மலிங்கவின் காற்ச்சட்டையில் இருந்த மர்மம் : 17 ஆவது ஓவரில் வெளியானது!!(வைரல் வீடியோ)

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில், லசித் மலிங்கவின் காற்ச்சட்டை பையில் வைத்திருந்த மர்மப்பொருள் தொடர்பில் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மலிங்க பந்து வீசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி கையை தனது காற்ச்சட்டை பையில் வைத்துக்கொண்டிருந்தார். அதனை ஒளிப்பதிவு கமராக்கள் மூலம் பார்வையிட்ட மூன்றாவது நடுவர், கள நடுவருக்கு அறிவித்து மலிங்கவின் காற்ச்சட்டை பையில் என்ன இருக்கின்றது என்பது தொடர்பில் ஆராயுமாறு கூறினார்.

இதனையடுத்து கள நடுவர் ஆராய மலிங்கவின் காற்ச்சட்டை பையில் இருந்த “கை சூடாக்கியை” மலிங்க எடுத்துக்காட்டினார்.

எம்.சி.ஜி. மைதானத்தில் குளிராக இருந்ததால் குறித்த கை சூடாக்கியை மலிங்க வைத்திருந்தார். இதேவேளை குளிராக இருந்தால் கை சூடாக்கியை வீரர்கள் பயன்படுத்த முடியும் என போட்டி வர்ணனையாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவதானம் : கிளிநொச்சியில் கர்ப்பிணி பெண்கள் இருவருக்கு பன்றிக்காய்ச்சல்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதார அமைச்சின் வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்தினால் இன்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து மூன்று குழந்தைகள் உட்பட அறுவர் பன்றிக்காய்ச்சல் நோயினால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே கிளிநொச்சிப் பிரதேசத்தில் பன்றிக்காய்ச்சல் மிக விரைவாகப் பரவிவருவதை உணர்ந்துகொண்டு மக்கள் கூடும்இடங்கள், கோவில் திருவிழாக்கள், சந்தைகள், பஸ் பயணங்கள், ரயில் பயணங்கள் மற்றும் இந்தநோயினால் பாதிப்புற்றோரைப் பராமரித்தல் என்பவற்றை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பதால் இந்த நோய் தொற்றுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

சாதாரண வைரசுக் காய்ச்சலிலிருந்து இந்த H1N1 வைரசுக்காய்ச்சலினை வேறு பிரித்து அறிவது கடினமாகும். தகுந்த ஆய்வுகூடம் மற்றும் நிபுணத்துவ சேவையும் விசேட வைத்திய நிபுணர்களது நேரடிக்கண்காணிப்புமே H1N1 வைரசுக்காய்ச்சலினை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கு அவசியமாகும்.

எனவே எந்தவொரு கர்ப்பவதிக்கோ அல்லது பிரசவித்ததாயாருக்கோ காய்ச்சல் ஏற்படின்,உடனடியாக காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நாளிலேயே அவர் அருகில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் எந்தவொரு கார்ப்பவதியோ அல்லது பிரசவத்தின் பின்னரான தாயாரோ காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகிலுள்ள அரச வைத்தியசாலையை நாடவும். அங்கிருந்து மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு உங்களை பாதுகாப்பாகவும் உடனடியாகவும் அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை பூங்காவில் ஊஞ்சல் ஆடிய சிறுவனுக்கு நேர்ந்த கதி!!

 
வவுனியா நகரசபை பூங்காவில் இன்று (18.02.2017) மாலை சிறுவனொருவன் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் ஊஞ்சல் உடைந்து வீழ்ந்து சிறுவனொருவன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா நகரசபை பூங்காவில் இன்று மாலை கம்பியால் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் மூன்று சிறுவர்கள் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் ஊஞ்சல் அடியோடு பாரி வீழ்ந்ததில் இரு சிறுவர்கள் தெய்வா தீனமாக காயங்களின்றி தப்பியதுடன் வவுனியா தமிழ் மத்திய மாகா வித்தியாலயத்தினை சேர்ந்த 11வயது சிறுவன் காயமடைந்துள்ளார்.

ஊஞ்சல் அமைக்கப்பட்டுள்ள கம்பிகள் ஆழமாக புதைக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

இப் பூங்கா வவுனியா நகரசபை, நெல்சிப் திட்டம் என்பன இணைந்து சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் புணர்நிர்மாணம் செய்யப்பட்டு வடக்கு முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செல்பி எடுத்த சிறுமி புகையிரதத்தில் மோதுண்டு பலி!!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் பரிதாபாத் கானோவால் பகுதியை சேர்ந்த சிறுமி புகையிரதத்துடன் சேர்ந்து செல்பி எடுக்க விரும்பினாள்.

கானெவால் புகையிரத நிலையத்தில் செல்பி எடுக்க செல்போனுடன் தண்டவாளம் அருகே காத்திருந்தாள். அப்போது கராச்சியில் இருந்த ராவல்பிண்டி நோக்கி கடுகதி புகையிரதம் வந்தது.

அதை அவள் கவனிக்கவில்லை. ‘செல்பி’ எடுப்பதிலேயே கவனமாக இருந்தாள். அப்போது அந்த புகையிரதம் சிறுமி மீது மோதியது. இதனால் அவள் தூக்கி வீசப்பட்டாள்.

இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அவளை முல்தானில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முக்கியஸ்தர்கள் சிலர் கைது!!

சட்டப்பேரவையில் திமுகவினர் தாக்கப்பட்டதாகக் கூறி மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால், பெருந்திரளான திமுக தொண்டர்கள் அப்பகுதியில் கூடி பொலிஸ் வாகனங்களைத் தடுத்து நிறுத்த முற்பட்டனர். மெரினா கடற்கரைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளைக் கண்டித்து, திமுக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற பிரமுகர்கள் முதலில் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை சந்தித்துவிட்டு, பிறகு மெரினா கடற்கரைக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்தி சிலை அருகே அவர்கள் குழுமிய நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பெருந்திரளான திமுக தொண்டர்களும் கூடியதால் கடற்கரை வீதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இதனால் போக்குவரத்து தடைப்பட்டதுடன், பொலிஸார் கலைந்து செல்லுமாறு கோரினர். திமுக வினர் கலைந்து செல்ல மறுப்புத் தெரிவித்ததால், அவர்களைக் கைது செய்து வேன்களில் ஏற்றினர்.

எவ்வாறாயினும், பொலிஸ் வாகனங்கள் நகர முடியாதவாறு தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் அ.த.க பாடசாலையின் மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி!!

 
வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று முன்தினம் (16.02.2017) அன்று அதிபர் திருமதி.சிவசிதம்பரம் தலைமையில்இடம்பெற்றது.

இதில் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள இருந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொள்ள முடியாமல் போனது. அவருக்குப் பதிலாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் வ.ஶ்ரீஸ்கந்தரஜா, பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி.தேவிகா உமாதேவன்,

கௌரவ விருந்தினராக திரு.நவநீதன் அவர்களும் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வலயக்கல்வி அலுவலர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

விருந்தினர்களால் ஆக்கபூர்வமான பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. பாடசாலை சமூகத்திற்கு பல தரப்பினர்களாலும் பாராட்டுக்கள் வழங்கப்பட்டது. பின் தங்கிய கிராமம் ஒன்றில் இத்தகைய முன்னேற்றம் என்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

 
வவுனியா கனகராயன்குளம்- குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் செல்வி ஜெயந்தினி தலைமையில் நேற்று (17.02.2017) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொருளாளர் கனகையா ஸ்ரீகிருஸ்ணகுமார் மற்றும் மேலும் நெடுங்கேணி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

மற்றும் வவுனியா வடக்கு கல்விவலய ஆசிரிய ஆலோசகர்கள், அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

122 MLA ஆதரவுடன் தப்பித்தது எடப்பாடி தலைமையிலான அரசு : நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!!

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.

122 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துள்ளதால் பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று அரசை தக்கவைத்து கொண்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

சபாநாயகர் தனபால் தலையில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில், பழனிச்சாமி அணியினருக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை நிரூபிக்க ரகசிய ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்த திமுக, காங்கிரஸ் மற்றும் பன்னீர்செல்வம் அணி உள்ளிட்டோரும் சட்டப்பேரவையில் வலியுறுத்தின.

இதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. மேலும் சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். வேறொரு நாளில் வாக்கெடுப்பு நடத்த எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் மக்களிடம் கருத்து கேட்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணியினர் வலியுறுத்தினர். இதனால் சட்டப்பேரவையில் ஒரு மணி நேரமாக கூச்சல் குழப்பம் நிலவியது. மேலும் சட்டப்பேரவையில் நாற்காலிகளை தூக்கி எறிந்து ரகளையில் எதிர்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

மைக்குகள் பிடுங்கப்பட்டதால் சட்டப்பேரவை போர்க்களமானது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சபாநாயகர் பேரவையை விட்டு வெளியேறினார். இதனால் தமிழக சட்டப்பேரவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கடும் அமளிக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடியதும் தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் ஸ்டாலின் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சட்டப்பேரவை காவலர்கள் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து அவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் குண்டுகட்டாக அவை காவலர்கள் வெளியேற்றினர்.

திமுகவினர் வெளியேற்றத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து 3 மணிக்கு அவை மீண்டும் தொடங்கிய போது எதிர்கட்சிகள் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் எடப்பாடி அரசுக்கு எதிராக செம்மலை, நட்ராஜ் உள்ளிட்ட பன்னீர்செல்வம் ஆதரவு அணியினர் வாக்களித்தனர். அதே போல் எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.

என் சட்டையை கிழித்தனர்: திமுகவினரை ஷூ காலால் மிதித்தனர் : ஸ்டாலின் பரபரப்பு!!

சட்டசபையில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதில் அவரது சட்டை கிழிந்து போனது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. சபையில் நடந்த சம்பவத்திற்கு சபாநாயகரிடம் நான் வருத்தம் தெரிவித்தேன். மறைமுக வாக்கெடுப்பை நடத்துங்கள் என்று கூறினேன். அவர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த இடம் தரவில்லை.

எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக முறையில் அறப்போராட்டம் நடத்தினோம். என்னை அடித்து, உதைத்து, சட்டையை கிழித்து வெளியேற்றினார்கள் என்றார்.

சபாநாயகர் தனது சட்டையை தானாக கிழித்துக்கொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். 500க்கும் மேற்பட்ட காவலர்களை அனுப்பி குண்டுக்கட்டாக, தூக்கி அடித்து உதைத்தனர் இதில் என் சட்டை கிழிந்து போனது. இது குறித்து ஆளுநரிடம் நேரில் முறையிடுவோம் என்றார். அதே கிழிந்த சட்டையுடன் ஸ்டாலின் காரில் ஏறி புறப்பட்டார்.

வவுனியாவில் பொலிசார் திடீர் சோதனை நடவடிக்கை!!

வவுனியாவில் நேற்று இரவு 10.30 மணியளவில் வேப்பங்குளம் பகுதியில் திடீர் ரோந்து நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 10.30 மணியிலிருந்து 12மணிவரையும் அப்பகுதியில் பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதையடுத்து அப்பகுதி மக்கள் சிறிது பதட்டத்திற்குட்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது..

நேற்றைய தினம் இரவு வேளை தட்சனாங்குளம் இந்து மயானத்திற்கருகில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதேவேளை புதையல் தோண்டப்பட்டதிற்கான அடையாளங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை வரை பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

செவ்வாய் கிரகத்தில் வெள்ளம் ஏற்படும் நிலை காணப்படுவதாக தகவல்!!

மிகவும் அண்மித்த காலப்பகுதியில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் வழிந்தோடி சென்றுள்ளமை உறுதியாகியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மேற்கொள்ளப்பட்ட நீண்ட ஆய்வின் பின்னர் இந்த விடயம் கண்கானிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் சிலர் Geophysical Research இதழில் புதிய கடிதம் ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய செவ்வாய் கிரகத்தில் வெள்ள நீர் நிலைமை ஏற்பட்டுள்ள மையம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாலைவனங்களில் இடைக்கிடை எப்போதாவது மழை மற்றும் வெள்ளம் போதும் நிலைமை ஏற்பட்டு நதி மற்றும் நீர் நிலைகள் தற்காலிகமாக ஏற்படும் வகையிலான நிலைமை ஒன்று செவ்வாய் கிரகத்திலும் காணப்படுவதாக அயர்லாந்து பட்லின் நகரில் உள்ள ட்ரினிட்டி வித்தியாலயத்தின் பேராசிரியர் மேரி பர்கே தெரிவித்துள்ளார்.

நீர் பாரிய அளவு அடித்து சென்மையின் ஊடாக மண் மீது நீர் பதிவுகள் பல செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இல்லை என்ற கருத்தினை ஒரே முறையில் ஏற்றுக் கொள்ள முடியாதெனவும், நீர் காணப்பட்டால் உயிரினங்கள் வாழ்வதற்காக அனைத்து சூழலும் காணப்படும் என ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்

காணாமல் போன மகளை கண்டுபிடித்தால் 45 லட்சம் பரிசு : பெற்றோர் கண்ணீருடன் அறிவிப்பு!!

கனடா நாட்டில் காணாமல் போன தங்களுடைய மகளை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.45 லட்சம் பரிசு வழங்கப்படும் என பெற்றோர்கள் உருக்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மாண்டீரியல் மாகாணத்தில் உள்ள குயூபெக் நகரில் Marilyn Bergeron(24) என்ற இளம்பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

மாண்டீரியல் நகரில் பணி செய்து வந்த இவர் கடந்த 2008-ம் ஆண்டு குயூபெக் நகரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

ஆனால், வீட்டிற்கு திரும்பிய நாள் முதல் அவர் ஒருவிதமான மன உளைச்சலில் இருந்துள்ளார்.

பின்னர், அதே ஆண்டு பெப்ரவரி 17-ம் திகதி ஒருவிதக் கலக்கத்துடன் நடந்தே வெளியே சென்றுள்ளார். அப்போது, வீட்டை விட்டு போனவர் இன்றளவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இளம்பெண் காணாமல் போன விவகாரத்தில் பொலிசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மகளை கண்டுபிடிக்க உதவும் நபருக்கு 10,000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என பெற்றோர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

ஆனால், மகள் காணாமல் போய் தற்போது 7 ஆண்டுகள் ஆகியுள்ளதால் நேற்று பெற்றோர்கள் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

அப்போது, ‘எங்களுடைய மகள் மீது உயிரையே வைத்துள்ளோம். அவரை விட்டுவிட்டு நாட்களை கடத்த முடியவில்லை.

மகளை கண்டுபிடிக்க ஏற்கனவே அறிவித்த 10,000 டொலர் சன்மானத்தை மூன்று மடங்காக அதிகரித்து 30,000 டொலர்(45,24,000 இலங்கை ரூபாய்) வழங்க தயாராக உள்ளோம்.

எனவே, தயவு கூர்ந்து தங்களுடைய மகளை கண்டுபிடிக்க உதவ வேண்டும்’ என பெற்றோர்கள் கண்ணீருடன் அறிவித்துள்ளனர்.

அமெரிக்கா விசா நடைமுறைகளில் செய்யப் போகும் அதிரடி மாற்றம்!!

அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் அந்நாட்டு விசா நடைமுறையை எளிமையாக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியான டிரம்ப், இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 முக்கிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார். அது அமெரிக்க மக்கள் உட்பட பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் டிரம்ப்பின் கொள்கை முடிவுகள் மீது அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், ஜனாதிபதியின் உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடையும் விதித்திருந்தது.

இந்நிலையில் நேற்று டிரம்ப் கூறுகையில், அரசின் குடியுரிமை மற்றும் விசா தொடர்பான முந்தைய உத்தரவை நீதிமன்றத்தின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றியமைப்பது தொடர்பாக நாட்டின் தலைசிறந்த சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.

முன்னதாக, நீதிமன்றத்தின் தடை உத்தரவை வெகு மோசமான முடிவு, நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான முடிவு என டிரம்ப் விமர்சித்திருந்தார். தற்போது டிரம்ப் இது போன்று கூறியிருப்பது தங்களுக்கு கிடைத்துள்ள முதல்கட்ட வெற்றி என்று வாஷிங்டன் மாநில அட்டார்னி ஜெனரல் பாப் பெர்குசன் குறிப்பிட்டுள்ளார்.

சிரியா அகதிக்கு ஆயுள் தண்டனை விதித்த ஸ்வீடன் : அதிர வைக்கும் காரணம்!!

ஸ்வீடனில் சிரியா அகதி ஒருவர் கூட்டு படுகொலையில் ஈடுபட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்வீடனில் கடந்த 2012 ஆம் ஆண்டு சிரியா அகதியான Haisam Omar Sakhanh (46) என்பவர் அங்குள்ள ஆயுதப்படை போராளி குழு ஒன்றில் இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த ஆயுதப்படை குழுவானது கூட்டு படுகொலை ஒன்றில் ஈடுபட்டுள்ளது. அதில் தற்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சிரியா அகதி Sakhanh நபர் ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் Sakhanh தரப்பு வாதங்களை Stockholm மாவட்ட நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. இதனையடுத்து குறித்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி Stockholm மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டுமின்றி தண்டனைக்காலம் முடிவடைந்ததும் ஸ்வீடனில் இருந்து நாடுகடத்தவும், மீண்டும் எக்காரணம் கொண்டும் ஸ்வீடனுக்குள் நுழையாத வகையில் தடை செய்யவும் அரசு முனைப்பு காட்டி வருகின்றது.

கடந்த 2011-12 ஆண்டுகளில் இத்தாலில் குடியிருந்த Sakhanh சிரியா அரசுக்கு எதிராக முனைப்புடன் போராடி வந்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்து சிரியாவுக்கு திரும்பிய Sakhanh 2013 ஆம் ஆண்டு ஸ்வீடன் அரசிடம் புகலிடம் கோரியுள்ளார்.

ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு வரை இவரது கடந்த காலம் குறித்து ஸ்வீடன் அதிகாரிகளிடம் எதையும் வெளிப்படுத்தாமல் மறைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கு நிரந்தர குடியுரிமை அளித்துள்ளது ஸ்வீடன் அரசு.

இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு நடந்த கூட்டு படுகொலையின் காணொளி ஆதாரம் வெளியாக 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி விசாரணை கைதியாக சிறை வைக்கப்பட்டார் Sakhanh.

ஸ்வீடனில் ஆயுள் தண்டனை என்பது 10 ஆண்டுகள் மட்டுமே என்பதால், தண்டனை முடிவடைந்ததும் அவரை நாடுகடத்த வேண்டும் என Stockholm மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாய்களை சண்டை போடவைத்து வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்!!

நாய்களை ஒன்றை ஒன்று சண்டை போடவைத்து நடக்கும் வினோத விளையாட்டுப் போட்டி ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் உள்ள பாக்மனில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் நாய் சண்டை போட்டி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு நாய் உரிமையாளர்கள் ஒரு காலி இடத்தில் நிறுத்தப்பட்டு, அதன் பின் அவர்களின் வளர்ப்பு நாய்களை ஒன்றை ஒன்று மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

இதில் நாய்கள் இறுதி வரை மோதவேண்டும் என்று கட்டாயம் இல்லை, மோதலின் போது எதிர் நாய்க்கு பயந்து விட்டு ஓடினாலே போதும் என்று கூறப்படுகிறது.

இந்த வினோத போட்டி நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த காலக்கட்டங்கள் குளிர் காலங்கள் என்பதால் நாய்களுக்கு காயம் ஏற்பட்டாலும், அந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படாது என்பதால் குறித்த மாதங்களில் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

Chief Minister என்று எழுத தெரியாத தமிழக முதல்வர் எடப்பாடி : வைரலாகும் புகைப்படம்!!

தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தில் chief Minister of Tamilnadu என்பதற்கு பதிலாக Cheif Minister of Tamilnadu என்று குறிப்பிட்டுள்ளது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதிமுக-கட்சியைச் சேர்ந்தவரான எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் தமிழக முதல்வராக பதவி ஏற்றார். இவர் தலைமையில் அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தில் தவறு இருப்பதாக கூறி சமூகவலைத்தளங்களில் அது தொடர்பான புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அதாவது அதில் chief Minister of Tamilnadu என்பதற்கு பதிலாக Cheif Minister of Tamilnadu என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலம் தெரியாத நபர் தமிழ் நாட்டின் முதல்வரா என்று பலரும் தங்கள் கருத்துகளை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.