பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் செய்துகொள்வற்கு பொருத்தமான மணமகன் கிடைக்காத நிலையில், தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாகக் கூறுகிறார்.
woman-marry லின் கொலோக்லி எனும் இப் பெண் இங்கிலாந்தின் யோர்க்ஷயர் பிராந்தியத்திலுள்ள ரொதர்ஹாம் நகரில் வசிக்கிறார்.
தனக்கு 39 வயதாகிவிட்ட போதிலும் திருமணம் செய்வதற்குப் பொருத்தமான மணமகன் கிடைக்க வில்லை என இவர் கவலை கொண்டுள்ளார்.
இந்நிலையில், தன்னைத்தானே திருமணம் செய்து கொள்வதற்குத் தான் திட்டமிட்டுள்ளதாக லின் கொலேக்லி கூறுகிறார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் தனது 40 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும்போது தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வதற்கு தான் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“மணமகனும் நானே, மணமகளும் நானே” என்ற நிலையிலும் இத்திருமண வைபவத்தை எளிமையாக நடத்துவதற்கு அவர் முயற்சிக்கவில்லை.
இத்தாலியின் ரோம் நகரில் ஆடம்பரமாக இத் திருமண வைபவத்தை நடத்தவுள்ளதுடன் இதற்காக திருமண ஆடை அணிகலன்களை வாங்கியுள்ளார்.
தனியாக தேனிலவு செல்வதற்காக இரகசிய இடமொன்றை முன்பதிவு செய்துள்ளதாகவும் லின் கோலோக்லி கூறுகிறார்.
நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த காந்தல் பகுதியில் வசிப்பவர் ரியாஸ். இவர், மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் சோயா கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராபியா. இவர்களது 9 மாத பெண் குழந்தை நிஷாரா.
ரியாஸ் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாடகைக்கு உள்ளதா என்பதைக் கேட்பதற்காக, ஃபர்தா அணிந்த இளம் பெண் ஒருவர் கடந்த இரு வாரங்களாக வந்து சென்றுள்ளார்.
பெங்களூருவில் இருந்து உதகைக்கு வந்துள்ளேன். தனது குழந்தையை இந்து நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்க உள்ளேன். அதற்காக, அருகிலேயே வீடு வேண்டும். காந்தல், ஃபிங்கர்போஸ்ட் உட்பட பல்வேறு பகுதிகளிலும் வீடு தேடி வருகிறேன். குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வேலை வேண்டும் எனக் கூறி வந்தாராம்.
இந்நிலையில், அப்பெண் ராபியாவின் வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மீண்டும் வந்துள்ளார். அவருக்கு தேநீர் தயாரிப்பதற்காக, வீட்டில் இருந்தவர்கள் சமையலறைக்குச் சென்றுள்ளனர். அந்த நேரத்தைப் பயன்படுத்தி, தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையையும், மேசை மீது வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கைப்பேசியையும் அப்பெண் திருடிச் சென்றுள்ளார்.
அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுடன், ராபியா குடும்பத்தினர் குழந்தையை தேடி உள்ளனர். அப்போது, ஆட்டோவில் குழந்தையுடன் ஃபர்தா அணிந்த இளம் பெண் சென்றதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில், ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து பொலிசார் விசாரணை நடத்தினர்.
உதகை பேண்ட்லைன் பகுதியில் அப்பெண் திருடிச் சென்ற கைபேசியின் சமிக்ஞைகள் கிடைத்ததால், சனிக்கிழமை இரவு முழுவதும் பொலிசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடத்தப்பட்ட குழந்தையை பொலிசார் நேற்று அதிரடியாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட பெண்ணை பொலிசார் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறும்போது,
உதகை காந்தல் பகுதியில் காணாமல்போன குழந்தை, உதகை கூட்செட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்ணிடம் உள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று காலை அக்குடியிருப்பை பொலிசார் கண்காணித்து வந்தனர். அப்போது, உதகை பிரீக்ஸ் பள்ளியில் பணிபுரிந்து வந்த இந்தி ஆசிரியர் அப்துல்ரஹீம் என்பவரின் வீட்டில் குழந்தை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அந்த வீட்டுக்குள் புகுந்து பொலிசார் சோதனை நடத்தி, குழந்தையை மீட்டனர். குழந்தையைக் கடத்தியது, அப்துல் ரஹீமின் மனைவி பவுசியா என்பது தெரியவந்தது. அவருக்கு இரு ஆண் குழந்தைகள் என்பதால், பெண் குழந்தை ஆசையில் திருடியுள்ளார். கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து பவுசியாவை கைது செய்தனர் என்றார்.
வவுனியா ஓமந்தைப் பகுதி கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரிவுக்குட்பட்ட விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியை உயர்த்துவதற்காக ஓமந்தை கமநல கல்வி அபிவிருத்தி நிதியம் என்னும் அமைப்பின் அங்குரார்பண நிகழ்வு நேற்று நடைபெற்றது. ஓமந்தை கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியாவில் அதிகளவிலான விவசாயிகளைக் கொண்ட பகுதியாக ஓமந்தைப் பகுதி விளங்கி வரும் நிலையில், காலநிலை மாற்றங்கள் மற்றும் கடந்தகால போர் நடவடிக்கைகள் காரணமாக இப்பகுதியில் இருந்து பல்கலைக்கழகம் தெரிவாகும் மாணவர்களும், கல்வியைத் தொடரும் மாணவர்களும் பல்வேறு கஸ்ரங்களை எதிர்நோக்கி சில மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைவிட்டும் உள்ளனர்.
இந்நிலையில் இவ்வாறான இப்பகுதி மாணவர்களின் தொடர் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் ஒமந்தை கமநல அபிவிருத்தி திணைக்கள பிரிவுக்குட்பட்ட விவசாயிகள், கல்வித்துறை சார்ந்தோர், வர்த்தக பிரிவினர் ஆகியோரை உள்ளடக்கி கல்விக்கான உதவியை வழங்கும் நோக்கோடு இவ் அமைப்பு உமதயமாகியது.
ஓமந்தைப் பகுதி கமநல அபிவிருத்தி திணைக்களத் தலைவர் ஏ.நாகரசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் ஆர்.விஜயகுமார், ஓமந்தைப் பகுதி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.திலீபன், கமநல திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள், அப்பகுதி பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
உடல் எடையை குறைக்க பலர் கடுமையாக போராடுகின்றனர். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை என பலவித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அப்படி இருந்தும் தாங்கள் விரும்பியபடி உடல் எடை கணிசமான அளவு குறையவில்லையே என வருத்தப்படுகின்றனர்.
இதனால் இரத்த அழுத்தம் , சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது. இதனைத் தடுப்பதற்காக உலகளவில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. உடல் குண்டாவதை தடுக்க உணவு கட்டுப்பாட்டு முறையை கையாள வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உடல் எடையை அதிகரிக்காமல் குறைக்க அயர்ந்த தூக்கமே நல்ல மருந்து என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வாஷிங்டன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழுவினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் உடல் குண்டாவதற்கு மரபணு கோளாறே காரணம் என தெரியவந்தது. அவற்றின் நடவடிக்கைகளை செயல் இழக்க செய்ய இரவில் தினமும் 9 மணி நேரம் நன்றாக அயர்ந்து தூங்க வேண்டும். குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
143 total views, 1 views today
Share the post “அதிகம் தூங்கினால் உடல் குண்டாகுமா??”
Facebook 0 Twitter 0 Google+ Digg
இதுவரை எந்தவொரு விண்வெளி ஆய்வு நிறுவனமும் அனுப்பியிராத அதிவேகம் கொண்ட ரொக்கெட் ஒன்றினை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் நாசா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இதேவேளை குறித்த ரொக்கெட்டில் சில மனிதர்கள் அடங்கிய குழு ஒன்றினையும் அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளது.
முன்னதாக 2018ம் ஆண்டளவில் Exploration Mission 1 (EM–1) எனும் திட்டத்தின் ஊடாக மனிதர்கள் அற்ற விண்கலம் ஒன்றினை நிலவுக்கு நாசா நிறுவனம் அனுப்பவுள்ளது.
அதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டளவில் Space Launch System (SLS) எனும் புதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளது.
இப் புதிய திட்டமானது செவ்வாய் கிரகத்தினை நோக்கியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் Exploration Mission 1 (EM–1) எனும் திட்டத்தின் ஊடாக பூமியிலிருந்து சுமார் 70,000 கிலோ மீற்றர்கள் தொலைவில் இருக்கும் நிலவினை 6 நாட்களில் சென்றடைய முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெண்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுத் தருவதை விட, ஆண் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தெடுங்கள் என நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது பேஸ்புக் பகிர்வில் தெரிவித்துள்ளார்.
தான் சந்தித்த ஒரு மோசமான அனுபவம் பற்றி விரிவாகப் பகிர்ந்துள்ள வரலட்சுமி சரத்குமார், அந்த பதிவில் இதைக் குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதிய பேஸ்புக் பதிவின் தமிழ் வடிவம் பின்வருமாறு,
”இதை எழுதலாமா, வேண்டாமா என 2 நாட்கள் கடுமையாக எனக்குள் விவாதித்த பிறகே தற்போது எழுதுகிறேன். இன்றைய சமூக ஊடக உலகில், நேர்மையான வார்த்தைகள் பேசப்படும்போது கூட அவை தவறாக மதிப்பிடப்படுகின்றன. அது நடக்ககூடாது. ஆனால் கடைசியில் இந்த சம்பவம் பற்றி பகிர்ந்தே ஆக வேண்டும் என உறுதியாக நினைத்தேன்.
முன்னணி தொலைக்காட்சி ஒன்றின் தலைமை நிகழ்ச்சி வடிவமைப்பாளர் ஒருவருடன் வேலை தொடர்பான சந்திப்பில் இருந்தேன். அந்த அரை மணி நேர சந்திப்பு முடியும்போது, “நாம் எப்போது வெளியே சந்திக்கலாம்” என அவர் கேட்டார். அதற்கு, “வேறு எதாவது வேலை தொடர்பாகவா?” என நான் கேட்டேன். அதற்கு அவர், (அதுதான் வழக்கம் என்பதுபோல் அற்பத்தனமான சிரிப்புடன்) “இல்லை இல்லை, வேலை தொடர்பாக இல்லை. மற்றவைகளுக்காக” என்றார். நான் எனது அதிர்ச்சியையும், கோபத்தையும் மறைத்துக் கொண்டு, “மன்னித்துவிடுங்கள், தயவு செய்து கிளம்புங்கள்” என்றேன். கடைசியாக அவர், “ஓ அவ்வளவுதானா?” என சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே நடந்து சென்றார்.
இதுபோன்ற சம்பவம் குறித்துக் கேள்விப்படும்போது, துறையைச் சார்ந்தவர்கள், சாராதவர்கள் என யாராக இருந்தாலும், அவர்களின் பதில், “சினிமாத் துறை இப்படித்தான். நீ இங்கு வரும்போது தெரிந்துதானே வந்தாய். தற்போது ஏன் இந்த அதிர்ச்சி, புலம்பல்” என்று வரும்.
எனது பதில் இதுதான், நான் ஒரு சதைப்பிண்டமாக நடத்தப்பட இந்த துறைக்கு வரவில்லை. அல்லது பெண்களை பயன்படுத்தும் ஏற்கனவே இருக்கும் இந்த நடைமுறைகளை பின்பற்ற வரவில்லை. எனக்கு நடிப்பு பிடிக்கும். இது நான் விரும்பி தேர்வு செய்த தொழில். நான் கடினமாக உழைப்பேன். நன்றாகவும் வேலை செய்கிறேன். ‘பொறுத்துக் கொள் அல்லது வெளியேறு’ என்பதை நான் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை.
ஒரு பெண்ணாக எனக்குத் தெரிவது ஒரே விருப்பம் தான். தாங்கிக்கொள்ள வேண்டும். அல்லது வாய் விட்டு பேச வேண்டும். முக்கியமான விருப்பங்கள் ஆண்களுக்கு தரப்பட வேண்டும். பெண்களை அவமதிப்பதை நிறுத்துங்கள் அல்லது வெளியேறுங்கள்.
நான் ஒரு நடிகை. நான் திரையில் ஒரு கவர்ச்சிகரமான வாழ்க்கையை வாழ்கிறேன் என்பதற்காக என்னிடம் மரியாதைக்குறைவாக பேச வேண்டும் என்ற தேவை இல்லை. இது என் வாழ்க்கை, என் உடல், என் விருப்பம். எந்த ஆணும் என்னை அவமதித்துவிட்டுப் போகலாம் என எண்ணிவிடக் கூடாது. இது ஒரு சின்ன சம்பவம், கடைசியில் தான் எதுவும் நடக்கவில்லையே, ஏன் அதைப் பற்றி பேசவேண்டும் என நினைப்பவர்கள், இந்த சம்பவம் ஒரு சிறிய மாதிரிதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த நபரைப் பற்றிய விவரங்களைக் கேட்பவர்களுக்கு, அதைச் சொல்லவேண்டிய இடமோ, தருணமோ இது அல்ல. ஏனென்றால் அது இருக்கும் பெரிய பிரச்சினையிலிருந்து விஷயத்தை திசைமாற்றிவிடும். இது ஒரு சிறிய சம்பவமாக, அதிர்ஷ்டவசாமாக அசம்பாவிதங்கள் இன்றி முடிந்ததாக இருக்கலாம். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை கோடிட்டு காட்ட எனக்கு உதவியுள்ளது.
பெண்கள் என்ன அணிய வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி முறையாக நடந்து கொள்ள வேண்டும் என சொல்வதை விடுத்து, உங்கள் பிறப்புறுப்புகளின் வழியாக யோசிக்காதீர்கள், பெண்களை வலிமையானவர்களாக, சுதந்திரமானவர்களாக, திறமையான சரிசமமான மனிதராக பாருங்கள் என ஏன் ஆண்களிடம் சொல்லக் கூடாது. சிறந்தவர்களாக நடக்க ஆண்களுக்கு கற்றுத்தாருங்கள். ஒவ்வொரு பெற்றோரும் வீட்டில் இதை தொடங்க வேண்டும்.
திரைத்துறை மட்டுமல்ல. அனைத்து துறைகளிலும், கலாச்சாரத்திலும், வயது வித்தியாசமின்றி பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் நடந்து கொண்டிருக்கின்றன. பெண்கள் காட்சிப் பொருளாக்கப்பட்டு, சரிசமமாக நடத்தப்படாத ஆணாதிக்க சமூகத்தில் ஊறியுள்ள பிரச்சினை இது. தங்கள் விருப்பம் போல நடத்தும் ஒரு பொருளாகத்தான் ஆண்கள் பெண்களைப் பார்க்கிறார்கள்.
பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், பெண்களை முரட்டுத்தனமாக நடத்துதல், அவமதித்தல் ஆகியவை அபாயகரமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நமது கல்வி நம்மை கைவிட்டு விட்டது. நான் பாதிக்கப்பட்டவள் அல்ல. அப்படி பேசவும் விரும்பவில்லை. பேச பயப்படும் மற்ற பெண்களின் சார்பில் பேசுகின்றேன். அவர்களுக்கு ஆண்களைப் பார்த்தால் பயம். வாய்விட்டு பேசினால் தண்டிக்கப்படுவோம் என்ற பயம்.
இப்போது நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால், பெண்களின் பாதுகாப்பு என்பது கனவாக மட்டுமே இருக்கும். நமது சமூகத்தில் இருந்து பாலியல் வன்முறை என்ற வார்த்தைகளை நீக்கவே முடியாது.
நான் அமைதியாக இருக்க மாட்டேன். எனது சகோதரிகளையும், நண்பர்களையும் முன்வந்து பேசுமாறு அழைக்கிறேன். நீங்கள் இப்போது தனி அல்ல”.
அதிநவீன போர் கப்பல்களுடன் தென் சீன கடற்பகுதியில் அமெரிக்கா ரோந்து நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் அச்சுறுத்தலான சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி சீனா மற்றும் அமெரிக்கா இடையே எல்லை மற்றும் வர்த்தகம் தொடர்பான அழுத்தம் ஏற்பட்டதன் பின்னரே இந்த ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து தென் சீன கடல் வழியிலேயே இடம்பெறுகின்றது. மட்டுமின்றி மிக நீண்ட காலமாக தென் சீனா கடற்பகுதியில் உள்ள நாடுகளுடன் சீனாவுக்கு பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் தென் சீன கடல் பகுதியில் சீனா தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
எனினும், தென்சீனக்கடலில் உரிமை கோரி பிலிப்பைன்ஸ், வியட்நாம், புருனை, தைவான், மலேசியா, கம்போடியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் சீனாவுடன் போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றன.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா பல முறை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த கண்டனத்திற்கு சீனா கடந்த 15ஆம் திகதி கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.
இந்த நிலையில் அமெரிக்கா தனது அதி நவீன விமானம் தங்கி போர் கப்பல்களுடன் தென் சீன கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது சட்டத்துக்கு புறம்பானது மட்டுமல்ல தூண்டிவிடும் நடவடிக்கை எனவும் சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
குறித்த ரோந்து நடவடிக்கையில் யு.எஸ்.எஸ் Carl Vinson விமானம் தாங்கி போர்க்கப்பல், யு.எஸ்.எஸ் Wayne E. Meyer நாசகார கப்பல், F/A-18 jet fighters விமானம் உள்ளிட்டவைகள் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்த திடீர் ரோந்து நடவடிக்கையின் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பதற்ற நிலை உருவாகியிருப்பதாக அரசில நோக்கர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபை சபாநாயகர் தனபாலுக்கு திமுகவினர் பார்சல் மூலம் சேலை அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை தமிழக சட்டசபையில் திமுக கட்சியினர் நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய முறையில் நடத்த வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுப்பட்டனர்.
இதில் சபாநாயகர் தன் சட்டையை திமுகவினர் கிழித்து விட்டதாக குற்றம்சாட்டினார். அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிந்த நிலையில் சட்டசையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டாலின், ஆளுநரை சந்தித்து சட்டசபையில் நடந்ததை விளக்கினார்.
இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து நகர திமுக-வினர், சென்னையில் உள்ள சபாநாயகருக்கு பார்சல் மூலம் சேலை அனுப்பியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரித்தானியாவில் இரவுநேர கேளிக்கை விடுதி முன் 100ற்கும் மேற்பட்ட நபர்கள் மோதிக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேல்ஸ், கார்டிப்பில் உள்ள டைகர் டைகர் இரவுநேர கேளிக்கை விடுதிக்கு முன்னரே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீடியோவில், கேளிக்கை விடுதிக்கு முன் 100ற்கும் மேற்பட்ட நபர் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொள்கின்றனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாவது, தகவலறிந்த சம்பவயிடத்திற்கு 8 முதல் 10 பொலிஸ் வாகனங்கள் விரைந்தது.
குறித்த சாலை சந்தை போல் காட்சியளித்தது, காயமடைந்த நபர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய இரண்டு இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும், சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புகையிரத திணைக்களத்தினால் திருத்தம் செய்யப்பட்ட புதிய புகையிரத நேர அட்டவனை இன்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டில் இருந்து 11 வருடங்களுக்கு பின்னர் மாற்றப்பட்ட நேரத்திற்கமைய இந்த புகையிரத நேர அட்டவனை தயாரிக்கப்பட்டுள்ளது.
வருடத்திற்கு வருடம் புகையிர பயணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டமையை தொடர்ந்து புதிய புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுகின்ற காரணத்தினால் நேர அட்டவனையில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தற்போது தினமும் 24 மணித்தியாலங்கள் முழுவதும் 396 தடவைகள் புகையிரத பயணங்களும் 25 தடவைகள் ரயில் சேவையும் செயற்படுத்தப்படுகின்றது.
தற்போது பிரதான புகையிரத வீதியில் (கொழும்பு – பதுளை) நாளுக்கு 7 புகையிரதங்கள் பயணிக்கின்றன. இந் நிலையில் இந்த புகையிரத வீதியில் மேலும் புகையிரத சேவையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொது மேலாளர் பீ.ஏ.பீ.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அச்சிடப்பட்ட நேர அட்டவனை இன்று முதல் புகையிரத செயற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள அதிகாரிகள், புகையிரத சாரதிகள், காவலர்களிடம் வழங்குவதற்கு புகையிரத திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கு அமைச்சரின் கோரிக்கைக்கமைய எதிர்வரும் மாதத்தில் இருந்து இந்த புதிய நேர அட்டவனையை பொது மக்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் பிரதான புகையிரத நிலையங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ரயில் புகையிரத பொது மேலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் என்1எச்1 வைரஸினால் கர்ப்பிணிப் பெண்கள் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ ஆய்வு மையத்தின் பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கிளிநொச்சி வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வடக்கில் 7ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. கர்ப்பிணிகள் இருவரும் கிளிநொச்சி திருவையாறு மற்றும் மருதநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
அவர்களுக்கு கிளிநொச்சி வைத்தியசாலை தனிப் பிரிவில் வைத்துச் சிகிச்சை வழங்கப்படுகின்றது. கிளிநொச்சியில் ஏற்கனவே 3 சிறார்களும் 30 வயதுடைய ஒருவரும் பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்.
யாழ்ப்பாணம் வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் 26 வயதுடைய பெண் ஒருவர் இந்தத் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டுப் பின்னர் வீடு திரும்பியுள்ளார் என்று சுகாதாரத் துறையினரால் தெரிவிக்கப்பட்டது.
பன்றிக் காய்ச்சல் நோய்த் தொற்று சாதாரண வைரஸ் காய்ச்சல் மூலம் ஆரம்பிக்கின்றது. சிறந்த ஆய்வுகூட மற்றும் நிபுணத்துவ சேவைகள் மூலம்தான் இந்த நோய்த் தொற்றைக் கண்டறிய முடியும். காற்றினாலே இந்த நோய் பரவுகின்றது.
எனவே, அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் பஸ்கள், நிகழ்வுகள், கோயில்கள், ரயில்கள் போன்றவற்றில் நோய்த் தொற்று உடைய ஒருவர் தும்மும்போது காற்றின் மூலம் மற்றவர்களுக்கும் அதன் தொற்றுப் பரவும் தன்மை உள்ளது.
குறிப்பாக குளிரூட்டப்பட்ட அறைகள், மூடிய அறைகள் உள்ளிட்ட வெப்பம் குறைவாக உள்ள பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் தொற்று வேகமாகப் பரவும்.
அதிக காய்ச்சல், மூச்சுவிட சிரமப்படல், நெஞ்சுநோ, நெஞ்சுத் துடிப்பு, வயிற்றோட்டம் போன்றவை காணப்படின் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலை சென்று சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உடலுக்கு வெளிப்புறமாக இதயம் அமைந்துள்ள நிலையில் பிறந்த 7 வயதான சிறுமிக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். ரஷ்யாவைச் சேர்ந்த வேர்சவியா போருன் கொன்சரோவா எனும் இச் சிறுமி உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறினர். ஆனால், உற்சாகமான சிறுமியாக வளர்ந்து வருகிறார் வேர்சவியா.
இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான மருத்துவ சிகிச்சைகளுக்காக தற்போது இச் சிறுமி அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இச் சிகிச்சை வெற்றியளித்தால் அவரின் இதயத்தை உடலுக்குள் வைப்பதற்கான சத்திரசிகிச்சை செய்யப்படும் என அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தன்னைப் பற்றி வேர்சவியா கூறுகையில், இப்படியான இதயம் எனக்கு மாத்திரம் தான் உள்ளது. எனது இதயத்தை பாதிக்காத ஆடைகளை நான் அணிகிறேன். நடப்பது, பாய்வது ஆகியவற்றில் நான் ஈடுபடுகிறேன். ஓடுவதும் எனக்குப் பிடிக்கும், ஆனால், நான் ஓடக்கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சைகள் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பரீட்சையின் செய்முறைப்பரீட்சைக்ள ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த வருடத்திற்காக கல்விப்பொதுத்தராதார சாதாரணத்தரப்பரீட்சைகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அத்தோடு 5 ஆம் தரப் புலமைப்பரீசீல் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த மொடல் ஒருவரான விக்டோரியா ஒடின்ட்கோவா, துபாயிலுள்ள 1004 அடி உயரமான கட்டடத்தின் உச்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி தனது நண்பரின் கையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பாக விக்டோரியா ஒடின்ட்கோவாவுக்கு துபாய் பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர்.
22 வயதான விக்டோரியா ஒடின்ட்கோவா, ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரைச் சேர்ந்தவர். மொடலாக இவர் பணியாற்றி வருகிறார். அண்மையில் இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய்க்குச் சென்றபோது, அங்குள்ள 1004 அடி (306 மீற்றர்) உயரமான கேயான் டவர் எனும் கட்டடத்தின் உச்சியில் தொங்கிக் கொண்டு போஸ் கொடுத்தார்.
73 மாடிகளைக் கொண்ட இக்கட்டத்தின் உச்சியில் தனது நண்பர் ஒருவரின் கையை மாத்திரம் பற்றிக்கொண்டு தொங்கிக் கொண்டிருந்தார் விக்டோரியா.
அவர் எவ்வித பாதுகாப்புக் கவசத்தையும் அணிந்திருக்கவில்லை இதன்போது பிடிக்கப்பட்ட புகைப்படம், வீடியோக்களை சமூக வலைத் தளங்களில் விக்டோரியா ஒடின்ட் கோவா வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு தடவை இப் படத்தை பார்க்கும்போதும் எனது உள்ளங்கைகள் வியர்க்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், விக்டோரியா ஒடின்ட்கோவாவின் நடவடிக்கை மிக முட்டாள் தனமானது என பலர் விமர்சித்துள்ளனர்.
‘எந்த விலை கொடுத்தாவது கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் ஒரு சிறுமியின் செயற்பாட்டைப் போல இது உள்ளது என ஒருவர் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பாக விளக்கமளிக்க வருமாறு விக்டோரியா ஒடின்ட்கோவாவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக துபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அல்எத்திஹாத் எனும் பத்திரிகை தெரிவித்துள்ளது. ‘இந்த யுவதியின் நடவடிக்கை அவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலானது. இவ்வாறு மீண்டும் செயற்படப் போவதில்லை என உறுதியளிக்கும் ஆவணத்தில் கையெழுத்திடுமாறு அவர் பணிக்கப்படுவார்’ என மேஜர் ஜெனரால் கலீல் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்ஃபினிட்டி டவர் எனவும் அழைக்கப்படும் கேயான் டவர் கட்டடம் 2013 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ், மலையாளம் உட்பட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து நடிகை பாவனா பிரபலமானவர். இவர் கடந்த 17ம் திகதி இரவு படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பினார்.
அத்தானி என்ற இடம் அருகே வந்தபோது இவரது கார் மீது இன்னொரு கார் மோதியது. இதனால் நடிகை பாவனா சென்ற காரை, சாரதி நிறுத்தினார். அப்போது இன்னொரு காரில் வந்த 5 பேர் கொண்ட குழு பாவனா காருக்குள் நுழைந்தனர்.
அவர்கள் ஓடும் காருக்குள் 2 மணி நேரம் பாவனா வுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். அதனை கைத்தொலைபேசியில் படம் எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் கொச்சி அருகே காரை நிறுத்தி அந்த கும்பல் கீழே இறங்கிக் கொண்டனர்.
பின்னால் வந்த இன்னொரு காரில் ஏறி அந்த கும்பல் தப்பிச் சென்றது. இந்த சம்பவம் பற்றி நடிகை பாவனா, இயக்குனரும், நடிகருமான லாலிடம் தெரிவித்தார். அவர் பொலிஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெகராவுக்கு தகவல் கொடுத்தார்.
அவரது உத்தரவின் பேரில் உயர் பொலிஸ் அதிகாரிகள் நடிகர் லால் வீட்டுக்கு விரைந்துச் சென்றனர். அவர்கள் அங்கிருந்த நடிகை பாவனாவிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர். மேலும் பாவனா கொடுத்த புகாரின் பேரில் அவரது கார் சாரதி மார்ட்டின் என்பவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் பாவனா கடத்தப்பட்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் பாவனாவின் முன்னாள் கார் சாரதி சுனில் என்ற பல்சர் சுனில் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
சுனில் சினிமா பிரபலங்களுக்கு கார் சாரதிகள் ஏற்பாடு செய்து கொடுப்பவர். இவர் மீது கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. எனவே அவரை பிடிக்க பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அவரது கைத்தொலைபேசி இலக்கம் மூலம் அவர் இருக்கும் இடத்தை அடையாளம் காணும் பணியும் நடந்தது. அப்போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கோவையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
அங்குச் சென்ற கேரள பொலிஸார் இருவரையும் கைது செய்து கேரளா அழைத்து வந்தனர். அவர்கள் பொலிஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் நடிகை பாவனாவை கடத்தினால் தங்களுக்கு 30 லட்சம் பணம் தருவதாக பாவனாவின் முன்னாள் கார் சாரதி சுனில் தெரிவித்தார்.
இதனால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டோம். ஆனால் சுனில் கூறியபடி பணம் தரவில்லை. அவர் தலைமறைவாகி விட்டார். இதனால் நாங்கள் வழக்கில் இருந்து தப்பிக்க நாங்களும் தலை மறைவானோம் என்றனர்.
இதையடுத்து குற்றவாளிகளின் தொலைபேசி எண்களை பொலிஸார் ஆய்வு செய்தனர். இதில் சம்பவம் நடந்த நாளில் சுனிலின் கைபேசிக்கு 60க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் மலையாள திரையுலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் 6 பேரின் எண்களும் இருந்தன.
இவர்கள் எதற்காக சம்பவ நாளில் குற்றவாளிகளை தொடர்பு கொண்டு பேசினர். பாவனாவை பழிவாங்கும் நோக்கில் அவரை கடத்தச் சொன்னார்களா என்பது பற்றி பொலிஸார் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே நடிகை பாவனாவுக்கு நேர்ந்த கொடுமை பற்றிய தகவல் வெளியானதும் மலையாள திரையுலகம் கடும் கண்டனம் தெரிவித்தது. அரசியல் கட்சிகளும், அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் உத்தரவின் பேரில் பொலிஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெகரா இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஏ.டி.ஜி.பி. சந்தியாவை நியமித்தார்.
இவர் கேரள சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திறமையாக உண்மை குற்றவாளிகளை கைது செய்தவர் ஆவார்.
ஏ.டி.ஜி.பி. சந்தியா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டதும் அவர், டி.ஜி.பி. லோக்நாத் பெகராவுடன் சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். மேலும் சம்பவம் நடந்த அத்தானி முதல் கொச்சி நகர எல்லை வரையிலான வீதிகளில் உள்ள கண்காணிப்பு காமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்தனர்.
இந்த விசாரணையில் வழக்கு பற்றிய மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.