சியின் சார்பில் கடுமையாக எதிர்த்து பிரசாரம் செய்தமையும், அந்த சட்டத்தை சுவிஸ் மக்கள் ஆதரிக்காமையால் வர இருந்த ஆபத்து தடுக்கப்பட்டததையும் சுட்டிக்காட்டலாம்.

அத்தோடு அண்மையில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகள், அதாவது அடுத்த தலைமுறையினர் சுவிஸில் பிறந்தால் அவர்களுக்கு சுவிஸ் பிரஜாவுரிமை கிடைக்கவேண்டும்.

சோஷலிச ஜனநாயக கட்சியின் கோரிக்கை வெற்றிபெற்றதும் அதிலும் ஸ்ரீஸ்கந்தராஜா முனைப்புடன் செயல்பட்டார் என்பதையும் குறிப்பிடலாம்.

எனவே சொலத்தூர்ன் மாநிலத்தில் OLTEN-GÖSGEN தொகுதியில் போட்டியிடும் ஸ்ரீஸ்கந்தராஜா இராசமாணிக்கம் அவர்கள் வெற்றிபெற வாக்களிப்போம்.

வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்ற சுவிஸ் பிரஜைகளுக்காக அல்லது அகதிகளுக்காக குரல் கொடுக்கும் சோஷலிச ஜனநாயக கட்சியில் அனைவரிடமும் நன்மதிப்பை பெற்ற, நம் தமிழ் உறவான இவரின் முயற்சிக்கு துணை நிப்போம்.

சொலத்தூர்ன் மாநிலத்தில் வசிக்கும் தாய்த்தமிழ் உறவுகள் உங்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்களிடம் இந்த செய்தியை கொண்டு சென்று அவரின் வெற்றிக்கு வழிவகை செய்வோம்.

ஒருவர் இரண்டு வாக்குகள் அளிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். சோஷலிச ஜனநாயக கட்சி-SP LISTE-3 க்கு வாக்களித்து தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவோம்.

24 மணித்தியாலங்களில் 27 முறை மாரடைப்பு : அதிசயமாக உயிர் பிழைத்த லண்டன் வாசி!!

24 மணி நேரத்தில் 27 முறை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், ஒருவர் அதிசயமாக உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று லண்டனில் பதிவாகியுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

54 வயதான Ray Woodhall என்பவரே இவ்வாறு அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற அன்று Ray Woodhallக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்கைக்கு உட்படுத்தப்பட்டார். எனினும், அவருக்கு தொடர்ந்தும் மாரடைப்பு ஏற்பட்டுக்கொண்டே இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

24 மணி நேரத்தில் அவருக்கு 27 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருந்தும் அவர் உயிர் பிழைத்துள்ளதாகவும், இது ஒரு அதிசயமான நிகழ்வு என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா பாடசாலைகளில் கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் கவனயீர்ப்பு!!

 
வவுனியாவில் இன்று (20.02.2017) காலை 8 மணி தொடக்கம் 9 மணிவரை கோவிற்குளம் இந்துக்கல்லூரி, தாண்டிக்குளம் பிறமண்டு வித்தியலாயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியலாயம், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயம் போன்ற பாடசாலைகளின் மாணவர்கள் கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவித்து தமது பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

      

இலங்கைக்கு சர்வதேச ரீதியில் கிடைக்கவுள்ள மற்றுமொரு கௌரவம்!!

தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. எய்ட்ஸ் வைரஸ் பரவுவதை தடுக்கும் நாடு என்ற வகையில் இலங்கைக்கு சான்றிதழ் ஒன்று கிடைக்கவுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் உலக சுகாதார அமைப்பிடமிருந்து இந்த சான்றிதழ் கிடைக்கவுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பணிப்பாளர், வைத்தியர் சிசிர லியனகே கருத்து தெரிவிக்கையில், 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் தாய்மார்களில் 95 சதவீதமானர்வள் எயிட்ஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கியுபா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தாயிடமிருந்து குழந்தைக்கு எய்ட்ஸ் பரவுவதை தடுத்த நாடுகள் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பன்னீர் செல்வத்தால் ஆபத்து : சிறையிலிருந்து தூது அனுப்பிய சசிகலா!!

தமிழக முதலமைச்சராக கடந்த 16ம் திகதி எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார். நேற்று முன்தினம் தன்னுடைய பெரும்பான்மைய சட்டசபையில் 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிரூபித்து ஆட்சியை தக்க வைத்திருக்கிறார்.

எனினும், இது குறித்து பல்வேறு சர்ச்சைகளும், முறைப்பாடுகளும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு கோரி, எதிர்க்கட்சிகள் இல்லாத ஒரு வாக்கெடுப்பை சபாநாயகர் தனபால் நடத்தியிருக்கிறார். இதுகுறித்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள்.

ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நடந்த முறைகேடுகள் குறித்து புகார் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரைச் சந்தித்து தன்னுடைய முறைப்பாட்டையும் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், எடப்பாடிப் பழனிசாமியின் ஆட்சியை எவ்வாறு கலைப்பது என்பது குறித்து ஆலோசனை வழங்கியுள்ள சட்ட ஆலோசகர்கள், தி.மு.க எம்.எல்.ஏக்களும் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்யலாம்.

ஏறத்தாழ சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். அப்படிச் செய்தால் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த உத்தரவிடும் இக்கட்டான சூழ்நிலையை ஆளுநருக்கு உருவாக்கலாம் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் இதுகுறித்து தன்னுடைய அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களோடு மந்திராலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது பெரும்பான்மையை தற்காலிகமாக எடப்பாடி பழனிசாமி நிரூபித்தாலும் அவரின் ஆட்சி நீடித்து நிலைக்காது என்கிற கருத்தும் வலுப்பெற்றுவருகிறது.

ஏனெனில், எதிர்க் கட்சிகள் இல்லாத வாக்கெடுப்பில் மட்டுமே அவர் தனது பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறார். அதுமட்டுமன்றி சட்டசபையில் எதிர்க் கட்சியினர் தாக்கப்பட்டு, சட்டைகள் கிழிக்கப்பட்டு நடந்தேறிய களேபரங்கள் ஒரு ஜனநாயகப் படுகொலைகள் என தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

இதற்கிடையில் சட்டசபையில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பு குறித்து எதிர்க் கட்சியினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் பட்சத்தில் இந்த வாக்கெடுப்பை நிராகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என சட்ட வல்லுநர்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதுவொருபுறமிருக்க, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே பெற்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக மக்களின் ஆதரவு இருக்குமா என்பது சந்தேகமே.

சட்டமன்ற உறுப்பினர்களை பெரும்பாலான மக்கள் எதிர்ப்பதை ஆங்காங்கே காணக்கூடியதாக இருக்கிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் பன்னீர்செல்வம் அகிய இருக தரப்பும் மேற்கொள்ளும் அடுத்த கட்ட விவேகமான நகர்வுகளால் எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் நாற்காலிக்கு ஆபத்திருப்பதாக அரசியல் ஆலோசகர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

இவற்றுக்கிடையில், தமிழக அரசியல் குறித்து கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடுக்கப் போகும் முடிவு என்ன என்பது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் மட்டுல்லாது தமிழக மக்களும் பரபரப்போடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள அதிமுகவின் தற்காலிய பொதுச் செயலாளர் வி.கே சசிகலா தனது கண்ணசைவிலேயே தமிழக ஆட்சி நடைபெறவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

சிறைக்குச் சென்றாலும் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்பதைப்போல தமிழக முதல்வர் பழனிசாமி தன்னுடைய ஒவ்வொரு நகர்வுகளையும் சசிகலாவின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பது சசிகலாவின் உத்தரவு.

வாரத்திற்கு ஒருமுறை தன்னை சந்திக்க வேண்டும் என்றும், தினகரன், நடராஜன், மற்றும் தன்னுடைய ஆலோசனை இன்றி எந்த முடிவையும் எடப்பாடி பழனிசாமி எடுக்கக் கூடாது.

மேலும், வாக்கெடுப்பில் தோற்றுப் போன பன்னீர்செல்வம் குறுக்கு வழியில் காய்நகர்த்தி தற்போது அமைந்துள்ள ஆட்சியைக் கலைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்பதால் சசிகலா மிகவும் அவதானத்தோடு தன்னுடைய நகர்வுகளை மேற்கொண்டுவருகிறார்.