கனடாவில் வாழும் ஈழப் பெண்ணுக்கு கிடைத்த அதிஸ்டம்!!

கனடாவில் வாழும் ஈழத் தமிழ் பெண்ணக்கு பிரதான தமிழ் சினிமா படத்தில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளளது.

லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் என்ற ஈழப் பெண்ணுக்கே இந்த வாய்ப்பு கிடைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் விரைவில் திரைக்கு வரவுள்ள போகன் திரைப்படத்திலலேயே பிண்ணனி பாடகியாக அறிமுகமாகி பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

இசையமைப்பாளர் டி.இமான் மூலமே ,கனடாவில் வாழும் இலங்கை தமிழ் பெண்ணான லக்ஷ்மிக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும்,இந்திய பிரதான தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகியுள்ள முதல் ஈழ பெண்ணே லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் ஆவார்.

குறித்த ஈழப் பெண் தனது மூன்று வயதிலெயே இசை மீது அதிக ஆர்வம் செலுத்தி வந்ததுடன்,கர்நாடக சங்கீதத்தையும் கற்க ஆரம்பித்துள்ளார்.

கனடாவில் தயாரிக்கப்பட்ட அப்பா என்ற படத்திற்கு சிறுவயதிலெயே பின்னணிப் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார்.

இசை பட்டம் பெற்ற லக்ஷ்மி,தற்போது டொராண்டோ பல்கலைக்கழகத்தில் குரல் நடிப்புக்கான ஸ்பெஷலிஸ்ட் ஆக பணியாற்றி வருகின்றார்.

பல திறமை கொண்ட லக்ஷ்மி, ஆங்கிலம், ஹிந்தி, ஜெர்மன், இத்தாலியன், பிரஞ்சு, லத்தீன் ஆகழய மொழிகளிலும் பாடல் பாடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவை அச்சுறுத்தி வந்த செல்வக்குமார் சுப்பையா 24 ஆண்டுகளின் பின் விடுதலை!!

கனடாவில் 24 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த மலேசிய நாட்டவரான செல்வக்குமார் சுப்பையா இம்மாதம் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுதலையாகும் அவரை மலேசியாவுக்கு நாடுகடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1992ம் ஆண்டு கனடா நீதிமன்றத்தால் இருவக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டடை விதிக்கப்பட்டது. குறித்த நபருக்கு எதிராக 19 பாலியல் துஷ்பிரயோக வழக்குகள், 28 போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 1992ம் ஆண்டு, அவருக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அவரின் தண்டனை காலம் இம்மாதம் 29ம் திகதி நிறைவடைகின்றது.

செல்வக்குமார் சுப்பையா விடுதலையாவதை தொடர்ந்து அவர் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பப்படவுள்ளார். எவ்வாறாயினும், செல்வகுமார் மலேசியாவிற்கு வருவதில் எந்த ஒரு தடையும் இல்லையென மலேசியா அரசாங்கம் அறிவித்துள்ளது.

தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் இதனை தெரிவித்துள்ளார். எனினும், செல்வக்குமார் தொடர்ந்தும் பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்து வருவார் என காலிட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அழிந்துபோன புலியினத்தை மீள உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!!

பூமியல் பல்லாயிரக்கணக்கான வகையான உயிரினங்கள் காணப்படுகின்றது. எனினும் அவற்றுள் சில இதுவரை இனங்காணப்படாமல் இருப்பதுடன், மேலும் சில அழிவடைந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்து சில உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கஸ்பின் எனும் புலி இனத்தை மீண்டும் உருவாக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த இனமானது சுமார் 50 வருடங்களுக்க முன்னர், அதாவது 1960ம் ஆண்டு காலப்பகுதியில் முற்றாக அழிவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஸ்பின் இன புலிகள் துருக்கியிலுள்ள காட்டுப் பகுதியில் அதிகமாக காணப்பட்ட போதிலும் மத்திய ஆசிய நாடுகளிலுள்ள காடுகளிலும் காணப்பட்டுள்ளது.

இவை சைபீரியன் இன புலிகளை ஒத்ததாக இருக்கின்றமையினால் அவற்றினைப் பயன்படுத்தி மீண்டும் உருவாக்கிக்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை கஸ்பின் இன புலிகள் 240 கிலோ கிராம்கள் வரையில் எடையினைக் கொண்டிருப்பதுடன், 10 அடிகள் நீளம் வரை வளரக்கூடியன.

இது தற்போது உள்ள புலி இனங்களை விடவும் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

நிஜ ஹீரோக்களை உலகுக்கு காட்டிய மெரினா!!

 
தமிழகத்தில் ஜல்லிகட்டு நடைபெற வேண்டும், பீட்டா அமைப்பிற்கு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தன்னெழுச்சி போராட்டமாக வெடித்துள்ளது.

இந்த போராட்டத்தில் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இரவு, பகலாக பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்களின் கலாச்சாரம், பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு போராடி வருகிறார்கள்.

இவர்கள் வெறும் பொழுபோக்கிற்காக சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் என்று எண்ணியவர்களின் நம்பிக்கையை உடைத்தெறிந்து புதிய சகாப்தத்தை படைத்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பாக இளைஞர்கள் விளங்கி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்காக போராடத் துடிக்கும் ஒவ்வொருவரும் அங்கு குழுமியிருக்கின்றனர். லட்சக்கணக்கானோர் திரண்ட இந்த போராட்டக்குழுவில் பலருக்கு முன் அறிமுகம் கிடையாது.

போராட்டக் களத்திலேயே ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொண்டு அமைதியான வழியில் போராட்டம் சென்று கொண்டு இருக்கிறது.

ஆண், பெண் என்ற பேதமில்லை. அனைவரும் ஒற்றுமையுடன் ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

முகத்தில் துணியை கட்டிக்கொண்டு மெரினாவிற்கு சென்ற நடிகர் விஜய்!!

 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினாவில் அலைகடலென திரண்டுள்ள மக்கள் கூட்டத்தில் நடிகர் விஜய் மறைமுகமாக கலந்துகொண்டுள்ளார்.

மெரினாவில் நடைபெறும் இந்த போராட்டத்தில் நடிகர்கள் யாரையும் அனுமதிக்கமாட்டோம் என ஆரம்பம் முதலே மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற மௌன போராட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய், மெரினாவிற்கு சென்றுள்ளார்.

யாரும் தன்னை அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக, தனது முகத்தில் துணியை கட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக நின்றுள்ளார். ஆனால் இந்த புகைப்படங்களும் வெளியாகிவிட்டது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு குரல் கொடுத்த காவல் அதிகாரிக்கு 30 ஆயிரம் சம்பளத்தில் வேலை!!

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பேசிய காவல் துறை அதிகாரியை அரசு வேலையை வீட்டு நீக்கினால், அவருக்கு உயர் சம்பளத்தில் வேலை தருவதாக ஒரு தனியார் மேலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக்த்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் போராடி வருகின்றனர். நாளுக்கு நாள் இதன் போராட்டம் விஸ்வரூபம் எடுக்கிறது.

இந்நிலையில் இன்று நான்காவது நாள் போராட்டத்தை சென்னை மெரினாவில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தொடங்கினர்.
இந்த போராட்டத்திற்கு தமிழக காவல் துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அவர்கள் போராடுபவர்களுக்கு தண்ணீர் வழங்குதல் மற்றும் உணவு வழங்குதல் போன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போராட்டத்தின் போது பாதுகாப்புக்கு வந்த காவலர் மதியழகன் ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார். அவர் இது ஒரு துவக்கம்தான். இன்னும் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசுவதால் எனக்கு எந்த பயமும் இல்லை. காவல் துறையில் இருக்கும் எங்களுக்கும் உணர்வு இருக்கிறது.

இந்த மண்ணில்தான் நேதாஜியும் பிறந்தார். காந்தியும் பிறந்தார். காந்தி பிறந்த மண்ணு என்று ஓட்டு கேட்க வந்த மோடிக்கு அப்போது தெரியவில்லையா? விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்.

தமிழனுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்.என் சொந்த ஊர் மதுரை. ராமநாதபுரம்தான் என்னுடைய பூர்வீகம்.

தமிழ்நாட்டில் இல்லாமல் நாங்கள் எங்கு பஞ்சம் பிழைக்க செல்வது. நாங்கள் அமெரிக்காவா செல்ல முடியும். ஜல்லிக்கட்டு வெற்றி பெறும். இனி அடுத்தது மண் கொள்ளையை நாம் தடுக்க வேண்டும் என்றார்,

மேலும், இப்படி பேசியதால் என் வேலை போனாலும் பரவாயில்லை எனவும் அவர் தெரிவித்தார்.அவரின் பேச்சு பரபரப்பையும் பலத்த வரவேற்பையும் பெற்றது.

ஒரு காவல்துறை அதிகாரி எந்த போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கக்கூடாது என்ற விதி இருக்கிறது. எனவே, அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என போலீஸ் உயர் அதிகாரிகள் கூறிவிட்டனர்.

இந்நிலையில், மெரினாவில் பேசிய காவல்துறை நண்பனுக்கு வேலை போனால், அவருக்கு ரூ. 30 ஆயிரம் சம்பளத்தில் நான் வேலை தருகிறேன் என மதுரை தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் அறிவித்துள்ளார். இந்த தகவல் சமுக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மின்சாரத் தடை எப்போதும் இல்லை : பரிசு வழங்க அரசாங்கம் நடவடிக்கை!!

இலங்கையில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலை ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து நீடித்தால் மின்சார விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் மழை கிடைக்கவில்லை என்றாலும் மின்சாரம் தடைப்படாது என அரசாங்கம் மீண்டும் உறுதியளித்துள்ளது.

அத்துடன் மின்சார கட்டணம் உயர்த்தப்படாதென மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு விசேட பரிசு வழங்கப்படும் வேலைத்திட்டம் ஒன்று செயற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாதாரண மின்குமிழ்களுக்கு பதிலாக எல்.ஈ.டி மின்குமிழ்களை இலவசமாக வழங்குவதற்கான யோசனையை விரைவில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

இதயத் துடிப்பே கடவுச்சொல் : புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!!

இணையவழி மருத்துவத்தின்போது தனிநபரின் உடல்நலம் பற்றிய மின்னணுத் தகவல்களைப் பாதுகாப்பதற்காக, அவரது இதயத் துடிப்பையே கடவுச்சொல்லாக (பாஸ்வேர்ட்) பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

தற்போது தகவல்களைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் “என்க்ரிப்ட்’ தொழில்நுட்பங்கள் மிகவும் சிக்கல் நிறைந்தவையாகவும், செலவு மிக்கவையாகவும் உள்ளன.

இணையவழி மருத்துவம், செல்பேசி மூலமான மருத்துவம் போன்றவற்றின்போது, இரகசியத் தகவல்களைப் பாதுகாக்க அத்தகைய பாரம்பரியத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, “என்க்ரிப்ட்’ தொழில்நுட்பத்திற்கு மாற்றாக, எளிமையான, மலிவான, மருத்துவத் துறைக்கென்று பிரத்தியேகமான தகவல் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பிங்கம்டன் பல்கலைக்கழக பேராசியர் ஷன்பெங் ஜின் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நோயாளியின் “இசிஜி’ பரிசோனை வரைபடத்தை கடவுச்சொல்லாகப் பயன்படுத்தி அவரது உடல்நிலை குறித்த விவரங்களைப் பாதுகாக்கும் முறையை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக, நோயாளிகளின் உடல்நிலையை அறிந்துகொள்ள “இசிஜி’ பரிசோதனைதான் மிக அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, அந்தப் பரிசோதனை வரைபடத்தை கடவுச்சொல்லாகப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், நோயாளிகளின் உடல்நலம் குறித்த மின்னணு தகவல்களை சுலபமாகவும், மலிவாகவும் பாதுகாக்க வழி ஏற்படும் என பேராசிரியர் ஷன்பெங் ஜின் தெரிவித்துள்ளார்

ஜல்லிக்கட்டுக்கு உலகவாழ் தமிழர்கள் ஆதரவு : மெரினாவில் எழுச்சிப் போராட்டம் தொடர்கின்றது!!

 
தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டுமென தமிழகத்தில் நடத்தப்பட்டுவரும் எழுச்சிப் போராட்டங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

வயது வேறுபாடின்றி தமிழர் எனும் அடையாளத்துடன் சென்னை மெரினாவில் இலட்சக்கணக்கானோர் தொடர்ந்தும் உணர்வுப்பூர்வமாக திரண்டுள்ளனர்.

இதேவேளை, இந்திய உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. தடையை மீறி தமிழகத்தின் சில பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்ட வரைபு நாளை அல்லது நாளை மறுநாள் பிறப்பிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்ட வரைபு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி, தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

தமிழர் பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டுமென,சென்னை மெரீனா கடற்கரையில் ஒன்று திரண்டுள்ளபல்லாயிரக்கணக்கானோர் கோரி வருகின்றனர்.

ஐந்தாவது நாளாகவும் மெரினாவில் திரண்டுள்ளவர்களுக்கு, பல்வேறு தரப்பினரும் உணவு, குடிநீர் போன்றவற்றை வழங்கி ஆதரவளித்து வருகின்றனர்.

இதேவேளை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய மெளனப் போராட்டம் நேற்று மாலை நிறைவுக்கு வந்தது.

இந்த நிலையில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி உலகவாழ் தமிழர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் நடத்தப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில், வவுனியா பழைய பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

18 ஆவது வயதில் காணாமல் போன பெண் 43 வயதில் வீடு திரும்பினர்!!

தனது 18 ஆவது வயதில் காணாமல் போன­தாக கூறப்­படும் பெண் ஒருவர், கொழும்­பி­லுள்ள வீடு ஒன்றில் அடி­மை­யாக பணி­யாற்றி வந்தநிலையில் சுமார் 25 வரு­டங்­களின் பின்னர் தனது வீட்டை தேடி­வந்த சம்­ப­வ­மொன்று கம்­பளை, கிரா­வுல்ல பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இப்­ பெண்­ணுக்கு தற்­போது 43 வய­தா­கின்ற நிலையில், இவர் காணாமல் போன­தை­ய­டுத்து, அவரின் குடும்­பத்­தி­ன­ருக்கு வழங்கும் நட்­ட­ஈட்டு பணத்­தை யும் கங்­க­இ­ஹ­ல­கோ­ரள பிர­தேச செய­ல­கத்­தி­ட­மி­ருந்து அவ­ரது குடும்­பத்தார் பெற்­றி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

1989 ஆம் ஆண்டு நில­விய அசா­தா­ரண சூழ்­நி­லையில், இப்பெண் திரு­மணம் முடித்து தொஹொ­மட பிர­தே­சத்தில் தனது கண­வ­னுடன் வசித்து வந்தநிலையில் இரண்டு மாதங்­களின் பின்னர் இவ­ரது கணவர் இனந்­தெ­ரி­யா­தோரால் சுட்­டுக்­கொல்ல ப்பட்­ட­த­னை­ய­டுத்து மறு­ப­டியும் தனது தாயின் வீட்­டுக்கு திரும்­பி­யுள்ளார்.

இது தொடர்பில் அப்பெண் தெரி­விக்­கையில், தான் வீட்­டுக்கு திரும்பி இரண்­டொரு நாளில் தனது கண­வனின் பெரி­யம்­மாவின் மகள் ஒருவர் நாவ­லப்­பிட்­டி­யி­லுள்ள அவ­ரது வீட்­டுக்கு அழைத்து சென்­ற­தா­கவும் அதன் பின்னர் ஆறு­த­லுக்­காக சுற்­றுலா செல்வோம் எனக் கூறி அவர் தன்னை கொழும்­புக்கு அழைத்து சென்று வீடு ஒன்றில் வேலைக்­க­மர்த்­தி­ய­தா­கவும் தெரி­வித்தார்.

பின்னர் குறித்த வீட்டார் தன்னை சுமார் 25 வரு­டங்­க­ளாக அடைத்­து­வைத்து வேலை வாங்­கி­ய­துடன் வீட்­டுக்கு செல்­வ­தற்கு கூட அனு­ம­தி­ம­றுத்து அடி­மைப்­ப­டுத்தி வைத்­தி­ருந்­த­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் தனது தந்தை மற்றும் கடற்­ப­டையில் பணி­யாற்றி வந்த தனது சகோ­த­ரனின் மரணம் குறித்து அவ்­வீட்டார் தனக்கு தெரி­யப்­ப­டுத்­திய போதிலும் தன்னை அம்­ம­ரண சடங்­கு­களில் கலந்து கொள்­வ­தற்கு கூட அனு­ம­தித்­தி­ருக்­க­வில்லை என்றார்.

இந்­நி­லையில் கடந்த 17 ஆம் திகதி கம்­பளை, கிரா­வுல்ல பிர­தே­சத்­தி­லுள்ள தனது வீட்­டுக்கு திரும்­பி­யி­ருந்­ததன் பின்னர் நாவ­லப்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று நேற்­றைய தினம் அவர் வெளி­யே­றி­யி­ருந்த நிலையில், தெல்­கந்த – கொட்­டா­வைக்கு இடைப்­பட்ட பகு­தியில் அமைந்­துள்ள, தன்னை அடி­மைப்­ப­டுத்தி வைத்­தி­ருந்த வீட்டார் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு அளித்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கொட்டாவ பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

19 வயதான இளைஞனை கத்திமுனையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய க 17 வயதான பெண்!!

மிச்சிகன் மாநிலத்தின் சஜினேவ் நகரில் இந்தப் பாலியல் வல்லுறவுச் சம்பவம் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  லெஸ்டினா மேரி ஸ்மித் எனும் 17 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

இவர், 19 வயதான இளைஞர் ஒருவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வைத்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட லெஸ்டினா மேரி ஸ்மித், சஜினேவ் கவுன்ரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 3 ஆம் திகதி அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் டிரம்ப்!!

 
அமெரிக்காவின் 45-து ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார்.

தனது தொடக்க உரையில், பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமா, ஆட்சி மாற்றத்தைக் கையாண்ட விதம் குறித்து பாராட்டினார்.

இந்த ஜனவரி 20ம் திகதி, பொதுமக்கள் நாட்டின் ஆட்சியாளர்களாக மீண்டும் மாறிய நாளாக நினைவு கூறப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை எதிர்நோக்கியுள்ள பணி சவால் நிறைந்தது என்று குறிப்பிட்ட ட்ரம்ப், ஆனால் இந்த பணியை நிறைவேற்றவுள்ளதாக உறுதியளித்தார்.

இன்றிலிருந்து ஒவ்வொரு முடிவும் அமெரிக்காவுக்கு முதலில் லாபம் அளிக்கும் வகையிலேயே எடுக்கப்படும் என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்லாமிய பயங்கரவாதத்தை உலகிலிருந்து அகற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி 19 ஓட்டங்களால் வெற்றி!!

 

இலங்கை மற்றும் ​தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்கா 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. மழைகாரணமாக போட்டி 10 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 10 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 126 ஓட்டங்களை பெற்றது

துடுப்பாட்டத்தில் டேவிட் மில்லர் 40 ஓட்டங்களையும் பர்ஹான் பெஹர்டீன் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றனர்.

பதிலளித்தாடிய, இலங்கை அணி 10 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதன்போது நிரோஷன் திக்வெல்ல 43 ஓட்டங்களை பெற்றார்
போட்டியின் சிறப்பாட்டக்காரராக 12 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுகளை கைப்பற்றிய லுங்கி நிகிடி தெரிவு செய்யப்பட்டார்.

மனைவியை 23 முறை கொடூரமாக குத்திக்கொன்ற கணவன்!!

பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாக குத்தி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் Robert Bance (53), Victoria Bance (37). தம்பதிகளான இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் திகதி வெளியே சென்றுள்ளனர்.

அப்போது Victoria Bance வெளியே வேறு ஒரு நபருடன் பேசியுள்ளார். இதில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.

டாக்சியில் இருவரும் திரும்பி வரும் போது கூட Robert Bance தனது மனைவியை கொன்று விடுமாறு மிரட்டியுள்ளார். வீட்டிற்கு வந்த போது இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது.

இந்த நிலையில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற Robert Bance, தனது மனைவியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார். உடனே தனது தவறை உணர்ந்த Robert Bance, பொலிசாரை வரவழைத்து சரணடைந்துள்ளார்.

Victoria Bance உடலில் 14 ஆழமான காயங்களுடன், 23 கத்திக் குத்து காயங்கள் இருந்துள்ளன. இது தொடர்பான வழக்கு Plymouth நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

Robert Bance தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2 வயது குழந்தை சாலையில் பைக் ஓட்டிய அதிசயம் : வைரலாகும் வீடியோ!!

தாய்லாந்தில் நடு இரவில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதில், நபர் ஒருவர் தன் இரண்டு வயது குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சாலையில் செல்கிறார். வாகனத்தின் முன்னால் அந்த குழந்தை உட்கார்ந்துள்ளது.

இரு சக்கர வாகனத்தின் கைப்பிடி அக்சிலேட்டரை அந்த குழந்தை தன் கையால் இயக்க, குழந்தையின் தந்தை செல்பி முறையில் வீடியோவாக அந்த நிகழ்வை பதிவு செய்துள்ளார்.

மிதமான வேகத்தில் குழந்தை இருசக்கர வாகனத்தை இயக்குவது போல அந்த வீடியோவில் உள்ளது.

குழந்தையின் தந்தை செய்த இந்த விபரீத செயல் சட்ட விதிமுறைப்படி அவருக்கு பிரச்சனையை ஏற்ப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், தாய்லாந்து நாட்டில் போக்குவரத்து விதிமுறை சட்டத்துக்கு பொலிசார் குறைந்த அளவிலேயே முன்னுரிமை தருகிறார்கள்.

தாய்லாந்து நாட்டில் வருடத்துக்கு 24000 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார்கள் என்பதும், உலகிலேயே மோசமான சாலை பாதுகாப்பில் இந்த நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒலியின் வேகத்தை ஒத்த ரயில் : தென்கொரியா முன்னெடுக்கவுள்ள புரட்சிகர திட்டம்!!

உலகில் தற்போது பாவனையில் உள்ள அதிக வேகமுடைய ரயிலை விட இருமடங்கு வேகமுடைய ரயிலை அறிமுகப்படுத்துவதற்கு தென்கொரிய தொழிநுட்பவியலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஒலியின் வேகத்தை ஒத்த ரயில் பயணத்தை உருவாக்குவதற்கு தென் கொரியா முயற்ச்சித்து வருகின்றது. இது மணித்தியாலயத்திற்கு சுமார் 620 மைல் வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கும் என அந்நாட்டு ரயில்வே பாதைகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாழ் அழுத்த குழாய்கள் மூலம் இயக்கப்படவுள்ள குறித்த ரயிலானது, மின்காந்த திறன் சக்தியில் இயங்கும் ரயிலின் வேகத்தை விட ( மணித்தியாலயத்திற்கு 268 மைல் தூரம்) இரண்டு மடங்கு வேகமுடையதாகும்.

குறித்த திட்டத்தின் மூலம் கொரியாவிற்குள் அதிவேக ரயில் பயணத்தை ஏற்படுத்த கொரிய ரயில்வே அபிவிருத்தி மையம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் சுமார் 100 பில்லியன் டொலர்கள் செலவில் மணித்தியாலயத்திற்கு 1200 கிலோமீற்றர்கள் செல்லும் ஹைபெர்லூப் ( hyperloop) ரயில்களை உருவாக்கும் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.